ஒரு வழியாக சிங்கப்பூரில் வேலை தேடி கிடைக்காமல் இந்தியா திரும்பியாகி விட்டது. எல்லோரும் ப்ளாக் வச்சிருக்காங்க அப்படின்னு நானும் நவம்பர் 2008 ஆம் ஆண்டு தொடங்கினாலும் உருப்படியாக எழுத ஆரம்பித்தது சிங்கப்பூரில் இருந்த இந்த மூன்று மாதங்கள் தான்.
எனக்கு தெரிந்து இந்த மூன்று மாதங்கள்தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்(ங்கொய்யால வேலைவெட்டி இல்லாம வீட்ல உக்காந்து தின்னா மகிழ்ச்சியாத்தான் இருக்கும்). சிங்கப்பூர் எனக்கு நிறைய நண்பர்களை இந்த பதிவுலகில் அறிமுகப் படுத்தியது.
"கோகுலத்தில் சூரியன்" வெங்கட், கேஆர்பிசெந்தில் அண்ணா அவர்களின் உதவியால்தான் நான் பதிவுலகில் திரும்பவும் எழுத ஆரம்பித்தேன்(என்னது ரெண்டு பேர் வீட்டுக்கும் லாரி நிறைய கல் கொண்டு போறீங்களா. வேணாம் ப்ளீஸ் எனக்காக விட்டுடுங்க). இவர்கள் இருவரும் நான் எழுதியது தவறு என்றால் உடனடியாக சுட்டி காட்டி அந்த தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்தார்கள்(அப்படின்னா தினமும் சுட்டிகாட்டுவாங்கன்னு சொல்லு).
மேலும் பிரபாகர், நல்லவன் கருப்பு, கேஆர்பிசெந்தில் அண்ணா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிங்கப்பூரில் கிடைத்தது. வெங்கட், KVR, பேநா மூடி ஆனந்த், மணி(ஆயிரத்தில் ஒருவன்), கேபிள் சங்கர் அண்ணா அவர்களுடன் சாட்டிலும், தொலைபேசியிலும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
மேலும் தொடர்ந்து ஆதரவு தரும் சித்ரா, அனு, கிங் விஸ்வா, எஸ் மகாராஜன், பயங்கரவாதி டாக்டர் செவென், பட்டாப்பட்டி, ஜில்தண்ணி,சேட்டைக்காரன், ஜானகிராமன்.நா, ராமசாமி(சாத்தூர் மாக்கான்) மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி(யாராவது பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்).
பதிவுலகம் நேரவிரயம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் அதைவிட நிறைய நண்பர்களை அது தருகிறது என்பதே சரியான உண்மை. நேரமின்மை காரணத்தினால் இனிமேல் தினமும் பதிவு போட முடியாது(அப்பாடா தப்பிச்சிட்டேன்னு நீங்க சொல்றது காதுல விழுது). ப்ரீயாக இருக்கும்போது பதிவிடுகிறேன்.
மேலும் 36 Flowers & 3873 visitors கொடுத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இது என்னோட ஐம்பதாவது (50) பதிவு.
15 கருத்துகள்:
50க்கு வாழ்த்துகள்.. தொடர்ந்து எழுதுங்க.
ஐம்பதை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.
இனிமேல் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.
ஐம்பது நூறாக மறுபடியும் வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
இதோ முப்பதிஎழாவது ஆளும் வந்தாச்சு.
ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள், நான் உங்க குவிஸ்ல 15/15 வாங்கத்தான் போறேன்.
நீங்க நல்ல எழுதறீங்க, அதனாலதான் இவ்வளவு வரவேற்ப்பு...
கூடிய சீக்கிரமே ஐநூறாவது பதிவு காண வாழ்த்துக்கள் ..
50 ...... super!!!
பாராட்டுக்கள்!
...... மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
அடிக்கடி எழுதுங்கள்..... சினி quiz போடும் போது மட்டும், மீ த எஸ்கேப்பு.......!
500 பெற்று பெரு வாழ்வு வாழ்க
வாழ்த்துக்கள் நண்பா :)
// ஒரு வழியாக சிங்கப்பூரில் வேலை தேடி
கிடைக்காமல் இந்தியா திரும்பியாகி விட்டது. //
ஏன் தெரியுமா வேலை கிடைக்கலை..?
Interview-ல போயி சினிமா பத்தி
கேள்வி கேளுங்கன்னு டார்ச்சர்
பண்ணுனா எவன் வேலை குடுப்பான்..??
@ முகிலன் நன்றி
@ கிங் விஸ்வா
//ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள், நான் உங்க குவிஸ்ல 15/15 வாங்கத்தான் போறேன்.//
டியூஷன் வேணுமா? ஒன்லி தவுசண்ட் ருபீஸ்.
@ நன்றி செந்தில் அண்ணா
@ நன்றி சித்ரா
//அடிக்கடி எழுதுங்கள்..... சினி quiz போடும் போது மட்டும், மீ த எஸ்கேப்பு.......!//
உங்களுக்கு கட்டாய டியூஷன் எடுக்கப்படும்
@ நன்றி ஜில்தண்ணி
//ஏன் தெரியுமா வேலை கிடைக்கலை..?
Interview-ல போயி சினிமா பத்தி
கேள்வி கேளுங்கன்னு டார்ச்சர்
பண்ணுனா எவன் வேலை குடுப்பான்..??//
அதுக்காக ஹாய் வெங்கட் பகுதில உள்ள கேள்வி பதிலையா Interview-ல படிச்சிட்டு போக முடியும்.
நண்பா அதுக்குள்ள ஐம்பதா. வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்கு.
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுந்துங்க போலீஸ்
@ நன்றி ராம்ஸ்
@ நன்றி நீச்சல்காரன்
ஆஹா,
மீ த லாஸ்ட்-ஆ?? சிங்கப்பூரல இருந்து வந்து ரெண்டு நாள் ரெஸ்ட் எடுப்பீங்கன்னு உங்க ப்ளாக் பக்கமே வரல.. ஞாபகம் வந்து பாத்தா பந்திக்கு பிந்திட்டேன்..
ஐம்பது பதிவு போட்டாச்சா? இப்போ தான் அந்த '27-ஆம் எண்' போஸ்ட்-ட பாத்த மாதிரி இருக்குது.. அதுக்குள்ளயேவா? Super Fastஆ தான் போய்ட்டு இருக்குறீங்க..
உங்கள் பதிவுலக பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
//மீ த லாஸ்ட்-ஆ?? சிங்கப்பூரல இருந்து வந்து ரெண்டு நாள் ரெஸ்ட் எடுப்பீங்கன்னு உங்க ப்ளாக் பக்கமே வரல.. ஞாபகம் வந்து பாத்தா பந்திக்கு பிந்திட்டேன்..//
அனு எல்லாம் உங்களை மாதிரி நல்லவங்க ஆசிர்வாதம் தான்.
@ நன்றி ஸ்ரீராம்
கருத்துரையிடுக