ஞாயிறு, ஜூன் 27

சிரிப்பு போலீஸ் உருவான விதம்

நம்ம நாட்டுநடப்பு அரவிந்தன் புண்ணியத்துல செம்மொழி மாநாட்டுல இருந்து உலக அளவுல பேமஸ் ஆயாச்சு. பிறகு என்ன எனக்கு ஒரே போன் தொல்லை. போனு நானு, நானு போனு. ஒரே பிஸி.

இடையில மருத்துவர் அய்யா வேற போன் பண்ணி சிரிப்பு போலீஸ்ங்கிறது ஆங்கிலம். உன் வலைப்பூவுக்கு தமிழ்ல பேர் வைக்கலேன்னா உனக்கு வர்ற கமெண்ட்ஸ் எல்லாத்தையும் உன் வலைப்ப்பூவுல புகுந்து என்னோட ஆள்கள் எடுத்துட்டு போயிடுவாங்க. அப்புறம் உன் வலைப்பூவுல சிகரட், தம். தண்ணி அடிக்கிறத பத்தி எழுதக்கூடாது அப்டின்னு சொல்லி என்னை மிரட்டிட்டு போனை வச்சிட்டார். அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.

பேமஸ் ஆனாலே இதான் பிரச்சனை. அப்புறம் முதல்வர், துணை முதல்வர் எல்லாம் போன் பண்ணி வாழ்த்து சொன்னது மட்டுமல்லாமல் முதல்லையே தெரிஞ்சிருந்தா செம்மொழி மாநாட்டுல உனக்கும் பாராட்டு விழா எடுத்திருக்கலாம்ன்னு சொன்னாங்க. எனக்கு விளம்பரம் பிடிக்காது விடுங்க விடுங்கன்னு சொல்லிட்டேன்.

அப்புறம் அவங்க எல்லோரும் என்கிட்டே கேட்டாங்க "நீங்க நல்ல எழுதுறீங்களே. எப்படிங்க முடியுது. எப்படி நீங்க இந்த ப்ளாக் கிரியேட் பண்ணி எழுத ஆரமிச்சீங்கன்னு" கேக்க ஆரமிச்சிட்டங்க. அவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

இதெல்லாம் பெரிய விசயமே இல்லைங்க. நான் என்ன பண்ணினேன்னா:

Steps:
1. Goto https://www.blogger.com/start link
2. இந்த லிங்க்ல போய் சிரிப்பு போலீஸ் அப்டிங்கிற பேர்ல ஒரு ஐடி கிரியேட் செய்தேன்.
3. அப்புறம் click  "Dashboard" option
4. Click  "New Post"
5. Then புது பதிவு  எழுதினேன்.
6. அப்புறம் "Publish Post" பட்டன் clcik பண்ணினேன்.

அவ்வளவுதான். வேணும்னா நீங்களும் இந்த ஸ்டெப்ஸ் follow பண்ணி ஒரு ஐடி கிரியேட் பண்ணி எழுதி பாருங்களேன்.

இருங்க இருங்க என்ன பண்றீங்க. ஒரு நிமிஷம் இருங்க. ப்ளீஸ் ப்ளீஸ்
..
.
.
.
.
.
முகத்தை துடைச்சிட்டேன். துப்புரவங்க இப்ப துப்புங்க...
ரெடி 1,2,3....


//இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்பட வேண்டியவரை சென்னை வரவேற்று கொண்டது.... ஆமா .... அங்கே போய் எப்படி சிரிப்பு போலீஸ் ஆனீங்க என்றும் சொல்லுங்க....//

சித்ராவோட கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

46 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

நான்தான் First

துப்பினேன்.....

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒத்துக்கிறேன். இப்பதான் நீ அரசியல்வாதின்னு ஒத்துகிறேன் ...
கூடிய சீக்கிரமே ஒரு கட்சி ஆரம்பிச்சு வர்ற தேர்தல்ல தனியா நின்னு..

பட்டா இன்னும் இந்தாளு நம்ம கையில சிக்கல.. சிக்குநானு வையுங்க
மனுச பிரியாணிதான்...

பெயரில்லா சொன்னது…

ஒத்துக்கிறேன். இப்பதான் நீ அரசியல்வாதின்னு ஒத்துகிறேன் ...
கூடிய சீக்கிரமே ஒரு கட்சி ஆரம்பிச்சு வர்ற தேர்தல்ல தனியா நின்னு..

பட்டா இன்னும் இந்தாளு நம்ம கையில சிக்கல.. சிக்குநானு வையுங்க
மனுச பிரியாணிதான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வாங்க அருண். நல்லவேளை முதல் துப்பு நம்ம கட்சிகாரங்ககிட்ட இருந்துதான்(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு)

//பட்டா இன்னும் இந்தாளு நம்ம கையில சிக்கல.. சிக்குநானு வையுங்க மனுச பிரியாணிதான்...//

@ செந்தில் அண்ணா ஏற்க்கனவே பட்டா ப்ரிரியாணி வேற ஆகஸ்ட்ல பாக்கி இருக்கு. அதுக்குள்ளே அடுத்ததா..

//ஒத்துக்கிறேன். இப்பதான் நீ அரசியல்வாதின்னு ஒத்துகிறேன் ...கூடிய சீக்கிரமே ஒரு கட்சி ஆரம்பிச்சு வர்ற தேர்தல்ல தனியா நின்னு..//

நாசமாப் போன்னு சொல்றீங்களா செந்தில் அண்ணா...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் கட்சி ஆரம்பிச்சவன்லாம் எங்கைய்யா நாசமா போயிருக்கான்.. அவனவன் பேரனுக்கே சிம்மாசனம் போடுறான்..
உறுப்புட வழி சொன்னா கேட்கணும்..

முதல்ல நம்ம மங்குனி கிட்ட கொஞ்ச நாள் ட்ரைனிங் எடுத்தா இந்த கூச்ச நாச்சமெல்லாம் போய்டும்.. அப்டியே பண்ணிகுட்டிய கொள்கை பரப்பு செயலாளரா போட்ட எதிரியே இருக்க மாட்டணுவ.. ட்ரை அண்டு என்ஜாய் ..

மதுரை சரவணன் சொன்னது…

உண்மையிலேயே சிரிப்பு வருது.... வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பிரபலமடைந்த பிரபல பதிவர் சிரிப்பு போலீசு அவர்களை கவுரவிக்கும் விதமாக, இன்றிலிருந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக நியமிக்கப்படுகிறார். அவர் மேலும் சிறப்புற்றுச் செயல்படவேண்டும் என்பதற்காக ஒருவாரம் கலாக்கா அவர்களிடம் கெமிஸ்ட்ரி செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்படுகிறார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி மதுரை சரவணன்

///யோவ் கட்சி ஆரம்பிச்சவன்லாம் எங்கைய்யா நாசமா போயிருக்கான்.. அவனவன் பேரனுக்கே சிம்மாசனம் போடுறான்..//

நமக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது செந்தில் அண்ணா.

//முதல்ல நம்ம மங்குனி கிட்ட கொஞ்ச நாள் ட்ரைனிங் எடுத்தா இந்த கூச்ச நாச்சமெல்லாம் போய்டும்.. அப்டியே பண்ணிகுட்டிய கொள்கை பரப்பு செயலாளரா போட்ட எதிரியே இருக்க மாட்டணுவ.. ட்ரை அண்டு என்ஜாய் .//

மங்குனி கிட்ட ட்ரைனிங் எடுத்தா அரளிவிதை டீப் பிரை கொடுப்பாரு. பன்னிகுட்டி வர்றவங்களுக்கெல்லாம் விளக்கெண்ணை/நல்லெண்ணெய் ஊத்தி கொடுப்பாரு. இதெல்லாம் எனக்கு தேவையா?

//உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பிரபலமடைந்த பிரபல பதிவர் சிரிப்பு போலீசு அவர்களை கவுரவிக்கும் விதமாக, இன்றிலிருந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக நியமிக்கப்படுகிறார். அவர் மேலும் சிறப்புற்றுச் செயல்படவேண்டும் என்பதற்காக ஒருவாரம் கலாக்கா அவர்களிடம் கெமிஸ்ட்ரி செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்படுகிறார்!//

ரைட்டு மிஸ்டர். பன்னிக்குட்டி ராம்சாமி எனக்கு சங்கு ஊதானும்ன்னு முடிவு பண்ணிடீங்க. அதுக்கு முன்னால ஒட்டு போடுங்க பாஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஓட்டுதானே இப்பப் போடுறேம்ல! செயல்முறைப் பயிற்சிக்கு ரெடியா இருங்க பாஸ், இப்போ வேன்ல ஆள் வருவாங்க கூட்டிட்டுப் போறதுக்கு!

Chitra சொன்னது…

//இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்பட வேண்டியவரை சென்னை வரவேற்று கொண்டது.... ஆமா .... அங்கே போய் எப்படி சிரிப்பு போலீஸ் ஆனீங்க என்றும் சொல்லுங்க....//

சித்ராவோட கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

....... எதற்கு? உங்களுக்கு "பன்னீர்" தெளிச்சு மரியாதை" பண்றவங்க, இந்த பக்கம் எனக்கு சேர்த்து பண்ணட்டும்னா? வேண்டாம்பா..... மி த பாவம்...... !

ஆமாம், அப்படியே கன்யாகுமரியில வள்ளுவர் சிலை பக்கம் உங்களுக்கும் பதிவுலக வள்ளுவர்னு ஒரு சிலை வைக்கிறதா இன்னைக்கு கலைஞர் ஒரு அறிக்கை விட்டுருக்காரே..... வாழ்த்துக்கள்!

கலாநேசன் சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்.


இப்ப என்ன செய்ய????

பட்டாபட்டி.. சொன்னது…

இந்த லிங்க்ல போய் சிரிப்பு போலீஸ் அப்டிங்கிற பேர்ல ஒரு ஐடி கிரியேட் செய்தேன். அப்புறம் "Dashboard" option click பண்ணி "New Post" click பண்ணி புது பதுவு எழுதினேன். அப்புறம் "Publish Post" பட்டன் clcik பண்ணினேன். அவ்வளவுதான்.
//

பரவாயில்லயே..
ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் பிரபல்ம் ஆகியிருக்கீங்க..ஹா,ஹா

Software Engineer சொன்னது…

போலீஸ் சார் - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன் பண்ணி பாரட்டினதை சொல்ல மறந்துடிங்க! நல்ல காமெடி!

Software Engineer சொன்னது…

போலீஸ் சார் - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன் பண்ணி பாரட்டினதை சொல்ல மறந்துடிங்க! நல்ல காமெடி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓட்டுதானே இப்பப் போடுறேம்ல! செயல்முறைப் பயிற்சிக்கு ரெடியா இருங்க பாஸ், இப்போ வேன்ல ஆள் வருவாங்க கூட்டிட்டுப் போறதுக்கு!//

மிஸ்டர் பன்னிக்குட்டி ராம்சாமி ஐ ஆம் வெரி பாவம். வேணாம். எதுனாலும் நல்லெண்ணெய் குடிச்சிகிட்டே பேசலாம்.

//ஆமாம், அப்படியே கன்யாகுமரியில வள்ளுவர் சிலை பக்கம் உங்களுக்கும் பதிவுலக வள்ளுவர்னு ஒரு சிலை வைக்கிறதா இன்னைக்கு கலைஞர் ஒரு அறிக்கை விட்டுருக்காரே..... வாழ்த்துக்கள்!//

133 அடிங்களா இல்ல அத விட உயரமாவா. எதுலையும் நான்தான் உயரமா இருக்கணும்... சரிங்களா. இதப் பத்தி நான் கலைஞர் டிவி-ல பேசுறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கலாநேசன் துப்புரதுன்னு முடிவு பண்ணிடீங்க. அப்புறம் என்ன கேள்வி. ஸ்டார்ட் மியூசிக்(மிஸ்டர் பன்னிகுட்டி ராம்சாமி மன்னிக்கணும்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பரவாயில்லயே..ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் பிரபல்ம் ஆகியிருக்கீங்க..ஹா,ஹா//

@ பட்டா கஷ்டப்பட்டா பிரபலம் ஆக முடியாது. இஷ்டப்பட்டாத்தான் ஆக முடியும். (நன்றி கஜினி சூர்யா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//போலீஸ் சார் - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன் பண்ணி பாரட்டினதை சொல்ல மறந்துடிங்க! நல்ல காமெடி!//

@ Software Engineer ஆமா மறந்துட்டேன். நல்ல வேலை ஞியாபக படுத்திட்டீங்க . அப்படியே இங்கிலீஷ்-ளையும் எழுத சொல்லி ஒரே அடம். அவர் இப்ப translater use பண்ணிதான் என்னோட ப்ளாக்-எ படிக்கிறார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//....... எதற்கு? உங்களுக்கு "பன்னீர்" தெளிச்சு மரியாதை" பண்றவங்க, இந்த பக்கம் எனக்கு சேர்த்து பண்ணட்டும்னா? வேண்டாம்பா..... மி த பாவம்...... !//

ஜனங்களே நோட் பண்ணுங்க டாக்டர் சித்ரா பாவமாம். ஒரே தமாசு போங்கள்.

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

செம்மொழி மாநாட்டு அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கணிப்பொறிகள்
காணவில்லையாம் அதை ஆட்டைய போட்டது சிரிப்பு போலீஸ் தான் என்று நிஜ போலீஸ் துப்பு துலக்கியது

தலைமறைவான அவரை கூகுள்,யாகூ எதில் தேடியும் பிடிபடவில்லை,அவர் ஆன்லைனில் வந்தால் அமுக்க போலீஸ் படை ஆன்லைனுக்கு சென்றது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தலைமறைவான அவரை கூகுள்,யாகூ எதில் தேடியும் பிடிபடவில்லை,அவர் ஆன்லைனில் வந்தால் அமுக்க போலீஸ் படை ஆன்லைனுக்கு சென்றது//

உண்மைய வெளில சொல்லாதன்னு சொன்னா கேக்குறீங்கள ஜில்தண்ணி. அவங்க ஆன்லைன்-ல நின்னாலும் தனியா நின்னாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது. நான் கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் பாதுகாப்புலதான் இருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.

Jey சொன்னது…

டேமேஜர் அகில உலக பேமஸானதையொட்டி, அவருக்கு கும்பாபிஷேகம் நடத்த , பட்டாபட்டி தலைமையில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மங்குனி,பன்னிகுட்டி,பருப்பு,முத்து மற்றும் ஃபிரபல பதிவர் Jey ஆகியோர் அந்த குழுவில் தங்களை இனைத்துள்ளார்கள். கும்பாபிஷேகம் நடக்கும், இடம், நாள், நேரம் பின்னை அறிவிக்கப்படும். ( இந்த குழுவில் சேர வ்ரும்பும் பதிவர்கள் அனுக வேண்டிய முகவரி, பட்டபட்டி, கு மு கழகம், சிங்கை.(பஸ்டாண்ட் பின்புறம்).

Jey சொன்னது…

//செம்மொழி மாநாட்டு அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கணிப்பொறிகள்
காணவில்லையாம் அதை ஆட்டைய போட்டது சிரிப்பு போலீஸ் தான் என்று நிஜ போலீஸ் துப்பு துலக்கியது//

இதுவேறயா?. என்ன இருந்தாலும், ரொம்ப நல்லவன்னு சொல்லிகிட்டு இத பன்றது நொம்ப தப்பு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//டேமேஜர் அகில உலக பேமஸானதையொட்டி, அவருக்கு கும்பாபிஷேகம் நடத்த , பட்டாபட்டி தலைமையில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.//

ஐயா ராசா நீங்க எப்படி கும்பாபிஷேகம் பண்ணுவீங்கனு ஊருக்கே தெரியுமே. எதுனாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...

//இந்த குழுவில் சேர வ்ரும்பும் பதிவர்கள் அனுக வேண்டிய முகவரி, பட்டபட்டி, கு மு கழகம், சிங்கை.(பஸ்டாண்ட் பின்புறம்).//

இந்த அட்ரெஸ் ல ஆள் இருக்குதா என்ன?

//இதுவேறயா?. என்ன இருந்தாலும், ரொம்ப நல்லவன்னு சொல்லிகிட்டு இத பன்றது நொம்ப தப்பு.//

நல்லவன் திருடக்கூடாதுன்னு சட்டமா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//டேமேஜர் அகில உலக பேமஸானதையொட்டி, அவருக்கு கும்பாபிஷேகம் நடத்த , பட்டாபட்டி தலைமையில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.//

ஐயா ராசா நீங்க எப்படி கும்பாபிஷேகம் பண்ணுவீங்கனு ஊருக்கே தெரியுமே. எதுனாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...

//இந்த குழுவில் சேர வ்ரும்பும் பதிவர்கள் அனுக வேண்டிய முகவரி, பட்டபட்டி, கு மு கழகம், சிங்கை.(பஸ்டாண்ட் பின்புறம்).//

இந்த அட்ரெஸ் ல ஆள் இருக்குதா என்ன?

//இதுவேறயா?. என்ன இருந்தாலும், ரொம்ப நல்லவன்னு சொல்லிகிட்டு இத பன்றது நொம்ப தப்பு.//

நல்லவன் திருடக்கூடாதுன்னு சட்டமா என்ன?

சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்.

ILLUMINATI சொன்னது…

பட்டு,நீரு சொன்னது சரிதான்யா.இந்த பீசு கோவில்பட்டி ஊருக்கே கேவலம்.சீக்கிரம் பொலி போட்ரு. :)

அப்புறம்,என்ன ஓய்,பிரபலம் ஆயிடீரா?இரும்,பரிசு தரேன்.யாரங்கே,அந்த மஞ்சத்தண்ணிய எடுங்கய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டு,நீரு சொன்னது சரிதான்யா.இந்த பீசு கோவில்பட்டி ஊருக்கே கேவலம்.சீக்கிரம் பொலி போட்ரு. :)//

இழுமி, எங்க ஊருக்கே செம்மொழி மாநாட்டுல பேர் வாங்கி கொடுத்திருக்கேன், நீங்க என்னன்னா!!!

ILLUMINATI சொன்னது…

யோவ் நொன்ன, இலுமி ய சரியா அடிக்கத் தெரியாம தப்பும் தவறுமா இழுமி னு அடிச்ச நீரு பேரு வாங்கினாலும்,புண்ணாக்கு வாங்கினாலும் ஒண்ணு தான் ஓய்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இலுமி இழுமி இது ரெண்டுக்கும் முதல்ல அர்த்தம் சொல்லுங்க பாஸ்

ILLUMINATI சொன்னது…

யோவ்,இலுமி னா நானு.

நீரு 'இழு'மி னு சொல்லுறது,என்னய இழுங்கன்னு சொல்லுற மாதிரி இருக்குது ஓய்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இலுமி உங்கள் டமில் வால்க. நீர் வால்க உம சுற்றம் வால்க

ILLUMINATI சொன்னது…

//இலுமி உங்கள் டமில் வால்க. நீர் வால்க உம சுற்றம் வால்க//

யோவ்,இப்ப ஒத்துக்குறேன்.உமக்கு அந்த மாநாட்டுல கலந்துக்க எல்லா தகுதியும் இருக்கு.
போய் குஷ்புவோட சேர்ந்துக்க.. ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இலுமி நான் ரெடி. அவங்க சேத்துப்பாங்கனான்னு தெரியல

AGASIYAM சொன்னது…

முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்லவேளை நான் என சொன்னேங்கலோன்னு பயந்துட்டேன். எங்க இப்படி. தெளிவா கமெண்ட் போட வேணாமா. என்ன விளம்பரம்!!

பிரேமா மகள் சொன்னது…

இந்த கொடுமையெல்லாம் நாங்க படிக்கனும்ன்னு இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்த கொடுமையெல்லாம் நாங்க படிக்கனும்ன்னு இருக்கு...//

உங்க அன்புக்கு நன்றி பிரேமா மகள். ஹிஹி

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

காலையில இருந்து Wait
பண்ணிட்டு இருக்கேன்..
சே.. வாயில எச்சியே ஊற மாட்டேங்குதே..!!

சரி சரி.. நம்ம பய.. விட்ருவோம்..

அனு சொன்னது…

நீங்க சொன்ன ஸ்டெப்ஸ் follow பண்ணி ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு பாத்தேன்.. ஆனா, ரெண்டாவது ஸ்டெப்-க்கு மேல போக மாட்டேன்னுது.. 'sirippupolice'னு போட்ட உடனே "Sorry, this blog address is not available"னு வருது..
சொல்லிக் குடுக்குறத உருப்படியா சொல்லிக் குடுக்க வேணாமா??

@அருண்
//நான்தான் First

துப்பினேன்....//

கலக்கல்..

முத்து சொன்னது…

உனக்கு சிரிப்பு போலிசை விட நக்கல் போலீஸ் நல்லா இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//காலையில இருந்து Wait பண்ணிட்டு இருக்கேன்.. சே.. வாயில எச்சியே ஊற மாட்டேங்குதே..!//

@ வெங்கட் நீங்க ஒரு நல்ல எச்சகல ச்சே எஜுகேட்டட் டாக்டர போய் பாருங்க.

//'sirippupolice'னு போட்ட உடனே "Sorry, this blog address is not available"னு வருது..சொல்லிக் குடுக்குறத உருப்படியா சொல்லிக் குடுக்க வேணாமா??//

@அனு நான் அப்பவே சொல்லல ஊருக்குள்ள ரெண்டே ரெண்டு அறிவாளிங்கதான். ஒன்னு ஜி.டி.நாயுடு இன்னொன்னு தலைவி அனு. ஹிஹி

@ நன்றி முத்து

ஜெயந்தி சொன்னது…

ஏங்க மாலை, பொன்னாடையெல்லாம் வச்சுக்கிட்டு எவ்வளவு நேரம் காத்திருக்கது. சீக்கிரம் வந்து வாங்கிக்க மாட்டீங்களா?

kannan சொன்னது…

வாருங்கள் வந்து பாருங்கள்
நண்பர்களை தேடுங்கள்
http://www.valaiyakam.com/

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//////பேமஸ் ஆனாலே இதான் பிரச்சனை. அப்புறம் முதல்வர், துணை முதல்வர் எல்லாம் போன் பண்ணி வாழ்த்து சொன்னது மட்டுமல்லாமல் முதல்லையே தெரிஞ்சிருந்தா செம்மொழி மாநாட்டுல உனக்கும் பாராட்டு விழா எடுத்திருக்கலாம்ன்னு சொன்னாங்க. எனக்கு விளம்பரம் பிடிக்காது விடுங்க விடுங்கன்னு சொல்லிட்டேன். /////////


அதெல்லாம் இருக்கட்டும் உங்களுக்கு ஆட்டோ அனுப்பி இருக்கணுமே !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜெயந்தி ஆட்டோ இன்னும் வரல!!!
@ தேங்க்ஸ் கண்ணன்
@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் ஆட்டோ இன்னும் வரல!!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது