Horoscope

வியாழன், மே 13

மலரும் நினைவுகள் -டேப்ரிக்காடர்


கடந்தமுறை எனது மலரும் நினைவுகளில் டிவி பற்றி பேசிகொண்டிருந்தோம். அதைவிட முக்கியமான ஒன்று டேப்ரிக்காடர். இப்போது சிடி,டீவீடி வந்த பிறகு டேப்ரிக்காடர் சுத்தமாக அழிந்தே போய்விட்டது.

எங்கப்பா தான் முதன் முதலாக எங்க ஊர்ல டேப்ரிக்காடர் வாங்கிட்டு வந்தார். அதோட இலவசமா "சம்சாரம் அது மின்சாரம்", "விதி" அப்புறம் ரெண்டு வேற்று கேசட். டேப்ரிக்காடர் உபயோகப்படுத்திய யாரும் "விதி" கதை வசனம் கேட்டிருக்காமல் இருக்க முடியாது.

அந்த டேப்ரிக்காடரில் ரேடியோ வும் இருக்கும். புதன்கிழமை இரவு ஒரு நாடகம் ஒலிபரப்பாகும். அதை கேப்பதுக்கு எங்க வீட்ல ஒரு கூட்டமே இருக்கும். ஒரு மணி நேர நாடகத்துக்கு அப்படியே ஒன்றிப்போய் உக்கார்ந்திருப்போம்.  அப்புறம் ஒலிச்சித்திரம். ஒரு படத்தின் கதை வசனம் ஒலிபரப்பாகும்.


அப்புறம் தினமும் இரவு 8.45 முதல் 9 மணி வரை மூன்று திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பாகும். அந்த மூணு பாட்டுக்காக காத்திருப்போம். அப்புறம் ரேடியோ வுக்கு லெட்டர் எழுதி பாட்டு கேப்போம். நம்ம பேரோ அல்லது நம்ம ஊர் பேரோ ரேடியோல வந்தா ஒரே குஷிதான்.

பின்ன அப்பா வாங்க்கிட்டு வந்த வெத்து கேசட்டுல நாம பேசி ரெகார்ட்  பண்ணுவோம். ரேடியோ ல வர்ற நல்ல நிகழ்ச்சி அல்லது நல்ல பாட்டை அந்த கேசட்டுல ரெகார்ட் பண்ணுவோம்.

அப்பெல்லாம் புதுப்பட பாட்டு வந்தா எட்டு ரூபாய்க்கு புதுப்பட கேசட்டுகள் கிடைக்கும். Side A ல ஒரு படமும், Side B ல ஒரு படமும் இருக்கும். அம்மா கிட்ட கேட்டு எல்லா புதுப்பட கேசட்டுகளும் வாங்கிடுவேன். அப்புறம் நிறைய வீடுகளுக்கு டேப்ரிக்காடர் வந்ததும் என்கிட்டே கேசட் கடன் கேட்டு வர ஆரமிச்சாங்க.

நிறைய கேசட் திரும்பி வரவே இல்லை. நான் கேசட்டுக்கு நம்பர் போட்டு வரிசையா அடுக்கி வச்சேன். ஒரு பேப்பர் ல அந்த நம்பர்ல என்ன படம் இருக்குன்னு எழுதி கேசட் வைக்கிற அலமாரிலையே ஒட்டி வச்சிருப்பேன். யாராவது கடன் கேட்டா ஒரு நோட்ல கேசட் நம்பர் எழுதி யார்கிட்ட கொடுத்தோம்னு குறிச்சி வச்சிருப்பேன். அப்ப கரெக்டா திரும்பி வந்துடும்.

ஏதோ கேசட் கெட்டு போச்சுன்னா அதுல உள்ள ரீல எடுத்து  விளையாடுவோம். ஒரு முனையை நானும் இன்னொரு முனையை என் நண்பனும் எடுத்து எவ்ளோ தூரம் அந்த ரீல் போகுதுன்னு கணக்கு பண்ணுவோம். சில நேரம் நல்ல கேசட் ரீல் அந்து போச்சுன்னா கம் எடுத்து அதை ஒட்டுறதுக்கு படாத பாடு படுவோம்.

அப்புறம் Forward  மற்றும் Reverse. பிடிச்ச பாட்டு ரெண்டாவதோ, மூணாவதோ இருந்தா அத கேக்குறதுக்கு Forward  மற்றும் Reverse பட்டன் உபயோக படுத்துவோம். அந்த சுகமே தனிதான். சரியாய் அந்த பாட்டு வரேவே வராது. ஒண்ணு முன்னாடி போயிடும் இல்லன்னா பின்னாடி போயிடும். இல்லைனா பேனாவ வச்சு கேசட் ரீல சுத்துவோம். இப்பெல்லாம் பிடிச்ச பாட்டு வேணும்னா மவுச டபுள் கிளிக் பண்ணினா போதுமே.

அப்புறம் கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் எல்லா படத்தோட கேசட்டும் வாங்குறதில்லை. நான் என் நண்பன் ரகு இருவருக்கும் மிகவும் பிடித்த இடம் எங்க ஊர் கோவில்பட்டியில் உள்ள "சரவணா மியுசிகல்ஸ்". அங்க கடை ஓனர் மணி நமக்கு தோஸ்த். அந்த கடையில போய் ஒரு வெத்து 90 கேசட் வாங்கி அதுல எல்லா புது படத்துலயும் உள்ள நல்ல பாட்ட மட்டும் ரெகார்ட் பண்ணுவோம்.

ரெகார்ட் பண்ணிட்டு கேசட் கவர்ல A side என்ன என்ன பாட்டு, B Side என்ன என்ன பாட்டு அப்டின்னு எழுதி கொடுப்பாங்க. A.R.ரகுமான் படம்னா மட்டும் ஒரிஜினல் கேசட் வாங்கிடுவோம். எனக்கு தெரிஞ்சு கேசட்டுக்கு மட்டும் நிறைய செலவு பண்ணியிருப்பேன்.

A.R.ரகுமான் பட பாடல் ரிலீஸ் அன்னிக்கு முதல் கேசட் நானும் ரகுவும்தான் வாங்குவோம். நாங்க வாங்குனதுக்கு அப்புறம்தான் சேல்ஸ். அன்னிக்கு காலேஜ் இருந்தா லீவேதான். எல்லாருக்கும் வாழ்க்கைல ரொம்ப பிடிச்ச இடம்னு ஒண்ணு இருக்கும். எனக்கும் என் நண்பனுக்கும் பிடிச்ச இடம் "சரவணா மியுசிகல்ஸ்".

கல்லூரி நாட்களில வீட்டை விட "சரவணா மியுசிகல்ஸ்" ல இருந்து பாட்டு கேட்டதுதான் அதிகம். திரும்பி அந்த வாழ்க்கை கிடைக்குமா. Forward மற்றும் Reverse எங்கயாவது உபயோக படுத்துவோமா? என்னிடம் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கேசட்டுகள் இருக்கிறது. ஆனால் டேப்ரிக்காடர் என்னிடம் இல்லை.

30 கருத்துகள்:

க ரா சொன்னது…

நல்ல கொசுவர்த்திசுருள் பதிவு நண்பா. டேப்ரிக்கார்டருக்கு இருக்கற மாதிரி வாழ்க்கைக்கும் ஃபார்வர்டு ரிவர்ஸ்லாம் இருந்த்சுன்னா நல்லா இருக்கும்ல.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

என்னிடம் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கேசட்டுகள் இருக்கிறது. ஆனால் டேப்ரிக்காடர் என்னிடம் இல்லை.
//

500 ஆ.....?..
முக்கியமா, இன்னொன்றும் இல்லை ரமேஸ்..( ஹி..ஹி.. கரண்ட்....)

மதார் சொன்னது…

2 nal munnadithan palaiya casets petti parthu palasellam niyabagam vanthathu . Enaku pidicha songs ellam eluthi anna kita record pana sola mudiyathunu solitan apuram en atha payan record panan ellam ipo niyabagam varuthu . Yar veettu sound system nalla irukum enru potti pottu pattu sound vachu 2 veetla +2 padikum pothu rompave torture . Innum niraiya story ungala mathiriye iruku.

Unknown சொன்னது…

ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க, எனக்கும் ஒரு பெருங்கதை இருக்கு, என்னுடைய "ராமசாமி நெடுங்கதை" இரண்டுக்காக அதை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்

டேப் ரிக்கார்ட் ஒரு மீளா அனுபவம், மிகுந்த பாராட்டுகள் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ் நன்றி
@ பட்டாப்பட்டி பேட்டரிளையும் டேப் பாடுமே..
@ மதார் நன்றி, உங்களுடைய அனுபவங்களை ஷேர் பண்ணிக்கலாமே.
@ செந்தில் சீக்கிரம் "ராமசாமி நெடுங்கதை" எழுதுங்க.

vinthaimanithan சொன்னது…

சித்தப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ........

vinthaimanithan சொன்னது…

அப்போ நீங்கல்லாம் யூத் இல்லியா???? ஹி ஹி ஹி...

ஜானகிராமன் சொன்னது…

ரமேஷ், நல்ல பதிவின் அடையாளமே, படிக்கும் வாசகரின் வாழ்க்கையை பிரதிபளிப்பது. டேப்ரிக்கார்டர் பறிய பதிவு மிக அழகு. என்னை நான் அதில் காண்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி விந்தைமனிதன் அண்ணா.
நீங்க என் அண்ணன்னா உங்களுக்கு என்ன வயசு? ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ஜானகிராமன்.

ஸ்ரீராம். சொன்னது…

நாங்கள் எல்லாம் ஃபாஸ்ட் ரீ வைண்ட் செய்யும் போது அதில் வரும் கவுன்ட் பார்த்துக் கொள்வோம். நிறைய கேசெட்கள் தூக்கித்தான் போட்டோம்..சும்மாக் கொடுத்தால் கூட யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்களே..!!

அனு சொன்னது…

வீட்ல கொசுத் தொல்லை ஜாஸ்தி ஆசிடுச்சா? பதிவுல ஒரே கொசுவத்தி சுருளா சுத்திட்டு இருக்கு??

சில சமயம் அந்த ரீல் போய் டேப்ரிக்காடர்ல சிக்கிக்கும்.. அதை வெளியில எடுக்குறது ஒரு கலை.. எக்குத் தப்பா வெளியில எடுத்து நிறைய காசெட்ட வேஸ்ட் பண்ணி தம்பி கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ஸ்ரீராம்
//நாங்கள் எல்லாம் ஃபாஸ்ட் ரீ வைண்ட் செய்யும் போது அதில் வரும் கவுன்ட் பார்த்துக் கொள்வோம்.//
நானும் ட்ரை பண்ணிருக்கேன். ஆனா சரியா வந்ததில்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@அனு
ஆமாங்க கொசுத்தொல்லை(சத்தியமா வெங்கட் இல்லை) தாங்க முடியல.
//சில சமயம் அந்த ரீல் போய் டேப்ரிக்காடர்ல சிக்கிக்கும்.. அதை வெளியில எடுக்குறது ஒரு கலை..//

உண்மைதான். அந்த ரீல எடுக்க எவ்ளோ கஷ்டப் படுவோம்.

Killivalavan சொன்னது…

எங்கள் வீட்டிலும் 'விதி' காசெட் இருந்தது.

எங்கள் டேப் ரெகார்டர்-இல் ஒரு கவுன்ட்டர் இருக்கு. அது காசெட் ஓட ஓட நகரும்.
பிடித்த பாடல் ஆரம்பிக்கும் இடத்தை நோட் செய்துகொள்வோம்
இதை riverse செய்யும்போது பயன்படுத்தி பிடித்த பாடலை மறுபடி மறுபடி கேட்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வாங்க கிள்ளிவளவன் "விதி" படம் இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை. ஆனால் வசனங்கள் அத்துபிடி..

எம் அப்துல் காதர் சொன்னது…

நினைவுகளை ரிவர்சில் ஓடவிட்டு, அதன் சுவாரஸ்யத்தில் எங்களை மூழ்கவிட்டு, நம்மோடு ஒன்றி - இணைந்து விட்டு - விலகி போன ஒரு விஷயத்தை மிக அழகாய் பகிர்ந்து கொண்டீர்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

நினைவுகளை ரிவர்சில் ஓடவிட்டு, அதன் சுவாரஸ்யத்தில் எங்களை மூழ்கவிட்டு, நம்மோடு ஒன்றி - இணைந்து விட்டு - விலகி போன ஒரு விஷயத்தை மிக அழகாய் பகிர்ந்து கொண்டீர்கள்.

Tirupurvalu சொன்னது…

super brother.Also all peoples had ALAIGAL OOIVATHIALI caste with VITHI.

You forgot one thing if our parents not in home we record our own voice and hear before our parents arrived we delete in caste.
You taken all to their 10-15 yrs memory
Keep it up

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் ரமேஷ்.. முன்பு பேசுவோம் அதில் டேப் செய்து கேட்போம் பாடிக்கூட.. இப்போது எல்லாம் உபயோகமில்லாமல் போய்ருச்சு

வெங்கட் சொன்னது…

அப்படியே என் நினைவுகளை
பின்னோக்கி கொண்டு போயிட்டீங்க..

எங்க அப்பாவோட நண்பர் சிங்கபூர்ல
இருந்து " National Panasonic "
டேப் ரெக்கார்டர் வாங்கிட்டு
வந்து குடுத்தார்.. அப்ப எங்க ஊர்ல
நாலஞ்சி பேர்கிட்ட தான் டேப் ரெக்கார்டர் இருந்தது..

அதுல நாங்க முதன் முதலா கேட்ட
பாட்டு குர்பானி படத்துல வர்ற
" ஆப் ஜைசா & லைலா மே லைலா "

இந்த பாட்டுக்களை இப்ப கேட்டா கூட
மனசு சிறகடிக்கும் எனக்கு..
நல்ல பதிவு.. ரொம்ப Super..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@எம் அப்துல் காதர் நன்றி

@ Abiramii Fashions நன்றி நானும் அழிச்சிருக்கேன்

@ thenammailakshmanan நன்றி

@ வெங்கட்
//அதுல நாங்க முதன் முதலா கேட்ட பாட்டு குர்பானி படத்துல வர்ற " ஆப் ஜைசா & லைலா மே லைலா "//

நீங்க ராயல்தான்ப. அந்த காலத்திலையே இந்த மாதிரி பாட்டுதான் கேட்டுருக்கீங்க.

இனியன் பாலாஜி சொன்னது…

பரவாயில்லையே
8 ரூபாய்க்கெல்லாம் கிடைச்சுதா?
அப்ப நம்ம பர்மா பஜாருலே 30 ரூபா கொடுத்துதான் வாங்கு வேன்.
நான் என் நண்பர்கள் நாலைந்து பேர்க‌ளுடன்
national panasonic
தூக்கிக் கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று விடுவோம்.அந்த காலத்திய‌
பிரபலமான abbஅ பாடல்கள் மற்றும் புதிய தமிழ் பாடல்கள் கேட்போம்
அதுக்கும் கொஞ்சம் முன்னாடி ஸ்பூல் டேப்ரிகார்டர் இருந்ததே அந்த அனுபவம் உண்டா
உங்களுக்கு? நான் அது கூடவும் கொஞ்சம் போராடி இருக்கேன். என்ன ? அதில்
அவ்வளவாக இது போல் சிக்கிக் கொள்ளாது.
பழைய காலத்திற்கு இட்டு சென்றதற்கு நன்றி
பாலாஜி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//8 ரூபாய்க்கெல்லாம் கிடைச்சுதா?//
அமா பாலாஜி கிட்ல மூணு டைப் உண்டு. ஒரிஜினல், கண்ணாடி பாக்ஸ் ல வர்றது(17Rs), பிளாஸ்டிக் பாக்ஸ் ல வர்றது(8Rs).

//அதுக்கும் கொஞ்சம் முன்னாடி ஸ்பூல் டேப்ரிகார்டர் இருந்ததே அந்த அனுபவம் உண்டா//
மைக் செட் காரன் வச்சிருப்பானே அதான?

GD சொன்னது…

For the past few days i was busy.Today only i just visit your blog its realy super. Keep rocking.

Jayadev Das சொன்னது…

FEEDBACK

Jayadev Das சொன்னது…

எல்லாம் நல்லதுக்குத் தானே, CD/DVD-ல் பாடல்கள் தரம் எப்போது குறைவதே இல்லையே! கொஞ்ச நாளைக்கப்புறம் ஊளையிடுதல், அறுந்து போதல், ஓசி குடுத்த கேசட்டுகளை மட்ட ரகமான ரிக்கார்டரில் போட்டால் அது நாடாவை மென்று விடுதல், நாடா மக்கிப் போதல் போன்ற அத்தனப் பிடுங்கல்களிலும் இருந்து விடுதலை. இது நல்ல விஷயம் தானே?

குமரன் சொன்னது…

CD யில் கீறல்கள் எளிதாக வரும். குரல்கள் CDக்களில் கீச்சென்று ஆகிவிடுகிறது. அசல் குரல்களுக்கு கேசட்கள் தான் உன்னதம். 50 ஆண்டுகள் ஆனாலும் கேசட்கள் அழியாதவை.

வெளிநாடுகளில் கேசட்கள் இதே காரணத்தால் மீண்டும் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளன.

இப்போது Walkman கடைகளில் கிடைக்காவிட்டாலும் EBay, IndiaTimes இணையதளங்களில் அதிகம் விற்கப்படுகின்றன.

எஸ்.கே சொன்னது…

அருமையான பதிவு! எனக்கும் ஒலிச் சித்திரமெல்லாம் கேட்ட ஞாபகம் டேப் ரிக்காரடரை நாசம் செய்த நினைவுகளெல்லாம் வருது!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அந்தக் காலத்துல எல்லாம் நல்லாத்தான்யா எழுதி இருக்கான் புள்ள, நம்ம கூட சேந்துதான் சீரழிஞ்சிருக்கான் போல?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது