வெள்ளி, நவம்பர் 9

நந்தினி - பாகம் 2

நந்தினி - பாகம் 1

நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.

சைரன் சத்தத்தோடு போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது. வாழவந்தானை பத்திரிகை காரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். போலீஸ் அதிகாரி வந்து எல்லோரையும் ஒதுங்கு ஒதுங்கு என கத்திகொண்டிருந்தார். வாழவந்தானின் மனைவி டெரர்  பிளாக்கை படித்தது போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்

என்னம்மா என்ன நடந்தது என போலீஸ் கேட்டார். மன்மோகன் சிங் மாதிரி பதிலே பேசாமல் இருந்தார் வாழவந்தானின் மனைவி. அவர் வீட்டு வேலைக்காரி வந்து திடீர்ன்னு ஐயோ ன்னு சத்தம் கேட்டது. நான் கூட அய்யா குருவி படம்தான் பார்க்கிரார்ந்னு நினைச்சேன். அப்புறம் யாரோ ஓடுறது தெரிஞ்சது. போயி பார்த்தேன் அய்யா செத்து கிடக்கார்.

அந்த ஆள் அடையாளம் காட்ட முடியுமா?

இல்லைங்க. மூஞ்சிய பார்க்கல ..

வேற அடையாளம் ஏதாச்சும்?

உடம்பு முழுவதும் சால்வை சுத்தி இருந்தான். ஆள் கொஞ்சம் உயரம். பால்கனி வழியா வெளில ஓடிட்டான்.

யோவ் 501, வேற ஏதாச்சும் தடயம் இருக்கான்னு பாரு..

சரிங்கய்யா...

போலீஸ் வீட்டை சுற்றி நோட்டம் விட்டனர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்க ஆரமித்தார்

அப்போதுதான் போலீஸ் கண்ணில் அந்த தடயம் தட்டுப்பட்டது. அது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மாத்திரைக்கான கவர்.
 

27 கருத்துகள்:

vinu சொன்னது…

me the 1stuuuuuuuuuuuuuuuu

vinu சொன்னது…

துபாய்ல இருந்து பிளைட்டு அல்லாம் புடிச்சு ஏறி வந்து மொதோ கமெண்ட்டு போட்டு இருக்கேன் தீவாளி வேற வருது எதோ கொஞ்சம் பெரிய மனசுப் பண்ணி பாத்துசெய்யுங்க!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ பாகம்-3 2014-ல வருமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இல்லை இனி தினமும் வரும் தீபாவளிக்கு பிறகு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu சொன்னது…

துபாய்ல இருந்து பிளைட்டு அல்லாம் புடிச்சு ஏறி வந்து மொதோ கமெண்ட்டு போட்டு இருக்கேன் தீவாளி வேற வருது எதோ கொஞ்சம் பெரிய மனசுப் பண்ணி பாத்துசெய்யுங்க!!!!
///

contact my uyir nanpan terror

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நந்தினி - பாகம் 2ன்னு போட்டுட்டு அது எந்த பாகம்னு படம் வரைந்து குறிக்கலையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நந்தினி - பாகம் 2ன்னு போட்டுட்டு அது எந்த பாகம்னு படம் வரைந்து குறிக்கலையே?//

karrrrrrrrrrrr.thooooooooooooooooooo

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// அது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மாத்திரைக்கான கவர்.////

அருகிலேயே ஒரு லேப்டாப், அதில் சிரிப்பு போலீஸ் ப்ளாக் ஓப்பன் ஆகி இருந்தது....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உங்களுக்குள்ளேயும் ஒரு எழுத்தாளன் இத்தனை நாளா இருந்திருக்கார்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
உங்களுக்குள்ளேயும் ஒரு எழுத்தாளன் இத்தனை நாளா இருந்திருக்கார்!/////

நாசமா போச்சி....சும்மாவே இவன் திருகுதாளம் புடிச்சி ஆடுவான்...... இப்போ கால்ல சலங்கையவும் கட்டிட்டானுங்க...... இனி ஊருக்குள்ள ஒரு பய நிம்மதியா இருக்க முடியாது......!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எனக்கு என்னவோ சின்ன டௌட் இருக்கு ......பயலுக்கு நந்தினி ன்னு பேர்ல பொண்ணு பார்த்தாச்சு போல இருக்கு ...........அல்லது எதாவது பிகுரே செட் பண்ணி வைச்சி இருக்கீய???????

15 டிசம்பர், 2010 5:46 am

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ babu

அது டெளட் இல்ல மூதேவி டவுட்.

15 டிசம்பர், 2010 5:47 am

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இல்லைங்க. மூஞ்சிய பார்க்கல ..//////

அந்த மூஞ்சிய பாத்ததாலதாங்கய்யா ஏற்கனவே ஒரு எழவு விழுந்து கெடக்கு......

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அனு

// அனு 15 டிசம்பர், 2010 6:09 am சொன்னது…

உண்மைய சொல்லுங்க.. நீங்களா எழுதினீங்க??

நிஜமாவே நல்லா இருக்கு உங்க நடை.. ஆனா, அரம்பிச்ச உடனே முடிச்ச மாதிரி இருக்கு.. அடுத்த பகுதிகளில் கொஞ்சம் பெருசா எழுதுங்க..(அது சரி.. எங்க ப்ரேக் போடனுமோ, அங்க தானே போட முடியும்..)

விறுவிறுத் தொடரை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்//

ஹா.. ஹா... நீ அவனை கலாய்ச்சா அவன் சும்மா விடுவானா. இரண்டு வருஷம் கேப் விட்டு அடுத்த பார்ட்டு போட்டு எப்படி கலாய்ச்சான் பாருங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…


//பட்டாபட்டி.... 15 டிசம்பர், 2010 6:13 am சொன்னது…
நல்லா நிஜமாவே இருக்கு.. உங்க நடை.. ஆனா, ஆரம்பிச்சதும், தொடங்கின மாறியும், கடைசியில் முடியுறமாறியும் இருக்கு..//

யோ பட்டா! பாரு உன் கமெண்டை படிச்சி மண்டை குழம்பி இவ்வளவு நாள் யோச்சி இருக்கான் அடுத்த பகுதி போட.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////vinu கூறியது...
துபாய்ல இருந்து பிளைட்டு அல்லாம் புடிச்சு ஏறி வந்து மொதோ கமெண்ட்டு போட்டு இருக்கேன் தீவாளி வேற வருது எதோ கொஞ்சம் பெரிய மனசுப் பண்ணி பாத்துசெய்யுங்க!!!!/////

சரி சரி, யாவாரத்த கெடுக்காம அப்படி ஓரமா நில்லு, ஓனரு தட்டு நிறைஞ்சதும் உனக்கு ஏதாச்சும் பண்ணுவாரு.......

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மாத்திரைக்கான கவர்.//

உன் வீட்ல அது கூடை கூடையா இருக்குமே!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இல்லை இனி தினமும் வரும் தீபாவளிக்கு பிறகு///////

தீபாவளிக்கு மாமனார் வாஷிங் மெசின் வாங்கித்தர்ரதால, அந்த துணி துவைக்கிற டைம்ல பதிவு போட்டு பெரியாளாகிடலாம்னு ப்ளான் பண்ணிட்டியா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//தீபாவளிக்கு மாமனார் வாஷிங் மெசின் வாங்கித்தர்ரதால, அந்த துணி துவைக்கிற டைம்ல பதிவு போட்டு பெரியாளாகிடலாம்னு ப்ளான் பண்ணிட்டியா? //

இவரு எழுதி இருக்க இந்த நாலு லைனுக்கு அவ்வளவு நேரம் வேனுமா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// அவர் வீட்டு வேலைக்காரி வந்து திடீர்ன்னு ஐயோ ன்னு சத்தம் கேட்டது. நான் கூட அய்யா குருவி படம்தான் பார்க்கிரார்ந்னு நினைச்சேன். //////

இவன் குருவி பாக்கும் போது அய்யோன்னு கத்தி இருக்கான்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//தீபாவளிக்கு மாமனார் வாஷிங் மெசின் வாங்கித்தர்ரதால, அந்த துணி துவைக்கிற டைம்ல பதிவு போட்டு பெரியாளாகிடலாம்னு ப்ளான் பண்ணிட்டியா? //

இவரு எழுதி இருக்க இந்த நாலு லைனுக்கு அவ்வளவு நேரம் வேனுமா என்ன?/////////

நியாயமான கேள்விதான்...... பட் இந்த பன்னாட சீக்கிரம் எழுதி முடிச்சிட்டா வீட்டுல மத்த வேலை பாக்க வேண்டி இருக்குமே?

அனு சொன்னது…

@டெரர்
//இரண்டு வருஷம் கேப் விட்டு அடுத்த பார்ட்டு போட்டு எப்படி கலாய்ச்சான் பாருங்க..//

ரமேஷுக்குள்ள தூங்கிட்டு இருந்த எழுத்தாளர் கும்பகர்ணனுக்கு அண்ணன் போல.. தீபாவளியும் அதுவுமா யாரோ யானை வெடி போட்டு எழுப்பி விட்டுருக்காங்க.. :)

எஸ்.கே சொன்னது…

when will u kill nandhini?

செங்கோவி சொன்னது…

//நந்தினி - பாகம் 2 //

ஊர்ஸ், இப்படி வெட்டியா பக்கம் பக்கமா எழுதாம, நந்தினியின் இரண்டாவது பாகத்தை ஒரே ஒரு ஸ்டில் போட்டு விளக்கவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

:)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

ஏண்டா அறிவு கெட்டவனே!! அவரு எவ்வளவு கஷ்டபட்டு இரண்டு லைன்ல கமெண்ட் போட்டு இருக்காரு. நீ வெட்டியா அதுக்கு ஒரு ஸ்மைலி போட்டு போர. அதுவும் மூனு நாள் அப்புறம். உனக்கு மட்டும் சூடு, சொரணை இருந்தா இந்த கமெண்டுக்கு தமிழ்ல ரிப்ளை பண்ணுடா பாக்கலாம்.. :))

தினபதிவு சொன்னது…

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
. அட்ராசக்க சிபி.செந்தில் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// இல்லை இனி தினமும் வரும் தீபாவளிக்கு பிறகு //

ஏண்ட நாயே! தீபாவளி முடிஞ்சி எத்தனை நாளாச்சி இன்னும் பதிவு வரலையே.. க்க்ர்ர் தூ... :)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது