Horoscope
வியாழன், ஏப்ரல் 22
நான்கு மாடுகள்
ஒரு ஊர்ல நான்கு மாடுகள் இணைபிரியாம சேர்ந்தே இருந்ததாம். மேயப் போகும்போது கூட சேர்ந்தே போகுமாம். தினமும் இந்த நான்கு மாடுகளும் காட்டுக்கு மேயப் போகுங்கலாம். இந்த நான்கு மாடுகளையும் வேட்டையாடனும்னு நினச்ச ஒரு புலி அதுங்க பக்கத்துல போச்சாம். நான்கு மாடுகளும் சேர்ந்து புலியை முட்டி விரட்டிடுசாம்.
இந்த நான்கு மாடுகளும் சேர்ந்து இருந்தா நம்மளால வேட்டையாட முடியாது அப்படின்னு நினச்ச புலி, இதுங்களை பிரிக்கணும்னு நினச்சதாம். உடனே புலி நரியை கூப்பிட்டு விஷயத்தை சொல்லுச்சாம். நரி என்ன சும்மாவா தந்திரக்காரன் ஆச்சே. நரி ஒவ்வொரு மாடுகிட்டையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நான்கு மாடுகளையும் பிரிச்சிடுசாம்.
உடனே புலி இதுதான் சமயம் என்று தனித்தனியாக மேய்ந்த நான்கு மாடுகளையும் அடிச்சு சாப்பிட்டுடுசாம்.
Moral Of the Story: நாம நம்ம மாடுகளை காட்டுல மேய விட்டதால்தான புலி அடிச்சது. அப்படி செய்யாம உங்க தோட்டத்துல பயிர் விளையுற இடத்துல மேய விடுங்க. எந்த புலி வருதுன்னு பார்த்துடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
10 கருத்துகள்:
இப்ப மாடுகளே இல்லை, இருந்தாதானே மேய விடுறதுக்கு..
நான்கு மாடு ஒன்னா இருக்குறத பாத்த புலி அடுத்த நாள் ஒரு
4 புலி ஃப்ரண்ட்சோட வந்து ஆளுக்கு ஒன்ன ஜாலியா சாப்டுச்சாம்...
இது எப்படி இருக்கு...
@ கே.ஆர்.பி.செந்தில்
ஓ அதனாலதான் ராமராஜன் படம் நடிக்கிறதா நிப்பாட்டிடாரோ?
@ GD
அந்த GD நாயுடு மாதிரியே யோசிக்கிறீங்களே
இந்த மாதிரி சின்ன வயசு
கதைய எல்லாம் உல்டா
பண்ணுனீங்க எனக்கு
கெட்ட கோவம் வரும்..
கதையில வர்றது
புலி இல்ல சிங்கம்..!!!
@வெங்கட்
தேங்க்ஸ். எல்லோரும் பழைய கதைன்னு சொல்லிடுவாங்களோன்னு கவலைப்பட்டேன். நல்லவேளை ரெண்டும் வேற வேற கதைன்னு சொல்லிடீங்க. அது சிங்கம் இது புலி அப்பா வேற வேற கதைதான...
சிங்கம் சிங்கிளாதான் போகும் லாஜிக் இடிக்கும்ல
அதான் சிங்கத்த அசிங்க படுத்தாம புலினு மாத்தியாச்சி...
ரொம்ப தேங்க்ஸ் GD, ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
அருமையான நீதிக் கதை. என்னுடைய ஒரு பழைய கதையைப் படிங்க (புது நீதியோட)
http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_13.html
பெயர் சொல்ல விருப்பமில்லை nanri
கருத்துரையிடுக