டெரர் அவரது கேர்ள் பிரண்ட் ஊதா(ரோஸுக்கு போட்டியான மொக்கை பிகர்) இருவரும் ஒட்டகத்துக்கு தீனி வாங்குவதற்காக கப்பல் ஏறி அந்தமான் தீவுக்கு செல்கின்றனர். கப்பல் டிரைவர் மாலுமி(புரபஷனல் குடிகாரன்) தண்ணி மேல தண்ணில இருக்குற பார்ட்டி. அவரும் அந்தமானுக்கு கப்பல் டிரைவரா வர்றார். அங்க உள்ளவங்களை ஏமாத்தி டிக்கெட் கொடுக்க கப்பல் கண்டக்டரா உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி மாதிரி பன்னிக்குட்டி ராம்சாமி வர்றார். அதேநேரம் அந்தமான்ல மான் கறி கிடைக்கும்ன்னு கேள்விபட்டு செல்வாவும் கப்பல்ல ஏறுகிறார்.
அதே நேரம் அந்த கப்பலை பிளாட் போட்டு விக்கலாம்ன்னு நாகராஜசோழன் MLA வும் அவரது அல்லக்கை மாணவனும் வருகிறார்கள். MLA கப்பலை பிளாட் போடுவதில் பிசியாக இருக்க,மாணவனோ பிகர்களிடம் கடலை போட்டுகொண்டிருக்கிறான். மாணவனுக்கும் ஊதாவின் மேல் ஒரு கண். அங்கே சைட் விசயமாக மீன் வியாபாரி, தொழிலதிபர் வைகை வருகிறார். அவரும் ஊதாவை ரூட் விடுகிறார்.
செல்வா: அண்ணா டிரைவர் அண்ணா..
மாலுமி: டேய் நான் டிரைவர் இல்லை. மாலுமி.
செல்வா: அண்ணா அது உங்க பேருன்னே. நீங்க டிரைவர்தான?
மாலுமி: டேய். மாலுமின்னா கப்பல் ஓட்டுரவன்னு அர்த்தம்.
செல்வா: ஓ சரின்னா. தெரியாம சொல்லிட்டேன். எனக்கு அடிக்கடி பசிக்கும்னே. போற வழில கேண்டின்ல கப்பலை நிப்பாடுவீங்கள்ள?மாலுமி: டேய் நான் டிரைவர் இல்லை. மாலுமி.
செல்வா: அண்ணா அது உங்க பேருன்னே. நீங்க டிரைவர்தான?
மாலுமி: டேய். மாலுமின்னா கப்பல் ஓட்டுரவன்னு அர்த்தம்.
மாலுமி: மவனே ஒழுங்கா ஓடி போயிடு.
செல்வா: அண்ணா இங்க மானம் கிடைக்குமா?
மாலுமி: ஏண்டா உளர்ற?
செல்வா: இல்லைன்னா. எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. மானத்தை கப்பல்ல ஏத்துரான்னு. அதான் இதுவரைக்கும் எவ்ளோ பேர் கப்பல்ல மானத்தை ஏத்திருக்காங்க அண்ணா? அதை வச்சி நீங்க என்ன பண்ணுவீங்க?செல்வா: அண்ணா இங்க மானம் கிடைக்குமா?
மாலுமி: ஏண்டா உளர்ற?
மாலுமி: டேய் ஒழுங்கா ஓடி போயிடு. இல்லன்னா சாவடிச்சுடுவேன். ச்சே டார்ச்சர் பண்ணிட்டானே. போயி ஒரு குவாட்டர் அடிக்கணும்.
செல்வா: அண்ணா தூரத்தில வெள்ளையா தெரியுதே அது என்னாண்ணா?
மாலுமி: அது பெரிய ஐஸ்கட்டிடா!
செல்வா: அப்ப அதை எடுத்திட்டு வீட்ல வச்சு கொஞ்சம் கொஞ்சமா யூஸ் பண்ணிக்கலாம்ல.. போங்கன்னே அதை எடுத்து தாங்க.
“டேய் விடுறா விடுறா” என மாலுமி அலறியும் செல்வா வலுக்கட்டாயமாக கப்பலை திருப்ப அது ஐஸ்கட்டியில் மோதி கப்பலில் ஓட்டை விழுகிறது
மாலுமி: டேய் நாதாரி உன்னால கப்பல்ல ஓட்டைவிழுந்திடுச்சே. என்ன பண்றது.
மாலுமி: இது பெரிய ஓட்டை. அதால எல்லாம் முடியாது. போடா போயி எல்லாரையும் கூப்பிடு ஓட்டைய அடிக்கணும்.
செல்வா: சரின்னா. நான் போயி செங்கல் சிமிண்டு எடுத்துட்டு வரேன். அது எங்க இருக்கும்?
மாலுமி: டேய் டேய். அட பாவி அதுக்குள்ளே ஓடிட்டானே.இங்கு இவ்ளோ கலவரம் நடப்பது தெரியாமல் மாணவன் ஊதாவை உஷார் பண்ண செல்கிறார். அதை உஷார் பண்ண வந்த வைகை கொஞ்சம் லேட்டா வந்திட்டமொன்னு வெட்கப்பட்டு மானமில்லாமல் அதை ஒழிந்திருந்து பார்க்கிறார். மாணவன் ஒரு கடிதத்தை ஊதாவிடம் தருகிறார்
கண்ணே ஊதா
அந்த டெரர் ஒரு சோதா,,
நான்தாண்டி தாதா
என் மேல் உன் பார்வை படாதா
கடிதத்தை கண்டதும் காறித்துப்ப சென்ற ஊதாவின் கண்களில் மாணவனின் செயின் படுகிறது.. அக்கணமே “தனனன” என ஓசையுடன் காதலும் பிறக்கின்றது!. ஊதா என் வரலாற்று நாயகர்களை நான் இப்போதே மாற்றுகிறேன். நீதான் என் வரலாற்று நாயகி என சொல்லி அவளை இம்ப்ரெஸ் செய்கிறார். வைகையோ இதை எப்படியாவது பிரிக்க வேண்டும் என எண்ணி டெரரிடம் போட்டு கொடுக்கிறார்.
அதே நேரம் MLA கப்பலை எப்படி பிளாட் போடுவது என யோசித்து கொண்டிருக்கும்போது அவர் மீது உடைந்த பனிக்கட்டி தெறிக்கிறது. ஆகா பனிக்கட்டி வேற இருக்கா. அப்போ AC பிளாட்டுன்னு சொல்லி இன்னும் கொஞ்சம் அதிக விலைக்கு வித்திடலாம்ன்னு அவரது இல்லாத மூளை யோசிக்கிறது.
கடிதத்தை கண்டதும் காறித்துப்ப சென்ற ஊதாவின் கண்களில் மாணவனின் செயின் படுகிறது.. அக்கணமே “தனனன” என ஓசையுடன் காதலும் பிறக்கின்றது!. ஊதா என் வரலாற்று நாயகர்களை நான் இப்போதே மாற்றுகிறேன். நீதான் என் வரலாற்று நாயகி என சொல்லி அவளை இம்ப்ரெஸ் செய்கிறார். வைகையோ இதை எப்படியாவது பிரிக்க வேண்டும் என எண்ணி டெரரிடம் போட்டு கொடுக்கிறார்.
அதே நேரம் MLA கப்பலை எப்படி பிளாட் போடுவது என யோசித்து கொண்டிருக்கும்போது அவர் மீது உடைந்த பனிக்கட்டி தெறிக்கிறது. ஆகா பனிக்கட்டி வேற இருக்கா. அப்போ AC பிளாட்டுன்னு சொல்லி இன்னும் கொஞ்சம் அதிக விலைக்கு வித்திடலாம்ன்னு அவரது இல்லாத மூளை யோசிக்கிறது.
இதே நேரம் பன்னிக்குட்டி ஏமாந்த சோணகிரிகளாய் பார்த்து டிக்கெட் டிக்கெட் என கூவுகிறார்.
பன்னிக்குட்டி: டேய் வீங்குன வாயா டிக்கெட் எடுத்துட்டியா?
அவன்: நான் ரிசர்வேசன் பண்ணிட்டுதான் வந்தேன்.
பன்னிக்குட்டி: அடிங். நீ ரேஷன் கடைக்கு போயிட்டு வந்தாலும் டிக்கெட் எடுக்கணும். இல்லைன்னா மூஞ்சில கக்கூஸ் வாளிய எடுத்து பிராண்டிடுவேன். ராஸ்கல்.அவன்: நான் ரிசர்வேசன் பண்ணிட்டுதான் வந்தேன்.
லேடி: டிக்கெட் எவ்ளோ?
பன்னிக்குட்டி: நீயே ஒரு டிக்கெட். உனக்கெதுக்கு ஒரு டிக்கெட். உனக்கு ப்ரீ. என்ஜாய்.------------------------------
இங்கு வைகை டெரரிடம் மாணவனை பற்றி சொல்ல வரும்போது டெரர் ஒட்டகத்துக்கு போட வேண்டிய புண்ணாக்கு கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார். வைகை விஷயத்தை சொன்னதும்
டெரர்: இருங்க பாஸ். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போகலாம்ன்னு.
வைகை: ஏண்டா?டெரர்: இருங்க பாஸ். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போகலாம்ன்னு.
டெரர்: இல்ல பாஸ். வரும்போது சாப்பிடுறதுக்கு ஒரு மூட்டை புண்ணாக்குதான் எடுத்துட்டு வந்தோம். இப்ப கொஞ்சம்தான் இருக்கு. இப்ப போன அவ பங்கு கேப்பா. அதனால இதை காலி பண்ணிட்டு வர்றேன்.
வைகை: அங்கே பிகரே போக போகுது. உனக்கு புண்ணாக்கு முக்கியமா? கர். தூ.
டெரர்: சரி வாங்க போவோம்.------------------------------
ஊதா: அன்பே அந்த கம்பியின் மேல் நாம் இருவரும் நிற்போமா? என்னை கொஞ்சம் தூக்கி விடுங்கள்!
மாணவன்: (மனதுக்குள்) நாதாரி, என்ன கணம் கணக்கிறா? முடியல. ஏம்மா நாம இப்படிக்கா சேர்ல உக்கார்ந்து பேசலாம்ல.
வைகை: டேய் டெரர் அங்க பார்ரா உன் பிகரோட மாணவன் கம்பி மேல நிக்கிறான்....
டெரர்: நல்ல வேளை பாஸ்... அவ பாப்கார்னையும் சாக்லேட்டையும் சேர் மேலே வச்சிட்டு போய்ட்டா... அவங்க திரும்பி வர்றதுக்குள்ள திங்ககனும்...
வைகை: அட.. நாதாரி. அங்க உன் பிகரே கொஞ்ச நேரத்துல பாப்கார்ணா ஆக போகுது... நீ இங்க பாப்கார்ன் திங்கிற?
டெரர்: அட விடுங்க பாஸ்.. நானே அவள எப்பிடி கழட்டி விடலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன்... என்னையவிட ஓவரா திங்கிறா பாஸ்...
வைகை: அடிங். அவளுக்கு ஏகப்பட்ட சொத்துடா. அவங்கப்பா பிரபல பதிவராம். அவங்கப்பாவுக்கு தினமும் ஏகப்பட்ட ஹிட்ஸ் கிடைக்குமாம். அவள மட்டும் கல்யாணம் பண்ணிகிட்ட.ஆயுசு முழுக்க நீ உக்காந்து திங்கலாம்டா பக்கி.
டெரர்: அப்பிடியா பாஸ். அப்போ பெரிய இடம்தான். இந்தா இப்பவே போறேன்...
----------------------------------------------------------------------
டெரர்: சோமாறி, என் ஃபிகரை நீ உஷார் பண்ண பார்க்கிறியா?
மாணவன்: நண்பரே, எங்கள் காதல் கறந்த பாலை விட தூய்மையானது.. இமயமலையை விட உயர்ந்தது.
டெரர்: டேய் போதுண்டா என்னை விட்ரு.
--------------------------------------------------------------------
அப்போது கப்பல்ல ஓட்டை விழுந்துருச்சு உங்களுக்கு சிமெண்ட் பூசத்தெரியுமா என கேட்டுக் கொண்டே செல்வா வந்தார். என்னது கப்பல்ல ஓட்டை விழுந்திடுச்சா? அடங்கொன்னியா டிக்கெட் கொடுக்க வந்தவனுக்கே டிக்கெட் கொடுத்திடுவாங்க போல என பன்னி அலறுகிறார்.
சிமென்ட் பூச தெரியுமா என செல்வா கேட்டதும் அது யார்டா எனக்கு தெரியாம பிளாட் கட்டுறது என கேட்டு அதிர்ச்சியார் திரும்பினார் MLA.
MLA : தம்பி இங்க எங்க பிளாட் வேலை நடக்குது?
செல்வா: அப்படி எதுவும் நடக்கலியே.
MLA : பிறகு எதுக்கு சிமிண்ட் கேட்ட?
செல்வா: கப்பலுக்கு அடியில ஓட்டை விழுந்திடுச்சு. அதை அடைக்கணும். அதான்.
MLA : அதுக்கு ஏன் கஷ்டப்படனும். கப்பலை தலைகீழா கவுத்துட்டா ஓட்டை கீழ போயிடும்ல.
செல்வா: நல்ல ஐடியா பாஸ். வாங்க போகலாம்.
MLA : ஆனா கப்பலை எப்படி கவுப்ப?
செல்வா : நாம இரண்டு பேரும் சேர்ந்து அந்த கப்பல் கைபிடி சுவர் மேல ஏறி நிக்கலாம். வெய்ட் அதிகமாகி கப்பல் ஒரு பக்கமா சாஞ்சிடும்.
இருவரும் கப்பலை கவுத்த வேண்டி கப்பல் சுவற்றில் ஏறும் பொழுது தவறி தண்ணீரில் விழுகிறார்கள்.
MLA : அட வெறும் உப்புத்தண்ணிதான் இருக்கு. இங்கு பிளாட் போட்டா நல்ல தண்ணிக்கு என்ன செய்றது. வெளிலதான் வாங்கனுமோன்னு யோசித்துக்கொண்டே தண்ணீரில் மூழ்குகிறார்.
செல்வா: F1 F1
MLA : ஏண்டா F1 F1 ன்னு கத்துற?
செல்வா: கம்ப்யூட்டர்ல F1 ன்னா ஹெல்ப்ன்னு அர்த்தம் பாஸ். அதான் கத்துறேன்.
MLA : சாகும்போதும் சாவடிக்கிறானே. (இருவரும் மூழ்குகின்றனர்)
------------------------------ ------------------------------ -----
ஆனால் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.எல்லோரும் தப்பிச்சு போங்க நான் இந்த கப்பலோட போறேன் என்று சொன்ன மாலுமியை சோகமாக/பெருமையாக பார்த்து மக்கள் அனைவரும் தப்பித்து செல்கிறார்கள்...
மாலுமி: எல்லோரும் போய்ட்டாங்களா. அப்பாடி நிம்மதியா தண்ணியடிக்கலாம். சரக்கு பங்கு எவனும் கேக்கமாட்டான்.
கப்பல் தண்ணியில் மூழ்க.. மாலுமியும் தண்ணியில் மூழ்குகிறார்....
------------------------------ -
தண்ணியில் மிதக்கும் டெரர் & பன்னிக்குட்டி..
டெரர்: டேய் எப்படிடா நீ மட்டும் மிதக்குற?
பன்னிக்குட்டி: கட்டையை கட்டிபுடிச்சிருக்கேன்.
டெரர்: செம நாட்டுக்கட்டையாடா?
பன்னிக்குட்டி: இல்ல விறகுகட்டை.மூதேவி மூழ்குறப்ப கூட ஜொள்ளு விடுது பாரு.
-------------------------------------------------
இங்கே மாணவன் ஊதாவிடம்: அன்பே காதல் பிறப்பதில்லை அவதரிக்கிறது வரலாற்றின் பக்கங்களில் இது போன்ற எத்தனையோ காதல்களை நாம்சந்தித்திருக்கிறோம் அவைகளுக்கு ஏற்படாத பிரச்சினையா நமக்கு ஏற்பட்டுள்ளது? காத்திருப்பது காதலின் பொற்காலம் இவற்றின் படி நாம் செயல்பட்டால்அந்த வானம் கூட நமக்கு வசப்படும் அன்பே....என பேசிக் கொண்டே போக
ஒரு செயினுக்கு ஆசைப்பட்டு பிளேடுகிட்ட மாட்டிகிட்டமோ? என்று பயந்து தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மறந்து மாணவன் கையை உதற தண்ணிரில்மூழ்க ஆரம்பிக்கிறார் ஊதா.
அதை பார்த்த வைகை டெரர் அங்க பாரு என்று கை காட்ட, திடுக்கிட்ட டெரர் ஆக்ரோஷமாக அலைகளுடன் போராடி நீந்தி ஊதவை நெருங்கி அவள் அருகில்மிதந்து கொண்டு இருந்த பாப்கார்ன் பாக்கெட்டை எடுத்து கொண்டு வெற்றி புன்னகையுடன் வைகையை பார்க்க, அதை பார்த்த வைகை தண்ணீருக்குள் தன்காலை தேடி அதில் இருந்து செருப்பை கழட்டி தானே அடித்து கொள்கிறார்.
அதே நேரம் வீட்டில் நல்லதண்ணி கேட்டதற்காக நல்லதண்ணி தீவுக்கு இடுப்பில் ட்யூப் கட்டி மிதந்து வந்துகொண்டிருந்த ரமேஷ் தூரத்தில் ஊதா மிதப்பதைபார்க்கிறார். அத்தனை பேர் தண்ணீரில் தத்தளித்தாலும் ரமேஷின் கண்கள் ஊதாவை மட்டுமே பார்க்கிறது.
45 கருத்துகள்:
sariyaana comedy
எல்லாம் சரி குத்து எங்கப்பா???
NAAI-NAKKS சொன்னது… 3
எல்லாம் சரி குத்து எங்கப்பா???//
என்ன குத்து?
மொக்கராசா கூறியது...
sariyaana comedy//
thanks
டெரர் அவரது கேர்ள் பிரண்ட் ஊதா//
அப்ப ரஞ்சனியும் இந்த கதையில் உண்டா? :)
super...
தங்களின் பொன்னான பணி தொடரட்டும்...
இருவரும் ஒட்டகத்துக்கு தீனி வாங்குவதற்காக கப்பல் ஏறி அந்தமான் தீவுக்கு செல்கின்றனர்//
அதுக்கு ஏன் அந்தமான் போகணும்? அரேபியா போனா ஒட்டகமே வாங்கலாமே? :)
சூப்பர், அருமை...
எனது வலையில் இன்று,
சரக்கில்லாமல் சரக்கடிப்பது எப்படி
அந்தமானுக்கு கப்பல் டிரைவரா வர்றார். //
அவன்கிட்ட லைசென்சே இல்லையே? அப்புறம் எப்பிடி? :))
சிரிப்பு போலிஸ்: (கடலை உருண்டைய நக்கி கொண்டே) நானும் இந்த கப்பல்ல ஏறிக்கலாமா....
பன்னி குட்டி: ஏறி தொல....டிக்கெட் எடுடா....
சிரிப்பு போலிஸ்: நான் பஸ் பாஸ் வச்சுருகேகன்...அதனால டிக்கெட்ட் எடுக்க மாட்டேன்
பன்னி : முதல்ல நீ கடலை உருண்டையை கீழே போடு ஏதாச்சும் முதலை தாவி வந்து புடுங்க போகுது....டேய் அதுக்கு நீ பஸ்ஸுல போயிருக்கனும்..
மாலுமி: பன்னி அவன் நம்ம செட்டு தான்... விடுங்க அவன் வித்வுட்டுல வரட்டும்..
பன்னி: ஆமா பெரிய சேவிங் செட்......டேய் நாதாரி அந்த மூலையில் போய் உட்காரு......
போலிஸ்:எச்சூஸ் மீ எனக்கு பசிக்குது ....பழைய சோறு அரேஞ்ச பண்ண முடியுமா...அப்பறம் அதுக்கு சைட் டிஸ்ஸா ....வதக்குன சின்ன் வெங்காயம்,எண்ண கத்திரிகாய், நெய் மீன் கருவாரு,
சுண்ட வத்தல், பொட்டு கடலை சட்னி எல்லாம் வேணும்.
பன்னி: டேய் மாலுமி நடுகடல்ல இவன தள்ளி விடுவோம்.... இல்ல நம்ம ஒழுங்கா ஊர் போய் சேர முடியாது...
மாணவனோ பிகர்களிடம் கடலை போட்டுகொண்டிருக்கிறான். ///
நல்ல பொன்னான பணிதான் :))
அங்கே சைட் விசயமாக மீன் வியாபாரி, தொழிலதிபர் வைகை வருகிறார்.//
அடடே.. ரொம்ப புண்ணியம் செஞ்ச கப்பலா இருக்கும் போலேயே? :))
இதுல கப்பல் நடுவழில நின்னுபோனா தள்ளி விடறதுக்கு அருண் ஏறலியா? :))
மாலுமி: டேய் ஒழுங்கா ஓடி போயிடு. இல்லன்னா சாவடிச்சுடுவேன். ச்சே டார்ச்சர் பண்ணிட்டானே. போயி ஒரு குவாட்டர் அடிக்கணும்///
செல்வா பண்ற டார்ச்சருக்கு ஃபுல்லே பத்தாதே? :)
அதை உஷார் பண்ண வந்த வைகை கொஞ்சம் லேட்டா வந்திட்டமொன்னு வெட்கப்பட்டு மானமில்லாமல் அதை ஒழிந்திருந்து பார்க்கிறார். ///
அடிங்.. இந்த மூஞ்சியையே விடாம ஒருத்தன் ரூட் விடறானே.. அவன் யாரா இருப்பான்னு ஒளிஞ்சிருந்து பார்த்தேன் :))
கடிதத்தை கண்டதும் காறித்துப்ப சென்ற ஊதாவின் கண்களில் மாணவனின் செயின் படுகிறது//
பாவம்.. அது கல்யாணி கவரிங்க்னு அவளுக்கு தெரியாதோ? :))
//எந்த பிகரும் தன்னை பார்க்கவில்லை. இதையாவது காப்பாற்றி பிக்கப் செய்யலாம் என எண்ணி ஊதாவை காப்பாற்றி அவருடைய ட்யூபில் ஏற்றிக் கொள்கிறார். அந்த பெண்ணும் வழக்கம்போல் தேங்க்ஸ் அண்ணா என்று சொல்ல தண்ணிக்குள்ளையே ரமேஷ் மயங்கி சரிகிறார்.///
வாழுக!
தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...
/// அதை பார்த்த வைகை டெரர் அங்க பாரு என்று கை காட்ட, திடுக்கிட்ட டெரர் ஆக்ரோஷமாக அலைகளுடன் போராடி நீந்தி ஊதவை நெருங்கி அவள் அருகில்மிதந்து கொண்டு இருந்த பாப்கார்ன் பாக்கெட்டை எடுத்து கொண்டு வெற்றி புன்னகையுடன் வைகையை பார்க்க, அதை பார்த்த வைகை தண்ணீருக்குள் தன்காலை தேடி அதில் இருந்து செருப்பை கழட்டி தானே அடித்து கொள்கிறார்.///
ஹா ஹா ஹா
முடியலடா சாமி.........
22
24
25
டெரர்தான் ஜேம்ஸ் கேமரூனா?
காமடி கதம்பத்தில் யாமில்லாததால் புறமேறுகிறேன்
/* இதையாவது காப்பாற்றி பிக்கப் செய்யலாம் என எண்ணி ஊதாவை காப்பாற்றி அவருடைய ட்யூபில் ஏற்றிக் கொள்கிறார். */
எந்த ரியூப் ? YouTube பா ?
//அவருடைய ட்யூபில் ஏற்றிக் கொள்கிறார். //
U-ட்யூபில் ?
ha..ha...
தங்கள் பொன்னான பணி தொடரட்டும்... :-)
நல்லா சிரிக்க வச்சுட்டீங்க!
//டெரர்: நல்ல வேளை பாஸ்... அவ பாப்கார்னையும் சாக்லேட்டையும் சேர் மேலே வச்சிட்டு போய்ட்டா... அவங்க திரும்பி வர்றதுக்குள்ள திங்ககனும்... //
ஹா ஹா :))
Classic comedy! :))
/////டெரர் அவரது கேர்ள் பிரண்ட் ஊதா//////
ஆரம்பத்துலேயே அபசகுனமா இருக்கே?
/////இருவரும் ஒட்டகத்துக்கு தீனி வாங்குவதற்காக கப்பல் ஏறி அந்தமான் தீவுக்கு செல்கின்றனர்./////
ஆளுக்கொரு ஒட்டகம் வெச்சிருக்காங்களா?
///// கப்பல் டிரைவர் மாலுமி(புரபஷனல் குடிகாரன்) தண்ணி மேல தண்ணில இருக்குற பார்ட்டி. //////
கப்பல்ல ஸ்டீரிங்கு இருக்கும் போதே நெனச்சேன் ஒரு ட்ரைவர் இருப்பான்னு....
//////அங்க உள்ளவங்களை ஏமாத்தி டிக்கெட் கொடுக்க கப்பல் கண்டக்டரா உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி மாதிரி பன்னிக்குட்டி ராம்சாமி வர்றார். ////
ட்ரைன்ல செக் பண்ணியாச்சு, பஸ்ல டிக்கட் கொடுத்தாச்சு, இப்ப கப்பல்லயும் கொடுத்தாச்சு, இனி நோ ரன்னிங் ஒன்லி ஃப்ளையிங்தான்...
////MLA கப்பலை பிளாட் போடுவதில் பிசியாக இருக்க,மாணவனோ பிகர்களிடம் கடலை போட்டுகொண்டிருக்கிறான். ////
பிகர்கள்ட்ட தான் கடலை போட முடியும்....
//////கடிதத்தை கண்டதும் காறித்துப்ப சென்ற ஊதாவின் கண்களில் மாணவனின் செயின் படுகிறது../////
சைக்கிள் செயினா?
//////லேடி: டிக்கெட் எவ்ளோ?
பன்னிக்குட்டி: நீயே ஒரு டிக்கெட். உனக்கெதுக்கு ஒரு டிக்கெட். உனக்கு ப்ரீ. என்ஜாய்.//////
ங்கொய்யால அந்த டிக்கட்ட இன்னும் மறக்கலியாடா?
////டெரர்: இல்ல பாஸ். வரும்போது சாப்பிடுறதுக்கு ஒரு மூட்டை புண்ணாக்குதான் எடுத்துட்டு வந்தோம். இப்ப கொஞ்சம்தான் இருக்கு. இப்ப போன அவ பங்கு கேப்பா. அதனால இதை காலி பண்ணிட்டு வர்றேன்.///////
புண்ணாக்குக்கு என்ன தொட்டுக்குவார்.. தக்காளிச் சட்னியா?
/////டெரர்: அட விடுங்க பாஸ்.. நானே அவள எப்பிடி கழட்டி விடலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன்... என்னையவிட ஓவரா திங்கிறா பாஸ்... //////
புண்ணாக்கையா இல்ல தக்காளிச் சட்னியவா?
//// அத்தனை பேர் தண்ணீரில் தத்தளித்தாலும் ரமேஷின் கண்கள் ஊதாவை மட்டுமே பார்க்கிறது. ////
நல்ல வேள அதுக்கு முன்னாடியே டெரர் பாப்கார்ன முடிச்சிட்டான், இல்லேன்னா கதை பெரிய டிவிஸ்ட்டே வந்திருக்கும்.....
/////ஊதாவை காப்பாற்ற அருகில் வரும் ரமேஷ் அது மொக்கை பிகர் என தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்./////
ஏன் இந்த அதிர்ச்சி..... இதெல்லாம் சகஜம்தானே?
///// அந்த பெண்ணும் வழக்கம்போல் தேங்க்ஸ் அண்ணா என்று சொல்ல தண்ணிக்குள்ளையே ரமேஷ் மயங்கி சரிகிறார்.//////
அப்புறம் ரமேஷை ஊதா காப்பாத்தி.. வெளிய தூக்கி.... வாயில வாய வெச்சி தண்ணிய எடுத்து.....
சுபம்....!
அப்பாடா இவங்க கூட கப்பல்ல போகாதது நல்லதா போச்சு...
தொலைந்தார்கள் எதிரிகள்
ஹா ஹா ஹா வெற்றி வெற்றி வெற்றி
தமிழ்மணத்திலிருந்து என்னோட ப்ளாக்க தூக்கிட்டாங்கப்பா....என்னோட பதிவு நல்லா வேலை செய்துங்கோ போலிஸ்கார்...
http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_17.html
கருத்துரையிடுக