சனி, ஜனவரி 14

வேட்டை-விமர்சனம்

திருமூர்த்தி(மாதவன்) அண்ணன். குரு(ஆர்யா) தம்பி. திரு சரியான பயந்தாங்கொள்ளி. யாராவது அடிச்சா கூட இரு என் தம்பியை கூட்டிட்டு வரேன்னு தம்பி குருவை கூட்டிட்டு வர்ற ஆளு. குரு யாருக்கும் பயப்படாத அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத ஆள். அப்பா இறந்த பிறகு அப்பாவோட போலீஸ் வேலை திருவிற்கு கிடைக்கிறது. ஆனால் பயந்தான்கொல்லியான திரு போலீஸ் வேலையில் சேர யோசிக்கும்போது தம்பி குரு கட்டாயப்படுத்தி சேர வைக்கிறார்.

அந்த ஊரில் உள்ள ரவுடிகளுக்கு எல்லோரும் பயப்படும்போது திருவை அந்த ரவுடியை கைது பண்ண சொல்லி அனுப்புகிறார்கள். திருவிற்கு பதில் எல்லா வேலையையும் பின்னால் இருந்து குரு செய்கிறான்(ரவுடிகளை போட்டு தள்ளுவது). (அவரச போலீஸ் 100 படம் அடிக்கடி நியாபகம் வருகிறது). மாதவனுக்கும் சமீரா ரெட்டிக்கும் கல்யாணம் ஆகிறது. சமிராவின் தங்கை அமலா பாலும் ஆர்யாவும் லவ்வுகிறார்கள். அந்த ஊரில் ரெண்டு ரவுடி க்ரூப்பும் சேர்ந்து மாதவனை அடக்க அவன் தம்பி ஆர்யாவை போட்டு தள்ளிவிடலாம் என எண்ணி வந்து ஆர்யாவிடம் அடிவாங்கி செல்கிறார்கள்(கடைசியில் மாதவனுக்கு பதில் எல்லாம் செஞ்சது ஆர்யாதான்னும் கண்டு பிடிக்கிறார்கள்).
                               
இடைவேளை வரை படு ஜாலியாக போன படம், இடைவேளைக்கப்புறம் படு சீரியசான காட்சிகளும் காமடியாகி போய் விட்டன. ஆர்யாவை அடித்ததும் கால் உடைந்த மாதவன் பொங்குவது,ஒரே பாட்டில் மாதவன் வீரமாவது, என் தம்பி வந்தா ஒருத்தனும் உயிரோடு போக மாட்டேன்னு மாதவன் வசனம் பேசுவது, கர்ப்பமா இருக்கும் சமிரா ஆர்யாவிடம் ஒருத்தனும் உயிரோடு போகக்கூடாதுன்னு சவால் விடுவது போன்ற சீரியசான காட்சிகள் பார்த்து சலித்து போன காட்சிகள். தியேட்டரில் இந்த காட்சிகளுக்கெல்லாம் சரியான கமெண்டுகள் வந்தது.(வீரம் வரணும்னா சிம்பு படம் பாருன்னு ஒரு கமென்ட்).

நாசர் அப்பப்ப வந்து காமடி செய்கிறார். இதில் ஆர்யாதான் ஹீரோ. மாதவன் செகண்ட் ஹீரோதான். ரெண்டு டூயட் சாங்கும் ஆர்யாவுக்குதான். திடீர்ன்னு அமலா பாலுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்து அவரும் இந்தியா வருகிறார். அவரை கலாய்க்கும் காட்சிகள் சுவாரஷ்யம். அமெரிக்க மாப்பிள்ளையை விரட்டி விட்டு ஆர்யாவே அமலாவை கல்யாணம் செஞ்சுக்கிறார்.

கடைசியில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ரவுடிகளை போட்டு தள்ளுகிறார்கள்.

அமலா பால் மட்டுமே அழகாக இருக்கிறார். சமீரா ரெட்டி ப்ளீஸ் சீக்கிரம் ரிடயர்ட் ஆகவும்.

முதல் பாதி ஜெட் வேகம். பின் பாதி நொண்டியடிக்கிறது. ஒருதடவை பார்க்கலாம்.

டாப் சீன்ஸ்:

- ஆர்யாவும்,சமீராவும் மோதிக்கொள்ளும் இடங்கள்
-மாதவனை எல்லோரும் பாராட்டும்போது மாதவனின் ரியாக்ஷன்
- நாம ஏன் நாடோடி மன்னன் எம்.ஜி.யார் மாதிரி பிறந்திருக்க கூடாதுன்னு மாதவன் சொல்ற சீன்
- ஆர்யா,அமலா பால் காதல் காட்சிகள்.
-கிளைமேக்சில் நீ அந்த நாலு அரியர் பாஸ் பண்ணனும்ன்னு நாசர் ஆர்யாவிடம் சொல்லும் காட்சி(பாஸ் என்கிற பாஸ்கரன்)
- வில்லனின் கையாளுக்கு டீ வாங்கி கொடுத்து வில்லனுக்கு ஆப்போசிட்டா மாத்துவது  

#இடைவேளையின் போது மசாலா ஃகபே டிரைலர் போட்டாங்க. செம காமடி. கண்டிப்பா படம் பார்க்கணும்.

சந்தானம்: ஏண்டா சூர்யா மாதிரி சிரிக்க சொன்னா எஸ்.ஜே.சூர்யா மாதிரி சிரிக்கிற?

32 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

எங்கிட்டு, யாரு எழுதின விமர்சனம்..
படிச்சாலே நீங்க எதுதினா மாதிரி தெரியலியே..!

NAAI-NAKKS சொன்னது…

Happy
pongal.....

Commit aaitta
blog pakkam
varakkudaathunnu
illai......

Oru velai...
Avanga....
Thadai
pottangala ????????

Ippaveva...????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பார்ரா......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்த மாதிரி இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடுத்து ஆனந்த தொல்லை விமர்சனமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// (அவரச போலீஸ் 100 படம் அடிக்கடி நியாபகம் வருகிறது). ////

வேற என்னென்ன படம் ஞாபகம் வருது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மாதவனுக்கும் சமீரா ரெட்டிக்கும் கல்யாணம் ஆகிறது. சமிராவின் தங்கை அமலா பாலும் ஆர்யாவும் லவ்வுகிறார்கள். ////

இத பாத்தா பாஸ்கரன் படம் ஞாபகம் வரலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////(வீரம் வரணும்னா சிம்பு படம் பாருன்னு ஒரு கமென்ட்/////

யாருக்கு வீரம் வர, வில்லனுக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நாசர் அப்பப்ப வந்து காமடி செய்கிறார். இதில் ஆர்யாதான் ஹீரோ. மாதவன் செகண்ட் ஹீரோதான்./////

பெருசா கண்டுபுடிச்சிட்டாருய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அமெரிக்க மாப்பிள்ளையை விரட்டி விட்டு ஆர்யாவே அமலாவை கல்யாணம் செஞ்சுக்கிறார். ////

பின்னே ஹீரோயினை வில்லனா கல்யாணம் பண்ணிக்குவான்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அமலா பால் மட்டுமே அழகாக இருக்கிறார். சமீரா ரெட்டி ப்ளீஸ் சீக்கிரம் ரிடயர்ட் ஆகவும். //////

அதுக்குள்ளேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////முதல் பாதி ஜெட் வேகம். பின் பாதி நொண்டியடிக்கிறது. ஒருதடவை பார்க்கலாம்.////

ஏன் ரெண்டு தடவ பார்த்தா ஒத்துக்க மாட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆர்யாவும்,சமீராவும் மோதிக்கொள்ளும் இடங்கள்/////

யோவ் ஏன்யா இப்படி ஆபாசமா எழுதி இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////- ஆர்யா,அமலா பால் காதல் காட்சிகள்.////

இப்ப அதுதாண்டி புடிக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// வில்லனின் கையாளுக்கு டீ வாங்கி கொடுத்து வில்லனுக்கு ஆப்போசிட்டா மாத்துவது //////


பன்னாடைங்க சிங்கிள் டீக்கெல்லாம் கட்சி மாறுதுங்க.....

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் ரமேசு!தைத்திரு நாள் (பொங்கல்)வாழ்த்துக்கள்!அருமையாக திரைவிமர்சனமும் செய்கிறீர்கள்!சும்மா,உங்கள் மேலுள்ள பொறாமையால் சிலர் எழுதிக் கொடுத்ததை பிரசுரித்திருக்கிறார் என்று கமென்ட் (கோத்து விட்டாச்சு)அடிக்கிறார்கள்!பொறாமை ஐயா பொறாமை!இப்படி எழுதுபவர்கள்,ஒரு விமர்சனம் எழுதட்டுமே பார்க்கலாம்!

! சிவகுமார் ! சொன்னது…

//வில்லனின் கையாளுக்கு டீ வாங்கி கொடுத்து வில்லனுக்கு ஆப்போசிட்டா மாத்துவது //

நல்ல சீன்தான்!!

! சிவகுமார் ! சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
அடுத்து ஆனந்த தொல்லை விமர்சனமா?//

மேதை, ஆனந்தை தொல்லை பார்க்க சொல்லி எல்லாரையும் உசுப்பேத்துறதுல அப்படி ஒரு ஆனந்தம் உங்களுக்கு...ம்ம்ம்..

! சிவகுமார் ! சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்த மாதிரி இருக்கே?//

அந்த மண்டபத்தோட வெலாசம்..வெலாசம்...

Philosophy Prabhakaran சொன்னது…

அதே அதே... மசாலா கஃபே நானும் பார்க்கணும் நம்ம தலைவரு, குழந்தைப்பதிவர் கேபிள் பணியாற்றும் படமாச்சே...

Philosophy Prabhakaran சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்த மாதிரி இருக்கே? //

அண்ணே... ரொம்ப நாள் சந்தேகம்... நீங்க சொன்ன வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்... மண்டபம்ன்னா...???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்த மாதிரி இருக்கே? //

அண்ணே... ரொம்ப நாள் சந்தேகம்... நீங்க சொன்ன வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்... மண்டபம்ன்னா...???//

ராமேஸ்வரம் பக்கத்துல உள்ள ஒரு ஊரு

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

விமர்சனமாம்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
விமர்சனமாம்... :)/////

நான் மட்டும் என்ன பருத்திக் கொட்டைன்னா சொன்னேன்....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////Yoga.S.FR கூறியது...
வணக்கம் ரமேசு!தைத்திரு நாள் (பொங்கல்)வாழ்த்துக்கள்!அருமையாக திரைவிமர்சனமும் செய்கிறீர்கள்!சும்மா,உங்கள் மேலுள்ள பொறாமையால் சிலர் எழுதிக் கொடுத்ததை பிரசுரித்திருக்கிறார் என்று கமென்ட் (கோத்து விட்டாச்சு)அடிக்கிறார்கள்!பொறாமை ஐயா பொறாமை!இப்படி எழுதுபவர்கள்,ஒரு விமர்சனம் எழுதட்டுமே பார்க்கலாம்!////////

ஐயா இதுக்காகவே நண்பன் படத்த பாத்துட்டு நான் ஒரு விமர்சனம் எழுதுறேன்...... (உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்)

FOOD NELLAI சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

அமலா பால் மட்டுமே அழகாக இருக்கிறார். சமீரா ரெட்டி ப்ளீஸ் சீக்கிரம் ரிடயர்ட் ஆகவும்.....

இது சரிவராது பஞ்சாயத்த கூட்டுங்கையா....

பொன்.செந்தில்குமார் சொன்னது…

வேட்டை அருமை..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Mohamed Faaique சொன்னது…

அப்புறம் கடைசியா “இந்தப் பதிவு, எனக்கு ஓ.சி டிக்கட் வாங்கித் தந்த திரு. .......... அவர்களுக்கு சமர்ப்பணம்”ங்குர வரி மிஸ்ஸாகுதே!!!!

இந்திரா சொன்னது…

//(வீரம் வரணும்னா சிம்பு படம் பாருன்னு ஒரு கமென்ட்//


யாருப்பா அது???

இந்திரா சொன்னது…

நீங்க அமலா“வைத் தவிர படம் பார்க்கவே இல்லேனு சொன்னாங்களே..
அப்புறம் விமர்சனம் எப்படி???

ராஜி சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

எங்கிட்டு, யாரு எழுதின விமர்சனம்..
படிச்சாலே நீங்க எதுதினா மாதிரி தெரியலியே.
>>
அப்பிடியா? ரமேஷ் எழுதுன விமர்சனம்ன்னு நம்பி படிச்சுட்டேனே

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது