Horoscope

சனி, ஜூன் 12

Farmville


Farmville. Facebook உபயோகப்படுத்தும் அனைவருக்கும் இந்த விளையாட்டு தெரிந்திருக்கும். Virtual Farming- இதுதான் இந்த விளையாட்டோட கான்செப்ட். உங்களுக்கு சொந்தமா ஒரு பார்ம் கொடுத்துடுவாங்க. காசுகொடுத்து(விர்சுவல் பணம்தான்) உங்களுக்கு வேண்டிய விதைகளை உங்க பார்மில் போடனும். குறிப்பிட்டா நேரம் கழித்து அறுவடை பண்ணி பணம் சம்பாதிக்கலாம்(விர்சுவல் பணம்தான்)


நான் Farmville-Support டீமில் தான் வேலை செய்தேன். இந்த விளையாட்டு அறிமுகமானது June-20-2009 (20 தா 22 ஆ ன்னு சரியா தெரியலை). அறிமுகமான அடுத்த வினாடியில் இருந்து விளையாட ஆரமிச்சவங்க நாங்க. எங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலையே டிரைனிங் முடிஞ்சிடுச்சு. இன்னிக்கு இந்த விளையாட்டு சாயந்தரம் நாலு மணிக்கு அறிமுகம்ன்னு சொல்லிட்டாங்க. 3.50 மணியிலிருந்து refresh பண்ணிக்கிட்டே இருந்தோம். 4.10 க்குதான் அப்டேட் ஆயிடுச்சு(பத்து நிமிஷம் போச்சே).
 
இந்த விளையாட்டு அறிமுகத்துக்கு முன்னாடி நாங்க விளையாண்டது அதே Zynga-வில் Mafia Wars மற்றும் Yo-Ville.FarmVille வந்ததுக்கப்புறம் மற்ற எல்லா Zynga விளையாட்டுக்களும் விளையாடும் ஆர்வம் குறைந்தது உண்மை. எங்க மேனேஜர்ல இருந்து அட்மின் வரைக்கும் விளையாடாத ஆட்களே ஆபீஸ்ல இல்லை(சின்னப்புள்ளத்தனமா இல்ல?).
 
இந்த FarmVille டீம்ல நடந்த சில விசயங்களையும், FarmVille விளையாட்டை பத்தியும் உங்களிடம் ஷேர் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்(யாருப்பா அது கிப்ட் கேக்குறது).
 
முதநாள் எப்படி விளையாடனும்ன்னு கொஞ்சம் தெரியும். டிரைனிங்ல சொல்லி கொடுத்தது. எங்க ஆபீஸ்ல ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு டீம் உண்டு. ஆனா எல்லா டீம்ல உள்ளவங்களும் விளையாடுற விளையாட்டு FarmVille மட்டும்தான். ஆரமிச்ச புதுசுல லெவல் கூட்டுரதுக்காக வீட்ல அலாரம் வச்சு எழுந்து விளையாண்ட கதை எல்லாம் உண்டு. இல்லைனா ஷிப்ட்ல உள்ள நண்பர்கள்கிட்ட பாஸ்வேர்ட் கொடுத்து விளையாட சொல்லுவோம்.
 
டெய்லி ஆபீஸ் வந்தது ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் கிப்ட் அனுப்ப சொல்றதுதான் முதல் வேலை. அதுக்கப்புறம்தான் சிஸ்டம் லாகின் பண்ணி வேலையை ஆரமிப்போம். ஒரு நாளைக்கு ஏதாச்சும் புதுசா அறிமுகம் ஆனா நாம ஆபீஸ்ல நுழையும்போதே மாப்ளே FarmVille-ல யானை கிப்ட், குதிரை கிப்ட் புதுசா வந்திருக்கு அப்டின்னு நியூஸ் வரும்.
 
திடீர்ன்னு மேனேஜர் எழுந்து "Guys one minute" அப்டின்னு சொல்லுவார். சரி ஏதோ அப்டேட் போலன்னு நீங்க நினச்சா அது ரொம்ப தப்பு. FarmVille-ல புதுசா கிப்ட் வந்திருக்கு. சீக்கிரம் எல்லோரும் எனக்கு அனுப்புங்க அப்டின்னு சொல்லுவார். ஒன்பது மணி நேரம் ஆபீஸ்ல விளையாடுறதுக்கு சம்பளமா அப்டின்னு கேக்குறீங்களா. என்ன பண்றது. விளையாட்டு பையனாவே இருந்துட்டேன்.

நாம ஏதாச்சும் புதுசா டெகரேசன் ஐட்டம் வாங்க்கி வச்சுட்டு நபர்களுக்கு மெசேஜ் சொல்லிட்டா உடனே நம்ம பார்முக்கு வந்து பாத்துட்டு வாழ்த்துக்கள் வரும். எங்க நண்பர்கள் சிலர் ரெண்டு அக்கௌன்ட் வச்சு ஒரு அக்கௌன்ட்ல இருந்து இன்னொரு அக்கௌன்ட்க்கு கிப்ட் அனுப்புவாங்க.

டிஸ்கி: FarmVille-ல சந்தேகம்னா தயங்காம கேளுங்க.

25 கருத்துகள்:

வெங்கட் சொன்னது…

உங்க பழைய Friends-கிட்ட
சொல்லி.,
ஏதாவது தில்லுமுல்லு பண்ணி.,
என் அக்கவுண்ட்க்கு FV Cash
கொஞ்சம் அதிகப்படுத்த சொல்லுங்க..

அப்படியே அனு அக்கவுண்டை
Reset பண்ணவும் சொல்லிடுங்க..
ஹி.,ஹி., ஹி..

Unknown சொன்னது…

செந்திலுக்கு இன்னும் உங்க அட்ரஸ் கிடைக்கலன்னு கன்பர்ம் பண்ணிட்டிங்க.

அது சரி உங்க ஆபீஸ்ல வேகன்ட் இருக்கா?

Unknown சொன்னது…

என்னய்யா அது...

சரவணகுமரன் சொன்னது…

என்ன கம்பெனிய்யா அது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்க பழைய Friends-கிட்ட சொல்லி., ஏதாவது தில்லுமுல்லு பண்ணி., என் அக்கவுண்ட்க்கு FV Cash கொஞ்சம் அதிகப்படுத்த சொல்லுங்க..//

கொஞ்சம் செலவாகும் பரவா இல்லியா?

//அப்படியே அனு அக்கவுண்டை Reset பண்ணவும் சொல்லிடுங்க..ஹி.,ஹி., ஹி..// //
எங்க தலைவிக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்

//செந்திலுக்கு இன்னும் உங்க அட்ரஸ் கிடைக்கலன்னு கன்பர்ம் பண்ணிட்டிங்க. அது சரி உங்க ஆபீஸ்ல வேகன்ட் இருக்கா?//

செந்தில் அண்ணன் வீட்டுக்கு வந்து அட்ரெஸ் வாங்க மாட்டேங்குறார். அந்த ப்ராஜெக்ட் இப்ப வேற கம்பனிக்கு போயிடுச்சு...

//என்னய்யா அது...//
FarmVille பிரதர்..

//என்ன கம்பெனிய்யா அது?//
கம்பனி பெயர் வெளில சொல்ல முடியாது. மெயில் அனுப்புறேன்

Jey சொன்னது…

ரமேஷ், தகவலுக்கு நன்றி. விளையடி பார்க்கிறேன். இதில் என்ன சாப்டுவேர் உசெ பன்னீஙன்னு சொல்லமுடியுமா?.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி ஜெய் நாங்கள் Support மட்டும்தான். Facebook account வழியாக விளையாடுங்கள்.

Jey சொன்னது…

can i have your mail id, i want to discuss with you regarding PC/Mobile Games development

அருண் பிரசாத் சொன்னது…

@ரமேஷ்
நல்ல பதிவு. நீங்க பரவாயில்ல SUPPORT TEAM என்பதால் விளையாடுகிறீர்கள் நாங்க எங்க COMPANY ல வேற வேலை இருந்தாலும் இததான் விளையாடுவோம்

அனு சொன்னது…

//நான் Farmville-Support டீமில் தான் வேலை செய்தேன்.//

ஆஹா.. இந்த விஷயம் எனக்குத் தெரியாம போச்சே.. தெரிஞ்சிருந்தா, நான் உங்க influence-அ use பண்ணி பெரிய ஆளாகி இருப்பேனே..

ரொம்ப வேணாம்.. என்னோட லெவல்-அ 68-ன்னு update பண்ணிடுங்க.. அப்புறம் கஷ்டப்பட்டு ரெண்டு லெவல் விளையாடிக்கறேன்..

//எங்க நண்பர்கள் சிலர் ரெண்டு அக்கௌன்ட் வச்சு ஒரு அக்கௌன்ட்ல இருந்து இன்னொரு அக்கௌன்ட்க்கு கிப்ட் அனுப்புவாங்க. //

ஹிஹி... ரெண்டு அக்கௌன்ட் தானா?? எங்க வீட்ல விளையாடுற ஒரு ஒருத்தருக்கும் நாலஞ்சு அக்கௌன்ட் இருக்கு..

@வெங்கட்

பொறாமை பொறாமை!! ஏன் இந்த வில்லத்தனம்?? இன்னைல இருந்து உங்களுக்கு gift கட்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//can i have your mail id, i want to discuss with you regarding PC/Mobile Games development//

jay pls mail me or come to gtalk sgramesh1980@gmail.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாங்க எங்க COMPANY ல வேற வேலை இருந்தாலும் இததான் விளையாடுவோம்//

எல்லா நண்பர்களும் அப்படித்தான்

//ஆஹா.. இந்த விஷயம் எனக்குத் தெரியாம போச்சே.. தெரிஞ்சிருந்தா, நான் உங்க influence-அ use பண்ணி பெரிய ஆளாகி இருப்பேனே.. //

அதான. நானும் இப்ப அந்த சூப்பர் வேலையை விட்டுடேங்க. வெங்கட் கிரெடிட் கார்டு நம்பர்,பாஸ்வோர்ட் மட்டும் வாங்கி கொடுங்க. உங்களுக்கு FarmCash வாங்கிடலாம்.

//ஹிஹி... ரெண்டு அக்கௌன்ட் தானா?? எங்க வீட்ல விளையாடுற ஒரு ஒருத்தருக்கும் நாலஞ்சு அக்கௌன்ட் இருக்கு..//

ஹி ஹி எனக்கும்தான்

பனித்துளி சங்கர் சொன்னது…

///////திடீர்ன்னு மேனேஜர் எழுந்து "Guys one minute" அப்டின்னு சொல்லுவார். சரி ஏதோ அப்டேட் போலன்னு நீங்க நினச்சா அது ரொம்ப தப்பு. FarmVille-ல புதுசா கிப்ட் வந்திருக்கு. சீக்கிரம் எல்லோரும் எனக்கு அனுப்புங்க அப்டின்னு சொல்லுவார்////////


ரொம்ப நல்ல
மேனேஜர் !

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

நல்ல வேலையா இருக்கே, எந்த கம்பெனிங்க நானும் வந்து சேந்துகுறேன்.......

அப்படியே எனக்கும் gift அனுப்புங்க....

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மாப்பி நிலமெல்லாம் எம்புட்டுக்கு வித்தீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரொம்ப நல்ல மேனேஜர் !//
@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ எங்க வேலையே இதுதான. என்ன பண்றது.

BONIFACE கூறியது...
//அப்படியே எனக்கும் gift அனுப்புங்க....//

எனக்கு neighbour request கொடுங்க. அனுப்பிடலாம்.

@ ப்ரியமுடன் வசந்த்
மாப்பு 70 தாவது லெவல் முடிச்சப் பிறகு அவ்வளவா விளையாடுறதில்லை. நாம விளையாண்டமே அந்த டைம் ல விளையாண்டதுதான்.

Chitra சொன்னது…

Facebook Farmville - ரொம்ப கஷ்டப்பட்டு "வேலை" பாக்குறீங்க..... பாவம்ங்க நீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Facebook Farmville - ரொம்ப கஷ்டப்பட்டு "வேலை" பாக்குறீங்க..... பாவம்ங்க நீங்க....//
ஆமாங்க. அதான் அந்த வேலையை விட்டுட்டேன்

ஜெயந்தி சொன்னது…

நல்லாதான் விளையாடுறீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ஜெயந்தி

Asiya Omar சொன்னது…

என் பிள்ளைங்க விளையாடுவாங்க,நான் வேடிக்கை தான் பார்ப்பேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ asiya omar thanks

அருண் பிரசாத் சொன்னது…

@ வெங்கட், அனு, ரமேஷ்
FAMRVILLE கேம் பார் INSTALL செய்தால் 10 FV CASH கிடைக்குது. TRY செய்தீர்களா? நான் நேற்றுதான் செய்தேன், WORKOUT ஆச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமா அருண் நான் ஏற்கனவே பண்ணிட்டேன்

Kiruthigan சொன்னது…

கடும் உழைப்பாளி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது