சனி, ஏப்ரல் 17

பாசிடிவ் இயக்குனர் விக்ரமன்-1


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். விக்ரமன் என்றாலே அனைவருக்கும் ஒரு பாட்டில் பணக்காரனாவது, லாலா லாலா லாலா தீம் மியூசிக், ஒரு பாட்டு ரெண்டு தடவை வருவது, காதலிக்காக தியாகம் பண்ணுவது இதுதான் நினைவுக்கு வரும்.

ஆனால் அவர் சினிமாவுக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்த தொடரில் நான் விக்ரமனின் சினிமா போராட்டங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.

சினிமா எக்ஸ்பிரஸ் க்காக அவர் எழுதிய "நான் பேச நினைப்பதெல்லாம்" தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன்.


1990 ஆம் ஆண்டு அவரது முதல் படம் புதுவசந்தம் வெளியானது. அன்றிலிருந்து இன்றுவரை வெளியான அவரது படங்களில் ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ கிடையாது. அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம் "சூர்யவம்சம்". வசூலில் ரெகார்ட் பிரேக் கொடுத்த படம் இது."Super Good Films" முதலில் மலையாள படங்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தது. அவர்களுடைய முதல் படம் "புதுவசந்தம்". அந்த வாய்ப்பு அவருக்கு ஈஸியாக கிடைக்கவில்லை. பல தயாரிப்பாளர்களால்  நிராகரிக்கப்பட்ட கதைதான் அது.

விக்ரமன் பார்த்திபன், மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். புதியபாதை வெளியாவதற்கு முன்பே அவர் நிறைய கதைகளுடன் கோடம்பாக்கம் கனவுகளுடன் பசியோடு அலைந்திருக்கிறார். அவருக்கு கடவுளாக கிடைத்தவர் R.B.சௌத்ரி. இன்றும் விக்ரமன் என்றால் கதை கூட கேட்காமல் சான்ஸ் கொடுத்துவிடுவார்.


R.B. சௌத்ரியிடம் புதுவசந்தம் சான்ஸ் வாங்கியதும் அவரால் உடனே படம் எடுத்து முடிக்க முடியவில்லை. பல தடைகள், போராட்டம், சினிமா ஸ்ட்ரைக். அவருக்கே இந்த படம் வெளியாகுமா என தெரியவில்லை.விக்ரமனின் அனைத்து படங்களும் நிறைய விருது வாங்கி இருக்கிறது. அவருடைய முக்கியமான உதவியாளர்களில் ஒருவர் K.S.ரவிக்குமார். விக்ரமனின் ஆரம்பகால படங்கள் வெளியாவதற்கு கே எஸ் ஆர் மிக முக்கியமானவர்.


விக்ரமன் பட தொகுப்பு:

1. புது வசந்தம் - 187 days(1990)

2. பெரும்புள்ளி - (1991)

3. கோகுலம் - 105 days(1993)

4. நான் பேச நினைப்பதெல்லாம்- 120 days (1993)

5. புதிய மன்னர்கள் - 1994

6. பூவே உனக்காக - 270 days (1996)

7. சூர்ய வம்சம் - 250 days (1997)

8. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - 200 days (1998)

9. வானத்தைப்போல - 175 days (2000)

10. உன்னை நினைத்து - 115 days (2002)

12. வசந்தம் (தெலுங்கு) - 2003

13. பிரியமான தோழி - 2003

14. செப்பவே சிறு காலி(தெலுங்கு) - 2004

15. சென்னை காதல் - 2006

16. மரியாதை - 2009

வானத்தைப் போல இந்த நூற்றாண்டின் முதல் தமிழ் படம் என்ற பெருமைக்குரியது. அவரது முதல் பட போராட்டங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

15 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Welcome for all

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லாருக்கு நண்பா. ஒன்னோட ‘கடி’ ஜோக்ஸயும் கலந்து எழுது . இன்னும் ரொம்ப நல்லாருக்கும். தொடர்ந்து எழுது.

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்..
வாழ்த்துக்கள்..

விக்ரமனின் உதவி
இயக்குனர்களில் முக்கியமானவர்
கலைகுமார்
( " ஏதோ ஒரு பாட்டு " பாடலை
எழுதியவர் )

இவர் எங்க ஊர்க்காரர்..
இவர் வீடு எங்க வீட்ல இருந்து
4 வீடு தள்ளி தான் இருக்கு
என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்துக் கொள்கிறேன்..!

வெங்கட் சொன்னது…

Trial

jana சொன்னது…

தல வணக்கம்...

கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்கய்யா...
எத்தினி பேரு...

முதல்ல வெங்கட் வந்தாரு...
ரெண்டாவதா "AD" வந்தாங்க...
(என்னொட கமெண்டு போடல)
இப்போ நீங்க...

முடியல...

போதும் தல... நீயும் ஆரம்பிக்காதே...

ஏலே மக்கா எனக்கு நேரம் இல்ல வே...
எம்புட்டு ப்ளாக் படிக்கறது...
எப்போ கமெண்டு போடுறது...

ஒன்னு சொல்லுறேன்
ஆனா உருப்படியா சொல்லுறேன்...
இது நல்லாயிருக்கு...
போதும்... இத்தொட நிறுத்திக்குவோம்...

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம்...

வரட்டுமா தல...

romba thimuru சொன்னது…

பிரியமான தோழி எங்கே?

அது தான் தெலுங்கு வசந்தம் இன்னு நினைக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ்
தேங்க்ஸ் ட்ரை பண்றேன்

@வெங்கட்
தேங்க்ஸ், உங்கள் தகவலுக்கு நன்றி, விக்ரமனும் கலைகுமார் பற்றி எழுதி இருக்கிறார். வருகைக்கு மிக்க நன்றி.

@ரொம்ப திமிரு
பிரியமா இருந்ததால தோழிய மறந்துட்டேன். தேங்க்ஸ். கரெக்ட் பண்ணிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ஜனா
எல்லாரும் கட்சி ஆரமிக்கதான் செய்வாங்க. அதுக்காக நாம வருத்தப்பட முடியாது. உங்களுக்கு பிடிச்சா எல்லா கட்சிக்கும் ஓட்டு போட்டு செல்லா ஓட்டு ஆக்கிடனும். எதுனாலும் வெங்கட் & AD முன்னால பஞ்சாயத்து வச்சுக்கலாம்.

எல்லா புகழும் உங்கள் சாரி நம்ம வெங்கட்டுக்கே. அவருடைய உதவி இல்லாட்டி நான் இவ்ளோ அழகா(அத நாங்க சொல்லனும்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது) எழுதி இருக்க முடியாது.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தயவு செய்து நல்ல இயக்குனர்கள் பத்தி எழுதுங்க நண்பா

அரைத்த மாவையே அரைத்தவர் விக்ரமன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@செந்தில்
நன்றி செந்தில். கட்டாயமா எழுதுகிறேன். வருகைக்கு நன்றி.

சரவணகுமரன் சொன்னது…

விக்ரமனுடன் ரவிக்குமார் ஒரு படத்தில் தான் பணிபுரிந்ததாக கேள்விப்பட்டேன். அதுவும் இணை இயக்குனராக. அப்படியா?

சரவணகுமரன் சொன்னது…

விக்ரமன் பத்தி நானும் ஒரு பதிவு போடலாம்’ன்னு இருந்தேன்... நீங்க போட்டுடீங்க... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@சரவணன்
ஆமாம் புதுவசந்தம் படத்தில். ஆனால் விக்ரமனின் நிறைய படம் ரிலீஸ் ஆவதற்கு K.S.ரவிக்குமார் நிறைய உதவி செய்திருக்கிறார்.

வால்பையன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வால்பையன் thanks to come

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது