திங்கள், ஜூலை 19

திருட்டு பயலே

இதனால உலக மக்கள் அனைவருக்கும் சொல்லிகொள்வது என்னவென்றால் இனிமேல் நான் எழுதுற பதிவ மொக்கை, குப்பை, தேறாது, பிளேடு அப்டின்னு உக்காந்துகிட்டு ,நின்னுகிட்டு, படுத்துக்கிட்டு உருண்டுகிட்டு சொல்றவுங்க இதோட நிறுத்திகிடனும்.

நம்மள ஒரு சுஜாதா,ராஜேஷ்குமார், பிரபஞ்சன் மாதிரி நினைச்சு நான் எழுதுன பதிவ ஒரு பயபுள்ள காப்பி பண்ணி அதோட பதிவுல போட்டிருக்கு. மொக்கையா இருந்தா யாராவது திருடுவாங்களா? அப்ப நான் நல்லாதான எழுதுறேன். அதனாலதான் சொல்றேன். மொக்கை பதிவுன்னு கமெண்ட் போடுறத இதோட நிறுத்திகிடுவோம்.

இல்லன்னா பெரிய பெரிய விளைவுகளை நீங்க சந்திக்கணும்(உன் பிளாக்க படிக்கிறதா விடவா).

என்னோட பதிவு:

http://sirippupolice.blogspot.com/2010/07/blog-post_14.html

திருடின பதிவு:

http://www.eegarai.net/-f5/-t34583.htm

இதுவே நம்ம தம்பி ஜில்தண்ணி அவரோட பதிவுல சொல்லித்தான் தெரியும். இன்னும் எத்தனை பேரோட பதிவ சுட்டிருக்கனோ இந்த பய raj001. சரின்னு அந்த பதிவ எடுக்க சொல்லி கமெண்ட் போட்டேன். அந்த தம்பியும் உடனே எடுத்துட்டான்(பதிவ இல்லைங்க, கமாண்ட எடுத்துட்டான்)

இத நம்ம Jey அண்ணன் கிட்ட சொன்னதும் டென்சனாகி மறுபடியும் ஆளுக்கொரு மிரட்டல் கமெண்ட் செந்தமிழில் போட்டோம். அவ்ளோதான் அடுத்த கமெண்ட் போடுறதுக்குள்ள எங்களோட அக்கவுன்ட லாக் பண்ணிடாங்க. அந்த "error message" என்னனு கீழ பாருங்க.

திருடி போட்டது நல்ல பதிவாம். ஏன்னு சொந்தக்காரன் கேட்டா அது அநாகரீக பதிவாம். என்ன கொடுமை சார் இது?

சரி அவனுக்கு விவரம் பத்தல. என்னோட பதிவ திருடுறதுக்கு பதில் எங்க அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் பதிவ திருடி போட்டிருந்தேன்னா உனக்கு மதுமிதான்னு ஒரு அழகான அன்பான பாசமான சூப்பரான பொண்ணு லவ் லெட்டர் அனுப்பிருக்கும். நீயும் லைப்ல செட்டில் ஆயிருக்கலாம். விவரம் பத்தலையே.

அடுத்த தடவ திருடும்போது என்கிட்டே ஐடியா கேளு. யார் யார் பதிவு திருடினா என்ன நன்மைகள் கிடைக்கும்னு சொல்றேன். ஓகே வா?

கடைசியா அந்த வெப்சைட் owner தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கார். அவர் மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னால இந்த திருட்டு பதிவ எடுத்திருக்கணும். அப்புறம் என்னோட அக்கவுன்ட enable பண்ணிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா அவர பாராட்டி இருக்கலாம். இந்த பதிவு எழுதி முடிக்கிற வரைக்கும் அப்படி எதுவும் நடக்கல.

ஒருவேளை நீங்க படிக்கும்போது அந்த பதிவு காணாமல் போகலாம். அத நான் போட்டோ-வா போடுறேன் கீழே:

39 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

Me the 1st?!

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

என்னோடது இப்ப உங்களோடது,நிறைய பேர் என் பதிவை இன்னும் படிக்கலன்னு நினைக்குறேன்

ஆளாளுக்கு தேடினால் இன்னொரு டூப்ளிகேட் தமிழ் பதிவுலகமே கிடைத்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை

என்ன பண்றது,இதுல அந்த திருட்டு பயலுவோ வலைதளங்களை நம்பி 300,500 ஃபாலோயர்சு இருக்காங்க

அவனுகளா திருந்தனும் ? இல்ல ஒன்னும் பன்னமுடியாது

அருண் பிரசாத் சொன்னது…

தல பெரிய ஆளாயிட்டிங்க போல.

எப்புடி கண்டுபிடிச்சாரு பாருயா நம்ம போலிசு. ஒருவேளை, விஜய் பத்தி எழுதியதால், அவரோட பார்முலா follow பண்ணி இதையும் காப்பியடிச்சிட்டாங்களோ.

இந்த பொழப்புக்கு பதில் அவங்க...

ஜானகிராமன் சொன்னது…

ரமேஷ், பாத்துட்டே இருங்க. நாளைக்கு இந்த பதிவையும் காப்பி பண்ணி, எதாவது ஒரு ப்ளாக்குல டீ போட்டிருக்கப் போறான். (இப்பல்லாம் டிராப்ட்ல இருக்குற பதிவையே துக்கறாங்கலாம்...)

சீமான்கனி சொன்னது…

திருவள்ளுவர் படத்த போட்டு திருட ஆரம்பிச்சுடாங்களா....கடவுளே...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

http://tamil2friends.com/tamil-jokes/general/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%81

http://www.alagankulam.in/manage-blog/comments/87

மாம்ஸ் இப்பிடி நிறைய இடத்துல என்னோட போஸ்ட்ஸ் உலாவருது கடசீல நன்றின்னு சொல்லிப்போட்றாய்ங்களா அதனால சரிபோனா போயிட்டு போறாய்ங்கன்னு வுட்டுடுறது...

ஈகரையில என்னோட போஸ்ட்ஸ் முன்னாடி நிறைய வந்துட்டு இருந்துச்சு வேறொருத்தர்பேர்ல இதை நிறுத்த நான் செஞ்ச வேலை என்ன தெரியுமா உடனே அதில உறுப்பினராகி இப்போல்லான் என்னோட போஸ்ட்ஸ் ப்லாக்ல ரிலீஸ் ஆன மறுநாள் ஈகரையில நானே போட்டுக்கிறேன் எப்பிடி நாங்கல்லாம்ன்னு காலர் தூக்கிவிடுறதுக்கு முன்னாடி அடுத்தடுத்து வேற வேற தளத்தில போட்டுட்டே இருக்காய்ங்க இது ஒரு தொடர்கதையா போய்ட்டு இருக்கு..

லூஸ்ல விடு மாமு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வாங்க அருண் பிரசாத்

@ ஜில்தண்ணி - யோகேஷ் நம்மள விட இவனுங்களுக்கு நிறைய கமென்ட் வருது தம்பி..

@ அருண் பிரசாத் VAS சதியா இருக்குமோ?

//இப்பல்லாம் டிராப்ட்ல இருக்குற பதிவையே துக்கறாங்கலாம்...)//

செஞ்சாலும் செய்வாங்க ஜானகி....

@ சீமான்கனி ஆமாங்க...

@ ப்ரியமுடன் வசந்த் இருக்கலாம் மாப்பு. முதல் தடவை அப்டின்கிரதுனால கோவம் வந்துச்சு. அடிக்கடி வந்தா பழகிடுமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எப்படியோ ஒரு பதிவ ஓட்டுறதுக்கு மேட்டர் கிடைச்சதே. ஹஹா

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் நீ பிரபலம் ஆகிட்டு வர்றே.. போட்டா போடுட்டும் விடுய்யா..
ஆனா கடைசீல நன்றின்னு உன்பேர் போட்டிருந்தா.. நாமலே ப்ரீயா விளம்பரம் கொடுத்திருப்போம்..

அப்புறம் மக்களே மதுமிதாவுடன் கூட்டணி அமைத்து என் பிரபலத்தை விமர்சிக்கும் ரமேஷ் ஒழிக...

கலாநேசன் சொன்னது…

மத்தவங்க பதிவ திருடினா போலிஸ் கிட்ட சொல்லலாம். போலிஸ் பதிவையே திருடினா எங்க போய் சொல்றது....

இராமசாமி கண்ணண் சொன்னது…

சரியான பிரபல/பிராப்ள பதிவர் ஆகிட்ட போல. நடத்து நடத்து :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//இத நம்ம Jey அண்ணன் கிட்ட சொன்னதும் டென்சனாகி மறுபடியும் ஆளுக்கொரு மிரட்டல் கமெண்ட் செந்தமிழில் போட்டோம்//

தல என்ன கூபிடாம நீங்க இரண்டு பேரு மட்டும் போய்டீங்களே. சொல்லி இருந்த நானும் இரண்டு வெட்டு வெட்டி இருப்பேன் இல்ல? தேவை இல்லாம சிரிப்பு போலீஸ் சீரியஸ் போலீஸ் மத்த முயற்சி பண்றாங்க.

பின் குறிப்பு: உங்க மொக்கை பத்தி நல்ல தெரிஞ்சதே எங்களுக்கு (VAS) தன். அப்புறம் எப்படி அதா கபி & பேஸ்ட் பண்ணி உலகம் பூர அடி வாங்கவ? அதனால் இது VAS சதி இல்லை.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//நம்மள ஒரு சுஜாதா,ராஜேஷ்குமார், பிரபஞ்சன் மாதிரி நினைச்சு நான் எழுதுன பதிவ ஒரு பயபுள்ள காப்பி பண்ணி அதோட பதிவுல போட்டிருக்கு. //

அவன் திருடினது கூட கோவம் இல்ல தலை... அதையே வச்சி நீங்க ஒரு பதிவு போட்டதா கூட மன்னிச்சிடலாம். ஆனா உங்கள நீங்களே சுஜாதா,ராஜேஷ்குமார், பிரபஞ்சன் கூட compare பண்ணி பேசற அளவு உங்க மனநிலை பாதிகபட்டததன் என்னால தாங்கிக்க முடியல....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

எங்க தல வெங்கட்ட கலாய்ச்சியே
பார்த்தியா உஷாரய்யா...உஷாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்புறம் மக்களே மதுமிதாவுடன் கூட்டணி அமைத்து என் பிரபலத்தை விமர்சிக்கும் ரமேஷ் ஒழிக..//

இருங்க செந்தில் அண்ணா. மதுமிதாகிட்ட சொல்லி இன்னொரு லவ் லெட்டர் அனுப்புறேன்..

@ கலாநேசன் அதான நான் சிரிப்பு கவர்னர் கிட்டா போக முடியும்...

@ நன்றி ராம்ஸ்

//தல என்ன கூபிடாம நீங்க இரண்டு பேரு மட்டும் போய்டீங்களே. சொல்லி இருந்த நானும் இரண்டு வெட்டு வெட்டி இருப்பேன் இல்ல? தேவை இல்லாம சிரிப்பு போலீஸ் சீரியஸ் போலீஸ் மத்த முயற்சி பண்றாங்க.//

டெரர் இது VAS சதின்னு ஈகரையே ஒத்துகிட்டான்கப்பா. அதனால உண்மைய ஒத்துக்கோங்க. ஏன் நான் ராஜேஷ்குமார் மாதிரி எழுதலியா என்ன?

பிரசன்னா சொன்னது…

சிரிப்பு போலீசையே சீரியஸ் ஆக்குபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..

Jey சொன்னது…

அட, பயபுள்ள, மன்னிப்பு கேட்டுட்டானா..!!!, நல்ல விஷயம், திருட்டுபயலா இருந்தாலும், அவனுட்ட ஒரு நேர்மை இருக்கும் போல.
அது ஒன்னும் இல்லை ரமேசு, ஒன்னோட மொக்கைப் பதிவையும், அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி பதிவ போட்ருகானுதான், ஓவர் டென்ஷனாயிருச்சி.. சரி சரி விடு ராசா , மன்னிப்பு கேக்குரவன் பெரியமனுஷன், விட்ருவோம்.

அருண் பிரசாத் சொன்னது…

@ ரமெஷ்

//ஏன் நான் ராஜேஷ்குமார் மாதிரி எழுதலியா என்ன?//

VAS க்கு பொறாமை. நீங்க ஒரு ராஜெஷ்குமார், கண்ணாடி போடாத லேனா தமிழ்வாணன், பிரச்சினை பண்ணாத சாரு நிவேதிதா, மீசையில்லாத ஞானி...

போதுமா? அமெளண்ட் அனுப்பிடுங்க

ப.செல்வக்குமார் சொன்னது…

உங்க பதிவ கூடவா திருடுறாங்க ...? என்னை கொடுமைங்க இது .. அப்ப நானும் ஜாக்கரதையா இருக்கணும் ... ஆனா எனக்கு பயமில்லை .. ஏன்னா என்னோட பதிவ படிக்கும் போதே அவுங்களுக்கு பதிவுன்னா என்னனே மறந்துடும் .. அப்புறம் எங்க திருட ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

என்னோட கதையையும் இன்னொரு சைட் ல போட்டிருந்தாங்க ..
ஆனா கீழ என்னோட பேரு போட்டிருந்தாங்க .. அதுக்கு பதில் என்னோட ப்ளாக் லிங்க் கொடுத்திருக்கலாம் .. tamil2friends.com/en/node/26804

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்
//VAS க்கு பொறாமை. நீங்க ஒரு ராஜெஷ்குமார், கண்ணாடி போடாத லேனா தமிழ்வாணன், பிரச்சினை பண்ணாத சாரு நிவேதிதா, மீசையில்லாத ஞானி... //

இந்த மேட்டர் ரொம்ப நல்ல இருக்கே. கொடுக்காத காசுக்கே இந்த கூவள??

சிவா சொன்னது…

வணக்கம் ராஜேஷ்!

உங்களின் பதிவை, தன்னுடைய சொந்தப் பதிவாக எங்கள் தளத்தின் உறுப்பினர் பதிந்தது தவறு!

10000 க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் கருத்துக் களத்தில் ஒவ்வொருவரின் பதிவும் அவரின் சொந்தப் பதிவா அல்லது மற்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை நாங்கள் கவனிக்க முடியாது!

உங்களின் பதிவு மற்றவர்களால் எங்கள் தளத்தில் பயன்படுத்தியதை நாகரிகமாக எடுத்துக் கூறியிருக்கலாம்! அதுதான் ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு அடையாளம்! அல்லது தளத்தின் கீழே ”Report an abuse” என்பதை அழுத்தி ஒரு புகார் செய்திருக்கலாம்!

நிறைகுடம் தளும்பாது - நீங்கள் எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சிவா

நீங்கள் சொல்வது சரிதான். நான் உங்களது தளத்திற்கு வந்து id create பண்ணி அந்த பதிவில் இது என்னோடது ஒழுங்கா எடுத்துடு அப்டின்னு கமெண்ட் போட்டேன். நீங்க என்ன பண்ணினீங்க. இது அநாகரீகமான பதிவு அப்டின்னு சொல்லி என்னோட அக்கவுண்டை தடை பண்ணிடீங்க. இது எந்த விதத்தில் நியாயம் சிவா.

//அல்லது தளத்தின் கீழே ”Report an abuse” என்பதை அழுத்தி ஒரு புகார் செய்திருக்கலாம்!//

அக்கவுன்ட தடை பண்ணிட்டா நாங்க எங்க ”Report an abuse” என்பதை அழுத்தி ஒரு புகார் கொடுக்குறது?

இதுவே நான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத்தான் சொல்லிருக்கேன். என் நண்பர்கள் எல்லாம் இது ஒண்ணுமே இல்லை இதைவிட பயங்கரமாக திட்டணும்னு சொல்றாங்க. இதையே உங்களால தாங்கிக்க முடியலை. எங்களோட பதிவு திருடு போனா எங்களுக்கு எப்படி இருக்கும்.

என் நண்பனோட கமென்ட் பாருங்க:

//ஈகரையில என்னோட போஸ்ட்ஸ் முன்னாடி நிறைய வந்துட்டு இருந்துச்சு வேறொருத்தர்பேர்ல இதை நிறுத்த நான் செஞ்ச வேலை என்ன தெரியுமா உடனே அதில உறுப்பினராகி இப்போல்லான் என்னோட போஸ்ட்ஸ் ப்லாக்ல ரிலீஸ் ஆன மறுநாள் ஈகரையில நானே போட்டுக்கிறேன் எப்பிடி நாங்கல்லாம்ன்னு காலர் தூக்கிவிடுறதுக்கு முன்னாடி அடுத்தடுத்து வேற வேற தளத்தில போட்டுட்டே இருக்காய்ங்க இது ஒரு தொடர்கதையா போய்ட்டு இருக்கு..//

நீங்க சொல்ற மாதிரி ஒன்னு ரெண்டு பதிவுன்னா சரி. இதையே வேலையா இல்ல வச்சிருக்காங்க. முதல்ல உங்க ஆளுங்க திருடினா அவங்க அக்கவுன்ட முடக்க பாருங்க. நான் குறைகுடமாவே இருந்துட்டு போறேன். அது என்னக்கும் என்னோட followers,நண்பர்களோட பிரச்சனை.

நேசமுடன் ஹாசிம் சொன்னது…

அன்புச்சகோதரர்களே இலக்கியவான்களே

அருமையா ஒரு தவறை எடுத்துச்சொல்ல வேண்டிய தமிழுணர்வாளர்களின் எழுத்துக்களை பார்க்கும் போது அனாகரீகமான எழுத்துகளால் மற்றவரை ஏழனம் செய்யும் உங்களைப்போன்ற எழுத்தாளர்களால் சமூகத்திற்கு நன்மை விழையும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
சிவா குறிப்பிடுவது போல் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் இயங்கும் ஒரு தளம் ஈகரை அதில் யாருடைய பதிவு சொந்தப்பதிவு என்று அடையாளம் காண்பது என்பது முடியாத காரியம் அதனை நாகரீகமான எடுத்துச் சொல்வதை விட்டு காட்டுவாசிபோல் எழுத்துக்களில் அனாகரீகமான நடந்துகொள்வது இலக்கித்துறைக்கே.. நீங்கள் செய்யும் மாபெரும் மாசு என்று புரிந்து கொள்ளுங்கள்.
எதார்த்தமாக சிந்தீர்களானால் இப்படியான எழுத்துக்கள் உங்களால் எழுத முடியாது மனிதன் என்ற வரையறையில் பிழைகள் இருக்கத்தான் செய்கிறது அதனை திருத்தும் ஆசான்களாக எழுத்தாளர்கள் இருக்க வேண்டுமே தவிர பகிரங்கப்படுத்தி கேவலப்படுத்தும் கொச்சையான செயல்களை செய்யக்கூடாது. இப்படி நான் எழுதக்காரணம் உங்களின் பதிவைத்தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்தவர்களும் பொதுப்படையாக சிந்திப்பவர்களாக நான் காணவில்லை
அப்படி உங்கள் பதிவை யாரும் எடுக்கக் கூடாது என்று நீங்கள் நினைத்திருந்தால் கொப்பி செய்யும் விடயத்தை தடைசெய்து உங்கள் பதிவுகளை இட்டிருக்கலாமே. நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வணக்கம் நேசமுடன் ஹாசிம். தங்கள் கருத்துக்கு நன்றி. சிவா குறிப்பிடுவது போல் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் இயங்கும் ஒரு தளம் ஈகரை அதில் யாருடைய பதிவு சொந்தப்பதிவு என்று அடையாளம் காண்பது என்பது முடியாத காரியம். நான் ஒத்துக்கொள்கிறேன். நான் ஈகரையை எந்த இடத்திலும் மரியாதை குறைவாக திட்டவில்லையே.

ஏன் அந்த பதிவு எழுதிய நண்பரையும் நான் எங்கும் திட்ட வில்லை. இதை படிச்சு பாருங்கள்.

//இதுவே நம்ம தம்பி ஜில்தண்ணி அவரோட பதிவுல சொல்லித்தான் தெரியும். இன்னும் எத்தனை பேரோட பதிவ சுட்டிருக்கனோ இந்த பய raj001. சரின்னு அந்த பதிவ எடுக்க சொல்லி கமெண்ட் போட்டேன். அந்த தம்பியும் உடனே எடுத்துட்டான்(பதிவ இல்லைங்க, கமாண்ட எடுத்துட்டான்)//

நான் ஈகரையை திட்டினேன் என்று உங்களால் கூற முடியுமா? என் இதுவரை யாரும் அந்த raj001 என்பவரை ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் செய்வதுதான் தப்பு என்றால் திருட்டு பதிவு போட்டது மிக நியாயமா? சொல்லுங்கள் நண்பரே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்படி உங்கள் பதிவை யாரும் எடுக்கக் கூடாது என்று நீங்கள் நினைத்திருந்தால் கொப்பி செய்யும் விடயத்தை தடைசெய்து உங்கள் பதிவுகளை இட்டிருக்கலாமே. நன்றி//

எல்லா நேரத்திலும் இது சாத்தியப்படாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே. சூப்பர் பதிவோ இல்லை மொக்கை பதிவோ அதை யோசிக்க எங்களுக்கு எவ்ளோ நேரம் செலவாகிறது. நோகாமல் நொங்கு தின்ன கதையா பதிவை திருடி போட்டால் கோபம் வரத்தான் செய்யும்...

ப.செல்வக்குமார் சொன்னது…

///வணக்கம் ராஜேஷ்!///
பேரே தப்பு ..!! ராஜேஷ்னு இங்க யாரும் இல்லையே ...

///சரின்னு அந்த பதிவ எடுக்க சொல்லி கமெண்ட் போட்டேன். அந்த தம்பியும் உடனே எடுத்துட்டான்(பதிவ இல்லைங்க, கமாண்ட எடுத்துட்டான்)///
அவரே தம்பின்னு சொல்லிட்டார் .. அதனால அவன் அப்படின்னு மட்டுமே பயன்படுத்திருக்கார். இதுல என்ன மரியாதை குறைவு ..?

//கடைசியா அந்த வெப்சைட் owner தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கார். அவர் மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னால இந்த திருட்டு பதிவ எடுத்திருக்கணும். அப்புறம் என்னோட அக்கவுன்ட enable பண்ணிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா அவர பாராட்டி இருக்கலாம். இந்த பதிவு எழுதி முடிக்கிற வரைக்கும் அப்படி எதுவும் நடக்கல.///

மேல இருப்பதுதான் நம்ம ரமேஷ் அண்ணா அந்த வெப்சைட் சொந்தக்காரர பத்தி எழுதினது .. இதுல எந்த இடத்துல மரியாதை குறைவுன்னு நீங்க நினைக்கிறீங்க .. நான் தெரியாமதான் கேக்குறேன் " நாகரீகமா சொல்றது எப்படி , அநாகரீகமா சொல்றது எப்படி..?"
தயவு செய்தது அவரோட பதிவ நல்லா படிங்க .. அவரு எந்த இடத்துலயுமே அநாகரீகமா சொல்லல.. இல்ல அவரு அநாகரீகமா சொல்லிருக்காரு அப்படின்னு நினைச்சா நீங்க நாகரீங்கம்னு எத நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க...
அப்புறம் உங்க எழுத்துலயும் தான் நாகரீங்கம் இல்லையே ...?
///நிறைகுடம் தளும்பாது - நீங்கள் எப்படி?///
இதுக்கு பேருதான் உங்க நாகரீகமா ..?
எங்களுக்கு இத பத்தியெல்லாம் கவலை இல்லை .. நாங்க குறைகுடமாவே இருந்துட்டு போறோம்.. நீங்களாவது நிறை குடமா இருங்க ..!

அருண் பிரசாத் சொன்னது…

@ சிவா, ஹாசிம்.

தவறை செய்துவிட்டு அதை மறைக்க சப்பை கட்டு கட்டுகிறீர்களே. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை திருடுவது எவ்வளவு கோபத்தை கொடுக்கும் என்பது மெத்தப்படித்த உங்களை போன்றோருக்கு நன்றாக தெரியும். அதன் வெளிப்பாடே இந்த பதிவு.

உங்கள் வலை பக்கத்தில் வரும் அனைத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். 1000 பேர் இருந்தாலும், இடம் நீங்கள் கொடுத்தது. உங்கள் தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தாலும், பாம் இருக்கிறது என யார் சொன்னாலும் நீங்களும் தான் பொறுப்பாளி. ரமெஷ் ரிப்போர்ட் செய்தவுடன் அந்த பதிவை தடை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்போழுது வந்து குய்யோ, முய்யோனு கத்தக்கூடாது.

நிறைகுடங்களே! இன்னும் உங்கள் தளத்தில் அந்த போஸ்ட் இருந்த URL ல் The topic or post you requested does not exist என்றுதான் இருக்கிறது. மாறாக, அநாகரீக பதிவு என ரமெஷை தடை செய்தது போல் திருட்டு பதிவு என்றோ போட சொல்லவில்லை. குறைந்தபட்சம், “Reported as Abuse" என்று போட்டிருக்கலாமே!

எல்லாம் சரி, அந்த Raj001 (பெரிய ஜேம்ஸ்பாண்டு, பேரை பாரு) ஐ என்ன பண்ணிங்க. Ban பண்ணிங்களா? இல்லை வேற இளிச்சவாயன் பதிவை திருட சொல்லி அனுப்பி இருக்கீங்களா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வணக்கம் சிவா அவர்களே

//உங்களின் பதிவை, தன்னுடைய சொந்தப் பதிவாக எங்கள் தளத்தின் உறுப்பினர் பதிந்தது தவறு! //

தெரியாமல் செய்தால்தான் தவறு நண்பரே.. தெரிந்தே செய்த இந்த செயலை குற்றம் அல்லது இன்னும் வன்மையாக திருட்டு என்று கூறினால் தவறா?

//நிறைகுடம் தளும்பாது - நீங்கள் எப்படி?//

சிவா அவர்களே. " நிறைகுடம் தளும்பாது " இந்த பழமொழி நீங்கள் என் இங்கு உபயோகித்து இருக்கிறிகள் என்று என் அறிவுக்கு எட்டவில்லை. ரமேஷ் ஒன்றும் இங்கு அவர் புகழ் பாடவில்லையே? தன் பதிவு களவு போன ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவும் நகைச்சுவை உணர்வோடு. பாத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து ஒரு தாய் பெற்று எடுத்த பிள்ளையை வேறு ஒருவர் தன் பிள்ளை என்று சொந்தம் கொண்டாடினால் அந்த தாய்க்கு வேதனை வர கூடாத? அதை வெளிபடுத்த கூடாத?

பின்குறிப்பு : உங்கள் கருத்தில் நன் எழுதி இருப்பது அநாகரீகமாக இருந்தால் மன்னிக்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/////வணக்கம் ராஜேஷ்!///
பேரே தப்பு ..!! ராஜேஷ்னு இங்க யாரும் இல்லையே ...//

அட விடு செல்வா இத கூட எங்க இருந்தாவது copy & paste பண்ணிருப்பாங்க. இதெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டு.

//கடைசியா அந்த வெப்சைட் owner தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கார். அவர் மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னால இந்த திருட்டு பதிவ எடுத்திருக்கணும்.//

ஒருவேளை மன்னிப்பு தமிழ்ல அவங்களுக்கு பிடிக்காத வார்த்தையா இருந்திருக்கும் போல!!

நிறைகுடமா குறைகுடமா அது முக்கியமில்ல. அதுல இருக்குற தண்ணி நல்ல தண்ணியா கெட்ட தண்ணியா அப்டிங்கிறதுதான் முக்கியம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Ban பண்ணிங்களா? இல்லை வேற இளிச்சவாயன் பதிவை திருட சொல்லி அனுப்பி இருக்கீங்களா?//

ban பண்ணிட்டா அப்புறம் எப்படி அந்த பசங்க கோல்டன் மெம்பெர், சில்வர் மெம்பர், பித்தளை மெம்பெர் ஆவுறது. போங்க அருண் காமெடி பண்ணிக்கிட்டு....

// குறைந்தபட்சம், “Reported as Abuse" என்று போட்டிருக்கலாமே!//

அது எப்படி ஒரு வடை போயிடுமே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்கள் கருத்தில் நன் எழுதி இருப்பது அநாகரீகமாக இருந்தால் மன்னிக்க.//

டெரர் இது அநாகரீகம்னா அப்ப நாகரீகம்னு எதைச் சொல்றது. விடுங்க. இத யோசிச்சிக்கிட்டு இருந்தா நமக்கு தமிழ் மறந்து போயிடும். அந்த பையன் என்னமோ பாரதிராஜா, பாக்கியராஜ் மாதிரி சொந்தமா எழுதின மாதிரி போஸ் பாத்தீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எங்க தல வெங்கட்ட கலாய்ச்சியே
பார்த்தியா உஷாரய்யா...உஷாரு//

மணி சார் இது உங்க வேலைதானா?

@ வாங்க பிரசன்னா உங்க அன்புக்கு நன்றி..

@ Jey வடிவேலு சொன்னமாதிரி இந்த அண்ணனையும் மதிச்சு 200 ரூபாய் கேட்டேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னோட பதிவையும் ஆட்டைய போட்டிருக்கான்கன்னா எவ்ளோ நல்லவங்க அவங்க..

@ அருண் பிரசாத் அமௌன்ட் டெரர் கிட்ட கொடுத்த்ட்டேன் வாங்கிகோங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நானும் ஜாக்கரதையா இருக்கணும் ... ஆனா எனக்கு பயமில்லை .. ஏன்னா என்னோட பதிவ படிக்கும் போதே அவுங்களுக்கு பதிவுன்னா என்னனே மறந்துடும் .. அப்புறம் எங்க திருட ..?//

அப்படி எல்லாம் சொல்லாத செல்வா . அவங்க மொக்கை பதிவ மட்டும்தான் திருடுவாங்க. என்னோட பதிவ திருடும்போதே உனக்கு தெரிய வேணாம்.

பட்டாபட்டி.. சொன்னது…

பிரபல பதிவர் ஆக, எல்லா திறமையும் வந்திருச்சு ரமேஸ்..


( ஆனாலும், உங்கள மாறி, இவ்வளவு டீசன்டா பதில் சொல்ல ...எனக்கு வராது பிரதர்.. )


பதிவ திருடுரவங்கள, பட்டாபட்டி மைதானத்துக்கு அனுப்பு வையிங்க.. ராவா அறுக்கிறோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரபல பதிவர் ஆக, எல்லா திறமையும் வந்திருச்சு ரமேஸ்..//

நன்றி பட்டா..

//பதிவ திருடுரவங்கள, பட்டாபட்டி மைதானத்துக்கு அனுப்பு வையிங்க.. ராவா அறுக்கிறோம்..//

சும்மா வந்தாலே மஞ்சத்தண்ணி ஊத்துற இடம் அது. இவனுக வந்தா அவ்ளோதான் பட்டா.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வணக்கம் ஹாசிம் அவர்களே!

//மனிதன் என்ற வரையறையில் பிழைகள் இருக்கத்தான் செய்கிறது அதனை திருத்தும் ஆசான்களாக எழுத்தாளர்கள் இருக்க வேண்டுமே தவிர பகிரங்கப்படுத்தி கேவலப்படுத்தும் கொச்சையான செயல்களை செய்யக்கூடாது//

ஒரு வாதத்துக்கு சொல்கிறேன், ராஜேஷ்குமார் போன்ற ஒரு பெரும் பதிவரின் நாவலை நீங்கள் பிரதி எடுத்து உங்கள் பெயரில் வெளியிட்டால் அவர் உங்களுக்கு அன்புடன் அறிவுரை வழங்குவர? உடனே நீங்களும் ராஜேஷ்குமாரும் ஒன்றா என்று கேக்க வேண்டாம். இங்கு நாங்கள் பேசுவது பொருளின் மதிப்பை குறித்து அல்ல. raj001 செய்த செயலை குறித்து.

ஒரு சிறிய சந்தேகம் ஐய. இங்கு தவறை முதலில் ஆரம்பித்து பதிவை கபி செய்த ( அநாகரீகமாக சொன்னால் திருடிய ) நண்பருக்கு அறிவுரை வழங்கப்பட்டத? முதலில் அடித்தவரை விட்டு விட்டு வலி பொருக்க முடியாமல் திருப்பி கோபப்பட்டவர் மீது நீங்கள் கோபப்படுவது நியாயமா?

//அப்படி உங்கள் பதிவை யாரும் எடுக்கக் கூடாது என்று நீங்கள் நினைத்திருந்தால் கொப்பி செய்யும் விடயத்தை தடைசெய்து உங்கள் பதிவுகளை இட்டிருக்கலாமே. நன்றி //

பிரதி எடுப்பதை தடுப்பது மிகவும் எளிதுதான். ஆனால் அந்த பதிவை பார்த்து தட்டச்சி செய்து வெளிஇட்டால் என்ன செய்வது ஐய? வெறும் வெள்ளை பக்கத்தைதான் பிரசுரிக்க வேண்டும் நண்பரே... மிக்க நன்றி!!

Jey சொன்னது…

@ சிவா, ஹாசிம்,

வாங்க பண்பாலர்களே, வாங்க. என்ன ராசாக்களா, ஒருத்தர் போட்ட பதிவ காப்பி பேஸ்ட் பண்ணி பதிவு போடுரது, உங்களுக்கு தெரியாமல் செய்த தவறாக படுகிறதா?. அடுத்தவன் நிறகுடமா இல்லையானு ஆராரத விட்டுட்டு, நீங்க குறைகுடமா கூவிகிட்டு திரியாதீங்க. ரமெஷ் நாசூக்க உங்களுக்கு போட்ட முதல் பின்னூட்டத்திற்கு உங்களின் பதில் என்ன?. உடனே தவறை உணர்ந்து, ப்திவை எடுத்தீர்களா?. பின்னூட்டத்தைதானே எடுத்தீர்கள்.
முதலில் உங்கள் தலத்தின் உறுப்பினர்களுக்கு அடுத்தவர் பதிவை திருடவேண்டாம் என்று அறிவுருத்துங்கள், மீறினால் அவர்களை தடை செய்யுங்கள்.

karthikkumar சொன்னது…

நீங்க பிரபலம் ஆகிட்டீங்க சார் அதான் இப்படியெல்லாம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது