செவ்வாய், ஜூன் 8

நியுமராலஜி


எப்பவுமே வழக்கமா அதிகாலை ஒன்பது மணிக்கு(9 AM) எந்திரிக்கும்  நானும் என் நண்பனும் இன்னிக்கு நடுநிசி ஏழு மணிக்கே(7AM) எழுந்துவிட்டோம். சரி மாப்ளே டிவி போடு எதாச்சும் பாக்கலாம் போரடிக்குதுன்னு சொன்னேன்(கஷ்டம் ஒன்பது மணிக்கு எந்திரிச்சிருந்தா இந்த பதிவும் வந்திருக்காது. நீங்களும் நிம்மதியா இருந்துருப்பீங்க. ஆனா நான் இருக்க விட்டுருவனா?)

ஒவ்வொரு சேனல்லையும் நம்ம சேலம் சித்த வைத்தியரும், தலையில போடுறதுக்கு ராசிக்கல் விக்கிறவரும் நம்ம தலைமுறைகளை திட்டிக்கிட்டு இருந்தாங்க. சரி இந்த நிகழ்ச்சில அப்படி என்னதான் சொல்றாங்க பாப்போம்னு பாக்க ஆரமிச்சோம்(சத்தியமா சேலம் சித்த வைத்தியர் நிகழ்ச்சி இல்லைங்க).

நியூமராலாஜி நிகழ்ச்சி ஒரு சேனல்ல ஓடிகிட்டு இருந்துச்சு. அங்க ஒரு பையன் நான் பேர மத்துனதாலதான் நான் நல்லா இருக்கேன்னு கொடுத்த காசுக்கு மேல கூவிக்கிட்டு இருந்தான். அந்த நியூமராலாஜி பெண்மணியும் பதில் அளி(ழி)த்துக்கொண்டிருந்தார்.

(பெண்: உங்க பேர் என்ன?
 பையன்: மாடசாமி
 பெண்: உங்க காலை எடுத்துட்டா உங்க வாழ்க்கைல மாற்றம் கிடைக்கும். நல்ல நிலைமைக்கு வந்துடுவீங்க
பையன்: மாடசாமி பேர்ல காலை எடுத்துட்டா மடசாமி ஆயிடுமே!!
பெண்: யோவ் உன் பேர்ல யார்யா காலை எடுக்க சொன்னது. உன்னோட ஒரு காலை எடுத்துட்டு போ. சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வந்துடுவ.)

மேலே உள்ளது நகைச்சுவைக்காக இல்லை. எத்தனை ஆயிரம் பேர் இந்த நியூமராலாஜி படி பேர் மாத்துறேன்னு கைகாசை எல்லாம் இழந்து தெருவுல நிக்கிறாங்கன்னு எனக்கு தெரியும். சரி விடுங்க விசயத்துக்கு வருவோம்.

எனக்கும் என் நண்பனுக்கும் இதுலதான் தகராறு. நியூமராலாஜி பொய் அப்படின்னு நான் சொல்றேன். இல்லை நியூமராலாஜி படி பெயர மாத்துனா பெரிய ஆளா மாறலாம்னு அவன் சொல்றான். அப்படின்னா எல்லோரும் நியூமராலாஜி படி பேர மாத்திட்டு பெரிய பணக்காரன் ஆயிடலாமே அப்படின்னு கேட்டேன். அதுக்கு நண்பன் சொன்னான் "அதுக்கெல்லாம் நிறைய செலவாகும். அதனால எல்லோரும் நியூமராலாஜிபடி பெயர மாத்துரதில்லை".   

நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம்னா வறுமைக்கோட்டை ஒழிக்கணும்னு நினைக்கிற அரசாங்கம் இலவச டிவி,கேஸ்,அரிசி,பருப்பு, பொங்கல் பொருள்கள் கொடுக்குற மாதிரி ஏன் இலவச பெயர் மாற்றம்(நியூமராலாஜிபடி) பண்ணிதரக் கூடாது?

19 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

தல, பேசாம உங்க ப்ளாக் பேரை NUMEROLOGY படி மாத்தி பாருங்க, விளம்பரம் குவிஞ்சி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவீங்க.

இராமசாமி கண்ணண் சொன்னது…

உரத்த சிந்தனை நண்பா.

Jey சொன்னது…

இனிமேல் லேட்டாவே எழுந்த்திருக்குமாரு, உங்களை வேண்டி விரும்பி கெட்டுகொள்கிறோம்.
(இவய்ங்க பண்ற கூத்துக்கு இத செஞ்சலும் செய்வய்ங்க)

பட்டாபட்டி.. சொன்னது…

நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம்னா வறுமைக்கோட்டை ஒழிக்கணும்னு நினைக்கிற அரசாங்கம் இலவச டிவி,கேஸ்,அரிசி,பருப்பு, பொங்கல் பொருள்கள் கொடுக்குற மாதிரி ஏன் இலவச பெயர் மாற்றம்(நியூமராலாஜிபடி) பண்ணிதரக் கூடாது?//

ரமேஸ்..சத்தியமான உண்மை..
உங்கள் கேள்விக்கு , ஆதாரம் மஞ்சள் துண்டு...ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தல, பேசாம உங்க ப்ளாக் பேரை NUMEROLOGY படி மாத்தி பாருங்க, விளம்பரம் குவிஞ்சி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவீங்க.//

நானும் அததான் யோசிச்சிகிட்டு இருக்கேன். டிவி ல கூட நம்மள காட்டுவாங்களே.

/@ நன்றி ராம்ஸ்

//இனிமேல் லேட்டாவே எழுந்த்திருக்குமாரு, உங்களை வேண்டி விரும்பி கெட்டுகொள்கிறோம்//
இனிமே சீக்கிரம் எந்திப்பமா நாங்க. அப்படியே எந்திச்சாலும் டிவி யா பாப்பமா?

//உங்கள் கேள்விக்கு , ஆதாரம் மஞ்சள் துண்டு...ஹி..ஹி//

யோவ் பட்டா என்னை மாட்டிவிட்டுராதீங்கய்யா

பேநா மூடி சொன்னது…

றமெச்.. இப்படி பாத்திக்கோங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

றமெச் this is too much

ஜில்தண்ணி சொன்னது…

யோசிக்க வேண்டிய விசயம் தான்

Chitra சொன்னது…

/////நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம்னா வறுமைக்கோட்டை ஒழிக்கணும்னு நினைக்கிற அரசாங்கம் இலவச டிவி,கேஸ்,அரிசி,பருப்பு, பொங்கல் பொருள்கள் கொடுக்குற மாதிரி ஏன் இலவச பெயர் மாற்றம்(நியூமராலாஜிபடி) பண்ணிதரக் கூடாது?////.....ஆட்சிக்கு வந்ததும், மக்களின் பெயர் எழுத்தை இலவசமாக மாற்றி, அவர்களின் தலை எழுத்தை மாற்ற இருக்கும் வருங்கால சிரிப்பு "பாலிஷ்" வாழ்க!

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

ஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யோசிக்க வேண்டிய விசயம் தான்//
@நன்றி ஜில்தண்ணி

//சிரிப்பு "பாலிஷ்" வாழ்க!//
புதுப்ப் பெயர் கொடுத்த சித்ரா டீச்சர் வாழ்க

//ஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?//
ஆமா மாப்ளே!

மோகன் குமார் சொன்னது…

Sema Idea!! Unga per sari thaan!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

NUMEROLOGY. காரர்களே. உங்களுப்போட்டியா இங்கே ஒரு கடை திறந்தாச்சி பாத்துங்கோ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி மோகன் குமார்

@ அன்புடன் மலிக்கா ஏன் இப்படி போட்டு கொடுக்குறீங்க?

அனு சொன்னது…

//அப்படின்னா எல்லோரும் நியூமராலாஜி படி பேர மாத்திட்டு பெரிய பணக்காரன் ஆயிடலாமே அப்படின்னு கேட்டேன். அதுக்கு நண்பன் சொன்னான் "அதுக்கெல்லாம் நிறைய செலவாகும். அதனால எல்லோரும் நியூமராலாஜிபடி பெயர மாத்துரதில்லை"//

இதனால என்ன தெரியுதுன்னா,பேரை மாத்தினா இருக்குற காசும் போய்டும்.. ஒழுங்க வேலை பொழப்ப பாத்தா இருக்குற காசாவது மிஞ்சும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இதனால என்ன தெரியுதுன்னா,பேரை மாத்தினா இருக்குற காசும் போய்டும்.. ஒழுங்க வேலை பொழப்ப பாத்தா இருக்குற காசாவது மிஞ்சும்..//

சரியா சொன்னீங்க அனு

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//ஆஆஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?//

சத்தியமா அப்படிதான் இருக்கும் மாப்புள....

செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நியுமரலேஜி-அம்புட்டும் டுபாக்கூர் (உண்மையா)

இதனால் நேரம், பணம் ,விரயம் ஆகும் அவ்வளவுதான் மற்றபடி ஒரு சிறு கல் துகளைகூட நகர்த்தமுடியாது நீங்க காலை மாற்றினாலும் எடுத்தாலும் .......
.......ஏமாற்றம்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நியுமரலேஜி-அம்புட்டும் டுபாக்கூர் (உண்மையா)//
அஆமம் செந்தில் இது பிராடுதான்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது