வியாழன், ஜூலை 15

சந்தோஷம்

எலெக்சன் வரப் போகுதே. மக்களோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக உளவுத்துறை மக்களை தீவிரமாக கண்காணித்து நம்ம கலைஞர் அய்யாகிட்டா ரிப்போர்ட் கொடுக்க போறாங்க.

உளவுத்துறை: வணக்கம் அய்யா..

கலைஞர்: வணக்கம் என் கழக உளவுத்துறை கண்மணிகளே. உங்களை கண்டதும் என் கண்கள் பணித்தது.இதயம் மகிழ்ந்தது.

உளவுத்துறை: நன்றி அய்யா.

கலைஞர்: சரி இப்ப மக்களோட மனசுல என்ன இருக்கு? மக்கள் சந்தோசமாத்தான் இருக்கிறார்களா?

உளவுத்துறை: ஆமாங்க அய்யா. ரொம்ப சந்தோசமா இருக்காங்க

கலைஞர்: அதுக்கு என்ன காரணம். இலவச டிவியா?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: இல்லையா? அப்போ இலவச கேஸ் அடுப்பா?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: அதுவும் இல்லையா. ஒரு ரூபாய் அரிசி திட்டம்?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: அப்ப கலைஞர் காப்பீட்டு திட்டமா?

உளவுத்துறை: அதுவும் இல்லை அய்யா.

கலைஞர்: என்ன சொல்றீங்க. நம்ம இலவச திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் மக்கள் சந்தோசமா இருக்காங்களா. என்ன அதிசயம். இதுக்கு காரணம் என்னவோ?

உளவுத்துறை: கோகுலத்தில் சூரியன் வெங்கட் அப்டின்னு ஒருத்தர் கடந்த பதினோராம் தேதிக்கு அப்புறம் பதிவு எழுதலை. அவரது கம்ப்யூட்டர்-க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களாம். அடுத்த பதிவு கூட சனிக்கிழமைதானாம். அதனால மக்கள் மொக்கைல தப்பிச்சு ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம்.
 
கலைஞர்: அப்படியா. அப்டின்னா அவரை பதிவு எழுத விடாமல் செய்து எங்கள் ஆட்சியில்தான் "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" ப்ளாக் தடை செய்யப்பட்டது அப்டின்னு விளம்பரம் செய்து நாம மக்கள் மனசை கவரலாமா?

உளவுத்துறை: அதிலும் ஒரு சிக்கல் உண்டு அய்யா..

கலைஞர்: என்ன சிக்கல்?

உளவுத்துறை: ஒரே அடியாக தடை செய்து விட்டால் மக்கள் அவரைக் கலாய்க்க முடியாமல் வெக்ஸ் ஆகி மனச்சோர்வுக்கு ஆளாயிடுவாங்க. உலகத்திலேயே எவ்ளோ கலாய்ச்சாலும் தாங்குற ஒரே ஆள் இந்த வெங்கட்தான் அய்யா.
 
கலைஞர்:  அப்படியா. அப்டின்னா என்ன பண்ணலாம்?

உளவுத்துறை: வெங்கட்டை வாரம் ஒரே ஒரு பதிவு போடுமாறு மிரட்டி வைக்கலாம். மக்களை ஒருவாரம் மொக்கைல இருந்து காப்பாத்தின மாதிரியுமாச்சு. ஒரு வாரம் மக்கள் வெங்கட்டை கலாய்ச்ச மாதிரியும் ஆயிடுச்சு.

கலைஞர்: இது நன்றாக இருக்கிறதுடா என் கண்மணி.

உளவுத்துறை:  அப்புறம் கலைஞர் டிவில பதிவர்கள் முன்னிலையில் "மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா" நடத்தலாம்.

கலைஞர்: ஆஹா அருமை. அப்படின்னா பதிவர்கள் ஓட்டு நமக்குதானே.

உளவுத்துறை: ஆமாம் வெங்கட் மற்றும் டெரர் ஓட்டு மட்டும் விழாது. பரவா இல்லை. டேரருக்கு ஒரு பிரியாணி வாங்கி கொடுத்தா போதும். அந்த ஓட்டும் நமக்குதான்.
 
கலைஞர்: சரி கண்மணி. நீ போய் ராம.நாராயணனை பார்த்து "மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா" ஏற்பாடு பண்ண சொல்லு. நான் வருகிறேன்.

உளவுத்துறை: சரிங்க அய்யா...

39 கருத்துகள்:

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

வாரம் ஒரு முறை பதிவிட அவரை மிரட்டலாம்-இந்த ஆபர் நல்லாயிருக்கே

Jey சொன்னது…

எப்பா சாமி, எப்படியா ...!!!இதெல்லாம்.., கொன்னுட்டே போ.(சற்றுமுன் கிடைத்த செய்தி : சிப்பு பொலிஷ் தலைமறைவு , வெங்கட் & கோ, தனது பரிவாரன்களுடன் தீவிர வேட்டை.... சிப்பு சிக்கினால் சட்னியாக்கப்போவதாக வெங்கட் ஆவேசப்பேட்டி..)

Jey சொன்னது…

//அவரது கம்ப்யூட்டர்-க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களாம். அடுத்த பதிவு கூட சனிக்கிழமைதானாம். அதனால மக்கள் மொக்கைல தப்பிச்சு ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம். ///
அதான் மொக்கய மொத்தக்குத்தகைக்கு நீரு எடுத்திருகீரே ராசா...அவ்வ்வ்வ்.

அருண் பிரசாத் சொன்னது…

என்னதான் ஒரே கட்சினாலும், கிடைச்ச gap ல வெங்கடை கலாய்ச்சி நீங்களும் பதிவு போட்டிருக்கீங்க, நானும் பதிவு போட்டிருக்கேன். அங்கதான்யா VKS உண்மையான் தொண்டனு நிருபிச்சிருக்கோம். தலைவியிடம் சொல்லி பதவி உயர்வு வாங்கவேண்டியது தான்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//உளவுத்துறை: ஆமாம் வெங்கட் மற்றும் டெரர் ஓட்டு மட்டும் விழாது. பரவா இல்லை. டேரருக்கு ஒரு பிரியாணி வாங்கி கொடுத்தா போதும். அந்த ஓட்டும் நமக்குதான். //

இதை நன் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பிரியாணிக்கு தன்மானத்தை இழக்கும் அளவு நங்கள் இன்னும் தரம் தாழ்ந்துவிடவில்லை என்று கலைஞர் ஐயா அவர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். (MIND VOICE: வேனும்ன 3 பிரியாணி முயற்சிபண்ணி பாருங்க. சிங்கம் சாஞ்சளும் சாயும்...)

தனவேல் சொன்னது…

நண்பா, உன்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு. நீ அரசியல் பற்றி படிக்க மாட்டே, பேச மாட்டயே பிறகு எப்படி கலைஞர் மற்றும் தமிழக மக்கள் பற்றியும் இவ்வளவு தெளிவாக எழுதினாய். பேசாமல் கட்சி ஆரம்பி நீ தலைவர், நான் பொது செயலாளர். வேண்டும் என்றால் கே ஆர் பி செந்திலை கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு போடலாம்.
வருங்கால இந்திய ஜனாதிபதி வாழ்க! இல்லை இல்லை
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க!

மங்குனி அமைசர் சொன்னது…

உள்ளேன் ஐய்யா

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மொக்கை பதிவர் ரமேஷ் வாழ்க..வளர்க...இப்படியே இந்த சிப்புபோல்லீஈஈஇஸ்க்கும் தடை போட சொல்லிட்டா ஊர் உலக மக்கள் எல்லாரும் சண்டோசமா இப்பாங்க..

சௌந்தர் சொன்னது…

சிரிப்பு போலீஸ் எப்போ மிரட்ட போறிங்க அய்யா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வாரம் ஒரு முறை பதிவிட அவரை மிரட்டலாம்-இந்த ஆபர் நல்லாயிருக்கே//

அப்படின்னா பண்ணிடலாம் ஜில்தண்ணி.

//சிப்பு பொலிஷ் தலைமறைவு , வெங்கட் & கோ, தனது பரிவாரன்களுடன் தீவிர வேட்டை.... சிப்பு சிக்கினால் சட்னியாக்கப்போவதாக வெங்கட் ஆவேசப்பேட்டி..)//

Jey முதல்ல நீங்க எந்த கட்சின்னு முடிவு பண்ணுங்க. எல்லா கற்சிலையும் ஓட்டு போடணும்னு நினச்சா விட்ருவமா..

//அதான் மொக்கய மொத்தக்குத்தகைக்கு நீரு எடுத்திருகீரே ராசா...அவ்வ்வ்வ்.// //க்கை பதிவர் ரமேஷ் வாழ்க..வளர்க...இப்படியே இந்த சிப்புபோல்லீஈஈஇஸ்க்கும் தடை போட சொல்லிட்டா ஊர் உலக மக்கள் எல்லாரும் சண்டோசமா இப்பாங்க..//

@ வசந்த & Jey நான் என்ன அவ்வளவு மொக்கையாவா எழுதுறேன்.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிரிப்பு போலீஸ் எப்போ மிரட்ட போறிங்க அய்யா.....//

சௌந்தர் மிரட்டிடலாம் விடுங்க..

@ மங்குனி அமைசர் வாங்க சார்

@ தனவேல் உங்களை மாதிரி புத்திசாலிங்க கூட இருக்கனே. நான் கட்சி ஆரமிக்கனுமா. கே ஆர் பி செந்திலை கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு போடணுமா. ஆணிய புடுங்க வேணாம் போப்பா..

@ TERROR-PANDIYAN(VAS) வெங்கட் இன்னுமா உங்களை நம்புராறு ...

@ அருண் பிரசாத் நம்ம தலைவிய காணோமே. எங்க போனாங்க.. அவங்களுக்கும் ஒரு பயோடேட போட வேண்டிதிருக்குமோ...

Madhavan சொன்னது…

அதானே.. வெங்கட் பதிவு போடாம காணாம போயிட்டா, சும்மா விட்டுடுவோமா.. எங்க ஊட்டுலேர்ந்துகிட்டே கலாய்க்க மாட்டோமா?

'பாராட்டு விழா' -- ஆஹா.... அதானே பாத்தேன்.. இது இல்லாமலா..

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

நான் பதிவிடலாம்னு இருந்தேன்........அதுக்குள்ளே நீங்க முந்திகிட்டீங்க.....(யப்பா.......எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு?)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உளவுத்துறை சென்ற பிறகு கலைஞர் கழக கண்மணிகளுடன்..

கலைஞர்: உளவுத்துறை சொன்னதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிர்கள்?

கழக கண்மணி : நம்ப உளவுத்துறை பற்றி உங்களுக்கு தெரியாத ஐயா? எப்பவும்போல அவங்க கொடுத்த ரிப்போர்ட் தப்பு.

கலைஞர் : அப்படியா? அப்போ வந்தது சிரிப்பு போலிச?

கழக கண்மணி: அமாம் ஐயா. வெங்கட் ரொம்ப நல்லவர் (எவ்வளோ அடிச்சாலும் தாங்குவரு). சூரியனுக்கே டார்ச் அடிச்சி நமக்கு ஹெல்ப் பண்றவரு. இது எல்லாம் VKS சதி.

கலைஞர் : அப்போ அந்த சிரிப்பு போலிச என்ன பண்றது?

கழக கண்மணி: அவர் ப்ளாக் அவரையே படிக்க சொல்லலாம், சூரியனின் வலை வாசல் படிக்க சொல்லி டர்சேர் கொடுக்கலாம். இல்லன ஒரு பூதொட்டி வங்கி இங்க இருந்தே தூக்கி எறியலாம்... கொய்யால கொஞ்ச நாள் போஸ்ட் போடமாட்டார்.

டிஸ்கி: இந்த போஸ்ட் உடனே எடுக்கும்படி VAS சார்பில் நமது ரமேஷ்கு பயங்கர கொலை மிரட்டல் விடுகிறேன்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

///கழக கண்மணி: அவர் ப்ளாக் அவரையே படிக்க சொல்லலாம், சூரியனின் வலை வாசல் படிக்க சொல்லி டர்சேர் கொடுக்கலாம். இல்லன ஒரு பூதொட்டி வங்கி இங்க இருந்தே தூக்கி எறியலாம்... கொய்யால கொஞ்ச நாள் போஸ்ட் போடமாட்டார்.//

இந்த மேட்டர் நல்லாயிருக்கே

ப.செல்வக்குமார் சொன்னது…

///கோகுலத்தில் சூரியன் வெங்கட் அப்டின்னு ஒருத்தர் கடந்த பதினோராம் தேதிக்கு அப்புறம் பதிவு எழுதலை. அவரது கம்ப்யூட்டர்-க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களாம். அடுத்த பதிவு கூட சனிக்கிழமைதானாம். அதனால மக்கள் மொக்கைல தப்பிச்சு ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம். ///

ஆனாலும் கோமாளியோட மொக்கைல இருந்து தப்பிக்க முடியாது ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

///சூரியனுக்கே டார்ச் அடிச்சி நமக்கு ஹெல்ப் பண்றவரு.///
சரத்குமாரோட படத்தவ சொல்றீங்க ...! ஏன்னா நம்ம சிரிப்பு போலீசும் சரத்குமார் ரசிகர் தானே ...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//டிஸ்கி: இந்த போஸ்ட் உடனே எடுக்கும்படி VAS சார்பில் நமது ரமேஷ்கு பயங்கர கொலை மிரட்டல் விடுகிறேன்..//

யாருப்பா அது சீரியசான நேரத்துல காமெடி பண்றது. அய்யோ அய்யோ...

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்) ஏன் இந்த கொலைவெறி....

//ஆனாலும் கோமாளியோட மொக்கைல இருந்து தப்பிக்க முடியாது ..!! //

அட ஆமா மொக்கை பேக்டரிய மறந்துட்டேனே,

//சிரிப்பு போலீசும் சரத்குமார் ரசிகர் தானே ...!! //

அட பாவி எங்க வந்து எத கோர்த்துவிட பாக்குற..

வெங்கட் சொன்னது…

@ டெரர்..,

// கழக கண்மணி: அவர் ப்ளாக்
அவரையே படிக்க சொல்லலாம்,
சூரியனின் வலை வாசல் படிக்க
சொல்லி டர்சேர் கொடுக்கலாம். //

நம்ம ரமேஷ் பண்ணினது தப்பு தான்..,
அதுக்கு தண்டனை குடுக்கணும்
அதுவும் நியாயம்தான்..

ஆனா அதுக்காக
ஒரு ஆயுள் தண்டனையும்.,
ஒரு தூக்கு தண்டனையுமா தர்றது..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//அட பாவி எங்க வந்து எத கோர்த்துவிட பாக்குற.//
ஏதாவது நல்லது செய்யலாமேன்னு பார்த்தேன் ..!

அனு சொன்னது…

நம்ம கட்சியின் பலத்தை கட்சிகாரங்க ரெண்டு பேரும் நல்ல காட்டிட்டீங்க (ரெண்டு பேரும் கிட்ட தட்ட ஒரே டைம்ல பதிவு போட்டிருக்கீங்க)..

உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு வேணும்னு சொல்லுங்க, அக்கவுண்ட்-ல போட்றலாம் [ வெங்கட் ப்ளாக்-க்கு மட்டுமல்ல, வெங்கட்டோட bank account-க்கும் சூனியம் வச்சிட்டோம்ல ;) ]

//ஆமாம் வெங்கட் மற்றும் டெரர் ஓட்டு மட்டும் விழாது. பரவா இல்லை//

கவலை வேண்டாம்.. டெரரும் நம்ம கட்சிதான்.. spyஆ VASக்கு அனுப்பி இருக்கோம்.. அவர் வெங்கட்-க்கும் சேர்த்து ரெண்டு ஓட்டா போட்டுடுவார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ உங்க அன்புக்கு நன்றி அனு

அருண் பிரசாத் சொன்னது…

@ அனு

நல்ல வேளை வந்தீங்க, இல்லைனா உங்களுக்கு பயோடேட்டா எழுதி இருப்பேன். சரி நம்ம பிளாக்ல ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு போய்டுங்க

அருண் பிரசாத் சொன்னது…

@ அனு

நல்ல வேளை வந்துடீங்க, இல்லைனா உங்களுக்கு ஒரு பயோடெட்டா போட்டிருப்பேன்

சரி, நம்ம பிளாக்ல ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு போய்டுங்க

seemangani சொன்னது…

"மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா"

நாட்டுல சட்ட ஒழுங்கு சீற்குழஞ்சு போச்சு ஐயா...சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....நீங்க நெசமாவே போலீசா...???

வெங்கட் சொன்னது…

@ அருண்.,

// @ அனு
நல்ல வேளை வந்துடீங்க,
இல்லைனா உங்களுக்கு
ஒரு பயோடெட்டா போட்டிருப்பேன் //

குடுத்த Payment அதுக்கும்
சேர்த்து தானுங்க..
சட்டு., புட்னு வேலைய ஆரம்பிக்கற
வழிய பாருங்க..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

Present Sir..

ஜெயந்தி சொன்னது…

ஒரு அப்பாவி வசமா மாட்டுனாரா?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

நாங்களும் "உலவு"துறைதான்........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ஆனா அதுக்காக
ஒரு ஆயுள் தண்டனையும்.,
ஒரு தூக்கு தண்டனையுமா தர்றது..?//

வெங்கட் உங்க ப்ளாக்க பத்தியே தான் எப்பவும் யோசனையா?

@ seemangani எஸ் சார்

@ கே.ஆர்.பி.செந்தில் thank you சார்
@ உலவு.காம் நன்றி

வெங்கட் சொன்னது…

@ ஜெயந்தி..,

// ஒரு அப்பாவி வசமா மாட்டுனாரா? //

வாங்க., வாங்க.. Support-க்கு
நீங்க ஒருத்தராவது வந்தீங்களே...!!
நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை
இந்த அநியாயத்தை தட்டி கேளுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெங்கட்
சிங்கம் அப்டிங்கிறீங்க, அப்பாவி அப்டிங்கிறீங்க. முதல்ல நீங்க யார்னு confirm பண்ணுங்க. பின்ன அப்பாவிய அடப்பாவின்னு சொல்லிட போறாங்க.

பிரேமா மகள் சொன்னது…

யார் அந்த அப்பாவி வெங்கட்?

Jey சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ வெங்கட்
சிங்கம் அப்டிங்கிறீங்க, அப்பாவி அப்டிங்கிறீங்க. முதல்ல நீங்க யார்னு confirm பண்ணுங்க. பின்ன அப்பாவிய அடப்பாவின்னு சொல்லிட போறாங்க.///

சிப்பு, விடுயா..விடுயா.., பூட்டுன வீட்டுக்கு முன்னாடி நாள் முழுக்க சவுண்ட் விட்டுகிட்டு. போய் புள்ள குட்டிகள படிக்கப்போடுங்கயா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யார் அந்த அப்பாவி வெங்கட்?//

@ பிரேமா மகள் வெங்கட் அப்பாவி இல்ல அடப்பாவி..

//சிப்பு, விடுயா..விடுயா.., பூட்டுன வீட்டுக்கு முன்னாடி நாள் முழுக்க சவுண்ட் விட்டுகிட்டு. போய் புள்ள குட்டிகள படிக்கப்போடுங்கயா...///

சரி விடுய்யா உன் ஏரியா-வுக்கு வர சொல்றீங்க. இருய்யா வரேன்...

ரோஸ்விக் சொன்னது…

சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க சாமி... :-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ரோஸ்விக் அண்ணா எங்க அப்பா போன் நம்பர் தரேன். ப்ளீஸ் அவர்கிட்ட சொல்லுங்க .

Jey சொன்னது…

// ரோஸ்விக் கூறியது...
சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க சாமி... :-))) ///

எங்க சார், சிப்புவுக்கு இதுவர 1578 தடவை பொன்னு பாக்க போயாச்சு, ஒரு வாரத்துல பதில் சொல்றோம்னு சொல்ரவங்க, பயந்துகிட்டு ஊரக்காலி பண்னிட்டு போயிடுராங்க..., உங்களுக்கு ஆப்பு வைக்கிர அம்மனிக யாரும் இருந்தா சொல்லுங்க, கட்டி வச்சிரலாம்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ரோஸ்விக் சொன்னது…
//சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க சாமி... :-))) //

எதுக்கு சார்? நம்ப படர கஷ்டம் பத்தாதா? இன்னும் அந்த பொண்ணு, அவங்க சொந்தகாரங்க, தூரத்து சொந்தகாரங்க இப்படி எல்லாரும் இவரு ப்ளாக் படிச்சி கஷ்டபடனும?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது