புதன், அக்டோபர் 19

உலகமகா அறிவாளிகள்

டெரர்: டேய் அண்ணன் பெரியவனா? தம்பி பெரியவனா?

பன்னி: என்றா கேள்வி இது அண்ணன்தான் பெரியவன்.
டெரர்: என் பக்கத்து வீட்டுல அக்டோபர் 5 -ம் தேதி தம்பி பிறந்தநாள் கொண்டாடுறான். அக்டோபர் 20 -ம் தேதி அண்ணன் பிறந்தநாள் கொண்டாடுறான். அக்டோபர் 20 -ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுறவந்தான தம்பி.

பன்னி: அட நாதாரி பிறந்த வருஷம் வேற வேறடா.

டெரர்: ஓ அப்படி ஒன்னு இருக்குதோ!!
====================================

பன்னி: என்னடா வீட்ல எலிதொல்லை அதிகமா இருக்கேன்னு எலிப்பொறி வாங்கிட்டி போனியே, ஏதாவது மாட்டுச்சா?

டெரர்: அட அத ஏம்பா கேக்குற..... எலி இருந்தா இருந்துட்டு போகட்டும் பாவம்.....

பன்னி : ஏன்டா என்னாச்சு?

டெரர் : ஒவ்வொரு வாட்டியும் எலிப்பொறில வடைய வெச்சிட்டு மறந்து நானே எடுத்து மாட்டிக்கிறேன்...... வேற என்ன பண்றது?
====================================
மொக்கை: யோவ் ஏன்யா கம்ப்யூட்டர் வாங்கிட்டு மௌஸ் வாங்காம வந்திருக்கே?நான்: அட என்னய்யா அங்க ஒரு மௌஸ் 200 ரூவா சொல்றான்... எங்க வீட்லேயே நாலஞ்சு சும்மா சுத்திட்டு இருக்கு, இன்னிக்கு பொறிவெச்சி புடிச்சிட்டா 200 ரூவா மிச்சம்ல....... எப்பூடி....?

மொக்கை : டேய்ய்... அடப்பாவி........

நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....

மொக்கை : அய்யய்ய்யோ...............
=======================================
டெரர்: சீக்கிரம் கெளம்புடா... அந்த கம்ப்யூட்டர் கடைக்கு போகனும்..........

பன்னி: ஏன்டா நேத்து வாங்குன லேப்டாப்ல ஏதாவது ப்ராப்ளமா?

டெரர் : ஆமா மச்சி, அதுல CPU வ காணோம். நாம அவ்ளோ கேர்புல்லா இருந்தும் அவன் ஏமாத்திட்டான் மச்சி........

பன்னி : ???!!????
===================================
நான்: Normal Body check up ல என்ன என்ன டெஸ்ட் பண்ணுவாங்க?

எஸ். கே : போஸ்ட் மார்ட்டம்...

நான்: Normal Body check up ல என்ன என்ன டெஸ்ட் பண்ணுவாங்க?

எஸ். கே : போஸ்ட் மார்ட்டம்...

நான்: !!!(இவங்க கூட எல்லாம் சேர்ந்து நான் எங்க உருப்படபோறேன்)
============================
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது,என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

#From Facebook
=========================
ஒரு பொண்ணு ரெட் சிக்னல் போட்டிருக்கும்போது பைக்கில் ரோடை கிராஸ் பண்ணிட்டாங்க. உடனே அவங்களை போலீஸ் பிடிச்சிடுச்சு.

போலீஸ்: ஸ்டாப்

பொண்ணு: என்னை போக விடுங்க. நான் ஒரு டீச்சர். ஸ்கூல்க்கு போகனும்

போலீஸ்: மாட்டுனியா. உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். சிக்னலை மீறமாட்டேன்னு 500 தடவை இம்போசிசன் எழுதி கொடுத்துட்டு போ...

பொண்ணு: !!!!

#SMS
===============================
டெரர்: டேய் நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.

பன்னி: அவங்க யாருன்னு பாத்தியா?

டெரர் : இல்ல ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
========================
பன்னிக்குட்டி ராம்சாமி : ஏண்டா சர்ஃப் எச்செல்லை கரைச்சு குடிக்கிற?

Terror Pandian : மனசு சுத்தமா இருக்குரவங்களைத்தான் காதலிப்பேன்னு என் ஆளு சொன்னா. அதான்.

பன்னிக்குட்டி ராம்சாமி : அதுக்கு இதெல்லாம் பத்தாதுடா. கார்பிக் வாங்கி குடி. அம்மாம் பெரிய கக்கூசையே சுத்தம் செய்யுது. உன் மனசை சுத்தம் செய்யாதா!!!

Terror Pandian: !!!!!!
========================================
டெரர்: அண்ணே..அண்ணே.... காதல்னா என்னண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி : அப்டி கேள்றா என் டூத் பேஸ்ட் வாயா... டேய்ய்...காதல்னா லவ்... பியார்ரா... சரி விட்ரா..அதுக்கெல்லாம் அழகா இருக்கணும்..... உனக்கெதுக்குடா அது?.. என் நூடுல்ஸ் மண்டையா...

டெரர் : ஐயோ.. அண்ணே.. அப்ப உங்களுக்கு அந்த கொடுப்பினையே இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அடங்கொன்னியா? $%%^^^;

======================================
Terror Pandian :மச்சி WIFI வயரை கட் பண்ணனும். எப்படி பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி : என்னடா மப்புல இருக்கியா? உளர்ற. WIFI வயரை கட் பண்ணனுமா? ஏன்?

Terror Pandian : இல்ல மச்சி எப்படியோ என் பாஸ்வோர்ட் தெரிஞ்சிக்கிட்டு பக்கத்து வீட்டுக்காரன் என் நெட் கனெக்ஷனை WIFI வழியா யூஸ் பண்றான். அதான் WIFI போற வயரை கட் பண்ணிட்டா அவன் எப்படி யூஸ் பண்ணுவான்?

பன்னிக்குட்டி ராம்சாமி : அறிவு கொழுந்துடா நீ...
=========================================== 
Terror Pandian ஒரு நாள் கேண்டீனுக்கு போன் பண்றதுக்கு பதிலா அவங்க பாஸ்க்கு போன் பண்ணிடுறாரு

Terror Pandian : டேய் ரெண்டு நிமிசத்துல என் டேபிளுக்கு டீ கொண்டு வா..

Boss: நீ யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுதா?

Terror Pandian : போன்ல மூஞ்சி எப்படிடா தெரியும் வெண்ணை?

Boss : நான்தாண்டா இந்த கம்பனியோட பாஸ்..

Terror Pandian : நீ யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுதா?

Boss : No..


Terror Pandian : thank god.. (Disconnects the phone) 

#SMS
===================================

நன்றி: டெரர் கும்மி நண்பர்கள்  

37 கருத்துகள்:

விக்கியுலகம் சொன்னது…

கலக்கல் மாப்ள அறிவு கொழுந்துகள் ஹிஹி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

கலக்கல் மாப்ள அறிவு கொழுந்துகள் ஹிஹி!///

ஹிஹிஹிஹி

NAAI-NAKKS சொன்னது…

present sir...

வைகை சொன்னது…

பன்னி: அட நாதாரி பிறந்த வருஷம் வேற வேறடா.
டெரர்: ஓ அப்படி ஒன்னு இருக்குதோ!!///

இவன் பிரவரி 30 பிறந்திருப்பான் போல? :)

வைகை சொன்னது…

டெரர் : ஒவ்வொரு வாட்டியும் எலிப்பொறில வடைய வெச்சிட்டு மறந்து நானே எடுத்து மாட்டிக்கிறேன்...... வேற என்ன பண்றது?///

எலிப்பொறிய எடுத்து எதுல மாட்டிக்கிறான்? :))

வைகை சொன்னது…

நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....//


எலி புடிக்கிற பயலா நீ? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....//


எலி புடிக்கிற பயலா நீ? :))//

ஆமா இவரு சிங்கப்பூரு ஜனாதிபதி

வைகை சொன்னது…

டெரர் : ஆமா மச்சி, அதுல CPU வ காணோம். நாம அவ்ளோ கேர்புல்லா இருந்தும் அவன் ஏமாத்திட்டான் மச்சி........///

இது பரவாயில்ல.. பாபு கம்ப்யூட்டர் வாங்கிட்டு பின்னால வெட்டி எடுத்தாரு.. ஏன் மக்கான்னு கேட்டா.. விண்டோஸ் இன்ஸ்டால் பண்றாராம் :))

வைகை சொன்னது…

நான்: !!!(இவங்க கூட எல்லாம் சேர்ந்து நான் எங்க உருப்படபோறேன்)//

சேரலைனாலும் உருப்பட போறியா என்ன? :))

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....//


எலி புடிக்கிற பயலா நீ? :))//

ஆமா இவரு சிங்கப்பூரு ஜனாதிபதி///

ஆங்.. சொல்லிட்டாரு சென்னை மேயரு... என்ன கலாய்ச்சிட்டாராமா.. :))

நாகராஜசோழன் MA சொன்னது…

தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..

வைகை சொன்னது…

Terror Pandian : மனசு சுத்தமா இருக்குரவங்களைத்தான் காதலிப்பேன்னு என் ஆளு சொன்னா. அதான்.///

பாலிடால் குடிக்க சொல்லு... உடம்பே சுத்தம்ம்ம் ஆயிரும் :))

வைகை சொன்னது…

டெரர்: டேய் நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.

பன்னி: அவங்க யாருன்னு பாத்தியா?/////

டெரர் - விட்ரா மச்சி.. அதுல என் கேர்ள் பிரெண்ட் இருக்கா.. தொலையட்டும் :))

ரசிகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரசிகன் சொன்னது…

20 > 5 அதனால அக்டோபர் 20 ல பிறந்தவன் தான் அண்ணன்னு பதில் சொல்லி இருந்தா ஒத்துட்டிருக்க மாட்டாரு? :)

அருண் பிரசாத் சொன்னது…

தங்களின் பொன்னான மொக்கை தொடரட்டும்..

வெளங்காதவன் சொன்னது…

எல்லாமே நச்!

கடைசி ஒண்ணு "இச்"...

Mohamed Faaique சொன்னது…

///நான்: அட என்னய்யா அங்க ஒரு மௌஸ் 200 ரூவா சொல்றான்... எங்க வீட்லேயே நாலஞ்சு சும்மா சுத்திட்டு இருக்கு, இன்னிக்கு பொறிவெச்சி புடிச்சிட்டா 200 ரூவா மிச்சம்ல....... எப்பூடி....?///

இந்த மவ்ஸ்’ல தலை’லதான் வாலிருக்கே!!! என்ன பண்ணுவீங்க...

Mohamed Faaique சொன்னது…

///நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....///

உங்களத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.. இங்க சாக்கடைல நிறைய இருக்கு..வந்து புடிச்சுட்டு போங்களே!!

Mohamed Faaique சொன்னது…

//ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. .///

ஆமா.... அதுக்கு பிறகுதான் காலேஜ்’க்கு ஷூ போட்டு வரனும்’னு சட்டம் வந்திச்சாம்..

பெயரில்லா சொன்னது…

நல்ல அருமையான Jokes. by Ubaidullah.

மாணவன் சொன்னது…

தங்களின் பொன்னான நகைச்சுவைப்பணி தொடரட்டும்...
:-)

Yoga.S.FR சொன்னது…

காலை வணக்கம்!எப்புடீங்க உங்களுக்கு மட்டும் இப்புடீல்லாம் தோணுது?கலக்கல்!!!!!

துணிந்து சொல்பவன் சொன்னது…

:)) Kalakkal comedy!

கோமாளி செல்வா சொன்னது…

//இன்னிக்கு பொறிவெச்சி புடிச்சிட்டா 200 ரூவா மிச்சம்ல....... எப்பூடி....?//

ஹி ஹி :)) நானும் பிடிச்சுத்தரேன். பாதி விலைக்கு வித்துக்குடுப்பீங்களா ?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலி பிரச்சினை பெரிய பிரச்சினையா போச்சே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா எல்லாமே அசத்தல்...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////டெரர் : ஒவ்வொரு வாட்டியும் எலிப்பொறில வடைய வெச்சிட்டு மறந்து நானே எடுத்து மாட்டிக்கிறேன்...... வேற என்ன பண்றது?////

எலிப்பொறில பெருச்சாளி சிக்குதே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பன்னி: அட நாதாரி பிறந்த வருஷம் வேற வேறடா.
டெரர்: ஓ அப்படி ஒன்னு இருக்குதோ!!=////

அடேய்ய் நான் எஸ்.எஸ்.எல்.சிடா.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////
நான்: வேணும்னா சொல்லு உனக்கொண்ணு புடிச்சித்தாரேன்.....

மொக்கை : அய்யய்ய்யோ.............../////

மொக்க மௌசை புடிச்சு கம்ப்யூட்டர்ல யூஸ் பண்ண மாட்டான், அப்படியே பொறிச்சி சாப்பிட்ருவான்........ அதான் அப்படி ஜெர்க் ஆகுறான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பன்னிக்குட்டி ராம்சாமி : அடங்கொன்னியா? $%%^^^;//////

ஒரு ஜெண்டில்மெனை இன்சல்ட் பண்றீங்க, ஃப்யூச்சர்ல ரொம்ப ஃபீல் பண்ணுவீங்கடா.....

தமிழ்வாசி - Prakash சொன்னது…

கலக்கல் அறிவாளி

FOOD சொன்னது…

கல கல கலக்கல்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////
நன்றி: டெரர் கும்மி நண்பர்கள்////

பார்ரா....?

middleclassmadhavi சொன்னது…

super! :-))))

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான நகைச்சுவைத் தொடர் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நேற்று ஆணி அதிகமானதால் யாருக்கும் ரிப்ளை பண்ண முடியவில்லை. அனைவருக்கும் நன்றி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது