செவ்வாய், செப்டம்பர் 21

மீ தி பர்ஸ்ட்நான் சின்ன வயசுல இருந்து ரொம்ப நல்ல பையங்க. வீட்டுல அது வேணும் இது வேணும்னு கேட்டு தொல்லையே பண்ணினதில்லை(நீயே ஒரு தொல்லை). எனக்கு விவரம் தெரிஞ்சு நான் வீட்ல கேட்டது சைக்கிள். அதுக்கே வீட்டுல செம திட்டு. அடுத்த தெருவுல இருக்குற ஸ்கூல்க்கு படிக்க(அழுத்தமாக படிக்கவும்) போறதுக்கு சைக்கிள் தேவையா. கிடையாது அப்டின்னு சொல்லிடாங்க. அப்புறம் அழுது புரண்டு சைக்கிள் வாங்கினேன்.

அப்புறம் UG படிக்கும்போது(மறுபடியும் அழுத்தமாக படிக்கவும்) வீட்டுல கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்ல சேர்த்து விட்டுடாங்க. காலேஜ்ல டப்பா கம்ப்யூட்டர் தான். சரி கம்ப்யூட்டர் சென்டர்ல போய் எதாச்சும் கோர்ஸ் பபடிச்சு அறிவை வளர்க்கலாம்னு  நினைச்சேன். ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும் (மவனே வீட்டுல உன் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கினா நான் பொறுப்பில்லை) ஒரு பாடாவதி கம்ப்யூட்டர் சென்டர்ல சேர்ந்தோம்.

நான் ஒழுங்கா படிச்சு ஜாவா certificate வாங்கிட்டேன். பாபு அந்த பிகர கரெக்ட் பண்ணிட்டாரான்னு அவர்கிட்டதான் கேக்கணும்(தேவா அண்ணே இத நீங்க கேக்குறீங்க).

அப்புறம் PG வந்ததுக்கப்புறம் எனக்கு கம்ப்யூட்டர் வீட்டுல இருந்தா நல்லா படிக்கலாம்னு நினைச்சேன். வீட்டுல கேட்டா அடிக்க வந்துட்டாங்க. பின்ன, அப்பெல்லாம் கம்ப்யூட்டர் 64MB RAM System-மே Rs.50,000-க்கும் மேல. ஆனா நான் விடலை. கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தாதான் காலேஜ் போவேன்னு சொல்லிட்டேன். பிறகு அப்பா, அம்மா லோன் போட்டு கம்ப்யூட்டர் Rs.45,000 க்கு வாங்கி கொடுத்தாங்க(Rs.47,000 வாங்கி ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையப் போட்டாத வீட்டுல சொல்லிடாதீங்க).

எங்க காலேஜ்லையே முதன் முதலா கம்ப்யூட்டர் வாங்கினது நான்தான். கம்ப்யூட்டர் வாங்கினதும் நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை. கம்ப்யூட்டர்  வாங்கினதும் காலேஜ்க்கு ரெகுலரா போக ஆரமிச்சேன். ஒரு நாள் கூட காலேஜ் (except: Sunday, Govt Holidays) போகாம இருந்ததில்லை. காலேஜ் போய் கிளாஸ் ரூம்ல உர்காந்ததும் எவனாவது "டேய் இப்ப ரிலீஸ் ஆன புதுப்பட சீடி வந்திருச்சாம். பிரண்டு சொன்னான்" அப்டிம்பான். அவ்ளோதான் முத பெல் அடிக்கிறதுக்குள்ள எஸ்கேப் ஆகி எங்க வீட்டுக்கு வந்துடுவோம்.

அதுக்கப்புறம் படிக்கிறதுக்காக வாங்கின என்னோட கம்ப்யூட்டர்ல "Media Player", "Sound Driver" எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதான்னு செக் பண்றதுக்காக அந்த புது பட சீடி போட்டுப் பாப்போம்(எங்களுக்கு multimedia ஒரு சப்ஜெக்ட். சோ இது பிரக்டிகல் கிளாஸ். யாரும் தப்பா நினைக்காதீங்க).

அதுக்கப்புறம் வேலைக்கு போனதும் எங்க செட்டுலையே நான்தான்  முதல்ல செல்போன் வாங்கினேன். செல்போன் வாங்கினதும் நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை.

டிஸ்கி: சரி இப்ப என்ன சொல்ல வர்றே அப்டிங்கிறீங்களா? இவ்ளோ "மீ தி பர்ஸ்ட்" குவாலிடி எங்ககிட்ட இருந்தும் நாங்க எவ்ளோ அமைதியா இருக்கிறோம். ஆனா சில பேர்..(வேணாம். இனிமேலாவது  எங்கிருந்தாலும்  "மீ தி பர்ஸ்ட்" ஆக வர வாழ்த்துக்கள்). இது யாரையும் குறுப்பிடுவன இல்லை.

52 கருத்துகள்:

Chitra சொன்னது…

"மீ தி பர்ஸ்ட்" ..ha,ha,ha,ha...

என்னது நானு யாரா? சொன்னது…

//(வேணாம். இனிமேலாவது எங்கிருந்தாலும் "மீ தி பர்ஸ்ட்" ஆக வர வாழ்த்துக்கள்). இது யாரையும் குறுப்பிடுவன இல்லை.//

இப்படி சொல்லிட்டா, எங்களுக்கு தெரியாதா மாப்பு? நாங்க என்னா வரலாறு தெரியாமையா இருக்கோம்?

STD -ன்னா வரலாறு தானே மாப்பு? போயிட்டுப் போகுது விடுங்க! சின்ன பசங்க கிட்ட எல்லாம் சண்டைக்குப் போகக் கூடாது.

என்னது நானு யாரா? சொன்னது…

சித்ரா வேற, அமெரிக்காவில போலிசு எல்லாம் எப்படி நல்லபடியா நடந்துக்குறாங்கன்னு சொல்லி இருக்காங்க. சிரிப்பு போலிசு! நீயும் நல்லபடியா நடந்துக்கப்பா!

தமிழ்நாட்டோட மானத்தை காப்பாத்து! தமிழ்நாட்டிலேயும் நல்ல போலிசு இருக்காங்கன்னு நிறுபிப்பா! அதனால பெரிய மனசு செஞ்சி அந்த அப்பாவி, பச்சைமண்ணை சும்மா விட்டுடு!

அதுக்கு என்னத் தெரியும் சொல்லு? அது, பச்சைக் குழந்தைப்பா. பச்சை குழந்தைங்க பாவம் கூட பெண் பாவம் போல பொள்ளாதது. தெரிஞ்சுக்க போலிசு!

இராமசாமி கண்ணண் சொன்னது…

டேய் சாமி.. கொய்யால.. உன்னய என்ன பண்ண.. அடங்க மாட்டியா.. இப்படில்லாம் திட்ட மனசு வரல நண்பா..

Jey சொன்னது…

me the 5th

என்னது நானு யாரா? சொன்னது…

மத்த பங்காளிங்களுக்கு சொல்லி அனுப்பிட்டியா இல்லையா போலிசு? கும்மிக்கு யாரும் காணோமே?

சரி! வேஸ்டா எதுக்கு அந்த தமிழ்மண ஓட்டுப்பட்டையை வைச்சிருக்கே? மேல இருக்கிறதால ஓட்டுப் போட முடியல.அதை கீழே இன்டிலியோடு சேர்த்து வைப்பா ரமேசு!

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அதான பங்காளி யாரையுமே காணமே. ஒரு வேலை மீ தி பர்ஸ்ட்க்கு அர்த்தம் தெரிஞ்சிருக்குமோ?

அருண் பிரசாத் சொன்னது…

Me the First

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

ரமெசு, ஒரே புனைவா போட்டு தாக்குறீங்க....

இருந்தாலும் அவங்க lastஆ வந்தாலும் “Me The First" தான்....

அதுக்கு தலையாட்டி ஆமாம் சாமி போட பங்கட்டும் ரெடிதான்...

அருண் பிரசாத் சொன்னது…

ரமெசு, profile photo என்ன பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்ததா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra கூறியது...
"மீ தி பர்ஸ்ட்" ..ha,ha,ha,ha...
,


ஹஹா நீங்களுமா?
==============

என்னது நானு யாரா? கூறியது...
//(வேணாம். இனிமேலாவது எங்கிருந்தாலும் "மீ தி பர்ஸ்ட்" ஆக வர வாழ்த்துக்கள்). இது யாரையும் குறுப்பிடுவன இல்லை.//

இப்படி சொல்லிட்டா, எங்களுக்கு தெரியாதா மாப்பு? நாங்க என்னா வரலாறு தெரியாமையா இருக்கோம்?சத்தியமா புனைவு இல்லை...
=========

இராமசாமி கண்ணண் கூறியது...
டேய் சாமி.. கொய்யால.. உன்னய என்ன பண்ண.. அடங்க மாட்டியா.. இப்படில்லாம் திட்ட மனசு வரல நண்பா..

ரொம்ப நல்லவந்தான் ராசா நீ..
=========

@ Jey டைபாய்டு காய்ச்சலை சமாளித்து, வந்த வைரஸ் விரட்டிய வைரல் வேந்தன் வருக வருக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண் பிரசாத்

வேற டயலாக் கொண்டு வராங்களான்னு பாப்போம். அவங்களா நிறுத்த சொல்லுங்க. அப்புறம் நான் நிறுத்துறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...
ரமெசு, profile photo என்ன பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்ததா?
//

ஆமா

GSV சொன்னது…

இந்த போஸ்ட் க்கு நான் தான் "மீ தி லாஸ்ட்" போடுவேன் ஓகே வா.

சேலம் தேவா சொன்னது…

தமிழ்மேட்ரிமோனிக்கு எதுக்கு காசு தரணும்ன்னு உங்க பிளாக்லயே விளம்பரமா!! கலக்குங்க போலீஸ்கார்!!!

சீமான்கனி சொன்னது…

ஐயா ராசா எனக்கு உங்க போஸ்ட் எதுவும் படிக்கமுடியல என்ன ஆச்சு பாருங்க...தமிழ்மணம் ஓட்டு பட்டை மட்டும் சரியாவருது எழுத்துகள் எல்லாம் ஓரமா ஒதிங்கிருது...படிக்க முடியல

அனு சொன்னது…

என்ன ரமெஷ்.. பொண்ணு பாக்க ஆரம்பிச்சாச்சா??

// இவ்ளோ "மீ தி பர்ஸ்ட்" குவாலிடி எங்ககிட்ட இருந்தும் நாங்க எவ்ளோ அமைதியா இருக்கிறோம். //

உங்களுடைய 'மீ தி பர்ஸ்ட்' அனுபவங்களை எல்லாம் ஒரு பதிவாவே போட்டு பில்ட் அப் குடுத்துட்டு அமைதியா இருக்கேன் னு சொல்றீங்க..இதுல எதை நம்புறது??

btw, எங்க அந்த மீ தி ப்ர்ஸ்ட்-ட இன்னும் காணும்??

சிநேகிதி சொன்னது…

:-))

Chitra சொன்னது…

Chitra கூறியது...
"மீ தி பர்ஸ்ட்" ..ha,ha,ha,ha...
,

ஹஹா நீங்களுமா?

....நான் அப்படி போடுவதே இல்லையே...... உங்கள் இடுகையை வாசிக்கவும் ஏனோ அப்படி சொல்லி பார்த்து கொள்ள தோன்றியது. ஹா,ஹா,ஹா,ஹா.....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சந்தோசமா ராசா .இனி வீட்டுல பாத்து நாளைக்கு சோறு தண்ணி இல்லாம்ம ஆக்கிடானப்பா !!!!!!!!!!!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும்//
பய புள்ள ஒன்னு சொல்லாம மறச்சுட்டு .நாங்க போய் கேட்கும் போது அந்த கவுன்சிலர் பிகர் உன்னை பார்த்து பாபுவுக்கு நீங்க தாத்தாவானு கேட்டத சொல்லவே இல்லை

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//படிக்கிறதுக்காக வாங்கின என்னோட கம்ப்யூட்டர்ல "Media Player", "Sound Driver" எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதான்னு செக் பண்றதுக்காக அந்த புது பட சீடி போட்டுப் பாப்போம்//

என்ன படம்னு பதிவுலக நண்பர்கள் கண்டிப்பாக கேட்கணும் .
முதல் முதலா படம் பார்க்கும் பொழுது சாமி படம்தான் பார்க்கணும்னு சொல்லி சாமி படம் பார்த்த கதையை சொல்லவே இல்லை (சத்தியமா சாமி படம் தாங்க?????.......அவ்வ்வ்வவ் )

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//நான் ஒழுங்கா படிச்சு ஜாவா certificate வாங்கிட்டேன். பாபு அந்த பிகர கரெக்ட் பண்ணிட்டாரான்னு அவர்கிட்டதான் கேக்கணும்(தேவா அண்ணே இத நீங்க கேக்குறீங்க)//
pickup ...........drop ...............and then escape .............

இந்த formula சொல்லிகொடுத்ததே தேவா அண்ணன் தான்.அவருக்கு தெரியாததா ?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//பிறகு அப்பா, அம்மா லோன் போட்டு கம்ப்யூட்டர் Rs.45,000 க்கு வாங்கி கொடுத்தாங்க(Rs.47,000 வாங்கி ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையப் போட்டாத வீட்டுல சொல்லிடாதீங்க).//

இப்படி ஒரு பிள்ளையை பெற்றதுக்கு கால் கிலோ அரிசியை பிள்ளைய பெத்துருக்கலாம் .சமைத்து தாவது சாப்பிட்டிருக்கலாம்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அதுக்கப்புறம் வேலைக்கு போனதும் எங்க செட்டுலையே //
என்ன எங்க செட்டு பெரிய சேவிங் செட்டு .எல்லாம் மாடு மேய்க்கிற செட்டு ..................(என்னை தவிர )

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இனி யாராவுது ரமேஷ் blogla வந்து me the firstunnu போட்டிங்கன .நான் ரமேஷ் என்ன என்ன படம் பார்த்தான்னு தனியா ஒரு பதிவே போடுவேன் ஆமா ................

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ரமெசு, profile photo என்ன பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்ததா?//

அருண் ஒருத்தரு தான் கரெக்டா கண்டு பிடிக்கிறாரு ............
அருண் அதுக்கில்ல .ரமேஷ் புதுசா வீடு ஒன்னு கட்ட போறாரு பயமுர்த்துற மாதிரி ஒரு போட்டோ வேணும்னு (வீட்டுக்கு வெளிய தொங்க விட ) அவர் அப்பா கேட்டாங்க உடனே இந்த போட்டவ கொடுத்திருக்கான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

இந்த போஸ்ட் க்கு நான் தான் "மீ தி லாஸ்ட்" போடுவேன் ஓகே வா.//

ஓகே. நோ ப்ரோப்லேம்.

==================================

//சேலம் தேவா கூறியது...

தமிழ்மேட்ரிமோனிக்கு எதுக்கு காசு தரணும்ன்னு உங்க பிளாக்லயே விளம்பரமா!! கலக்குங்க போலீஸ்கார்!!!//

கரெக்டா கண்டு பிடிசிடீன்களே..

====================================

//சீமான்கனி கூறியது...

ஐயா ராசா எனக்கு உங்க போஸ்ட் எதுவும் படிக்கமுடியல என்ன ஆச்சு பாருங்க...தமிழ்மணம் ஓட்டு பட்டை மட்டும் சரியாவருது எழுத்துகள் எல்லாம் ஓரமா ஒதிங்கிருது...படிக்க முடியல//

தெரியலையே. செக் பண்றேன். நன்றி.

====================================================

//அனு கூறியது...என்ன ரமெஷ்.. பொண்ணு பாக்க ஆரம்பிச்சாச்சா??//

ஆமாங்க.

//உங்களுடைய 'மீ தி பர்ஸ்ட்' அனுபவங்களை எல்லாம் ஒரு பதிவாவே போட்டு பில்ட் அப் குடுத்துட்டு அமைதியா இருக்கேன் னு சொல்றீங்க..இதுல எதை நம்புறது??//

ஒரு விஷயம் மக்களுக்கு சொல்லும்போது உதாரணம் சொல்லித்தான ஆகணும்..

=======================================================

@ சிநேகிதி நன்றி...

======================================================

@ சித்ரா அப்படின்னா உங்களை பத்தியும் புனைவு எழுதுவேன். ஹா ஹா ஹா

=============================================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

சந்தோசமா ராசா .இனி வீட்டுல பாத்து நாளைக்கு சோறு தண்ணி இல்லாம்ம ஆக்கிடானப்பா !!!!!!!!!!!!//

நீதான சமையல் பண்றது. சமைக்கும்போதே முழுங்கிடு..


// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும்//
பய புள்ள ஒன்னு சொல்லாம மறச்சுட்டு .நாங்க போய் கேட்கும் போது அந்த கவுன்சிலர் பிகர் உன்னை பார்த்து பாபுவுக்கு நீங்க தாத்தாவானு கேட்டத சொல்லவே இல்லை//

சீக்கிரம் தூங்கி எந்திரி ராசா. கனவு கண்டது போதும்..


//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

முதல் முதலா படம் பார்க்கும் பொழுது சாமி படம்தான் பார்க்கணும்னு சொல்லி சாமி படம் பார்த்த கதையை சொல்லவே இல்லை (சத்தியமா சாமி படம் தாங்க?????.......அவ்வ்வ்வவ் )//

ஆமா விக்ரம், த்ரிஷா நடிச்ச சாமி அப்பத்தான் ரிலீஸ் ஆச்சு.


//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//பிறகு அப்பா, அம்மா லோன் போட்டு கம்ப்யூட்டர் Rs.45,000 க்கு வாங்கி கொடுத்தாங்க(Rs.47,000 வாங்கி ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையப் போட்டாத வீட்டுல சொல்லிடாதீங்க).//

இப்படி ஒரு பிள்ளையை பெற்றதுக்கு கால் கிலோ அரிசியை பிள்ளைய பெத்துருக்கலாம் .சமைத்து தாவது சாப்பிட்டிருக்கலாம்//

அப்புறம் நீ பீஸ் வாங்கின கதைய சொல்லுவேன்.


//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//ரமெசு, profile photo என்ன பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்ததா?//

அருண் ஒருத்தரு தான் கரெக்டா கண்டு பிடிக்கிறாரு ............
அருண் அதுக்கில்ல .ரமேஷ் புதுசா வீடு ஒன்னு கட்ட போறாரு பயமுர்த்துற மாதிரி ஒரு போட்டோ வேணும்னு (வீட்டுக்கு வெளிய தொங்க விட ) அவர் அப்பா கேட்டாங்க உடனே இந்த போட்டவ கொடுத்திருக்கான்//


பொறாமை பிடிச்ச பயலுக..

வெங்கட் சொன்னது…

// வேலைக்கு போனதும் எங்க செட்டுலையே
நான்தான் முதல்ல செல்போன் வாங்கினேன்.
செல்போன் வாங்கினதும் நான் யார்கிட்டயும்
"மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை. //

ஆமா.. செல்போனையே
இவர் தான் கண்டுபிடிச்சார்..
அப்பவே இவர் " Me the First-ன்னு "
சொல்லலை..

வெங்கட் சொன்னது…

// எங்க காலேஜ்லையே முதன் முதலா கம்ப்யூட்டர்
வாங்கினது நான்தான். கம்ப்யூட்டர் வாங்கினதும்
நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே //

ஏன் ரமேஷு நிறுத்திட்டீங்க..

( ரமேஷ் சொல்லாமல் விட்ட சில
" Me the First " நிகழ்வுகள்.. )

நான் School-க்கு போனப்ப
எங்க Class-லயே முதன் முதலா
சிலேட்டும்., பல்பமும் வாங்கினது நான்தான்..

As a ராமராஜன் Fan.,
கிளிபச்சை கலர்ல சட்டையும்.,
ஆரஞ்சு கலர்ல பேண்ட்டும்
எங்க ஜில்லாவுலயே முதன் முதலா
வாங்கினது நான்தான்..

Computer Class-க்கு வந்த பொண்ணுகிட்ட
ரவுசு பண்ணி அவங்க அண்ணன்கிட்ட
முதன் முதலா தர்ம அடி வாங்கினது
நான்தான்..

Interview போனப்ப..
" தம்பி நீயா வெளியே போறீயா..?
இல்ல பியூனை கூப்பிடவான்னு.. "
Interview பண்றவர் முதன் முதலா
அன்பா சொன்னதும என்கிட்ட தான்..

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு..
(அழுத்தமாகப் படிக்கவும்)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மீ த 32 ......

ப.செல்வக்குமார் சொன்னது…

//நான் ஒழுங்கா படிச்சு ஜாவா certificate வாங்கிட்டேன். பாபு அந்த பிகர கரெக்ட் பண்ணிட்டாரான்னு அவர்கிட்டதான் கேக்கணும்(தேவா அண்ணே இத நீங்க கேக்குறீங்க).//

அட ச்சே .. ஒரு நல்ல மனுசன இப்படிஎல்லாமா சொல்லுவீங்க ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

///(Rs.47,000 வாங்கி ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையப் போட்டாத வீட்டுல சொல்லிடாதீங்க).//

உங்களைப் பத்தி தான் எங்களுக்கு தெரியுமே ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//சரி இப்ப என்ன சொல்ல வர்றே அப்டிங்கிறீங்களா? //
நீங்க என்ன வேணா சொல்லுங்க ,
ஆனா நானும் நிறையதடவ first வந்திருக்கேன்

ஒரு தடவ எங்க வீட்டுல எனக்கும் எங்க அண்ணனுக்கும் சாபிடரதுல போட்டி வச்சோம் அப்பா நான் தான் முதல்ல சாப்பிட்டேன் ,

அப்புறம் ஒரு நாள் எங்க பள்ளிக்கூடத்துல ஓட்டப்பந்தயம் வச்சாங்க அதுல ஒருத்தருமே கலந்துக்கல அப்போ நான் தான் முதல்ல வந்தேன் ..

அப்புறம் ஒரு நாள் slow cycle ரேஸ் வச்சாங்க . அதிலயும் எல்லோருக்கும் முன்னாடி நான் தான் வந்தேன் ..

இப்படி நிறைய தடவ முதல்ல வந்திருக்கேன்.. இத்தன திறமை இருக்குற நானே சும்மா இருக்கும் போது நீங்க எதுக்கு இப்படி ஒரு பதிவு போட்டிருக்கீங்க ..?!??

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ரமேஷ், அவங்க என்ன செய்வாங்க, பாவம்! எல்லாம் சேர்க்கை தோஷம்தான்!

@ venkat
தன்னைப் போல பிறரை நினைக்கற உங்க நல்ல குணம் எதனை பேருக்கு புரியப்போவுது, யு ஆர் கிரேட்!

அப்புறம் இந்த கறார் மாண்டியனை இன்னும் காணோமே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஃபர்ஸ்ட்நைட்டுக்கு மட்டும் மீ த ஃபர்ஸ்ட் போனா போதும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி வெங்கட். இப்பவாச்சும் நாங்க எவ்ளோ தன்னடக்கமா இருக்கோம்னு தெரிஞ்சிகோங்க.

============
//இந்திரா கூறியது...

நல்ல பதிவு..
(அழுத்தமாகப் படிக்கவும்)///

இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

==============================

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...மீ த 32 .....//

வாங்க அண்ணா ரொம்ப நாளா ஆளக் காணோம்..

===============================

@ ப.செல்வக்குமார் நீயும் என்னை மாதிரி நல்லவன் போல...

==========================

// பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...ரமேஷ், அவங்க என்ன செய்வாங்க, பாவம்! எல்லாம் சேர்க்கை தோஷம்தான்!//

ஓ அதான் விசயமா?

===========

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

ஃபர்ஸ்ட்நைட்டுக்கு மட்டும் மீ த ஃபர்ஸ்ட் போனா போதும்//

ஓகே. சாரி எனக்கு தெரியாது...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//ஃபர்ஸ்ட்நைட்டுக்கு மட்டும் மீ த ஃபர்ஸ்ட் போனா போதும்//

ஓகே. சாரி எனக்கு தெரியாது...//

இது எல்லாம் தெரியாது. ஆன....

ப்ளாக்ல First போட்டோ மாத்திட்டு

பொண்ணு பாக்க மட்டும் First கிளம்பிட்டிங்க.

பொண்ணு உங்களை First பாத்ததும்

நீங்க First வெளிய போங்க சொல்லூம்.

நீங்க அதை காதுலே வாங்கம

First அங்க இருக்க பலகாரம் எடுப்பிங்க. அதை பாத்து எல்லாறும் கடுப்பு ஆவங்க. அதுல

First உங்க அம்மா இதை எண்டா புள்ளையா பொத்தோம் சொல்லி பீல் பண்ணுவாங்க.

யார் வீட்டுக்கு போனாலும் First பலகார தட்டுல கை வைக்கிற இந்த கெட்ட பழக்கம் first நிறுத்துங்க...

Shalini சொன்னது…

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அது போல் பாவித்து
தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போல்...

இதுக்கு ரியல் லைஃப் example தேடிட்டு இருந்தேன் போலீஸ்
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் உங்க பதிவுக்கு...

Shalini சொன்னது…

ரமெசு, profile photo என்ன பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்ததா?//

என்ன போலீஸ் சனியா? செவ்வாயா?

Shalini சொன்னது…

//இருந்தாலும் அவங்க lastஆ வந்தாலும் “Me The First" தான்.//

புரிஞ்சா சரி

Shalini சொன்னது…

//எங்க அந்த மீ தி ப்ர்ஸ்ட்-ட இன்னும் காணும்??//

வாங்க வாங்க உங்களத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்

பாவம் பயந்திட்டீங்கல்ல அதான் கொஞ்சம் விட்டு பிடிச்சேன்

அலைகள் பாலா சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும்//

//சந்தோசமா ராசா .இனி வீட்டுல பாத்து நாளைக்கு சோறு தண்ணி இல்லாம்ம ஆக்கிடானப்பா !!!!!!!!!!!! ///

வாழ்வா ஜாவா போராட்டம் போல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@/ TERROR-PANDIYAN(VAS)

உங்க குரூப் ல எல்லோரும் தன்னைப்போல பிறரையும் நினை கொள்கை உடையவங்க போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Shalini கூறியது...

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அது போல் பாவித்து
தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போல்...

இதுக்கு ரியல் லைஃப் example தேடிட்டு இருந்தேன் போலீஸ்
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் உங்க பதிவுக்கு...//

இது உங்க பாஸ் கிட்ட சுட்டதா?

==============================

//Shalini கூறியது...

ரமெசு, profile photo என்ன பொண்ணு வீட்டுக்கு அனுப்ப எடுத்ததா?//

என்ன போலீஸ் சனியா? செவ்வாயா?//

இன்னிக்கு வியாழக்கிழமை...

==================================

./// அலைகள் பாலா கூறியது...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும்//

//சந்தோசமா ராசா .இனி வீட்டுல பாத்து நாளைக்கு சோறு தண்ணி இல்லாம்ம ஆக்கிடானப்பா !!!!!!!!!!!! ///

வாழ்வா ஜாவா போராட்டம் போல.//

ஆமாங்க ஜாவா ஒரு போராட்டம்தான்..

siva சொன்னது…

no no

meeeeeeeeeeee the firstu..

தியாவின் பேனா சொன்னது…

ஐயோ... ஐயோ...

GSV சொன்னது…

//யார் வீட்டுக்கு போனாலும் First பலகார தட்டுல கை வைக்கிற இந்த கெட்ட பழக்கம் first நிறுத்துங்க..//

இந்த சொந்த கதை சூப்பரா இருக்கே !!! Terror....haahhahahahah..

ஜெயந்தி சொன்னது…

வீட்டுல வாங்கிக்கொடுத்த பொருள்களுக்கு மீ த பஸ்ட்டு சரி. மார்க்குல எப்படி? அதுலயும் மீ த பஸ்ட்டா.

GSV சொன்னது…

"me the last " HAHAHAHAHHAHHA

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது