Horoscope

திங்கள், அக்டோபர் 17

மலரும் நினைவுகள் - வடிகஞ்சி & பழைய சாதம்

சும்மா தூங்கிட்டு இருந்தேன். ஆபீஸ்ல இல்லப்பா வீட்டுலதான். புது வீட்டுக்கு ஷிப்ட் பண்றதால பரண் மேல இருக்குற பாத்திரம், வீட்டுல உள்ள சாமான்களை ஒதுக்கி கொடுன்னு சொன்னாங்க. அங்கதான் நான் ஸ்கூல் படிக்கும்போது வச்சிருந்த நெளிஞ்சு போன அலுமினிய கப்பு, பெட்டி
பேட்டி, ஆட்டோகிராஃப் நோட்டு எல்லாம் கிடைச்சது. உடனே என் மனம் வானில் பறந்து பின்னோக்கிய நினைவுகளுக்கு போயிடுச்சு.

அப்போ எல்லாம் குக்கர், கேஸ் கனெக்சன் எல்லாம் கிடையாது. விறகு இல்லைன்னா மாருதான். மாருன்னா மல்லி செடில உள்ள மல்லி எல்லாம் அடிச்சு எடுத்துட்டு வெறும் சக்கைய காயப்போட்டு வைக்கோல் படப்பு மாதிரி அடுக்கி வைச்சிருப்பாங்க. எங்க வீட்டு படப்புல வேற யாரும் வந்து மாரு எடுக்க கூடாது. இதையெல்லாம் காட்டுல போயி பொறுக்கிட்டு வரணும். விறகு மட்டும் விலைக்கு வாங்குவோம்.

இட்லி,தோசை எல்லாம் தீபாவளி, பொங்கல் மாதிரி பண்டிகைக்குத்தான் கிடைக்கும். தினமும் மூணு வேலையும் சோறுதான். அம்மா பானைல சோறு வடிச்சதும் அந்த சோத்து தண்ணி(வடிகஞ்சி) குடிக்கிறதுக்காக தம்ளரோட போயி அடுப்படில நிப்போம். அதோட டேஸ்ட்  சூப்பரா இருக்கும். இப்போ எனக்கு தெரிஞ்சு யார் வீட்டுலயும் சாதம் வடிக்கிறதில்லை. குக்கர் சாதம்தான்.

தீபாவளி அன்னிக்கு இட்லி,தோசை பொங்கல் அன்னிக்கு பூரி சப்பாத்தி இதுதான் மெனு. நாங்களாவது பரவாயில்லை. நிறைய வீடுகளில் அரிசிக்கு பதில் கம்பு(தானியம்) செய்த கம்மஞ்சோறுதான் சாப்பாடு. தீபாவளி, பொங்கல் அன்னிக்குத்தான் அரிசி சோறு கிடைக்கும். சாயந்தர நேரம் அப்படியே தெருவில் இறங்கி நடந்து போனால் நிறைய குடிசைவாசிங்க வீட்டு வாசலில் அடுப்பை வைத்து சமையல் பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

ஒருத்தருக்கொருத்தர் என்னக்கா உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சாப்பாடு, என்ன கூட்டுன்னு கேட்டே பேசிக்கிட்டே சமைப்பாங்க. இரவு நேரம் ஊரே இருட்டா இருக்கும்(பாதிநாள் தெருவிளக்கும் எரியாது). தெருவில் மட்டும் அடுப்பு ஜெகஜோதியாக எரிந்து ஒரே அழகாக இருக்கும்.

நிறைய வீட்டில் ஒரு வேலை(இரவு நேரம் மட்டும்தான்) சமையல். குழம்பு கெட்டுபோகாமல் இருக்க மண்பானைக்குள் வைப்பார்கள். காலையில் தண்ணி ஊத்தி வச்ச பழைய சோறுதான். பல பேர் பழைய சோறு தண்ணி(நீராகாரம்) குடிச்சிட்டு கிளம்பிடுவாங்க. அதான் சாப்பாடே. பழைய சோறுக்கு சரியான காம்பிநேஷன்னா சின்ன வெங்காயம்(இப்போ இதை கட் பண்ண கஷ்டமா இருக்குன்னு பல்லாரி வெங்காயம்தான் யூஸ் பண்றாங்க), மிளகாய் கட் பண்ணி கடலை பருப்பு போட்டு தாளிச்சு அதை வச்சு சாப்பிடுவோம்.

மோர் மிளகாய். மிளாகாய் வத்தலை நல்லா காய் வச்சு மோரில் உப்பு போட்டு ஊற போட்டு எடுத்து வச்சிருப்பாங்க. காரமாவும் உப்பாவும் இருக்கும். பழைய சாதத்துக்கு இதுவும் ஒரு நல்ல சைட் டிஷ். இப்பவும் தினமும் ஒரு மோர் மிளகாய் இல்லாமல் சாப்பிடுறதில்லை.


பழைய சோறு,வெங்காயம்,மிளகாய் காம்பினேஷன் சூப்பர். ஆனா இப்போ குக்கர்ல வச்சிடுறாங்க. மீதி வர்றதே இல்லை. பழைய சோறு, வெங்காயம் சாப்பிடணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. கிடைக்குதான்னு பார்ப்போம்...

61 கருத்துகள்:

Unknown சொன்னது…

MUDAL VADAI ENAKKEY

Unknown சொன்னது…

அட அட பழைய சோறு அந்த வெங்காயம்
ம்ம்
ஒரு எழுத்தாளர்
உருவாகிய
வரலாறு
இப்போதுதான் புரிகிறது

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல சாப்பாடு...

Unknown சொன்னது…

மோர் மிளகாய். மிளாகாய் வத்தலை நல்லா காய் வச்சு மோரில் உப்பு போட்டு ஊற போட்டு எடுத்து வச்சிருப்பாங்க.//

சார் அதை வறுத்து சாப்பிட்ட அட அட என்ன ஒரு மணம்
இந்த மிளகாய் வறுக்கும் மணம் அந்த வாசனைக்கே ஒரு பிடி உள்ளே அதிகம் போகும்

NaSo சொன்னது…

ம்ம்.......... அப்புறம் சரக்கு அடிச்ச கதை வருமா?

மாணவன் சொன்னது…

மலரும் நினைவுகள் நல்லாருக்குண்ணே! :-)

நாய் நக்ஸ் சொன்னது…

Pazhya soru---karuvadu.....

Ithai adichikka mudiuma ???

Unknown சொன்னது…

Pazhya soru---karuvadu.....

Ithai adichikka mudiuma ???
---no no never..

வைகை சொன்னது…

சும்மா தூங்கிட்டு இருந்தேன்.//

சரி :)

வைகை சொன்னது…

ஆபீஸ்ல இல்லப்பா வீட்டுலதான்.//

அப்பறம் :))

வைகை சொன்னது…

அங்கதான் நான் ஸ்கூல் படிக்கும்போது //

ஸ்கூல் போனேன்னு சொல்லு ஆனா படிச்சேன்னு சொல்லாத :))

வைகை சொன்னது…

ஆட்டோகிராஃப் நோட்டு எல்லாம் கிடைச்சது.//

உனக்குமா? :))

வைகை சொன்னது…

உடனே என் மனம் வானில் பறந்து பின்னோக்கிய நினைவுகளுக்கு போயிடுச்சு.///

அடிங்.. பின்னோக்கி போறதுக்கு திரும்பி பார்த்தா போகுது... ஏன் வானில்தான் பறந்து போகனுமா? :))

வைகை சொன்னது…

மூணு வேலையும் சோறுதான். //

த்தூ... அது வேளையும் :))

வைகை சொன்னது…

பழைய சோறு,வெங்காயம்,மிளகாய் காம்பினேஷன் சூப்பர்//

ம்ம்.. சூப்பர்தான்.. ஆனா பழைய சோறும் அதுல எலுமிச்சை ஊறுகாயும் கலந்து அதுக்கு கொஞ்சமா கருவாட்டு குழம்பு வச்சு சாப்ட்ட... அட போங்கப்பா.. பழைய சோறும் இப்ப பழங்கதை ஆகிப்போச்சு :((

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

அங்கே cheers சொல்லிப்புட்டு , இங்க பழைய சோறும் , பச்சை மிளகாயுமா?

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

பசுமையான நினைவுகள் . .
எனக்கும் எனது பாட்டி வீட்டிற்கு செல்லும் போது இது போன்ற இனிமையான நினைவுகள் உண்டு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பேட்டி, ஆட்டோகிராஃப் நோட்டு எல்லாம் கிடைச்சது. உடனே என் மனம் வானில் பறந்து பின்னோக்கிய நினைவுகளுக்கு போயிடுச்சு.//

எதுக்குப்பா இதை படிச்சுட்டு பின்னாடி திரும்பி பாக்குறீங்க...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பழைய சோறு,வெங்காயம்,மிளகாய் காம்பினேஷன் சூப்பர். ஆனா இப்போ குக்கர்ல வச்சிடுறாங்க. மீதி வர்றதே இல்லை. பழைய சோறு, வெங்காயம் சாப்பிடணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. கிடைக்குதான்னு பார்ப்போம்...//

இது கூட பழைய மீன் கறியும் இருந்தால், ஆஹா அமிர்தம், நமக்கு கொடுப்பினை இல்லை மக்கா...!!!

செங்கோவி சொன்னது…

ஊர்ஸ், இப்படி ஊர் ஞாபகத்தை கிளப்பிவிடுறீங்களே..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கொய்யால நமக்கு, சிக்கன் கடாய், சிக்கன் போன்லெஸ், தந்தூரி சிக்கன்னு சாப்புட்டு நாக்கு டெத் ஆகிருச்சி என்னடா வாழ்க்கை...???

செங்கோவி சொன்னது…

வடிகஞ்சி டேஸ்ட்டே தனிய்யா...அதுவே நீராகாரம் ஆகும்போது, அடடா..சொல்லவே எச்சில் ஊறுதே..

செங்கோவி சொன்னது…

கோவில்பட்டி போஸ்ட் ஆஃபீஸ்கிட்ட கம்மஞ்சோறு, கூழ விக்கிறாஙகளே...அது சூப்பரா இருக்குய்யா..அவங்ககிட்ட நீராகாரமும் விக்கச் சொல்லும்..

செங்கோவி சொன்னது…

// MANO நாஞ்சில் மனோ கூறியது...
கொய்யால நமக்கு, சிக்கன் கடாய், சிக்கன் போன்லெஸ், தந்தூரி சிக்கன்னு சாப்புட்டு நாக்கு டெத் ஆகிருச்சி என்னடா வாழ்க்கை...???

//

டெத் ஆயிருச்சுன்னா அறுத்து அடக்கம் பண்ணுங்கணே..

செங்கோவி சொன்னது…

அய்யோ, தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் காணோம்!!!!

செங்கோவி சொன்னது…

பரவாயில்லை, நான் அப்புறமா வந்து ஓட்டு போடறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

siva சொன்னது… 1

MUDAL VADAI ENAKKEY////
Enjoy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

siva சொன்னது… 2

அட அட பழைய சோறு அந்த வெங்காயம்
ம்ம்
ஒரு எழுத்தாளர்
உருவாகிய
வரலாறு
இப்போதுதான் புரிகிறது//

ஏதும் உள்குத்து இல்லியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ்வாசி - Prakash சொன்னது… 3

நல்ல சாப்பாடு...
//

thank u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

siva சொன்னது… 4

மோர் மிளகாய். மிளாகாய் வத்தலை நல்லா காய் வச்சு மோரில் உப்பு போட்டு ஊற போட்டு எடுத்து வச்சிருப்பாங்க.//

சார் அதை வறுத்து சாப்பிட்ட அட அட என்ன ஒரு மணம்
இந்த மிளகாய் வறுக்கும் மணம் அந்த வாசனைக்கே ஒரு பிடி உள்ளே அதிகம் போகும்
//

s

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 5

ம்ம்.......... அப்புறம் சரக்கு அடிச்ச கதை வருமா?//

உன்னை தூக்கி போட்டு மிதிச்ச கதை வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 6

மலரும் நினைவுகள் நல்லாருக்குண்ணே! :-)
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

NAAI-NAKKS சொன்னது… 7

Pazhya soru---karuvadu.....

Ithai adichikka mudiuma ???//
நான் கருவாடு சாபிடதில்லை சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை பொய்யா போயி வேலைய பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… 16

அங்கே cheers சொல்லிப்புட்டு , இங்க பழைய சோறும் , பச்சை மிளகாயுமா?
//

Hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… 17

பசுமையான நினைவுகள் . .
எனக்கும் எனது பாட்டி வீட்டிற்கு செல்லும் போது இது போன்ற இனிமையான நினைவுகள் உண்டு//

ரைட்டு கலக்கு மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 18

பேட்டி, ஆட்டோகிராஃப் நோட்டு எல்லாம் கிடைச்சது. உடனே என் மனம் வானில் பறந்து பின்னோக்கிய நினைவுகளுக்கு போயிடுச்சு.//

எதுக்குப்பா இதை படிச்சுட்டு பின்னாடி திரும்பி பாக்குறீங்க...???//

எவனாவது பங்குக்கு வரானான்னு பாக்க!!1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 19

பழைய சோறு,வெங்காயம்,மிளகாய் காம்பினேஷன் சூப்பர். ஆனா இப்போ குக்கர்ல வச்சிடுறாங்க. மீதி வர்றதே இல்லை. பழைய சோறு, வெங்காயம் சாப்பிடணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. கிடைக்குதான்னு பார்ப்போம்...//

இது கூட பழைய மீன் கறியும் இருந்தால், ஆஹா அமிர்தம், நமக்கு கொடுப்பினை இல்லை மக்கா...!!!
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 21

கொய்யால நமக்கு, சிக்கன் கடாய், சிக்கன் போன்லெஸ், தந்தூரி சிக்கன்னு சாப்புட்டு நாக்கு டெத் ஆகிருச்சி என்னடா வாழ்க்கை...???//

KFC போங்க பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 20

ஊர்ஸ், இப்படி ஊர் ஞாபகத்தை கிளப்பிவிடுறீங்களே..//

ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 23

கோவில்பட்டி போஸ்ட் ஆஃபீஸ்கிட்ட கம்மஞ்சோறு, கூழ விக்கிறாஙகளே...அது சூப்பரா இருக்குய்யா..அவங்ககிட்ட நீராகாரமும் விக்கச் சொல்லும்..///

அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே. இப்பதான் அங்கிருந்து வீட்டை வேறு இடத்துக்கு மாத்தினோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 25

அய்யோ, தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் காணோம்!!!!//

குசும்பு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

படிச்சிட்டு கொஞ்சம் ஏத்திக்கிட்டு சாயங்காலமா வாரேன்....

பெசொவி சொன்னது…

பசுமையான நினைவுகள் .

Very nicely written!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சும்மா தூங்கிட்டு இருந்தேன். ஆபீஸ்ல இல்லப்பா வீட்டுலதான்.//////

ஆமா ஆபீஸ்ல சும்மா தூங்க மாட்டாரு, சம்பளம் வாங்கிக்கிட்டுத் தான் தூங்குவாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அங்கதான் நான் ஸ்கூல் படிக்கும்போது வச்சிருந்த நெளிஞ்சு போன அலுமினிய கப்பு,/////

அப்பவே ஆரம்பிச்சிட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ஆட்டோகிராஃப் நோட்டு எல்லாம் கிடைச்சது. உடனே என் மனம் வானில் பறந்து பின்னோக்கிய நினைவுகளுக்கு போயிடுச்சு.//////

அப்புறம் சைக்கிளை எடுத்துட்டு அவங்க மூணு வீட்டுக்கும் போய் பாத்துட்டு வந்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// இப்போ எனக்கு தெரிஞ்சு யார் வீட்டுலயும் சாதம் வடிக்கிறதில்லை. குக்கர் சாதம்தான்.
//////

ஆமா அதான் டயபடீஸ் அதிகமா வருது போல....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////தெருவில் மட்டும் அடுப்பு ஜெகஜோதியாக எரிந்து ஒரே அழகாக இருக்கும்./////

ஒளியிலே தெரிவது......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// பழைய சோறுக்கு சரியான காம்பிநேஷன்னா சின்ன வெங்காயம்////

குட்......

பெயரில்லா சொன்னது…

Junior Rajkiran Vaalga!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஹி ..ஹி ..பதிவு அருமை தோழரே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பழைய சாதத்துக்கு இதுவும் ஒரு நல்ல சைட் டிஷ். இப்பவும் தினமும் ஒரு மோர் மிளகாய் இல்லாமல் சாப்பிடுறதில்லை.//////

ஓ இதுதான் அஞ்சு அன்லிமிட்டட் மீல்சை அப்படியே சாப்புடுற ரகசியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பழைய சோறு, வெங்காயம் சாப்பிடணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. கிடைக்குதான்னு பார்ப்போம்...//////

ஒருநாளு எவனாவது ராப்பிச்சக்காரன் கூட போய் பார்த்தா ஒரு வேள கிடைக்கலாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மொத்தத்தில் வரலாறு அருமை, நாளை புவியியல் வெளியிடவும்....

வெளங்காதவன்™ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

மொத்தத்தில் வரலாறு அருமை, நாளை புவியியல் வெளியிடவும்....///

ஆங்...

வெளங்காதவன்™ சொன்னது…

பிரசண்ட் சார்!

வெளங்காதவன்™ சொன்னது…

உள்ளேன் ஐயா!

Yoga.S. சொன்னது…

வணக்கமுங்க,நாவுல தண்ணி ஊற வச்சிட்டீங்க!அந்த சுவை இப்ப கெடைக்குமா?ம்...........................!

Astrologer sathishkumar Erode சொன்னது…

பழைய சோறும்,காரத்துடன் மாங்காவும் இன்னும் தூக்கல்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சோத்து தண்ணி(வடிகஞ்சி) டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

மலரும் நினைவுகள் அருமை!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது