சனி, மார்ச் 31

ஐயாம் பேக்

ரொம்ப நாள் என்னைக் காணோம்னு ரொம்ப சந்தோசமா இருந்திருப்பீங்களே. இன்னும் உங்களை சந்தோசமா வச்சிருக்க விரும்பலை. அதான் திரும்பி வந்துட்டேன்.
கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன். அதாங்க கல்யாணம் ஆகிடுச்சு. திருச்செந்தூர் முருகன் கோவில்ல முருகனோட ஆசியோடும், பெத்தவங்க ஆசியோடும் செல்வி விஜயலட்சுமியை திருமதி விஜயலட்சுமியா மாற்றிவிட்டேன். உங்க எல்லாரையும் கல்யாணத்துக்கு கூப்பிட முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். கூப்பிட முடியாத சூழ்நிலையால் யாரையும் அழைக்க முடியவில்லை.

ரெண்டுவாரம் கழித்து கடந்த திங்கள் கிழமைதான் சென்னை வந்து சேர்ந்தேன். இனி சிரிப்பு போலீஸ் ப்ளாக்கில் அடிக்கடி காவியங்கள் வரும். படித்து இன்புறவும்.

பின் குறிப்பு அதுவும் மிக முக்கிய குறிப்பு: கல்யாணத்துக்கு கூப்பிடாட்டாலும் நீங்க கிப்ட் கண்டிப்பா தருவேன்னு சொல்றது எனக்கு தெரியுது. நான் வேணாம்ன்னு சொன்னா நீங்க பீல் பண்ணுவீங்க. அதனால உங்க கிப்ட்டை கண்டிப்பா எனக்கு கொடுக்கலாம்.

78 கருத்துகள்:

King Viswa சொன்னது…

பெரிய மனுஷன் சிரிப்பு போலிசுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks

தினேஷ்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் புது மாப்ளே ....

மைனரா திரிந்தவரு
மாட்டேன்னு சொன்னவரு
மாட்டிக்கிட்டாரு தன்னாலே ....!
புது வாழ்க்கையை துவங்கிவிட்டார்
அன்பாலே ....!

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் ரமேசு!"நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!இன்றுபோல் என்றென்றும் சீருடனும்,சிறப்புடனும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்!இனி எங்கே பதிவிட நேரம் கிடைக்கப் போகிறது?எனதருமைத் தங்கைக்குப் பணிவிடை செய்யவே நேரம் போதாமலிருக்கும்,என்ன நாஞ்சொல்லுறது???ஹ!ஹ!ஹா!!!!!!!

வி.பாலகுமார் சொன்னது…

இனிய வாழ்த்துகள் :)

Yoga.S.FR சொன்னது…

பின் குறிப்பு அதுவும் மிக முக்கிய குறிப்பு: கல்யாணத்துக்கு கூப்பிடாட்டாலும் நீங்க கிப்ட் கண்டிப்பா தருவேன்னு சொல்றது எனக்கு தெரியுது. நான் வேணாம்ன்னு சொன்னா நீங்க பீல் பண்ணுவீங்க. அதனால உங்க கிப்ட்டை கண்டிப்பா எனக்கு கொடுக்கலாம். ///அப்பிடீல்லாம் இல்லைங்க!கிப்டு தரணும் தான்,ஆனா கடையெல்லாம் இன்னிக்கு மூடியிருக்காங்க,கரண்ட் இல்லியாம்,ஹி!ஹி!ஹி!!!!!!

சேலம் தேவா சொன்னது…

இனிய திருமண நல்வாழ்த்துகள்..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

:)

மனசாட்சி™ சொன்னது…

வாழ்த்துக்கள்

கோவை நேரம் சொன்னது…

வாழ்த்துகள்...இனி வீட்டுல இருக்கு பாருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரொம்ப நாள் என்னைக் காணோம்னு ரொம்ப சந்தோசமா இருந்திருப்பீங்களே. இன்னும் உங்களை சந்தோசமா வச்சிருக்க விரும்பலை. அதான் திரும்பி வந்துட்டேன். //////

தம்பி உங்க வீட்டுக்கு இந்த ப்ளாக் அட்ரசை அனுப்பனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தினேஷ்குமார் thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR கூறியது...

வணக்கம் ரமேசு!"நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!இன்றுபோல் என்றென்றும் சீருடனும்,சிறப்புடனும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்!இனி எங்கே பதிவிட நேரம் கிடைக்கப் போகிறது?எனதருமைத் தங்கைக்குப் பணிவிடை செய்யவே நேரம் போதாமலிருக்கும்,என்ன நாஞ்சொல்லுறது???ஹ!ஹ!ஹா!!!!!!!//

ஹிஹி உண்மைய வெளில சொல்ல கூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////"ஐயாம் பேக்"/////

அடுத்த போஸ்ட்டு ஐயாம் சூட்கேசா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வி.பாலகுமார்
சேலம் தேவா
கோவை நேரம்

Thanks

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன்./////

இப்பவாவது ஒத்துக்க...... உனக்கும் ஏழு எட்டு கழுத வயசாகிடுச்சின்னு.......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR கூறியது...

பின் குறிப்பு அதுவும் மிக முக்கிய குறிப்பு: கல்யாணத்துக்கு கூப்பிடாட்டாலும் நீங்க கிப்ட் கண்டிப்பா தருவேன்னு சொல்றது எனக்கு தெரியுது. நான் வேணாம்ன்னு சொன்னா நீங்க பீல் பண்ணுவீங்க. அதனால உங்க கிப்ட்டை கண்டிப்பா எனக்கு கொடுக்கலாம். ///அப்பிடீல்லாம் இல்லைங்க!கிப்டு தரணும் தான்,ஆனா கடையெல்லாம் இன்னிக்கு மூடியிருக்காங்க,கரண்ட் இல்லியாம்,ஹி!ஹி!ஹி!!!!!!//

ஒன்னும் அவசரமில்லை. நாளை மறுநாள் கூட வாங்கலாம். இல்லைன்னா உங்க கிரடிட் கார்ட் நம்பர் பின் நம்பர், செக்யூரிட்டி கோட் கொடுத்தா போதும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// கூப்பிட முடியாத சூழ்நிலையால் யாரையும் அழைக்க முடியவில்லை.//////

என்ன கொடும சார் இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரொம்ப நாள் என்னைக் காணோம்னு ரொம்ப சந்தோசமா இருந்திருப்பீங்களே. இன்னும் உங்களை சந்தோசமா வச்சிருக்க விரும்பலை. அதான் திரும்பி வந்துட்டேன். //////

தம்பி உங்க வீட்டுக்கு இந்த ப்ளாக் அட்ரசை அனுப்பனுமா?//

நான்சென்ஸ். எதுனாலும் நேருக்கு நேரா மோதிப்பாரு. அதென்ன வீட்ல சொல்ற பழக்கம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////"ஐயாம் பேக்"/////

அடுத்த போஸ்ட்டு ஐயாம் சூட்கேசா?//

நோ ஐயாம் பெட்டிக்கேஸ்

#மப்புடன் மாலுமி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன்./////

இப்பவாவது ஒத்துக்க...... உனக்கும் ஏழு எட்டு கழுத வயசாகிடுச்சின்னு.......!//
அப்போ பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன பாபு எத்தனை கழுதை?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இனி சிரிப்பு போலீஸ் ப்ளாக்கில் அடிக்கடி காவியங்கள் வரும். படித்து இன்புறவும்./////

அப்போ இனி உன்னைய அடிக்கடி
http://chippupolice.blogspot.com/ பார்க்கலாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////இனி சிரிப்பு போலீஸ் ப்ளாக்கில் அடிக்கடி காவியங்கள் வரும். படித்து இன்புறவும்./////

அப்போ இனி உன்னைய அடிக்கடி
http://chippupolice.blogspot.com/ பார்க்கலாம்?//

Will see :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன்./////

இப்பவாவது ஒத்துக்க...... உனக்கும் ஏழு எட்டு கழுத வயசாகிடுச்சின்னு.......!//
அப்போ பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன பாபு எத்தனை கழுதை?////////

பாபு கழுதை வயதை நிறைவு செய்து எருமை வயதை அடைந்து பலவருடங்களாகி விட்டன.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐயாம் பேக்":

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன்./////

இப்பவாவது ஒத்துக்க...... உனக்கும் ஏழு எட்டு கழுத வயசாகிடுச்சின்னு.......!//
அப்போ பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன பாபு எத்தனை கழுதை?////////

பாபு கழுதை வயதை நிறைவு செய்து எருமை வயதை அடைந்து பலவருடங்களாகி விட்டன.///

காட்டெருமையா? நாட்டெருமையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அதனால உங்க கிப்ட்டை கண்டிப்பா எனக்கு கொடுக்கலாம்.///////

ஆமா ஆமா, ஒரு பத்து ரூவா மொய் வெச்சிட்டு, எல்லாரும் சென்னை டாஸ்மாம் மெயின் ப்ரான்ச்ல ரமேஷ் பேரை சொல்லி இஷ்டம் போல வாங்கிட்டு போகலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐயாம் பேக்":

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன்./////

இப்பவாவது ஒத்துக்க...... உனக்கும் ஏழு எட்டு கழுத வயசாகிடுச்சின்னு.......!//
அப்போ பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆன பாபு எத்தனை கழுதை?////////

பாபு கழுதை வயதை நிறைவு செய்து எருமை வயதை அடைந்து பலவருடங்களாகி விட்டன.///

காட்டெருமையா? நாட்டெருமையா?/////////

இது எச்சிக்கேட்டட் எருமை......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்புறம் தம்பி ஃபேஸ்புக்ல 4 தொடுப்பு வெச்சிருந்தியே எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எஸ்கேப் ஆகிட்டான்யா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

im decent

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
im decent/////

அப்போ இன்னும் அதவிடலையா? வெளங்கிரும்.....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// அப்போ இன்னும் அதவிடலையா? வெளங்கிரும்..... //

யோவ் டபுள் மீனிங்க்ல பேசாதே ............

மாணவன் சொன்னது…

அருகினில் இருந்து வாழ்த்திட...
ஆசைகள் கோடி இருந்தும்!
நேரில் வந்து கைகுலுக்கிட...
நெஞ்சில் ஆவல் இருந்தும்!
கடல் தாண்டி இருப்பதனால்
மணவிழாவை காண முடியாமல்
மடல் மூலம் வாழ்த்துகிறேன்!

இருவரி குறலாய்
இனிமையாய் வாழ்ந்து
இரு கண்களாய் - இரு
மழலைகள் பெற்று
அமைதித் தென்றல் வீச
அன்புத் தேரினில் - எந்நாளும்
பவனி வர...

ஆத்மப்பூர்வமான நல்வாழ்த்துகள்....!

by
Terror Kummi Groups
:-)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சைவம்: பாதாம், பிஸ்தா, முறுங்கைக் காய், முறுங்கைப்பிஞ்சு, நெய், வெங்காயம், பூண்டு.

அசைவம்: சிப்பி, நண்டு, ஆட்டிறைச்சி,
இதை எல்லாம் உன்ன சாப்பிட சொல்லலை ..எங்களுக்கு ட்ரீட் தா .....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) சொன்னது…

ம்ம்ம்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) சொன்னது…

என்னைய மாதிரி அதிகாரிகளுக்கு ஏதாச்சும் பெசல் ட்ரீட் உண்டா தம்பி?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) சொன்னது…

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
சைவம்: பாதாம், பிஸ்தா, முறுங்கைக் காய், முறுங்கைப்பிஞ்சு, நெய், வெங்காயம், பூண்டு.

அசைவம்: சிப்பி, நண்டு, ஆட்டிறைச்சி,
இதை எல்லாம் உன்ன சாப்பிட சொல்லலை ..எங்களுக்கு ட்ரீட் தா .....
//////////

ஒரு அதிகாரி வந்திருக்கும் போது, எனக்கு தராம இதையெல்லாம் நீங்க கேட்கிறீங்களே, வெட்கமா இல்ல? இடியட்ஸ்.....

Madhavan Srinivasagopalan சொன்னது…

சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்...
இப்பவாவது சொல்லிய சிரிப்பு போலீசின் கொள்கை வாள்க..

சசிகுமார் சொன்னது…

Congrats.....

ராஜி சொன்னது…

பெரிய மனுசன் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

எல்லாரையும் கல்யாணத்துக்கு கூப்பிட முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
>>>
கூப்பிட்டா சாப்பாடு போடனுமே

ராஜி சொன்னது…

ஓட்டலுக்கு போனா உங்க வீட்டம்மாக்கு நீங்க சாப்பாடு வாங்கி குடுப்பீங்களா இல்ல பழக்க தோசத்துல அவங்ககிட்டயும் ஓசி சாப்பாடா?

ராஜி சொன்னது…

பாவம் விஜயலட்சுமி

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) சொன்னது…

/////ராஜி கூறியது...
ஓட்டலுக்கு போனா உங்க வீட்டம்மாக்கு நீங்க சாப்பாடு வாங்கி குடுப்பீங்களா இல்ல பழக்க தோசத்துல அவங்ககிட்டயும் ஓசி சாப்பாடா?
///////

அவரு காசு கொடுத்தா அவருக்கு சாப்பிட்ட பீலிங்கே இருக்காதே, அதுனால வீட்ல இருந்து கெளம்பும்போதே பர்சை எடுத்து அவங்ககிட்ட கொடுத்துடுவாராம்.

விச்சு சொன்னது…

கல்யாணத்துக்கு அப்புறமும் சிரிப்பு போலீஸ் தொடருமா? ஆனாலும் ரொம்பதான் தில்லு...

பாரத்... பாரதி... சொன்னது…

இனிய திருமண நல்வாழ்த்துகள்.. மணவாழ்க்கை சிறப்புடன் அமைய வாழ்த்துகள்,..

பாரத்... பாரதி... சொன்னது…

//ஓட்டலுக்கு போனா உங்க வீட்டம்மாக்கு நீங்க சாப்பாடு வாங்கி குடுப்பீங்களா இல்ல பழக்க தோசத்துல அவங்ககிட்டயும் ஓசி சாப்பாடா?//

ரொம்ப காலமா உங்கள வாட்ச் பண்ணியிருக்காங்க போல..

கடல்புறா சொன்னது…

/// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்புறம் தம்பி ஃபேஸ்புக்ல 4 தொடுப்பு வெச்சிருந்தியே எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டியா?
////

பத்தவசிடியே பரட்ட...

Philosophy Prabhakaran சொன்னது…

வாழ்த்துக்கள்...

Lakshmi சொன்னது…

பெரிய மனுஷன் சிரிப்பு போலிசுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்.

செங்கோவி சொன்னது…

வாழ்த்துகள் போலீஸ்கார்..முருகன் அருளால் மணவாழ்க்கை இனிதே சிறக்கட்டும்.

செங்கோவி சொன்னது…

//கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன். //

ஒலகத்துலேயே கல்யாணத்தன்னிக்கு பெரிய மனுசன் ஆனது நீர்தாம்யா!

செங்கோவி சொன்னது…

சார்,

உங்க ப்ளாக்ல ரைட் க்ளிக்கை டிஸேபிள் பண்ணுங்க..இல்லேன்னா யாராவது உங்க பதிவுகளை சுட்டுடப்போறாங்க...நன்றி.

செங்கோவி சொன்னது…

//Yoga.S.FR கூறியது...
வணக்கம் ரமேசு!"நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!இன்றுபோல் என்றென்றும் சீருடனும்,சிறப்புடனும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்!இனி எங்கே பதிவிட நேரம் கிடைக்கப் போகிறது?எனதருமைத் தங்கைக்குப் பணிவிடை செய்யவே நேரம் போதாமலிருக்கும்,என்ன நாஞ்சொல்லுறது???ஹ!ஹ!ஹா!!!!!!!//

பெரியவங்க சொன்னா.........!

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் செங்கோவி!!!!நல்லாயிருக் கீங்க்களா????இன்னிக்காச்சும் பாக்கக் கெடைச்சுதே,அந்த நீங்க கும்பிடுற முருகனுக்கும்,நான் கும்பிடுற புள்ளையாருக்கும்,கல்யாணம் பண்ணிக்கிட்ட ரமேசுக்கும் நன்றி!(ரமேசு கலியாணம் பண்ணிக்கிட்டதால தானே பாக்கக் கெடைச்சுது,)ஹி!ஹி!ஹி!!!!////செங்கோவி சொன்னது…

//Yoga.S.FR கூறியது...
வணக்கம் ரமேசு!"நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!இன்றுபோல் என்றென்றும் சீருடனும்,சிறப்புடனும் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்!இனி எங்கே பதிவிட நேரம் கிடைக்கப் போகிறது?எனதருமைத் தங்கைக்குப் பணிவிடை செய்யவே நேரம் போதாமலிருக்கும்,என்ன நாஞ்சொல்லுறது???ஹ!ஹ!ஹா!!!!!!!//

பெரியவங்க சொன்னா.........!///பெருமாள் சொன்ன மாதிரின்னு சொல்லவரீங்க!அனுபவம் பேசணுமில்ல???ஹ!ஹ!ஹா!!!!!!!அப்புறம் ரொம்பபேரு தேடினாங்க,குறிப்பா டாக்டர் புட்டிப்பால்!

Yoga.S.FR சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

Yoga.S.FR கூறியது...

பின் குறிப்பு அதுவும் மிக முக்கிய குறிப்பு: கல்யாணத்துக்கு கூப்பிடாட்டாலும் நீங்க கிப்ட் கண்டிப்பா தருவேன்னு சொல்றது எனக்கு தெரியுது. நான் வேணாம்ன்னு சொன்னா நீங்க பீல் பண்ணுவீங்க. அதனால உங்க கிப்ட்டை கண்டிப்பா எனக்கு கொடுக்கலாம். ///அப்பிடீல்லாம் இல்லைங்க!கிப்டு தரணும் தான்,ஆனா கடையெல்லாம் இன்னிக்கு மூடியிருக்காங்க,கரண்ட் இல்லியாம்,ஹி!ஹி!ஹி!!!!!!//

ஒன்னும் அவசரமில்லை. நாளை மறுநாள் கூட வாங்கலாம். இல்லைன்னா உங்க கிரடிட் கார்ட் நம்பர் பின் நம்பர், செக்யூரிட்டி கோட் கொடுத்தா போதும்.////இத்தப் பார்றா!சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லிப்புட்டு எஸ்கேப்பாகுவோம்னு பாத்தா?????

Nisha Prince சொன்னது…

வாழ்த்துக்கள் திருமதி விஜயலட்சுமி

கவிதை காதலன் - மணிகண்டவேல் சொன்னது…

தலைவா.. வாழ்த்துக்கள்.. சீக்கிரம் வாங்க... நீங்க இல்லாம டல்லடிக்குது..

நட்புடன்
கவிதை காதலன்

தனிமரம் சொன்னது…

இல்லறம் நல்லறமாக இனிதே இருவரும் மனம் ஒத்து வாழ வாழ்த்துக்கள் மாப்பிள்ள!

தனிமரம் சொன்னது…

வாழ்த்துகள் போலீஸ்கார்..முருகன் அருளால் மணவாழ்க்கை இனிதே சிறக்கட்டும்.

31 மார்ச், 2012 9:42 am
//முருகன் அருளாலும் ரமேஸ்சின் வரவினாலும் செங்கோவி ஐயாவைப் பார்த்தது சந்தோஸம். நலம் தானே நீங்களும் குடும்பத்தார் அனைவரும். விரைவில் வாருங்கோ காத்துக்கொண்டு இருக்கின்றோம்.

நீச்சல்காரன் சொன்னது…

வாழ்த்துகள் அங்கிள்

! சிவகுமார் ! சொன்னது…

'விக்கிற வெலவாசில மொய் வேற வக்க சொல்றாங்கப்போய்' அப்படின்னு சொல்லிட்டு சிங்கப்பூருக்கு மூணு எழுத்து இனிஷியல் மனுஷன் செதறி ஓடிட்டாரு. சென்னை வந்தாச்சி. பல்க்கா பத்து பதிவர்களை கூட்டிட்டு வர்றேன். பெத்த ஹோட்டல்லோ ட்ரீட் பெட்டண்டி மாப்பிள்ளை காரு!!

செங்கோவி சொன்னது…

//Yoga.S.FR சொன்னது…
அப்புறம் ரொம்பபேரு தேடினாங்க,குறிப்பா டாக்டர் புட்டிப்பால்!//

சீக்கிரமே வருகிறேன் ஐயா.

வைகை சொன்னது…

என்னப்பா? அவுத்துவிட்டாங்களா? :-)

வைகை சொன்னது…

கடந்த மார்ச் 18 ம் தேதில இருந்து நான் பெரிய மனுஷன் ஆகிட்டேன். அதாங்க கல்யாணம் ஆகிடுச்சு/////

உனக்கு கூடவாஆஆஆஆஆஆ? :-))

வைகை சொன்னது…

ரெண்டுவாரம் கழித்து கடந்த திங்கள் கிழமைதான் சென்னை வந்து சேர்ந்தேன். இனி சிரிப்பு போலீஸ் ப்ளாக்கில் அடிக்கடி காவியங்கள் வரும்//

சத்திய சோதனை? :-)

Yoga.S.FR சொன்னது…

வைகை சொன்னது…

ரெண்டுவாரம் கழித்து கடந்த திங்கள் கிழமைதான் சென்னை வந்து சேர்ந்தேன். இனி சிரிப்பு போலீஸ் ப்ளாக்கில் அடிக்கடி காவியங்கள் வரும்//

சத்திய சோதனை? :-)////அது காவியமா?காவியம்னா,"காவியா" பத்தி எழுதுவாராம்,ஹ!ஹ!ஹா!!!!!(பத்த வச்சாச்சு,உஸ்...........அப்பாடா!)

Yoga.S.FR சொன்னது…

செங்கோவி கூறியது...

//Yoga.S.FR சொன்னது…
அப்புறம் ரொம்பபேரு தேடினாங்க,குறிப்பா டாக்டர் புட்டிப்பால்!//

சீக்கிரமே வருகிறேன் ஐயா.////சீக்கிரம் வாங்க,களை கட்டவே மாட்டேங்குது!!!!

மாலதி சொன்னது…

இல்லறம் நல்லறமாக இருவரும் வாழ வாழ்த்துக்கள்

பட்டாபட்டி.... சொன்னது…

"ஐயாம் பேக்"
//

பேக்கா.. இல்லை Pack-ஆ சார்?...

பட்டாபட்டி.... சொன்னது…

கூப்பிட முடியாத சூழ்நிலையால் யாரையும் அழைக்க முடியவில்லை.
//

போன் பில் கட்டாம இருந்தியா மாப்ள சார்?

பட்டாபட்டி.... சொன்னது…

யோவ்.. இன்னாய்யா..கல்யாண போட்டோவில்... பாதி நிர்வாணமா இருக்கே..?

ஒழுக்கமா 18+னு தலைப்புல போடு.. இல்லை..
சைபர் கிரைமுக்கு போவேன்...

:-)

பட்டாபட்டி.... சொன்னது…

இல்லறம் நல்லறமாக இருவரும் வாழ வாழ்த்துக்கள்
//

என்னுடைய வாழ்த்தும்...
( ஹிஹி.. .....)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... சொன்னது…

யோவ்.. இன்னாய்யா..கல்யாண போட்டோவில்... பாதி நிர்வாணமா இருக்கே..?

ஒழுக்கமா 18+னு தலைப்புல போடு.. இல்லை..
சைபர் கிரைமுக்கு போவேன்...

:-)//

எனக்கும் போரடிக்குது மச்சி சீக்கிரம் சைபர் கிரைமுக்குபோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

கூப்பிட முடியாத சூழ்நிலையால் யாரையும் அழைக்க முடியவில்லை.
//

போன் பில் கட்டாம இருந்தியா மாப்ள சார்?//

ஆமாங்க சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

"ஐயாம் பேக்"
//

பேக்கா.. இல்லை Pack-ஆ சார்?...//

பேக்கு :)

Jey சொன்னது…

16 பூரிக் கட்டை அடியும், 32 வெளக்குமாத்து அடியும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்.

இப்படிக்கு,
ஜெய் ,பட்டாபட்டி,பன்னிகுட்டி, மங்குனி,டெர்ரர்,இம்சை அரசன் மற்றும் வலையுலக நண்பர்கள்.

றெனோசன் றேனோ சொன்னது…

உங்க பொண்டாட்டி ரொம்ப குடுத்து வச்சவங்க

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது