வியாழன், ஜூலை 22

ஆணீணீணீணீணீணீ

ரெண்டு நாளா ஊர்ல இல்லை(எவ்ளோ சந்தோசம்). என்னோட பேங்க் அக்கவுன்ட் லாக் ஆயிடுச்சு. அதை enable பண்றதுக்கு பேங்க்ல கேட்டா நீங்க நேர்ல வரணும்னு சொல்லிடாங்க(அக்கவுன்ட் ஆரமிக்கும்போது நான் சாதாரண ஆள். இப்ப நான் பிரபல பதிவர் ஆயிட்டதால என்னை பாக்கனும்னு வர சொல்லிருப்பாங்களோ?).

பேங்க் போனா என்னை அலைய விட்டுடாங்க. ஒருத்தர போய் பார்த்தா அவர் "நான் அவன் இல்லை" நீங்க போய் அந்த officer -ர போய் பாருங்க அப்டிங்கிராங்க. அவர போய் பார்த்த அவர் இன்னொருத்தருக்கு redirect-பண்றாரு. ஒரு வழியா மூணு மணி நேரத்துல வேலை முடிஞ்சது. (ஒரு பிரபல பதிவருக்கே இந்த நிலைமையா?)

மொபைல் வழியா எப்படி கமென்ட் reply மற்றும் பப்ளிஷ் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்த "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" அவர்களுக்கு நன்றி. என்னோட போன பதிவுல கமென்ட் போட்டதுக்கும் அவருக்கு உதவி செய்த மற்றும் செய்யப்போகும் அனைவருக்கும் நன்றி.

"ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க" அப்டின்னு ஒரு பதிவு போட்டேன். அது எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ். ஆனா அது ஏற்கனவே நிறைய ப்ளாக்-ல வந்துடுச்சுன்னு நம்ம அருண்பிரசாத் சொன்னதால அதை delete பண்ணிட்டேன். பின்ன யாராவது என்னை திருட்டு பயலே அப்டின்னு சொல்லிடுவாங்களே.

அந்த பதிவுக்கு கமென்ட்,ஓட்டு  போட்ட அனைவருக்கும் தேங்க்ஸ்.

"ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க" பதிவுக்கு வந்த கமெண்ட்ஸ்:


1 ) Kousalya உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"


என்னத்த சொல்ல... ம் ம் ...யோசிச்சு பார்த்தால்..... சரிதான்னு தோணுது....!


2 ) வெங்கட் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"
// போன போஸ்ட்டுக்கு reply பண்ண முடியவில்லை. "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" தான் மொபைல் வழியாக reply பப்ளிஷ் பண்ண உதவி செய்தார். அவருக்கு மிக்க நன்றி. //
யாராவது தஞ்சாவூர் கல்வெட்ல நம்மள பத்தி செதுக்கும் போது.. இந்த Matter-ஐயும் சேர்த்துக்கோங்கப்பா..
---------------------
சும்மா.., சும்மா நீங்க பொண்ணுங்ககிட்டயே வம்புக்கு போயிட்டு இருக்கீங்க...இதையே Continue பண்ணுனீங்க..அப்புறம் கூடிய சீக்கிரம் என் தலைமையில ஒரு கண்டன போராட்டத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்..ஜாக்ரதை..


3 ) அருண் பிரசாத் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்
@ வெங்கட் //என் தலைமையிலஒரு கண்டன போராட்டத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்..//ஆமாம் ஜாக்கிரதை ரமெஷ், கண்டன போரட்டத்தில் வழக்கம் போல நம்ம வெங்கட், கோகுலத்தில் சூரியன் வெங்கட், VAS தலைவர் வெங்கட் இப்படி பலர்(?!) எதிர்ப்பாங்க கட்சில இருக்குற்தே ஒரு ஆளு இதுல கண்டன ஆர்பாட்டம் வேற.
@ ரமெஷ் நீ கலக்கு சித்தப்பு, பாத்துக்கலாம்


4 ) dheva உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"


தம்பி......ரமேசுசுசுசு! ஆராய்ச்சி அமர்க்களமப்பு.....ஏன் இப்புடி...! சிரிப்பு போலிஸ்...எல்லா வேலையும் பாக்குது ஹா..ஹா..ஹா..!

டிஸ்கி: சரி இதுக்கு ஏன் இவ்ளோ விளம்பரம், ஏன் இப்படி மொக்கை போடுற, இந்த பதிவுக்கு ஏன் "ஆணீணீணீணீணீணீ" ன்னு தலைப்பு வச்சிருக்கேன்னு கேக்குறீங்களா? நான் ஊர்ல இல்லைங்கிரதினால எஸ்.எம்.எஸ் ஜோக் போட்டு ஒரு பதிவ ஓட்டிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம அருண் அது ஏற்கனேவே வந்துடுச்சுன்னு சொல்லிட்டார். அதான் அதை Delete பண்ணிட்டு இப்படி ஒரு மொக்கை பதிவு.

 ஆணி அதிகம்னால புது போஸ்ட் இப்ப போட முடியல(யார் கேட்டா?).

27 கருத்துகள்:

Kousalya சொன்னது…

எனக்கு கடமைன்னு ஒன்னு இருக்கே அதை பண்ணிவிடுகிறேன் , அதுதான் வோட் போட்டுட்டேன்.....ம்.

அருண் பிரசாத் சொன்னது…

எலேய், உங்க அக்கபோருக்கு ஒரு அளவே இல்லையா. எதை பண்ணாலும் அத ஒரு பதிவா போடுறீங்க.

நாளைக்கு நான் பல் விலக்கிட்டேன், குளிச்சிட்டேன்னு பதிவு வந்தாலும் வருமோ!

இதையும் திருடாம இருந்தா சரி

Chitra சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ..... அப்பா.... முடியல..... !

Jey சொன்னது…

ஊருக்கு போற பஸ் இடையில நிக்கும் போது, டீகுடிச்சது, ஒன் பாத்ரூம் போனது, இதையெல்லம் எழுதாம விட்டதுக்கு என் கடும் கண்டனங்களை தெரிவித்துகொள்கிறேன்.

சௌந்தர் சொன்னது…

என்ன ஓரு வித்தியாசம் நீ அணியே புடுங்க வேண்டாம் தல போதும்...

பட்டாபட்டி.. சொன்னது…

வரவர ரொம்பத்தான் மொக்கையா எழுதுகிறீர்..
ஏன் காதல் தோல்வியா?..இல்லை சக பதிவரிகளின் மேல் கொலைவெறியா?..


அய்யா சாமி..அடுத்து எப்ப சிங்கை பயணம்..எதுணாலும் பேசித்தீர்த்துக்கலாம்..

Jey சொன்னது…

பட்டாபட்டி.. சொன்னது…
வரவர ரொம்பத்தான் மொக்கையா எழுதுகிறீர்..
ஏன் காதல் தோல்வியா?..இல்லை சக பதிவரிகளின் மேல் கொலைவெறியா?..


அய்யா சாமி..அடுத்து எப்ப சிங்கை பயணம்..எதுணாலும் பேசித்தீர்த்துக்கலாம்.///

பட்டா, ஆள் சிங்கை வந்தா, அப்படியே, அமுக்கி பிடிச்சி, 3 பாட்டில் நியூவாட்டர் ஊத்தி அனுப்புயா. அப்பதான் தல கொஞ்சம் தெளிவா எழுதும்...:)

ப.செல்வக்குமார் சொன்னது…

//VAS தலைவர் வெங்கட் இப்படி பலர்(?!)///

அண்ணா என்னோட குழப்பத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்க ...
நான் VAS இல் சேர்வதா இல்லை VKS இல் சேர்வதா ...

ப.செல்வக்குமார் சொன்னது…

//. என்னோட பேங்க் அக்கவுன்ட் லாக் ஆயிடுச்சு.///
உங்க அக்கவுண்டவே லாக் பண்ணிட்டாங்களா ...? இத ஏன் முதல்லையே சொல்லல ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி Kousalya

//இதையும் திருடாம இருந்தா சரி//

பேங்க் லாக்கேர்ல வச்சிடவா அருண்?

@ Chitra வாங்க வாங்க லீவ் முடிஞ்சு வந்தததும் ஏன் இங்க வந்து கஷ்ட படுறீங்க..

//ஊருக்கு போற பஸ் இடையில நிக்கும் போது, டீகுடிச்சது, ஒன் பாத்ரூம் போனது, இதையெல்லம் எழுதாம விட்டதுக்கு என் கடும் கண்டனங்களை தெரிவித்துகொள்கிறேன்.//

அடுத்த வாட்டி கண்டிப்பா சொல்றேன் JEY sir

@ சௌந்தர் உங்க அன்புக்கு நன்றி.

//அய்யா சாமி..அடுத்து எப்ப சிங்கை பயணம்..எதுணாலும் பேசித்தீர்த்துக்கலாம்..//

பட்டா போனதடவ நான் சிங்கை வந்தப்ப என்னை நீங்க வந்து மீட் பண்ணி ட்ரீட் கொடுத்தீங்களே. அந்த அன்பே போதும்..

//பட்டா, ஆள் சிங்கை வந்தா, அப்படியே, அமுக்கி பிடிச்சி, 3 பாட்டில் நியூவாட்டர் ஊத்தி அனுப்புயா. அப்பதான் தல கொஞ்சம் தெளிவா எழுதும்...:)//

JEY ராசா நியூ வாட்டர் குடிக்க ஆரமிச்ச பிறகுதான் ப்ளாக் எழுதவே ஆரமிச்சேன். வேணும்னா நம்ம வெங்கட், கே.ஆர்.பி.செந்தில் அண்ணா கிட்ட கேளுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அண்ணா என்னோட குழப்பத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்க ...
நான் VAS இல் சேர்வதா இல்லை VKS இல் சேர்வதா ...//

செல்வா நீ VAS-la சேருவதுக்கு பதிலா KMC -ல(கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ்)சேரலாம்..

//உங்க அக்கவுண்டவே லாக் பண்ணிட்டாங்களா ...? இத ஏன் முதல்லையே சொல்லல ..?//
சொல்லிருந்தா கள்ள சாவி போட்டிருப்பியோ செல்வா?

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மொக்கை ராசா உன் பதிவையும் ஒருத்தன் திருடி போடுறான்னா.. அந்த சிரிப்பு திருடன நெனச்சா... ?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// பின்ன யாராவது என்னை திருட்டு பயலே அப்டின்னு சொல்லிடுவாங்களே.
//

அந்த பயமிருக்கட்டும் மாம்ஸ் இனிமேல் எச் எம் எச்ல வந்தது மெயில்ல வந்ததுன்னு ப்ளாக்ல வந்துச்சு கீசிடுவேன் கீசி...

ப.செல்வக்குமார் சொன்னது…

//செல்வா நீ VAS-la சேருவதுக்கு பதிலா KMC -ல(கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ்)சேரலாம்..///
ஏன்னா அப்படி ...? நான் அம்பூட்டு அறிவாளியா ..?
சரி சரி ,, எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க ..
நான் VAS ல சேரட்டுமா VKS ல இல்ல சேரட்டுமா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஏன்னா அப்படி ...? நான் அம்பூட்டு அறிவாளியா ..?
சரி சரி ,, எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க ..
நான் VAS ல சேரட்டுமா VKS ல இல்ல சேரட்டுமா ..?///

VAS....... அப்பத்தான் நாங்க கும்ம முடியம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அந்த பயமிருக்கட்டும் மாம்ஸ் இனிமேல் எச் எம் எச்ல வந்தது மெயில்ல வந்ததுன்னு ப்ளாக்ல வந்துச்சு கீசிடுவேன் கீசி...//

மாப்பு நான் ரொம்ப சின்ன பையன் இப்படி மிரட்டலாமா?

@ செந்தில் அண்ணே அதான் எனக்கும் சிப்பு சிப்பா வந்துச்சு. நம்ம பதிவையும் திருடிருக்கானேன்னு..

ப.செல்வக்குமார் சொன்னது…

///VAS....... அப்பத்தான் நாங்க கும்ம முடியம்...///
VKS ல சேர்த்துக்க மாட்டிங்களா ...??
நானும் நல்லா கலாய்ப்பேன்...!! சாம்பிள் ஏதாவது கலாய்ச்சு காட்டட்டுமா ...?

பிரசன்னா சொன்னது…

கமல் கவுண்டமணியை பாத்து: கேக்கறதுக்கு ஆள் இல்லாம தான் இப்படி வளந்து நிக்கற நீயி..

அனு சொன்னது…

என்ன நடக்குது இங்க? ரெண்டு நாள் வரலன்னா ஒன்னும் புரிய மாட்டேங்குது..

அருண் பிரசாத் சொன்னது…

@ செல்வா

ஒரு இன்டர்வியு ஏற்பாடு செய்துடலாமா?

சீமான்கனி சொன்னது…

பதிவின் தலைப்பை படிச்ச ஆணிய விட ஈ தான் அதிகமா திரியுது...ஈ..ஈ...ஈ...ஈ..ஈ...ஈ...ஈ..ஈ...ஈ...ஈ..ஈ...ஈ...ஈ..ஈ...ஈ...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ரெண்டு நாளா ஊர்ல இல்லை(எவ்ளோ சந்தோசம்). //

"எவ்ளோ சந்தோசம்" புரிஞ்ச சரி.

//ரெண்டு நாளா ஊர்ல இல்லை(எவ்ளோ சந்தோசம்). என்னோட பேங்க் அக்கவுன்ட் லாக் ஆயிடுச்சு.//

இரண்டு நாள் ஊர்ல இல்லன அக்கௌன்ட் லாக் ஆகிடும?

//நீங்க நேர்ல வரணும்னு சொல்லிடாங்க//

அப்போதான கும்ம முடியும்...

//(ஒரு பிரபல பதிவருக்கே இந்த நிலைமையா?)//

யாரு? யாரு? யாரு அந்த பிரபல பதிவர்... (ஜெய் தல... இத எல்லாம் கேக்க மாட்டிங்கள??)

//ஆனா அது ஏற்கனவே நிறைய ப்ளாக்-ல வந்துடுச்சுன்னு நம்ம அருண்பிரசாத் சொன்னதால அதை delete பண்ணிட்டேன்.//

சும்மா சொல்லகூடாது. மகளிர் அணி எதிர் பதிவு போட்டு கும்மிடபோகுது delete பண்ணிட்டு.

//ஆணி அதிகம்னால புது போஸ்ட் இப்ப போட முடியல//

எப்போ போடறிங்க சொல்லுங்க... என் லேப்டாப் கிணத்துல போட்டுடறேன்... இல்லன மனசுமாரி உங்க பதிவு படிச்சிடுவேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார்//
சரி சரி அருண் கிட்ட பொய் Interview attend பண்ணிட்டு வா..

@ பிரசன்னா ஹிஹி

//என்ன நடக்குது இங்க? ரெண்டு நாள் வரலன்னா ஒன்னும் புரிய மாட்டேங்குது..//
@ அனு வைரமுத்து கவிதைகள் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்

@ அருண் பிரசாத் செல்வா நம்ம பையன்தான் . ஈசியா கேள்வி கேளுங்க..

@ சீமான்கனி எத்தனை ஈ இருந்தது?

//எப்போ போடறிங்க சொல்லுங்க... என் லேப்டாப் கிணத்துல போட்டுடறேன்... இல்லன மனசுமாரி உங்க பதிவு படிச்சிடுவேன்.//

டெரர் சீக்கிரம் உங்க லேப்டாப் தூக்கி கிணத்துல போடுங்க.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@செல்வா
//VKS ல சேர்த்துக்க மாட்டிங்களா ...??//

VAS வாங்க அப்பு!!! வேலை ரொம்ப கம்மி. வெங்கட் புகழ்ந்து ஒரு கமெண்ட் போட்டு நம்ப கட்சி ஆபீஸ் போய் ரெஸ்ட் எடுக்கலாம். அந்த கமெண்ட் பாத்து கடுப்புஅகி VKS ஒரு இரண்டு நாளைக்கு வெங்கட கும்முவாங்க.. அடி விழற சத்தம் கொறஞ்ச அடுத்த கமெண்ட் போடணும் அவ்வளோதான் வேலை.

(தல (வெங்கட்) இது எல்லாம் கட்சிக்கு ஆள் சேர்க்க ஒரு டெக்னிக். நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதிங்க)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் கூட்டத்துக்குள்ளையே ஒரு கருப்பு ஆடு சுத்துது...

அனு சொன்னது…

//வைரமுத்து கவிதைகள் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்//

ம்ம்ம்.. படிச்சாச்சு..
ஒரு வாரம் தான் லீவ் போட்டேன்.. அதுகுள்ள என்னன்னவோ நடக்குது.. வெங்கட் சீரியஸ் பதிவு போட்டிருக்கார்..
இங்க ஒருத்தர் VKSல சேரவா VASல சேரவான்னு கேக்குறார்.. நீங்க எதோ பதிவு போட்டேன் எடுத்தேன்றிங்க.. ஒன்னுமே புரிய மாட்டேன்னுது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு வாரம் தான் லீவ் போட்டேன்.. அதுகுள்ள என்னன்னவோ நடக்குது.. வெங்கட் சீரியஸ் பதிவு போட்டிருக்கார்..
இங்க ஒருத்தர் VKSல சேரவா VASல சேரவான்னு கேக்குறார்.. நீங்க எதோ பதிவு போட்டேன் எடுத்தேன்றிங்க.. ஒன்னுமே புரிய மாட்டேன்னுது!!!

எனக்கும் ஒன்னும் புரியல. ஆனா என்னமோ நடக்குது மர்மமா இருக்குது,,

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது