Horoscope

வியாழன், ஜூன் 7

சத்தியமா திருடப்பட்ட பதிவு

இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. முன்னாடியெல்லாம் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை நிகழ்ச்சி மாறும் போதுதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ கால்மணி நேரத்துக்கு ஒருவாட்டி வந்துடுது. அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு. அதுலயும் சில விளம்பரங்கள் பண்ற அக்கிரமம் இருக்கே, தாங்க முடிலப்பா. ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், ஒரு கிரீம் போட்டுட்டு போனா வேலை கெடைக்கும்னு ஒரு வெளம்பரம், அவங்க பானத்தை குடிச்சா புள்ளைங்க ஒசரமா வளர்ந்துடும்னு ஒரு வெளம்பரம்..... என்ன கருமாந்திரம் சார் இது?

அப்புறம் இந்த சன் பிக்சர்ஸ் போடுறது எல்லாம் வெளம்பரம்னு சொல்ற லிமிட்டை தாண்டிட்டதால அதை பத்தி எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ....

TMT கம்பிகள்
டீவி பார்க்கிற எல்லாருக்குமே கொஞ்சநாளாவே இந்த கம்பிக் கம்பேனிகள் பண்ற டார்ச்சர் பத்தி தெரிஞ்சிருக்கும். டிஎம்டி கம்பின்னா அது என்ன சோப்பா... இல்ல முட்டாயா... வெளம்பரத்த பாத்த உடனே கடைல போய் வாங்கிட்டு வர? ஒருவேள மக்கள் வெளம்பரத்த பாத்துட்டு அவங்க காண்ட்ராக்டர், எஞ்சினியர்கிட்ட எங்களுக்கு இந்த கம்பிதான் வேணும்னு அடம்பிடிக்கனும்னு எதிர்பார்க்கிறாய்ங்களா?  ங்கொய்யால இந்த வெளம்பரத்துக்கு நமீதா வேற. சின்னப்பசங்க யாராவது எனக்கு அந்த டிஎம்டி கம்பி வாங்கித்தான்னு வீட்ல அடம்புடிக்காம இருந்தா சரி.

பனியன்ஸ்
அப்புறம் இந்த பனியன் போட்ட சனியன்கள் இருக்கானுகளே, அதாங்க பனியன் வெளம்பரங்களைத்தான் சொல்றேன். இவனுங்க பனியனை போட்டுக்கிட்டு ஒருத்தரு குதிப்பாராம், பிகரு அதை பாத்து செட் ஆகுமாம். ங்கொய்யால அந்தாளு ஜிம்மு போய் பாடிய கன்னாபின்னான்னு டெவலப் பண்ணி வெச்சிருப்பான், பிகரு அதை பாத்துட்டு செட்டாகுனா, இவனுக என்னமோ அந்த பனியனை பார்த்துட்டு பிகர் வந்த மாதிரியே பில்டப் கொடுப்பானுக.... அதவிடுங்க நல்ல வேள வெளம்பரத்த பாத்துட்டு இதுவரை எவனும் அந்த கம்பேனி பனியனை மட்டும் போட்டுக்கிட்டு பஸ்ஸ்டாப்ல போய் நிக்கல.....!

சோப்பு
ஒரு சோப்பு அதுவும் மூலிகை சோப்பாம், அது 10 ஸ்கின் ப்ராப்ளத்தை தடுக்குதாம். அதுனால புள்ளைங்க இஷ்டம் போல எங்க வேணா எதுல வேணா வெள்ளாடலாமாம். நானும் டெய்லி பார்க்கிறேன் ஒருநாள் கூட அந்த 10 ப்ராப்ளமும் என்னன்னு சொன்னதே இல்ல. அந்த சோப்பு யூஸ் பண்ணாதவங்களுக்கு அந்த 10 ஸ்கின் ப்ராப்ளம் வருமான்னு தெரியல. யாருக்காவது வந்துச்சுன்னா சொல்லுங்க சார், அப்பவாவது அது என்னென்னன்னு தெரிஞ்சுக்கிறேன்.

டூத்பேஸ்ட்
அந்த டூத்பேஸ்ட்ல பல்லுவெளக்கிட்டு போய் ”ப்பூ” னு ஊதுனா பிகர் செட்டாகிடுமாம். ஒருவேள அதுல வயாகரா மாதிரி சமாச்சாரம் எதுவும் கலக்குறானான்னு தெரியல. பின்ன எப்படி சார், பல்லுவெளக்கிட்டு போய் ஊதுனா பிகர் செட்டாகும்னா என்னத்த சொல்றது? நம்ம பசங்க பல பேரு பல்லே வெளக்காம ஏகப்பட்ட பிகரு வெச்சு மெயிண்டெயின் பண்றானுங்களே அது எப்பூடி?

சோப்பு, சேம்பு, க்ரீம், டூத்பேஸ்ட், பனியன், ஜட்டி, சாக்லேட்டு, மிட்டாய், ஷேவிங் ரேசர்.... இது எல்லாத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இதுல எதை நீங்க யூஸ் பண்ணாலும் உங்களுக்கு உடனே பிகர் செட்டாகிடும். அதுனால கல்யாணமானவங்க எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இந்த பொருள்களை யூஸ் பண்ணுங்க சார்!

பல்பொடி
இப்பல்லாம் பல்பொடி வெளம்பரங்கள் அதிகம் வர்ரதில்ல. பல்பொடி வெளம்பரம்னாலே பெரிய பயில்வான் தான் வருவாரு. பயில்வான்களுக்கும் பல்பொடிக்கும் அப்படி என்னய்யா சம்பந்தம்? நானும் எப்படியெல்லாமோ ரோசன பண்ணி பார்த்தும் ஒரு எழவும் புரியல. யாராவது வெளங்குனவங்க சொல்லுங்க சார்.

நகைக்கடைகள்
என்ன மாயம்னே தெரியல 2-3 வருசத்துல தமிழ்நாட்டுல மூலை முடுக்குலாம் பெரிய பெரிய நகைக்கடைகள் வந்துடுச்சு. அதுவும் எல்லாம் ஒரே மாதிரி பேர் வெச்சுக்கிட்டு (பங்காளிங்க போல....) தமிழ்நாட்டை குறிவெச்சு களத்துல இறங்கி இருக்காங்க போல. இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்நாட்ல டீக்கடைகளைவிட நகைக்கடைகள்தான் அதிகமா இருக்க போவுது. என்னமோ போங்க சார், தங்கம் விலைதான் கூடுதுதே தவிர வாங்குறது கொஞ்சங்கூட குறைஞ்ச மாதிரி தெரியல.

ஊர்ல யாரைக்கேட்டாலும் விலைவாசி கூடுது விலைவாசி கூடுதுன்னு பொலம்புறாங்க, கடைத்தெரு பக்கமா போய் பாத்தா அப்படி எதுவும் தெரியல. சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரானிக் ஷோரூம்கள், ஜவுளிக்கடைகள் எங்கேயும் உள்ள நுழையவே முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கு. இது என்ன பொருளாதார சூழல்னு ஒரு எழவும் புரியல. ஒருவேள எல்லாரும் ரேசன் அரிசில கஞ்சி காய்ச்சி குடிச்சு வருமானத்த மிச்சம் புடிச்சி எஞ்சாய் பண்றாய்ங்களா..... என்னப்பா நடக்குது?

13 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

குடும்பஸ்தன் ஆகிட்டாராமாம்.......?????!!!!

மத்தவங்க எல்லாம் வெட்டியா இருக்காங்களாம்.....??????!!!!

MARI The Great சொன்னது…

குமுறல் ஜாஸ்த்தியா இருக்கே, இருந்தாலும் நியாயமாத்தான் இருக்கு ..!

Yoga.S. சொன்னது…

வணக்கம் ரமேசு!உங்களோட ஆதங்கம் புரியிறது!என்ன பண்ணச் சொல்லுறேள்?வியாபாரத்துக்கு அழகு?!விளம்பரம் செய்தல்னு யாரோ கெரகம் புடிச்சவாள் சொல்லிப்புட்டளாம் ,கண்டுக்காதேள்!குடும்பஸ்தன் ஆயிட்டேளோ இல்லியோ,விட்டுத் தள்ளுங்கோ!

Unknown சொன்னது…

இப்பல்லாம் சன்பிக்சர்ஸ் விளம்பரம் வரதில்லையே

இந்த கல்யாண் ஜீவல்லர்ஸ் புரட்சி போராட்டத்தை எப்படியாவது நிறுத்தியாகனும், தாங்க முடியல

இந்திரா சொன்னது…

//நம்ம பசங்க பல பேரு பல்லே வெளக்காம ஏகப்பட்ட பிகரு வெச்சு மெயிண்டெயின் பண்றானுங்களே அது எப்பூடி?//

அதானே.. எப்படி ரமேசு???

பெயரில்லா சொன்னது…

:-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

all attention, this post is thirudifying from Mr.Pannikkutti Ramsamy

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
all attention, this post is thirudifying from Mr.Pannikkutti Ramsamy//////

இருந்த கொஞ்சநஞ்ச மானமும் போச்சு.......

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்கள் வலைபதிவை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் பார்த்து கருத்திடவும்
http://blogintamil.blogspot.in/2012/06/5.html

arul சொன்னது…

nice post

Madhavan Srinivasagopalan சொன்னது…

a,fnvkl283971asdfadfm,n897321=90sddf,. a!@!@$@#^$afasdg

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஒருவேள எல்லாரும் ரேசன் அரிசில கஞ்சி காய்ச்சி குடிச்சு வருமானத்த மிச்சம் புடிச்சி எஞ்சாய் பண்றாய்ங்களா..... என்னப்பா நடக்குது?
//

ஒண்ணும் நடக்கல.. கல்யாணம் முடிஞ்சதும் உமக்கு வெளி உலகம் மங்கலாத்தெரியுது மச்சி.. அம்புட்டுதேன்..

dhasarathy சொன்னது…

Munbellaam serialukku naduve vilambaram varum Aanaal ippoadhellaam vilambaraththukku naduvaedhaan serial varudhu

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது