செவ்வாய், மே 17

என்னவென்று சொல்வதம்மா!!!

பின்லேடனை போட்டு தள்ளியதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஒபாமாவை பார்க்க போனவாரம் வெள்ளை மாளிகை போயிருந்தேன். ஒபாமா மிகவும் நல்லவர். எனக்கு விருந்தெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் நாங்கள் இருவரும் நகர்வலம் சென்றோம். 

முதலில் அவர் அவரது வீட்டிற்கு கூட்டி போனார். அவர் என்னிடம் இங்கிலீஷ்ல தான் பேசினார். உங்களுக்கு புரியதுங்கிறதால தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்(இல்லன்னா ஒபாமாவுக்கு தமிழ் தெரியுமான்னு கமென்ட் போட்டு கொல்லுவானுக)

ஒபாமா: ஹாய் ரமேஷ். இதுதான் என்னோட தங்கை. நான் அக்கான்னுதான் கூப்பிடுவேன்.

நான்: !!!!

ஒபாமா: இதுதான் உங்க இந்தியன்ஸ் கும்பிடுற மாரியம்மன் கோவில். நாங்க பிள்ளையார் கோவில்ன்னு சொல்லுவோம். 

நான்: !!!!

ஒபாமா: இதுதான் எங்க ஊர் அசைவ ஹோட்டல். ஆனா நாங்க வெஜிடேரியன் ஹோட்டல்ன்னுதான் சொல்லுவோம்.

நான்: !!!!

ஒபாமா: இவர்தான் எங்க ஊர் போலீஸ். ஆனா நாங்க திருடன்னுதான் சொல்லுவோம்.
நான்: (பயங்கர கடுப்பாகி) லூசாப்பா நீங்க. எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றீங்க. 

ஒபாமா: (அமைதியாக) சரி நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு..

நான்: கேளுங்க 

ஒபாமா: இங்கிலீஷ் நியூ இயர் எப்போ கொண்டாடுவீங்க?

நான்: ஜனவரி 1 
ஒபாமா: ஏன்?

நான்: ஏன்னா அதுதான் வருசத்தோட முதல் மாசம். முதல் நாள்.
ஒபாமா: அப்டின்னா தமிழ் நியூ இயர் எப்போ கொண்டாடுவீங்க?

நான்:(ஆகா மாட்டிக்கிட்டமே) இப்போ தை 1 கொண்டாடுறோம்.

ஒபாமா: தமிழோட முதல் மாசம் எது?

நான்: சித்திரை.

ஒபாமா: அப்புறம் என்ன_________க்கு தை 1-ம் தேதி தமிழ் நியூ இயர் கொண்டாடுறீங்க?

நான்: அது வந்து..
ஒபாமா: இப்போ சொல்லு நீங்க லூசா? இல்லை நாங்க லூசான்னு..

நான்: (என்னவென்று சொல்வதம்மா)

டிஸ்கி: பல நூற்றாண்டுகளாக சித்திரை 1 அன்று கொண்டாடி வந்த தமிழ் புத்தாண்டை தை மாசம் மாத்திட்டாங்க. ஆனா சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்ன்னு  போட்டு அன்னிக்கு காசு மட்டும் சம்பாதிப்பாங்க. இப்போ ஆட்சி மாறிடுச்சு. 

இனிமேலாவது மறுபடியும் சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம்னு அம்மா அறிக்கை விட்டா நல்லா இருக்கும். நிறைய பேரோட ஆசையும் அதுதான். இதை அரசாங்கத்துக்கு சொல்றதுக்கு என்ன பண்ணனும்? இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த விஷயத்தை மட்டும் உங்கள் பஸ்,ட்விட்டர்ல ஷேர் பண்ணலாமே!!!!
...

35 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

:) vanakkam

மாலுமி சொன்னது…

இரு சரக்கு அடிச்சுட்டு வரேன்

Madhavan Srinivasagopalan சொன்னது…

//அவர் என்னிடம் இங்கிலீஷ்ல தான் பேசினார். //

ஓஹோ.. அவருக்கு இங்கிலீஷ் தெரியுமா ?

மாலுமி சொன்னது…

நல்ல விஷயம் தான்... முயற்சி பண்ணுவோம்.........
எனக்கு என்னமோ நீ புதுசா கட்சி ஆரம்பிக்கற மாதிரி தெரியுது..........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

பின்லேடனை போட்டு தள்ளியதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஒபாமாவை பார்க்க போனவாரம் வெள்ளை மாளிகை போயிருந்தேன்.///

அப்படியா? ஆச்சரியமா இருக்கே? தங்களின் வெள்ளை மாளிகை பயணம் எங்கனம் அமைந்ததென்று விளக்கமாக சொல்லிட வேண்டுகிறோம்! தாங்கள் வேறு யாரையெல்லாம் பார்த்தீர்கள்? தங்களின் இந்த திடீர் பயணத்தை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள்?
( நண்பா உனக்கு மட்டும் தான் மொக்கை போடத்தெரியுமா? ஹிஹிஹிஹி )

பெயரில்லா சொன்னது…

அம்மா வின் நேரடி பார்வைக்கு ஒரு கடிதம் எழுதலாம்... அல்லது தகவல் அறியும் சட்டத்தின் முலம் என்ன செயலாம் என்று கூகிள் தேடலாம் ......

Madhavan Srinivasagopalan சொன்னது…

//வெள்ளை மாளிகை போயிருந்தேன்.//

அடச்சே..
எவ்ளோ பெரிய ஆளுன்னு நெனைச்சேன்..
ஊட்டுக்குகு டிஸ்டம்பர் கூட அடிக்காம, சுண்ணாம்புதான்? அடிச்சிருக்குராணுக போல !!

மாளிகையாம்.. மாளிகை..

KRISHNAMOORTHY சொன்னது…

அம்மா வின் நேரடி பார்வைக்கு ஒரு கடிதம் எழுதலாம்... அல்லது தகவல் அறியும் சட்டத்தின் முலம் என்ன செயலாம் என்று கூகிள் தேடலாம் ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது… 5

பின்லேடனை போட்டு தள்ளியதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஒபாமாவை பார்க்க போனவாரம் வெள்ளை மாளிகை போயிருந்தேன்.///

அப்படியா? ஆச்சரியமா இருக்கே? தங்களின் வெள்ளை மாளிகை பயணம் எங்கனம் அமைந்ததென்று விளக்கமாக சொல்லிட வேண்டுகிறோம்! தாங்கள் வேறு யாரையெல்லாம் பார்த்தீர்கள்? தங்களின் இந்த திடீர் பயணத்தை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள்?
( நண்பா உனக்கு மட்டும் தான் மொக்கை போடத்தெரியுமா? ஹிஹிஹிஹி )//

விரைவில் போட்டோ போட்டு பதிவிடுகிறேன். ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

#$^&#^*(#()@! $^&@^&#^&&* $^&%^%$#%#((q*)(* $^&*@&(*@#u(* gy$&^&*hb $$%#%$#(()*.....!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது..."#$^&#^*(#()@! $^&@^&#^&&* $^&%^%$#%#((q*)(* $^&*@&(*@#u(* gy$&^&*hb $$%#%$#(()*.....! //

English is very funny language..!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//$^&#^*(#()@! $^&@^&#^&&* $^&%^%$#%#((q*)(* $^&*@&(*@#u(* gy$&^&*hb $$%#%$#(()*.....!//

யோவ பன்னி ரமேஷ் தானே திட்டின ..?அம்மாவை திட்டிராதே ......

ரமேஸ் உன் ஆதங்கம் புரிகிறது (அன்னிக்கவது நண்பர்கள் வீட்டில் ஓசூ சோறு கிடைக்கும் ன்னு )..சரி உன் கோரிக்கை பரிசிலனையில் உள்ளது ...அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்ல பன்னி நாளை கோடநாடு நோக்கி செல்கிறார்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//$^&#^*(#()@! $^&@^&#^&&* $^&%^%$#%#((q*)(* $^&*@&(*@#u(* gy$&^&*hb $$%#%$#(()*.....!//

யோவ பன்னி ரமேஷ் தானே திட்டின ..?அம்மாவை திட்டிராதே ......

ரமேஸ் உன் ஆதங்கம் புரிகிறது (அன்னிக்கவது நண்பர்கள் வீட்டில் ஓசூ சோறு கிடைக்கும் ன்னு )..சரி உன் கோரிக்கை பரிசிலனையில் உள்ளது ...அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்ல பன்னி நாளை கோடநாடு நோக்கி செல்கிறார்//////

அடப்பாவி பாபு, இது உன்னோட திட்டமா.... கொடநாடு கொடைக்கானல்லேயா இருக்கு? முன்னாடியே தெரியாம போச்சே?

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நன்றி....சூப்பர் பகிர்வு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வெள்ளை மாளிகைன்னா சென்ட்ரல் பக்கத்துல வெள்ளையா ஒண்ணு இருக்கே அதுவா?

ராஜி சொன்னது…

உண்மையிலேயே தாத்தாக்கு ரொம்பவே டைம் சரியில்லேதான் போல இருக்கு. கெரகம் நீ எல்லாம் அவரை நக்கலடிக்குறே. என்ன விருதகிரிக்கு தேசிய விருது கிடைக்கப் போற தெனாவட்டா?

பெயரில்லா சொன்னது…

excellent

நிரூபன் சொன்னது…

பின்லேடனை போட்டு தள்ளியதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஒபாமாவை பார்க்க போனவாரம் வெள்ளை மாளிகை போயிருந்தேன். ஒபாமா மிகவும் நல்லவர். எனக்கு விருந்தெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் நாங்கள் இருவரும் நகர்வலம் சென்றோம்.//

ஆஹா...நம்ம சகோ, வெள்ளை மாளிகைக்கெல்லாம் போறாரா...அவ்..

நிரூபன் சொன்னது…

இதுதான் உங்க இந்தியன்ஸ் கும்பிடுற மாரியம்மன் கோவில். நாங்க பிள்ளையார் கோவில்ன்னு சொல்லுவோம்.//

அவ்..............

நிரூபன் சொன்னது…

லூசாப்பா நீங்க. எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றீங்க.//

அப்போ நீங்க சொல்லுவது மகா மொக்கை என்று ஒபாமாவுக்கு தெரியாதா;-)))

நிரூபன் சொன்னது…

ஆனா சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்ன்னு போட்டு அன்னிக்கு காசு மட்டும் சம்பாதிப்பாங்க. இப்போ ஆட்சி மாறிடுச்சு.//

உங்களின் சிந்தனை அருமையாக இருக்கு சகோ.
இந்த விடயத்தை பத்திரிகை, மீடியாக்கள், தமிழ் அறிஞர்கள் மூலமாக அரசின் காதுகளை எட்டச் செய்ய வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட லகுடபாண்டிகளா ஆரம்பிச்சா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தங்கையை அக்கான்னு சொன்னானா...?? எட்றா அந்த அருவாளை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
#$^&#^*(#()@! $^&@^&#^&&* $^&%^%$#%#((q*)(* $^&*@&(*@#u(* gy$&^&*hb $$%#%$#(()*.....!//

திட்டுய்யா திட்டு நல்லா திட்டு, காறி மட்டும் துப்பிராதேயும் ஹிஹிஹிஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அடப்பாவி பாபு, இது உன்னோட திட்டமா.... கொடநாடு கொடைக்கானல்லேயா இருக்கு? முன்னாடியே தெரியாம போச்சே?//

ம்ஹும் கொடைக்கானல் போக போறதை எப்பிடி நாசூக்கா சொல்லுது பாரு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
வெள்ளை மாளிகைன்னா சென்ட்ரல் பக்கத்துல வெள்ளையா ஒண்ணு இருக்கே அதுவா?//

அப்பிடின்னு நினச்சிட்டு, தலைமை செயலகம் உள்ளே போயிறாதீரும் ஒய் டின்னு கட்டிபுடுவாயிங்க....

Madhavan Srinivasagopalan சொன்னது…

// MANO நாஞ்சில் மனோ கூறியது..."
அப்பிடின்னு நினச்சிட்டு, தலைமை செயலகம் உள்ளே போயிறாதீரும் ஒய் டின்னு கட்டிபுடுவாயிங்க...."//

ஐய்யா.. சாமி.. அது ரிப்பன் கட்டிடம்.. சென்னை மாநராட்சி தலைமை அலுவலகம்..

Chitra சொன்னது…

இனிமேலாவது மறுபடியும் சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம்னு அம்மா அறிக்கை விட்டா நல்லா இருக்கும். நிறைய பேரோட ஆசையும் அதுதான். இதை அரசாங்கத்துக்கு சொல்றதுக்கு என்ன பண்ணனும்?


..... அடுத்த சித்திரை முதலாம் தேதி - ஒரு உண்ணாவிரத போராட்டம் பெரிய அளவில் நடத்தலாம். :-)))))

♔ம.தி.சுதா♔ சொன்னது…

////ஒபாமா: இப்போ சொல்லு நீங்க லூசா? இல்லை நாங்க லூசான்னு..////

சிந்திக்க வேண்டியிருக்கே நியாயமான கேள்வி தான் கேட்டிருக்கார்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

Charles சொன்னது…

உங்களுக்கான பதில் இந்த வலை பூக்களில் உள்ளது..
http://tamilcharam.net/tamil-new-year-choose-the-right-one/
http://ilavarasanr.blogspot.com/2011/04/blog-post_13.html
படித்து பார்க்கவும். இதற்கு மேலும் சித்திரையைதான் கொண்டாடுவேன் என்றால் அது உங்கள் விருப்பம்தான். ஏனென்றால் நாம் கொண்டாடுவதை எந்த அரசும் தடை செய்ய முடியாது..

! சிவகுமார் ! சொன்னது…

அப்படி போடுங்க அருவாள.நமக்கு எப்பவுமே ஏப்ரல் பதினாலுதான் தமிழ் புத்தாண்டு.

மங்குனி அமைச்சர் சொன்னது…

he.he.he........sari vidu inime thamil puththaanda april 1 vachchikkiralaam

மங்குனி அமைச்சர் சொன்னது…

////

No Such Post

சன்னலை மூடு////

ha,ha,.ha...... thamil manam unakkum aappu vachchittaangalaa ???

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நீங்க ஒபாமாவை பார்க்க போனீங்களா?இல்லை அவுரு தங்கச்ச்யை லூட் வுட போனீங்களா?

ஷர்புதீன் சொன்னது…

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது