எல்லோரும் டூரிங் கொட்டகை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அந்த காலத்துல கிராமங்கள்ல இந்த மாதிரி டூரிங் கொட்டகை இருக்கும். மணல் குமிச்சு வச்சு அதுல உக்கார்ந்து படம் பாப்போம். அப்பெல்லாம் இப்ப உள்ள மாதிரி தியேட்டர் ஆபரேட்டர்கள் ப்ரீயா இருக்க முடியாது. கொஞ்சம் ரீல் முடிஞ்சதும் அடுத்த ரீலை மெஷின்-ல போய் மாட்டனும்.
அதாவது இடைவேளைக்கு முன்னால ரெண்டு தடவை படத்தை நிப்பாட்டி லைட் எல்லாம் போட்டுட்டு ரீல மாத்துவாங்க. அதே மாதிரி இடைவேளைக்கு பின்னால ரெண்டு தடவை படத்தை நிப்பாட்டி லைட் எல்லாம் போட்டுட்டு ரீல மாத்துவாங்க. கேண்டீன்காரங்களுக்கு ஐந்து இண்டர்வல் கிடைக்கும். பிசினஸும் சூப்பரா போகும்.
சரி விசயத்துக்கு வரேன். நேத்து சாயந்தரம் ஆபீஸ் நண்பர்களோட பிரார்த்தனா டிரைவ்-இன் க்கு ராவணன் படம் பார்க்க போனேன். நான் இதுவரைக்கும் டிரைவ்-இன் தியேட்டர் போனதில்லை. சரி போய் பாக்கலாம்னு போனேன்.
6.45PM க்கு படம். நம்ம இருக்குறது இந்தியாவாச்சே. நம்ம நாட்டு வழக்கப்படி 6.45PM க்கு ஆரமிக்க வேண்டிய படம் ரொம்ப சீக்கிரமா 7.10PM க்கு ஆரமிச்சிடுச்சு. முதல் ஐந்து நிமிஷம் படத்துல சவுண்ட் இல்லை.
அப்புறம் முதல் இருபது நிமிசத்துக்கு படம் தெளிவாவே தெரியலை. ஒரே மங்கலாத்தான் இருந்தது. ஒருவேளை எனக்குதான் கண்ணு புட்டுக்குச்சோ அப்டின்னு நினச்சு மத்தவங்க கிட்டயும் கேட்டேன். அவங்களும் அதத்தான் சொன்னாங்க(கண்ணு புட்டுக்கிட்டதா இல்லைங்க. படம் மங்கலாத்தான் தெரியுதுன்னு. விட்டா என்னமா யோசிக்கிறீங்க).
அப்புறம் கரண்ட் இல்லைன்னு இடைவேளைக்கு முன்னால ரெண்டுதடவையும் இடைவேளைக்கு அப்புறம் மூணு தடவையும் படத்த நிப்பாட்டிடாங்க. இப்ப தெரியுதா ஏன் "பிரார்த்தனா டிரைவ்-இன் என்னும் டூரிங் கொட்டகை" சொன்னேன்னு? கொசுக்கடி வேற. இப்ப கிராமங்கள்ல உள்ள தியேட்டர்ல கூட ஜெனரேடர் வந்துடுச்சு. கரண்ட் போனாகூட தானவே பவர் மாறிடும்.
இவங்க சென்னைல உள்ள ஒரே ஒரு டிரைவ்-இன் தியேட்டர். அப்புறம் ஏன் இவங்ககிட்ட அந்த வசதி இல்லை. இன்னும் ஏன் இப்படி இருக்காங்க. நான் ஸ்கூல் படிக்கும்போது "நல்லபாம்பு" அப்டின்னு ஒரு படத்துக்கு போகும்போது கரண்ட் போயிடுச்சு. டிக்கெட் பின்னால எழுதி கொடுத்து அடுத்த ஒரு வாரத்துக்குள்ள எப்ப வேணா வந்து படம் பாக்கலாம்ன்னு சொன்னாங்க.
இவங்களும் அப்படி சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் பண்ணலை. நோ சவுண்ட், நோ குவாலிட்டி, பவர் கட் எல்லாம் சேர்ந்து பத்து தலைக்கு வரவேண்டிய தலைவலியை ஒரே தலைக்கு கொடுத்ததுதான் மிச்சம்.
இனிமே பிரார்த்தனா டிரைவ்-இன் க்கு போவே. Be careful(நான் என்னை சொன்னேன்)
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
33 கருத்துகள்:
வந்துட்டோம்ல ,
மீ தி பர்ஸ்ட்.
ஏற்கனவே அந்தப் படம் புரியலன்னு நிறைய பேரு கீழ்பாக்கத்துக்கு போயிட்டு வர்றாங்க ...
அதிலையும் பிரார்தனாவுக்கா?
நல்ல கொன்னாய்ங்களா....
மிஸ்டர் ரமேஷ்,
இன்னைக்கு நீங்களா அலாரம் வச்சு மூணு மணிக்கு எழுந்துக்குரீன்களா இல்லை நான் போன் பண்ணவா?
மீ தி தேர்டு. நீ போலிஸ்னு சொல்லிருக்க வேண்டிதானே நண்பா :-).
நான் ஸ்கூல் படிக்கும்போது "நல்லபாம்பு" அப்டின்னு ஒரு படத்துக்கு போகும்போது கரண்ட் போயிடுச்சு. டிக்கெட் பின்னால எழுதி கொடுத்து அடுத்த ஒரு வாரத்துக்குள்ள எப்ப வேணா வந்து படம் பாக்கலாம்ன்னு சொன்னாங்க.
....... ha,ha,ha,ha,ha,ha,ha....
படமும் சரி இல்லைங்கறீங்க..... தியேட்டர்ம் சரி இல்லைங்கறீங்க ..... இப்படியாங்க மாட்டுவீங்க....!
படிக்கும்போது கரெண்ட் போனா..அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதில்லை..
ஓட்டல சாப்பாட்ல கல்லு வந்தா...அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதில்லை..
குடிநீர் கலங்கலா வந்தா..அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதில்லை..
வேணாய்யா.. உங்க பேர்ல கள்ள ஓட்டு போட்டா.. கம்முனு போறதில்லை..
இதுமாறி இதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க பாஸ்...
ப்ளீஸ்...நான் எழுதிய லமென்ஸ்சையும் அட்ஜஸ்ட் பண்ணி பப்ளிஸ் பண்ணிடுங்க..ஹி..ஹி
அதெல்லாம் சரி யார் கூட போனிங்க
ஆங்..முக்கியமா, தெருவுல சாக்கடை அடைச்சுக்கிட்டா..மூக்க பொத்திட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதில்லை..
அதுமாறி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தல..
( இல்லாட்டி ஜெயில்ல யாரு களி திங்கிறது?..கரெக்டா..)
//மீ தி பர்ஸ்ட்.//
முதல்ல வந்த கிங் விஸ்வக்கு ஒரு ராவணா டீவீடி பார்சல்
//நல்ல கொன்னாய்ங்களா....///
அம்மா செந்தில் அண்ணே மொக்கைப்படம் மொக்கை தியேட்டர்
//இன்னைக்கு நீங்களா அலாரம் வச்சு மூணு மணிக்கு எழுந்துக்குரீன்களா இல்லை நான் போன் பண்ணவா?//
நீங்க அலாரம் வச்சு போன் பண்ணுங்க
////நீ போலிஸ்னு சொல்லிருக்க வேண்டிதானே நண்பா :-).//
நான் மப்டில இருந்தேன்
//படமும் சரி இல்லைங்கறீங்க..... தியேட்டர்ம் சரி இல்லைங்கறீங்க ..... இப்படியாங்க மாட்டுவீங்க....!//
என்னக பண்றது நான் எங்க போனாலும் விதி என்னை விட மாட்டேங்குது!!!
//ப்ளீஸ்...நான் எழுதிய லமென்ஸ்சையும் அட்ஜஸ்ட் பண்ணி பப்ளிஸ் பண்ணிடுங்க..ஹி..ஹி//
அண்ணே வாங்க.என்ன இருந்தாலும் நாம் கோல்டன் வில்லேஜ் மாதிரி வருமா? ஹிஹி
//அதெல்லாம் சரி யார் கூட போனிங்க//
அட ஆனந்து அதான் சொன்னனே ஆபீஸ் நண்பர்களோடன்னு
//இல்லாட்டி ஜெயில்ல யாரு களி திங்கிறது?..கரெக்டா..)//
அனுபவம் பேசுகிறது
ஐயா...இந்த பிரார்த்தனா , ஆராதனா தியேட்டர்லாம் படம் பார்க்க வேலைக்கு ஆகாதுனு உங்களுக்கு தெரியமே போச்சே....
அது சரி கவனிப்பு எங்கே??,,,,,
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//இல்லாட்டி ஜெயில்ல யாரு களி திங்கிறது?..கரெக்டா..)//
அனுபவம் பேசுகிறது
//
ஆமாமா.. மச்சி கொசுவர்த்திய பின்னாடி சுத்தினா..கீழ்கண்டவை வரும்ம்ம்.....பார்த்துக்க....ஹி..ஹி..
இது பட்டாபட்டி.. சொன்னது…
பயப்படாதே மச்சி..தர்மபுரில பஸ்ல ஆள வெச்சு கொளுத்தினவங்களையே ஒண்ணும் பண்ண முடியலே..உம்மை என்ன பண்ணப்போறாங்க?...
இது ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
நோ பாலிடிக்ஸ். பட்டா உன்கூட சேர்ந்தா என்ன களி திங்க விட்டுருவீங்க போல
//
ஆமா தியேட்டரை பற்றி சொன்னீங்க... படத்தை பற்றி சொல்லவே இல்லையே...
everybody (chennaities) know about praarthana's poor maintenance.
That Theatre is not meant for films, Its meant for Lovers kadalai and illegal married ppl affairs only.
//ஐயா...இந்த பிரார்த்தனா , ஆராதனா தியேட்டர்லாம் படம் பார்க்க வேலைக்கு ஆகாதுனு உங்களுக்கு தெரியமே போச்சே....
அது சரி கவனிப்பு எங்கே??,,,,,//
கண்டிப்பா எங்க எப்ப போகலாம்னு முடிவு பண்ணுங்க..
@பட்டா நல்ல ஞாபக சக்திங்க உங்களுக்கு
//ஆமா தியேட்டரை பற்றி சொன்னீங்க... படத்தை பற்றி சொல்லவே இல்லையே//
வேணாம் நான் அழுதுடுவேன்
@ ராம்ஜி_யாஹூதெரியாம போச்சே நண்பா. பட்டுத்தான் திருந்தனும்(பட்டா இல்லை)
ஆஹா.. அந்த படத்தை பாக்குறதுக்கே ஒரு தில்லு வேணும்?? அதுலயும் நீங்க செலக்ட் பண்ணின தியேட்டர் இருக்கே...சூப்பருங்க... நீங்க பெரிய தில்லுதொர தாங்க.. ஒத்துக்கறேன்..
நாங்கல்லாம் டைம் பாஸ் பண்ண (சாப்பிட) மட்டும் தான் ப்ரார்த்தனா.. மத்ததுகெல்லாம் சத்யம் தான்..
பி.கு: படம் பாக்க போகும் போது சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சுட்டு போனதா கேள்விப்பட்டேன்.. உண்மையாவா?? :-P
கொசுக்கடி நானும் போயிருக்கேன் கொசுகடி உண்மை தான்
அது குஜிலிகளோட போற தியேட்டர்னு கேள்விபட்டேன்.
//நாங்கல்லாம் டைம் பாஸ் பண்ண (சாப்பிட) மட்டும் தான் ப்ரார்த்தனா.. மத்ததுகெல்லாம் சத்யம் தான்..//
டிரைவ்-இன் டிரைவ்-இன் ன்னு சொன்னாங்களே அது என்னன்னு பாக்கலாம்ன்னு நினச்சேன்.
//படம் பாக்க போகும் போது சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சுட்டு போனதா கேள்விப்பட்டேன்.. உண்மையாவா??//
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. நான் அதுக்கு அண்டா குண்டா எல்லாம் அடகு வச்சு இல்லை பெயிண்ட் அடிச்சிட்டு போனேன்.
@ஜெய் அதபத்தி மட்டும் நான் பேச மாட்டேன்
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. நான் அதுக்கு அண்டா குண்டா எல்லாம் அடகு வச்சு இல்லை பெயிண்ட் அடிச்சிட்டு போனேன்.
//
அய்..உள்குத்து..அப்பாடா..இப்பத்தான் நிம்மதியாயிருக்கு....
ஓம்..நமச்சிவா(யா)...
@ ராம்ஜி_யாஹூதெரியாம போச்சே நண்பா. பட்டுத்தான் திருந்தனும்(பட்டா இல்லை)
//
டேங்ஸ்..ஹி..ஹி
பி.கு: படம் பாக்க போகும் போது சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சுட்டு போனதா கேள்விப்பட்டேன்.. உண்மையாவா?? :-P
//
ஆகா..இன்னொரு உள்குத்து..
முருகா.. என்னைய காப்பாத்து...
பி.கு: படம் பாக்க போகும் போது சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சுட்டு போனதா கேள்விப்பட்டேன்.. உண்மையாவா??
//////////////////////////
இதுக்கு என்ன அர்த்தம்? ரெண்டு நாளா மண்ட காயுது. தயவு செஞ்சு யாராவது சொல்லுங்க. சைக்கிளுக்கு எதுக்கு பெயிண்ட் அடிக்கணும்?
//அய்..உள்குத்து..அப்பாடா..இப்பத்தான் நிம்மதியாயிருக்கு....//
நாங்க நேராவே குத்துவோம்
//டேங்ஸ்..ஹி..ஹி//
welcome
//இதுக்கு என்ன அர்த்தம்? ரெண்டு நாளா மண்ட காயுது. தயவு செஞ்சு யாராவது சொல்லுங்க. சைக்கிளுக்கு எதுக்கு பெயிண்ட் அடிக்கணும்?//
சைக்கிளுக்கு பெயிண்ட் அடிச்சா அதோட கலர் மாறும். அதுக்குத்தான் சைக்கிளுக்கு பெயிண்ட் அடிக்கணும்
//பி.கு: படம் பாக்க போகும் போது சைக்கிளுக்கு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சுட்டு போனதா கேள்விப்பட்டேன்.. உண்மையாவா??//
அய்யய்யோ.. அதுல உள்குத்து இருந்துச்சா?? நான் தான் வெவரம் தெரியாம பாயாசத்துக்கு பதில் பாய்சன் குடுச்சுட்டேனா??
மீ த எஸ்கேப்...
சைக்கிளுக்கு பெயிண்ட் அடிச்சா அதோட கலர் மாறும். அதுக்குத்தான் சைக்கிளுக்கு பெயிண்ட் அடிக்கணும்
//
well said dude...
//அய்யய்யோ.. அதுல உள்குத்து இருந்துச்சா?? நான் தான் வெவரம் தெரியாம பாயாசத்துக்கு பதில் பாய்சன் குடுச்சுட்டேனா?? //
அனு நீங்க வைக்கிற பாயசமே பாய்சன் மாதிரிதான இருக்கும். பின்ன என்ன ?
@ thanks பட்டாபட்டி..
அதுக்காக இப்படியா படம் போட்டு காட்டுறது..!!
கருத்துரையிடுக