Horoscope

சனி, அக்டோபர் 1

சிவா சிவா காம்பவுண்ட்...

1999 ஆம் வருசம்தான் அப்பா ரிடயர்ட் ஆக போறதால வேலை செய்யற ஊரை விட்டுட்டு எங்க சொந்த ஊர் கோவில்பட்டிக்கு வந்தோம். வாடகைக்கு வீடு பார்க்கும்போதுதான் "சிவா சிவா காம்பவுண்ட்" என்கிற அருமையான காம்பவுண்டில் வாடகைக்கு வீடு கிடைத்தது.

மொத்தம் 15 வீடு. சாயந்தரம் ஆனால் காம்பவுண்ட் வாசல்ல உக்கார்ந்து அரட்டை அடிக்கிறது. எங்க ஹவுஸ் ஓனரை பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். ரொம்ப தங்கமான மனுஷன். இந்த வீட்டு ஓனரோட பேசுறதும் ஒண்ணுதான், பிரபுதேவா டைரக்ஷன்ல வந்த வில்லு,வெடி,எங்கேயும் காதல் படம் பார்க்குறதும் ஒண்ணுதான்.

திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர். அப்புறம் மாசா மாசம் இன்ஸ்பெக்ஷன் வைப்பாரு. யார் வீடு ரொம்ப நீட்டா இருக்கோ அந்த வீட்டுக்கு பரிசு. காம்பவுண்டுல உள்ள எல்லோரும் மாங்கு மாங்குன்னு வீட்டை சுத்த படுத்துவாங்க.

நான் கரெக்டா இன்ஸ்பெக்ஷன் வரும்போது அக்காவை கூட்டிக்கிட்டு வெளில போயிடுவேன். ரெண்டு மூணு இன்ஸ்பெக்ஷனல வீட்டுல இல்லைன்னு ஒரே சத்தம். நீ இன்ஸ்பெக்ஷன்வைக்கும் போதெல்லாம் எங்களால இருக்க முடியாது. வேண்ணா நாங்க இருக்கும்போது இன்ஸ்பெக்ஷன்வையின்னு சொன்னதால எங்க மேல கொஞ்சம் காண்டாவே இருந்தாரு.

அப்புறம் காலைல 4 மணிக்கே எந்திரிச்சு எல்லோர் வீட்டு வாசலையும் கிளீன் பண்ணனும். எல்லோர் வீட்டையும் காலைல எழுப்பி விட்டுடுவாரு. நானும், அக்காவும் எட்டு மணிக்குதான் கதவையே திறப்போம். காலைல கேப்பாரு. நாங்க தூங்கிட்டோம். 4 மணிக்கெல்லாம் எழுந்திருக்க முடியாதுன்னு சொல்லியாச்சு.

பூனைக்கு யாரு மணி கட்டுறது. எல்லோரும் பேசி முடிவெடுத்து கிளினிங்க்கு ஆள் வச்சிக்கிட்டோம். அப்புறம் சொந்தக்காரன், பிரண்ட் இப்படி யாரும் வீட்டுக்கு வர கூடாது. நைட் செகண்ட் ஷோ படத்துக்கு போக கூடாது. மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.(ங்கொய்யால அதுக்கும் டூப்ளிகேட் சாவி போட்டவங்க நாங்க!!!).

மொத்தத்துல ஒரு வருசம் ஜெயில் வாழ்க்கை, கொஞ்சம் கலாட்டாவா போச்சு. நாங்க ஒரு மூணு வீடு மட்டும் அவரை கண்டுகிடுறதே இல்லை. அப்புறம்தான் பிரச்சனை ஆரமிச்சது. வீட்டுல கம்ப்யூட்டர் வாங்கினதால பிரண்ட்ஸ் எல்லோரும் வீட்டுக்கு வர ஆரமிச்சாங்க. அதுல சண்டை வந்து வீட்டை காலி செஞ்சோம். இப்படி ஒரு ஹவுஸ் ஓனரை அதன் பிறகு இதுவரைக்கும் பார்த்ததில்லை.

ஒரு வழியா 11 வருஷ கனவான சொந்த வீட்டை கட்டி முடிச்சாச்சு. இன்னைல இருந்து புது வீட்டில் குடியேறப் போறோம். பொருள்களை எல்லாம் ஷிப்ட் பண்ணியாச்சு. இன்று முதல் சொந்த வீடு. ரொம்ப ஹாப்பி....


Our New Home





Home Video


49 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

ஆஹா... வடை... அதுவும் புது வீட்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சொந்த வீட்டு சொகமே தனிதான்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique கூறியது...

ஆஹா... வடை... அதுவும் புது வீட்ல..//

enjoy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சொந்த வீட்டு சொகமே தனிதான்......//

ஆமா மச்சி. வீடு ஷிபிட் பன்னும்போத்துதான் பாபு என் பைக்க தள்ளிட்டு போனது ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர். ///////

கொசுத்தொல்லை ரொம்ப அதிகம் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சொந்த வீட்டு சொகமே தனிதான்......//

ஆமா மச்சி. வீடு ஷிபிட் பன்னும்போத்துதான் பாபு என் பைக்க தள்ளிட்டு போனது ஹிஹி/////////

பாபுவ தள்ளவே ரெண்டு பேரு வேணுமே?

Mohamed Faaique சொன்னது…

//திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர்///

வாடகை வீட்டு ஓனருக்கு இவ்ளோ அதிகாரம் இருக்கா???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அப்புறம் மாசா மாசம் இன்ஸ்பெக்ஷன் வைப்பாரு. யார் வீடு ரொம்ப நீட்டா இருக்கோ அந்த வீட்டுக்கு பரிசு. ///////

என்னடா இது....... இஸ்கோல்ல கூட இம்புட்டு ஸ்ட்ரிக்ட்டா இருக்கமாட்டாங்களே? ஆமா அப்போ ஒர்ஸ்ட்டா இருக்கற வீட்டுக்கு பனிஷ்மெண்ட்டும் உண்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர். ///////

கொசுத்தொல்லை ரொம்ப அதிகம் போல?//

ரொம்ப ரொம்ப

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 6

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சொந்த வீட்டு சொகமே தனிதான்......//

ஆமா மச்சி. வீடு ஷிபிட் பன்னும்போத்துதான் பாபு என் பைக்க தள்ளிட்டு போனது ஹிஹி/////////

பாபுவ தள்ளவே ரெண்டு பேரு வேணுமே?//

எனக்கு பாபு ஏறி உக்காந்த வண்டியோட நிலமைய நினைச்சா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique சொன்னது… 7

//திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க. ஏன் அழுக்கு துணியை துவைக்காம வச்சிருக்கீங்க. சாப்பிடும்போது கீழ சாக்கு விரிக்கணும்(சாதம் பட்டு தரை அழுக்காயிடுமாம்). இப்படி அடுக்கடுக்கா டார்ச்சர்///

வாடகை வீட்டு ஓனருக்கு இவ்ளோ அதிகாரம் இருக்கா???//

இல்லை. ஆனா வேற வீடு கிடைக்கிற வரைக்கும் வேற வழி!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8

///////அப்புறம் மாசா மாசம் இன்ஸ்பெக்ஷன் வைப்பாரு. யார் வீடு ரொம்ப நீட்டா இருக்கோ அந்த வீட்டுக்கு பரிசு. ///////

என்னடா இது....... இஸ்கோல்ல கூட இம்புட்டு ஸ்ட்ரிக்ட்டா இருக்கமாட்டாங்களே? ஆமா அப்போ ஒர்ஸ்ட்டா இருக்கற வீட்டுக்கு பனிஷ்மெண்ட்டும் உண்டா?//

ஆமா. 50 ரூபாய் பைன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்புறம் காலைல 4 மணிக்கே எந்திரிச்சு எல்லோர் வீட்டு வாசலையும் கிளீன் பண்ணனும். எல்லோர் வீட்டையும் காலைல எழுப்பி விட்டுடுவாரு.///////

அப்புறம் திருப்பி தூங்கிடுவாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பூனைக்கு யாரு மணி கட்டுறது. எல்லோரும் பேசி முடிவெடுத்து கிளினிங்க்கு ஆள் வச்சிக்கிட்டோம். ///////

நானும் ஓனரைத்தான் ஆள் வெச்சு அடிச்சிட்டீங்கன்னு நெனச்சேன்.....

Mohamed Faaique சொன்னது…

///ஒரு வழியா 11 வருஷ கனவான சொந்த வீட்டை கட்டி முடிச்சாச்சு. இன்னைல இருந்து புது வீட்டில் குடியேறப் போறோம். பொருள்களை எல்லாம் ஷிப்ட் பண்ணியாச்சு. இன்று முதல் சொந்த வீடு. ரொம்ப ஹாப்பி....////

சொந்த வீடு என்பது எத்தனையோ பேருடைய கனவு.. அநேகமானோருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது.
வீடு அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..
வீட்டு வேலை முடிஞ்சுடுச்சு.. அடுத்து கல்யாணமா??? (அதுக்கு எவனாவது பொண்ணு குடுக்கணுமே)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.////////

எங்க போவாரு...?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

goiyaala ...nee pattukku poitta naan antha area pakkam poka mudiyalai ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique சொன்னது… 15

///ஒரு வழியா 11 வருஷ கனவான சொந்த வீட்டை கட்டி முடிச்சாச்சு. இன்னைல இருந்து புது வீட்டில் குடியேறப் போறோம். பொருள்களை எல்லாம் ஷிப்ட் பண்ணியாச்சு. இன்று முதல் சொந்த வீடு. ரொம்ப ஹாப்பி....////

சொந்த வீடு என்பது எத்தனையோ பேருடைய கனவு.. அநேகமானோருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது.
வீடு அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..
வீட்டு வேலை முடிஞ்சுடுச்சு.. அடுத்து கல்யாணமா??? (அதுக்கு எவனாவது பொண்ணு குடுக்கணுமே)//

உன் கேர்ள் பிரண்டை எனக்கு கொடுத்துடு மச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
goiyaala ...nee pattukku poitta naan antha area pakkam poka mudiyalai ......////////

ஏன் அந்த ஏரியாவுல யார்கிட்டயும் வம்பு பண்ணிட்டு வந்துட்டீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

///////மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.////////

எங்க போவாரு...?//

15 வீட்டுல அவர் வீடும் உண்டு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

///////மெயின் கேட்டை 11 மணிக்கெல்லாம் பூட்டி சாவிய எடுத்துட்டு போயிடுவாரு.////////

எங்க போவாரு...?//

15 வீட்டுல அவர் வீடும் உண்டு////////

ங்கொய்யால அப்பவே சுதாரிச்சிருக்க வேணாமா? எங்க ஹவுஸ் ஓனரும் அங்கேயே இருக்காரோ அதெல்லாம் நரகம்தான்..... தமிழ்நாட்லதான் இப்படி, இந்த ஹவுஸ் ஓனர்கள் டார்ச்சர்.......

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மறுபடியும் வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

மறுபடியும் வாழ்த்துக்கள்...//

thanks again

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இப்போ உங்களுக்கு இருக்கிற சந்தோசத்த இன்னும் ரெண்டு மாசத்தில் நானும் அனுபவிப்பேன்..

கண்டிப்பா வந்திடனும் என்ன..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ஏண்டா பரதேசி! புது வீடு கட்டினே அங போறேன் சொன்ன நியாயம். அது என்னாட பழைய ஹவுஸ் ஓன்ரை கிண்டல்... :)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 24

இப்போ உங்களுக்கு இருக்கிற சந்தோசத்த இன்னும் ரெண்டு மாசத்தில் நானும் அனுபவிப்பேன்..

கண்டிப்பா வந்திடனும் என்ன..
//

Sure. What is the status now?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 25

ஏண்டா பரதேசி! புது வீடு கட்டினே அங போறேன் சொன்ன நியாயம். அது என்னாட பழைய ஹவுஸ் ஓன்ரை கிண்டல்... :)))//

வந்திட்டாரு யோக்கியன்

குறையொன்றுமில்லை. சொன்னது…

புது வீடு சூப்பரா இருக்கே. வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

ரொம்ப சந்தோஷமா இருக்கு மாம் ....

பெயரில்லா சொன்னது…

தங்கள் குடும்பத்தில் என்றும் இன்பம் பொங்க என் மனமார்ந்த வாழ்த்துகள் ரமேஷ்!

பெசொவி சொன்னது…

Happy Own House Day!

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

Home Sweet Home . . .

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

வாழ்த்துக்கள் போலீஸ்கார் . . .

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

புது வீடு ஜுப்பர் . .
வாடகை எவ்வளவு?
அட்வான்ஸ் எவ்வளவு ?

நாய் நக்ஸ் சொன்னது…

வாழ்த்துக்கள்.....

Philosophy Prabhakaran சொன்னது…

போலீஸ்... சமீபகாலமாக (கடந்த இரண்டு இடுகைகள்) உங்கள் ஸ்டைலை மாற்றியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது...

புது வீடு கட்டியதற்கு வாழ்த்துகள்...

ஜெய்லானி சொன்னது…

அழகாய் இருக்கு :-)

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சொந்த வீட்டு சொகமே தனிதான்......//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

நீச்சல்காரன் சொன்னது…

வாழ்த்துகள்
திருடனுக்கு route போட்டு காட்ற மாதிரி இருக்கே... இது ஏதோ திருடனைப் பிடிக்க ஒரு ஆபரேஷன் போல

வைகை சொன்னது…

இந்த வீட்டு ஓனரோட பேசுறதும் ஒண்ணுதான், பிரபுதேவா டைரக்ஷன்ல வந்த வில்லு,வெடி,எங்கேயும் காதல் படம் பார்க்குறதும் ஒண்ணுதான்//

அப்ப... இன்னுமா உயிரோட இருக்க? :)

வைகை சொன்னது…

திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மளை கேக்காம வருவாரு. ஏன் பாத்திரம் எல்லாம் கழுவாம சிங் ல போட்டிருக்கீங்க//

நீங்க வந்து கழுவனும்தான் போட்ருக்கேன்னு சொல்லவேண்டியதுதானே? :))

வைகை சொன்னது…

.(ங்கொய்யால அதுக்கும் டூப்ளிகேட் சாவி போட்டவங்க நாங்க!!!).//

நாங்களெல்லாம் ஏறி குதிக்கிற கோஸ்டி...ஹி..ஹி.. :))

ராஜி சொன்னது…

புது வீடு போனதுக்கு வாழ்த்துக்கள்

செல்வா சொன்னது…

இனிய வாழ்த்துகள் அண்ணா :))

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் போலீஸ்.

அந்த கந்துவட்டி கந்தப்பன் இருக்கானே.. அவன் ஒரு படி மேலே..
ஒற்றிக்கு இருந்த வீட்டை சொந்தமா வாங்கி தந்திருக்கிறான்.

உணவு உலகம் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே. வாழ்க வளமுடன், நலமுடன்.

உணவு உலகம் சொன்னது…

வாடகை வீட்டில் இதையெல்லாம் அனுபவிச்சாத்தான், சொந்த வீடு கட்ட வேகம் வரும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@FOOD

Thanks

Test சொன்னது…

Congrats Boss

vinu சொன்னது…

50 ஆஹா... வடை... அதுவும் புது வீட்ல..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது