சனி, ஜனவரி 19

அலெக்ஸ் பாண்டியன்

சகுனி படத்துல கார்த்தி ஒரு டயலாக் சொல்லுவார். முடிச்ச அவுக்குறது ஒரு சுவாரஷ்யம்ன்னா அவுக்க முடியாத முடிச்ச போடுறது அதவிட சுவாரஷ்யம்ன்னு. ஆனா அந்த முடிச்ச நம்ம கழுத்துல ஏன் போட்டாங்கன்னு தெரியலை. படம் பார்க்க வர்ற ஒவ்வொருத்தர் கழுத்துலையும் அந்த முடிச்ச போடுறாங்க. இதுல அவருக்கு என்ன சுவாரஷ்யம்ன்னு தெரியலை.

ஆனா ஒன்னு. நம்ம வாழ்க்கைல நாம நினைச்சதெல்லாம் வரிசையா நடந்தா எப்படி இருக்கும்? சந்தோசமா இருக்கும்ல. உங்களுக்கு அந்த சந்தோசத்தை கொடுக்க அலெக்ஸ் பாண்டியம் டீமே கஷ்டப்பட்டிருக்கு. நீங்க படத்துல அடுத்த சீன என்ன அப்படின்னு நினைச்சாலே போதும் அதே சீனை டைரெக்டர் உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவார். ஐ நான் நினைச்ச சீனே வருதேன்னு நீங்க பெருமை பட்டுக்கலாம். இதுக்காகவே இந்த டீமை நாம  பாராட்டனும்.

நீங்கள் நினைக்கும் பொக்கிஷ காவியங்கள் சில :

1. முதல் காட்சிலையே அனுஷ்காவ ரவுடிங்க விரட்டிட்டு வரும்போது இப்ப பாரு கார்த்தி பின்னாடியே வந்து காப்பாத்துவாருன்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

2. கடத்த வந்த ஹீரோ மனசு மாறுவார்,அனுஷ்கா அவரை லவ் பண்ணுவார்ந்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

3. ஹீரோவை கட்டிப்போட்டு அடிக்கும்போது நீங்கெல்லாம் தைரியமான ஆம்பளையா இருந்தா கட்ட அவுத்து விட்டு அடிங்கடான்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

4. அப்போ வில்லன் ஆளு பத்து கிலோமீட்டர் போயி தள்ளி விழுவாண்டான்னு  நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

4. சந்தானத்தோட மூணு தங்கச்சிகளையும் கார்த்தி உஷார் பண்ணும்போது மூணு பேர் கூடையும் ஒரே பாட்டில் ஆடுவாருன்னு  நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

5. ஹீரோ கடைசி வரை திருந்தாம வில்லன் இடத்துல போயி ஹீரோயினை ஒப்படைச்சிட்டு அப்புறம் திருந்துவாருன்னு  நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

இப்படி நீங்கள் தமிழ் சினிமாவில் ரசித்த பல காட்சிகளை உள்ளே புகுத்தி உங்களுக்குள் முழித்திருந்த கஜினியை தூங்க வைத்த இந்த டீமை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கார்த்திக்களே,சூர்யாக்களே,தனுஷ்களே தயவு செஞ்சு ரிட்டயர்டு ஆகிடுங்க.இல்லைன்னா ஒழுங்கா படம் கொடுங்க. இல்லைன்னா எங்களுக்கு பவர் ஸ்டார்கள்,விஜய்  சேதுபதிகள்  போதும்ன்னு ரசிகர்கள் நினைச்சிடுவாங்க.

அலெக்ஸ் பாண்டியன் - போண்டியன்

40 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்படியெல்லாம் நீ பதிவு போடுவேன்னு யாராவது சரியா சொன்னாங்கன்னா...... அப்படியே தப்பிச்சிக்குங்கடா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டா பாராட்டனும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டா பாராட்டனும்/////

பாராட்டுனா மறுக்கா பதிவு போட்ருவியே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆனா ஒன்னு. நம்ம வாழ்க்கைல நாம நினைச்சதெல்லாம் வரிசையா நடந்தா எப்படி இருக்கும்? சந்தோசமா இருக்கும்ல. உங்களுக்கு அந்த சந்தோசத்தை கொடுக்க அலெக்ஸ் பாண்டியம் டீமே கஷ்டப்பட்டிருக்கு. //////

சரி படம் பாக்குறவன் அனுஷ்காவ கட்டிப்புடிக்கனும்னு நெனச்சா அது கண்ணு முன்னாடி வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////1. முதல் காட்சிலையே அனுஷ்காவ ரவுடிங்க விரட்டிட்டு வரும்போது இப்ப பாரு கார்த்தி பின்னாடியே வந்து காப்பாத்துவாருன்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.///////

டேய் ஹீரோயினை ஹீரோதாண்டா காப்பாத்த முடியும், இவ்வளவு பேசுறீயே, ஹீரோயினை காமெடியன் வந்து ஃபைட் பண்ணி காப்பாத்துனா நீ மொதல்ல ஒத்துக்குவியா...... ?ராஸ்கல் பேசுறான் பாரு பேச்சு....!

வெறும்பய சொன்னது…

வந்திட்டு போனதுக்கு அடையாளமா இந்த கமென்ட் இருக்கட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////2. கடத்த வந்த ஹீரோ மனசு மாறுவார்,அனுஷ்கா அவரை லவ் பண்ணுவார்ந்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.///////

டைரக்டர்தான் அல்ரெடி அனுஷ்காகிட்ட ஹீரோ இவருதான் இவரைத்தான் நீங்க லவ் பண்ணனும்னு சொல்லியிருப்பார். அதுனால அனுஷ்காவுக்கு வேற வழி இல்ல, ஹீரோவத்தான் லவ் பண்ணியாகனும்......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெறும்பய கூறியது...
வந்திட்டு போனதுக்கு அடையாளமா இந்த கமென்ட் இருக்கட்டும்//////

காறி துப்பிட்டு போனா இதவிட நல்ல அடையாளமா இருக்குமே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////3. ஹீரோவை கட்டிப்போட்டு அடிக்கும்போது நீங்கெல்லாம் தைரியமான ஆம்பளையா இருந்தா கட்ட அவுத்து விட்டு அடிங்கடான்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.//////

நாங்க என்ன கேப்டன் மாதிரி இரும்பு சங்கிலிய உடைச்சிக்கிட்டு வர்ர மாதிரியா சீன் வெச்சிருக்கோம்.... கொஞ்சம் யதார்த்தமா படம் எடுத்தா உங்களுக்குலாம் புடிக்காதே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////4. சந்தானத்தோட மூணு தங்கச்சிகளையும் கார்த்தி உஷார் பண்ணும்போது மூணு பேர் கூடையும் ஒரே பாட்டில் ஆடுவாருன்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.///////

அததான் பலமாசத்துக்கு முன்னாடியே ட்ரைலர்ல போட்டுட்டானுங்களே, அத ஏண்டா மறுக்கா கண்டுபுடிக்கனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////4. அப்போ வில்லன் ஆளு பத்து கிலோமீட்டர் போயி தள்ளி விழுவாண்டான்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.//////

பத்து வருசமா இப்படித்தானேடா படம் எடுக்குறானுங்க..... இது தெரியாம ஒருத்தன் தம்ழிநாட்டுல இருக்கனும்னா அவன் ஜெயில்லதான் இருந்திருக்கனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கார்த்திக்களே,சூர்யாக்களே,தனுஷ்களே தயவு செஞ்சு ரிட்டயர்டு ஆகிடுங்க.இல்லைன்னா ஒழுங்கா படம் கொடுங்க. இல்லைன்னா எங்களுக்கு பவர் ஸ்டார்கள்,விஜய் சேதுபதிகள் போதும்ன்னு ரசிகர்கள் நினைச்சிடுவாங்க. ///////

அதெல்லாம் ஏற்கனவே நெனச்சாச்சு..... கண்ணா லட்டு தின்ன ஆசையா 500 நாள் வரை ஓடி இவர்கள் மூஞ்சியில் கரியை பூசும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டா பாராட்டனும்/////

பாராட்டுனா மறுக்கா பதிவு போட்ருவியே?//

Im not panni

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////1. முதல் காட்சிலையே அனுஷ்காவ ரவுடிங்க விரட்டிட்டு வரும்போது இப்ப பாரு கார்த்தி பின்னாடியே வந்து காப்பாத்துவாருன்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.///////

டேய் ஹீரோயினை ஹீரோதாண்டா காப்பாத்த முடியும், இவ்வளவு பேசுறீயே, ஹீரோயினை காமெடியன் வந்து ஃபைட் பண்ணி காப்பாத்துனா நீ மொதல்ல ஒத்துக்குவியா...... ?ராஸ்கல் பேசுறான் பாரு பேச்சு....!//

இம்சை அரசன்ல காமடியன்தான் காப்பாத்துவார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது…

வந்திட்டு போனதுக்கு அடையாளமா இந்த கமென்ட் இருக்கட்டும்//

போய்த் தொலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////2. கடத்த வந்த ஹீரோ மனசு மாறுவார்,அனுஷ்கா அவரை லவ் பண்ணுவார்ந்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.///////

டைரக்டர்தான் அல்ரெடி அனுஷ்காகிட்ட ஹீரோ இவருதான் இவரைத்தான் நீங்க லவ் பண்ணனும்னு சொல்லியிருப்பார். அதுனால அனுஷ்காவுக்கு வேற வழி இல்ல, ஹீரோவத்தான் லவ் பண்ணியாகனும்......
//

எம்பூட்டு அறிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெறும்பய கூறியது...
வந்திட்டு போனதுக்கு அடையாளமா இந்த கமென்ட் இருக்கட்டும்//////

காறி துப்பிட்டு போனா இதவிட நல்ல அடையாளமா இருக்குமே?
//

பன்னி கர் தூ போதுமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////3. ஹீரோவை கட்டிப்போட்டு அடிக்கும்போது நீங்கெல்லாம் தைரியமான ஆம்பளையா இருந்தா கட்ட அவுத்து விட்டு அடிங்கடான்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.//////

நாங்க என்ன கேப்டன் மாதிரி இரும்பு சங்கிலிய உடைச்சிக்கிட்டு வர்ர மாதிரியா சீன் வெச்சிருக்கோம்.... கொஞ்சம் யதார்த்தமா படம் எடுத்தா உங்களுக்குலாம் புடிக்காதே?
//

velangkum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////4. சந்தானத்தோட மூணு தங்கச்சிகளையும் கார்த்தி உஷார் பண்ணும்போது மூணு பேர் கூடையும் ஒரே பாட்டில் ஆடுவாருன்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.///////

அததான் பலமாசத்துக்கு முன்னாடியே ட்ரைலர்ல போட்டுட்டானுங்களே, அத ஏண்டா மறுக்கா கண்டுபுடிக்கனும்?
//

im not seeing trailor

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நானும் ஆஜர் வச்சாச்சு ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////4. அப்போ வில்லன் ஆளு பத்து கிலோமீட்டர் போயி தள்ளி விழுவாண்டான்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.//////

பத்து வருசமா இப்படித்தானேடா படம் எடுக்குறானுங்க..... இது தெரியாம ஒருத்தன் தம்ழிநாட்டுல இருக்கனும்னா அவன் ஜெயில்லதான் இருந்திருக்கனும்....
//

im from London

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கார்த்திக்களே,சூர்யாக்களே,தனுஷ்களே தயவு செஞ்சு ரிட்டயர்டு ஆகிடுங்க.இல்லைன்னா ஒழுங்கா படம் கொடுங்க. இல்லைன்னா எங்களுக்கு பவர் ஸ்டார்கள்,விஜய் சேதுபதிகள் போதும்ன்னு ரசிகர்கள் நினைச்சிடுவாங்க. ///////

அதெல்லாம் ஏற்கனவே நெனச்சாச்சு..... கண்ணா லட்டு தின்ன ஆசையா 500 நாள் வரை ஓடி இவர்கள் மூஞ்சியில் கரியை பூசும்.....
//

definitely definitely

மாணவன் சொன்னது…

இந்தியாவின் இன்வெர்ட்டர், இளைய தலைமுறையின் ஜெனரேட்டர் பவர்ஸ்டார் ஆளும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு இன்னும் விமர்சனம் எழுதாததை வன்மையாக கண்டிக்கிறோம்........ :-)

இவண்
அகில உலக பவர்ஸ்டார்
பாசறைகள்!

மொக்கராசா சொன்னது…

இந்த படம் பெரிய மொக்கை ...அத விட மொக்கை உங்கள் பிளாக்.... அது மரண மொக்கை ...இப்படி ரெண்டு பெரும் ஒன்னு சேர்ந்தால் நாங்க எல்லாம் எங்க போவோம் 

மொக்கராசா சொன்னது…

இந்த படம் பெரிய மொக்கை ...அத விட மொக்கை உங்கள் பிளாக்.... அது மரண மொக்கை ...இப்படி ரெண்டு பெரும் ஒன்னு சேர்ந்தால் நாங்க எல்லாம் எங்க போவோம் 

Madhavan Srinivasagopalan சொன்னது…

1, 2, 3, 4, 5,..... எழுதையில '4'கப்புறம் மறுபடியும் '4'னு எழுதினது நம்ம சிரிப்புனு கண்டுபிடிச்சா நீங்க நீங்க Greatதான்

FOOD NELLAI சொன்னது…

விமரிசனம் அமோகமா இருக்கே! படத்துக்கு இல்லை. :)

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ரமேசு!தைப் பொங்கல்&மாட்டுப் பொங்கல்&காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!///வருஷம் பொறந்து மொத மொதலா அறிவுபூர்வமா ஒரு பதிவு போட்டா புடிக்காதே?நீங்க ஜமாயுங்க ரமேசு!ஒங்க விமரிசனம் கோடியில இல்ல இல்ல கோடானு கோடியில ஒண்ணு!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

FOOD NELLAI கூறியது...

விமரிசனம் அமோகமா இருக்கே! படத்துக்கு இல்லை. :)//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S. கூறியது...

வணக்கம்,ரமேசு!தைப் பொங்கல்&மாட்டுப் பொங்கல்&காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!///வருஷம் பொறந்து மொத மொதலா அறிவுபூர்வமா ஒரு பதிவு போட்டா புடிக்காதே?நீங்க ஜமாயுங்க ரமேசு!ஒங்க விமரிசனம் கோடியில இல்ல இல்ல கோடானு கோடியில ஒண்ணு!!!!//

kodi r kedi?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ஆனா ஒன்னு. நம்ம வாழ்க்கைல நாம நினைச்சதெல்லாம் வரிசையா நடந்தா எப்படி இருக்கும்? சந்தோசமா இருக்கும்ல. உங்களுக்கு அந்த சந்தோசத்தை கொடுக்க அலெக்ஸ் பாண்டியம் டீமே கஷ்டப்பட்டிருக்கு. //////

சரி படம் பாக்குறவன் அனுஷ்காவ கட்டிப்புடிக்கனும்னு நெனச்சா அது கண்ணு முன்னாடி வருமா?//

வயசான காலத்துல உனக்கு இது தேவையா?

மாலுமி சொன்னது…

வணக்கம் :)

Yoga.S. சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
Yoga.S. கூறியது...

வணக்கம்,ரமேசு!தைப் பொங்கல்&மாட்டுப் பொங்கல்&காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!///வருஷம் பொறந்து மொத மொதலா அறிவுபூர்வமா ஒரு பதிவு போட்டா புடிக்காதே?நீங்க ஜமாயுங்க ரமேசு!ஒங்க விமரிசனம் கோடியில இல்ல இல்ல கோடானு கோடியில ஒண்ணு!!!!//

kodi r kedi?/////அப்புடியும் 'வச்சுக்கலாம்'!

செங்கோவி சொன்னது…

நல்லவேளை, இங்க ரிலீஸ் ஆகலை.

vinu சொன்னது…

/// மூணு பேர் கூடையும் ஒரே பாட்டில் ///

கூடை, பாட்டில்

appudeenu thappaap padichchuputten he he he he

vijayalakshmi ramesh சொன்னது…

vijay sethupathiya ethuku powerstar kooda compare panreenga??

பாலா சொன்னது…

கடைசி வரிகள் ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் இருக்கும் ஆதங்கம். நான் பாதியில் தூங்கிய படங்களில் அலெக்ஸ் பாண்டியனும் சேர்ந்து விட்டது.

பெயரில்லா சொன்னது…

Asking questiоns are aсtually good thing if
you аrе not understanԁing something fully,
but this pieсe οf writing proνіdes pleаѕаnt understanding yet.
Stop by my site :: http://assolsk.free.fr/forum/profile.php?id=2554

Blogging சொன்னது…

விமர்சன நல்லாயிருக்கு, படம்?

-------------------

www.padugai.com

thanks

பெயரில்லா சொன்னது…

Tеrrific woгk! This is the type of іnfo that are mеant to
be shared arοund the internet. Shame
on the search engines for nοt ρositioning thіs put up higher!
Come οn over and consult with my wеbsite .
Thanκ you =)

Ηere is my wеbpage - help.flycfa.co.za
My web site > Aws.Clouddesignpattern.org

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது