திங்கள், செப்டம்பர் 27

டெரரின் வில்லத்தனம்

இப்ப குவார்டேர்லி லீவ்(குவாட்டர் இல்லை). அக்கா மற்றும் அக்கா குழந்தைங்க லீவுக்கு சென்னை வந்திருக்காங்க. ரெண்டு நாளா அவங்களை கூப்ட்டுக்கிட்டு சென்னை சுத்திக் காட்டிக்கொண்டு இருக்கேன்.

இன்னிக்கு காலைல சிறுவர் பூங்கா போகலாம்னு பிளான். வீட்டு பக்கத்துல உள்ள ஆட்டோகாரன் கிட்ட கேட்டா 200 ரூபாய் வேணும்ன்னு கேட்டான். சரி இது கட்டுபிடி ஆகாது. பஸ்லையே போகலாம். பள்ளிகரணை to வேளச்சேரி 5 ரூபாய் டிக்கெட்(5*5=25). வேளச்சேரி டு சிறுவர் பூங்கா 5 ரூபாய் டிக்கெட்(5*5=25).50 ரூபாய்ல செலவு முடிஞ்சிடும். வாங்க பஸ்ல போகலாம்னு கிளம்பினோம்.

வீட்டில இருந்து பஸ்ஸ்டாப் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். பஸ்ஸ்டாப் வந்ததும் எல்லா பஸ்ஸும் நல்ல கூட்டம். குழந்தைகளால ஏற முடியலை. அப்புறமா ஒரு AC Bus வந்தது. எல்லோரும் ஓடி போய் அதுல ஏறிட்டாங்க. ஒரு டிக்கெட் இருபது ரூபாய். நூறு ரூபாய் காலி.


வேளச்சேரி வந்து சேர்ந்தாச்சு. ஒரு மணி நேரமா பஸ் வரலை. நேரம் ஆகுது ஆட்டோல போயிடலாம்னு அப்பா சொன்னார். சரின்னு ஆட்டோகரன் கிட்ட கேட்டா 150 ரூபாய் சொல்றான். அப்புறன் பேரம் பேசி 120 ரூபாய்க்கு முடிச்சேன்(அதுக்கு குறைஞ்சு யாரும் வரலை). 120 + 100 =220 ரூபாய் காலி. வீட்டுக்கிட்ட ஆட்டோகாரன் 200 ரூபாய்தான் கேட்டான். 


அங்கே ஆட்டோ பிடிச்சிருந்தா இருபது ரூபாய் லாபம். ஒரு கிலோமீட்டர் நடையும் மிச்சம். என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. விஞ்ஞானி அனுப்புற ராக்கட் வேணா மிஸ் ஆகலாம், என் கணக்கு மிஸ் ஆகாதே. ஏன் இப்படி ஆச்சுன்னு உக்கார்ந்துகிட்டு, நின்னுக்கிட்டு, குப்புற படுத்து மல்லாக்க படுத்து யோசிச்சேன். அப்புறமா காரணமும் கண்டு பிடிச்சிட்டேன். 


இன்னிக்கு காலைல எந்திச்சதுமே பல்லு கூட விளக்காம இந்த பதிவை போய் படிச்சேன்(இறைவனிடம் ஒரு வரம்....)

இதுகெல்லாம் இந்த பதிவுதான் காரணம்.


இதுக்கெல்லாம் காரணம் இந்த பதிவுதான். இத படிச்சு எத்தனை பேரு மண்ணாய்ப் போனாகளோ. எலேய் டெரர் இதுக்கெலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்...

....

28 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

me the firstuuuuuu

பெயரில்லா சொன்னது…

nice

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

terror ஒரு பதிவு எழுதினக்கு இப்படியா .............
எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடங்கொன்னியா....எங்கேர்ந்து எங்கே வரை கோர்க்கிறானுங்கப்பா...! இதுக்கே மூச்சு வாங்குதுது!

dheva சொன்னது…

மாப்ஸ திருந்தவே விடமாட்டீங்களா....?

ஏன்டா இந்த கொலை வெறி...!

Kaipulla சொன்னது…

sondha kaasula sooniyam vachikirathu ithuthan na...

பனங்காட்டு நரி சொன்னது…

ஹா ஹா ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நடையும் மிச்சம். என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. விஞ்ஞானி அனுப்புற ராக்கட் வேணா மிஸ் ஆகலாம், என் கணக்கு மிஸ் ஆகாதே

அதானே,உங்களுக்கு கணக்கு மிஸ்ஸே மிஸ் ஆகலையே

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் இருவது ரூவாய்க்கு அவர கொற சொல்றது சரியில்ல ....

என்னது நானு யாரா? சொன்னது…

பதிவு உலகத்தில யார் யாரொ சண்டையெல்லாம் தீருது! உங்களுக்குள்ள மட்டும் ஏன் சண்டை தீர மாட்டெங்குது மாப்பிள?

நாட்டமையை கூப்பிட்டு தான் பஞ்சாயத்து வைக்கணும் போல இருக்கே?

சீக்கிரம் ரெண்டு பேரும் கத்திகளை கீழப் போட்டுட்டு, வீட்டுக்குப் போங்கப்பா! போலிசுக்கும் ரௌடிக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் அப்புறம்!

அனு சொன்னது…

எனக்கும் காலைல இருந்து பார்க்குறவங்க மேல எல்லாம் கோவம் கோவமா வருது.. ஒரே அழுகை அழுகையா வருது.. உலகத்தை நினைச்சா ஒரே வெறுப்பா இருக்கு.. தற்கொலை எண்ணங்கள் அதிகமா ஆகிடுச்சு..

அதுக்கெல்லாம் காரணம் என்னன்னு இப்போ தான் புரிஞ்சது... தகவலுக்கு நன்றி ரமேஷ்..

வெங்கட் சொன்னது…

@ அனு.,

// ஒரே அழுகை அழுகையா வருது..
உலகத்தை நினைச்சா ஒரே வெறுப்பா இருக்கு..
தற்கொலை எண்ணங்கள் அதிகமா ஆகிடுச்சு.. //

எல்லாம் வெட்டி பேச்சு..
செயல்ல ஒண்ணும் காணோம்..!!

GSV சொன்னது…

உஸ்ஸ்ஸ் .....உஸ்ஸ்ஸ் இப்பவே முச்சு முட்டுதே !!!

அருண் பிரசாத் சொன்னது…

ஏற்கனவே டெரர் பதிவை படிச்ச 4 பேர் கீழ்ப்பாக்கத்துல இருக்காங்க (அந்த 4 பேர் VAS ஆளுங்கன்ற உண்மைய நான் சொல்ல மாட்டேன்). நீங்க போயும் போயும் ஒரு 20 ரூபாய்க்கு வருத்தபடுறீங்க, விட்டு தள்ளுங்க

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வெங்கட்
//எல்லாம் வெட்டி பேச்சு..
செயல்ல ஒண்ணும் காணோம்..!//

ஹா..ஹா.. என்னா ஒரு கொலைவெறி தாக்குதல்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இம்சைஅரசன் பாபு..வா வா

==================================
@ பெயரில்லா வருக வருக
=============================
//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

terror ஒரு பதிவு எழுதினக்கு இப்படியா .............
எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க//

என்னது டெரர் எழுதினது பதிவா? சொல்லவே இல்லை..

===============================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அடங்கொன்னியா....எங்கேர்ந்து எங்கே வரை கோர்க்கிறானுங்கப்பா...! இதுக்கே மூச்சு வாங்குதுது!//

டெரர் ப்ளாக் பக்கம் போனா இப்படிதான். கூல்..

=======================================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...

மாப்ஸ திருந்தவே விடமாட்டீங்களா....?

ஏன்டா இந்த கொலை வெறி...!//

டெரர் பயபுள்ள திருந்திடுச்சா. அது act கொடுக்குது பிரதர்..

===============================

//Kaipulla கூறியது...

sondha kaasula sooniyam vachikirathu ithuthan na...//

ஹிஹி

========================

@ பனங்காட்டு நரி நன்றி

=======================

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

நடையும் மிச்சம். என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. விஞ்ஞானி அனுப்புற ராக்கட் வேணா மிஸ் ஆகலாம், என் கணக்கு மிஸ் ஆகாதே

அதானே,உங்களுக்கு கணக்கு மிஸ்ஸே மிஸ் ஆகலையே//

உண்மை எல்லாம் வெளில சொல்லாதீங்க பாஸ்

==================================================

// கே.ஆர்.பி.செந்தில் கூறியது...யோவ் இருவது ரூவாய்க்கு அவர கொற சொல்றது சரியில்ல ..//

இல்லை எல்லாத்துக்கும் இந்த பயதான் காரணம்.

=======================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

சீக்கிரம் ரெண்டு பேரும் கத்திகளை கீழப் போட்டுட்டு, வீட்டுக்குப் போங்கப்பா! போலிசுக்கும் ரௌடிக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் அப்புறம்!//

என்னது சண்டையா. சின்ன பசங்க கூட எல்லாம் சண்டை போடுறதில்லை.

===============================

@ அனுஇனிமேலாவது சாக்கிரதையா இருங்க..

=====================

//வெங்கட் கூறியது...

@ அனு.,

// ஒரே அழுகை அழுகையா வருது..
உலகத்தை நினைச்சா ஒரே வெறுப்பா இருக்கு..
தற்கொலை எண்ணங்கள் அதிகமா ஆகிடுச்சு.. //

எல்லாம் வெட்டி பேச்சு..
செயல்ல ஒண்ணும் காணோம்..!!//

இன்னும் கொஞ்சநாள் VAS ப்ளாக்கர்ஸ் பக்கம் வந்தா அப்படிதான் ஆகும்.

=============================

@ GSVசோடா வேணுமா?

=======================

//அருண் பிரசாத் கூறியது...

ஏற்கனவே டெரர் பதிவை படிச்ச 4 பேர் கீழ்ப்பாக்கத்துல இருக்காங்க (அந்த 4 பேர் VAS ஆளுங்கன்ற உண்மைய நான் சொல்ல மாட்டேன்). நீங்க போயும் போயும் ஒரு 20 ரூபாய்க்கு வருத்தபடுறீங்க, விட்டு தள்ளுங்க//

சரி நீங்க சொல்றீங்க . அதனால விடுறேன்.

===========================

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...@வெங்கட்
//எல்லாம் வெட்டி பேச்சு..
செயல்ல ஒண்ணும் காணோம்..!//

ஹா..ஹா.. என்னா ஒரு கொலைவெறி தாக்குதல்..//

அதான வெங்கட் உங்க ஆளே உங்களை கலாய்க்கிறாரு... ஹிஹி

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை//

முதல்ல ஒரு மிச்செஸ்(Mrs ) புடி அதுக்கப்புறம் miss ஆகுறத பத்தி பேசு .

சௌந்தர் சொன்னது…

இந்த terror அட்டகாசம் தாங்க முடியலை இன்னும் எத்தனை பேர் அவதி பட்டார்களோ

சௌந்தர் சொன்னது…

dheva கூறியது...
மாப்ஸ திருந்தவே விடமாட்டீங்களா....?

ஏன்டா இந்த கொலை வெறி..///

@@@dhveva
உங்களை நாங்க திருந்த சொல்றோமா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி

பெயரில்லா சொன்னது…

ஓபனிங்க விட ஃபினிசிங் தான் டாப்புஉஉஉஉஉஉஉ

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//இதுக்கெல்லாம் காரணம் இந்த பதிவுதான். இத படிச்சு எத்தனை பேரு மண்ணாய்ப் போனாகளோ. எலேய் டெரர் இதுக்கெலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்...//

நான் எழுதர பதிவ நானே படிக்க மாட்டேன் உன்னை எவன் படிக்க சொன்னது?? உள்ள வராத ஆபத்து சொன்னா கேக்கனும்....

drbalas சொன்னது…

'' உக்கார்ந்துகிட்டு, நின்னுக்கிட்டு, குப்புற படுத்து மல்லாக்க படுத்து யோசிச்சேன்.'' நானும் உக்கார்ந்துகிட்டு, நின்னுக்கிட்டு, குப்புற படுத்து மல்லாக்க படுத்து சிரிச்சேன்

ப.செல்வக்குமார் சொன்னது…

//என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. //
கணக்கு போடத்தெரிஞ்சாதானே மிஸ் ஆகுறதுக்கு ..?
உங்களுக்குதான் தெரியாதே ..?!?

ப.செல்வக்குமார் சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...
ஏற்கனவே டெரர் பதிவை படிச்ச 4 பேர் கீழ்ப்பாக்கத்துல இருக்காங்க (அந்த 4 பேர் VAS ஆளுங்கன்ற உண்மைய நான் சொல்ல மாட்டேன்). நீங்க போயும் போயும் ஒரு 20 ரூபாய்க்கு வருத்தபடுறீங்க, விட்டு தள்ளுங்க

//

நாங்க கீழ்பாக்கம் போனது உண்மைதான் .. ஆனா நாங்க போனது எங்களுக்கு வைத்தியம் பாக்குறக்கு இல்ல , அங்க வர்ற மத்தவங்களுக்கு வைத்தியம் பாக்குறக்கு .. அதெல்லாம் அறிவாளியா இருந்தா புரிஞ்சிக்கலாம் ,, ஆனா VKS ஆளுங்க புரிஞ்சிக்கரக்கு முடியாது ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை//

முதல்ல ஒரு மிச்செஸ்(Mrs ) புடி அதுக்கப்புறம் miss ஆகுறத பத்தி பேசு .//

coming soon...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

இந்த terror அட்டகாசம் தாங்க முடியலை இன்னும் எத்தனை பேர் அவதி பட்டார்களோ//

ஆமாங்க. சன் டிவி கூட இதனால எந்திரன் ரிலீஸ் பண்ண பயப்படுறாங்களாம்...

=================================

//சௌந்தர் கூறியது...

dheva கூறியது...
மாப்ஸ திருந்தவே விடமாட்டீங்களா....?

ஏன்டா இந்த கொலை வெறி..///

@@@dhveva
உங்களை நாங்க திருந்த சொல்றோமா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி//

அதான தேவா அண்ணா முதல்ல தமிழ்ல ஒரு பதிவ போட்டுட்டு வாங்க

========================================

//இந்திரா கூறியது...

ஓபனிங்க விட ஃபினிசிங் தான் டாப்புஉஉஉஉஉஉஉ//

நன்றி...

===================================

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்
//இதுக்கெல்லாம் காரணம் இந்த பதிவுதான். இத படிச்சு எத்தனை பேரு மண்ணாய்ப் போனாகளோ. எலேய் டெரர் இதுக்கெலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்...//

நான் எழுதர பதிவ நானே படிக்க மாட்டேன் உன்னை எவன் படிக்க சொன்னது?? உள்ள வராத ஆபத்து சொன்னா கேக்கனும்....//

தெரியாம போயிட்டேன் . இனி வருவேன்??? அருண் பயபுள்ள வேற தலைகீழா நடக்க ஆரமிச்சிடுச்சு...

==================================

@drbalasநன்றி

===========================

@ ப.செல்வக்குமார்என் டென்த் மார்க் சீட் வேணுமா. கணக்குல நூத்துக்கு நூறு..

========================

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது