வெள்ளி, ஜூலை 23

தியேட்டர் நொறுக்ஸ்-1

Title-க்கு ஜெட்லி மன்னிக்கணும்

இப்பெல்லாம் நினைச்ச உடனே online -ல டிக்கெட் புக் பண்ணி ஈசியா போய் படம் பாத்துட்டு வந்துடுறோம். அதுல நமக்கு ஒரு நிம்மதி இருக்கா அப்டின்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன்(வாரத்துக்கு நாலு மொக்கை படம் பார்த்தா அப்படித்தான் இருக்கும்). அந்த காலத்துல தியேட்டர்ல படம் பாக்குறப்ப படத்தோட சேர்த்து சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கும்.  இப்பெல்லாம் அது இல்லை. தியேட்டருக்கு போனமா வந்தமான்னு தான் இருக்கோம்(பின்ன அங்க என்ன ரூம் போட்டு சாப்பிடவா முடியும்).

கவுண்டர்:

முன்னெல்லாம் அப்படி இல்லை. முதல்ல கவுண்டர்ல உள்ள queue ல போய் நிக்கணும். அப்புறம் டிக்கெட் எடுக்கணும்(என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு). கவுண்டர் பாத்தீங்கன்னா பெரிய சுரங்கப்பாதை மாதிரி புல் இருட்டாவும் வளைஞ்சு வளைஞ்சு நாலைஞ்சு row  வாகவும் இருக்கும். இரும்பு கம்பி போட்டிருப்பாங்க.

கவுண்டர் ஆரமிச்சு டிக்கெட் கொடுக்குற இடம் வரைக்கும் ஒரு அரை கிலோ மீட்டராவது இருக்கும். கூட்டமா இருந்தா டிக்கெட் கொடுக்குறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே இந்த கவுண்டருக்குள்ள போய் நின்னுடுவோம். டிக்கெட் எடுத்து வெளில வர்றதுக்குள்ள மன்னன் பட ரஜினி மாதிரி ஆயிடுவோம்.

கவுண்டருக்குள்ள ஒரே ஒரு மஞ்ச லைட்தான் எரியும். அத்தனை row க்கும் சேர்த்து ஒரே லைட்தான். இரவு காட்சி போனோம்னா டிக்கெட் எடுக்குற வரைக்கும் ஒரே திக் திக் தான். பேன் வேற இருக்காது(ஆமா நீ எடுக்குற அஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு A/C போடுவாங்க).

இதுல சில பேரு நம்ம தலைல ஏறி முன்னேறி போவாங்க(நம்மளால சில பேரு முன்னேறி போறாங்கன்னு மனச தேத்திகிட வேண்டியதுதான்). பெரிய சண்டையே நடக்கும். அந்த இருட்டுல நம்ம மேல ஏறிப் போறது யார்ன்னு கூடத் தெரியாது. சில நேரம் நம்ம நெருங்கின சொந்தகாரனா கூட இருக்கும்.

தரை டிக்கெட்(நான் இல்லைங்கோ)

அப்புறம் டிக்கெட்ல மூணு வகை உண்டு. chair ,பெஞ்ச்,தரை. Chair டிக்கெட் எல்லாம் பணக்காரங்க உக்கார்றது அப்டின்னு ஊர்ல ஒரு நினைப்பு. உண்மைதான். வசதியானவங்கதான் Chair டிக்கெட் எடுத்து வருவாங்க.

நமக்கெல்லாம் பெஞ்ச் இல்லைனா தரைதான். பெஞ்ச் டிக்கெட் எடுத்தா நம்ம வீட்டுக்கு மூட்டைப் பூச்சிகள் இலவசம். அதனால தரை டிக்கெட்லதான் படத்துக்கு கூட்டிட்டு போவாங்க.

இரவு காட்சியா இருந்தா ரொம்ப வசதி. தியேட்டருக்கு வெளில கூட (கதவுக்கு பக்கத்துல) உக்கார்ந்து படம் பாக்கலாம். காத்தும் நல்லா வரும். படம் மொக்கையா இருந்தா அப்படியே ஓடலாம். (ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல).

Wallpapper:

அப்புறம் wallposter . தியேட்டர்ல ஒரு இடத்துல படத்தோட காட்சிகளை ஒட்டி இருப்பாங்க. முதல்ல போய் அதத்தான் பாப்போம். இடைவேளைல மறுபடியும் பாத்துட்டு இந்தஇந்த  காட்சிகள் முடிஞ்சிடுச்சு. இந்த காட்சிகள் எல்லாம் இனிமே வரும் அப்படின்னு discuss (ஆமா பெரிய Group Discusstion) பண்ணுவோம். சில காட்சிகள் படத்துல வரலைன்னா தியேட்டர் operator -யை திட்டுவோம். அந்த காட்சியை கட் பண்ணிட்டானே அப்டின்னு. 

அப்புறம் ஷீல்ட். எந்த எந்த படம் எவ்ளோ நாள் ஓடிருக்குன்னு ஷீல்ட் அங்க வச்சிருப்பாங்க. அத பாக்குறதுல ஒரு அலாதியான சந்தோஷம். எத்தன தடவ அதே தியேட்டருக்கு போனாலும் அந்த ஷீல்ட திரும்ப திரும்ப பாப்போம்.

இன்னும் நிறைய இருக்கு. உங்களோட கருத்துகளுக்கு பிறகு சொல்றேன். பிடிக்கலன்னா இதோட நிறுத்திக்கிடுவோம்..


......

41 கருத்துகள்:

சீமான்கனி சொன்னது…

ஐ வடை...

இராமசாமி கண்ணண் சொன்னது…

பதிவு எண்ணிக்கை கூடிட்டே போகுது நண்பா. வாழ்த்துகள்.

சீமான்கனி சொன்னது…

டிக்கெட் எடுக்கும் பொது அடிவாங்குன அனுபவம் இருக்கோ தலைப்பை பாத்தா பயங்கர நொறுக்ஸ் தெறிக்குது...எனக்கும் அந்த நியாபகம் தான் வருது...வாழ்த்துகள் போலிசே...

Chitra சொன்னது…

இன்னும் நிறைய இருக்கு. உங்களோட கருத்துகளுக்கு பிறகு சொல்றேன். பிடிக்கலன்னா இதோட நிறுத்திக்கிடுவோம்..


......நிறுத்தாதீங்க...... சொல்லுங்க.... சொல்லுங்க.... இப்படி popcorn கொறிச்சிக்கிட்டு வாசிக்க நல்லா இருக்குதுங்க... :-)

கலாநேசன் சொன்னது…

சூப்பர். அதுவும் அந்த Wallposter வரிகள் என் சிறு வயது நிகழ்வுகளை நினைவு படுத்தியது. தொடருங்கள்....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அய்யா சாமீ யாராவது வாங்களேன் இந்த சிப்பு என்னைய அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கு யாராவது வந்து ஜாமின்ல எடுங்கப்பு

pinkyrose சொன்னது…

போலீஸ்க்கே இந்த நிலைமைன்னா நம்ப முடியலியே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வடை வாங்கிய வள்ளல் சீமான்கனிக்கு வாழ்த்துக்கள்

@ இராமசாமி கண்ணண் படின்னா பதிவை மொக்கைன்னு சொல்றே. என்னமோ போ..

//டிக்கெட் எடுக்கும் பொது அடிவாங்குன அனுபவம் இருக்கோ //
அது நிறைய இருக்குங்க. காலேஜ் போனத விட தியேட்டர்ல இருந்ததுதான் அதிகம் சீமாங்கனி.

@ நன்றி Chitra மேடம்.

@ நன்றி கலாநேசன்

//அய்யா சாமீ யாராவது வாங்களேன் இந்த சிப்பு என்னைய அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கு யாராவது வந்து ஜாமின்ல எடுங்கப்பு///

மணி சார் நீங்கெல்லாம் டூரிங் கொட்டாயில மண்ணு குமிச்சு படம் பார்த்த ஆளுங்கப்பு.. உங்களுக்கெல்லாம் எங்க புரியப் போகுது...

@ pinkyrose உங்களுக்காவது இந்த நிலைமை புரியுதே...

வெங்கட் சொன்னது…

// இதுல சில பேரு நம்ம தலைல
ஏறி முன்னேறி போவாங்க

அந்த இருட்டுல நம்ம மேல ஏறிப்
போறது யார்ன்னு கூடத் தெரியாது. //

என்ன கொடுமை இது..

அப்ப நீங்க எதுக்கு லூசு மாதிரி
க்யூல நின்னுட்டு இருந்தீங்க..?
அடுத்தவன் தலை மேல ஏறி
முன்னே போயிட்டே இருக்க
வேண்டியது தானே..!!

ம்ம்.. என்னிக்கு தான் வாழ்க்கை
தத்துவத்தை புரிஞ்சிக்க போறீங்களோ..!!??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்ப நீங்க எதுக்கு லூசு மாதிரி
க்யூல நின்னுட்டு இருந்தீங்க..?
அடுத்தவன் தலை மேல ஏறி
முன்னே போயிட்டே இருக்க
வேண்டியது தானே..!!
//

நாங்கெல்லாம் நேர்மையான ஆளுங்க பாஸ். அடுத்தவங்க மூலமா முன்னேறுறது பிடிக்காது. அடுத்தவங்கள முன்னேற்றித்தான் பழக்கம்.

Jey சொன்னது…

இரு, என்ன மக்கை போட்ருக்கேனு படிச்சிட்டு வந்து கமெண்ட் போடுரேன்....

ப.செல்வக்குமார் சொன்னது…

///பேன் வேற இருக்காது(ஆமா நீ எடுக்குற அஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு A/C போடுவாங்க).///
நீங்க எந்த பேன பத்தி சொல்லுறீங்க ...?? தலைல இருக்குமே அதுவா ...??
///(ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல)///
நம்மளுக்கு பிடிச்சதே அதுதானே ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

நான் விரைவிலேய VAS இல் சேர்வதா இல்ல VKS இல் சேர்வதா என்ற அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன்.. விரைவில் இதற்காக என்னோட ப்ளாக் ல ஒரு பதிவு போட்டு அறிவிக்கிறேன் ...

மங்குனி அமைசர் சொன்னது…

(ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல).////

மன்ன குமிச்சு உட்கார்ந்தமுன்னா , விடுவமா

பட்டாபட்டி.. சொன்னது…

அடுத்தவங்க மூலமா முன்னேறுறது பிடிக்காது.

//

ஆண் மூலமா?.. இல்ல பெண்மூலமா பாஸ்...

( நிர்மூலம்னு மட்டும் சொல்லீடாதீங்க..ஹி..ஹி)

அனு சொன்னது…

தலைவர் படத்துக்கு போய் திரையை கிழிச்சு அடி வாங்கின அனுபவத்தப் பத்தி எல்லாம் போடல?? ஒரு வேளை அது ஒரு தனி பதிவா வருதோ??

//நான் விரைவிலேய VAS இல் சேர்வதா இல்ல VKS இல் சேர்வதா என்ற அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன்//

இதுல என்ன டவுட்?? VAS தான் கரெக்ட் சாய்ஸ்.. அங்க தான் ஆள் யாரும் இல்லையாம்.. சேர்றவங்களுக்கு நல்ல அமௌண்ட் குடுக்குறாங்களாம்.. (யப்பா.. நமக்கு கும்முறதுக்கு ஒர் ஆள் கிடைச்சாச்சு!!)

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல மலரும் நினைவுகள் ரமெஷ், தொடருங்கள்

உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்

ஜெட்லி... சொன்னது…

//இரவு காட்சியா இருந்தா ரொம்ப வசதி. தியேட்டருக்கு வெளில கூட (கதவுக்கு பக்கத்துல) உக்கார்ந்து படம் பாக்கலாம். காத்தும் நல்லா வரும். படம் மொக்கையா இருந்தா அப்படியே ஓடலாம். //


திருவான்மியூர் ஜெயந்தி வாங்க....
இந்த பீலிங் கிடைக்கும்...

அருண் பிரசாத் சொன்னது…

@ jey

மொக்கை படம் பாக்க போன ஆளு காணலயே! தரை டிக்கெடுங்கள செக் பண்ணுப்பா

@ வெங்கட்

நாங்க VKS சங்க கொள்கைபடிதான் நடப்போம். எப்படியும் உங்களை ஒரு பெரிய லெவலுக்கு ஏத்திவிடாம நிறுத்தமாட்டோம்

Software Engineer சொன்னது…

நொறுக்கிடீங்க தியேட்டரை!
- அன்புடன் ராஜா (சாப்ட்வேர் எஞ்சினியர்)

Software Engineer சொன்னது…

நொறுக்கிடீங்க தியேட்டரை!
- அன்புடன் ராஜா (சாப்ட்வேர் எஞ்சினியர்)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நல்ல எழுதி இருக்கீங்க ரமேஷ். நிறுத்த வேண்டாம் continue பண்ணுங்க.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வெங்கட்
//அப்ப நீங்க எதுக்கு லூசு மாதிரி
க்யூல நின்னுட்டு இருந்தீங்க..?//

என்ன தல பப்ளிக் ல இப்படி பட்டுன்னு உண்மை பேசறிங்க. நம்ப ரமேச்சி இமேஜ் டேமேஜ் ஆகிடாது... (யாருப்பா அது? இருந்ததான டேமேஜ் ஆகும் அப்படின்னு ஒளிஞ்சி நின்னு கொரல் கொடுக்கறது...)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

பதிவு திருடர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு இந்த கடையில் ஆள் இல்லை. பதிவை திருட விரும்புபவர்கள் வேகம் என்னை பதிவுதிருடன்@பதிவுஉலகம்.காம் என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். இந்த பதிவை திருடுபவர்களுக்கு அருண் எழுதிய பழ (புது)மொழி மற்றும் வெங்கட் எழுதிய To ---> கவிஞர் வைரமுத்து..., இலவசம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இரு, என்ன மக்கை போட்ருக்கேனு படிச்சிட்டு வந்து கமெண்ட் போடுரேன்....//

இன்னும் படிக்கலையா officer

//நீங்க எந்த பேன பத்தி சொல்லுறீங்க ...?? தலைல இருக்குமே அதுவா ...??//

ஆமா மொக்கை ராசா...சீக்கிரம் எந்த கட்சின்னு ஒரு முடிவை எடு. VAS தான் உனக்கு சரியான சாய்ஸ்

//மன்ன குமிச்சு உட்கார்ந்தமுன்னா , விடுவமா//

மங்குனி அமைசர் அதான..

//ஆண் மூலமா?.. இல்ல பெண்மூலமா பாஸ்...//
பட்டா மூலம்..

// தலைவர் படத்துக்கு போய் திரையை கிழிச்சு அடி வாங்கின அனுபவத்தப் பத்தி எல்லாம் போடல?? ஒரு வேளை அது ஒரு தனி பதிவா வருதோ?//
வாங்கினவங்கதான எழுதணும். இந்த கமெண்ட் redirect to venkat only...

//இதுல என்ன டவுட்?? VAS தான் கரெக்ட் சாய்ஸ்.. அங்க தான் ஆள் யாரும் இல்லையாம்.. சேர்றவங்களுக்கு நல்ல அமௌண்ட் குடுக்குறாங்களாம்.. ///

ஆமா செல்வா. டெரர் கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கோ.,.

@ அருண் பிரசாத் நன்றி
@ நன்றி ஜெட்லி கண்டிப்பா வரேன்

// மொக்கை படம் பாக்க போன ஆளு காணலயே! தரை டிக்கெடுங்கள செக் பண்ணுப்ப//
கொஞ்ச நேரம் ஆள் இல்லைனா உடனே பூட்டின வீட்ல வந்து அலப்பறை கொடுப்பீங்களே..

@ நன்றி Software Engineer
@ நன்றி TERROR-PANDIYAN(VAS)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் எழுதிய To ---> கவிஞர் வைரமுத்து..., இலவசம்.///

டெரர் அப்பப்ப நீர் நம்ம ஆள் என்று உளறிகொண்டிருக்காதீரும்

//யாருப்பா அது? இருந்ததான டேமேஜ் ஆகும் அப்படின்னு ஒளிஞ்சி நின்னு கொரல் கொடுக்கறது...)/

அதான டெரர் கூட இருக்கும்போது இதெல்லாம் இருக்கும்னு எப்படி நினைக்கலாம் .

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அடடடா... டூரின்க் டாகீசுக்கு கூட்டிட்டு போய்டீங்களே.. அதுல பாத்த படம் மாதிரி இப்ப வருமா....

அருண் பிரசாத் சொன்னது…

@ Terror

கொடுத்த காசுக்கு மேல கூவாதயா, doubt வந்துடும்.

@ செல்வா

நீ ஆணியே புடுங்க வேணாம்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//டெரர் அப்பப்ப நீர் நம்ம ஆள் என்று உளறிகொண்டிருக்காதீரும்//

@அருண்
// கொடுத்த காசுக்கு மேல கூவாதயா, doubt வந்துடும் //

எலேய் நீங்க இரண்டு பெரும் சேர்ந்து நான் எந்த கட்சி எனக்கே சந்தேகம் வர வச்சிடுவிங்க போல...

ஸ்ரீராம். சொன்னது…

கொசுவத்தி சுத்திட்டீங்க...

அருண் பிரசாத் சொன்னது…

@ Terror

யப்பா! வந்த வேளை முடிஞ்சது. ஏதொ நம்மால ஆனது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எப்புடி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி கே.ஆர்.பி.செந்தில் அண்ணே

@ அருண் பிரசாத் வெங்கட்டோட ப்ளாக் போய் பாருங்க. Terror நம்ம ஆளுன்னு தெரியும்..'

@ TERROR-PANDIYAN(VAS) நீர் எங்கள் இனமய்யா..

@ ஸ்ரீராம். நன்றி

pinkyrose சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....//

யப்பா சூப்பர் அட்வைஸ் போலீஸ்!

எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு இந்த லைன்ஸ்!

sweatha சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

பயங்கரமாத்தான் படமெல்லாம் பாத்துருக்கீங்க

ரைட்டு :)

ஜெய்லானி சொன்னது…

ஏன்யா இத்தனை கஷ்டம் என்ன மாதிரி ஓசில படம் பாக்குர டெக்னிக் யாரும் கத்துதரலியா...ஹய்யோ..ஹய்யோ

((டிக்கட் கிழிக்கிரவனை ஃபிரண்ட் பிடிய்யா முதல்ல))

ஜெய்லானி சொன்னது…

ஏன்யா இத்தனை கஷ்டம் என்ன மாதிரி ஓசில படம் பாக்குர டெக்னிக் யாரும் கத்துதரலியா...ஹய்யோ..ஹய்யோ

((டிக்கட் கிழிக்கிரவனை ஃபிரண்ட் பிடிய்யா முதல்ல))

வரதராஜலு .பூ சொன்னது…

நன்றாக இருக்கிறது. நிறுத்தாதீர்கள். தொடருங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@pinkyrose கொலை கேசுல உள்ள போயிடாதீங்க

@ sweatha தகவலுக்கும் உங்கள் முதல் வருகைக்கும் மிக்க நன்றி...

@ ஜில்தண்ணி - யோகேஷ் நன்றி

@ ஜெய்லானி எனக்கு சுடு தண்ணி வைக்கிரதுக்குதான் சொல்லி கொடுத்திருக்காங்க..

@ வரதராஜலு .பூ நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@pinkyrose கொலை கேசுல உள்ள போயிடாதீங்க

@ sweatha தகவலுக்கும் உங்கள் முதல் வருகைக்கும் மிக்க நன்றி...

@ ஜில்தண்ணி - யோகேஷ் நன்றி

@ ஜெய்லானி எனக்கு சுடு தண்ணி வைக்கிரதுக்குதான் சொல்லி கொடுத்திருக்காங்க..

@ வரதராஜலு .பூ நன்றி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது