வெள்ளி, செப்டம்பர் 17

இரவில் டார்ச் வைத்து சூரியனை தேடுபவர்கள்


இடம்: TATSS(தானே அடிவாங்கி தனியாக சமாளிப்போர் சங்கம்)
நாள் & நேரம்: சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாள் காலை 10 மணி

TATSS தலைவர்: ச்சே எத்தனை நாளைக்குதான் இந்த எதிர் கட்சிங்க(மனதிற்குள்: நமக்கு இருக்குறது ஒரே ஒரு எதிர் கட்சி சங்கம்தான. சரியான அக்கப்போர் சங்கம்) கிட்ட தனியாவே அடி வாங்குறது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்ன்னு வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கிகிடுரனே. அவ்வவ்வ்வ்வ்.

(போன் அழைக்கிறது)

TATSS தலைவர்: ஹலோ TATSS தலைவர், பொருளாளர், செயலாளர், முதல்வர், தொண்டர் பங்கட் பேசுறேன். நீங்க யாரு பேசுறது?

எதிர் முனை: என் பேரு குடிமை மாண்டியன்.

TATSS தலைவர்:சொல்லுங்க என்ன விஷயம்?

குடிமை: நான் இங்க சுபாய் ல இருந்து பேசுறேன்.

TATSS தலைவர்:சொல்லுங்க.

குடிமை: இங்க நான் எங்க offilce லயும் போது இடத்துலையும் தனியா போய் மாட்டிக்கிட்டு தர்ம அடி வாங்குறேன். என்னைக்குன்னு கேள்வி கேக்க ஒரு நாதியும் இல்லை. அங்க இந்தியாலையும் என்னை மாதிரியே ஒருத்தர் இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.

TATSS தலைவர்:யாரு? யாரு?

குடிமை: இந்த குசும்புதான வேணாங்கிறது தல. நீங்கதான் எதிர் கட்சி கிட்ட தினமும் செமையா வாங்குரீங்கலாமே?

TATSS தலைவர்: இது சுபாய் வரைக்கும் பரவிடுச்சா. பரவாயில்லை. எனக்கும் துணைக்கு ஒரு ஆள் தேவை. வந்து சங்கத்துல சேர்ந்துக்கோங்க.

குடிமை: எனக்கு என்ன பதவி தல?

TATSS தலைவர்: இருக்குறது ரெண்டு பேரு.நீங்க சேர்ந்ததே பெரிய விஷயம். உங்களுக்கு என்ன பதவி வேணுமோ அதை எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி ஏதாச்சும் இருந்தா எனக்கு கொடுங்க.

குடிமை: ஓகே தலை.

ரெண்டு வாரத்துக்கு அப்பால!!!!!

TATSS தலைவர்:ஹலோ குடிமை!!

குடிமை: சொல்லுங்க பாஸ்.

TATSS தலைவர்:எப்படி இருக்கு புது பதவிகள்?

குடிமை: பாஸ். நீங்க ரொம்ப நல்லவங்க. இந்த எதிர் கட்சிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க. என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதில் சொல்லி செம அடி கொடுக்குறாங்க.  என்னால முடியலை!!

TATSS தலைவர்:நோ,நோ இப்படியெல்லாம் சொல்ல கூடாது. வாஸ்துப்படி உங்க பேர் சரியில்லை. அதனால பேரை மாத்துங்க.

குடிமை ஊர்ல உள்ள எல்லா ஜோசியர் கிட்டயும் போய் எல்லாரையும் டெரர் ஆக்குகிறார். அத்தனை பேரும் அடித்து துரத்துகின்றனர். அவரே சுயமா சிந்திச்சு(!!!$$$$???) பெயரை மாற்றுகிறார். கறார் மாண்டியன்(TATSS).

கறார்: தல பேரை மாத்திட்டேன். இனி பாருங்க. நம்மளப் பாத்து எல்லோரும் டெரர் ஆகப் போறாங்க!!

TATSS தலைவர்:ம் ம். அந்த பயம் எல்லார் கிட்டயும் இருக்கணும்.

கொஞ்ச நாள் கழித்து:

TATSS தலைவர்: ஷ் யப்பா இந்த கறார் தொல்லை தாங்கலியே. நிறைய பேரை மிரட்டிட்டு வான்னா வெளியூர்ல போய் அடி வாங்கிகிட்டு வருது. போலீஸ் ஸ்டேஷன்ல award திருடுது. நரி கிட்ட வார்னிங் வாங்கிட்டு வருது. காதலிக்கிறேன்ன்னு சொல்லிக்கிட்டு மொக்கை பிகர் கிட்ட கேவலமா வழியுது. தேவையில்லாம ஆண்கள் சமஉரிமை அப்டின்னு சொல்லி பெண்கள்கிட்ட தர்ம அடி வாங்கி ஒரு அப்புராணி புதிய பதிவர் கூட எதிர் பதிவு போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாரு!! எனக்கும் தர்ம அடி வாங்கிக் கொடுக்காம விட மாட்டார் போல?

ரெண்டு வாரத்துக்கு முன்னால:

போன் ஒலிக்கிறது...

TATSS தலைவர்: ஹலோ நான் பங்கட் பேசுறேன்.

எதிர்முனை: ஹலோ நான்தான் உங்களுக்கு முதல்ல போன் பண்ணினேன். "Me the first". 

TATSS தலைவர்: இல்லியே. இதுக்கு முன்னால நிறைய பேர் போன் பண்ணினாங்களே.

எதிர்முனை:அதெல்லாம் எனக்கு தெரியாது. நான்தான் "Me the first".

TATSS தலைவர்: சரி இனிமே எப்ப நீங்க போன் பண்ணினாலும், என் போன்ல உள்ள received call list-ட நான் Delete பண்ணிடுறேன். நீங்களே எப்பவுமே "Me the first" ஆ இருங்க. சரி எதுக்கு போன் பண்ணினீங்க?

எதிர்முனை: நான் உங்க கட்சில சேரப் போறேன்.

TATSS தலைவர்: ஏற்கனவே என்னால கறாரை  சமாளிக்க முடியலை. அடுத்து ஒண்ணா? அவ்வவ்..(பங்கட் மயங்கி சரிகிறார்.)

டிஸ்கி: இது யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு சொன்னா  நம்புவீங்க?????

78 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

வந்துட்டேன்

சௌந்தர் சொன்னது…

TATSS தலைவர்:யாரு? யாரு?///

ஆசையாய் பாரு நீங்க இந்த இடம் சிரிப்பு தாங்க முடியலை


ஒரு அப்புராணி புதிய பதிவர் கூட எதிர் பதிவு போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாரு!! எனக்கும் தர்ம அடி வாங்கிக் கொடுக்காம விட மாட்டார் போல?/////

இந்த இடம் அதுக்கு மேல புள்ள பூச்சி எல்லாம் எதிர் பதிவு போடுது....

இந்த ரெண்டு இடத்தில் சிரிப்பு அடக்க முடியலை

சௌந்தர் சொன்னது…

TATSS தலைவர்: ஹலோ TATSS தலைவர், பொருளாளர், செயலாளர், முதல்வர், தொண்டர் பங்கட் பேசுறேன். நீங்க யாரு பேசுறது/////

ஓஹ எல்லாமே இவரோ அது சரி அடி வாங்குறது கூட இவர் மட்டும் தனியா தான் அடி வாங்குவாரா

இராமசாமி கண்ணண் சொன்னது…

யார போட்டு பாத்துருக்கன்னு தெரியல.. நீயும் புனைவு எழுத ஆரம்பிச்சுருக்கறது சந்தோசம்டா மக்கா....

அருண் பிரசாத் சொன்னது…

அய்யோ... அய்யோ. ஒரே பதிவுல 3 பேர் மூக்கை உடைச்சிட்டீங்களே! இதுக்கு மேல அவங்க வர மாட்டாங்களே.... இனி யாரை கலாய்க்க முடியும்...

அதுல யும் me the first சூப்பரு

Chitra சொன்னது…

"கும்மி" அடியா? :-)

என்னது நானு யாரா? சொன்னது…

உங்க புனைவு, இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைக்கலாம். ஐயோ! ஐயோ! சிரிச்சி முடியல... என்னமா ரவுஸ் பண்ணுறப்பா!

ரொம்ப காமெடியா இருந்ததுப்பா! இதை படிச்சிட்டு எத்தனை பேரு காண்டாவுறாங்களோ தெரியலையே? எல்லாம் அந்த பங்கட் புள்ளையாருக்குத் தான் வெளிச்சம்.

கலாநேசன் சொன்னது…

நம்பிட்டேன்..

அனு சொன்னது…

புனைவு சூப்பர்!!!

பங்கட் போட்டோ கலக்கலா இருக்கு.. btw, ப்ளூ கலர் சட்டை கிடைக்கலயா?

இப்படி ஒரு பதிவ போட்டு நம்ம கட்சியோட கெத்-தை காமிச்சுட்டீங்க.. இதுக்கு அப்புறம் TATSS மக்களுக்கு இனிமேல் பேச்சே வராது... (fullஆ ஊமைக்காயம்ல!!)

ஆக மொத்தத்துல இன்னைல இருந்து டார்ச்-சுக்கு ப்யூஸ் போச்சு!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

வந்துட்டேன்//

டேக் தி வடை.. சிரிச்சதுக்கு நன்றி...

//சௌந்தர் கூறியது...

TATSS தலைவர்: ஹலோ TATSS தலைவர், பொருளாளர், செயலாளர், முதல்வர், தொண்டர் பங்கட் பேசுறேன். நீங்க யாரு பேசுறது/////

ஓஹ எல்லாமே இவரோ அது சரி அடி வாங்குறது கூட இவர் மட்டும் தனியா தான் அடி வாங்குவாரா///


அது போன மாசம். இப்ப அவங்க சொல்ற டயலாக் (காக்க காக்க) நாங்க மூணு பேர். எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது. எங்க போனாலும் பயப்படமா அடி வாங்கிட்டு வருவோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இராமசாமி கண்ணண் கூறியது...

யார போட்டு பாத்துருக்கன்னு தெரியல.. நீயும் புனைவு எழுத ஆரம்பிச்சுருக்கறது சந்தோசம்டா மக்கா....//

பங்கட் ல லிங்க் இருக்கும் கிளிக் செய்து பாரு..


//அருண் பிரசாத் கூறியது...

அய்யோ... அய்யோ. ஒரே பதிவுல 3 பேர் மூக்கை உடைச்சிட்டீங்களே! இதுக்கு மேல அவங்க வர மாட்டாங்களே.... இனி யாரை கலாய்க்க முடியும்...

அதுல யும் me the first சூப்பரு//

ஹிஹி இனிமே me the first கமென்ட் வரும்?


// Chitra கூறியது...

"கும்மி" அடியா? :-)//

அடுத்த புனைவுங்க...


//என்னது நானு யாரா? கூறியது...

உங்க புனைவு, இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைக்கலாம். ஐயோ! ஐயோ! சிரிச்சி முடியல... என்னமா ரவுஸ் பண்ணுறப்பா!

ரொம்ப காமெடியா இருந்ததுப்பா! இதை படிச்சிட்டு எத்தனை பேரு காண்டாவுறாங்களோ தெரியலையே? எல்லாம் அந்த பங்கட் புள்ளையாருக்குத் தான் வெளிச்சம்.//

யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?


// கலாநேசன் கூறியது...

நம்பிட்டேன்..//

ரொம்ப நன்றி

என்னது நானு யாரா? சொன்னது…

//யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?//

சிரிப்பு போலீஸு! உங்களை அடிக்காம இருக்கிறதுக்கு இயற்கை வைத்தியத்தில ஒன்னும் செய்ய முடியாது. ஆனா அடிப்பட்ட காயங்கள் எல்லாம் சீக்கிரம் ஆறுகிற மாதிரி செய்ய முடியும்.

இப்படி ஒன்டியா நின்னு மூனு பேருக்கிட்ட மல்லுக்கு நிக்கறியே! சமாளிப்பியா போலிஸு? இல்ல மாங்கு மாங்குன்னு அடியை வாங்கிட்டு , முனகிக்கிட்டு இருப்பியா?

ஒன்னுமே பிரியலப்பா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

புனைவு சூப்பர்!!!
ஆக மொத்தத்துல இன்னைல இருந்து டார்ச்-சுக்கு ப்யூஸ் போச்சு!!!///

அவங்க இனிமே பெட்ரோமாக்ஸ் லைட் தான் use பண்ணுவாங்களாம்...ஆனா ஊதா கலர் சட்டை போட்டவங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் ஊருக்குள்ள தர மாட்டாங்களாம். அதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறார்..


//என்னது நானு யாரா? கூறியது...//யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?//

சிரிப்பு போலீஸு! உங்களை அடிக்காம இருக்கிறதுக்கு இயற்கை வைத்தியத்தில ஒன்னும் செய்ய முடியாது. ஆனா அடிப்பட்ட காயங்கள் எல்லாம் சீக்கிரம் ஆறுகிற மாதிரி செய்ய முடியும்.//

தெரியாதுன்னு சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லாதிங்க. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட வந்து மாட்டிக்கிட்டனே(ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?)

அனு சொன்னது…

@என்னது நான் யாரா

//இப்படி ஒன்டியா நின்னு மூனு பேருக்கிட்ட மல்லுக்கு நிக்கறியே! சமாளிப்பியா போலிஸு? இல்ல மாங்கு மாங்குன்னு அடியை வாங்கிட்டு , முனகிக்கிட்டு இருப்பியா?//

என்ன இப்படி சொல்லிட்டீங்க??? ரமேஷ் தனி ஆள் இல்ல..

ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்..
ஒரு எறும்பால ஆயிரம் யானைகளைக் கூட கடிக்க முடியும்.. ஆனா, ஆயிரம் யானைகள் சேர்ந்தாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!

என்னது நானு யாரா? சொன்னது…

//யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?//

//தெரியாதுன்னு சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லாதிங்க. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட வந்து மாட்டிக்கிட்டனே(ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?)//

போலி டாக்டரு இல்ல! ஜாலி டாக்டரு! ஒருத்தரு அடிப்பட்டா, ஒரு பேஷண்ட் எனக்கு கிடைக்கும் இல்ல! அதனால நான் ஜாலி டாக்டரு!

அடிப்படறதுக்கு பயம்னா பேசாம எதிர் கட்சி ஆளுங்க கிட்ட சரண்டர் ஆக வேண்டியது தானே?

GSV சொன்னது…

சூப்பர் புனைவு !!! டைட்டில்
"இரவில் டார்ச் வைத்து சூரியனை தேடுபவர்கள்"
பரதவுடனேயே சிரிப்பு தங்க முடியல... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது மக்கா !!!
இன்னைக்கு இரவு தூக்கமே வராம விடிய விடிய யோசிச்சு "comment" போடபோற ஆளு யாருன்னு தெரிஞ்சு போச்சு !!!
இன்னைக்கு தளபதிக்கு நிம்மதியா தூக்கம் வரும் ன்னு நினைக்கிறேன்

GSV சொன்னது…

கறார் சோடா வாங்கிகொடுக்க "TATSS" தலைவர் மயக்கம் தெளிகிறது....... ஓகே... ஸ்டார்ட் மியூசிக்

என்னது நானு யாரா? சொன்னது…

@@அனு:

//ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்..
ஒரு எறும்பால ஆயிரம் யானைகளைக் கூட கடிக்க முடியும்.. ஆனா, ஆயிரம் யானைகள் சேர்ந்தாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!//

நீங்க நிஜமாலுமே மொக்கை ராணி தானுங்கோ! உங்களுக்கு அந்த பட்டம் சும்மா கொடுக்கலன்னு இப்போ புரியுதுங்கோ!

நீங்க VKS தலைவியா இருக்கிறதுக்கு எல்லா தகுதியும் இருக்கிறவங்கன்னு நல்லா புரிஞ்சிப்போச்சுங்கோ!

வெங்கட் சொன்னது…

@ ரமேஷு.,

ஓஹோ..!! அந்த அளவுக்கு ஆகிடிச்சா..?!!

" சிங்கத்தோட குகைக்குள்ள வந்து
சிறுநரி பிலிம் காட்டுதா..?!! "

வேண்டாம் ரமேஷு..,

" படிச்சா பைபிள்.,
புடிச்சா ரைபிள்.. - இது தான் VAS.. "

So.., Be Careful..!!

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// போலீஸ் ஸ்டேஷன்ல award திருடுது. //
ரமேஷூ., போலீஸ்கிட்டயே Award-ஐ
ஆட்டைய போட்டதே..

" இவரு சிரிப்பு போலீஸ் இல்ல..,
லூஸ் போலீஸ்னு.. "
நம்ம மக்களுக்கு எடுத்து சொல்ல தான்...

குடுத்த Award-ஐ ஒழுங்கா., பத்திரமா
வெச்சுக்க தெரியலை..
பேச்சை பாரு.,
லொள்ள பாரு.,
எகத்தாளத்தை பாரு..!!

வெங்கட் சொன்னது…

@ அனு.,

// என்ன இப்படி சொல்லிட்டீங்க???
ரமேஷ் தனி ஆள் இல்ல.. //

தலைவிங்கறதை Confirm பண்றீங்க..

ம்ம்.. இப்படித்தான் தொண்டர்களை
உசுப்பேத்தி., உசுப்பேத்தி டயலாக்
விடணும்.. அப்பதான் கும்மறதை
எல்லாம் அவங்க தாங்கிட்டு.,
வலிக்காத மாதிரியே நடிப்பாங்க..

// ஒரு எறும்பால ஆயிரம் யானைகளைக்
கூட கடிக்க முடியும்.. ஆனா, ஆயிரம் யானைகள்
சேர்ந்தாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது!!! //

@ ரமேஷ்..,

என்னமோ உங்க தலைவி உங்களை
புகழ்ந்திருக்காங்கன்னு இந்த Comment-ஐ
பெருமையா Publish பண்ணி இருக்கீங்களே..

நல்லா பாருங்க..
யானை யாரு..? எறும்பு யாருன்னு..?

இப்ப புரியுதா..?
எங்ககிட்ட வம்பு பண்ணினா
நசுக்கிடுவோம்..!! ஜாக்ரதை..!!

வெங்கட் சொன்னது…

@ என்னது நானு யாரா.,

// @ அனு.,
நீங்க நிஜமாலுமே மொக்கை ராணி தானுங்கோ! //

சிரிப்பு சிரிப்பா வருது..
ஹா., ஹா., ஹா..

Shalini சொன்னது…

hello police!
////அருண் பிரசாத் கூறியது...

அய்யோ... அய்யோ. ஒரே பதிவுல 3 பேர் மூக்கை உடைச்சிட்டீங்களே! இதுக்கு மேல அவங்க வர மாட்டாங்களே.... இனி யாரை கலாய்க்க முடியும்...

அதுல யும் me the first சூப்பரு//

ஹிஹி இனிமே me the first கமென்ட் வரும்?
//

சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டிங்க!

Shalini சொன்னது…

VKS ஆளுகளா, சொந்தமா சிந்திச்சு கமெண்ட் போடத்தான் முடியலன்னா, பதிவு கூட உல்டா தானா?

உங்க நல்லதுக்கு சொல்றேன் போலிஸ், யாருக்கும் தெரியாம கொஞ்ச நாள் எங்க பாஸ்ட்ட ட்ரைனிங் எடுத்துக்கோங்க இல்ல எப்படா பாஸ் பதிவு போடுவார் அத உல்டா பண்ணி எப்டிடா நாம பதிவு போட்றதுன்னு யோசிச்சே லாக்கப்ல இருக்க திருடன கூட தொறந்து விட்டுடுவீங்க பீ கேர்ஃபுல்

Shalini சொன்னது…

//இப்ப புரியுதா..?
எங்ககிட்ட வம்பு பண்ணினா
நசுக்கிடுவோம்..!! ஜாக்ரதை..!!
//

பாஸ், பாவம் போலீஸ் போன் பண்ணி அழறார்
இப்டி ஆளாளுக்கு சொன்ன நான் என்ன பண்ணுவேன்னு ஒரே அழுகை
போய்ட்டு போறார் விட்ருங்க பொழச்சு போகட்டும்

மங்குனி அமைசர் சொன்னது…

எதிர் முனை: என் பேரு குடிமை மாண்டியன்.////

நம்ம ஆளா இருப்பான் போல இருக்கே ?

மங்குனி அமைசர் சொன்னது…

TATSS தலைவர்: இருக்குறது ரெண்டு பேரு.நீங்க சேர்ந்ததே பெரிய விஷயம். உங்களுக்கு என்ன பதவி வேணுமோ அதை எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி ஏதாச்சும் இருந்தா எனக்கு கொடுங்க.////

ஏதாவது துட்டு தருவாங்களா ? நானும் அந்த சங்கல்த்துல சேந்துடுறேன்

மங்குனி அமைசர் சொன்னது…

டிஸ்கி: இது யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு சொன்னா நம்புவீங்க????? ////


பனங்காட்டு நரி மேல சத்தியமா நம்பிட்டேன் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

என்ன இப்படி சொல்லிட்டீங்க??? ரமேஷ் தனி ஆள் இல்ல..

ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்..
ஒரு எறும்பால ஆயிரம் யானைகளைக் கூட கடிக்க முடியும்.. ஆனா, ஆயிரம் யானைகள் சேர்ந்தாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!//

கேட்டுகோங்க டாக்டர். இது சூப்பரு...


// என்னது நானு யாரா? கூறியது...

போலி டாக்டரு இல்ல! ஜாலி டாக்டரு! ஒருத்தரு அடிப்பட்டா, ஒரு பேஷண்ட் எனக்கு கிடைக்கும் இல்ல! அதனால நான் ஜாலி டாக்டரு!

அடிப்படறதுக்கு பயம்னா பேசாம எதிர் கட்சி ஆளுங்க கிட்ட சரண்டர் ஆக வேண்டியது தானே?//

பயமா எனக்கா? ஹிஹி நோயாளிகளே வராம கஷ்டப்படுரீங்களே, எங்க கட்சி சார்பா உங்களுக்கு ஒரு offer கொடுக்கலாம்னு நினச்சா?


@ GSV நன்றி..


// GSV கூறியது...

கறார் சோடா வாங்கிகொடுக்க "TATSS" தலைவர் மயக்கம் தெளிகிறது....... ஓகே... ஸ்டார்ட் மியூசிக்//

ரைட்டு அடுத்த பதிவுக்கு ஐடியா ரெடி..


//என்னது நானு யாரா? கூறியது...

நீங்க நிஜமாலுமே மொக்கை ராணி தானுங்கோ! உங்களுக்கு அந்த பட்டம் சும்மா கொடுக்கலன்னு இப்போ புரியுதுங்கோ!

நீங்க VKS தலைவியா இருக்கிறதுக்கு எல்லா தகுதியும் இருக்கிறவங்கன்னு நல்லா புரிஞ்சிப்போச்சுங்கோ!//

தல. எதிர் கட்ச்சிகரங்களுக்கு புரியிற மாதிரிதான் சொல்ல முடியும். எங்க லெவலுக்கு நாங்க சொல்லி எதிர் கட்சி காரங்களுக்கு அது புரியாம ஹி ஹி ன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தா என்ன பண்றது. அதான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் கூறியது...

@ ரமேஷு.,

" படிச்சா பைபிள்.,
புடிச்சா ரைபிள்.. - இது தான் VAS.. "

So.., Be Careful..!!//

உங்களுக்கு உப்புமா பிடிக்கும்னு சொன்னீக. ஓகே ஆனா இந்த ரைபிள்ல உள்ள ரவைய வச்சி உப்புமா கிண்ட முடியாதுன்னு உங்களுக்கு ஏன் தெரியலை பாஸ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் கூறியது...

@ ரமேஷ்.,

குடுத்த Award-ஐ ஒழுங்கா., பத்திரமா
வெச்சுக்க தெரியலை..
பேச்சை பாரு.,
லொள்ள பாரு.,
எகத்தாளத்தை பாரு..!!//

ஆமாங்க. நானும் வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைச்சி உங்க கட்சி காரரை நேர்மையானவர்ந்னு நினைச்சேன்,. இப்படி திருடிட்டு போவாங்கன்னு நினைக்கிலியே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// வெங்கட் கூறியது...

சிரிப்பு சிரிப்பா வருது..
ஹா., ஹா., ஹா..//

இது உங்களை பத்தின பதிவு அப்டின்கிரதிநாளா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Shalini கூறியது...

சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டிங்க!//

வாங்க ஷாலினி. எங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். இதை எங்க கத்துக்கிட்டீங்க. தமிழ் சினிமா heroin எனக்கு டமில்ல தெர்ஞ்ச வார்தி வன்க்கம் மட்டும்தான் அப்டின்னு சொல்றமாதிரி "Me the first" மட்டும்தான தெரியும். இப்ப புதுசா கமென்ட் போட ஆரமிச்சிருக்கீங்க. இது யார் சொல்லி கொடுத்தது. உங்க தலைவரா? வாழ்த்துக்கள். நாங்களும் எவ்ளோ நாளைக்குதான் "Me the first" கமெண்டுக்கு reply பண்றது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Shalini கூறியது...

VKS ஆளுகளா, சொந்தமா சிந்திச்சு கமெண்ட் போடத்தான் முடியலன்னா, பதிவு கூட உல்டா தானா?

உங்க நல்லதுக்கு சொல்றேன் போலிஸ், யாருக்கும் தெரியாம கொஞ்ச நாள் எங்க பாஸ்ட்ட ட்ரைனிங் எடுத்துக்கோங்க இல்ல எப்படா பாஸ் பதிவு போடுவார் அத உல்டா பண்ணி எப்டிடா நாம பதிவு போட்றதுன்னு யோசிச்சே லாக்கப்ல இருக்க திருடன கூட தொறந்து விட்டுடுவீங்க பீ கேர்ஃபுல்//

என்னது இதே மாதிரி உங்க பாஸ் பதிவு போட்டிருகாரா. அவரு one by one கவிதை மாதிரி எழுதுவாரு. நாங்க ஒரே லைன்ல எழுதுவோம். ரெண்டும் வேற வேறன்னு உங்க பாஸ்-க்கும் தெரியுமே!! வேணும்னா Java போஸ்ட் போய் பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Shalini கூறியது...

பாஸ், பாவம் போலீஸ் போன் பண்ணி அழறார்
இப்டி ஆளாளுக்கு சொன்ன நான் என்ன பண்ணுவேன்னு ஒரே அழுகை
போய்ட்டு போறார் விட்ருங்க பொழச்சு போகட்டும்//

கனவு கானுங்கள்ன்னு அப்துல் கலாம் சொன்னது உண்மைதான். அதுக்காக இப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

எதிர் முனை: என் பேரு குடிமை மாண்டியன்.////

நம்ம ஆளா இருப்பான் போல இருக்கே ?//

அதே பயதான் அமைச்சரே!!

// மங்குனி அமைசர் கூறியது...

TATSS தலைவர்: இருக்குறது ரெண்டு பேரு.நீங்க சேர்ந்ததே பெரிய விஷயம். உங்களுக்கு என்ன பதவி வேணுமோ அதை எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி ஏதாச்சும் இருந்தா எனக்கு கொடுங்க.////

ஏதாவது துட்டு தருவாங்களா ? நானும் அந்த சங்கல்த்துல சேந்துடுறேன்//

ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை அமைச்சரே..


//மங்குனி அமைசர் கூறியது...

டிஸ்கி: இது யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு சொன்னா நம்புவீங்க????? ////


பனங்காட்டு நரி மேல சத்தியமா நம்பிட்டேன் ?//

பாவம் நரி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்..,

என்னமோ உங்க தலைவி உங்களை
புகழ்ந்திருக்காங்கன்னு இந்த Comment-ஐ
பெருமையா Publish பண்ணி இருக்கீங்களே..

நல்லா பாருங்க..
யானை யாரு..? எறும்பு யாருன்னு..?

இப்ப புரியுதா..?
எங்ககிட்ட வம்பு பண்ணினா
நசுக்கிடுவோம்..!! ஜாக்ரதை..!!//

ஹஹா எறும்பை சாதாரணமா நினைக்காதீங்க. அது நினைச்சா யானை காதுலையே புகுந்து ஆட்டம் காட்டிடும். சுறுசுறுப்பின் அடையாளம் எறும்பு. உழைக்கும் வர்க்கம் எறும்பு. வரிசையாக போவதில் நேர்மை எறும்பு. சோடா ப்ளீஸ்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//இடம்: TATSS(தானே அடிவாங்கி தனியாக சமாளிப்போர் சங்கம்)//


ஆரம்பமே பொய்யா..... TATSS - தம்பட்டம் அடிப்போறை தட்டி சாய்க்கும் சங்கம்.

(இருடி செல்லம் வரேன்...)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ், அருண், அனு
ஹா...ஹா...ஹா... சூப்பரு ரமேஷ்... பங்கட் பத்தி சொல்லும்போது அந்த ஐந்து காமடி பீஸ் பத்தி சொல்லாம விட்டியே..அதுலயும் அந்த கமேஷ், தருண், வினு மூனுபேரும்..ஹி ஹி ஹி.. யாராவது ஒருத்தர் கமெண்ட் எழுதறேன் சொல்லி அடி வாங்க ரெடி ஆவங்க. மத்த இரண்டு பேரும்...(அவங்களூக்கு அடி அதிகம் விழாம இருக்க) ரிப்பிட்டு, சூப்பரு, கலக்கல் இப்படி சொல்லிட்டு சைடு வாங்கிடுவாங்க.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ், அருண், அனு
ஹா...ஹா...ஹா... சூப்பரு ரமேஷ்... பங்கட் பத்தி சொல்லும்போது அந்த ஐந்து காமடி பீஸ் பத்தி சொல்லாம விட்டியே..அதுலயும் அந்த கமேஷ், தருண், வினு மூனுபேரும்..ஹி ஹி ஹி.. யாராவது ஒருத்தர் கமெண்ட் எழுதறேன் சொல்லி அடி வாங்க ரெடி ஆவங்க. மத்த இரண்டு பேரும்...(அவங்களூக்கு அடி அதிகம் விழாம இருக்க) ரிப்பிட்டு, சூப்பரு, கலக்கல் இப்படி சொல்லிட்டு சைடு வாங்கிடுவாங்க.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

இடம் பங்கட் வீடு

எதிர்கட்சி கமேஷ், தருண், வினு வருகிறார்கள்)

கமேஷ் : தல ஹும் உள்ள போங்க..

வினு : ஆசை....தோச… எப்பவும் நானேதான் முன்னாடி அடிவங்கனுமா? நான் தலைவி. தருண் நீங்க போங்க.

தருண் : (தலைவி சொல்லி ஏத்தி விட்டது ரொம்ப தப்பா போச்சி… ஸ்ஸ்ஸ்ஸ்பபபப……)

தருண் : பங்கட் VKS வந்து இருக்கோம் கதவை திறங்க பிலிஸ்….

பங்கட் : ஸ்ஸ்ஸ்பபபப… மறுபடி வந்துடிங்களா.. எத்தனைவாட்டி உங்களை அடிக்கிறது எனக்கு கடுப்பா இருக்கு… அதனால கதவை திறக்க மாட்டேன்.

கமேஷ் : திறந்து ஒரு இரண்டு அடி அடிங்க பாஸ். அடிவாங்கினாதான் எங்க தலைவி சினிமா டிக்கட், பிஸ்கோத்து, குச்சி மிட்டாய் எல்லாம் வாங்கி தறுவாங்க ப்லிஸ் ப்லிஸ்.

பங்கட் : சரி உள்ள வந்து தொலைங்க…

(உள்ளே போய் எப்பவும் போல் நன்றாக அடி வங்குகிறார்கள்.)

வினு : டீம்… ரூல்ஸ் ஞபகம் இருக்கு இல்லை? மூஞ்சில இருக்கா ரத்தம் நல்லா தொடைங்க. வெளியபோய் அடி வாங்கத மாதிரியே பில்டாப் கொடுக்கனும்.

கமேஷ் : அட இது என்ன நமக்கு புதுசா. நான் எதுக்கும் அவங்க அடி வாங்கின மாதிரி ஒரு புனைவு போட்டுடறேன்.

வினு : சபாஷ் கமேஷ். இப்படிதான் நம்ப கெத்த காமிக்கனூம். அங்க வந்து நாங்க சபாஷ், கலக்கிட்ட, கெத்த காட்டிட்ட இப்படி எதாவது சொல்லுவோம். ஆன அதுக்கு நீங்கதான் குச்சி மிட்டாய் & குருவி ரொட்டி வாங்கி தறனூம்…

கமேஷ் : டீல்.. ஒ.கே.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண் பிரசாத்
//அய்யோ... அய்யோ. ஒரே பதிவுல 3 பேர் மூக்கை உடைச்சிட்டீங்களே! இதுக்கு மேல அவங்க வர மாட்டாங்களே.... இனி யாரை கலாய்க்க முடியும்..//

அட போங்க பாஸ் எங்களுக்கு மூக்குதான் போச்சி... VKSல எல்லாம் மூஞ்சியே இல்லாம திறியரிங்க....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//இந்த எதிர் கட்சிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க.//

இங்கதான் ரமேஷ் காமடி தூக்கலா எழுதி இருக்க...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//தர்ம அடி வாங்கி ஒரு அப்புராணி புதிய பதிவர் கூட எதிர் பதிவு போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாரு//

உண்மைலே அப்புராணிதான் போல. தெரியாம ஒரு பதிவு போட்டு ஊர் சனங்க மிரட்டினதுல காணம போய்டுத்து. இதுக்கும் நான் ஒன்னுமே சொல்லள. தட்டி கொடுத்து நல்லா எழுது தம்பி சொல்லிட்டு வந்தேன்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@இராமசாமி கண்ணண்
//யார போட்டு பாத்துருக்கன்னு தெரியல.. நீயும் புனைவு எழுத ஆரம்பிச்சுருக்கறது சந்தோசம்டா மக்கா....//

என்னா சார் தற்கொலை முயற்சி பண்ணா தடுக்காம பாராட்டறிங்க.

ப.செல்வக்குமார் சொன்னது…

கொஞ்ச நாள் முன்னாடி அழு மூஞ்சி போலீஸ்கார் அப்படிங்கிற ஒருத்தர் எங்கிட்ட ஐடியா கேட்டார் . அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்கள் இங்கே .

அழுமூஞ்சி போலீஸ் : என்னை எந்தப் பொண்ணுமே கண்டுக்க மாட்டீன்குதுங்க , சொல்லப்போனா எல்லாப் பொன்னுகளுமே அப்பா அப்படின்னு கூப்பிடுது ..?!
நான் : தாத்தா அப்படின்னு சொல்லாம விட்டதுக்கு சந்தோசப் படுங்க ..
அழுமூஞ்சி போலீஸ் : அட நீங்க வேற எங்க , நான் யூத்தா மாறுறதுக்கு ஏதாவது ஐடியா கிடைக்குமா ..?
நான் : ஐடியா எல்லாம் நாங்க தரமாட்டோம் , ஒன் அண்ட் ஒன்லி எங்க பாஸ் மட்டும்தான் தருவாரு , அவர்தான் TATSS பங்கட்..
சிரிப்பு போலீஸ் : எனக்கும் அது தெரியும் , ஆனா நான் எதிர்க்கட்சில இருக்குரேனே (PKTSS).. இவுங்க நல்ல ஐடியா கொடுப்பேன் அப்படின்னு சொன்னதால தான் இவுங்க கூட சேர்ந்தேன் , ஆனா இவுங்க அவுற கலாய்க்கிறோம் அப்படின்னு சொல்லிட்டு நெட் ல இருந்து ஏதாவது ப்ரோக்ராம் காப்பி பண்ணி இதுல தப்பு இருக்கு கண்டுபிடிங்க அப்படின்னு சொல்லுதுங்க .. பேசாம உங்க கூட இருந்திருக்கலாம்னு தோணுது ..
நான் : அது என்னங்க PKTSS....?
அழுமூஞ்சி போலீஸ் : முதல்ல அவுங்க எங்கிட்ட பங்கட்டை கலாய்த்து துன்புறுத்தும் சூரர்களின் சங்கம் அப்படின்னு சொன்னாங்க .. ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிக்கிட்டேன் பங்கட் டீமால் கலாய்க்கப்பட்டு தலைதெறிக்க செல்லும் சங்கம் அப்படின்னு ..
நான் : சரி விடுங்க , மூளை இருந்தா முதல்லையே யோசிச்சிருக்கணும் ,, ஆனா நீங்க அப்படி செய்ய வாய்ப்பு இல்ல , சரி இப்ப உங்களுக்கு என்னதான் வேணும் ,
அழுமூஞ்சி போலீஸ் : உங்க தலைவர் கிட்ட சொல்லி எனக்கு ஒரு சீட் வாங்கி கொடுத்தா போதும் ..
நான் : அதுக்கு மூளை வேணுமே ..?
அழுமூஞ்சி போலீஸ் : அது எங்க விக்குது ..?
நான் : ((அட கொடுமையே , இந்தாளு கிட்ட மாட்டிடோமே )) இது கூட தெரியாமையா
"இரவில் டார்ச் வைத்து சூரியனை தேடுபவர்கள்"
அப்படின்னு தலைப்பு வச்சீங்க ..
அழுமூஞ்சி போலீஸ் : ஆமா , சூரியன்தான் நைட் ஆனா அரபிக்கடலுக்குள்ள போய்டுமே ,, அதான் அப்படி போட்டேன் ..
நான் : சுத்தம் .. ஆள விடுங்கட சாமி , எனக்கு இப்பத்தான் தெரியுது ,, எங்க தலைவர் ஏன் உங்களை எங்க கட்சில சேர்துக்கலைன்னு ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்..
ஒரு எறும்பால ஆயிரம் யானைகளைக் கூட கடிக்க முடியும்.. ஆனா, ஆயிரம் யானைகள் சேர்ந்தாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!

///

இந்த மாதிரி நாங்களும் நிறைய சொல்லுவோம் ..
ஆனா இப்ப எதுக்கு இங்க இத சொன்னீங்க..?
ஓ , உங்களை பொறுத்த வரைக்கும் இப்படி ஒண்ணு புரியாத மாதிரி சொல்லுறதுதானே கலாய்க்கிறது .. சரி விடுங்க ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

//அய்யோ... அய்யோ. ஒரே பதிவுல 3 பேர் மூக்கை உடைச்சிட்டீங்களே! இதுக்கு மேல அவங்க வர மாட்டாங்களே.... இனி யாரை கலாய்க்க முடியும்...///

அது சரி , அப்படியே மைந்தின் பண்ணுங்க . நீங்க எங்க ஆளு அப்படிங்கிறது மட்டும் அவுங்களுக்கு தெரியக்கூடாது .. உங்களை மாதிரி நம்பிக்கையான ஒரு ஆள் அங்க இருக்கறது நல்லதுதான் ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//நாங்க மூணு பேர். எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது. எங்க போனாலும் பயப்படமா அடி வாங்கிட்டு வருவோம்.//

நாங்க அடி வாங்காம அடி வாங்கினோம் அப்படின்னு சொல்லுவோம் ..,
ஆனா நீங்க அடி வாங்கிட்டு வடிவேலு கணக்கா பாத்து பேர அடிச்சோம் அப்படினுள sollureenka ..!!

வெங்கட் சொன்னது…

@ To All VAS Members.,

ரமேஷை கும்மினது போதும்..
நிறுத்திக்குவோம்...

பாவம் அவரும் Single-ஆ
எவ்ளோ நேரம் தான் அடி வாங்குவாரு..?!!

@ To All VKS Members.,

நாங்க ஆட்டத்தை முடிச்சிக்கிட்டு
கிளம்பிட்டோம்..,

சந்துல., மரத்துக்கு பின்னாடி
ஒளிச்சிட்டு இருக்கற VKS-காரங்க
எல்லாம் வெளியே வரலாம்..

வந்து.., வழக்கம் போல
வீர வசனம் பேசுங்க..., அப்படியே
ரமேஷை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க..

@ ரமேஷ்..,

VAS Power என்னான்னு இப்ப
தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..
இனிமேலாவது பாத்து சூதானமா
நடந்துக்கோங்க..

அதுக்காக எங்க கால்ல விழுந்தெல்லாம்
மன்னிப்பு கேட்க வேணாம்..

நாங்க Already மன்னிச்சு....

அருண் பிரசாத் சொன்னது…

@ VKS
பாருங்க இங்க கூட VAS கும்மளா வந்துதான் சமாளிக்க முயற்சி பண்ணுறாங்க....

ஒரு அதிசயம் நம்ம பங்கடோட காத்தாடி “ME THE FIRST" கமெண்ட் போடல... ரமெஷ் மிரட்டுனதுல பயந்துடுச்சு போல...

@ வெங்கட்
//" சிங்கத்தோட குகைக்குள்ள வந்து
சிறுநரி பிலிம் காட்டுதா..?!! "//

போங்க பாஸ்... எப்ப பாரு இதே டயலாக் சொல்லிட்டு காமெடி பண்ணிறீங்க புதுசா எதாவது யோசிங்க...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@செல்வா
//ப.செல்வக்குமார் சொன்னது…
கொஞ்ச நாள் முன்னாடி அழு மூஞ்சி போலீஸ்கார் அப்படிங்கிற ஒருத்தர் எங்கிட்ட ஐடியா கேட்டார் . அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்கள் இங்கே//

எலேய்!! நீ எப்போ வந்த?? நான் போலீஸ் மயக்கம் தெளியாட்டும் வந்து அடிக்கலாம் அந்த பக்கம் போனா நீ இங்க கும்மி இருக்க... ஒரு பச்சபுள்ளனு பரிதாபம் வேண்டாம்... ராஸ்கள். ரமேசு எந்திரிடா செல்லம்... நாம அடுத்த ரவுண்டு விள்ளாடலாம்.....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ Chitra
//"கும்மி" அடியா? :-)//

ஆமாங்க இன்னைக்கு ரமேஷ்க்கு கும்மில அடி....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஒரே குழப்பமா இருக்கு? யார் யாரு கட்சில இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கொடுங்கப்பா!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@என்னது நானு யாரா?
//உங்க புனைவு, இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைக்கலாம். ஐயோ! ஐயோ! சிரிச்சி முடியல... என்னமா ரவுஸ் பண்ணுறப்பா//

பங்காளி இதுக்கே இப்படி சிரிக்கிறிங்க... VKS குரூப் போட்டே அனுப்பி வைக்கிறேன்... நாலூ நாள் ரூம் போட்டு சிரிப்பிங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரி சரி யாரு கட்சில இருந்தாலும் எங்க டாக்குடர்ரு விஜய்க்குத் தான் தலைவர் பதவி கொடுக்கோனும், ஏன்னா, அவ்ருதான் இப்ப கொஞ்ச காலமா அடிவாங்குரதுல்ல மன்னனா இருக்காரு!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அனு
//இப்படி ஒரு பதிவ போட்டு நம்ம கட்சியோட கெத்-தை காமிச்சுட்டீங்க.. இதுக்கு அப்புறம் TATSS மக்களுக்கு இனிமேல் பேச்சே வராது... (fullஆ ஊமைக்காயம்ல!!)//

அடா அடா அடா... VAS கிட்ட அடி வாங்கிட்டு ICUல படுத்துகிட்டு ஒரு ஆள் பதிவு எழுதராறு... பக்கத்து பெட்ல இருந்து தலைவி பாராட்டறாங்க...

கெத்த காமிக்கிறேன் சொல்லி என்மா இப்படி பொத்து பொத்துனு விழறிங்க?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வெங்கட் சொன்னது…
//@ To All VAS Members.,

ரமேஷை கும்மினது போதும்..
நிறுத்திக்குவோம்..//

தலை நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.... எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?? ப்லிஸ் ப்லிஸ் கொஞ்ச நேரம் கும்மிட்டு வந்துடரேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்
//இடம்: TATSS(தானே அடிவாங்கி தனியாக சமாளிப்போர் சங்கம்)//

ஆரம்பமே பொய்யா..... TATSS - தம்பட்டம் அடிப்போறை தட்டி சாய்க்கும் சங்கம்.

(இருடி செல்லம் வரேன்...)//

எப்படி. நீ வெளியூர்க்காரண்ட போய் தர்ம அடி வாங்கின மாதிரியா?


//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த எதிர் கட்சிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க.//

இங்கதான் ரமேஷ் காமடி தூக்கலா எழுதி இருக்க...//

போய் தெளிஞ்சிட்டு வா. எது காமெடி எது சீரியஸ்ன்னு தெரியாமலையே பேசிக்கிட்டு இருக்காத..


//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//தர்ம அடி வாங்கி ஒரு அப்புராணி புதிய பதிவர் கூட எதிர் பதிவு போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாரு//

உண்மைலே அப்புராணிதான் போல. தெரியாம ஒரு பதிவு போட்டு ஊர் சனங்க மிரட்டினதுல காணம போய்டுத்து. இதுக்கும் நான் ஒன்னுமே சொல்லள. தட்டி கொடுத்து நல்லா எழுது தம்பி சொல்லிட்டு வந்தேன்.//

நீ அங்கயும் போய் கால்லதான விழுந்த. எதிர் பதிவு போட்டா மிரட்டணும். அத விட்டுட்டு சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள்ன்னு சொல்லிட்டா வருவ..


//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@இராமசாமி கண்ணண்
//யார போட்டு பாத்துருக்கன்னு தெரியல.. நீயும் புனைவு எழுத ஆரம்பிச்சுருக்கறது சந்தோசம்டா மக்கா....//

என்னா சார் தற்கொலை முயற்சி பண்ணா தடுக்காம பாராட்டறிங்க.//

அட நீ நம்ம ஆளுய்யா. VAS பத்தி எழுதுறதுக்கு தற்கொலை பண்ணிக்கலாம்னு சொல்றியே. நீ spyன்னு தெரிஞ்சிடப் போகுது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...கொஞ்ச நாள் முன்னாடி அழு மூஞ்சி போலீஸ்கார் அப்படிங்கிற ஒருத்தர் எங்கிட்ட ஐடியா கேட்டார் . அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்கள் இங்கே .

அழுமூஞ்சி போலீஸ் : என்னை எந்தப் பொண்ணுமே கண்டுக்க மாட்டீன்குதுங்க , சொல்லப்போனா எல்லாப் பொன்னுகளுமே அப்பா அப்படின்னு கூப்பிடுது ..?!//

அப்பாட இது நாங்க இல்லை. அழுமூஞ்சி போலீஸ் நா உனக்கு தூக்கத்துல வந்த கெட்ட
கனவா இருக்கும்..

ப.செல்வக்குமார் சொன்னது…

//அப்பாட இது நாங்க இல்லை. அழுமூஞ்சி போலீஸ் நா உனக்கு தூக்கத்துல வந்த கெட்ட
கனவா இருக்கும்..//

அது உண்மைனா பங்கட் எங்க தலைவர் இல்ல .. ஹி ஹி ஹி ..!! இப்ப என்னை பண்ணுவீங்க இப்ப என்னை பண்ணுவீங்க .. இப்ப கூட நான் உங்களை கும்ம முடியும் எங்க தலைவர் போதும் நிறுத்திக்கலாம் அப்படின்னு சொன்னதால இத்தோட விடுறேன் ..!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//எப்படி. நீ வெளியூர்க்காரண்ட போய் தர்ம அடி வாங்கின மாதிரியா? //

நாங்க எல்லாம் யுத்த பூமில சுத்தரவங்க ரமேசு.... VKS மாதிரி விட்டு உள்ள ஒளிஞ்சிட்டு கத்தறவங்க இல்லை...

@வெங்கட்

தல நீங்க சொன்னது சரிதான். VAS கிளம்பளாம் நீங்க சொன்னதும் ரமேஷ் வெளிய வந்து சவுண்டு விடுறத பாருங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்..
ஒரு எறும்பால ஆயிரம் யானைகளைக் கூட கடிக்க முடியும்.. ஆனா, ஆயிரம் யானைகள் சேர்ந்தாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!
///
இந்த மாதிரி நாங்களும் நிறைய சொல்லுவோம் ..
ஆனா இப்ப எதுக்கு இங்க இத சொன்னீங்க..?
ஓ , உங்களை பொறுத்த வரைக்கும் இப்படி ஒண்ணு புரியாத மாதிரி சொல்லுறதுதானே கலாய்க்கிறது .. சரி விடுங்க ..!//

உன் மொக்கையை விட இது ரொம்ப சுமார்தான்..


// ப.செல்வக்குமார் கூறியது...

//நாங்க மூணு பேர். எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது. எங்க போனாலும் பயப்படமா அடி வாங்கிட்டு வருவோம்.//

நாங்க அடி வாங்காம அடி வாங்கினோம் அப்படின்னு சொல்லுவோம் ..,
ஆனா நீங்க அடி வாங்கிட்டு வடிவேலு கணக்கா பாத்து பேர அடிச்சோம் அப்படினுள sollureenka ..!!//

நீயும் ரொம்ப நல்லவன். அப்டின்னா அடி வாங்குறீங்கன்னு ஒத்துக்கிற!!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//போய் தெளிஞ்சிட்டு வா. எது காமெடி எது சீரியஸ்ன்னு தெரியாமலையே பேசிக்கிட்டு இருக்காத..//

எப்படி?? நீ VASல அடி வாங்கிட்டு நாங்க அடி வாங்கினோம் எழுதற மாதிரியா??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நீ அங்கயும் போய் கால்லதான விழுந்த. எதிர் பதிவு போட்டா மிரட்டணும். அத விட்டுட்டு சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள்ன்னு சொல்லிட்டா வருவ..//

பச்சபுள்ள கிட்ட வீரத்த காட்ட நான் என்ன VKSஆ?? அதுவே பாவம் சிரிக்க சொன்னா சீரியஸா எடுத்துகிட்டு பதிவ போட்டு முழிக்கிது. சைலண்டா கேள்வி கேக்கறவங்க கிட்டயே சரிங அபிஸர், சரிங்க ஆபிஸர் பதில் சொல்லூது. அத்த போய் மிரட்ட சொல்றபாரு.. நீ உண்மைலே வீரன் ரமேசு... ஹி ஹி ஹி...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//அட நீ நம்ம ஆளுய்யா. VAS பத்தி எழுதுறதுக்கு தற்கொலை பண்ணிக்கலாம்னு சொல்றியே... //

ஆமாம். நீ VAS பத்தி எழுதினா இப்படிதான் தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்போம்... அதுக்கு பெஸ்ட்.. நீயே தற்கொலை ப்ண்ணிகிறது....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//தல. எதிர் கட்ச்சிகரங்களுக்கு புரியிற மாதிரிதான் சொல்ல முடியும். எங்க லெவலுக்கு நாங்க சொல்லி எதிர் கட்சி காரங்களுக்கு அது புரியாம ஹி ஹி ன்னு சிரிச்சுக்கிட்டு இருந்தா என்ன பண்றது. அதான்..//

உங்க லெவலுக்கு நீ சொன்னா அது உனக்கே புரியாதே ராசா...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//உங்களுக்கு உப்புமா பிடிக்கும்னு சொன்னீக. ஓகே ஆனா இந்த ரைபிள்ல உள்ள ரவைய வச்சி உப்புமா கிண்ட முடியாதுன்னு உங்களுக்கு ஏன் தெரியலை பாஸ்?//

என்னாது ரவையா??? ரைட்டு....உன் லெவலுக்கு யேச்சிட்ட போல. ரமேசு... ரவை எல்லாம் குருவி சுடறவன் வச்சி இருக்க துப்பாக்கில போடறதுபா... நாங்க சொன்னது ரைப்பிள். அதுல போடறதுக்கு பேரு தோட்டா.... எங்க சொல்லு... தோ..ட்...டா...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ் & VKS
ரமேசு.. நீ வேற தனியா அடி வாங்கர. தனியா இருக்கவங்கள் அடிக்ககூடாடு வெங்கட் மெமோ கொடுப்பாரு. அதனால நான் கிளம்பறேன். VASல எல்லாம் வெளிய போய்டோம்... இனி உங்க ராஜாங்கம்தான். வந்து தைரியமா சவுண்ட் விடுங்க....

ஜெயந்தி சொன்னது…

ம்ம் நடக்கட்டும்.

சீமான்கனி சொன்னது…

தக்காளி(ய) நசுக்கி சூசு போட்டு குடிச்சுடங்களா....இம்பூட்டுநாளா சொல்லவே இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சீமான்கனி கூறியது...

தக்காளி(ய) நசுக்கி சூசு போட்டு குடிச்சுடங்களா....இம்பூட்டுநாளா சொல்லவே இல்ல...//


யாருப்பா அது சம்மந்தம் சம்மந்தம்இல்லாம கமென்ட் போடுறது. VAS பக்கம் போயிட்டு வந்தீங்களா?


/ஜெயந்தி கூறியது...

ம்ம் நடக்கட்டும்.//

ம்ம் நடத்திடுவோம்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

இங்க ஏதோ லஞ்ச ஊழல் வழக்கு நடக்குதுபோல.. அப்புறமா வர்றேன்..

முத்து சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஒரே குழப்பமா இருக்கு? யார் யாரு கட்சில இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கொடுங்கப்பா!///

ஆமாம்பா எனக்கும் புரியல

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

செமையா கலக்குறீங்க..முதலாளி

பெயரில்லா சொன்னது…

அடி பலமோ???
சரி விடுங்க.. சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு..

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

நான்தான் கடைசில வந்திருக்கேன் போலிருக்கு! போலிசு, follower ஆகிட்டேன், இனிமே ஒழுங்கா அப்பப்போ கரெக்டா வந்துடறேன்!

அஹமது இர்ஷாத் சொன்னது…

http://bluehillstree.blogspot.com/2010/09/blog-post_20.html//

See the Link..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது