வியாழன், ஜூன் 24

பார்ட் பார்ட் பார்ட்னெர்

2003-ம் வருஷம் நானும் என் பிரண்டும் சேர்ந்து பிசினஸ் ஆரமிக்கலாம்ன்னு பிளான் பண்ணி ஊர்ல ஒரு கடையை வாடகைக்கு எடுத்தோம். Data Entry, System Service, Printout, Project work எல்லாம் பண்ண ஆரமிச்சோம். எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது.

நம்ம நண்பன் ஒரு பொண்ண லவ் பண்ணிக்கிட்டு இருந்தார். ரெண்டு வீட்டுலையும் எதிர்ப்பு. அது ஒரு பக்கம் இருக்க எங்க பிசினஸ்-ம் நல்லா போய்க்கிட்டு இருந்தது. ஒருநாள் என் கூட படிச்ச பொண்ணு கல்யாணத்துக்காக நான் அருப்புகோட்டை கிளம்பி போயிட்டேன். நான் ஸ்கூல் அங்க படிச்ச காரணத்தினால ஸ்கூல் நண்பர்களை பாக்க மூணு நாளைக்கு முன்னாலையே போயிட்டேன்.

அருப்புகோட்டைல நண்பர்கள் வீட்ல தங்கிருந்தேன். அப்ப செல்போன் வசதி அவ்வளவா கிடையாது. நம்ம நண்பர் லவ்ல ஏதோ பிரச்சனை. அவருக்கு வேற வழி இல்லாம அந்த பொண்ண கூப்ட்டு ஓடிட்டார். அவருக்கு சப்போர்ட் பண்ணின நண்பர் அருப்புகோட்டை தான். அதனால அவங்க ரெண்டு பேரும் கிளம்பி அருப்புகோட்டை வந்துட்டாங்க. என்னிடம் செல் இல்லாததால என்னை தொடர்பு கொள்ளவில்லை.

பொண்ணு வீட்ல பெரிய பிரச்சனை ஆகி போலீஸ் ஸ்டேஷன் போயிட்டாங்க. "என் பொண்ணை ஒரு பையன் இழுத்துக்கிட்டு அருப்புகோட்டைக்கு ஓடிப் போயிட்டான்" அப்டின்னு சொல்லிடாங்க(ஊர் பேர யாரு கேட்டா?).  அங்க யாரு பையன்னு கேட்டப்ப அவங்க சொன்ன அடையாளம் இருக்கே. அதுதாங்க என் வாழ்க்கைல Football விளையாண்டுடுச்சு. இல்லைனா உங்களுக்கு இந்த மொக்கைகளை படிக்க வாய்ப்பே இருந்திருக்காது.

அப்படி என்ன சொன்னாங்கனு கேக்குறீங்களா. "பையன் bustand பக்கத்துல கம்ப்யூட்டர் சென்டர் வச்சிருக்கார். அவங்க அப்பா,அம்மா ரெண்டு பேரும் டீச்சர்" அப்டின்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பா,அம்மா ரெண்டு பேரும் டீச்சர். என் நண்பரோட அப்பா,அம்மா ரெண்டு பேரும் டீச்சர்.

இதுல போலீஸ் ஸ்டேஷன்-ல ஒரு போலீஸ் எங்க பக்கத்து வீட்டுகாரர். அவராவது சும்மா இருக்கணும். அவர் "எனக்கு அந்த பையன் வீடு தெரியும். அவன் ரொம்ப நல்ல பையன். அப்படி பண்ணிருக்க மாட்டான். நான் விசாரிக்கிறேன்"(ஷ்..யப்பா இவருக்காவது என்னை பத்தி தெரிஞ்சிருக்கே. நோட் பண்ணுங்கப்பா...) அப்படின்னு சொல்லிட்டு இன்னொரு போலிஸ கூப்ட்டுகிட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கார்.

இவ்ளோ நடந்ததுகூட தெரியாம நான் நண்பர்களோட தியேட்டர்ல உக்கார்ந்து படம் பாத்துகிட்டு இருக்கேன். போலீஸ் எங்க வீட்ல போய் என்னை கேக்க, எங்க அப்பா "பையன் அருப்புகோட்டை போயிருக்கான்" அப்டின்னு சொன்னதும், கூட வந்த போலீஸ் எங்க பக்கத்துக்கு வீட்ல இருக்குற போலிஸ பாக்க(அதுக்கு அர்த்தம் அவன நீ ரொம்ப நல்லவன்னு சொன்னியே), நான்தான் அதுன்னு கன்பார்மே பண்ணிட்டாங்க.

எங்கப்பா என்ன விசயம்ன்னு கேக்க, போலீஸ் விஷயத்தை சொல்ல, எங்கப்பா அவன் வந்ததும் கூட்டிட்டு வரேன் இல்லன்னா போன் பண்ணினா சொல்றேன்னு சொல்லி விட்டுடாங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் வீட்டுக்கு வர்றேன். எனக்கு தர்ம அடி கொடுக்க அப்பாவும் அம்மாவும் காத்துகிட்டு இருக்காங்க.

வந்ததும் ஒரே திட்டு. எனக்கு என்ன விசயமுன்னு புரியலை. அருப்புகோட்டை போனதப்  பத்தி திட்டறாங்க. நாலு வருஷம் அங்கதான படிச்சோம். அப்ப இல்லாம இப்ப ஏன் திட்டுறாங்க அந்த ஊர பத்தின்னு ஒரே யோசனை.  பின்ன விஷயம் தெரிஞ்சு அவங்களை சமாதானப்படுத்தி....

நீ இங்க பிசினஸ் பண்ணி கிழிச்சது போதும். சென்னைக்கு போய் வேலைய தேடுற வழியப்பாருன்னு துரத்தி விட்டுட்டாங்க.

அதுக்கப்புறம் அவங்க ரெண்டு வீட்டுலயும் சமாதானமாகி அவர் ஊர்லையே செட்டில் ஆயிட்டாரு. என்னைத்தான் சென்னைக்கு துரத்தி விட்டுட்டாரு...

என்ன பண்றது ஒரு நல்ல பிசினஸ்மேனை இந்தியா இழந்துவிட்டது....

43 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

கதை நல்லா இருக்கு நண்பா.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் என்னய்யா கதை சொல்றே.. இதுல சுவாரஸ்யமே அதுக்கப்புறம் அந்தக் காதல் ஜோடி என்ன ஆனது. உன்னோட கடை என்ன ஆனது என்பதுதான்..

இரண்டாம் பாகம் போடு..
இனிமேலாவது இந்த மாதிரி பதிவு போடும்போது ஆலோசனை கேளு.. (கொஞ்சம் செலவாகும்)..

King Viswa சொன்னது…

நல்ல கதை, நன்றி ரமேஷ்

King Viswa சொன்னது…

எனக்கு என்ன தோணுதுன்னா, இந்த மேட்டர் உங்க நண்பருக்கு நடந்து, நீங்க தான் அந்த "பொண்ண கைய பிடிச்சு இழுத்துகிட்டு ஓடினியா?" பார்ட்டி மாதிரி இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இராமசாமி கண்ணண் , கிங் விஸ்வா,

கஷ்டப்பட்ட என் வாழ்க்கைய சொன்னா, உங்களுக்கு கதை மாதிரியா இருக்கு. என்ன சின்னபுள்ள தனமா..

//யோவ் என்னய்யா கதை சொல்றே.. இதுல சுவாரஸ்யமே அதுக்கப்புறம் அந்தக் காதல் ஜோடி என்ன ஆனது. உன்னோட கடை என்ன ஆனது என்பதுதான்..///

என்னோட கடை வடக்கம்பட்டி ராமசாமி ஊ ஊ. அவங்க settled

பேநா மூடி சொன்னது…

Adadaa.. Oru bil gates ah tamil nadu ilandhutu

Jey சொன்னது…

ஒரு தமிழன் உலகளவுல பெரிய தொழிலதிபராகுறது, தடைபட்டு போயிருச்சே?.

Chitra சொன்னது…

இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்பட வேண்டியவரை சென்னை வரவேற்று கொண்டது.... ஆமா .... அங்கே போய் எப்படி சிரிப்பு போலீஸ் ஆனீங்க என்றும் சொல்லுங்க....

பிரேமா மகள் சொன்னது…

கேள்விகள் பல...

1. அதுக்கு பிறகு கடை என்ன ஆச்சு?

2.செல்போன் இல்லாத காலம்ன்னா நீங்க பொறந்தது 1960-யிலேயா?

3.டீச்சர் புள்ளங்க எல்லாம் இப்படித்தான் இருக்குமா? (எங்கம்மாவும் ஒரு டீச்சர் என்பதை இந்த இடத்தில் சொல்ல கடமைபடுகிறேன்).

4.இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் ஊரை விட்டு வரலாமா?

பட்டாபட்டி.. சொன்னது…

இவ்ளோ நடந்ததுகூட தெரியாம நான் நண்பர்களோட தியேட்டர்ல உக்கார்ந்து படம் பாத்துகிட்டு இருக்கேன். //

இவ்வளவு களேபரத்திலும் படம் பார்க்க போயிருக்கீங்கனா..உங்க தன்னம்பிக்கைய பாராட்டுரேன்..

ஆமா..உங்களை இழுத்த, அப்படிப்பட்ட படம் எது சார்?
அதை சொல்லாமவிட்டுட்டீங்க..? நீங்க ரொம்ப மோசம்.

வெங்கட் சொன்னது…

@ King Viswa.,

// நீங்க தான் அந்த "பொண்ண கைய பிடிச்சு
இழுத்துகிட்டு ஓடினியா?" பார்ட்டி மாதிரி இருக்கு. //

அட இப்படி எல்லாம் கிண்டல் பண்ணாதீங்க..,
எனக்கு கோவம் வந்துடும்..
கிண்டல் பண்ணும் போது கூட
பார்த்து., நிதானமா தான் பண்ணனும்..

அட ஒரு புத்திசாலி பொண்ணை
இப்படியா கிண்டல் பண்றதுன்னு
சொல்ல வந்தேன்பா...

இவரு கூட ஓடி போற அளவுக்கு
இன்னும் நம்ம பொண்ணுங்க விவரம்
கெட்டு போகலை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இரண்டாம் பாகம் போடு..இனிமேலாவது இந்த மாதிரி பதிவு போடும்போது ஆலோசனை கேளு.. (கொஞ்சம் செலவாகும்)..//

கொஞ்சம் செலவுன்னா ஒரு 400C ஆகுமா. வேணும்னா நான் நம்ம கலைஞர் கிட்ட 400c கடன் கேட்ட்கவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Adadaa.. Oru bil gates ah tamil nadu இழந்துட்டு//
எஸ் ஒரு அணில் அம்பானி, குருவி அம்பானி, பல்லி அம்பானியா வரவேண்டியவன்!

//ஒரு தமிழன் உலகளவுல பெரிய தொழிலதிபராகுறது, தடைபட்டு போயிருச்சே?.//

நான் தொழிலதிபரா வரக்கூடாதுன்னு ஊருக்குள்ள யாரோ செய்வினை வச்சிருக்காங்க!!!

//இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்பட வேண்டியவரை சென்னை வரவேற்று கொண்டது.... ஆமா .... அங்கே போய் எப்படி சிரிப்பு போலீஸ் ஆனீங்க என்றும் சொல்லுங்க....//

அது ஒரு பெரிய கதைங்க. நான் எழுதி கொல்லரதுக்கு காரணம் வெங்கட்டும், கே.ஆர்.பி.செந்தில் அண்ணனும்தான். என் மேல எதுவும் கோவம்னா அவங்க மேல காட்டுங்க. ஹிஹி !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1. அதுக்கு பிறகு கடை என்ன ஆச்சு?

- என்னோட கடை வடக்கம்பட்டி ராமசாமி ஊ ஊ. ஊத்தி மூடியாச்சு

2.செல்போன் இல்லாத காலம்ன்னா நீங்க பொறந்தது 1960-யிலேயா?

- அப்ப செல்போன் வசதி அவ்வளவா கிடையாது. இன்கமிங்-க்கும் காசு. மொபைல் விலையும் அதிகம். அதனால மொபைல் நான் வாங்கல.

3.டீச்சர் புள்ளங்க எல்லாம் இப்படித்தான் இருக்குமா? (எங்கம்மாவும் ஒரு டீச்சர் என்பதை இந்த இடத்தில் சொல்ல கடமைபடுகிறேன்).

- நான் ரொம்ப புத்திசாலிங்க. ஆனா ரொம்ப அப்பாவி. நீங்க என் இனமா? ஹஹா


4.இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் ஊரை விட்டு வரலாமா?
- நான் எங்கங்க ஓடி வந்தேன். வீட்டுல துரத்தி விட்டுடாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆமா..உங்களை இழுத்த, அப்படிப்பட்ட படம் எது சார்?அதை சொல்லாமவிட்டுட்டீங்க..? நீங்க ரொம்ப மோசம்.//

அது சரத்குமார்,ஹீரா நடிச்ச பேண்டு மாஸ்டர் திரைப்படம். இன்னும் எங்க வீட்ல அந்த படத்த சொல்லி கிண்டல் பண்ணுவாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அட ஒரு புத்திசாலி பொண்ணை இப்படியா கிண்டல் பண்றதுன்னு சொல்ல வந்தேன்பா...//

கிங்: ஏய் என்ன ரமேஷ் கூட ஓடி போக போறியா?

புத்திசாலி பெண்: ஆமாங்க அவரு ரொம்ப நல்லவரு வல்லவரு, புத்திசாலின்னு கேள்விபட்டேன்.

கிங்: அதெல்லாம் உண்மைதான். அவரு வெங்கட்டோட நண்பர்ன்னு உனக்கு தெரியுமா?

பெண்: வெங்கட்டோட நண்பரா. அய்யயோ. அப்ப ரமேஷ் எனக்கு வேணாம்!!

கிங்: ஏன்?

பெண்: உன் நண்பனை பத்தி சொல். நான் உன்னைப்பத்தி சொல்றேன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. இவர் வெங்கட்டோட நண்பராம். பின்ன இது எங்க உருப்படப் போகுது!!!!

புத்திசாலி பெண்கள்னா இப்படிதான் உஷாரா இருக்கணும்...

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// நான் எழுதி கொல்லரதுக்கு காரணம்
வெங்கட்டும், கே.ஆர்.பி.செந்தில் அண்ணனும்தான். //

ஐயோ.., இந்த பாவத்துக்கு நான்
என்ன பரிகாரம் பண்ண போறேனோ
தெரியலையே..!!

நான் வேணா Blog எழுதறதை நிறுத்திட்டு.,
என் Computer-ஐ வித்துடட்டுமா..??

அருண் பிரசாத் சொன்னது…

ரமெஷ், உங்க நண்பர் பேரு என்ன வெங்கட் - ஆ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெங்கட்

//நான் வேணா Blog எழுதறதை நிறுத்திட்டு., என் Computer-ஐ வித்துடட்டுமா..??//

இதுக்கு பத்தி சொல்ல எங்க தலைவி அனுவை மேடைக்கு அழைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண் பிரசாத் கூறியது...
ரமெஷ், உங்க நண்பர் பேரு என்ன வெங்கட் - ஆ?


yes yes

Software Engineer சொன்னது…

உங்க அப்பா அம்மாவும் டீச்சரா? Same Blood. ஒருவேளை தொழிலதிபராயிருந்தா நடிகையை கல்யாணம் செய்து இருப்பீர்கள். இப்போ தப்பிச்சிட்டீங்க.

Software Engineer சொன்னது…

உங்க அப்பா அம்மாவும் டீச்சரா? Same Blood. ஒருவேளை தொழிலதிபராயிருந்தா நடிகையை கல்யாணம் செய்து இருப்பீர்கள். இப்போ தப்பிச்சிட்டீங்க.

வெங்கட் சொன்னது…

@ Software Engineer.,

// ஒருவேளை தொழிலதிபராயிருந்தா
நடிகையை கல்யாணம் செய்து இருப்பீர்கள்.
இப்போ தப்பிச்சிட்டீங்க. //

தப்பிச்சது என்னவோ நிஜம்தான்..
ஆனா ஆள் மாத்தி சொல்லிட்டீங்கன்னு
நினைக்கிறேன்..

இதை நீங்க அந்த நடிகைகிட்ட தானே
சொல்லி இருக்கணும்..??

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// ஒருவேளை தொழிலதிபராயிருந்தா
நடிகையை கல்யாணம் செய்து இருப்பீர்கள்.
இப்போ தப்பிச்சிட்டீங்க. //

தப்பிச்சது என்னவோ நிஜம்தான்..
ஆனா ஆள் மாத்தி சொல்லிட்டீங்கன்னு
நினைக்கிறேன்..

இதை நீங்க அந்த நடிகைகிட்ட தானே
சொல்லி இருக்கணும்..??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெங்கட் கூறியது...
// ஒருவேளை தொழிலதிபராயிருந்தா நடிகையை கல்யாணம் செய்து இருப்பீர்கள். இப்போ தப்பிச்சிட்டீங்க. //

தப்பிச்சது என்னவோ நிஜம்தான்.. ஆனா ஆள் மாத்தி சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. இதை நீங்க அந்த நடிகைகிட்ட தானே
சொல்லி இருக்கணும்..??//

அதுவும் சரிதான். இந்த மாதிரி புத்திசாலியை கட்டிக்கிட்டமே. நமக்கு அந்த தகுதி நமக்கு இருக்கான்னு அந்த நடிகைக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடகூடாதில்ல

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ஆமா ஸ்டேஷன் ல பேன்ட கழட்டி நிக்க வச்சதை சொல்லவேயில்ல

ப.செல்வக்குமார் சொன்னது…

நானும் போலீஸ் தான் அப்படின்னு சொல்லிருக்கலாம்ல...!!
என்னை அவுங்க நிஜ போலீஸ், நீங்க சிரிப்பு போலீஸ் ...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆமா ஸ்டேஷன் ல பேன்ட கழட்டி நிக்க வச்சதை சொல்லவேயில்ல//
அதெல்லாம் ஆப் தி ரெகார்ட்....

//நானும் போலீஸ் தான் அப்படின்னு சொல்லிருக்கலாம்ல...!!என்னை அவுங்க நிஜ போலீஸ், நீங்க சிரிப்பு போலீஸ் ...!!//
அப்ப நான் போலீஸ் இல்லியே...

பட்டாபட்டி.. சொன்னது…

அப்ப நான் போலீஸ் இல்லியே...
//

நல்ல சமாளிப்பு..
கலக்கல் பதில்..ஹா.ஹா...( Solid reply.. buddy..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டா ஜெய் ன்னு ஒருத்தர் புதுசா கடை திறந்திருக்குறாராம். வாங்க போய் கும்மலாம்....

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

கோ இன்சிடெண்டுன்னு சொல்றதா விதின்னு சொல்றதா மாப்பு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ப்ரியமுடன்...வசந்த் அப்படியும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்...

அனு சொன்னது…

//என்ன பண்றது ஒரு நல்ல பிசினஸ்மேனை இந்தியா இழந்துவிட்டது//

நல்ல வேளை. உலகம் பொழச்சுகிச்சு.. இன்னொரு microsoft-அ என் system தாங்காது..

//நான்தான் அதுன்னு கன்பார்மே பண்ணிட்டாங்க.//

அப்போ, நிஜமாவே அது நீங்க இல்லயா? சும்மா உண்மைய சொல்லுங்க..

//நான் வேணா Blog எழுதறதை நிறுத்திட்டு.,
என் Computer-ஐ வித்துடட்டுமா..??//

ரமேஷ், நம்ம போட்ட master plan success..

அனு சொன்னது…

@வெங்கட்
என்ன, இங்க தொடர் கமெண்ட் போட்டு எங்க கட்சில இருந்து ஒரு ஆளைக் குறைக்கலாம்னு ப்ளானா? அதெல்லாம் இங்க நடக்காது.. வேற கடைய பாருங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@அனு

//நல்ல வேளை. உலகம் பொழச்சுகிச்சு.. இன்னொரு microsoft-அ என் system தாங்காது..//

அதுக்காக சங்கத்துல இருந்து புது system வேணும்னு கேப்பீங்களோ?

//அப்போ, நிஜமாவே அது நீங்க இல்லயா? சும்மா உண்மைய சொல்லுங்க..///

பொண்ணை பாத்தா மண்ணைப் பாக்குற ரமேச பாத்தா இந்த கேள்வி(ஒண்ணுமில்லை KTV-ல Friends படம் ஓடிகிட்டு இருக்கு அதான்)

//ரமேஷ், நம்ம போட்ட master plan success..//
ஆமாங்க . ஆடு தானா வரந்து மாட்டிகிடுச்சு

//என்ன, இங்க தொடர் கமெண்ட் போட்டு எங்க கட்சில இருந்து ஒரு ஆளைக் குறைக்கலாம்னு ப்ளானா? அதெல்லாம் இங்க நடக்காது.. வேற கடைய பாருங்க..//

@ வெங்கட் மறுபடியும் தொப்பி தொப்பி

ஜெயந்தி சொன்னது…

இதத்தான் எங்கூருல சொல்வாங்க தென்னமரத்துல தேள் கொட்டுனா, பன மரத்துல நெறி கட்டுமாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Jeyanthi
//இதத்தான் எங்கூருல சொல்வாங்க தென்னமரத்துல தேள் கொட்டுனா, பன மரத்துல நெறி கட்டுமாம்.//

aamanga

dheva சொன்னது…

//Chitra சொன்னது…
இந்தியாவின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்பட வேண்டியவரை சென்னை வரவேற்று கொண்டது.... ஆமா .... அங்கே போய் எப்படி சிரிப்பு போலீஸ் ஆனீங்க என்றும் சொல்லுங்க.... //

சராமாரி ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks dheva

சரவணகுமரன் சொன்னது…

இங்க பாருங்க...

http://nattunadappu.blogspot.com/2010/06/blog-post_26.html

உங்க புகழ் செம்மொழி மாநாடு வரை பரவிடுச்சு...

போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல உங்கள தேடுறாங்களாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சரவணகுமரன்

/போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல உங்கள தேடுறாங்களாம்!//

தூத்துக்குடி ஹார்பர்ல ஒழியிரதுக்கு இடம் இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடுத்த தடவ கடை போடும்போது நம்மகிட்ட ஐடியா கேளுங்க (கமிசன்லாம் கெடையாது)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடுத்த தடவ கடை போடும்போது நம்மகிட்ட ஐடியா கேளுங்க (கமிசன்லாம் கெடையாது)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது