Horoscope

வெள்ளி, ஆகஸ்ட் 31

முகமூடி-சூடான விமர்சனம்


முகமூடி டிஸ்கஷன் ஆரமிப்பதர்க்கு முன்னால் ஒரு நாள் இரவு ஒரு மணி மிஸ்கின் அவரது ஆபீஸ்ஸில் உர்காந்திருக்கிறார். அப்போது அவரது உதவியாளரிடம்.

மிஸ்கின்: டேய் யாரடா அங்க? இருக்கீங்களா?

அசிஸ்டன்ட்: சொல்லுங்க சார்.

மிஸ்கின்: கரண்ட் போயி அரைமணி நேரம் ஆச்சு. இன்னும் ஏண்டா லைட்ட போடல?

அசிஸ்டன்ட்: சார் கரண்ட் வந்து ஒருமணி நேரம் ஆச்சு. முதல்ல அந்த கருப்பு கண்ணாடிய கழட்டுங்க.

மிஸ்கின்: ( அசிங்கப்பட்டாலும் கண்ணாடியை கழட்டாமல் ) சரி நாம இப்ப அடுத்த பட டிஸ்கஷன் பண்ண போறோம்.

அசிஸ்டன்ட்: (அட பாவமே யார் அந்த அப்பாவி தயாரிப்பாளர்ன்னு தெரியலையே) சரி சார். 

மிஸ்கின்: இந்த தடவை நான் ஒரு சூப்பர்மேன் கதை சொல்ல போறேன்.

அசிஸ்டன்ட்: நம்ம ஊர்ல நம்ம ஆளுங்க இங்கிலீஷ் படத்தை பேன்னு பாப்பாங்க. அதே கதைய தமிழ்ல சொன்னா பயங்கரமா கலாய்ப்பாங்க.

மிஸ்கின்: அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். படத்தோட டைட்டிலை இங்கிலீஷ்லதான் போட போறேன். அப்புறம் எப்படி தமிழ்படம்ன்னு நினைச்சு கிண்டல் பண்ணுவாங்க..

அசிஸ்டன்ட்: நம்ம தமிழ் பதிவர்கள் போஸ்டர் முதக்கொண்டு எங்கிருந்து காப்பி அடிச்சேன்னு சொல்லி கிழி கிழின்னு கிழிப்பா ங்க. இந்த படம் எதோட காப்பின்னு இப்பவே தேட ஆரமிச்சிருவாங்க.

மிஸ்கின்: இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலை. என்னோட படங்கள் ஓடாததுக்கு காரணம் பதிவர்கள்தான். அதுக்குத்தான் பேட்மேன்,spider man மாதிரி நீயும் சூப்பர் ஹீரோன்னு ஒரு டயலாக் வைக்கிறேன். கேட்டா அதோட இன்ஸ்பிரேஷன்ன்னு சொல்லிடலாம் விடு.

அசிசிடன்ட்: படுத்துறாரே. சரி சார் கதை என்ன?

மிஸ்கின்: ஒருவில்லன். வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறார். அது தெரியாம இருக்க வீட்ல உள்ளவங்களை கொல்றார். அவரை ஹீரோ கண்டு பிடிக்கிறார்.

அசிஸ்டன்ட்: கிட்டத்தட்ட யுத்தம்செய் கதை மாதிரியே இருக்கே.

மிஸ்கின்: இல்லியே அதுல ஹீரோ போலீஸ். இதுல ஹீரோ சூப்பர் ஹீரோ.

அசிஸ்டன்ட்: கதை ஒன்னுதான சார்.

மிஸ்கின்: கதை எப்படி ஒண்ணாகும். அதுல ஹீரோ மூஞ்சிய காட்டுவார். இதுல ஹீரோ முகமூடி போட்டிருப்பார்.

அசிஸ்டன்ட்: ஆனாலும் அந்த படத்துல வர்ற மாதிரி உங்க கிளிஷே ஷாட் தான வைக்கிறீங்க. எல்லோரும் யுத்தம் செய் மாதிரியே இருக்குன்னுதான சொல்லுவாங்க.

மிஸ்கின்: அதெப்படி. அதுல ஹீரோயின் கிடையாது. இதுல ஹீரோயின் உண்டு.

அசிஸ்டன்ட்: அட கொடுமையே. அது சரி சார் ஹீரோவுக்கு குங்க்பூ கத்துக்கொடுத்த மாஸ்டர் வில்லன்கிட்ட அடிபட்டு சாகுறார். ஆனா ஹீரோ மட்டும் வில்லன்கிட்ட ஜெயிக்கிறார்?

மிஸ்கின்: இதெல்லாம் தமிழ் சினிமா தலைவிதி. இதெல்லாம் நீ கேக்க கூடாது.

அசிஸ்டன்ட்: என்ன கருமமோ. சரி, வில்லன் யாரு சார்

மிஸ்கின்: நரேன். இவர மாதிரி ஸ்டைலிஷான வில்லனை பார்த்திருக்கவே முடியாது.

அசிஸ்டன்ட்: பெண்மை கலந்த ஆண் மாதிரி நடிச்சா ஸ்டைலிஷ் வில்லனா. வரலாறு படத்துல அஜித் பண்ணினதுதான. இதுல வில்லன் அவ்ளோதான். நடிப்பு எல்லாம் ஒண்ணுதான். அதென்ன சார் பைட் பண்ணும்போது இதுக்கு முன்னாடி மற்றவர்களை எப்படி கொன்னேன்னு வில்லன் சொல்லி காட்டி நம்மளை கொலையா கொல்றார்.

மிஸ்கின்: அது வித்தியாசமான ஸ்டைல்.

அசிஸ்டன்ட்: அப்போ இது யுத்தம் செய் மாதிரி இருக்குன்னு யாரும் சொல்ல மாட்டாங்களா?

மிஸ்கின்: அதுக்குத்தான் ஒரு பெரிய வித்தியாசம் இந்த படத்துல வச்சிருக்கேன்.

அசிசிடன்ட்: அதென்ன சார்?

மிஸ்கின்: இந்த படத்துல மஞ்ச சேலை கட்டிக்கிட்டு ஆடுற குத்தாட்ட பாட்டு இல்லியே இல்லியே. அப்புறம் என்ன அதே படமாகும்?

அசிஸ்டன்ட் : மயங்கி சரிகிறார்.


முகமூடி=யுத்தம் செய்= அஞ்சாதே/2

51 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஹீ ஹீ.. ஒருவேள இந்த டிஸ்கஷன் நிஜமா இருக்குமோ? தமிழ் சினிமா வரலாற்றுல முதல் சூப்பர்ஹீரோ படம்னு சொல்லிட்டு வர்ற 15வது இதே மாதிரியான படம்..

Yoga.S. சொன்னது…

இது நல்லாருக்கே,போலீசு சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சூடான விமர்சனம்னா.... அடுப்புல உக்காந்து டைப் பண்ணியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மிஸ்கின்: கரண்ட் போயி அரைமணி நேரம் ஆச்சு. இன்னும் ஏண்டா லைட்ட போடல?

அசிஸ்டன்ட்: சார் கரண்ட் வந்து ஒருமணி நேரம் ஆச்சு. முதல்ல அந்த கருப்பு கண்ணாடிய கழட்டுங்க.
////////

அப்போ காலைல விடிஞ்சதே தெரியாம சூரியன் ஏன் இன்னும் உதிக்கலேன்னு அஜிஸ்டண்டுகளை குதறி எடுத்துடுவாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மிஸ்கின்: ஒருவில்லன். வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறார். அது தெரியாம இருக்க வீட்ல உள்ளவங்களை கொல்றார். அவரை ஹீரோ கண்டு பிடிக்கிறார். /////

அப்படின்னா ஹீரோ போலீசாத்தானே இருக்கனும், ஏன் முகமூடியா இருக்கார்? ஒருவேள முகத்துல அசிங்கமா எவனும் பச்சகுத்திட்டானுங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மிஸ்கின்: இந்த படத்துல மஞ்ச சேலை கட்டிக்கிட்டு ஆடுற குத்தாட்ட பாட்டு இல்லியே இல்லியே. அப்புறம் என்ன அதே படமாகும்? /////

அப்போ இந்த படத்துல செகப்பு சேலைங்களா? குட் சேஞ்ச்... கீப் இட் அப்........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இது சூடான விமர்சனமா?

ச்சே அடுப்பை பத்த வச்சிட்டாங்க....எலேய் யாருலேய் அங்கே....?

MARI The Great சொன்னது…

சூடான விமர்சனம்

எப்புட்டு சூடு போலிஸ் சார் ஒரு 110 டிகிரி இருக்குமா? :)

settaikkaran சொன்னது…

அப்போ பார்க்க வேணாங்குறீங்க..? ரைட்டு! பணத்தை மிச்சம் பண்ணதுக்கு டாங்க்ஸ்பா! :-)

பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[ ஆரமிப்பதர்க்கு ]]

ஆரம்பமே அசத்தலா இருக்கு.. மேல படிக்கனுமா?... சரி கமெண்ட் போடச்சொல்லி கெஞ்சி கெதறிக் கேட்டதால( பசங்களா நம்புங்க இவன் கேட்டான்) படிச்சி தொலைக்கிறேன்

பட்டிகாட்டான் Jey சொன்னது…

டேமேஜரு ... மிஷ்கின் கூட வாய்க்கா வரப்பு தகராறு இருக்கா... மனிஷன் படிச்சா நொம்ப நொந்துபோவாரு... பாவம்டா...

பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[ மிஸ்கின்: இல்லியே அதுல ஹீரோ போலீஸ். இதுல ஹீரோ சூப்பர் ஹீரோ. ]]

போலீசுக்கு பதிலா சூப்பர் ஹீரோவாக் காட்ரதால பொறாமைல பொங்காதடா... சிப்பு.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சூடான விமர்சனம்னா.... அடுப்புல உக்காந்து டைப் பண்ணியா? ]]

ரிப்பீட்டு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அன்புள்ள பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு,

தங்களது கமென்ட் கிடைக்கபெற்றேன். "சூடான விமர்சனம்னா.... அடுப்புல உக்காந்து டைப் பண்ணியா?" என்கிற கமெண்டை படிக்கும்போது உங்களது மரியாதை தெரிகிறது. உயர் பதவியில் அதுவும் டெரர் கும்மியின் துணை அட்மின் அவர்கள் பொறுப்பான பதவியில் உள்ள நீங்கள் இப்படி மரியாதை இல்லாமல் கமென்ட் போடும்போது உங்களது அயோக்கியத்தனம் தெரிகிறது.

சூடான என்றவுடன் அடுப்பு மட்டும்தான் சூடாக இருக்கும் என நினைக்கும் உங்களது அறிவுத்திறனை வியக்கிறேன். நீங்கள் டெரர் மாதிரி மதிய நேரம் பாலைவனத்தில் ஒட்டகத்தில் போயி பாருங்கள். மொட்டை மாடியில் மதியம் போய் உர்கார்ந்து பாருங்கள். அடுப்பு மட்டுமே சூடாக இருக்கும் என்கிற பொதுபுத்தியை முதலில் ஒழியுங்கள். நன்றி வணக்கம்

#சோடா ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசு மாமா கூறியது...

ஹீ ஹீ.. ஒருவேள இந்த டிஸ்கஷன் நிஜமா இருக்குமோ? தமிழ் சினிமா வரலாற்றுல முதல் சூப்பர்ஹீரோ படம்னு சொல்லிட்டு வர்ற 15வது இதே மாதிரியான படம்.. //

யுத்தம் செய் படத்தை எதுக்கு இவரு திருப்பி எடுத்தார்ந்னே தெரியலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S. கூறியது...

இது நல்லாருக்கே,போலீசு சார்!//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////மிஸ்கின்: கரண்ட் போயி அரைமணி நேரம் ஆச்சு. இன்னும் ஏண்டா லைட்ட போடல?

அசிஸ்டன்ட்: சார் கரண்ட் வந்து ஒருமணி நேரம் ஆச்சு. முதல்ல அந்த கருப்பு கண்ணாடிய கழட்டுங்க.
////////

அப்போ காலைல விடிஞ்சதே தெரியாம சூரியன் ஏன் இன்னும் உதிக்கலேன்னு அஜிஸ்டண்டுகளை குதறி எடுத்துடுவாரே?//

இதுவும் நடக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////மிஸ்கின்: ஒருவில்லன். வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறார். அது தெரியாம இருக்க வீட்ல உள்ளவங்களை கொல்றார். அவரை ஹீரோ கண்டு பிடிக்கிறார். /////

அப்படின்னா ஹீரோ போலீசாத்தானே இருக்கனும், ஏன் முகமூடியா இருக்கார்? ஒருவேள முகத்துல அசிங்கமா எவனும் பச்சகுத்திட்டானுங்களா?//

நீங்கள் ஒரு அறிவுப் பன்னி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////மிஸ்கின்: இந்த படத்துல மஞ்ச சேலை கட்டிக்கிட்டு ஆடுற குத்தாட்ட பாட்டு இல்லியே இல்லியே. அப்புறம் என்ன அதே படமாகும்? /////

அப்போ இந்த படத்துல செகப்பு சேலைங்களா? குட் சேஞ்ச்... கீப் இட் அப்........//

நாங்கதான் அந்த பாட்டு வைக்கவே இல்லியே :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

இது சூடான விமர்சனமா?

ச்சே அடுப்பை பத்த வச்சிட்டாங்க....எலேய் யாருலேய் அங்கே....?//

அடுப்பு மட்டுமா சூடா இருக்கும். போயி மதிய வெயில்ல மொட்டைமாடில உக்கார்ந்து பாரும் வோய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

சூடான விமர்சனம்

எப்புட்டு சூடு போலிஸ் சார் ஒரு 110 டிகிரி இருக்குமா? :)///

எனக்கு டிகிரி எல்லாம் தெரியாது. நான் நாலாப்பு பெயில்

#இப்படிக்கு டெரர் - அட்மின்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சேட்டைக்காரன் கூறியது...

அப்போ பார்க்க வேணாங்குறீங்க..? ரைட்டு! பணத்தை மிச்சம் பண்ணதுக்கு டாங்க்ஸ்பா! :-)//

வாங்க சார் . ஆமா யுத்தம் செய் பார்த்தா இதை பார்க்க வேணாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...

[[ ஆரமிப்பதர்க்கு ]]

ஆரம்பமே அசத்தலா இருக்கு.. மேல படிக்கனுமா?... சரி கமெண்ட் போடச்சொல்லி கெஞ்சி கெதறிக் கேட்டதால( பசங்களா நம்புங்க இவன் கேட்டான்) படிச்சி தொலைக்கிறேன்//

நன்றி. தயவு செய்து படித்தவுடன் தொலைந்துவிடவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...

டேமேஜரு ... மிஷ்கின் கூட வாய்க்கா வரப்பு தகராறு இருக்கா... மனிஷன் படிச்சா நொம்ப நொந்துபோவாரு... பாவம்டா...//

அவருதான சொன்னது பதிவர்கலாலதான் அவர் படம் ஓடலைன்னு. அதுக்கு நல்ல படமா எடுக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...

[[ மிஸ்கின்: இல்லியே அதுல ஹீரோ போலீஸ். இதுல ஹீரோ சூப்பர் ஹீரோ. ]]

போலீசுக்கு பதிலா சூப்பர் ஹீரோவாக் காட்ரதால பொறாமைல பொங்காதடா... சிப்பு.//

:)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நண்பர் ரமேஷ்க்கு ..
நீங்கள் பண்ணிகுட்டியை தவறாக நினைத்து விட்டீர்கள் ..அவர் அடுப்பு என்று கூறியது ஓவன் என்று நீங்கள் எடுத்திருக்க வேண்டும் .காலதிர்க்கேர்ப்ப உங்கள் பார்வையை மாற்றுங்கள் ரமேஷ் அவர்களே .பன்னிகுட்டி உதவி அட்மின் என்றாலும் பதிவுலகில் அவருக்கு இருக்கும் பேருக்கும் புகழுக்கும் களங்கம் கற்ப்பிக்க நீங்க முயலுகிறீர்கள் .அவரை கும்மி டீமின் டீகேப்றியோ என்று எல்லோரும் அழைப்பதின் வயிற்று எரிச்சல் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது .
மேலும் உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின் .அதை நாகரீகமாக சொல்லி பழகவும் ரமேஷ் ..
இப்படிக்கு
பன்னிகுட்டி (டீகேப்ரியோ ) ரசிகர் மன்றம் .
கும்மி குழுமம் .

#க்வாட்டர் ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அன்புள்ள ஆனந்தவிகடன் புகழ் பாபு அவர்களுக்கு,

பண்ணிகுட்டி என்று மூணு சுழி போட்டு அவர் பெரிய பன்னி என்று சொல்லாமல் சொல்லி நீங்கதான் அவரை அவமானப்படுத்தி உள்ளீர்கள். ஓவன் என்பதற்கு தமிழில் அடுப்பு என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் சொன்ன பிறகுதான் தெரியும். நீங்கள் தயவு செய்து இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரி தயார் செய்யும் கம்பனிக்கு அடிமாடாய் வேலைக்கு செல்ல பரிந்துரைக்கிறேன். அது போல் டீகேப்ர்ரியோக்கு இப்போது வயதாகிவிட்டது போல் பன்னிக்குட்டி அவர்களும் முழுகிழவன் என்று மறுபடியும் நீங்கள் அவமானபடுத்தியத்தை கண்கொண்டு சினம்கொல்கிறேன்(No spelling mistake).

இதற்கு பெயர்தான் தமிழில் வஞ்சி புகழ்ச்சி அணி. தங்களது சூட்கேசை ச்சீ சூட்சமத்தை பன்னிக்குட்டி அறிந்து கொள்வார் என எண்ணுகிறேன்.

#பவாண்டோ ப்ளீஸ்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அன்புள்ள செம்மொழி மாநாட்டு புகழ் ரமேஷ் அவர்களுக்கு ,
தங்களுக்கு தெரியுமோ .ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன்னிகுட்டி தான் (மறைமுகமாக ) பதிவுலகளில் பலரிடம் என்னை அறிமுக படுத்தியது அவர் தான் .நீ அவரிடம் மன்றாடி தான் கும்மி குழுமத்தில் இணைந்தாய் .ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது தவறு என்று நான் சுட்டி காட்டியதை ஏளனம் செய்யும் கல்நெஞ்சு காரனே .டீகேப்ரியோவை பின்னுக்கு தள்ளி உதவி அட்மின் பொறுப்பை தட்டி பறிக்க நினைக்கும் நயவஞ்சக காரனே .
நான் செய்த சிறு எழுத்து பிழையை பெரிதாக்கி பன்னிகுட்டியை பெரிய பண்ணிகுட்டி என்று காறி துப்பும் பண்பு எங்கள் குழுமத்தில் யாரிடமும் இல்லை என்பதை டீகேப்றியோ பேரவையின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் ..
#டேய் முடியலை டா இத்தோட நிறுத்தி கொள்வோம் ..
#பக்கார்டி ப்ளீஸ்

வெளங்காதவன்™ சொன்னது…

முயடியலடா சாமீ!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன்னிகுட்டி தான்//

மன்னிக்கவும் தாங்களும்,பன்னிக்குட்டியும் பிறப்பதற்கு முன்பே ஆனந்த விகடன் புகழ் அடைந்துவிட்டது. ஆனால் ஆனந்த விகடன் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது பன்னிகுட்டி தான் என்று சொல்கிற போதே உங்களது தலைக்கனம் தெரிகிறது. தலைக்கனம் பிடித்து அலைந்த நிறைய பேரின் கதைகள் தொழிலதிபாரான தாங்களுக்கு தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

"நீ அவரிடம் மன்றாடி தான் கும்மி குழுமத்தில் இணைந்தாய்". மறுபடியும் மரியாதையுடன் நீ என்று தாங்கள் அழைத்ததிலிருந்தே தங்களது மரியாதை தரும் பண்பு புரிகிறது. உதவி அட்மினை விட வருமானம் வரும் பைனான்ஸ் பதவி எனக்கு இருக்கும்போது உதவி அட்மின் பதவிக்கு நான் ஆசைபடுவதாக தாங்கள் நினைப்பது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

#டொரினோ ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன்™ சொன்னது…

முயடியலடா சாமீ!//

சேலம் செல்லவும் :)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நன்றி வணக்கம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெறும்பய

கர் தூ

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@வெறும்பய

கர் தூ//

தங்கள் பதிவை படித்து பின்னூட்டத்தை படிக்காமல் [போன என்னை தாங்கள் காரி உமிழ்ந்து அவமதித்துள்ளீர்கள், ஆகையால் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனது தளத்தில் பதிவாக இட்டு தங்களை அவமானப்படுத்தில் முச்சந்தியில் நிர்கவைப்பேன் என்று சூளுரைத்து செல்கிறேன்.

மரியாதை நிமித்தமாக தாங்கள் உடனே மன்னிப்பு கேட்டால் நான் சாந்தமாவேன் என்பதையும் இங்கே தங்களுக்கு நினைவூட்டுகிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நீங்கள் சாந்தமானாலும் சரி பாபுவிடம் தமிழ் கவிதை படித்தாலும் சரி மன்னிப்பு என்பது தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை. வேண்டுமென்றால் எனது பெயரில் ஒரு மெயில் ஐடி தொடங்கி அதிலிருந்து நீங்களே மன்னிப்புகேட்டு நான் கேட்டதாக (பிகர் பேசுச்சு பிகர் பேசுச்சுன்னு ஊருக்குள் பீற்றிக்கொள்வது) போல ஊருக்குள் பீற்றிக்கொள்ளவும்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பன்னாடை பரதேசி ரமேஷ் அவர்களே .. (உனக்கு இது தான் மரியாதை )
நான் ஆனந்த விகடன்ல மூலம் புகழ் அடைந்ததை கூறினேன் .நீ அதை திரித்து கூறி எங்கள் அழுகு டீகேப்றியோ வை (பன்னிகுட்டி )வம்புக்கு இழுக்கும் மனப்பாங்கு தமிழ் கூறும் நல்லுலகம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது .பதிவுலகின் ஜாம்பவான் எங்கள் பன்னிகுட்டி (டீகேப்ரியோ )யை பற்றி பதிவுலக நண்பர்களுக்கு நன்றாகவே ..தெரியும் ..
அதே போல் பைனான்சியர் என்பது நாங்கள் தரும் காசை பத்திர படுத்த .ஒரு பிச்சை காரன் தேவை என்பதால் உன்னிடம் அந்த பொறுப்பை எங்கள் டீகேப்றியோ தந்த சிபாரிசு கடிதம் மூலம் தான் அதை பெற்றாய் என்பதை இத்தருணத்தில் உனக்கு நினைவு கூற கடமைபட்டுள்ளேன் .
நன்றி வணக்கம்
#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட்ட .செருப்புல சாணி முக்கி உன்னை அடிப்பேன்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பன்னாடை பரதேசி ரமேஷ் அவர்களே .. (உனக்கு இது தான் மரியாதை )
நான் ஆனந்த விகடன்ல மூலம் புகழ் அடைந்ததை கூறினேன் .நீ அதை திரித்து கூறி எங்கள் அழுகு டீகேப்றியோ வை (பன்னிகுட்டி )வம்புக்கு இழுக்கும் மனப்பாங்கு தமிழ் கூறும் நல்லுலகம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது .பதிவுலகின் ஜாம்பவான் எங்கள் பன்னிகுட்டி (டீகேப்ரியோ )யை பற்றி பதிவுலக நண்பர்களுக்கு நன்றாகவே ..தெரியும் ..
அதே போல் பைனான்சியர் என்பது நாங்கள் தரும் காசை பத்திர படுத்த .ஒரு பிச்சை காரன் தேவை என்பதால் உன்னிடம் அந்த பொறுப்பை எங்கள் டீகேப்றியோ தந்த சிபாரிசு கடிதம் மூலம் தான் அதை பெற்றாய் என்பதை இத்தருணத்தில் உனக்கு நினைவு கூற கடமைபட்டுள்ளேன் .
நன்றி வணக்கம்
#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட்ட .செருப்புல சாணி முக்கி உன்னை அடிப்பேன்

பட்டிகாட்டான் Jey சொன்னது…

@டேமேஜர்
@ இம்சை

போதும் நிறுத்திக்கிடுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சை அரசன் பாபு அவர்களே

தங்களுக்கு தெரிந்த நாகரீகம் இதுதான் போல். நீங்கள் ஆனந்த விகடன் மூலம் புகழ் அடைந்தீர்களா? எங்க எத்தனை பேர் வந்து உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வளவு தலைக்கனம் தங்களுக்கு ஆகாது. தங்கள் பெயர் வந்தவுடனேதான் என் விகடனையே நிறுத்திவிட்டார்களே.

பிச்சைகாரனிடம் காசை பத்திர படுத்த சொல்வீர்களா? அப்படியெனில் நீங்கள் தினமும் பேங்க் போயி பணம் போடுகிறீர்களே. அனைத்து பேங்கில் உள்ள கேஷியர்களையும் பிச்சைகாரர்கள் என்று கூறும் உங்களது முதலாளித்துவத்தை கண்டிக்கிறேன். இவ்வளவு ஆணவம் தங்களுக்கு கூடாது.

சாணி என்பது புனிதமான ஒன்று. அதனால்தான் நம் தமிழ் பெண்கள் வீட்டு வாசலில் சாணி வைத்து தெளிக்கிறார்கள். அதில் போயி செருப்பை முக்குவேன் என்று சொல்லி தமிழ் பெண்களை வேறு அவமானப்படுத்தியுள்ளீர்கள். தங்களது ஆணவம் மேலேறி போய்கொண்டிருக்கிறது. தாங்கள் விரைவில் திருந்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

#ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@இம்சை அரசன் பாபு

//#இதுக்கு மேல நீ கமெண்ட்ஸ் போட்ட .செருப்புல சாணி முக்கி உன்னை அடிப்பேன் //

இந்த கமெண்டை ஏன் இரண்டு தடவை போட்டீர்கள் என யோசித்து பார்த்தேன். இரண்டு செருப்பு நாம யூஸ் பண்ணுவதால் நீங்கள் இரண்டுதடவை சொல்லி இருக்கிரீர்கள் என்பதை அறிந்ததும் உங்கள் அறிவையும், புத்திசாலித்தனத்தையும் எண்ணி இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் புத்திசாலித்தனமான கமெண்ட்டுகளை அள்ளித்தெளித்து இந்த சாதா பதிவரை பிரபல பதிவராக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :)

எஸ்.கே சொன்னது…

இந்த படம் எப்ப சார் டிவில போடுவாங்க?

மாணவன் சொன்னது…

மேன்மைதாங்கிய 'ஆனந்த விகடன் புகழ்' 'தமிழ்பெருந்தகை' பாபு அவர்களுக்கு,

தாங்கள் இப்படி பொதுவெளியில் 'பன்னாடை' 'பரதேசி' என்று ஆபாசமாக வசைபாடுவது எங்களைப்போன்ற மூத்த, இலக்கியம்தரம் வாய்ந்த பிரபல பிரபல பதிவர்களான... எங்களுக்கு முகம் சுழிப்பது போன்று உள்ளது உங்கள் சொல்லாடல்கள். பதிவுலகில் ஒரு தமிழ்பெருந்தகையாக இருந்துகொண்டு தாங்களே இப்படி கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வது கண்டித்தக்கது. தயவுசெய்து இனியாவது நாகரிகமான முறையில் வசைபாடவும். நன்றி!

இப்படிக்கு
பிரபல பிரபல பதிவர்கள்/இலக்கியவாதிகள்

ராமகிருஷ்ணன் சொன்னது…

பதிவ விட கமெண்ட் தான் சூப்பர்

பட்டிகாட்டான் Jey சொன்னது…

இத்துடன் இந்த கமென்ட் பாக்ஸ் மூடப்படுகிறது. பன்னி, உள்ள வரதாருந்த பொறத்தால வா.....

மங்குனி அமைச்சர் சொன்னது…

எச்சூச்மி........ மீ ஐ கம் இன்.......

பட்டிகாட்டான் Jey சொன்னது…

3 !!! கமெண்ட்ஸ் அலோவ்டு மங்குனி....

பட்டிகாட்டான் Jey சொன்னது…

// ராமகிருஷ்ணன் கூறியது...
பதிவ விட கமெண்ட் தான் சூப்பர் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ராமகிருஷ்ணன்.

Yoga.S. சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது…
எச்சூச்மி........ மீ ஐ கம் இன்.......?///அதான் வந்தாச்சுல்ல,அப்புறமென்ன கம் இன்,அவுட் இன் னுட்டு?

Yoga.S. சொன்னது…

எஸ்.கே சொன்னது…
இந்த படம் எப்ப சார் டிவில போடுவாங்க?///அச்சோ,அச்சோ!நீங்க இன்னும் பாக்கலியா?.............உலகத் தொலைக் காட்சிகளில் முதல்?!முறையாக........................ஹ!ஹ!ஹா!!!!

Yoga.S. சொன்னது…

எதாச்சும் மாமூல் கொடுத்துட்டுப் போங்க!///50!!!

இந்திரா சொன்னது…

//ஹீரோவுக்கு குங்க்பூ கத்துக்கொடுத்த மாஸ்டர் வில்லன்கிட்ட அடிபட்டு சாகுறார். ஆனா ஹீரோ மட்டும் வில்லன்கிட்ட ஜெயிக்கிறார்//.


இது ஒரு நல்ல்ல்ல்ல கேள்வி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது