Horoscope

வெள்ளி, மே 21

இந்தியா ஒளிரப்போகிறது

உங்கள் அன்பு தம்பி
அஞ்சாநெஞ்சன் 
சீறிவரும் காளை
ஜல்லிக்கட்டு காளை
இரும்புகோட்டை முரட்டு சிங்கம்
வருங்கால சிங்கப்பூர் ஜனாதிபதி(எத்தன நாளைக்கு அமெரிக்காவையே சொல்றது)
ஊர்போற்றும் சிரிப்புபோலிஸ் ப்ளாக்குக்கு சொந்தக்காரன்(க்கும்)
ரமேஷ் அவர்கள்(நான்தான்)

மூன்று மாத சிங்கப்பூர் சூறாவளி சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு(அதான் துரத்திட்டான்களே.பிறகு என்ன விளம்பரம்)இன்று இரவு(மே-22) பத்து மணிக்கு இந்தியா திரும்புகிறேன். 

இந்தியா இருளில் இருக்குற காரணத்தினால அதை ஒளிர வைக்க மட்டும்தான் நான்  இந்தியா திரும்புறேன்(யாருப்பா அது என்னை Tube-light ன்னு சொல்றது. பிச்சுபுடுவேன்,பிச்சு)

என்னை அவர்களது சொந்த செலவில் மேள தாளங்களுடன் வரவேற்று  கால் டாக்சியில் வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்க அன்பு உள்ளங்கள் வரவேற்க படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும். இந்த சான்ஸ் மறுபடியும் கிடைக்காது. எனவே உடனே என்னை தொடர்புகொள்ளுங்க. 

பின் குறிப்பு:

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் கிடைக்காத பொருள்கள் வாங்கி வர சொன்ன நண்பர்களுக்காக கீழ்கண்ட பொருள்கள் வாங்கி வருகிறேன்.

1 ) சிங்கப்பூர் மண்ணு
2 ) சிங்கப்பூர் செய்திகள் அடங்கிய நியூஸ் பேப்பர்
3 ) சிங்கப்பூர் வரைபடம்
4 ) சிங்கப்பூரில் நான் எடுத்த போட்டோ.
.
.

23 கருத்துகள்:

பட்டாபட்டி.. சொன்னது…

வந்தார்கள்..வென்றார்கள்..சென்றார்கள்..

அவ்.......

எங்களை விட்டு சென்னை போறியே ராசா....( குஷ்பு கட்சியில சேர்ந்ததை பாராட்டவா?)

இராமசாமி கண்ணண் சொன்னது…

இந்தியா நல்லா ஒளிர்ந்திரும்டி. இனிய பயண வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டா நான் இந்தியா போறதுக்குள்ள எனக்கு ஒரு மானஸ்தன், அறிவாளி, ரோசக்காரன் போன் பண்றதா சொன்னார். அவர நீங்க பாத்தீங்களா?

குஷ்பூவா ஏன் இந்த கொலைவெறி ராசா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ராம்ஸ்

அனு சொன்னது…

வாருங்கள் வாருங்கள் சி. போ. சி அவர்களே (இரும்புகோட்டை முரட்டு சிங்கம் பாத்தாச்சுல்லே??)

அதான், சென்னைல பாதி பேரு ஊரை காலி பண்ணிட்டு போய்ட்டாங்களா?? லைலாவ விட உங்க effect அதிகமா இருக்கும் போல இருக்கே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//லைலாவ விட உங்க effect அதிகமா இருக்கும் போல இருக்கே..//

என்னது மக்கள் தொகையை குறைச்சதுக்காக எனக்கு விருதும், பாராட்டு விழாவும் எடுக்குறாங்களா?

ஜில்தண்ணி சொன்னது…

டிரம்சுக்கும் யானைக்கும் ஏற்பாடு பன்னியாச்சி
ரைட்டா ஹீ ஹீ ஹீ

shortfilmindia.com சொன்னது…

வருக..வருக..
கேபிள் சங்கர்

சேட்டைக்காரன் சொன்னது…

//1 ) சிங்கப்பூர் மண்ணு
2 ) சிங்கப்பூர் செய்திகள் அடங்கிய நியூஸ் பேப்பர்
3 ) சிங்கப்பூர் வரைபடம்
4 ) சிங்கப்பூரில் நான் எடுத்த போட்டோ.//

ஆஹா! அது நீங்க தானா? திரைகடலோடி வரைபடம் வாங்கிய தமிழனே வருக வருக-ன்னு மீனம்பாக்கத்துலேருந்து கத்திப்பாரா வரைக்கும் போஸ்டர் ஒட்டியிருந்தாங்க, நான் வேறே யாரோன்னு நினைச்சிட்டேன். :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி கேபிள் அண்ணா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜில்தண்ணி //பன்னியாச்சி// இல்லைங்க. பண்ணியாச்சுன்னு சொல்லுங்க. பன்னியாச்சி ஒரு மாதிரி இருக்கு.
இருந்தாலும் நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சேட்டைக்காரன்
விளம்பரம் வேணாம்ன்னு சொன்ன பசங்க கேக்குறாங்களா. போட்டோ வுல நான் அழகா இருக்கனா?

ஜில்தண்ணி சொன்னது…

//இல்லைங்க. பண்ணியாச்சுன்னு சொல்லுங்க. பன்னியாச்சி ஒரு மாதிரி இருக்கு.//

ம்ம்ம் பன்னியாச்சு தல

ஜானகிராமன்.நா சொன்னது…

சிரிப்பு, சிங்கப்பூரைவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தது, சன்டீவியோட சிங்கத்தைப் பாக்கவா, கலைஞர் டீவியோட பெண்சிங்கத்தைப் பாக்கவா? ஓப்பனா சொல்லுங்க...

Chitra சொன்னது…

தங்களை வரவேற்க சென்னை போலீஸ் ரெடியா இருக்குதாம்....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,......

இனி சினி quiz, இந்தியாவில் இருந்தா?

....Best wishes!

விந்தைமனிதன் சொன்னது…

அப்படியே கேஆர்பி செந்திலண்ணனையும் சேர்த்து தூக்கிட்டு வந்திடுங்க... அவர் செலவுலயே ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு வந்துடுவார்

ஸ்ரீராம். சொன்னது…

ஒளிர வைக்க வர்றீங்களா? இருங்க...ஆற்காட்டார் கிட்ட சொல்றேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜானகிராமன்.நா
சிங்கமோ, பெண் சிங்கமோ மோதி பாத்துட வேண்டியதுதான். பெண் சிங்கம் பார்த்தா கலைஞர் டிவி ல பாராட்டு விழா எடுக்குறாங்கலாமே. உண்மையா?

@ சித்ரா
சிரிப்பு போலீஸை வரவேற்க சீரியஸ் போலீசா?. இது நல்லா இருக்கே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ விந்தைமனிதன்
செந்தில் சிங்கபூர்ல ஒரு Chinese Figure ரோட Settle ஆயிட்டார். யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அடிச்சுகூட கேப்பாங்க. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.

@ ஸ்ரீராம்.
இந்த ஒரு தடவ மன்னிச்சுடுங்க. அவர்கிட்ட மட்டும் சொல்லாதீங்க.

வெங்கட் சொன்னது…

இன்னிக்கு காலையில தான்
ரமேஷ் இந்தியா வரப்போற
அதிர்ச்சி தகவலை எனக்கு சொன்னார்..

எனக்கும் , ரமேஷூக்கும் நடந்த Chat
விவரம் இதோ...

R : இந்தியா Return ஆகலாம்னு இருக்கேன்.

V : ஏன்..? 3 மாசம் நாங்கல்லாம் சந்தோஷமா
இருந்தோம்..!! அதை கெடுக்கணுமா..?

R : வந்த வேலை முடிஞ்சிடுச்சே..

V : சிங்கப்பூர் முடிஞ்சதுன்னு சொல்லுங்க..

R : இன்னிக்கு Evening Flight ஏறுறேன்..

V : அப்பாடா.. இனிமே சிங்கப்பூர் World Bank-ல
கடன் வாங்கியாவது பிழைச்சிக்கும்..

R : சிங்கப்பூர் முழுக்க ஒரே கண்ணீர் ( மழை )
நான் கிளம்பறேன்னு..

V : அது ஆனந்த கண்ணீரா இருக்கும்.

R : இந்தியாவுல கூட ஆனந்த கண்ணீர்னு
கேள்விபட்டேன்..!

V : இது ஆனந்த கண்ணீர் இல்லைங்க..
நீங்க வரப்போறீங்கன்னு தெரிஞ்சி
பூமா தேவி குமுறி, குமுறி அழறாங்க..

ரமேஷ் சென்னைக்கு தான் வர்றதா
உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுது..

So., சென்னை மக்கள் பாதுகாப்பான
இடத்துக்கு ஓடிபோயிடுங்க,,

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//செந்தில் சிங்கபூர்ல ஒரு Chinese Figure ரோட Settle ஆயிட்டார். யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அடிச்சுகூட கேப்பாங்க. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.//

எதிரிய பக்கதுலய இல்ல வச்சுருக்கேன், ரமேஷ் தம்பி நான் பிகரோட இருக்குர போட்டோவ திருப்பி தந்திடுங்க.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமேஷ் சென்னைக்கு தான் வர்றதா உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுது..
So., சென்னை மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு ஓடிபோயிடுங்க,,//

அதாவது எல்லோரும் ரமேஷ் வீட்டுக்கு போயிடுங்கன்னு வெங்கட் சொல்றார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செந்தில் அண்ணே ஏற்கனவே போட்டோவ டீனகருக்கு கொரியர் அனுப்பிட்டனே

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது