ஞாயிறு, மே 29

கொடை..கோடை..கொண்டாட்டம்!!!

 
 இதுவரைக்கும் பதிவுலகிலும், போரமிலும் காறி துப்பிக்கொண்ட டெரர் கும்மி குரூப் நண்பர்கள் சந்திப்பு கேவலமாக கோலாகலமாக கொடைக்கானலில் நிறைவேறியது. அங்கு பதிவுலகம் பற்றியும், அதை முன்னேற்றவும் மூன்று நாள் டிஸ்கசன் நடத்தினோம். கொடைக்கானல் போக ஐடியா தந்தது பண்ணியது மாலுமி-புரபஷனல் குடிகாரன்(இவர் பதிவரான்னு யாராச்சும் கேட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல். இவர் ஒரு காப்பி-பேஸ்ட் பதிவர்).
 நரியை பார்த்ததும் தீக்குளிக்க முடிவு பண்ணிய ஜூனியர் அருண் 

காலை ஆறு மணிக்கு நானும் பாபுவும் எங்க ஊர்ல இருந்து கிளம்பினோம். பன்னிக்குட்டி அவரோட ஊர்ல இருந்து கிளம்பினார். மூணு பேரும் மதுரை மாட்டுத்தாவணியில் சந்தித்தோம். இந்த ரெண்டு பசங்களும் காலை சாப்பாட்டுக்கு என்னை காசு கொடுக்க வச்சிட்டாங்க.
 மாலுமி,பன்னி,நரி,செல்வா,நான்,(பின்னால்)அருண்,இம்சை பாபு 

அப்புறம் கிளம்பி கொடைக்கானல் போனோம். மூணு மணிக்கே வர்றேன்னு சொன்ன மாலுமி, ஜூனியர் அருண் மற்றும் நரி அஞ்சு மணிக்கே வந்துட்டாங்க. வரும்போது கொடைக்கானல் கண்ணீர் விட்டு கதறினது தனிக்கதை.

அடிக்கிற குளிரில் ஐஸ் கிரீம்க்காக காத்திருக்கிறோம். ஹிஹி
சென்னைல இருந்து வந்த நரி ஈரோட்டுல கோயமுத்தூர் ஸ்வீட்ஸ் போர்ட பார்த்து அதான் கோயமுத்தூர்ன்னு நினைச்சு இறங்கிட்டான். சந்தேக கேசுல மாட்டிக்கிட்ட நரியை ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஜூனியர் அருணும்,மாலுமியும் மீட்டுக்கிட்டு வந்தாங்க.
 
ஈரோட்டு போலீஸ் நிலையத்தில் அடி வாங்கின பிறகு நரியின் தோற்றம்
கடுப்பான பன்னி நரியை போட்டு தள்ள முயன்ற போது(நரியை போட்டு தள்ளிட்டு பன்னியை ப்ளாக்மெயில் பண்ணலாமா?)
 
 இம்சை பாபு,மாலுமி,நான்
அப்புறம் எல்லோரும் வெளில கிளம்புனோம். டிரைவர்தான் வண்டி ஓட்டினாரு. எல்லோரும் போறம்ல பேசிக்கிற மாதிரியே வாடா மச்சி அப்டின்னு உரிமையா பேசிக்கிட்டே வந்தோம். டிரைவர் கூட ரொம்ப வருஷ பிரண்டுன்னு நினைச்சிருப்பாரு. அப்பத்தான் மாலுமி நரிகிட்ட டேய் உன் பேரு என்னடான்னு கேட்டாரு. டிரைவர் வாழ்க்கையே வெறுத்து வண்டிய நிப்பாட்டிட்டு மலைல இருந்து கீழ குதிச்சிட்டாரு. அப்புறம் மாலுமிதான் வண்டி ஓட்டிட்டு வந்தார்.

ஒருத்தன் என் பேரு பன்னிகுட்டின்னு சொல்றான். ஒருத்தன் என் பேரு நரின்னு சொல்றான். நான் கூட பயந்துட்டேன். ஏதாச்சும் zoo-குள்ள வந்துட்டமான்னு.

 
பின்ன உலக பொருளாதாரத்த பத்தியும், அரசியல பத்தியும், நாட்டு நடப்ப பத்தியும் சத்தியமா எதுவும் பேசலை. வழக்கம் போல மொக்கைதான். மறுநாள் செல்வா காலைல பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு சாயந்தரம் மூணு மணிக்குத்தான் வந்தான். கேட்டதுக்கு ஆபீஸ் போற நியாபகத்துல லேட்டா வந்திட்டதா சொன்னான்.
பண்ணும் ரொட்டியும் சாப்பிடும் பன்னிக்குட்டி 

 
செல்வாவின் மொக்கையில் இருந்து தப்பிக்க நானும்,பாபுவும் செல்வா வந்த உடனையே கொடைக்கானல்ல இருந்து கிளம்பிட்டோம்.

டிஸ்கி 1: பொதுமக்கள் நலன் கருதி(எத்தன தடவதான் கருதுறது) மாலுமி, இம்சை பாபு மற்றும் பன்னிக்குட்டியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

டிஸ்கி 2:  இரவு பாத்ரூம் போறேன்னு மலை உச்சியில் ஏறி கீழே விழ இருந்த நரியை காப்பாற்றிய முருகன் என்ற நண்பருக்கு நன்றி. அவர்தான் ரெண்டுநாள் எங்களுக்கு சாப்பாட்டு செஞ்சு போட்டவர். அவர் மட்டும் இல்லைன்னா இன்னிக்கு நரிக்கு பால்தான்.
..59 கருத்துகள்:

நாகராஜசோழன் MA சொன்னது…

வடை...................

நாகராஜசோழன் MA சொன்னது…

இதுக்கு என்ன கருத்துரை சொல்லறது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இதுவரைக்கும் பதிவுலகிலும், போரமிலும் காறி துப்பிக்கொண்ட டெரர் கும்மி குரூப் நண்பர்கள் சந்திப்பு கேவலமாக கோலாகலமாக கொடைக்கானலில் நிறைவேறியது. //////

ஓஹோ அதுதான் நம்ம டெரர் கும்மி குரூப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இவர் பதிவரான்னு யாராச்சும் கேட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல். இவர் ஒரு காப்பி-பேஸ்ட் பதிவர்//////

அபடின்னா காப்பில பேஸ்ட்ட கலக்கி குடிக்கிறவரா.....?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஹி ..ஹி ..டேய் அதுல பன்னி மூஞ்சிய பார்த்திருக்கேன் ..மாலுமி பார்த்து இருக்கேன் ..ஆனா அது யாருடா இம்சை அரசன் பாபு ..ரொம்ப நல்ல பையனா அமைதியா ..சாதுவா இருக்கானே ....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நரியை பார்த்ததும் தீக்குளிக்க முடிவு பண்ணிய ஜூனியர் அருண் //////

ஓ அதுதான் நரி அடிக்கடி சூசைட் பண்ண ட்ரை பண்றானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////இவர் பதிவரான்னு யாராச்சும் கேட்டா பிச்சிபுடுவேன் ராஸ்கல். இவர் ஒரு காப்பி-பேஸ்ட் பதிவர்//////

அபடின்னா காப்பில பேஸ்ட்ட கலக்கி குடிக்கிறவரா.....?//


கண்டு பிடிச்சிட்டியே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இம்சைஅரசன் பாபு..கூறியது...
ஹி ..ஹி ..டேய் அதுல பன்னி மூஞ்சிய பார்த்திருக்கேன் ..மாலுமி பார்த்து இருக்கேன் ..ஆனா அது யாருடா இம்சை அரசன் பாபு ..ரொம்ப நல்ல பையனா அமைதியா ..சாதுவா இருக்கானே ....////////

அவர தெரியலீங்களா....அவர தெரியலீங்களா.... அவருதான் நெல்லை மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////மூணு பேரும் மதுரை மாட்டுத்தாவணியில் சந்தித்தோம்.//////

ஆமா செம்மொழி மாநாட்டுக்கு அப்புறம் இதுதான் பெரிய மீட்டிங்குன்னு பேசிக்கிறாங்க....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////இம்சைஅரசன் பாபு..கூறியது...
ஹி ..ஹி ..டேய் அதுல பன்னி மூஞ்சிய பார்த்திருக்கேன் ..மாலுமி பார்த்து இருக்கேன் ..ஆனா அது யாருடா இம்சை அரசன் பாபு ..ரொம்ப நல்ல பையனா அமைதியா ..சாதுவா இருக்கானே ....////////

அவர தெரியலீங்களா....அவர தெரியலீங்களா.... அவருதான் நெல்லை மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளரு.....!//

பாபு இதுக்கு நீ நாண்டுகிட்டு சாவலாம்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அவர தெரியலீங்களா....அவர தெரியலீங்களா.... அவருதான் நெல்லை மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளரு.....//

யோவ அவன பார்த்த அப்படி தெரியலை ரொம்ப பாவம் ..அப்பிராணி ..அவன் போய் தப்ப பேசாதீங்க பா ...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//பாபு இதுக்கு நீ நாண்டுகிட்டு சாவலாம்//

ஆசியா பசிபிக் எல்லாம் உயிரோட இருக்கும் போது ...நான் ஏண்டா சாவனும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இந்த ரெண்டு பசங்களும் காலை சாப்பாட்டுக்கு என்னை காசு கொடுக்க வச்சிட்டாங்க.//////

மதியம் வத்தலக் குண்டுல தலப்பாகட்டி பிரியாணிய ஓசில சாப்புட்ரலாம்னு சும்மா நாலு மினி இட்லிய வாங்கி கொடுத்து எஸ்கேப் ஆகலாம்னு பாத்தே..... கடைசில முடியல..... யாருகிட்ட....?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கடைகானலை நாரடிச்ச பாவிகளா பன்னிகளா எலேய் உருப்புடுவீன்களா எலேய் என்னை எதுக்குலேய் கூப்பிடலை...??

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கொடைகானல் போலீஸ் இந்த பக்கிரிகளை வலை வீசி தேடுராயிங்களாம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பதிவர் பெயர்களை கேட்ட டிரைவரை நினச்சா பாவமா இருக்குய்யா கண்டிப்பா அவன் பத்து நாள் தூங்கி இருக்கமாட்டான்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முகமூடி பிசாசுங்க வருதுலேய் எடுலேய் மக்கா அந்த வீச்சருவாளை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செல்வா எதுக்குமே சரிப்பட மாட்டான்னு சொல்றியா..? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐயோ குடிச்சி ஸாரி குளிச்சி என்னை கடுப்பேத்துரானுகளே......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் யார்லேய் அங்கே....?? கொடைக்கானலை பினாயில் ஊத்தி கழுவுங்கலெய் முதல்ல....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆக ஒரு வழியா கொடைக்காணல் நாசமாபோச்சி போங்க....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்கே பன்னா??? எலேய் பன்னி பக்கார்டி எங்கலேய்...??

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வந்த ஸ்பீடுல ஓட்டு போட மறந்துட்டேன் இதோ மக்கா இப்போ போட்டுர்றேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போய்ட்டு அப்பால வர்ரேன்.....

மாலுமி சொன்னது…

போலிசு........
ஒரு போட்டோல நாய் ஒன்னு இருக்குது??? அது எதுக்கு ???
காலைல ஏரி பக்கம் வாக்கிங் போகும் போது ஒரு நாய் உன்ன பாத்துட்டு பயந்துட்டு ஓடுசே........அந்த நாய் தானே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

பன்னியோட முகத்த பார்க்க ஆவலோட வந்த என்னை இப்புடி ஏமாத்திட்டியே பொலீஸ்

middleclassmadhavi சொன்னது…

:-))
டிரைவர் என்ன ஆனாரு?!!

பெயரில்லா சொன்னது…

மச்சி ..,எதுக்குடா ..,பன்னிகுட்டியா வெட்டுராறு அந்த பதிவரு

வெங்கட் சொன்னது…

கொடைகானல் இருக்கும் போது
ஒரு பிரபல பதிவர்க்கு போன்
பண்ணி பேசுனீங்களாமே..?!!

அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
டெலிபோன் உரையாடல் எங்கே காணோம்.?!

வெங்கட் சொன்னது…

@ மாலுமி.,

// ஒரு போட்டோல நாய் ஒன்னு இருக்குது???
அது எதுக்கு ??? காலைல ஏரி பக்கம் வாக்கிங்
போகும் போது ஒரு நாய் உன்ன பாத்துட்டு
பயந்துட்டு ஓடுசே........அந்த நாய் தானே //

போலீஸோட கேர்ள் பிரண்ட கிண்டல்
பண்ணாதீங்க..!

Mohamed Faaique சொன்னது…

பொது மக்கள் நலன் கருதி, உங்க மூஞ்சையும் மறைத்து விட இருந்துச்சு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இம்சைஅரசன் பாபு..கூறியது...
//அவர தெரியலீங்களா....அவர தெரியலீங்களா.... அவருதான் நெல்லை மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளரு.....//

யோவ அவன பார்த்த அப்படி தெரியலை ரொம்ப பாவம் ..அப்பிராணி ..அவன் போய் தப்ப பேசாதீங்க பா .../////

என்னது அப்பிராணியா? ஓ இதுதான் அந்த டெக்குனிக்கா.....? இது ஒலக நடிப்புடா சாமி.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////MANO நாஞ்சில் மனோ கூறியது...
கடைகானலை நாரடிச்ச பாவிகளா பன்னிகளா எலேய் உருப்புடுவீன்களா எலேய் என்னை எதுக்குலேய் கூப்பிடலை...??//////

யோவ் உன்னைய கூப்புடனும்னா தனியா ஒரு தண்ணி லாரி ரெடி பண்ணனுமே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////MANO நாஞ்சில் மனோ கூறியது...
கொடைகானல் போலீஸ் இந்த பக்கிரிகளை வலை வீசி தேடுராயிங்களாம்..../////

என்னன்னு தெரியல இந்தவாட்டி கொடைக்கானல் புல்லா ஒன்லி லேடி போலீஸ்தான், அதுவும் ஃப்ரெஷ்சா ட்ரெயினிங் முடிச்சிட்டு வந்தவங்க எல்லாரும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////MANO நாஞ்சில் மனோ கூறியது...
பன்னிக்கே பன்னா??? எலேய் பன்னி பக்கார்டி எங்கலேய்...??///////

பகார்டியெல்லாம் எப்பவோ நரி சப்பி சப்பி சாப்புட்டு முடிச்சிருச்சு மக்கா....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////middleclassmadhaviகூறியது...
:-))
டிரைவர் என்ன ஆனாரு?!!////////

டிரைவர், கண்டக்டர் ஆனாரு... பின்ன என்னங்க, டிரைவர் டிரைவராத்தானே இருப்பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
பன்னியோட முகத்த பார்க்க ஆவலோட வந்த என்னை இப்புடி ஏமாத்திட்டியே பொலீஸ்/////

யோவ் அங்க போட்டிருக்கறது என்ன கரடி மூஞ்சியா...? நல்லா பாருய்யா....!

வைகை சொன்னது…

தங்களின் இந்த நகைச்சுவையான இடுகை மனதை லேசாக்குகின்றன!

வைகை சொன்னது…

காலை ஆறு மணிக்கு நானும் பாபுவும் எங்க ஊர்ல இருந்து கிளம்பினோம்//

ங்கொய்யால.... ஆபிஸ்க்கு 10 மணிக்கு போற... ஓசி சோறுக்கு ஆறு மணிக்கேவா?

கோமாளி செல்வா சொன்னது…

//கேட்டதுக்கு ஆபீஸ் போற நியாபகத்துல லேட்டா வந்திட்டதா சொன்னான்.//

ஹி ஹி .. வெளியில சொல்லிட்டீங்களே :-(

கோமாளி செல்வா சொன்னது…

//ஆமா செம்மொழி மாநாட்டுக்கு அப்புறம் இதுதான் பெரிய மீட்டிங்குன்னு பேசிக்கிறாங்க....!/

அப்படியா பேசிக்கிட்டாங்க .. பார்ரா ..

கோமாளி செல்வா சொன்னது…

//பிளாகர் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

பன்னியோட முகத்த பார்க்க ஆவலோட வந்த என்னை இப்புடி ஏமாத்திட்டியே பொலீஸ்//

கூகிள் ல பன்னிக்குட்டின்னு தேடிப்பாருங்க .. வரும்.. அத பாக்க இவ்ளோதூரம் எதுக்கு வந்தீங்க ?

karthikkumar சொன்னது…

தங்களின் இந்த நகைச்சுவையான இடுகை வயிற்றை கலக்குகின்றன...:))

அருண் பிரசாத் சொன்னது…

ஆழ்ந்த கருத்துக்கள்... அற்புதமான சிந்தனை... மெச்சினேன் உமது பதிவை.....கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊ

பட்டாபட்டி.... சொன்னது…

ஹி..ஹி.. போட்டோ போட்டிருக்க போல...!!!

ஹி..ஹி

நீயும் அதுமாறி மூஞ்சிய மறச்சிருந்தா.. பொண்னு பார்க்க வசதியா இருந்திருக்குமில்ல..
ஹி..ஹி

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே :)

மாணவன் சொன்னது…

தங்களின் இந்த நகைச்சுவையான இடுகை மனதை லேசாக்குகின்றன!

மாணவன் சொன்னது…

ஆழ்ந்த கருத்துக்கள்... அற்புதமான சிந்தனை... மெச்சினேன் உமது பதிவை.....

மாணவன் சொன்னது…

ஹி..ஹி.. போட்டோ போட்டிருக்க போல...!!!

ஹி..ஹி

நீயும் அதுமாறி மூஞ்சிய மறச்சிருந்தா.. பொண்னு பார்க்க வசதியா இருந்திருக்குமில்ல..
ஹி..ஹி

மாணவன் சொன்னது…

தொடரட்டும் உங்கள் பொன்னான நகைச்சுவைப்பணி :))

Madhavan Srinivasagopalan சொன்னது…

// இந்த ரெண்டு பசங்களும் காலை சாப்பாட்டுக்கு என்னை காசு கொடுக்க வச்சிட்டாங்க. //

அப்ப நீங்க அவுட் ஆஃப் ஃபார்மா ?

ஈரோடு, கயமுத்தூர் போர்டு.. -- ஜெயிலு.. -- நல்ல கற்பனை..

ராஜி சொன்னது…

ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் குடுத்ததுக்கே தலையில துண்டைப் போட்டுக்கிட்டானே?!! அப்போ ரமேசுக்கு ஓசி சாப்ப்பாடு வாஙிக் குடுத்தவங்க கதி?!!

Softy சொன்னது…

Do Visit

http://verysadhu.blogspot.com

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Softy சொன்னது…

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy சொன்னது…

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

காவ்யா சொன்னது…

வணக்கம் நண்பரே..
வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.

என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.

Softy சொன்னது…

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

Tamil Unicode Writer சொன்னது…

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது