Horoscope

திங்கள், ஜனவரி 10

2010-ல் நான் பிடிங்கிய ஆணிகள்

இம்சை பாபு பய வேற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கான். என்ன பண்றது எழுதிடுவோம். எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம். நிறைய புது அனுபவங்கள்.

ஜனவரி:

எங்க அண்ணன் பொண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் முறையாக இந்த வருட நியூ இயரை அவளுடன் கொண்டாடினேன். அதனாலதான் இந்த வருஷம் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு. இதற்க்கு முன் வேலை செய்த கம்பனில நான் சும்மாவே இருக்குறதா நினைச்சு ஏதாவது வேலை செய்வானே அப்படின்னு நம்பி புரோமோஷன் கொடுத்தாங்க(வாழ்க்கைல முதல் புரமோஷன்). Technical Support Engineer ல இருந்து Acting Team Leader. ஆனாலும் வழக்கம் போல ஆணியை புடுங்கவே இல்லை. ஹிஹி.

பிப்ரவரி:

சிங்கப்பூருக்கு வேலை தேடி  செல்லவேண்டும் என்பதால் ஆபீஸில் மேனேஜரிடம் பொய் சொல்லி லீவ் வாங்கி கிளம்பினேன்.முதன் முறையாக விமானப் பயணம். ஒரு புதிய அனுபவம். சிங்கப்பூர் வந்த ஆண்டு இது. பிளைட்டுல ஓசில சாப்பாடு கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டு அங்க உள்ள ஏர் ஹோஸ்டேர்ஸ் கிட்ட கேட்டா இது பட்ஜெட் Airways. அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....

மார்ச்:

பதிவர் கே.ஆர்.பி செந்தில் அண்ணனை சிங்கப்பூரில் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் பதிவர். சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) வேலை தேடியலைந்த இடத்தில் எல்லாம் மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு அப்டின்னு மிரட்டுற அளவுக்கு ஆயிடுச்சு. பதிவர் பிரபாகர் மற்றும் நல்லவன் கருப்பை சந்தித்தேன்.

ஏப்ரல்:

கமெண்ட் மட்டுமே போட்டுகொண்டிருந்த என்னை பதிவு எழுத சொல்லி கெஞ்சிய வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. ஒழுங்காக(????) பதிவு எழுத ஆரமித்தது இந்த மாதம்தான். உதவி செய்த வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. கோவம் வந்த அவங்களை போய் கும்முங்கோ.

மே:

சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல்.

ஜூன்:

பதிவுலகில் சிறந்த நண்பர்கள்(!!!!!!!) கிடைத்தனர்(இப்படி சொல்ல சொல்லி மிரட்டல் வந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன்). பன்னிகுட்டி, ஜெய், அருண் பிரசாத், டெரர், செல்வா, தேவா அண்ணா, சௌந்தர், மங்குனி, பட்டாப்பட்டி அறிமுகம் கிடைத்தது.முதல் முறையாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு போனதும் இந்த மாதம்தான்.பதிவுலகில் சிரிப்பு போலீஸ் அவர்களின் காவியங்கள் தொடர்ந்து வர ஆரமித்தது.

ஜூலை:

எங்க பாஸ் இந்த மாதம்தான் வெளியூரில் இருந்து ஆபீஸ்கு வந்தார். நிறைய விசயங்கள் கற்றுக்கொடுத்தார்.

ஆகஸ்டு:

எங்க ஊரில் இன்னொரு பிராஞ்ச் ஆரமித்தோம். இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ரொம்ப நல்லவன். என்னோட அம்மா, அப்பாவை சென்னைக்கு கூட்டி வந்து என்னோட தங்க வைத்தேன்.

செப்டம்பர்:

இதுவரை என் குடும்பத்தாரும், நண்பர்களும் மட்டுமே பிறந்தநாள் வாழ்த்து சொன்னாங்க. இந்த வருடம் அருண்,வெங்கட், பாபு,டெரர்  புண்ணியத்துல பதிவுலக நண்பர்களின் வாழ்த்துக்கள் கிடைத்தது(அய்யய்யோ அந்த பிளாகுக்கு போனா என் மானம் கப்பல் ஏறிடுமே).

அப்புறம் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் எனக்கு சில்லிபுரோட்டா, தோசை, மசாலா பால் வாங்கி தருவதற்காகவே வெளிக்குநாட்டில் ச்சீ வெளிநாட்டில் இருந்து வந்து என்னை சந்தித்தார். நான் பிசியா இருந்தாலும் விட மாட்டேங்குறாங்களே.

அக்டோபர்:

தமிழ் வலைப்பதிவர்கள் போரம் சண்டை ஆரமித்தது இந்த மாதம்தான். நானும் இன்னும் சிலரும் போரம் விட்டு வெளியேறினோம். பதிவர் ராஜன் திருமணத்துக்கு போய் அதுவும் சர்ச்சைக்குள் ஆகியது. மண்டப வாடகை பேமஸ் ஆனது. மங்குணியை மீட் பண்ணியது இங்குதான்.

நவம்பர்:

பதிவர் ஜெட்லியின் திருமணத்துக்கு போனேன். மறுபடியும் சிங்கபூர் பயணம். பதிவர்கள் வெறும்பய, பிரபாகர், ரோஸ்விக் ஆகியோரை சந்தித்தேன். வழக்கம் போல வெறும்பய செலவில் ஓசி சோறு கிடைத்தது. நல்லவேளை மாணவன், வைகையை பாக்கலை(எவ்ளோ சந்தோஷம். ஹிஹி). PSV புண்ணியத்தில் நானும், பாபுவும்  கப்பலை சுற்றி பார்த்தோம்.

டிசம்பர்:

எங்க வீடு விற்கப்பட்ட சோகமான மாதம் இது. ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.(மாசா மாசம் ஒருத்தர் சிக்கிடுறாங்களே). இருவரும் நண்பர் எஸ்.கே வை சந்தித்தோம். அவர் வீட்டிலும் ஓசி டீ. சிபி சென்னைக்கு வந்து எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார். விருதகிரி சூப்பர் ஹிட் படம் இந்த மாதம்தான் வெளியானது. வலைச்சரத்தில் போலீஸ் காவியம் அரங்கேறியது. ஹிஹி....

டிஸ்கி: இம்சை பாபு என் 13 வருட நண்பன். அதனால அவனை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. எப்போ ஊருக்கு போனாலும் ஓசி சாப்பாடு வாங்கி தர ரெடியா  இருக்கும் ஒரே நண்பன். 
....

125 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

//எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன்//

பதிவுலக அவ்வையார் நீங்கள்!

எஸ்.கே சொன்னது…

//சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) //

இதான் உதவியா?? பாவம் அவர்!

எஸ்.கே சொன்னது…

//நல்ல புரபைல். //

About me-யில் இருக்கே அந்த புரபைலா?

எஸ்.கே சொன்னது…

//இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ரொம்ப நல்லவன். //

உங்களை விடவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 1

//எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன்//

பதிவுலக அவ்வையார் நீங்கள்!
///

ரொம்ப நன்றி. உள்ளுவதெல்லாம் உயருள்ளல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 2

//சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) //

இதான் உதவியா?? பாவம் அவர்!
///

அவருக்கு புண்ணியம் தேடி தந்திருக்கனே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 3

//நல்ல புரபைல். //

About me-யில் இருக்கே அந்த புரபைலா?
///

ஆமாம் ஹிஹி

எஸ்.கே சொன்னது…

கடைசியில் ஒரு சோகம்! சாரி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

கடைசியில் ஒரு சோகம்! சாரி!//

S. Just feel.

எஸ்.கே சொன்னது…

ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.(மாசா மாசம் ஒருத்தர் சிக்கிடுறாங்களே)//

நானும் உங்களை சந்தித்தேன். முதல் வலையுக நட்பு சந்திப்பு! மகிழ்ச்சி!

எஸ்.கே சொன்னது…

விருதகிரி சூப்பர் ஹிட் படம் இந்த மாதம்தான் வெளியானது. //

அதானே இன்னும் விஜயகாந்த் எண்ட்ரி ஆகலையேன்னு பார்த்தேன்! எனிவே புரச்சி கலைஞரின் புரட்சி பதிவராயிட்டீங்க!

எஸ்.கே சொன்னது…

வலைச்சரத்தில் போலீஸ் காவியம் அரங்கேறியது. ஹிஹி....//

காவியத் தலைவன் (சே! இங்கேயும் விஜயகாந்த் படம்தான் வருது!) நீங்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 10

ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.(மாசா மாசம் ஒருத்தர் சிக்கிடுறாங்களே)//

நானும் உங்களை சந்தித்தேன். முதல் வலையுக நட்பு சந்திப்பு! மகிழ்ச்சி!//

உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 11

விருதகிரி சூப்பர் ஹிட் படம் இந்த மாதம்தான் வெளியானது. //

அதானே இன்னும் விஜயகாந்த் எண்ட்ரி ஆகலையேன்னு பார்த்தேன்! எனிவே புரச்சி கலைஞரின் புரட்சி பதிவராயிட்டீங்க!
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 12

வலைச்சரத்தில் போலீஸ் காவியம் அரங்கேறியது. ஹிஹி....//

காவியத் தலைவன் (சே! இங்கேயும் விஜயகாந்த் படம்தான் வருது!) நீங்கள்!
//

hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////\\\\\\

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம்.//////

தொடர்பதிவு எழுதுனா சரக்கு கிடைக்குமா? என்றா இது புதுக்கதையா இருக்கு?

எஸ்.கே சொன்னது…

என்ன ராம், போலீஸ்காருக்கு வீடுகட்டி கொடுத்திருக்கீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////\\\\\\//

இந்த கமெண்ட் மிகவும் அருமை. கண் கலங்கி விட்டேன். எப்படி உங்களால் இவ்ளோ அருமையான கருத்தை சொல்ல முடிகிறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம்.//////

தொடர்பதிவு எழுதுனா சரக்கு கிடைக்குமா? என்றா இது புதுக்கதையா இருக்கு?///

ஆமா. வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க பாஸ்

எஸ்.கே சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////\\\\\\

என்ன ராம், போலீஸ்காருக்கு வீடுகட்டி கொடுத்திருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இம்சை பாபு பய வேற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கான். /////

இம்சை....நீ நெசமாவே இம்சைதான்.... நீ பாட்டுக்கு தொடர்பதிவுக்கு கூப்புட்டு, இப்போ பாரு இன்னிக்கு நெலமைய? நடுராத்திரி சாவடிச்சுக்கிட்டு இருக்கான் போலீசு....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

என்ன ராம், போலீஸ்காருக்கு வீடுகட்டி கொடுத்திருக்கீங்க?//

இது எப்போ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////\\\\\\//

இந்த கமெண்ட் மிகவும் அருமை. கண் கலங்கி விட்டேன். எப்படி உங்களால் இவ்ளோ அருமையான கருத்தை சொல்ல முடிகிறது/////

பரவால்லையே புரிஞ்சுக்கிட்டேயே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////இம்சை பாபு பய வேற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கான். /////

இம்சை....நீ நெசமாவே இம்சைதான்.... நீ பாட்டுக்கு தொடர்பதிவுக்கு கூப்புட்டு, இப்போ பாரு இன்னிக்கு நெலமைய? நடுராத்திரி சாவடிச்சுக்கிட்டு இருக்கான் போலீசு....!//

இனி ஒரு பயலும் தொடர் பதிவுக்கு கூப்பிட கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////\\\\\\//

இந்த கமெண்ட் மிகவும் அருமை. கண் கலங்கி விட்டேன். எப்படி உங்களால் இவ்ளோ அருமையான கருத்தை சொல்ல முடிகிறது/////

பரவால்லையே புரிஞ்சுக்கிட்டேயே?//

:) தங்களிடம் பெற்ற ஞான பால்தான் தலை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம். நிறைய புது அனுபவங்கள்.//////

எங்கூட சேர்ந்துட்டேல்ல, இனி ஒவ்வொரு வருசமும் அப்படித்தான் இருக்கும்..... பாரு 2011க்கும் இதையேதான் எழுதுவ....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இதற்க்கு முன் வேலை செய்த கம்பனில நான் சும்மாவே இருக்குறதா நினைச்சு ஏதாவது வேலை செய்வானே அப்படின்னு நம்பி புரோமோஷன் கொடுத்தாங்க(வாழ்க்கைல முதல் புரமோஷன்). Technical Support Engineer ல இருந்து Acting Team Leader. ///////

பாவம், இந்தக்காலத்துலேயும் இப்படி அப்பாவிப்பயலுக இருக்காய்ங்களே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம். நிறைய புது அனுபவங்கள்.//////

எங்கூட சேர்ந்துட்டேல்ல, இனி ஒவ்வொரு வருசமும் அப்படித்தான் இருக்கும்..... பாரு 2011க்கும் இதையேதான் எழுதுவ....!///

தெரியாம உங்க கிட்ட வந்து மாட்டிகிட்டேன். இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் உண்டான்னு தெரியலை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....//////

ஏர்ஹோஸ்டஸ் கூடவா ஒண்ணும் தேறல....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பதிவர் கே.ஆர்.பி செந்தில் அண்ணனை சிங்கப்பூரில் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் பதிவர். சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) /////

உப்பிட்டவரை உள்ளளவும் நினை...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....//////

ஏர்ஹோஸ்டஸ் கூடவா ஒண்ணும் தேறல....?//

இல்லியே. வயித்தெரிச்சலை கிளப்பாதய்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////பதிவர் கே.ஆர்.பி செந்தில் அண்ணனை சிங்கப்பூரில் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் பதிவர். சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) /////

உப்பிட்டவரை உள்ளளவும் நினை...?//

Yes. Correct...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல். ///////

ஏதோ அப்பாவி கம்பேனி சிக்கிருச்சு போல......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஜூன்:
பதிவுலகில் சிறந்த நண்பர்கள்(!!!!!!!) கிடைத்தனர்(இப்படி சொல்ல சொல்லி மிரட்டல் வந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன்). பன்னிகுட்டி, ஜெய், அருண் பிரசாத், டெரர், செல்வா, தேவா அண்ணா, சௌந்தர், மங்குனி, பட்டாப்பட்டி அறிமுகம் கிடைத்தது.//////

பிரபலபதிவர்கள் நட்பு கிடைத்ததுன்னு போடலியா? ஓஓ அப்போதான் நான் ப்ளாக் ஆரம்பிச்சேனா? சரி சரி லூஸ்லவிடு....1

ஆமினா சொன்னது…

//எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். //

சூப்பர் ப்ளாக்கர் தத்துவம்

ஆமினா சொன்னது…

உங்க சம்பளத்தில் ;) விரைவிலேயே அதைவிட நல்ல வீடு வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஆகஸ்டு:
எங்க ஊரில் இன்னொரு பிராஞ்ச் ஆரமித்தோம். இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ////

என்னய்யா இது இம்சை உங்க ஆபீசுக்கு வந்து உனக்கே ஓசி டீ வாங்கிக் கொடுப்பானா? த்தூ..... அதுலாம் ஒரு ஆப்பீசு.. அதுக்கு இவரு ஒரு டேமேஜரு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அப்புறம் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் எனக்கு சில்லிபுரோட்டா, தோசை, மசாலா பால் வாங்கி தருவதற்காகவே வெளிக்குநாட்டில் ச்சீ வெளிநாட்டில் இருந்து வந்து என்னை சந்தித்தார். நான் பிசியா இருந்தாலும் விட மாட்டேங்குறாங்களே. /////

நான் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே தானே போட சொனேன், கடைசில எதுக்கு ஒரு லைன சேர்த்த..?

NaSo சொன்னது…

(((((((((((()))))))))))

NaSo சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நான் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே தானே போட சொனேன், கடைசில எதுக்கு ஒரு லைன சேர்த்த..?//

அப்போ இதெல்லாம் மண்டபத்துல எழுதிக் கொடுத்ததா???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////டிசம்பர்:
எங்க வீடு விற்கப்பட்ட சோகமான மாதம் இது. ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.///////

நல்லவேள நம்ம மீட்டிங்கு தோசையோட முடிஞ்சது.......

Unknown சொன்னது…

அழகிய(போலீஸ்???) டைரிக் குறிப்பு.

வெளங்காதவன்™ சொன்னது…

போலீஸ்கார் போலீஸ்கார்...
ஆஹா...
அருமை...
அபாரம்.......

(எதுக்கு இந்த கொலை வெறி?)

Chitra சொன்னது…

SUPERB!!!!!!

வினோ சொன்னது…

வருஷம் முழுசா ஓசி சாப்பாடும் நல்ல நட்புகளும்... :) செம

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

என் மச்சி.. இப்படி மாசங்களா பிரிச்சு எழுதாமா, டெய்லி தேதி போட்டு எழுதியிருந்தா.. பதிவுலகம் கலங்கியிருக்காது?..

ஹி..ஹி

அடுத்து எப்போ சிங்கை?..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அது என் மச்சி... நீ எப்பொ சிங்கை வந்தாலும் நான் மலேசியாவில் இருக்கேன்...

ஒருவேளை பட்டர்பிளை எபக்ட்டோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 35

//////ஜூன்:
பதிவுலகில் சிறந்த நண்பர்கள்(!!!!!!!) கிடைத்தனர்(இப்படி சொல்ல சொல்லி மிரட்டல் வந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன்). பன்னிகுட்டி, ஜெய், அருண் பிரசாத், டெரர், செல்வா, தேவா அண்ணா, சௌந்தர், மங்குனி, பட்டாப்பட்டி அறிமுகம் கிடைத்தது.//////

பிரபலபதிவர்கள் நட்பு கிடைத்ததுன்னு போடலியா? ஓஓ அப்போதான் நான் ப்ளாக் ஆரம்பிச்சேனா? சரி சரி லூஸ்லவிடு....1
///

திருச்சில உள்ள பரங்கிமலை ஜோதி பதிவை மட்டும் போட்டுட்டு பிரபல பதிவர்ன்னு ரீல் விட்டுக்கிட்டு அலைஞ்ச நேரம் அது மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமினா சொன்னது… 36

//எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். //

சூப்பர் ப்ளாக்கர் தத்துவம்
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமினா சொன்னது… 37

உங்க சம்பளத்தில் ;) விரைவிலேயே அதைவிட நல்ல வீடு வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 38

//////ஆகஸ்டு:
எங்க ஊரில் இன்னொரு பிராஞ்ச் ஆரமித்தோம். இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ////

என்னய்யா இது இம்சை உங்க ஆபீசுக்கு வந்து உனக்கே ஓசி டீ வாங்கிக் கொடுப்பானா? த்தூ..... அதுலாம் ஒரு ஆப்பீசு.. அதுக்கு இவரு ஒரு டேமேஜரு....
///

யோவ் அப்போ ஆபீஸ் ஓபன் பண்ணல. கார்பெண்டர் வேலை நடந்துக்கிட்டு இருந்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 39

//////அப்புறம் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் எனக்கு சில்லிபுரோட்டா, தோசை, மசாலா பால் வாங்கி தருவதற்காகவே வெளிக்குநாட்டில் ச்சீ வெளிநாட்டில் இருந்து வந்து என்னை சந்தித்தார். நான் பிசியா இருந்தாலும் விட மாட்டேங்குறாங்களே. /////

நான் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே தானே போட சொனேன், கடைசில எதுக்கு ஒரு லைன சேர்த்த..?
//

ஒரு விளம்பரம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 41

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நான் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே தானே போட சொனேன், கடைசில எதுக்கு ஒரு லைன சேர்த்த..?//

அப்போ இதெல்லாம் மண்டபத்துல எழுதிக் கொடுத்ததா???
///

மண்டபம்னா அந்த ராமேஸ்வரம் பக்கத்துல இருக்கே அதுவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 42

///////டிசம்பர்:
எங்க வீடு விற்கப்பட்ட சோகமான மாதம் இது. ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.///////

நல்லவேள நம்ம மீட்டிங்கு தோசையோட முடிஞ்சது.......
//

அடுத்து எப்போ இந்தியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

malgudi சொன்னது… 43

அழகிய(போலீஸ்???) டைரிக் குறிப்பு.
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது… 44

போலீஸ்கார் போலீஸ்கார்...
ஆஹா...
அருமை...
அபாரம்.......

(எதுக்கு இந்த கொலை வெறி?)
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra சொன்னது… 45

SUPERB!!!!!!
//

ஏன் SUPERB!?
எதற்கு SUPERB!?
எப்படி SUPERB!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வினோ சொன்னது… 46

வருஷம் முழுசா ஓசி சாப்பாடும் நல்ல நட்புகளும்... :) செம
///

இந்த வருஷம் இன்னும் ஓசி கிடைக்கலை. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... சொன்னது… 47

என் மச்சி.. இப்படி மாசங்களா பிரிச்சு எழுதாமா, டெய்லி தேதி போட்டு எழுதியிருந்தா.. பதிவுலகம் கலங்கியிருக்காது?..

ஹி..ஹி

அடுத்து எப்போ சிங்கை?..
///

அடுத்த பதிவுல எழுதிடலாம். ஏப்ரல் வருகிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... சொன்னது… 48

அது என் மச்சி... நீ எப்பொ சிங்கை வந்தாலும் நான் மலேசியாவில் இருக்கேன்...

ஒருவேளை பட்டர்பிளை எபக்ட்டோ?
///

இருக்கும் இருக்கும்

THOPPITHOPPI சொன்னது…

பிடிங்கிய ஆணிய எல்லாம் எடைக்கு போட்டா ஒரு கிலோ தேறுமா?

மாணவன் சொன்னது…

///சிங்கபூர் பயணம். பதிவர்கள் வெறும்பய, பிரபாகர், ரோஸ்விக் ஆகியோரை சந்தித்தேன். வழக்கம் போல வெறும்பய செலவில் ஓசி சோறு கிடைத்தது. நல்லவேளை மாணவன், வைகையை பாக்கலை//

நல்லவேள நாங்க தப்பிச்சோம்...ஹிஹி

மாணவன் சொன்னது…

//அடுத்து எப்போ சிங்கை?..//

ஏப்ரல் மாசம் வராரு... நம்ம எல்லோரும் இந்தோனிஷியா போயிடுவோம்....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 62

பிடிங்கிய ஆணிய எல்லாம் எடைக்கு போட்டா ஒரு கிலோ தேறுமா?///

இரும்பு சத்துக்காக எல்லா ஆணியையும் நானே தின்னுட்டேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 63

///சிங்கபூர் பயணம். பதிவர்கள் வெறும்பய, பிரபாகர், ரோஸ்விக் ஆகியோரை சந்தித்தேன். வழக்கம் போல வெறும்பய செலவில் ஓசி சோறு கிடைத்தது. நல்லவேளை மாணவன், வைகையை பாக்கலை//

நல்லவேள நாங்க தப்பிச்சோம்...ஹிஹி
///

இரு ராசா ஏப்ரல் ல வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 64

//அடுத்து எப்போ சிங்கை?..//

ஏப்ரல் மாசம் வராரு... நம்ம எல்லோரும் இந்தோனிஷியா போயிடுவோம்....ஹிஹி
//

நானும் வருவேன்

அனு சொன்னது…

அந்த நாலாவது பாரால ஏழாவது லைன் ரொம்ப சூப்பர்.. ;)

2011 ஆண்டில் வாரம் ஒரு பதிவரை சந்திக்க என் வாழ்த்துக்கள்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஹ .......ஹா ...இந்த 13 வருட நட்பு சீராக செல்வதற்கு ரமேஷ் தான் காரணம் ...எங்கே போனாலும் மெயில் பண்ணுறது ஊருக்கு வந்தால் சந்திக்காமல் போவது கிடையாது ...இது தான் முக்கியம் ...

Unknown சொன்னது…

இந்தவருடம் இன்னும் நிறைய மொக்கைபோட வாழ்த்துக்கள் ...

ரசிகன் சொன்னது…

இந்த வருடமும் மாதமொரு ட்ரீட்டும் பொழுதொரு போஸ்டுமாக பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Wishing U successful, joyful, colorful,wonderful, (post full!!!) 2011

Ramesh சொன்னது…

உங்க 2010.. ஒரு வருட சுருக்கம் பிரமாதம்...

Jey சொன்னது…

ஆணிய அதிமாத்தான் பிடிங்கி இருக்கியோ?

சௌந்தர் சொன்னது…

அப்போ போன வருடம் முழுவது சாப்படிற்கு செலவு இல்லைன்னு சொல்லுங்க

karthikkumar சொன்னது…

75

karthikkumar சொன்னது…

பதிவுலகில் சிரிப்பு போலீஸ் அவர்களின் காவியங்கள் தொடர்ந்து வர ஆரமித்தது///
enge enge ?

அருண் பிரசாத் சொன்னது…

சோத்து மூட்டை

Velmaheshk சொன்னது…

நீங்களே 52 கருத்துரைகள்[மாமூல்] கொடுத்துட்டீங்க..சரி விடுங்க தொடருங்கள் உங்கள்..கருத்துரைகள் ...

Madhavan Srinivasagopalan சொன்னது…

'நான் வரலை !'

Madhavan Srinivasagopalan சொன்னது…

யோவ் என்னய்யா.. என்னையப் பத்தி ஒன்னும் சொல்லலை..
அதான் என்னோட என்ட்ரி இல்லைங்கறத 'நானா வரலை'னு சொன்னேன்..

arasan சொன்னது…

காவலரே ரொம்ப சுவாரசியம் கொண்டு எழுதி இருக்கீங்க ...

நல்லா இருந்தது

வெங்கட் சொன்னது…

// வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான
மாதமும் இதுதான். அவரது செல்வவில்
KFC-யில் சாப்பாடு //

ஏன் சந்தோஷமா இருக்க மாட்டீங்க..?
KFC-ல சிக்கன் வாங்கி தந்ததை மட்டும்
தான் சொல்றீங்க..

Triplicane-ல " டீ " சாப்பிட்டது.,
மெரினா பீச்ல 50 ரூபாய்க்கு
பஜ்ஜி சாப்பிட்டது.. எல்லாம்
என் காசு தான்..
மங்குவும் இதுக்கு உடந்தை..

அனு சொன்னது…

@வெங்கட்

//Triplicane-ல " டீ " சாப்பிட்டது.,
மெரினா பீச்ல 50 ரூபாய்க்கு
பஜ்ஜி சாப்பிட்டது..//

எங்க கட்சியோட festival அலவன்ஸ் 5000 ரூபாய ரமேஷ் கிட்ட கொடுக்க சொன்னா.. ஒரு டீ, ரெண்டு பஜ்ஜி வாங்கி கொடுத்து ஒரு சின்ன புள்ளய ஏமாத்திட்டு இங்க வந்து என்னா பில்ட் அப்பு...

சரி.. போனது போகட்டும்.. மீதி பணத்தையாவது அவர்கிட்ட சேர்த்துடுங்க...

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல கலக்கலான இடுகை

செல்வா சொன்னது…

// Technical Support Engineer ல இருந்து Acting Team Leader. அனாலும் வழக்கம் போல ஆணியை புடுங்கவே இல்லை. ஹிஹி.//

இது சொல்லித்த்தான் நாங்க தெரிஞ்சிக்கனுமா ?!

செல்வா சொன்னது…

//அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....//

விடுங்க அண்ணா , இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு !!

செல்வா சொன்னது…

//சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல்.///

சிரிப்பு போலீஸ் ப்ரோபைலா ?

செல்வா சொன்னது…

'//தமிழ் வலைப்பதிவர்கள் போரம் சண்டை ஆரமித்தது இந்த மாதம்தான். நானும் இன்னும் சிலரும் போரம் விட்டு வெளியேறினோம். ப//

நல்ல வேளை அவுங்க தப்பிச்சாங்க !!

பனித்துளி சங்கர் சொன்னது…

//அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....//

கவலைப் படாதிங்க தல அடுத்த ப்ளைட்ல உங்களுக்கு பத்து பெண்கள் பார்சல் சொல்லிடுவோம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>இம்சை பாபு என் 13 வருட நண்பன். அதனால அவனை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. எப்போ ஊருக்கு போனாலும் ஓசி சாப்பாடு வாங்கி தர ரெடியா இருக்கும் ஒரே நண்பன்.

HA HAA HA IN YR DICTIONARY, WHO GIVE O C MEALS THEY R GOOD FRIENDS , GOOD POLICY. I TRY TO FOLLOW THIS

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 68 அந்த நாலாவது பாரால ஏழாவது லைன் ரொம்ப சூப்பர்.. ;)

2011 ஆண்டில் வாரம் ஒரு பதிவரை சந்திக்க என் வாழ்த்துக்கள்..//

அது எந்த லைன்னு இன்னும் தேடிட்டு இருக்கேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 69

ஹ .......ஹா ...இந்த 13 வருட நட்பு சீராக செல்வதற்கு ரமேஷ் தான் காரணம் ...எங்கே போனாலும் மெயில் பண்ணுறது ஊருக்கு வந்தால் சந்திக்காமல் போவது கிடையாது ...இது தான் முக்கியம் ...
///

நன்பேண்டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 70

இந்தவருடம் இன்னும் நிறைய மொக்கைபோட வாழ்த்துக்கள் //

Thanks annaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ரசிகன்
@ பிரியமுடன் ரமேஷ்

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Jey சொன்னது… 73

ஆணிய அதிமாத்தான் பிடிங்கி இருக்கியோ?
//

வாங்க அண்ணே உங்க பிளாக்குல கரையான் புத்து இருந்ததே எப்படி வந்தீக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 74

அப்போ போன வருடம் முழுவது சாப்படிற்கு செலவு இல்லைன்னு சொல்லுங்க
////

Yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 76

பதிவுலகில் சிரிப்பு போலீஸ் அவர்களின் காவியங்கள் தொடர்ந்து வர ஆரமித்தது///
enge enge ?
///

தெளிவா இருக்கும்போது பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது… 77

சோத்து மூட்டை
///

சோத்து மூட்டை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

VELMAHESH* சொன்னது… 78

நீங்களே 52 கருத்துரைகள்[மாமூல்] கொடுத்துட்டீங்க..சரி விடுங்க தொடருங்கள் உங்கள்..கருத்துரைகள் ..//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 81

யோவ் என்னய்யா.. என்னையப் பத்தி ஒன்னும் சொல்லலை..
அதான் என்னோட என்ட்ரி இல்லைங்கறத 'நானா வரலை'னு சொன்னேன்..
///

நீங்க என் மனதில் இருக்கீங்க ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அரசன் சொன்னது… 82

காவலரே ரொம்ப சுவாரசியம் கொண்டு எழுதி இருக்கீங்க ...

நல்லா இருந்தது
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 83

// வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான
மாதமும் இதுதான். அவரது செல்வவில்
KFC-யில் சாப்பாடு //

ஏன் சந்தோஷமா இருக்க மாட்டீங்க..?
KFC-ல சிக்கன் வாங்கி தந்ததை மட்டும்
தான் சொல்றீங்க..

Triplicane-ல " டீ " சாப்பிட்டது.,
மெரினா பீச்ல 50 ரூபாய்க்கு
பஜ்ஜி சாப்பிட்டது.. எல்லாம்
என் காசு தான்..
மங்குவும் இதுக்கு உடந்தை..
///

வேணாம்னு சொன்னவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி எல்லாம் வாங்கி கொடுத்துட்டு பேச்ச பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 84

@வெங்கட்

//Triplicane-ல " டீ " சாப்பிட்டது.,
மெரினா பீச்ல 50 ரூபாய்க்கு
பஜ்ஜி சாப்பிட்டது..//

எங்க கட்சியோட festival அலவன்ஸ் 5000 ரூபாய ரமேஷ் கிட்ட கொடுக்க சொன்னா.. ஒரு டீ, ரெண்டு பஜ்ஜி வாங்கி கொடுத்து ஒரு சின்ன புள்ளய ஏமாத்திட்டு இங்க வந்து என்னா பில்ட் அப்பு...

சரி.. போனது போகட்டும்.. மீதி பணத்தையாவது அவர்கிட்ட சேர்த்துடுங்க...
//

வெங்கட் சீக்கிரம் பணத்தோட வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 85

ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல கலக்கலான இடுகை
//
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 88

//சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல்.///

சிரிப்பு போலீஸ் ப்ரோபைலா ?
///

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ சொன்னது… 90

//அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....//

கவலைப் படாதிங்க தல அடுத்த ப்ளைட்ல உங்களுக்கு பத்து பெண்கள் பார்சல் சொல்லிடுவோம்
///

எப்போ எப்போ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 91

>>>இம்சை பாபு என் 13 வருட நண்பன். அதனால அவனை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. எப்போ ஊருக்கு போனாலும் ஓசி சாப்பாடு வாங்கி தர ரெடியா இருக்கும் ஒரே நண்பன்.

HA HAA HA IN YR DICTIONARY, WHO GIVE O C MEALS THEY R GOOD FRIENDS , GOOD POLICY. I TRY TO FOLLOW THIS
///

அடடா போட்டிக்கு ஆளா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

what about me?

Madhavan Srinivasagopalan சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
" எப்போ எப்போ? " //

புள்ளை ரொம்பத்தான் காஞ்சி போயிருக்கு..

வைகை சொன்னது…

/////\\\\\\

Thanks to Panni

வைகை சொன்னது…

அதானே இன்னும் விஜயகாந்த் எண்ட்ரி ஆகலையேன்னு பார்த்தேன்! எனிவே புரச்சி கலைஞரின் புரட்சி பதிவராயிட்டீங்க

வைகை சொன்னது…

பாவம், இந்தக்காலத்துலேயும் இப்படி அப்பாவிப்பயலுக இருக்காய்ங்களே

Madhavan Srinivasagopalan சொன்னது…

//@ Vakai "பாவம், இந்தக்காலத்துலேயும் இப்படி அப்பாவிப்பயலுக இருக்காய்ங்களே "//

'அடப்பாவி'னு சொல்லு.. அவனா 'அப்பாவி' ?

ம.தி.சுதா சொன்னது…

ஆணி பிடுங்கிய பதிவர் என நான் ஒர தலைப்பிட்டால் உங்களைத் தான் நாறடிப்பேன்... ஹ..ஹ..ஹ.. பெரிய அணிகள் தான் பிடுங்கியுள்ளீர்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

உங்க தலைவனுக்கு, தொப்புளை சுற்றி,ஏதோ கருப்பா இருக்காம்.. மச்சான் போன் பண்ணினாரு..
ஒய் என்னானு பாரு

:-)

விருதகிரி படம்.. ஓகோ..
(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அடச்சே.. பேர் போடாம போயிட்டேன்

இப்படிக்கு
அன்புடன் Dr.பட்டாபட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... சொன்னது… 116

உங்க தலைவனுக்கு, தொப்புளை சுற்றி,ஏதோ கருப்பா இருக்காம்.. மச்சான் போன் பண்ணினாரு..
ஒய் என்னானு பாரு

:-)

விருதகிரி படம்.. ஓகோ..
(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
//
Thank u for your valuable info. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

அடச்சே.. பேர் போடாம போயிட்டேன்

இப்படிக்கு
அன்புடன் Dr.பட்டாபட்டி//

Dr - இந்த கருமத்த எப்பையா வாங்கின ஒன்னு மன்னா பழகிருக்கோம். ஒரு வார்த்தை சொன்னியா?

சுபத்ரா சொன்னது…

2010-ன் நினைவுகளைக் கூறியுள்ள விதம் அருமை. 2011-ம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...!

மங்குனி அமைச்சர் சொன்னது…

இன்கொய்யாலே எங்க போனாலும் ஓசில தனியா கொட்டிக்கிட்டு வந்திடு ............ பக்கத்துல தான நான் இருக்கேன் ஒரு போன் பண்ணினா பறந்து வந்திடமாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 121

இன்கொய்யாலே எங்க போனாலும் ஓசில தனியா கொட்டிக்கிட்டு வந்திடு ............ பக்கத்துல தான நான் இருக்கேன் ஒரு போன் பண்ணினா பறந்து வந்திடமாட்டேன்
//

Next time ill call you

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஒரு நாளைக்கு மூணுவேளையும் சாப்பாடு வாங்கி கொடுத்தா நீங்க சரண்டரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Lakshmi சொன்னது… 123

ஒரு நாளைக்கு மூணுவேளையும் சாப்பாடு வாங்கி கொடுத்தா நீங்க சரண்டரா?//

ஆமா ஹிஹி

பெயரில்லா சொன்னது…

அன்னமிட்ட நண்பர்களை மறக்காத நண்பனே, சென்னை புத்தக கண்காட்சிக்கு இவ்வார இறுதியில் வரும் சந்தர்ப்பம் இருப்பின் சொல்லுங்கள். சந்திப்போம்..ரமேஷ்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சிவகுமார் கூறியது...

அன்னமிட்ட நண்பர்களை மறக்காத நண்பனே, சென்னை புத்தக கண்காட்சிக்கு இவ்வார இறுதியில் வரும் சந்தர்ப்பம் இருப்பின் சொல்லுங்கள். சந்திப்போம்..ரமேஷ்!!//

Sunday meet pannalaam

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது