புதன், அக்டோபர் 13

IT Engineer-ரின் கோபமான இரவு


grrrrrrrrrrrrrrrrrr. ஹலோ ஹலோ . என்கிட்டே பேசு. ஏன் போன் எடுக்க மாட்டேங்குற? எத்தன தடவ போன் பண்றது.

“everything is alright?”

என்னத்த alright. மணி நைட் 11 ஆகுது. இப்பத்தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன். இன்னும் சாப்பிடலை. இனிமேதான் சமைக்கணும். மூணு வாரமா மேகி மட்டும்தான் சாப்புடுறேன். இப்படியே போனா ஸ்பைடர் மேன் மாதிரி உடம்பெல்லாம் நூலா மாறிடும். மேகி வேற ரெண்டு ரூபாய் விலை ஏறிடுச்சு. சம்பளம் மட்டும் கூடவே இல்லை. என்னோட ஆபீஸ் வாசல்ல பிச்சை எடுக்குறவன் கூட நிறைய சம்பாதிப்பான். 

“wat happen.. wat r u talking”

What I am talking.  மேனேஜர் யாரையம் கிளையன்ட் கிட்ட பேச விடுறதே இல்லை. மூணு மாசமா எனக்கு லீவும் கிடைக்கலை. லீவ் கேட்டு மேனேஜர் கிட்ட பிச்சை எடுக்குறேன். அவன்கிட்ட இருந்து ஒரு பதிலும் இல்லை. ஏன் என்னோட டைம் வேஸ்ட் பண்றீங்க. I m gonna quit this project… but, i cant. no, i can.. but i wont..

“ok.. now Relax…”


ங்கொய்யால என்னத்த ரிலாக்ஸ் பண்றது. எல்லாரும் ரிலாக்ஸ் பண்ண யோகா போவாங்க. நைட் 11 மணிக்கு ஆபீஸ் விட்டு வந்து எங்க யோகா பண்றது. டிவி பாக்கலாம்னு பாத்தா நைட் 11 மணிக்கு "சேலம் சித்த வைத்தியர்", "ராசிக்கல் மோதிரம்", "அரோகரா", மாரியாத்தா", "பொய்யான நியூஸ்" இதான் ஓடுது. இல்லைனா KTV ல மொக்கை படம் போடுரானுக. 


எந்திரன்ல ரஜினிக்கு opening பாட்டு வைக்கவே இல்லை. சந்தானம் கருணாஸ் காமெடி வேஸ்ட். ரோபோ லோ பேட்டரில மயங்கி விழுந்துடும். சார்ஜ் இல்லைனா அதுவா எழுந்து எப்படி சார்ஜ் போட்டுக்கும்.3 Idiots படத்துல .......


“hey stop it now..”

நான் என்ன ட்ரெயினா ? செயின் பிடிச்சி நிப்பாட்ட போறியா? oh Train!!!பாத்து மூணு மாசம் ஆகுது. எப்படி பாக்க முடியும். என் முன்னாடி எப்பவும் கம்ப்யூட்டர் மானிடர் தான் இருக்கு. கண்ணை மூடினா "Username & Password" தான் வருது. எப்பபாத்தாலும் இங்க வீட்டுல கரண்ட் போயிடுது. நான் வீட்டுல இல்லைன்னா மட்டும் கரண்ட் இருக்குது.எப்படித்தான் இவனுகளுக்கு தெரியுமோ?


எனக்கு ஒரு girl friend வேணும். ப்ரீத்தி, சமிதா, ரேஷ்மி, ஸ்வேதா இவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு. ஏன் தெரியுமா. அவங்க boy Friends எல்லாம் IT ல இல்லை. வேற பொண்ணுங்களும் என்கூட சாட் பண்றதில்லை(சம்பள நாளை தவிர). நான் 31 முறை ரிஜக்ட் ஆனவன். ஏன் தெரியுமா. நீ எங்க தங்கிருக்கன்னு கேட்டா "நான் என்னோட ஆபீஸ்ல என்னோட cabin ல தங்கிருக்கேன்னு சொல்லுவேன்". ஏன்னா என்னோட வாழ்க்கைல முக்கால்வாசி நேரம் அங்கதான இருக்கேன். மேனேஜர் நாயி என்னை வீட்டுக்கு போக விட்டாதான. 


“hey man, u better take rest, we will talk in Morning”

morning??? இந்த சூரியன் எல்லாம் உதிக்குமே? சேவல் கூவுமே. குயில்கள் பாடுமே. அதுவா? மூணு வருஷம் ஆச்சு சூரியனை பாத்து. நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். காலைல 4 மணிக்கு மேனேஜர் ஆபீஸ்-க்கு வர சொல்லிடுறான். பின்ன எங்க பாக்குறது?

கூட வொர்க் பண்றவன்கிட்ட என் வேலையை  சேர்த்து பாருடான்னு சொன்னா "மச்சி என் தங்கச்சி கல்யாணம். கொஞ்சம் பிஸி" அப்டிங்கிறான்.

என் கூட வேலை பாக்குறவனோட 9 தங்கச்சிங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. எட்டு தடவை தாத்தா செத்துட்டாரு. பத்து தடவை அவன் நண்பனை ICU-ல அட்மிட் பண்ணிட்டாங்க. ஆனா அவனுக்கு மட்டும் ஒன்னும் ஆகமாட்டேங்குது. 

அவனோட Favorite Dialog "என் பிரண்ட இப்பதான் ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு வந்தேன். அவனுக்கு உடம்பு சரி இல்லை". ஆனா அவன் பர்சுல movie டிக்கெட் இருக்கும்.

என்னோட மேனேஜரோட motivation speech என்னன்னா   "u will work.. u will grow". இதுக்கு அர்த்தம் என்னனா ஒழுங்கா வேலை செய்யலைன்னா பிச்சிபுடுவேன் பிச்சு. Hike வேணுன்னு கேட்டா நீ ஜூனியர், கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு அப்டின்னு சொல்லுவான். ஏதாச்சும் தப்பு பண்ணிட்டா நீ சீனியர் ஒழுங்கா பாத்து பண்ண வேண்டாமா அப்டின்னு கேப்பான். 
மேனேஜர் மனச புரிஞ்சிக்க உலகத்துல எவனும் கிடையாது. அதுக்கு கடவுள் கிட்ட தனி பவர் கேட்கணும். 


“ok enough now, i m disconnecting”

நான்தான் உனக்கு போன் பண்ணினேன். இன்னிக்காவது பேச விடு. எனக்கு பேசுறதே மறந்திடுச்சு. நான் தினமும் பேசுற வார்த்தைகள் "‘yaa its done’, ‘e-cube is filled’, ”Please..’, ‘good morning’, ‘lunch’,'tea’,’snaks’, அவ்ளோதான். 

உனக்கு  ஒண்ணு தெரியுமா. 2020 ல உலகம் அழியுமாம். ஆனா என்னோட cabin மட்டும் அழியவே அழியாது. ஏன்னா  "that’s not part of earth.. and we are employees not human beings… we are aliens "."I will again start my day tomorrow like i m starting everyday.. good night ".

மறுநாள் ஆபீஸில்:

மேனேஜர்: டெரர்  இங்க வா..

டெரர்: சொல்லுங்க சார்

மேனேஜர்: உனக்கு ஒரு வாரம் லீவ் அப்ரூவ் பண்ணிருக்கேன். என்ஜாய் பண்ணு. "have a fun".

டெரர்: (தனது Dialled call list பாத்துட்டு) Oh My God. நேத்து தண்ணிய போட்டுட்டு மேனேஜர்க்கா கால் பண்ணினேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... 

டிஸ்கி : இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

74 கருத்துகள்:

GSV சொன்னது…

me the first...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// GSV கூறியது...

me the first...//

Welcome welcome

அருண் பிரசாத் சொன்னது…

me the second

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

me the second//

you are third raasaa...

அருண் பிரசாத் சொன்னது…

@ terror
யோவ்... சீக்கிரம் ரிட்டர்ன் வந்துடு இல்லைனா உன் பிளாகை ஏலம்விட்டுவார் இந்த போலீசு

அருண் பிரசாத் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//அருண் பிரசாத் கூறியது...

me the second//

you are third raasaa...//

செல்லாது செல்லாது... உங்களை கணக்குல சேர்க்கமுடியாது

GSV சொன்னது…

யோவ் டெர்ரர் இந்த போலபுக்கு கட்டிங் போட்டுட்டு மேனேஜர் கட்டையலையே அடிக்க வேண்டியது தான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

@ terror
யோவ்... சீக்கிரம் ரிட்டர்ன் வந்துடு இல்லைனா உன் பிளாகை ஏலம்விட்டுவார் இந்த போலீசு//

எவன் வாங்குவான்..


// அருண் பிரசாத் கூறியது...

செல்லாது செல்லாது... உங்களை கணக்குல சேர்க்கமுடியாது//

இது கள்ள ஆட்டம். மறுபடியும் முதல்ல இருந்து விளையாடுவமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

யோவ் டெர்ரர் இந்த போலபுக்கு கட்டிங் போட்டுட்டு மேனேஜர் கட்டையலையே அடிக்க வேண்டியது தான//

அதான!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

me the 11//

உங்க பொண்ணுக்கு one, two, three சொல்லி குடுக்கும் போது கமெண்ட் போடாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது. 1,2 3 இங்க சொல்லிடீங்க. உங்க பொண்ணு நோட் ல என்ன கம்மெண்ட எழுதி தொலைச்சீங்க!!!

எஸ்.கே சொன்னது…

பல பணியாளர்களின் உண்மையான மனநிலைமை! அதை உங்க பாணியில் நல்லாவே எழுதியிருக்கீங்க!

GSV சொன்னது…

//என்னோட வாழ்க்கைல முக்கால்வாசி நேரம் அங்கதான இருக்கேன். மேனேஜர் நாயி என்னை வீட்டுக்கு போக விட்டாதான. //

ஆபீஸ் லேயே குடும்பம் நடத்த வேண்டியது தான்..... எந்துக்கு வீட்டுக்கு வாடாகை வேஸ்ட் பண்ணிக்கிட்டு

வெங்கட் சொன்னது…

இனிமே VAS ஆளுங்களை
கலாய்ப்பீங்களா ரமேஷு..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// வெங்கட் கூறியது...

இனிமே VAS ஆளுங்களை
கலாய்ப்பீங்களா ரமேஷு..?//

கமெண்ட் modration இருக்குங்கிற தைரியமா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

me the edho oru number

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

me the edho oru number//

vaanka sir

அருண் பிரசாத் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

me the edho oru number//
ஏதோ ஒரு நம்பர்ரா? அப்புறம் நான் ஒரு நம்பர் தருவேன், அசிங்கமாயிடும் ஒழுங்க நீயே நம்பர் சொல்லிடு

நாகராஜசோழன் MA சொன்னது…

// ஏன் தெரியுமா. அவங்க boy Friends எல்லாம் IT ல இல்லை.//

இது முற்றிலும் உண்மை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

பல பணியாளர்களின் உண்மையான மனநிலைமை! அதை உங்க பாணியில் நல்லாவே எழுதியிருக்கீங்க!//

நன்றி நண்பா.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி ட்ரைன்ல உன் பாட்டு சூப்பர்.... ரமேஷ் பாட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

GSV சொன்னது…

//என்னோட வாழ்க்கைல முக்கால்வாசி நேரம் அங்கதான இருக்கேன். மேனேஜர் நாயி என்னை வீட்டுக்கு போக விட்டாதான. //

ஆபீஸ் லேயே குடும்பம் நடத்த வேண்டியது தான்..... எந்துக்கு வீட்டுக்கு வாடாகை வேஸ்ட் பண்ணிக்கிட்டு//

இது நல்ல ஐடியா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது…

// ஏன் தெரியுமா. அவங்க boy Friends எல்லாம் IT ல இல்லை.//

இது முற்றிலும் உண்மை.
//

hehe. welcome sir

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி ட்ரைன்ல உன் பாட்டு சூப்பர்.... ரமேஷ் பாட்டு
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Selam Deva,

please comment again

GSV சொன்னது…

உண்மையிலேயே போலீஸ் க்கு ரொம்ப கோவமான இரவுதான் போல இன்னைக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

உண்மையிலேயே போலீஸ் க்கு ரொம்ப கோவமான இரவுதான் போல இன்னைக்கு//

அப்ப நானும் IT engineer ரா? ஐ...

dheva சொன்னது…

எல்லாம் சொன்ன சரி..தம்பி....

கடைசில நம்ம மாப்ஸ புடிச்சு வாரியிருக்கியே.. நிஜமாவா அவன் ஐ.டில தான் இருக்கான்..

நம்பு தம்பி....!

டெரர்..@ நாளைக்கு உன் MD ய ஒரு போஸ்ட் போட சொல்லு மாப்ஸ்....எல்லோரும் நம்பட்டும்...!

Jokes apart.......nice post thambi!!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//டெரர்..@ நாளைக்கு உன் MD ய ஒரு போஸ்ட் போட சொல்லு மாப்ஸ்....எல்லோரும் நம்பட்டும்...!//

ஆமாம்.. அவர பதிவு போட சொன்னா அஸ்லாம்அலைக்கும்!! அப்படினு ஆரம்பிச்சி அரை பக்கத்துக்கு அரபில எழுதுவாரு.. இவனுங்க சும்மாவே நான் இல்லாத நேரத்துல என் பேர பேப்பர்ல எழுதி கும்முவானுங்க. இதுல இது வேறையா??

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன போலீஸ்கார், இன்னிக்கு எவனாவது தண்ணி காட்டிட்டானா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். காலைல 4 மணிக்கு மேனேஜர் ஆபீஸ்-க்கு வர சொல்லிடுறான். ///

அப்போ தண்ணி எப்போய்யா அடிக்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///டிவி பாக்கலாம்னு பாத்தா நைட் 11 மணிக்கு "சேலம் சித்த வைத்தியர்", "ராசிக்கல் மோதிரம்", "அரோகரா", மாரியாத்தா", "பொய்யான நியூஸ்" இதான் ஓடுது. ///

ஏன்யா அந்த சேலம் டாகுடரு புரோகிராம் நல்லாத்தானே இருக்கு (நம்ம டாகுடரு விஜய் பாட்டுக்கு இது எவ்வளவோ பெட்டரு இல்லியா?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///டிஸ்கி : இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.///

எச்சுஸ் மி, யாரு சார் அது டெர்ரரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ங்கொய்யா நட்டநடுராத்திரி இப்பிடி பதிவு போட்டு ஏன்டா உயிர வாங்குறீங்க?

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// dheva கூறியது...


தேங்க்ஸ் நா. அப்படியா. டெரர் என்கிட்டே துபாய் கலெக்டரா இருக்குறதா சொன்னாரு. பயபுள்ள பொய் சொல்லிருக்கு போல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@தேவா

//டெரர்..@ நாளைக்கு உன் MD ய ஒரு போஸ்ட் போட சொல்லு மாப்ஸ்....எல்லோரும் நம்பட்டும்...!//

ஆமாம்.. அவர பதிவு போட சொன்னா அஸ்லாம்அலைக்கும்!! அப்படினு ஆரம்பிச்சி அரை பக்கத்துக்கு அரபில எழுதுவாரு.. இவனுங்க சும்மாவே நான் இல்லாத நேரத்துல என் பேர பேப்பர்ல எழுதி கும்முவானுங்க. இதுல இது வேறையா??//


மச்சி உங்க MD ய பதிவு போடா சொல்லு. நானு முப்பதே நாள்களில் அரபி படிச்சிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன போலீஸ்கார், இன்னிக்கு எவனாவது தண்ணி காட்டிட்டானா?//

டெரர் க்கு போக வேண்டிய கேள்வி..

=======================

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். காலைல 4 மணிக்கு மேனேஜர் ஆபீஸ்-க்கு வர சொல்லிடுறான். ///

அப்போ தண்ணி எப்போய்யா அடிக்கிற?//

வீட்டுக்கு வரும்போதே(இதுவும் டெரர் க்கு போக வேண்டிய கேள்வி..)

==============================

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///டிவி பாக்கலாம்னு பாத்தா நைட் 11 மணிக்கு "சேலம் சித்த வைத்தியர்", "ராசிக்கல் மோதிரம்", "அரோகரா", மாரியாத்தா", "பொய்யான நியூஸ்" இதான் ஓடுது. ///

ஏன்யா அந்த சேலம் டாகுடரு புரோகிராம் நல்லாத்தானே இருக்கு (நம்ம டாகுடரு விஜய் பாட்டுக்கு இது எவ்வளவோ பெட்டரு இல்லியா?)/

அவரு குடும்பத்தையே வம்புக்கு இழுப்பாரே...

====================================

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///டிஸ்கி : இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.///

எச்சுஸ் மி, யாரு சார் அது டெர்ரரு?//

அவரு ஒரு மானஸ்தன். ரொம்ப நல்லவருங்கோ

============================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யா நட்டநடுராத்திரி இப்பிடி பதிவு போட்டு ஏன்டா உயிர வாங்குறீங்க?/

நீங்க மட்டும் ஆணி அதிகமா இருக்கும்போது போஸ்ட் போடலாமா?

=========================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Eeva கூறியது...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!/

ok thanks

சௌந்தர் சொன்னது…

இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல////

நாங்க முதல் இதை நம்பவில்லை பிறகு எப்படி ஏமாறுவது...

Chitra சொன்னது…

:-)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மக்கா terror சாய்ச்சு போட்டனே ..........சாய்ச்சு போட்டனே .............
ரமேஷ் நீ இப்படி தன எல்லோரையும் வேலை வாங்குரயா .....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,சிரிப்புப்போலீஸ்,துரோகி

>>>
என் கூட வேலை பாக்குறவனோட 9 தங்கச்சிங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. >>>

இந்த மேட்டரை ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலை//?ஏன் அறிமுகப்படுத்தலை?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன போலீஸ்கார், இன்னிக்கு எவனாவது தண்ணி காட்டிட்டானா?

ஈஇல்லை,ஏதோ ஒரு கன்னியை காட்டிட்டாராம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்ன போலீஸ்கார், இன்னிக்கு எவனாவது தண்ணி காட்டிட்டானா?

13 அக்டோபர், 2010 12:03 pm
பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். காலைல 4 மணிக்கு மேனேஜர் ஆபீஸ்-க்கு வர சொல்லிடுறான். ///

அப்போ தண்ணி எப்போய்யா அடிக்கிற?


விடிக்காலை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யா நட்டநடுராத்திரி இப்பிடி பதிவு போட்டு ஏன்டா உயிர வாங்குறீங்க?

தூக்கம் வர்லைனா என்ன பண்ரது? உங்களுக்கு ஃபிகர் இருக்கு.

RameshKarthikeyan சொன்னது…

kallakkal .........
super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சௌந்தர் சொன்னது…

இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல////

நாங்க முதல் இதை நம்பவில்லை பிறகு எப்படி ஏமாறுவது...//

நீ புத்திசாலி. டெரர் மாதிரி இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Chitra கூறியது...

:-)//
welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

மக்கா terror சாய்ச்சு போட்டனே ..........சாய்ச்சு போட்டனே .............
ரமேஷ் நீ இப்படி தன எல்லோரையும் வேலை வாங்குரயா .....//

நான் ஒரு நேர்மையான manager..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,சிரிப்புப்போலீஸ்,துரோகி

>>>
என் கூட வேலை பாக்குறவனோட 9 தங்கச்சிங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. >>>

இந்த மேட்டரை ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலை//?ஏன் அறிமுகப்படுத்தலை?//

ஏன் நீங்களும் ஒரு அண்ணனா இருந்து அந்த தங்கச்சிங்களுக்கு கல்யாணம் முடிச்சி வசிருப்பென்களோ?

======================

//ஈஇல்லை,ஏதோ ஒரு கன்னியை காட்டிட்டாராம்//

அடப் பாவி..

==============

//
விடிக்காலை//

ஈரோடுல விடிக்காலை டாஸ்மாக் ஓபன் ஆயிடுமா?

===================

//தூக்கம் வர்லைனா என்ன பண்ரது? உங்களுக்கு ஃபிகர் இருக்கு.//

அந்த பிகர் அப்படியே டாக்டர் விஜய் சாயல்ல இருக்குமாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//RameshKarthikeyan கூறியது...

kallakkal .........
super//
thanks

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

nice post.

மங்குனி அமைசர் சொன்னது…

ரமேஷ் உண்மையில் நல்லா இருக்கு , (உனக்கு இப்படியெல்லாம் யோசிக்க தெரியாதே , மண்டபத்துல யாராவது எழுதி வச்சிருந்தத திருடிட்டு வந்திட்டியா ?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைசர் சொன்னது…

ரமேஷ் உண்மையில் நல்லா இருக்கு , (உனக்கு இப்படியெல்லாம் யோசிக்க தெரியாதே , மண்டபத்துல யாராவது எழுதி வச்சிருந்தத திருடிட்டு வந்திட்டியா ?)//
யோவ் பப்ளிக் ல மானத்த வாங்காத. நாம தனியா பேசிக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

nice post.//

thanks

மங்குனி அமைசர் சொன்னது…

மேனேஜர் நாயி என்னை வீட்டுக்கு போக விட்டாதான. ///

மேநேஜெரோட நாயி எதுக்கு உன்னைய வீட்டுக்கு போக சொல்லனும் ???

மங்குனி அமைசர் சொன்னது…

என் கூட வேலை பாக்குறவனோட 9 தங்கச்சிங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. எட்டு தடவை தாத்தா செத்துட்டாரு. பத்து தடவை அவன் நண்பனை ICU-ல அட்மிட் பண்ணிட்டாங்க. ஆனா அவனுக்கு மட்டும் ஒன்னும் ஆகமாட்டேங்குது.////

ஹா,ஹா.ஹா

மங்குனி அமைசர் சொன்னது…

டிஸ்கி : இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

/////

இதுல உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

karthikkumar சொன்னது…

பதிவோட கமெண்டுகளும் சூப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// மங்குனி அமைசர் கூறியது...

மேனேஜர் நாயி என்னை வீட்டுக்கு போக விட்டாதான. ///

மேநேஜெரோட நாயி எதுக்கு உன்னைய வீட்டுக்கு போக சொல்லனும் ???//

தமிழ் படிச்சுட்டு வந்து பதிவ படி. manager ரோட நாய் இல்ல மேனேஜர் நாய்

===============

//இதுல உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு//

நன்றி

================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// karthikkumar கூறியது...

பதிவோட கமெண்டுகளும் சூப்பர்//

thanks

ப.செல்வக்குமார் சொன்னது…

// "சேலம் சித்த வைத்தியர்", "ராசிக்கல் மோதிரம்", "அரோகரா", மாரியாத்தா", "பொய்யான நியூஸ்" இதான் ஓடுது. இல்லைனா KTV ல மொக்கை படம் போடுரானுக. //

டேமேஜர் சார் கிட்ட யாரோ இப்படி கண்ணா பின்னான்னு திட்டிட்டாங்க ..அதைய அப்படியே உல்டா பண்ணி எங்க TERROR அண்ணன் பண்ணினா மாதிரி போட்டுட்டார் ..

ப.செல்வக்குமார் சொன்னது…

//மூணு வருஷம் ஆச்சு சூரியனை பாத்து. நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். //

இந்த பிரச்சினைய போகுரதுக்குத் தான் எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் அப்படின்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சார் ..!!

kaipulla சொன்னது…

ithu therinjuma bike vaangineenga office pooga ... so sad :(

apdi oru office (IT) ungaluku theyva illa na divorce pannedunga

oru wayla antha manager neenga thana??

பெயரில்லா சொன்னது…

நகைச்சுவையாக இருந்தாலும் இதில் பல ஜடி பணியாளர்களின் கொந்தளிப்பு நன்றாகவே வெளிப்படுகிறது.
நல்ல முயற்சி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...// "சேலம் சித்த வைத்தியர்", "ராசிக்கல் மோதிரம்", "அரோகரா", மாரியாத்தா", "பொய்யான நியூஸ்" இதான் ஓடுது. இல்லைனா KTV ல மொக்கை படம் போடுரானுக. //

டேமேஜர் சார் கிட்ட யாரோ இப்படி கண்ணா பின்னான்னு திட்டிட்டாங்க ..அதைய அப்படியே உல்டா பண்ணி எங்க TERROR அண்ணன் பண்ணினா மாதிரி போட்டுட்டார்//

ஓ அப்படியா?


=================

//ப.செல்வக்குமார் கூறியது...

//மூணு வருஷம் ஆச்சு சூரியனை பாத்து. நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். //

இந்த பிரச்சினைய போகுரதுக்குத் தான் எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் அப்படின்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சார் ..!!//

அதுக்கு பேசாம நான் ஆபீஸ்கே போயிடுவேன்.

===========

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//kaipulla கூறியது...

ithu therinjuma bike vaangineenga office pooga ... so sad :(

apdi oru office (IT) ungaluku theyva illa na divorce pannedunga

oru wayla antha manager neenga thana??//

ஹிஹி. பப்ளிக் பப்ளிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

நகைச்சுவையாக இருந்தாலும் இதில் பல ஜடி பணியாளர்களின் கொந்தளிப்பு நன்றாகவே வெளிப்படுகிறது.
நல்ல முயற்சி.//

thanks

ஜெயந்தி சொன்னது…

அடப்பாவிங்களா ரொம்ப சீரியசா படிச்சிக்கிட்டு வந்தேன். நடுநடுவுல இது சிரிப்பு போலீஸ் ப்ளாக்தானான்னு வேற செக் பண்ணிக்கிட்டேன். கடைசியிலதான் கன்பார்ம் ஆச்சு.

தஞ்சாவூரான் சொன்னது…

ஹஹஹஹா... நைஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

அடப்பாவிங்களா ரொம்ப சீரியசா படிச்சிக்கிட்டு வந்தேன். நடுநடுவுல இது சிரிப்பு போலீஸ் ப்ளாக்தானான்னு வேற செக் பண்ணிக்கிட்டேன். கடைசியிலதான் கன்பார்ம் ஆச்சு.//

hahaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தஞ்சாவூரான் கூறியது...

ஹஹஹஹா... நைஸ்!//

thanks

Gnana Prakash சொன்னது…

அருமை நண்பரே

சுட்டி சொன்னது…

தண்ணியை போடாமல் நாங்களும் இதை செய்யலாமென்ன!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது