புதன், ஜூலை 14

விஜய் ஒரு சகாப்த்தம்

விஜய் இப்ப தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத நபர்(கான்க்ரீட் போட்டிருக்கான்னு எல்லாம் கேக்கப் படாது). தமிழ்நாடே அவரைப் பத்திதான் இப்ப பேசிகிட்டு இருக்கு. முதல் படம் சுமாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அவரது திறமையை நிருபித்தவர்.

அப்பா சினிமாவில் இருப்பதால் ஈசியாக சினிமாவுக்கு வந்து விட்டார் என்றாலும் அவரது திறமையால் மட்டுமே அவரால் சினிமாவில் பிரகாசிக்க முடிந்தது. அவரது வெற்றிக்கு காரணம் அவரது விடா முயற்சியும் தன்னம்பிக்கையும்தான்.

லேட்டஸ்ட்டாக  ரிலீஸ் ஆன இவரது படம் வெற்றிகளையும் வசூல்களையும் வாரிக் குவித்தது என்று சொன்னால் மிகை ஆகாது. லேட்டஸ்ட்டாக வந்த இவரது படம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது முயற்சி.

அந்த படத்திற்கு நிச்சியமாக விருதுகள் கிடைக்கும் என்று மக்களால் பேசப்பட்டாலும் அவரோ ரசிகர்கள் கொடுக்கும் விருதே மிகப் பெரிய விருது என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார். அவரது லேட்டஸ்ட்டாக வந்த படத்தின் மாபெரும் வெற்றி அவருக்கு மேலும் சில புது பட offerகளை வாங்கி கொடுத்துள்ளது.

இது போன்ற சிறந்த ஒரு அட்டகாசமான படத்தை நமக்கு தந்ததற்காக விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் இது போல அருமையான அட்டகாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம்.(த்ரிஷாவால உங்களுக்கும் அஜித்துக்கும் பிரச்சனைன்னு கேள்விப் பட்டேன் உண்மையா விஜய்?)
.
.
.
.
.
.
.
.

டைரக்டர் விஜய் சார் உங்க மதராசப்பட்டினம் படத்தோட ஹீரோயின் அட்ரஸ் கிடைக்குமா. ஹிஹி எனக்கில்லை சார். நம்ம பய ஜில்தண்ணிக்குதான். பாவம் பக்கம் பக்கமா எமியப் பத்தி கவிதை எழுதுறான். அவனுக்காகவாவது கொடுங்களேன். (நீங்க வேற ஏதாவது விஜய்யை நினைச்சுக்கிட்டு வந்தா நானா பொறுப்பு. போங்க பாஸ்)

36 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

தம்பி அந்த ஆளி சுலபமா டைரக்டர் ஆயிடல. மலையாள பட டைரக்டர் பிரியதர்ஷன் அஸிட்டெண்டா ரொம்ப வருஷம் ஒர்க் பன்னிருக்காப்ல.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மச்சி மொத ஏமாந்தது நாந்தான்னு சொல்றதுல்ல வெட்கம் இல்லை எனக்கு

நல்ல டெக்னிக் இதையே இன்னும் கதை மாறி முயற்சியெடுத்தால் பிரபல பதிவராக ஆவதற்க்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்குங்ண்ணா...

குட்..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

விஜய்க்கு என் வாழ்த்துக்கள் (நான் ஏமாறலேன்னு சொன்னா நம்பவா போறீங்க)...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தம்பி அந்த ஆளி சுலபமா டைரக்டர் ஆயிடல. மலையாள பட டைரக்டர் பிரியதர்ஷன் அஸிட்டெண்டா ரொம்ப வருஷம் ஒர்க் பன்னிருக்காப்ல.//

தம்பி ராம்ஸ் ஒரு விஷயம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப் படாது.

//நல்ல டெக்னிக் இதையே இன்னும் கதை மாறி முயற்சியெடுத்தால் பிரபல பதிவராக ஆவதற்க்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்குங்ண்ணா...//

அப்ப நான் பிரபல பதிவர் இல்லியா. ஊருக்குள்ள நான் ஒரு பிரபல பதிவர்னு சொல்லி வச்சிருக்கனே வசந்த். அவ்வ்வ்

@ கே.ஆர்.பி.செந்தில் நான் உங்களை நம்புறேன் அண்ணா

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//நீங்க வேற ஏதாவது விஜய்யை நினைச்சுக்கிட்டு வந்ததா நானா பொறுப்பு. போங்க பாஸ்//

நன்கூட ஆரம்பத்துல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். தினுசு தினுச பல்பு கொடுக்கரங்கப... யாரவது இந்த சிரிப்பு போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி உள்ள போடுங்க ப்ளீஸ்....

Jey சொன்னது…

கலக்கிட்டே டேமேஜரு...

seemangani சொன்னது…

தலைப்பை பார்த்ததும் கடைசி பாராவைத்தான் படித்தேன் நாங்கலாம் உசாருல...விஜய்யின் முயற்சிக்கு இந்த படம் நல்லா தீனி...வாழ்த்துகள்...

rk guru சொன்னது…

விஜய் ஒரு சகாப்த்தம் கண்டிப்பா நாமதான் சொல்லிக்குனும் அவர் ஒரு சகாப்தப்ன்னு...

தமிழினியன் சொன்னது…

என்னது விஜய்யோட அப்பா சினிமா துறையைச் சேர்ந்தவரா? யாரு?

பிரசன்னா சொன்னது…

//.. ஒரு சகாப்த்தம்//

இந்த தம் எங்கண்ணா கிடைக்கும்.. கடைல இல்லன்னு சொல்லிட்டாங்க..

அனு சொன்னது…

ஏதோ ஒரு catch இருக்குதுன்னு படிக்கும் போதே புரிஞ்சிடுச்சு..

ஏதாவது பழைய படத்துக்கு வந்த விமர்சனமா இருக்குன்மு நினைச்சேன்.. ஆனா, கடைசி twist எதிர்பார்க்காதது...

நல்லா இருக்கு..கலக்குங்க..

சரவணகுமரன் சொன்னது…

//அப்பா சினிமாவில் இருப்பதால் //

யாரு அவுரு?

Faaique Najeeb சொன்னது…

காலையில காபி குடிக்க கூட இல்ல. அதற்கு முன் பல்பு வாங்க வெச்சிட்டீங்களே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நன்கூட ஆரம்பத்துல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். தினுசு தினுச பல்பு கொடுக்கரங்கப... யாரவது இந்த சிரிப்பு போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி உள்ள போடுங்க ப்ளீஸ்....//

இந்த VAS தொல்லை தாங்க முடியலப்பா. யாராவது வந்து மருந்து அடிங்களேன்.

@ நன்றி Jey

@ நன்றி seemangani நண்பரே

@ rk guru நாமதாங்க சொல்லணும். அவரே எப்படி சொல்லுவாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது விஜய்யோட அப்பா சினிமா துறையைச் சேர்ந்தவரா? யாரு?//யாரு அவுரு?//

தமிழினியன் & சரவணகுமரன்அவரோட அப்பா பிரபல தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பன். தம்பி உதயா நடிகர். திருநெல்வேலி படத்துல விந்தியாக்கு ஜோடியா நடிச்சாரே அவர்தான்.

//இந்த தம் எங்கண்ணா கிடைக்கும்.. கடைல இல்லன்னு சொல்லிட்டாங்க..//

போலீஸ் station-ல கிடைக்கும் பிரசன்னா வேண்ணா ட்ரை பண்ணி பாருங்களேன்..

@ அனு நன்றி. பல்பு வாங்கினத எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க..

@ Faaique Najeeb வாங்க வாங்க. காலைலயே பல்புனா இன்னிக்கு நாள் ஒளிமயமா இருக்கும்க.

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ட‌த்து ராசா

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

சகாப்த்தமோ.எதார்த்தமோ நம்ம ஏமி பொன்ன நமக்கு அடையாளம்காட்டிய
விஜய்க்கு
நம்ம பதிவுலகம் சார்பில் தனி பாராட்டு விழாவே நடத்தலாம் ஹா ஹா,என்ன சொல்றீங்க !!!

//ஹிஹி எனக்கில்லை சார். நம்ம பய ஜில்தண்ணிக்குதான். பாவம் பக்கம் பக்கமா எமியப் பத்தி கவிதை எழுதுறான். அவனுக்காகவாவது கொடுங்களேன் //

நானும் லெட்டர் போட்டு பாத்தன் ஒன்னும் ஆகல,இப்ப போலீசே நோட்டீசு விட்டாச்சி,அதையும் பாத்துடுவோம்

நான் கொஞ்சம் பயந்துகிட்டுதான் வந்தேன் "விஜய்",நல்ல வேலை

கலக்கிட்டீங்க போங்க :)))

பட்டாபட்டி.. சொன்னது…

(நீங்க வேற ஏதாவது விஜய்யை நினைச்சுக்கிட்டு வந்ததா நானா பொறுப்பு. போங்க பாஸ்) //

ஒரு போலீஸ்காரனா..இந்த பதில்..சரியில்ல..

(பொறுப்ப தட்டிக்கழிக்கறத சொன்னேன்..ஹி..ஹி)

ஆனா..... ரமேஸா சொன்னா.. பதில..தலகுனிந்து ஏற்றுக் கொ(ல்)கிறோம்..

அருண் பிரசாத் சொன்னது…

நீங்க நம்ம சங்கத்து ஆள் -னு மறுபடியும் நிருபித்துவிட்டீர்.

நான் ஏதோ சன் டீவி விமர்சனம்னுல நினைச்சேன்! இன்னும் நமக்கு அனுபவம் தேவையோ, ரைட்டு

மங்குனி அமைச்சர் சொன்னது…

வலிக்கலையே , வலிக்கலையே , ஆ டண்டணக்கா , ,ஆ டண்டணக்கா ஆ டண்டணக்கா

ஜெயந்தி சொன்னது…

நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி க‌ரிச‌ல்கார‌ன்

//விஜய்க்கு நம்ம பதிவுலகம் சார்பில் தனி பாராட்டு விழாவே நடத்தலாம் ஹா ஹா,என்ன சொல்றீங்க !!!//

கண்டிப்பா ஜில்தண்ணி நடத்திடுவோம்.

@ பட்டாபட்டி.. நான் போலீஸ் இல்லை. அதுக்கும் மேல..ஹிஹி

@ அருண் பிரசாத் நன்றி தல...

@ மங்குனி அமைச்சர் எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிப்பீங்க?

@ ஜெயந்தி ஹிஹி..வருகைக்கு நன்றி..

வெங்கட் சொன்னது…

கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டலியே. ஏன்னா இன்னிக்கு காலைலதான் மீசைய ஷேவ் பண்ணினேன். ஐ பல்பு உங்களுக்குதான்!!!!!.

//கடைசியாக ரிலீஸ் ஆன இவரது படம் வெற்றிகளையும் வசூல்களையும் வாரிக் குவித்தது//
//கடைசியாக வந்த இவரது படம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது முயற்சி.//

கடைசியாக அப்டின்னு நீங்க எப்படி சொல்லலாம்? இத நான் வன்மையா கண்டிக்கிறேன். அவர் உங்ககிட்ட சொன்னாரா இதான் கடைசி படம்னு அப்டின்னு. லேட்டஸ்ட்டாக அப்டின்னு சொல்லுங்க. இது கூட தெரியல நீங்கெல்லாம்....

சௌந்தர் சொன்னது…

அடா நான் இவனுக்கு போய் விருதா நினைத்தேன் இவர் கிரீடம் விஜய் சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கடைசியாக அப்டின்னு நீங்க எப்படி சொல்லலாம்? இத நான் வன்மையா கண்டிக்கிறேன். அவர் உங்ககிட்ட சொன்னாரா இதான் கடைசி படம்னு அப்டின்னு. லேட்டஸ்ட்டாக அப்டின்னு சொல்லுங்க. இது கூட தெரியல நீங்கெல்லாம்....//

நான் தமிழ்ல சொன்னேன். வெங்கட் நீங்க இங்கிலீஷ்-ல சொன்னேங்க.. அவ்ளோதான்.

//கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டலியே.//

அதான் உங்க தலை புல்லா மண்ணுதான....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks soundar

ப.செல்வக்குமார் சொன்னது…

//பிரகாசிக்க முடிந்தது. //
டியூப் லைட்னு சொல்லுறீங்களோ ...!!

ப.செல்வக்குமார் சொன்னது…

:-)

இராமசாமி கண்ணண் சொன்னது…

//தமிழினியன் & சரவணகுமரன்அவரோட அப்பா பிரபல தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பன். தம்பி உதயா நடிகர். திருநெல்வேலி படத்துல விந்தியாக்கு ஜோடியா நடிச்சாரே அவர்தான்.
//
உதயா தம்பி இல்ல கண்ணா. உதயாத்தான் அண்ணண்.

இராமசாமி கண்ணண் சொன்னது…

//தமிழினியன் & சரவணகுமரன்அவரோட அப்பா பிரபல தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பன். தம்பி உதயா நடிகர். திருநெல்வேலி படத்துல விந்தியாக்கு ஜோடியா நடிச்சாரே அவர்தான்.
//
உதயா தம்பி இல்ல கண்ணா. உதயாத்தான் அண்ணண்.

தெய்வசுகந்தி சொன்னது…

:))

ஸ்ரீராம். சொன்னது…

விஜய் என்கிற பேர்ல ரெண்டு பேரைப் பற்றி எழுதியிருக்காரா மாதிரி தெரியுது... யார் அந்த ரெண்டு விஜயும் என்று தெரியவில்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ப.செல்வக்குமார் வா ராசா வா. டியூப் லைட்டுதான்.

//உதயா தம்பி இல்ல கண்ணா. உதயாத்தான் அண்ணண்.//
அட விடு ராம்ஸ் எப்படியும் சகோதரன்தான

@ தெய்வசுகந்தி நன்றி

@ ஸ்ரீராம். நீங்க இன்னும் வளரனும் தம்பி...

பிரேமா மகள் சொன்னது…

நாடோடிகள் படத்தில் செகண்ட் ஹீரோவா நடிச்சாரே விஜய் (வசந்த அண் கோ ஓனரின் மகன்) அவரோன்னு நான் நினைச்சுத்தான் படிச்சேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாடோடிகள் படத்தில் செகண்ட் ஹீரோவா நடிச்சாரே விஜய் (வசந்த அண் கோ ஓனரின் மகன்) அவரோன்னு நான் நினைச்சுத்தான் படிச்சேன்.. //

@ பிரேமா மகள் நீங்களும் தொப்பி வாங்கிட்டீங்களா?

Cool Boy கிருத்திகன். சொன்னது…

என்னாது காந்திய சுட்டுட்டாங்களா..!!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது