செவ்வாய், அக்டோபர் 12

போரமா! போர் நடக்கிற இடமா? - Tamilbloggers Forum

Tamilbloggers Forum. தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் இதை பத்தி தெரியும் என நினைக்கிறேன். நல்ல விசயங்களை பதிவர்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காக நண்பர்களால் ஆரமிக்கப் பட்டது. ஆரம்ப காலங்களில் சில நல்ல தகவல் பரிமாற்றங்கள் நடந்தது.

அப்புறம் அதுவே கும்மி அடிக்கும் இடமாக மாறியது(இதில் நானும் ஒருவன்). இதனால் சிலர் மனம் வருத்தப் பட்டனர். மூத்த பதிவர்களின் அன்பு தம்பி, நம் எல்லோரையும் வழி நடத்தி செல்லும் அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார். அவர் போரமிலிருந்து  வெளியில் போக நானும் ஒரு காரணம் என்பதில் வெட்கப் படுகிறேன்.

யாரும் கேட்கவில்லை. கும்மி தொடர்ந்தது. கடுப்பான அவர் போங்கடா நீங்களும், உங்க போரமும் அப்டின்னு சொல்லி "தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்" அப்படின்னு ஒரு பதிவை போட்டு விட்டு போரமை விட்டு வெளியேறி விட்டார்.

அப்புறம் சில பதிவர்களும் கிளம்பி விட்டனர். தகவல் பரிமாற்றம், கும்மியை தொடர்ந்து இப்போது போரம் வந்து நிற்கும் இடம் போர்க்களம். தினம் தினம் சண்டைகள். எதுக்கு சண்டை,ஏன் அப்டின்னெல்லாம் கேட்கக்கூடாது(யாருக்கு தெரியும்). இவன் என்னை அடிச்சிட்டான், இவன் என்னை கிள்ளிட்டான். முதல்ல அவன்தான் என்னை கெட்ட வார்த்தைல திட்டினான் அதற்க்கு என்கிட்டே ஆதாரம் இருக்கு(அவனவன் ஆகாரம் இல்லாமல் இருக்கிறான்).

முதலில் நண்பர்களாக இருக்கும் இருவர் சாட்டில்  தகவல்களை பரிமாறிக்கிறாங்க. அப்புறம் சண்டை வந்ததும் அவனோட சாட் ரெகார்ட் என்கிட்டே இருக்குன்னு சொல்லி அவரோட சாட்டை(மானம் மரியாதையும்தான்) போரம் என்கிற கப்பலில் ஏத்தி விடுகின்றனர்.

அவர் பதிலுக்கு வேற ஒரு புனைவு கதை எழுதுகிறார். நாம உலகத்த திருத்தவா பதிவு எழுதுறோம். வந்தோமா ஜாலியா கும்மி அடிச்சமா, போனமான்னு இல்லாம ஏன் ஸ்கூல் பசங்க மாதிரி இவ்ளோ சண்டை.

எனக்கு நிறைய நண்பர்கள் இந்த ப்ளாக் மூலமாகத்தான் கிடைத்தார்கள். எவ்வளவோ உதவிகளை ஒரு பிளாக்கர் இன்னொரு பிளாக்கர்க்கு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த போரமில் தினமும் 50-100 mails கண்டிப்பாக வரும். அனைத்தும் சண்டை போட்டுதான். ஒரு சில mails விதிவிலக்கு.

ஒரு ஜோக் உண்டு. "இங்கு சுவற்றில் எழுதாதே" அப்டின்னு ஒருத்தன் போர்டு வச்சானாம். அங்க வந்த ஒருத்தன் "சரி இனிமே எழுத மாட்டோம்" அப்டின்னு பெருசா எழுதிட்டு போனானாம்.

அது மாதிரி, நான் ஒரு மெயில் போரமில் அனுப்பினேன் "இது போரமா! போர் நடக்கிற இடமா?" அப்டின்னு. அங்கு வந்தும் அவன்தானா முதல்ல அடிச்சான். அவன நிப்பாட்ட சொல்லுங்கன்னு, நான் நிறுத்துறேன் அப்டின்னு reply மெயில் வருது. எங்க போய் முட்டிக்கிறது.

சண்டைய நிறுத்துங்கன்னு கேட்டா, முடியாது வேணும்னா உங்க மெயில் option மாத்திக்கோங்க அப்டின்னு சொல்றாங்க. அது என் விருப்பம். அப்டின்னா சண்டை போடுவது எங்கள் விருப்பம்ன்னு சொல்றீங்களா? போரம் நீங்க சண்டை போட ஆரமிச்சதில்லைங்கோ. உருப்படியா சில தகவல்களை பரிமாறிக்கத்தான்.

எல்லோரும் வந்துபோகுமிடம் அது. நீங்க சண்டை மட்டும் போடும் இடம் இல்லை.வேணும்னா தனி மடலில் போய் சண்டை போடுங்கள். யார் கேக்க போறா?

சரி ஏதாவது பண்ணுவோம்னு நானும், மங்குனியும் பேசி, மச்சி நீ என்னை திட்டுற மாதிரி திட்டு, நான் அழுவுற மாதிரி அழுவுறேன் அப்டின்னு போரம்ல போய் சண்டை போட்டோம். அதுக்கப்புறமும் போரமில் 5-10 சண்டை மைல்ஸ் வந்து விட்டது. மச்சி விடு இது வேலைக்ககாதுன்னு நிப்பாட்டிடோம்.

எனக்கு சில கேள்விகள்:

- அப்படி என்னதான் பிரச்சனை  உங்களுக்கு? நாங்களும்தான் ப்ளாக் எழுதுறோம். நண்பர்களை பயங்கரமா கலாய்க்கிறோம். நாங்களும் புனைவு எழுதுறோம்(ஜாலியா). பிரச்சனை தானா வர்றதில்லை. நாமதான் தேடிக்கிறோம்.

- எப்பதான் உங்க சண்டைய முடிப்பீங்க? அடுத்த election குள்ள? உலகம் அழியுரதுக்குள்ள?

- பெண் பதிவர்கள் கிட்ட தப்பா பேசினான், போட்டோவ எல்லோருக்கும் கொடுத்துட்டான் அப்டின்னு நிறைய மெயில் வருது. எவ்ளோ கட்டுரைகள் படிக்கிறோம். முன் பின் தெரியாத இடத்துல உங்க informations-ச பரிமாறிக்காதீங்கன்னு. நம்ம வீட்டு குழந்தைகளுக்கும்  நாம அட்வைஸ் பண்றோம். பின்ன நாம ஏன் எச்சரிக்கையா இருக்க கூடாது?

- போரமில் எப்பதான் இந்த சண்டை முடிந்து நல்ல விசயங்களை பரிமாறிக் கொள்வீர்கள்?

- தயவு செய்து மெயில் Option மாத்திகோன்னு சில்லியா பதில் சொல்ல வேண்டாம். 

பின் குறிப்பு: என்னால் இன்னும் இந்த போரமில் நீடிக்க முடியாது. Moderator யாராக இருந்தாலும் போரமில் இருந்து எனது பேரை வெட்டி பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். அங்காவது நிம்மதியாக இருப்பேன். இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்சநாளில்யாருமே இல்லாத டீக்கடையில்தான் நீங்க டீ ஆத்த வேண்டிதிருக்கும்.

டிஸ்கி1: எனக்கு உங்கள் யார் மீதும் கோபமில்லை. எனது பதிவை ரெண்டு நாளாக படிக்காத டெரர் அண்ணன், புரியாத மாதிரி எழுதும் தேவா அண்ணன், என்னை கலாய்க்கும் வெங்கட், மொக்கை போடும் செல்வா,லேட்டாக கமெண்ட் போடும் சௌந்தர்,அருண் மற்றும் இம்சை  அவர்கள் மீது கோவப்பட்டு எழுதிய பதிவுதான் இது. என் கோவம் அவர்கள் மீதுதான்.

டிஸ்கி2:இந்த பதிவை பார்த்து என்னை பத்தி யாராவது புனைவு எழுதினால் நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர் அவர்கள் தலைமையில் தினமும் மூணு வேளை அஞ்சப்பரில் பிரியாணி தின்னுவிட்டு சாகும் வரை வீராசாமி மற்றும் மேதை படம் பார்ப்பேன் என கூறிக் கொல்கிறேன்.

டிஸ்கி2: டெரர்,தேவா,பன்னிகுட்டி,சௌந்தர்,இம்சை,அருண்,மங்குனி, வெங்கட் மற்றும் செல்வா- மாட்டுனீங்களா. உங்களையும் கோர்த்துவிட்டுடேன். ஐ.

93 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

me thye firstuuuuuuu
முதல் ஜாங்கிரி என்னக்கு தான்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி .நாங்கள் பாவம்டா .மங்குனி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்(எத்தனை மூத்திர சந்து பார்த்திருப்பர்).
ஏற்கனவே terror என்ற மானஸ்தனை காணவில்லை ...இதுலவேற தேவா அண்ணா,அருண் எல்லோரையும் இழுத்து விட்டுடிய ராசா .....மீ பாவம் ..

சௌந்தர் சொன்னது…

லேட்டாக கமெண்ட் போடும் சௌந்தர்,அருண் மற்றும் இம்சை அவர்கள் மீது கோவப்பட்டு எழுதிய பதிவுதான் இது.////

நான் ரொம்ப லேட்டா கமெண்ட் போட்டுட்டேன் சாரி கோபம் வேண்டாம்

சௌந்தர் சொன்னது…

டிஸ்கி2: டெரர்,தேவா,பன்னிகுட்டி,சௌந்தர்,இம்சை,அருண்,மங்குனி, வெங்கட் மற்றும் செல்வா- மாட்டுனீங்களா. உங்களையும் கோர்த்துவிட்டுடேன். ஐ.///

என்ன நல்ல மனசு உங்களுக்கு

LK சொன்னது…

thambi sirippu police, athu periya issue, google buzzla innum poguthu

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

முதல்ல இந்த போரம்கிற விசயமே வேலை இல்லாத மக்களும்.. அல்லது வேலை நேரத்தில் வாங்குன சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை பார்க்காத ஆட்களும் வந்து தங்கள் குப்பைகளை கொட்டிப்போகிற இடம் அவ்வளவுதான். நல்ல விசயங்களுக்கு அது எப்போதும் பயன்படுவது இல்லை .. சீரியஸாக பதிவு எழுதும் நான் மிகவும் விரும்பி படிப்பவை மொக்கை, மற்றும் நகைச்சுவை பதிவுகளைத்தான்,, ஆனால் போரமில் தனி மனித தாக்குதல் அதிகம் ... மன வளர்ச்சி குன்றியவர்கள் அதிகம் உலவும் இடம் அது .

நீங்க வெளிய வரணுமின்னா unsubscribe option பயன்படுத்தி வெளிய வரலாம் ...

ப.செல்வக்குமார் சொன்னது…

இப்ப கிளம்புறேன் ..!! நாளைக்கு வந்து என்ன பிரச்சினைன்னு பாக்குறேன் ..!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்த பதிவுக்கு மாடரேசன் தேவையில்லை ...

ப.செல்வக்குமார் சொன்னது…

//மொக்கை போடும்செல்வா,//

நல்லவேளை நியாபகப் படுத்துனீங்க ,.. போய் தினம் ஒரு மொக்கை போட்டுட்டு போறேன் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

me thye firstuuuuuuu
முதல் ஜாங்கிரி என்னக்கு தான்//

உன் தலை காலி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி .நாங்கள் பாவம்டா .மங்குனி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்(எத்தனை மூத்திர சந்து பார்த்திருப்பர்).
ஏற்கனவே terror என்ற மானஸ்தனை காணவில்லை ...இதுலவேற தேவா அண்ணா,அருண் எல்லோரையும் இழுத்து விட்டுடிய ராசா .....மீ பாவம் ..//

எனக்கு துணைக்கு ஆள் வேணாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

லேட்டாக கமெண்ட் போடும் சௌந்தர்,அருண் மற்றும் இம்சை அவர்கள் மீது கோவப்பட்டு எழுதிய பதிவுதான் இது.////

நான் ரொம்ப லேட்டா கமெண்ட் போட்டுட்டேன் சாரி கோபம் வேண்டாம்//

மன்னிச்சிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

டிஸ்கி2: டெரர்,தேவா,பன்னிகுட்டி,சௌந்தர்,இம்சை,அருண்,மங்குனி, வெங்கட் மற்றும் செல்வா- மாட்டுனீங்களா. உங்களையும் கோர்த்துவிட்டுடேன். ஐ.///

என்ன நல்ல மனசு உங்களுக்கு/

hehe

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இந்த பதிவுக்கு மாடரேசன் தேவையில்லை ...
கே.ஆர்.பி.செந்தில் yes u r coorect no moderation ramesh

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// LK கூறியது...

thambi sirippu police, athu periya issue, google buzzla innum poguthu//

ஆமாங்க, ரெண்டு பேர் சண்டைல யாரும் நடுவுல தட்டி கேக்கலைன்னா அவர் கூடையும் சண்டை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

முதல்ல இந்த போரம்கிற விசயமே வேலை இல்லாத மக்களும்.. அல்லது வேலை நேரத்தில் வாங்குன சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை பார்க்காத ஆட்களும் வந்து தங்கள் குப்பைகளை கொட்டிப்போகிற இடம் அவ்வளவுதான். நல்ல விசயங்களுக்கு அது எப்போதும் பயன்படுவது இல்லை .. சீரியஸாக பதிவு எழுதும் நான் மிகவும் விரும்பி படிப்பவை மொக்கை, மற்றும் நகைச்சுவை பதிவுகளைத்தான்,, ஆனால் போரமில் தனி மனித தாக்குதல் அதிகம் ... மன வளர்ச்சி குன்றியவர்கள் அதிகம் உலவும் இடம் அது .

நீங்க வெளிய வரணுமின்னா unsubscribe option பயன்படுத்தி வெளிய வரலாம் ...//

thanks na. ill do

சௌந்தர் சொன்னது…

"போரமா! போர் நடக்கிற இடமா?////

போலீஸ் சொல்வது சரி அதுக்கு பதில் சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//மொக்கை போடும்செல்வா,//

நல்லவேளை நியாபகப் படுத்துனீங்க ,.. போய் தினம் ஒரு மொக்கை போட்டுட்டு போறேன் ..//

ok. go and kill some ppl

சௌந்தர் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
இந்த பதிவுக்கு மாடரேசன் தேவையில்லை ..///

அண்ணன் சொல்வதை கேளுப்பா இனி எந்த பதிவுக்கும் வேண்டாம்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மூத்த பதிவர் கே.ஆர்.பி.செந்தில் சார் இவ்வளவு தெளிவாக சொல்கிறார் என்றால் கரெக்ட் தான் ரமேஷ் .நீங்க unsubscribe செய்துட்டு வெளியே வந்துருங்க ...............அது தான் சரி ......

இல்லை நன் மூத்திர சந்து தேடி தான் போவேன் என்றால் போ .........மங்குனி யையும் கூட்டிட்டு போ

சௌந்தர் சொன்னது…

சௌந்தர் சொன்னது…
"போரமா! போர் நடக்கிற இடமா?////

என்ன நடக்குது அங்க ஒரு நாளைக்கு எதனை மெயில் வந்தது உங்களுக்கு...

சௌந்தர் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
நீங்க வெளிய வரணுமின்னா unsubscribe option பயன்படுத்தி வெளிய வரலாம்///


ரமேஷ் நீங்க இன்னும் unsubscribe பண்ணலையா????????????????????????????????????????????????????????

LK சொன்னது…

@soundar
sunbscribe panni paarunga nite thoongitu mng varathukullara oru 150 mail varum

சௌந்தர் சொன்னது…

அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.///

அவர் அப்போ சொல்லும் போது கேட்கவில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

"போரமா! போர் நடக்கிற இடமா?////

போலீஸ் சொல்வது சரி அதுக்கு பதில் சொல்லுங்க//

naan enna solla?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

மூத்த பதிவர் கே.ஆர்.பி.செந்தில் சார் இவ்வளவு தெளிவாக சொல்கிறார் என்றால் கரெக்ட் தான் ரமேஷ் .நீங்க unsubscribe செய்துட்டு வெளியே வந்துருங்க ...............அது தான் சரி ......

இல்லை நன் மூத்திர சந்து தேடி தான் போவேன் என்றால் போ .........மங்குனி யையும் கூட்டிட்டு போ//


வந்துட்டேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சௌந்தர் சொன்னது…
"போரமா! போர் நடக்கிற இடமா?////

என்ன நடக்குது அங்க ஒரு நாளைக்கு எதனை மெயில் வந்தது உங்களுக்கு...//

1,2,3,4,....1000....infinitive

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//LK கூறியது...

@soundar
sunbscribe panni paarunga nite thoongitu mng varathukullara oru 150 mail varum//

haha u also same blood?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.///

அவர் அப்போ சொல்லும் போது கேட்கவில்லை//


உண்மைய இப்படியா சொல்லுவ. அண்ணன் கோவிச்சுக்க போறாரு..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இங்க என்ன பிரச்சனை....நடக்குது ஃபோரம் நா என்ன..சிரிப்பு போலிஸ் ஏன் டென்சனா சுத்துது..?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

லேட்டாக கமெண்ட் போடும் சௌந்தர்,அருண் மற்றும் இம்சை அவர்கள் மீது கோவப்பட்டு எழுதிய பதிவுதான் இது//
ஓ..அப்படியா மேட்டர்...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

முத வடை இம்சைக்கா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

முதல்ல இந்த போரம்கிற விசயமே வேலை இல்லாத மக்களும்.. அல்லது வேலை நேரத்தில் வாங்குன சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை பார்க்காத ஆட்களும் வந்து தங்கள் குப்பைகளை கொட்டிப்போகிற இடம் அவ்வளவுதான். //
செம பாயிண்ட்..குறிச்சு வெச்சுக்குங்கப்பா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த பதிவுக்கு மாடரேசன் தேவையில்லை .//
சிரிப்பு போலிஸ் எச்சரிக்கையா இருக்கணும்னு நினெச்சிருக்கு விட்ருங்க பாவம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆனால் போரமில் தனி மனித தாக்குதல் அதிகம் ... மன வளர்ச்சி குன்றியவர்கள் அதிகம் உலவும் இடம் அது .//
அய்யோ மெண்டல் ஆஸ்பிடலா அது...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இல்லை நன் மூத்திர சந்து தேடி தான் போவேன் என்றால் போ .........மங்குனி யையும் கூட்டிட்டு போ//
இதுவும் நல்ல பாயிண்ட்..ஆனா குறிச்சு வெக்காதீங்க கவிச்ச

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஆர்.கே.சதீஷ்குமார்

யாருப்பா அது நம்ம ஆர்.கே.சதீஷ்குமார்அண்ணன் போரம் ல கொஞ்சநாள் சுத்த விடுங்க. அப்பறம் இப்படி பேச மாட்டாரு(பேசவே மாட்டாரு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

முதல்ல இந்த போரம்கிற விசயமே வேலை இல்லாத மக்களும்.. அல்லது வேலை நேரத்தில் வாங்குன சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை பார்க்காத ஆட்களும் வந்து தங்கள் குப்பைகளை கொட்டிப்போகிற இடம் அவ்வளவுதான். //
செம பாயிண்ட்..குறிச்சு வெச்சுக்குங்கப்பா//


பேனா இல்லியே. பென்சில்ல குறிக்கலாமா பாஸ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

ஆனால் போரமில் தனி மனித தாக்குதல் அதிகம் ... மன வளர்ச்சி குன்றியவர்கள் அதிகம் உலவும் இடம் அது .//
அய்யோ மெண்டல் ஆஸ்பிடலா அது...//


பாத்து சூதானமா இருங்கப்பு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

இங்க என்ன பிரச்சனை....நடக்குது ஃபோரம் நா என்ன..சிரிப்பு போலிஸ் ஏன் டென்சனா சுத்துது..?//

போரம்னா அது ஒரு புது சாப்புடுற itempaa

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

யாருப்பா அது நம்ம ஆர்.கே.சதீஷ்குமார்அண்ணன் போரம் ல கொஞ்சநாள் சுத்த விடுங்க. அப்பறம் இப்படி பேச மாட்டாரு(பேசவே மாட்டாரு//என்னை டரியல் ஆக்க சதி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Hello sgramesh1980@gmail.com,

Your unsubscription to tamizhbloggersforum was successful.

If you have questions related to this or any other Google Group, visit the Help Center at http://groups.google.com/support/?hl=en.

Thanks,

Google Groups//

I am very happy

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பாத்து சூதானமா இருங்கப்பு.//அப்படி இருந்தாலும் ஆப்பு வெச்சிடுறாய்ங்க

ஜானகிராமன் சொன்னது…

ரமேஷ். அட்வைஸ் செய்தோ, இது தப்புன்னு திரும்பத் திரும்ப சொல்லியோ மொக்கைப் போர் செய்வோர் மாறப்போவதில்லை. இதன் பயனின்மை அவர்களுக்கும் தெரியும். நம்முடைய ஆலோசனையை கேட்டுத் தான் எது நல்லது எது கெட்டது என்று அறிந்துகொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை. நமக்கும் அது வேலையில்லை. இது போன்ற மொக்கைப்போர்களை புறக்கணியுங்கள். எந்த எதிர்வினையும் செய்யாதீர்கள். அவர்களாகவே ஒரு கட்டத்தில் வெறுமை அடைந்து நிறுத்தி ஆக்கப்பூர்வமாக திரும்புவார்கள். அதுவரை, நல்ல விஷயங்களை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்போம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜானகிராமன்

வாங்க நண்பா. நன்றி. உங்கள் கருத்துகளுக்கு மிக்க மிக்க நன்றி..

V.Radhakrishnan சொன்னது…

குழுக்கள் என்றாலே குலுக்கல் தானாகவே நடைபெற அதிக வாய்ப்பு உண்டு. குழு மனப்பான்மை எவரையும் விட்டு வைப்பதில்லை.

கருத்து பரிமாற்றம் என்பது போய் வெறுப்பு பரிமாற்றம் நடைபெறுவது மிகவும் வாடிக்கை.

போரம்தனில் நல்ல விதத்தில் செயல்பட அனைவரும் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும்.

சௌந்தர் சொன்னது…

I am very happy////

இதை நாளைக்கு சொல்லுங்க ரமேஷ்

dheva சொன்னது…

பார்ம.. அப்படின்ன? இன்னா தம்பி? கிலோ என்ன விலை? சாம்பார் வைக்க முடியுமா? இல்லை கறிக்குழம்போடு சேத்து வச்சு சாப்பிடலாமா? பதிவுலகமா? அது எங்கப்பா கீது? பதிவர்களா யாரு அவுங்கோ?

ஓண்ணுமே புரியலப்பா... ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.. கேளு... நீ என் தம்பி நான் உன் அண்ணன்.. அவ்ளோதான்.. நமக்கு இன்னாத்துக்குப்பா உலக அரசியலும்.. ! நம்ம சட்டையையே நம்மலாள துவைக்க முடியல.. இன்னாதுக்கு ஊர்ல இருக்குறத எல்லம் துவைக்கணும்...!

கண்ணு பர்சனல் லைஃப்...பர்சனல் லைஃப்னு ஒண்ணு இருக்கு அதுல செயிக்கணும்... இன்னாதுக்கா? அட நான் எப்ப பென்சு கார்ல போறது.... ?

பார்ம் எல்லாம் எடுத்து அப்பால கடாசிட்டு.. 40 வயசுக்குள்ள ஒரு கம்பெனியோட சி.இ.ஓ. ஆகுறத ஆம்பிசனா வச்சுகிட்டு போய்கினே இருப்பா...

(தம்பி கமெண்டாச்சும் பிரிஞ்சுதா... இல்லாயா....ஹக்காம்.....)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//V.Radhakrishnan கூறியது...

குழுக்கள் என்றாலே குலுக்கல் தானாகவே நடைபெற அதிக வாய்ப்பு உண்டு. குழு மனப்பான்மை எவரையும் விட்டு வைப்பதில்லை.

கருத்து பரிமாற்றம் என்பது போய் வெறுப்பு பரிமாற்றம் நடைபெறுவது மிகவும் வாடிக்கை.

போரம்தனில் நல்ல விதத்தில் செயல்பட அனைவரும் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும்.//


கண்டிப்பா நடக்கும்னு எதிர்பாக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சௌந்தர் கூறியது...

I am very happy////

இதை நாளைக்கு சொல்லுங்க ரமேஷ்//

உயிரோட இருந்தாவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...//

அண்ணா என் அறிவுக்கண்ண திறந்துட்டீங்க. ஏகப்பட்ட பூட்டு திறந்த பழக்கமோ. இம்சை சொன்னான்.

எஸ்.கே சொன்னது…

நான் ஒரு வருஷம் முன் வெறும் ஃபோரத்தில் இருந்தேன் வேறு போரம்கள். பிறகு வேலை காரணமாக அவற்றை விட்டு விட்டேன். பிளாக் ஆரம்பித்து புதிய பிளாக்குகளை தேடலாம் என்ற தேடியபோது, அப்போதுதான் புதிய சண்டை ஓடிக் கொண்டிருந்தது. யார் பதிவுக்கு போய் பின்னூட்டம் போது, பாலோயர் ஆவது என்றே குழப்பமாக இருந்தது. ஒரு மாதம் வெறும் படிக்க மட்டும் செய்தேன். அப்புறம்தான் மற்ற பிளாக்குகளின் பின்னுட்டமே இட ஆரம்பித்தேன் என்றால் பாருங்கள். நானும் சமீபத்தில் பதிவர் ஃபோரமில் சேர்ந்தேன். எப்பா! வர மெயிலை படிச்சா தலைவலிதான் வருது! நல்ல வேளை நான் இதுவரை எதையும் எழுதலை! வெறும் செய்திக்காக அதில் இருக்கிறேன்! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ எஸ்.கே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//எனது பதிவை ரெண்டு நாளாக படிக்காத டெரர் அண்ணன்,//

நீ யார்டா என்னபத்தி பேச?? நான் உன் பதிவ படிப்பேன்... படிக்காம Faila போறென்... உனக்கு என்னா?? மச்சி நான் உன்னை திட்டிட்டேன்... வா நம இரண்டு பேரும் போய் சண்டை போடலாம்... நானும் நீயும் பிரபல பதிவர் எல்லாம் திட்டின சாட் உங்கிட்ட இருக்கா?? இல்லைனா சொல்லு மெயில அனுப்பரேன்... சீச்சிரமா போரம் வா அங்க வெயிட் பண்றேன்... வரும்போது மறக்காம அருண திட்டிட்டுவா மச்சி!!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அவர் போரமிலிருந்து வெளியில் போக நானும் ஒரு காரணம் என்பதில் வெட்கப் படுகிறேன்.//

சும்மா சொன்னா பத்தாது மச்சி!! ஒரு நாலு வாட்டி நீ சூஸைட் பண்ணிகாட்டு அப்பொதான் நம்புவேன்... :)). ஐடியா நான் தருகிறேன்...

1. நாக்க புடுங்கிக்கோ
2. மூக்க புடுங்கிக்கோ
3. கூவத்துல போய் குளி.
4. என் கூட பிரண்ட்ஷிப் வச்சிகோ...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//டிஸ்கி1: டிஸ்கி2: டிஸ்கி2: //

டிஸ்கி2: அப்புறம் டிஸ்கி3: போடனும் இந்த விஷயமே தெரியாம நீ எல்லாம்..... சொம்ப கீழ வை...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

வெளியூர், பட்டா, ரெட்டை, இலுமி, பருப்பு, பன்னி, நரி, இம்சை, முத்து. மங்கு எல்லாறும் வாங்க.... எதோ Foruma சொல்ராங்க... அங்க தினமும் சண்டை நடக்குமாம்... நாமலும் நடுவுல நாலு கல்லு விடலாம்... ச்சீ போய் அடி வாங்களாம்...

அருண் பிரசாத் சொன்னது…

present sir

Phantom Mohan சொன்னது…

Dear Sir,

During my online research, i'm very excited to learn about your forum. I'm very much interested to join this forum, please guide me how to join this group?

Thanking You,

Yours Wonderfully,
Phantom Mohan

Phantom Mohan சொன்னது…

எனக்கும் இந்த பதிவுலகத்தில் நிறைய பிரச்சனை இருக்கு, தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக்கிறேன், இந்த போரமில் இணைவதற்க்கு வழிகாட்டவும்.

Phantom Mohan சொன்னது…

ஒரு உண்மைய சொல்றேன், இந்த வலையுலகம், பதிவுலகம் சுத்த வேஸ்ட், மகா மட்டமான ஒரு இடம், ஜாலின்னு நாம நினைக்கிறோம்...

ஜாலியா டைம் பாஸ் பண்ணுரவங்களை விரல் விட்டு எண்ணிரலாம் (வேற யாரு நம்ம மொக்கைங்கதான்)

மத்தபடி பெண்கள் பின்னாடி சுத்துவத்ற்க்கு, சுயபுராணம் பாடுவதற்க்கு, பஞ்சாயத்து பண்ணுவதற்க்கு, அரசியல் பண்ணுவதற்க்கு தான் கூட்டம் ஜாஸ்தி.

வெட்டிப்பசங்களா, ஜாலியா இருங்கடா டேய்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ TERROR-PANDIYAN(VAS)

மச்சி நீ என்னை திட்டின chat record எல்லாமே என்கிட்டே இருக்கு. அருணை பத்தி போன் ல பேசினியே. அதுவும் ஆடியோவா வச்சிருக்கேன். இன்னிக்கு புதன் கிழமை. யார் கூட சண்டை போடணும் மச்சி. Schedule எடுத்து பாத்து சொல்லேன்.ப்ளீஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//அவர் போரமிலிருந்து வெளியில் போக நானும் ஒரு காரணம் என்பதில் வெட்கப் படுகிறேன்.//

சும்மா சொன்னா பத்தாது மச்சி!! ஒரு நாலு வாட்டி நீ சூஸைட் பண்ணிகாட்டு அப்பொதான் நம்புவேன்... :)). ஐடியா நான் தருகிறேன்...

1. நாக்க புடுங்கிக்கோ
2. மூக்க புடுங்கிக்கோ
3. கூவத்துல போய் குளி.
4. என் கூட பிரண்ட்ஷிப் வச்சிகோ...//


மச்சி இந்த முதல் மூணு point-ட செஞ்சி காட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//டிஸ்கி1: டிஸ்கி2: டிஸ்கி2: //

டிஸ்கி2: அப்புறம் டிஸ்கி3: போடனும் இந்த விஷயமே தெரியாம நீ எல்லாம்..... சொம்ப கீழ வை...//

ஓ 2 க்கப்புறம் 3-ஆ? சண்டைல மறந்துட்டேன். ஹிஹி
======================
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

வெளியூர், பட்டா, ரெட்டை, இலுமி, பருப்பு, பன்னி, நரி, இம்சை, முத்து. மங்கு எல்லாறும் வாங்க.... எதோ Foruma சொல்ராங்க... அங்க தினமும் சண்டை நடக்குமாம்... நாமலும் நடுவுல நாலு கல்லு விடலாம்... ச்சீ போய் அடி வாங்களாம்...//

மச்சி இடம் தெரியாம பேசுற. அங்க நம்மளை விட பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் இருக்காங்க.

ரூல்ஸ்:

- தினமும் யார்கூடயாவது சண்டை போடணும்

- அருண் என்னை அடிச்சிட்டான், இம்சை என்னை கேட்ட வார்த்தல திட்டினான்னு கம்ப்ளைன்ட் பண்ணனும்

- யாரும் பஞ்சாயத்து பண்ண வரலைனா தேவா மாம்ஸ் ஏன் பஞ்சாயத்துக்கு வரலைன்னு கேட்டு அவர் கூட சண்டை போடணும்

- புனைவு எழுத தெரியனும்

- chat record பண்ணி அடுத்தவனோட மானத்தை கப்பல் எத்தனும்


செய்வியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

present சார்//

டெரர் மச்சி அருண் என்னை இங்கிலீஷ் ல திட்டிருக்கு. வா வந்து என்னான்னு கேளு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Phantom Mohan

மச்சி சாகுற நாள் தெரிஞ்சிடுச்சின்னா வாழ்ற நாள் நரகமாயிடும். ஏன் உனக்கு ரிஸ்க். குடை வாங்கிட்டலே. சீக்கிரம் கார் வாங்கி செட்டில் ஆகப் பாரு....

//Phantom Mohan கூறியது...ஒரு உண்மைய சொல்றேன், இந்த வலையுலகம், பதிவுலகம் சுத்த வேஸ்ட், மகா மட்டமான ஒரு இடம், ஜாலின்னு நாம நினைக்கிறோம்.../

ரொம்ப பேசுற இரு போரம்ல கோர்த்து விடுறேன்

karthikkumar சொன்னது…

ஏன்னே அந்த போரம் அட்ரஸ் சொல்லுங்க விலாசம் விலாசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar கூறியது...

ஏன்னே அந்த போரம் அட்ரஸ் சொல்லுங்க விலாசம் விலாசம்///

http://tamizhbloggersforum.googlegroups.com/

Vithi valiyathu

மங்குனி அமைசர் சொன்னது…

யோவ் எனக்கு வாயில கேட்ட கேட்ட வார்த்தையா வருது , நீ ஏன்னா ம@##க்கு வெளிய வந்த , வேணுமின்னா அவனுகள அடிச்சு தொரத்த வேண்டியது தானே , நேத்து கொஞ்சம் ஜாலியா விளையாண்டோம் , இப்ப வா செரியச்சா ரெண்டுல ஒன்னு பாத்துருவோம் , அந்த பன்னாடைகள் எல்லாம் சும்மா ஒரு பப்ளிசிடிக்கு சண்டை போட்டுக்கிட்டு அலையுதுக /

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// மங்குனி அமைசர் கூறியது...

யோவ் எனக்கு வாயில கேட்ட கேட்ட வார்த்தையா வருது , நீ ஏன்னா ம@##க்கு வெளிய வந்த , வேணுமின்னா அவனுகள அடிச்சு தொரத்த வேண்டியது தானே , நேத்து கொஞ்சம் ஜாலியா விளையாண்டோம் , இப்ப வா செரியச்சா ரெண்டுல ஒன்னு பாத்துருவோம் , அந்த பன்னாடைகள் எல்லாம் சும்மா ஒரு பப்ளிசிடிக்கு சண்டை போட்டுக்கிட்டு அலையுதுக ///

எனக்கு பயமா இருக்கு சார். வீட்டுக்கு ஒரே பையன். கல்யாணம் கூட ஆகலை. ஏதாச்சும் ஆதாரத்த சப்மிட் பண்ணி, என் கல்யாணமே நடக்காம போயிடுச்சுனா?

மங்குனி அமைசர் சொன்னது…

Phantom Mohan கூறியது...

Dear Sir,

During my online research, i'm very excited to learn about your forum. I'm very much interested to join this forum, please guide me how to join this group?

Thanking You,

Yours Wonderfully,
Phantom Mohan////


மோகன் அங்க போகணுமின்னா ஒரு லேடி பேருல ப்ளாக் ஓபன் பண்ணிட்டு போ , ஏகப்பட்ட வரவேற்ப்பு கிடைக்கும் எல்லா கைடுளைனும் தானா கிடைக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மோகன் அங்க போகணுமின்னா ஒரு லேடி பேருல ப்ளாக் ஓபன் பண்ணிட்டு போ , ஏகப்பட்ட வரவேற்ப்பு கிடைக்கும் எல்லா கைடுளைனும் தானா கிடைக்கும்.//

யோவ் மங்குனி எனக்கு தெரியாம எப்ப இங்கிலீஷ் படிச்ச. அதான் நானு மோகன்க்கு கமெண்ட் ரிப்ளை போடல, ஹிஹி

ப.செல்வக்குமார் சொன்னது…

// நாம உலகத்த திருத்தவா பதிவு எழுதுறோம். வந்தோமா ஜாலியா கும்மி அடிச்சமா, போனமான்னு இல்லாம ஏன் ஸ்கூல் பசங்க மாதிரி இவ்ளோ சண்டை.//

இதுதானே நம்ம சங்கத்தோட கொள்கை ..௧!

ப.செல்வக்குமார் சொன்னது…

எனக்கு அப்படி ஒரு போரம் இருக்கறதே தெரியாது ..!! சரி விடுங்க .. பிரசினை நடக்குற இடம் தெரியாம இருக்குறது சந்தோசம்தானே ..

ப.செல்வக்குமார் சொன்னது…

75

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

75//
இங்க ஆளே இல்லை பயமா இருக்கு. நீ இங்க என்ன பண்ற

பனங்காட்டு நரி சொன்னது…

///// யோவ் எனக்கு வாயில கேட்ட கேட்ட வார்த்தையா வருது , நீ ஏன்னா ம@##க்கு வெளிய வந்த /////

நோட் தி பாயிண்ட் போலீஸ் ....,சீக்கிரம் சாட் ஹிஸ்டரி ரெடி பண்ணு ....,( ஆமாயா ...,நீயும் லிஸ்ட்ல இருக்கியா :)) ) இல்ல சும்மா தான் கேட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

///// யோவ் எனக்கு வாயில கேட்ட கேட்ட வார்த்தையா வருது , நீ ஏன்னா ம@##க்கு வெளிய வந்த /////

நோட் தி பாயிண்ட் போலீஸ் ....,சீக்கிரம் சாட் ஹிஸ்டரி ரெடி பண்ணு ....,( ஆமாயா ...,நீயும் லிஸ்ட்ல இருக்கியா :)) ) இல்ல சும்மா தான் கேட்டேன்///

நரி அடுத்த டார்கெட் மங்குதான். சீக்கிரம் படைகளை ரெடி பண்ணு...

ரோஸ்விக் சொன்னது…

நல்லவேளை நான் அந்த மூத்திர சந்துக்குள்ள வரல... :-)
நல்ல விஷயங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது தான்.. ஆனால்.....???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எச்சூஸ் மி, இந்த போரம்னா என்ன?

பெயரில்லா சொன்னது…

கொக்கமக்கா பஸ்ஸூல இந்த சைட் படிச்ச்சு வவுத்த வலிக்கிதுன்னு சொல்லிப்போட்டு கமெண்டை டிஸ்ஸேபில் பண்ணிப்புட்டாக

இந்த வேலையத்தவ வேலைய செய்யறதுக்கு பதிலா அங்கெய்ய் எதாச்சும் ந்ல்ல வேலயா செய்லாம்ல

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஏற்கனவே நம்மலுக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு, நீ வேற அங்கே போயி கையப் பிடிச்சி இழுத்திட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///மூத்த பதிவர்களின் அன்பு தம்பி, நம் எல்லோரையும் வழி நடத்தி செல்லும் அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.///

நீ எப்பவும் சொல்ற பேச்ச கேக்க மாட்டியாலே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஏற்கனவே நம்மலுக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு, நீ வேற அங்கே போயி கையப் பிடிச்சி இழுத்திட்டியா?///

அதான் தல பயமா இருக்கு. பேசாம உன் கூட எக்ஸாம் எழுத வந்திருக்கலாம்..


//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///மூத்த பதிவர்களின் அன்பு தம்பி, நம் எல்லோரையும் வழி நடத்தி செல்லும் அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.///

நீ எப்பவும் சொல்ற பேச்ச கேக்க மாட்டியாலே?//

கொஞ்சம் கொழுப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///இந்த போரமில் தினமும் 50-100 mails கண்டிப்பாக வரும். அனைத்தும் சண்டை போட்டுதான். ///

இவ்வள்வு வெட்டி ஆப்பிசர்ஸ் இருக்காங்களா? ஹி...ஹி...ஹி...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயரில்லா கூறியது...

கொக்கமக்கா பஸ்ஸூல இந்த சைட் படிச்ச்சு வவுத்த வலிக்கிதுன்னு சொல்லிப்போட்டு கமெண்டை டிஸ்ஸேபில் பண்ணிப்புட்டாக

இந்த வேலையத்தவ வேலைய செய்யறதுக்கு பதிலா அங்கெய்ய் எதாச்சும் ந்ல்ல வேலயா செய்லாம்ல//

Ok. Will do as per your instruction. Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///இந்த போரமில் தினமும் 50-100 mails கண்டிப்பாக வரும். அனைத்தும் சண்டை போட்டுதான். ///

இவ்வள்வு வெட்டி ஆப்பிசர்ஸ் இருக்காங்களா? ஹி...ஹி...ஹி...!//


ஆமா. ஸ்கூல் பிள்ளைங்க தோத்துடும்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர் அவர்கள் தலைமையில் தினமும் மூணு வேளை அஞ்சப்பரில் பிரியாணி தின்னுவிட்டு///

யோவ் அஞ்சப்பருக்கு வாய்யான்னு கூப்புட்டா ட்ரெய்ன் ஓட்டப் போறேன்னு சொல்லிட்டு இப்போ எகத்தாளத்தப் பாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர் அவர்கள் தலைமையில் தினமும் மூணு வேளை அஞ்சப்பரில் பிரியாணி தின்னுவிட்டு///

யோவ் அஞ்சப்பருக்கு வாய்யான்னு கூப்புட்டா ட்ரெய்ன் ஓட்டப் போறேன்னு சொல்லிட்டு இப்போ எகத்தாளத்தப் பாரு?///

hehe

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@மங்கு

//யோவ் எனக்கு வாயில கேட்ட கேட்ட வார்த்தையா வருது , நீ ஏன்னா ம@##க்கு வெளிய வந்த , வேணுமின்னா அவனுகள அடிச்சு தொரத்த வேண்டியது தானே , நேத்து கொஞ்சம் ஜாலியா விளையாண்டோம் , இப்ப வா செரியச்சா ரெண்டுல ஒன்னு பாத்துருவோம் , அந்த பன்னாடைகள் எல்லாம் சும்மா ஒரு பப்ளிசிடிக்கு சண்டை போட்டுக்கிட்டு அலையுதுக //

மங்கு மங்கு மங்கு! டிங்கு டிங்கு டிங்கு, நிங்கு நிங்கு நிங்கு.... நான் போரம்ல சேர்ந்துட்டேன்.... ஹா..ஹா..ஹா... பட்டா சேர்ந்து இருக்கு... புள்ளைங்க எல்லாம் சீக்கிறம் வந்து சேருங்கப்பா... பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கரது யாரா இருந்தாலும் போட்டு தள்ளுங்க....

அவிய்ங்க ராசா சொன்னது…

நல்ல பதிவு அண்ணே..

வால்பையன் சொன்னது…

//இங்கு சுவற்றில் எழுதாதே" அப்டின்னு ஒருத்தன் போர்டு வச்சானாம். அங்க வந்த ஒருத்தன் "சரி இனிமே எழுத மாட்டோம்" அப்டின்னு பெருசா எழுதிட்டு போனானாம்.//

செம!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வால்பையன் சொன்னது…

//இங்கு சுவற்றில் எழுதாதே" அப்டின்னு ஒருத்தன் போர்டு வச்சானாம். அங்க வந்த ஒருத்தன் "சரி இனிமே எழுத மாட்டோம்" அப்டின்னு பெருசா எழுதிட்டு போனானாம்.//

செம!
//

Thanks vaal

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது