திங்கள், செப்டம்பர் 19

தோல் கொடுப்பான் தோழன்!!!


பன்னிக்குட்டி ராம்சாமி : ஏன்டா நாயே பழத்தை தின்னுட்டு தோலை என்கிட்டே கொடுக்குற?

Terror Pandian : தோல் கொடுப்பான் தோழன் கேள்விப்பட்டதில்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அட ராஸ்கல். பிச்சு புடுவேன் பிச்சி. அது தோள் கொடுப்பான் தோழன்
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி :டேய் கோல்ட் பிஷ் க்கு தமிழ்ல என்ன?

Selvakumar : சளி பிடித்த மீன்

பன்னிக்குட்டி ராம்சாமி : !!!!!
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் ஒரு கிலோ இரும்பு எடை அதிகமா? இல்லை ஒரு கிலோ பஞ்சு எடை அதிகமா?

Terror Pandian : ஒரு கிலோ இரும்புதான் எடை அதிகம்.

பன்னிக்குட்டி ராம்சாமி : தூ. ரெண்டும் ஒரே எடைதாண்டா..

Terror Pandian : அப்படியா. இரு ஒரு கிலோ பஞ்சை உன் தலைல தூக்கி போடுறேன். ஒரு கிலோ இரும்பையும் உன் தலைல தூக்கி போடுறேன். எதுல உன் தலை உடையுதுன்னு பாப்பமா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
================================================Terror Pandian :ஏன் மக்கா நல்லநாளும் அதுவுமா ஹரிணிய திட்டுறீங்க?

இம்சைஅரசன் பாபு : ஆயுத பூஜை அதுவுமா உன் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா. அதுல உ போடணும்ன்னு சொன்னேன். எல்லா புக்ஸ்சும் எடுத்துட்டு வந்தாச்சு. Facebook மட்டும் எடுத்துட்டு வரலை மக்கா!!

Terror Pandian : கர். தூ
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : Terror Pandian படிக்கும்போது அவங்க ஸ்கூல் டீச்சர் யார் தப்பு பண்ணினாலும் தலைல கொட்டுவாங்களாம். ஆனா நம்ம Terror Pandian தப்பு பண்ணினா மட்டும் தலைல கொட்ட மாட்டாங்களாம்.

வைகை வி : ஏன்? அவன் நல்லா படிக்கிற பையனா? இல்ல அழகா இருப்பானா?

பன்னிக்குட்டி ராம்சாமி : ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

வைகை வி : அப்புறம் ஏன்?

பன்னிக்குட்டி ராம்சாமி : அவங்க ஸ்கூல்ல இங்கு குப்பையை கொட்டாதீர் ன்னு போர்டு இருந்துச்சாம். அதான்..
================================================


இப்போ கடைக்கு போயிட்டு வரும்போது TAMILNADU OPEN UNIVERSITY யை பார்த்தேன். பூட்டி இருந்தது. OPEN UNIVERSITY ன்னு பேரை வச்சிட்டு ஏன் பூட்டி இருக்காங்க? ங்கொய்யால ஏமாத்துராங்களா?
================================================


அப்ளிகேஷன் பார்ம் fill பண்ணும்போது "Please fill in CAPITAL" என்பதை பார்த்து விட்டு டெல்லி சென்ற Terror Pandian அவர்கள் அப்படியே தாஜ்மஹாலையும் பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் யார் டா இந்த ஆளு?

Terror Pandian : புக் பைண்டிங் பண்றவரு மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி : அவரை ஏண்டா இங்க கூட்டிட்டு வந்த?

Terror Pandian : நீதான மச்சி சொன்ன நீ ஒரு திறந்த புத்தகம்ன்னு. உன்னை யாரும் கிழிச்சிட கூடாதில்ல. அதான்..

பன்னிக்குட்டி ராம்சாமி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

================================================


வாசிங்க் மிசின் வாங்க போன இம்சைஅரசன் பாபு

பாபு: அண்ணே இது என்ன விலை?

கடைக்காரன்: பனிரெண்டாயிரம் தம்பி..

பாபு: அவ்ளோதானா ரொம்ப சீப்பா இருக்கு. என்கிட்டே இருபதாயிரம் ஆகும்ன்னு சொன்னாங்க.

கடைக்காரன்: இங்க விலை கம்மிதான்...

பாபு: ஆமாண்ணே இதுல சர்ப் பவுடர் எங்க போடணும்...

கடைக்காரன்: சர்ப் பவுடரா? தம்பி இது வாஷிங் மிசின் இல்லை. ஃபிரிட்ஜ்

பாபு: என்னது பிரிட்ஜா..... போங்கண்ணே.....இதுல எப்படிண்ணே வண்டி போகும்......?

================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் லீப் இயர்ன்னா என்னாடா?

Terror Pandian : இது கூட தெரியாதா? லீப் இயர்ன்னா இலை வருடம்

பன்னிக்குட்டி ராம்சாமி : !!!

================================================


இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி : ஏண்டா எக்ஸாம் நல்லாத்தான எழுதுன. அப்புறம் ஏன் சோகமா இருக்குற?

Terror Pandian : இல்ல மச்சி மாடல் எக்ஸாம்ன்னு சொன்னணங்க. ஏதாச்சும் மாடலிங் பிகர் சூப்பர்வைசிங் வரும்ன்னு நினைச்சேன். ஆனா நம்ம இத்துப்போன இங்கிலீஷ் வாத்தியார்தான் வந்தார்.

பன்னிக்குட்டி ராம்சாமி : அட நாதாரி. அப்போ கால் பரிச்சைன்னா காலால எழுதுவியா?

================================================


நான்: நீ பெரிய தொழிலதிபர். இன்னும் ஏண்டா சொந்த வீடு வாங்கலை?

இம்சைஅரசன் பாபு : அதுக்கு பில்கேட்ஸ் மனசு வைக்கணுமே.

நான் : அவரு ஏண்டா மனசு வைக்கணும்?

இம்சைஅரசன் பாபு : MS-Office தான இருக்கு MS-Home இல்லியே?

நான் : தூ

================================================
     

76 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

ஜோக்குக்கெல்லாம் காப்பிரைட் வாங்கிட்டீங்களா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

வட எனக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

டீதான் கொடுத்தாங்க எஸ்.கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...

வட எனக்கு...//

வட போச்சே

எஸ்.கே சொன்னது…

டீதான் கொடுத்தாங்க // with porai or biscuit?

கோமாளி செல்வா சொன்னது…

//Facebook மட்டும் எடுத்துட்டு வரலை மக்கா!!//

ஹி ஹி .. பாபு அண்ணன் பாறைகள் :))

Madhavan Srinivasagopalan சொன்னது…

சாரி.. சிரிப்பு வரல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

டீதான் கொடுத்தாங்க // with porai or biscuit?////

எனக்கு பொறை. பன்னிக்கும்,டெரர்க்கும் நாய் பிஸ்கட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

சாரி.. சிரிப்பு வரல..//

உங்களை யாரும் சிரிக்க சொல்லலை

கோமாளி செல்வா சொன்னது…

//சாரி.. சிரிப்பு வரல..//

வேட்டி ?

Mohamed Faaique சொன்னது…

தோள் கொடுத்தான் தோளன்`னா, கால் குடுக்குரவன் காலனா???

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//"தோல் கொடுப்பான் தோழன்!!!"//

உனக்கு பால் ஊத்துவான் இந்த பாபு ....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////Terror Pandian : தோல் கொடுப்பான் தோழன் கேள்விப்பட்டதில்லையா?//////

டேய்ய் நீ மொதல்ல அந்த இன்னொரு பழம் எங்கேன்னு சொல்லு..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//"தோல் கொடுப்பான் தோழன்!!!"//

உனக்கு பால் ஊத்துவான் இந்த பாபு ....//

அமலா பால்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////Terror Pandian : அப்படியா. இரு ஒரு கிலோ பஞ்சை உன் தலைல தூக்கி போடுறேன். ஒரு கிலோ இரும்பையும் உன் தலைல தூக்கி போடுறேன். எதுல உன் தலை உடையுதுன்னு பாப்பமா?
//////

ங்கொய்யால கிலோ கணக்குல பொய்யி.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////பன்னிக்குட்டி ராம்சாமி : அவங்க ஸ்கூல்ல இங்கு குப்பையை கொட்டாதீர் ன்னு போர்டு இருந்துச்சாம். அதான்..///////

அப்போ இவனை மொத்தமா தூக்கி குப்பத்தொட்டிலதான் போடனும்.....

மொக்கராசா சொன்னது…

அட போங்க விழுந்து,விழுந்து சிரிச்சேன்...(இது ஒரு டெம்பிளேட் கமெண்ட்டு )

நாகராஜசோழன் MA சொன்னது…

டேஸ்ட்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் எப்பவும் பன்னிகுட்டிதான் எல்லாரையும் வாறு வாருன்னு வாருவாரு, இன்னைக்கி பன்னியை அழவச்சிட்டியே ஹா ஹா ஹா ஹா...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்போ கடைக்கு போயிட்டு வரும்போது TAMILNADU OPEN UNIVERSITY யை பார்த்தேன். பூட்டி இருந்தது. OPEN UNIVERSITY ன்னு பேரை வச்சிட்டு ஏன் பூட்டி இருக்காங்க? ங்கொய்யால ஏமாத்துராங்களா?////

ஓப்பன் யுனிவர்சிட்டின்னா ஓப்பன் பண்ணிக்கிட்டு உள்ள போகனும்..... பூட்டி வெச்சிருந்தா தானே ஓப்பன் பண்ணமுடியும்? அதான் பூட்டி இருக்கு......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 20

/////இப்போ கடைக்கு போயிட்டு வரும்போது TAMILNADU OPEN UNIVERSITY யை பார்த்தேன். பூட்டி இருந்தது. OPEN UNIVERSITY ன்னு பேரை வச்சிட்டு ஏன் பூட்டி இருக்காங்க? ங்கொய்யால ஏமாத்துராங்களா?////

ஓப்பன் யுனிவர்சிட்டின்னா ஓப்பன் பண்ணிக்கிட்டு உள்ள போகனும்..... பூட்டி வெச்சிருந்தா தானே ஓப்பன் பண்ணமுடியும்? அதான் பூட்டி இருக்கு......!//

என் அறிவுக் கண்ணை திறந்துட்டீங்க!!!

மொக்கராசா சொன்னது…

ஜோக்குகள் இப்ப பூத்த ரோஜா மாதிரி ஃப்ரஸ்ஸாகவும், புதுமையாகவும் இருக்கிறdhu

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாசமாபோச்சி போ பாபு'வுக்கு கண்ணுமா தெரியலை ஹய்யோ ஹய்யோ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சாரி.. சிரிப்பு வரல..//


பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி...

எஸ்.கே சொன்னது…

தோல் கொடுப்பான் தோழன்// பலாப்பழ தோலா இருந்தா நல்லாயிருக்கும்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////இப்போ கடைக்கு போயிட்டு வரும்போது TAMILNADU OPEN UNIVERSITY யை பார்த்தேன். பூட்டி இருந்தது. OPEN UNIVERSITY ன்னு பேரை வச்சிட்டு ஏன் பூட்டி இருக்காங்க? ங்கொய்யால ஏமாத்துராங்களா?////

ஓப்பன் யுனிவர்சிட்டின்னா ஓப்பன் பண்ணிக்கிட்டு உள்ள போகனும்..... பூட்டி வெச்சிருந்தா தானே ஓப்பன் பண்ணமுடியும்? அதான் பூட்டி இருக்கு......!//


அய்யய்யோ பன்னிகுட்டி ஆபாசமா பேசிட்டார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அப்ளிகேஷன் பார்ம் fill பண்ணும்போது "Please fill in CAPITAL" என்பதை பார்த்து விட்டு டெல்லி சென்ற Terror Pandian ///////

அய்யயோ அப்பொ அந்த ஃபார்ம்ல எக்ஸ்பீரியன்ஸ்னு கேட்டிருக்குமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////இப்போ கடைக்கு போயிட்டு வரும்போது TAMILNADU OPEN UNIVERSITY யை பார்த்தேன். பூட்டி இருந்தது. OPEN UNIVERSITY ன்னு பேரை வச்சிட்டு ஏன் பூட்டி இருக்காங்க? ங்கொய்யால ஏமாத்துராங்களா?////

ஓப்பன் யுனிவர்சிட்டின்னா ஓப்பன் பண்ணிக்கிட்டு உள்ள போகனும்..... பூட்டி வெச்சிருந்தா தானே ஓப்பன் பண்ணமுடியும்? அதான் பூட்டி இருக்கு......!//


அய்யய்யோ பன்னிகுட்டி ஆபாசமா பேசிட்டார்....//

ஆ...பாசமா பேசினாரா? அவர் அப்படி பேச மாட்டாரே!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாபு: ஆமாண்ணே இதுல சர்ப் பவுடர் எங்க போடணும்...//////

பாபு கடைக்காரனுக்கு சர்ப்னா புடிக்காதாம், நீங்க ஏரியல்னு கேட்டிருந்தா கரெக்டா சொல்லி இருப்பான்.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

தோல் கொடுப்பான் தோழன்// பலாப்பழ தோலா இருந்தா நல்லாயிருக்கும்!///

நல்ல்லாத்தான் இருக்கும்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எஸ்.கே கூறியது...
தோல் கொடுப்பான் தோழன்// பலாப்பழ தோலா இருந்தா நல்லாயிருக்கும்!//


தோல் கொடுப்பான் தோலன்'ன்னு சொன்னா இன்னும் நல்லாயிருக்கும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா கூறியது...

ஜோக்குகள் இப்ப பூத்த ரோஜா மாதிரி ஃப்ரஸ்ஸாகவும், புதுமையாகவும் இருக்கிறdhu

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது....//

அது இப்போ எங்க இருக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பாபு: ஆமாண்ணே இதுல சர்ப் பவுடர் எங்க போடணும்...//////

பாபு கடைக்காரனுக்கு சர்ப்னா புடிக்காதாம், நீங்க ஏரியல்னு கேட்டிருந்தா கரெக்டா சொல்லி இருப்பான்.........//

ஏரியல் ன்னா TV தெரிய மொட்டை மாடில மாட்டுவாங்களே அதுவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////error Pandian : இல்ல மச்சி மாடல் எக்ஸாம்ன்னு சொன்னணங்க. ஏதாச்சும் மாடலிங் பிகர் சூப்பர்வைசிங் வரும்ன்னு நினைச்சேன். ஆனா நம்ம இத்துப்போன இங்கிலீஷ் வாத்தியார்தான் வந்தார்.//////

அப்போ அரை பரிட்சைன்னா ரூம்ல வெயிட் பண்ணுவானோ?

மொக்கராசா சொன்னது…

தமிழனக்கு காமெடியை கற்று கொடுத்த குருவே சரணம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அப்போ அரை பரிட்சைன்னா ரூம்ல வெயிட் பண்ணுவானோ?//

இல்லை வீட்டுல அவங்க அப்பாகிட்ட செமத்தியா அறை வாங்கிட்டு வருவான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா கூறியது...

தமிழனக்கு காமெடியை கற்று கொடுத்த குருவே சரணம்...//

யோவ் அதுக்குள்ளே மப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//"தோல் கொடுப்பான் தோழன்!!!"//

உனக்கு பால் ஊத்துவான் இந்த பாபு ....//

அமலா பால்?
///////

இல்ல போபால்.......

மொக்கராசா சொன்னது…

தமிழனின் கலை தாகத்தை அடக்க வந்த தமிழனே உன்னை போற்றி புகழ்கிறேன் ...உமக்கு தமிழ் உலகம் என்ன கைமாறு செய்ய போகிறது....

மொக்கராசா சொன்னது…

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு...
என்ற அவ்வையின் வாய்கிணங்க எங்களை மகிழ்வித்து எங்களின் நோயை குணபடுத்தும் சூப்பர் டாகுடரே உம்மை பணிந்து வணங்குகிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மொக்கராசா கூறியது...
ஜோக்குகள் இப்ப பூத்த ரோஜா மாதிரி ஃப்ரஸ்ஸாகவும், புதுமையாகவும் இருக்கிறdhu

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது....
///////

எலேய்ய் உண்மைய சொல்லிரு... சிரிப்பு போலீஸ் கிட்டயே மாமூல் வாங்கிட்டயா.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////மொக்கராசா கூறியது...
ஜோக்குகள் இப்ப பூத்த ரோஜா மாதிரி ஃப்ரஸ்ஸாகவும், புதுமையாகவும் இருக்கிறdhu

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது....
///////

எலேய்ய் உண்மைய சொல்லிரு... சிரிப்பு போலீஸ் கிட்டயே மாமூல் வாங்கிட்டயா.....?//

போனமாசம் கொடுத்த ட்ரீட்டுக்கு இப்பத்தான் வேலை செய்யுது மொக்கை

மொக்கராசா சொன்னது…

//சிரிப்பு போலீஸ் கிட்டயே மாமூல் வாங்கிட்டயா.....?

இன்னும் 10 கமெண்ட்டு போட்டூ மொத்தமா வாங்கிக்க சொன்னாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மொக்கராசா கூறியது...
//சிரிப்பு போலீஸ் கிட்டயே மாமூல் வாங்கிட்டயா.....?

இன்னும் 10 கமெண்ட்டு போட்டூ மொத்தமா வாங்கிக்க சொன்னாரு.../////

எத... திருவோட்டையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////மொக்கராசா கூறியது...
//சிரிப்பு போலீஸ் கிட்டயே மாமூல் வாங்கிட்டயா.....?

இன்னும் 10 கமெண்ட்டு போட்டூ மொத்தமா வாங்கிக்க சொன்னாரு.../////

எத... திருவோட்டையா?//

அப்போ பாபுவோட பிச்சகாரி வச்சிருக்குறது திருமதி ஓடா?

மொக்கராசா சொன்னது…

//பாபுவோட பிச்சகாரி வச்சிருக்குறது திருமதி ஓடா?

கமெண்டிலும் காமெடியை அள்ளி தெளிக்கும் எங்கள் மழையே நீர் வாழ்க வாழ்க்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா கூறியது...

//பாபுவோட பிச்சகாரி வச்சிருக்குறது திருமதி ஓடா?

கமெண்டிலும் காமெடியை அள்ளி தெளிக்கும் எங்கள் மழையே நீர் வாழ்க வாழ்க்....//

ரைட்டு நீ நடத்து ராசா

வெளங்காதவன் சொன்னது…

உள்ளேன் ஐயா!

#ஹி ஹி ஹி ஹி...
சிரிச்சு சிரிச்சு பல்லு சுளிக்கிடுச்சு....
அவ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@விளங்காதவன்

அடுத்து முறை வரும்போது பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு வரவும் :)

வெளங்காதவன் சொன்னது…

//@விளங்காதவன்

அடுத்து முறை வரும்போது பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு வரவும் :) ////

ஹி ஹி ஹி...

வெளங்காதவன் சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

@விளங்காதவன்

அடுத்து முறை வரும்போது பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு வரவும் :)////

மக்கா செம ஸ்பீடு ரிப்ளை...

ஆனா, இந்தப் பதிவை அந்த டெர்ரர் மகராசன் பாத்தா, ஒரு எதிர் பதிவ தேத்திடுவாரே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//
பன்னிக்குட்டி ராம்சாமி : ஏன்டா நாயே பழத்தை தின்னுட்டு தோலை என்கிட்டே கொடுக்குற?

Terror Pandian : தோல் கொடுப்பான் தோழன் கேள்விப்பட்டதில்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அட ராஸ்கல். பிச்சு புடுவேன் பிச்சி. அது தோள் கொடுப்பான் தோழன்

//

super joke

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான நகைசுவை

SIRIPPU POLICE STATION சொன்னது…

Kalakiteenga thaleeva!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

SIRIPPU POLICE STATION கூறியது...

Kalakiteenga thaleeva!///
யார்லே இது?

சிரிப்பு போலீஸ் வெறியர் சங்கம் சொன்னது…

அண்ணாத்தே அதெல்லாம் கண்டுக்காத விடு விடு....... போய்ட்டே இரு...

தங்க மகன் சிரிப்பு போலீஸ் ரசிகன் சொன்னது…

அண்ணாத்தே அடுத்தவாட்டி சிங்கப்பூர் வந்தா ஓசி சோறு வாங்கித்தரணும்... இன்னா?

வெளங்காதவன் சொன்னது…

போலீசு...

நீரே வேற வேற பேர்ல வந்து கமண்ட் போடுறீங்களே...

இதெல்லாம் ஒரு @#$%^?

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ஹா...ஹா... செம நக்கல்ஸ்

வைகை சொன்னது…

எலேய்...எனெத்த சொல்ல..?

வைகை சொன்னது…

எலேய்...இது ஆரு டெரர் பாண்டினா... அந்த பய பதிவர் இல்லையே மக்கா :))

வைகை சொன்னது…

தங்கள் நகைச்சுவை உணர்வு என் மனதை லேசாக்குகின்றன :))

சிரிப்பு போலீஸ் மக்கள் இயக்கம் சொன்னது…

தலைவன் இருக்கிறான்...

வைகை சொன்னது…

ஐயோ... எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி யோசிக்க முடியுது? :))

வைகை சொன்னது…

சிரிச்சி...சிரிச்சி.. கண்ணுல தண்ணியே வந்துருச்சு போங்க :))

வைகை சொன்னது…

நீங்களும் வாங்க..

நாளை என் வலையில்....

அணைப்பதற்கு "அது" வேண்டுமா...

கடம்பவன குயில் சொன்னது…

நல்ல காமெடி...

CAPITAL னா டெல்லி போனவருக்கு சென்னை தெரியாமல் போனது சோகமே....

செங்கோவி சொன்னது…

கல..கல..கலக்கல் ஜோக்ஸ்.

NIZAMUDEEN சொன்னது…

கலக்கல்ஸ்.
(மாமுல் போதுமா?)கலக்கல்ஸ்.
(மாமுல் போதுமா?)

NAAI-NAKKS சொன்னது…

He....
He......
He...........

மாணவன் சொன்னது…

தங்கள் நகைச்சுவை உணர்வு என் மனதை லேசாக்குகின்றன :))

மாணவன் சொன்னது…

// SIRIPPU POLICE STATION கூறியது...
Kalakiteenga thaleeva!

சிரிப்பு போலீஸ் வெறியர் சங்கம் கூறியது...
அண்ணாத்தே அதெல்லாம் கண்டுக்காத விடு விடு....... போய்ட்டே இரு...

தங்க மகன் சிரிப்பு போலீஸ் ரசிகன் கூறியது...
அண்ணாத்தே அடுத்தவாட்டி சிங்கப்பூர் வந்தா ஓசி சோறு வாங்கித்தரணும்... இன்னா?

சிரிப்பு போலீஸ் மக்கள் இயக்கம் கூறியது...
தலைவன் இருக்கிறான்...////

இவங்கல்லாம் யாருண்ணே? மாமூல் கொடுத்து நீங்களே செட் பண்ண ஆளுங்களா? :))

FOOD சொன்னது…

கலக்கல் ஜோக்ஸ்.அனைத்தும் கல கல ரகம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

FOOD சொன்னது… 73

கலக்கல் ஜோக்ஸ்.அனைத்தும் கல கல ரகம்.
//

thank u

பெசொவி சொன்னது…

All Jokes Super!

(Template Comments poduvor sangam)
:))

Kannan சொன்னது…

கலக்கல் காமெடி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது