திங்கள், ஏப்ரல் 19

கம்ப்யூட்டர்-யை assemble செய்ய ஈசியான வழிகள்

இப்போது கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். நிறைய பேருக்கு கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் என்ன மாடல் வாங்க வேண்டும், என்ன விலை, எங்கு வாங்குவது, எப்படி assemble செய்வது என நிறைய குழப்பங்கள்.

உங்களுக்காக என்ன மாடல் வாங்க வேண்டும், என்ன விலை, எங்கு வாங்குவது, எப்படி assemble செய்வது என நான் ஈசியாக சொல்லித் தருகிறேன்.

முதலில் என்ன பர்பஸ் க்காக கம்ப்யூட்டர் வாங்க போகிறீர்கள் என முடிவு செய்து கொள்ளுங்கள். வெறும் பாட்டும், படமும் பாக்க, கேம்ஸ் விளையாட என்றால் லோ கான்பிகுரேசன் போதும். ஏதாவது அப்ளிகேசன் ரன் பண்ணவேண்டும் என்றால் அதற்கான செட்டிங்க்ஸ் என்ன என்று நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கான்பிகுரேசன் முடிவு செய்யுங்கள்.ஓகே. கான்பிகுரேசன் முடிவுசெய்தாயிற்று. அடுத்து உங்கள் பட்ஜெட் என்ன என முடிவு செய்யுங்கள். உங்கள் பட்ஜெட் பொறுத்து ஒரு சில கான்பிகுரேசன் குறைக்கவோ கூட்டவோ முடியும். 500GB Hard disk என்றால் பட்ஜெட்க்கு ஏற்றவாறு 350GB, 200GB என மாற்றிகொள்ளலாம்.


அடுத்து எந்த கடை. ஏனெனில் நிறைய கடைகளில் branded கம்ப்யூட்டர் களின் டுப்ளிகேட் கிடைக்கிறது. எனவே நல்ல கடைகளில் விசாரித்து வாரண்டியுடன் வாங்குங்கள்.சரி கம்ப்யூட்டர் வாங்கியாச்சு. இப்போது assemble செய்ய ஈசியான வழி என்ன? உங்களுக்கு சுத்தமாக assembling பத்தி தெரியாது. கம்ப்யூட்டர் க்காக இருபதாயிரமோ, முப்பதாயிரமோ செலவழித்து விட்டு தப்பாக assemble செய்து பணத்தை இழக்க வேண்டுமா? அதற்க்கான ஈசியான வழி.


உங்களுக்குதான் assembling தெரியாதே. இருபதாயிரமோ, முப்பதாயிரமோ செலவழித்து கம்ப்யூட்டர் வாங்கின நீங்க இன்னொரு ஆயிரம் ரூபாய் எனக்கு கொடுத்தால் நானே உங்கள் கம்ப்யூட்டர்-யை assemble செய்து தருகிறேன். இல்லை இல்லை எனது கம்ப்யூட்டர்-யை நான்தான் assemble செய்வேன் என்று சொன்னால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன் "How to assemble a computer?"

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமா?

10 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இப்படி எல்லாம் சம்பாதிக்க முடியுமா? ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டா இலவசமாத்தான் செஞ்சு குடுக்கணும்

அனு சொன்னது…

ஏங்க இந்த கொலை வெறி...

நீங்களும் கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா???

முடியல...

(நீங்க திரும்பவும் எழுத ஆரம்பிச்சுட்டீங்கன்னு சொல்லவே இல்ல)

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்ல வியாபரம். நடத்து.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்
நான் ரொம்ப நல்லவன். எனவேதான் இந்த விலை. நான் கெட்டவனா இருந்தா assembling Rs.2000, training Rs.5000 னு வாங்கிருப்பேன்.

@அனு
தேங்க்ஸ் டு கம். நான் ஏற்கனவே வெங்கட் ப்ளாக் ல சொல்லிருந்தனே. வெங்கட்டும் சொல்லிருந்தாரே.

@இராமசாமி கண்ணண்
ராம்ஸ், இப்படியாவது வியாபாரம் நடக்குதான்னு பாப்போம்.

வெங்கட் சொன்னது…

இங்கிட்டு எல்லாருக்கும்
நான் சொல்லிக்க
ஆசைப்படறது
என்னான்னா..

ரமேஷை பத்தி எனக்கு
நல்லா தெரியும்..
ஆனா அவருக்கு தான்
Computer பத்தி ஒன்னும்
தெரியாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்ன வெங்கட் உங்க நண்பனா இருந்துட்டு இதுகூட தெரியாதா என்ன. துணி துவைக்க உதவுற machine தான கம்ப்யூட்டர்?

எஸ்.கே சொன்னது…

very useful post. keep post like this often.

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஒன்றரை வருஷம் கஷிச்சு தேவையா இந்த வெளம்பரம்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இப்படியும் சம்பாதிக்கலமா? அடங்கோ!!

சேலம் தேவா சொன்னது…

இந்த கம்பூட்டர் இன்ஜினியருங்களே இப்டிதான்...எதுவுமே அவ்ளோ சீக்கிரம் சொல்ல மாட்டாங்க..தொழில் ரகசியம்..!! :)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது