Horoscope

செவ்வாய், ஜூன் 15

தர்ம அடி

நான் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கி படித்தேன்(படிச்சியா அப்டின்னு யாரும் ஆச்சர்யப் படக்கூடாது. படிச்சேன். சத்தியமா நம்புங்க). மாலை நேரங்களில் அப்படியே வெளியில் உலாவுவது உண்டு(கல்லூரி நேரத்திலையும் அப்படித்தான. நீ எப்ப காலேஜ்சுக்கு போன). எங்க கல்லூரி NH-7 இல் சென்னை-நாகர்கோவில் ரோட்டில் இருக்கிறது.

ஒரு நாள் ஞாயிறு மாலை நானும் எனது இரண்டு நண்பர்களும் அப்படியே NH-7 ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது எனக்கும் எனது நண்பனுக்கும் ஒரு பந்தயம். ரோட்டில் போகும் பஸ்ஸில் கல்லைவிட்டு ஏறிய வேண்டும்.  அருண் என்கிற நண்பனிடம் பெட் கட்டினேன். அவனும் சரி கல்லை விட்டு எறியிறேன் அப்டின்னுட்டான்.

ரவிங்கிற நண்பன் பயத்துல வேண்டாம்டா மாட்டிக்குவோம் அப்டின்னு புலம்ப ஆரமிச்சிட்டான். அவனை ரெண்டு பெரும் கலாய்ச்சிகிட்டு இருந்தோம். அவன் வேணாம் அப்டின்னு பயப்பட ஆரமிச்சிட்டான். ஒரு பஸ்சும் வந்தது. அருண் பஸ்ல கல்லைவிட்டு எறிந்தான். பஸ் பழைய காலத்து வண்டி போல. பின்னாடி கண்ணாடி நொறுங்கிடுச்சு(என்ன ஒரு வில்லத்தனம்).

பஸ்ஸ நிப்பாட்டிட்டு கண்டக்டர் இறங்கி பிடிங்கடா அவனைன்னு கத்த, கொஞ்ச பேரு எங்களை விரட்ட ஆரமிச்சிட்டாங்க. நான் மிச்ச ரெண்டுபேர பத்தி கவலைபடாம காட்டுக்குள்ள ஓட ஆரமிச்சிட்டேன்(நாங்கெல்லாம் அலார்ட் ஆறுமுகம் சிஷ்யனுங்க). முள்ளு காட்டுக்குள்ள ஓடி கை காலெல்லாம் முள்ளு கிழிச்சு ஒரே ரத்தம்.

ஒரு வழியா ஹாஸ்டலுக்குள்ள காட்டு வழியா உள்ள வந்துட்டேன். மிச்ச ரெண்டு பேர காணோம். ஒரு வழியா ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரவி ஹாஸ்டலுக்கு வந்தான். அவன் ஓடவே இல்லை. அவங்ககிட்ட மாட்டிக்கிட்டான். தர்ம அடி. போறவன் வர்றவன் எல்லாம் அடி பின்னிருக்காங்க. உடம்பெல்லாம் காயம். எனக்கு ரத்த காயம். ரவிக்கு ஊமை அடி. ரெண்டு பேருக்கும் உடம்பெல்லாம் ஒரே வலி(பின்ன அடி வாங்கினா குளுகுளுன்னா இருக்கும்).

என்னடா பஸ்சுல கல்லைவிட்டு எறிஞ்சவனக் காணோமேன்னு தேடினா, இரவு பத்து மணிக்கு வர்றான். உடம்புல சின்ன காயம் கூட இல்லை. என்னடா எப்படி தப்பிச்சேன்னு கேட்டோம். அவன் நேரா சலூனுக்குள்ள ஓடி முகத்துல கிரீமெல்லாம் பூசிக்கிட்டு உக்காந்துட்டான். சலூன்காரனும் தெரிஞ்சவன்னால அவன கண்டுக்கலை. அப்புறம் அப்படியே கிளம்பி சாத்தூர் போய் படம் பாத்துட்டு மெதுவா வர்றான்.

கடைசில கல்லை விட்டு எறிஞ்சவனுக்கு ஒரு அடி கூட கிடையாது. பெட் கட்டினவனுக்கு சுமாரான அடி. வேணாம்ன்னு சொன்னவனுக்கு தர்ம அடி. இதுக்கு பேர் விதியா இல்ல வேற ஏதாச்சும் பேர் இருக்கா. மச்சான் நீ சொல்லேன்......
..

34 கருத்துகள்:

King Viswa சொன்னது…

வாழ்க வளமுடன்.

இன்னமும் பல அனுபவங்களை இப்படி பெற வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் சொன்னது…

வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு இந்த பதிவை பரிந்துரை செய்கிறேன்.

சரவணகுமரன் சொன்னது…

ஹைலைட் பண்றதுக்கு மஞ்சளுக்கு பதிலா வேறு ஏதாவது கலர் யூஸ் பண்ணுங்களேன்.

ரீடரில் வாசிக்க சிரமமாக இருக்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கிங் விஸ்வா ஏன் இந்த கொலை வெறி. அடுத்த பதிவு உங்களுக்குதான் சார். ஒழுங்கா படிக்க ஆர்மிங்க. 15/15 எடுக்கணும். இல்லைனா rank card வீட்டுக்கு போயிடும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஹைலைட் பண்றதுக்கு மஞ்சளுக்கு பதிலா வேறு ஏதாவது கலர் யூஸ் பண்ணுங்களேன்//

மாத்திடுறேன் சரவணா. அப்புறம் வட்டார போக்குவரத்தா அது என்னனு சொல்ல முடியுங்களா?

@நன்றி ராம்ஸ்

Chitra சொன்னது…

இந்த கூட்டத்துல சேர்ந்த காரணத்துக்காக, அவருக்கு "தர்ம அடி" போல..... பாவம்....!

அனு சொன்னது…

//எங்க கல்லூரி NH-7 இல் சென்னை-நாகர்கோவில் ரோட்டில் இருக்கிறது.//
//அப்புறம் அப்படியே கிளம்பி சாத்தூர் போய் படம் பாத்துட்டு மெதுவா வர்றான்.//

ஆஹா!! நீங்க அந்த காலேஜ்-ஆ??

//பஸ் பழைய காலத்து வண்டி போல. பின்னாடி கண்ணாடி நொறுங்கிடுச்சு//

எறியப்பட்டக் கல் என்ன ஒரு ரெண்டு கிலோ இருக்குமா?

moral of the story: எப்பவும் என்னை மாதிரி அப்பாவிகள் தான் மாட்டுறாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்த கூட்டத்துல சேர்ந்த காரணத்துக்காக, அவருக்கு "தர்ம அடி" போல..... பாவம்....!//

எங்களோட சேர்ந்தா விட்டுடுவமா...

//ஆஹா!! நீங்க அந்த காலேஜ்-ஆ??//
எந்த காலேஜ்-ஆ??????

//எறியப்பட்டக் கல் என்ன ஒரு ரெண்டு கிலோ இருக்குமா?//

நான் தராசு கொண்டு போகலியே...

//moral of the story: எப்பவும் என்னை மாதிரி அப்பாவிகள் தான் மாட்டுறாங்க..//

மஹா ஜனங்களே நல்லா நோட் பண்ணுங்க அனு அப்பாவியாம். அடப்பாவி...

ஸாதிகா சொன்னது…

யம்மாடி..என்ன ஒரு வில்லத்தனம்..!!

dheva சொன்னது…

யோவ் ஏட்டு நல்லா இருக்கியா ஸ்டோரி....! கல்ல விட்டு எறிஞ்சா விளையடுவீங்க...பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்....ஹா...ஹா...ஹா..!

dheva சொன்னது…

யோவ் ஏட்டு நல்லா இருக்கியா ஸ்டோரி....! கல்ல விட்டு எறிஞ்சா விளையடுவீங்க...பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்....ஹா...ஹா...ஹா..!

dheva சொன்னது…

யோவ் ஏட்டு நல்லா இருக்கியா ஸ்டோரி....! கல்ல விட்டு எறிஞ்சா விளையடுவீங்க...பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்....ஹா...ஹா...ஹா..!

Unknown சொன்னது…

பாஸு.. NH-7 நாகர்கோவில்-சென்னை இல்லை, கன்யாகுமரி-பெங்களூர் (அதுக்கப்புறம் ஹைதரபாத், அது இதுன்னு காசி வரைக்கும் போவுதுன்னு நினைக்கிறேன்).

பனித்துளி சங்கர் சொன்னது…

/////////பஸ் பழைய காலத்து வண்டி போல. பின்னாடி கண்ணாடி நொறுங்கிடுச்சு(என்ன ஒரு வில்லத்தனம்). /////////



பழைய காலத்து பஸ் என்பதால்தான் கண்ணாடி மட்டும் உடைந்தது . இப்பொழுது உள்ள வண்டிகளாக இருந்திருந்தது அப்பறம் அவளவுதான் .

ரசிக்கும்படியாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி !

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இப்பதான் மாப்ள உங்க பெயரின் அர்த்தம் கொஞ்சம் விளங்குச்சு...

இன்னும் அனுபவம் நிறைய இருக்கும்போலயே....

Jey சொன்னது…

நானும் அந்த கல்லூரி தான்பா. நம்ம ஜூனியர்தானா நீ. ஓகே ஓகே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி ஸாதிகா

//பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்....ஹா...ஹா...ஹா..!//

சத்தியமா நான் ரொம்ப நல்லவங்க

//பாஸு.. NH-7 நாகர்கோவில்-சென்னை இல்லை, கன்யாகுமரி-பெங்களூர் //

பாஸ் நான் ஐந்து வருஷம் அந்த காலேஜ்ல படிச்சேன். பதினாறு வருசமா அந்த ரோட்டுல போயிட்டு வரேன். எனக்கு தெரியாதா. அது NH-7 தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இன்னும் அனுபவம் நிறைய இருக்கும்போலயே....//
ஆமாம் மாப்ளே. வருகைக்கு நன்றி

//நம்ம ஜூனியர்தானா நீ. ஓகே ஓகே.//
வணக்கம் சீனியர்

ஜில்தண்ணி சொன்னது…

ஏட்டைய்யா என்ன வில்லத்தனம்

நடத்துங்க நடத்துங்க

நல்லாயிருக்குங்க கல் எரியிறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நன்றி ஜில்தண்ணி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஏம்பா..அந்த கஞ்சா கேஸை, இந்தப்பையன் மேல போட்டு உள்ள தள்ளு..
.
.
.
பயப்படாதே மச்சி..தர்மபுரில பஸ்ல ஆள வெச்சு கொளுத்தினவங்களையே ஒண்ணும் பண்ண முடியலே..உம்மை என்ன பண்ணப்போறாங்க?...

அருண் பிரசாத் சொன்னது…

எனக்கும் அந்த அருண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லங்க. ஆனாலும் ரமேஷ், நம்ம சங்கத்துல இருக்கறதால தன்னை அப்பாவின்னு சொல்லிக்கிற தலைவி அனு - வுக்கு எதுவும் செய்யகூடாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பயப்படாதே மச்சி..தர்மபுரில பஸ்ல ஆள வெச்சு கொளுத்தினவங்களையே ஒண்ணும் பண்ண முடியலே..உம்மை என்ன பண்ணப்போறாங்க?...//
நோ பாலிடிக்ஸ். பட்டா உன்கூட சேர்ந்தா என்ன களி திங்க விட்டுருவீங்க போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எனக்கும் அந்த அருண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லங்க. ஆனாலும் ரமேஷ், நம்ம சங்கத்துல இருக்கறதால தன்னை அப்பாவின்னு சொல்லிக்கிற தலைவி அனு - வுக்கு எதுவும் செய்யகூடாது.//

அந்த அருண் இந்த அருண் இல்லை அந்த அருண் இந்த அருண் இல்லை (போக்கிரி வடிவேலு மாதிரி படிங்க). என்ன இருந்தாலும் அனு நம்ம சங்க தலைவலி சீ தலைவி ஆச்சே

அனு சொன்னது…

// என்ன இருந்தாலும் அனு நம்ம சங்க தலைவலி சீ தலைவி ஆச்சே//

//ஆனாலும் ரமேஷ், நம்ம சங்கத்துல இருக்கறதால தன்னை அப்பாவின்னு சொல்லிக்கிற தலைவி அனு - வுக்கு எதுவும் செய்யகூடாது.//

என்னாது இது? சத்தமே இல்லாம என் இமேஜ டோட்டல் டேமேஜ் பண்ணிட்டு இருக்கீங்க.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. அப்புறம், நான் வெங்கட் கட்சியில சேர்ந்திடுவேன், ஆமா..

செல்வா சொன்னது…

//நான் மிச்ச ரெண்டுபேர பத்தி கவலைபடாம காட்டுக்குள்ள ஓட ஆரமிச்சிட்டேன்(நாங்கெல்லாம் அலார்ட் ஆறுமுகம் சிஷ்யனுங்க)//

உண்மைலேயே நீங்க ரொம்ப நல்லவர் தாங்க...!!

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

என்ன விளையாட்டு இது, பாம்ப்போட்டு விளையாடு, கண்ணிவெடி வச்ஹ்சு விளையாடு. அதென்ன சின்னப் புள்ளத்தனமா கல்ல வச்சு விளையாண்டுகிட்டு?

NH-7, சென்னை டு நாகர்கோயில், சாத்தூர்...இது எங்க ஏரியா ஆச்சே???????????????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பயப்படாதே மச்சி..தர்மபுரில பஸ்ல ஆள வெச்சு கொளுத்தினவங்களையே ஒண்ணும் பண்ண முடியலே..உம்மை என்ன பண்ணப்போறாங்க?...//
நோ பாலிடிக்ஸ். பட்டா உன்கூட சேர்ந்தா என்ன களி திங்க விட்டுருவீங்க போல
//

அடப்பாவி..இது பாலிடிக்ஸ்சா?...

ரைட்டு..உம்ம வெச்சு அடுத்த பதிவு..ஹா.ஹா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ஐயோ பட்டா அடுத்த பதிவுல என்னை கும்ம போறீங்களா?

//நான் வெங்கட் கட்சியில சேர்ந்திடுவேன், ஆமா..//

அந்த கட்சியை விட அதிக ஆபர் நாங்க தர்றோம்

@ ப.செல்வக்குமார் நீங்களாவது என்னை புரிஞ்சிகிட்டீங்களே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//NH-7, சென்னை டு நாகர்கோயில், சாத்தூர்...இது எங்க ஏரியா ஆச்சே???????????????//

ஆல் ஏரியா வும் நம்மளோடதுதான் Phantom Mohan (முன்னாள் பருப்பு)

அனு சொன்னது…

//அந்த கட்சியை விட அதிக ஆபர் நாங்க தர்றோம்//

தலைவிக்கே offer-ஆ? நான் தான் கட்சியவே கலைக்க போறேனே..

//அடுத்த பதிவுல என்னை கும்ம போறீங்களா?//

ஹாஹா.. இதை கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

//ஆல் ஏரியா வும் நம்மளோடதுதான்//

NH-7 full-ஆ கவர்மெண்ட்டோடது.. இப்படி எல்லாம் சொன்னா உள்ள பிடிச்சு போட்டுருவாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹாஹா.. இதை கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..//
ஏன் இப்படி...

//தலைவிக்கே offer-ஆ? நான் தான் கட்சியவே கலைக்க போறேனே..//
நாங்கெல்லாம் ஒரு தலைவர்/தலைவிக்கு கட்டுபட்டே வழ்தவங்க. எங்கள இப்படி அம்போன்னு விடலாமா?

பெயரில்லா சொன்னது…

இந்த பதிவுக்கு தொடர்பில்லாத போட்டோ இது தயவு செய்து மாற்றவும்

Jayadev Das சொன்னது…

கல்லை எறிஞ்சவர் மேல தப்பே இல்ல. சும்மா இருந்தவனை பந்தயம் கட்டி உசுப்பேத்தி உட்டது எல்லாம் நீங்களும் உங்க மற்ற நண்பர்களும், பண்ணுறதெல்லாம் நீங்க பண்ணிட்டு சும்மா, "எரிஞ்சவனுக்கு ஒண்ணுமே ஆகலே ஒண்ணுமே ஆகலேன்னு" புலம்பாதீங்க. அடி யார் யாருக்கு விழ வேண்டுமோ அவங்களுக்குத்தான் சரியாக விழுந்திருக்கு.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது