Horoscope

வெள்ளி, செப்டம்பர் 10

பிள்ளையாரப்பா


  
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

பிள்ளையார் அனைவருக்கும் பிடித்த ஒரு கடவுள். நாம நினைச்ச மாதிரி பிள்ளையாருக்கு பேர் வைக்கலாம். அவருக்கு எத்தனை பெயர்கள். சித்தி விநாயகர், மரத்தடி விநாயகர், வெளிநாட்டு விநாயகர், காதல் விநாயகர்(ஒரு இடத்துல இதையும் பார்த்தேன்). இப்படி பல பெயர்களோடு உலா வருபவர் நம்ம பிள்ளையாரப்பா தான்.


எனக்கும் ரொம்ப பிடித்த கடவுள் அப்டின்னு கேட்டா விநாயகரைத்தான் சொல்லுவேன். குழந்தையிலிருந்து இன்றுவரை அவரைத்தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போது கண்டிப்பாக சட்டைப் பையில் அப்பா கொடுத்த பிள்ளையார்பட்டி விநாயகரின் போட்டோ இருக்கும். அப்பாவிடம் கேட்டு நிறைய தடவை பிள்ளையார்பட்டி கோயிலுக்கு போயிருக்கிறேன். 


அருமையான கோயில் அது. அங்கு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் மீண்டும் மீண்டும் அங்கு போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது. விநாயகர் நம்மில் ஒருவர். அவரை மட்டும்தான் நமக்கு பிடித்த வடிவங்களில் அழகு படுத்தி பார்க்கிறோம். 

முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி என்றால் நண்பர்கள் வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் சுண்டல், கொழுக்கட்டை வரும். நம்ம வீட்டிலிருந்து அங்கு போகும். இப்போ  கொழுக்கட்டையை கண்ணால் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 

ஆனால் இப்போதோ வீட்டில் உக்கார்ந்து நமீதா ஆடின குத்து பாட்டுக்களையும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும் மொக்கை படங்களையும் பார்த்து விட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அவருக்கு லாபமோ இல்லியோ தனியார் தொலைக்கட்சிகள் சம்பாதிப்பதற்கு நல்ல லாபமான நாள்.

விக்கிபீடியாவிலிருந்து எடுத்த சில தகவல்கள்.

விநாயகரின் வேறு பெயர்கள்

  • பிள்ளையார்
  • கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
  • ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  • கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  • விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

விநாயக சதுர்த்தி

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

சரிப்பா சென்னைல பேச்சுலர்ஸ் ரூம்ல இருக்குறேன். யாராவது கொழுக்கட்டை சுண்டல் கொடுக்கணும்னு ஆசைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க. ஓடோடி வர்றேன்.(கொழுக்கட்டை சாப்ட்டு ரொம்ப நாளாச்சுப்பா!!) அட கொழுக்கட்டைக்காக இல்லப்பா. நீங்க கூப்பிட்ட மரியாதைக்காக. நாங்கெல்லாம் பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை தர்றவங்க. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம் ரிலீஸ் ஆகுது. நான் போய் பாத்துட்டு விநாயகர் சதுர்த்தியை என்ஜாய் பண்றேன்.  நீங்களும் என்ஜாய் பண்ணுங்க. அருண் போஸ்ட்டுக்கும் என் போஸ்ட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

மறுபடியும் சொல்றேன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்




15 கருத்துகள்:

என்னது நானு யாரா? சொன்னது…

//சரிப்பா சென்னைல பேச்சுலர்ஸ் ரூம்ல இருக்குறேன். யாராவது கொழுக்கட்டை சுண்டல் கொடுக்கணும்னு ஆசைப்பட்டா என்னக்கு போன் பண்ணுங்க. ஓடோடி வர்றேன்.(கொழுக்கட்டை சாப்ட்டு ரொம்ப நாளாச்சுப்பா!!) அட கொழுக்கட்டைக்காக இல்லப்பா. நீங்க கூப்பிட்ட மரியாதைக்காக//

அப்போ கண்டிப்பா நம்ப வீட்டுக்கு வாங்க பங்காளி! உங்களுக்கு சுண்டல், கொழுக்கட்டையோடு விருந்து தர்றோம்... என் செல் நெம்: 9381191025

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்போ கண்டிப்பா நம்ப வீட்டுக்கு வாங்க பங்காளி! உங்களுக்கு சுண்டல், கொழுக்கட்டையோடு விருந்து தர்றோம்...//

நன்றி பங்காளி. அழைப்புக்கு நன்றி...

என்னது நானு யாரா? சொன்னது…

I'm Serious ரமேஷ்! நீங்க கண்டிப்பா நம்ப வீட்டுக்கு வாங்களேன் பாஸ்!

சௌந்தர் சொன்னது…

இப்போ தான் சிரிப்பு போலீஸ் ஒருத்தருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி முடித்தோம் இப்போ இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் சொன்னது…

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் சொன்னது…

எப்படி இதெல்லாம், சரி விடுங்க. GREAT PEOPLES THINK ALIKE னு சொல்லுவாங்க நம்ம விஷயத்துல அதை நிருபிச்சி இருக்கோம்

GSV சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!

கருடன் சொன்னது…

@அருண் & ரமேஷ்
//எப்படி இதெல்லாம், சரி விடுங்க. GREAT PEOPLES THINK ALIKE னு சொல்லுவாங்க நம்ம விஷயத்துல அதை நிருபிச்சி இருக்கோம்//

GREAT PEOPLE THINK பண்ணிட்டு போகட்டும்... நீங்க என் பண்றிங்க?? இந்த பக்கம் பத்த ரமேஷ் திருட்டு வி.சி.டி விற்க்கராரு... அந்த பக்கம் நீங்க கோயில் வாசல்படியில தேங்க பழம் விற்க்கறிங்க.... இதுல என்ன பில்டப்பு??

ஜெய்லானி சொன்னது…

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

புதியஜீவன் சொன்னது…

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

பெயரில்லா சொன்னது…

Happy Vinayaka Chaturti!

எஸ்.கே சொன்னது…

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! (எங்க போயி கொழுக்கட்டை வாங்குனாலும் அதுல என் பங்க கொடுத்துடனும் ஆமா!)

செல்வா சொன்னது…

படங்கள் அருமை ..!!

செல்வா சொன்னது…

முதல் முதல சின்ன கமெண்ட் போட்டிருக்கேன் ..!! அதனால எனக்கு கொழுக்கட்டை கிடைக்குமா ..?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது