Horoscope

வியாழன், ஜூலை 8

முற்பகல் செய்யின்


நான் காலேஜ்-இல் மூணாவது வருடம் படிக்கும்போது காலேஜ்-இல் ஸ்ட்ரைக் நடந்தது. எங்க காலேஜ் NH-7 இல் இருப்பதால் எல்லோரும் சேர்ந்தது ரோட்டில் உற்கார்ந்து பஸ் மறியல் செய்ய ஆரமித்துவிட்டோம். நம்ம நண்பர் ஒருத்தர்தான் தலைமை. யாரையும் காலேஜுக்குள்ள விடல. வர்றவனை எல்லாம் வழி மறிச்சு ரோட்டுல உக்கார வச்சிட்டான்.

அப்ப பக்கத்து ஊர்ல இருந்து ஒரு போலீஸ் ஜீப் வந்தது. ஏன்டா காலேஜ் பிரச்னைக்கு ரோட்ட மறிச்சு பப்ளிக்க டார்ச்சேர் பண்ணுவீங்களா அப்படின்னு  சொல்லிட்டு லத்திய சுழட்டி அடிக்க தலைமை தாங்கின நண்பன் அத்தனை கூட்டத்தையும் தாண்டி முத ஆளா ஓட ஆரமிச்சிட்டான். அப்ப ஏதோ ஒரு குரூப் சராமாரியா போலீஸ் ஜீப்ல கல்லை விட்டு ஏறிய போலீஸ் ஜீப் ரிவேர்ஸ் எடுத்து ஊருக்குள்ள போயிடுச்சு.

மறுபடியும் அதே நண்பன் தலைமையில் ரோட்டில் உக்கார்ந்தோம்(தில்லு ஜாஸ்திதான்). இந்த போலீஸ் போய் Police-Force அனுப்பி வச்சிருக்காங்க. ஒரு அம்பது போலீஸ் பெரிய போலீஸ் வேனோட விஜயகாந்த் படத்துல வர்ற மாதிரி ஒரு கைல லத்தியும் ஒரு கைல கல்லை தடுக்க தடுப்பும் கொண்டுட்டு வந்தது வேனை நிப்பாட்டினதும் பசங்களை அடிக்க ஆரமிச்சிட்டாங்க. எல்லோரும் தலை தெறிக்க ஓட ஆரமிச்சோம்.

அப்ப ஒரு நண்பன் டேய் போலீஸ் வர்ற வேகத்தைப் பார்த்தா சங்கு ஊதாம விடமாட்டாங்க. நிறைய படத்துல பாத்துருக்கேன். காலேஜுக்குள்ள போலீஸ் வரமாட்டாங்க. நாம காலேஜுக்குள்ள போயிடுவோம். (பயபுள்ள என்னை விட அதிகமா  தமிழ் சினிமா பாத்துருக்கும் போல. எனக்கே ஐடியா வரல. அடுத்த சினிமா புதிர்ல இத கேள்வியா போட்டுட வேண்டியதுதான்). அவனவன் மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனா இவன் போலிசுக்கு பயந்து காலேஜுக்குள்ள போக சொல்றான். இப்படி நாம டெய்லி காலேஜ் போயிருந்தா நாம எப்பவோ முன்னேறி இருக்கலாமே!!!.

சரின்னு காலேஜுக்குள்ள போயிட்டோம். நான் அவன்கிட்ட மாப்ளே இந்த இடத்த  எங்கயோ பாத்திருக்கமே அப்டின்னு சொல்ல அட பரதேசி  இதுதாண்டா நம்ம கிளாஸ் ரூம் அப்டின்னு சொன்னான்(நாங்கெல்லாம் 90 நாள் working days-க்கு 95 நாள் லீவ் எடுக்குறவங்கலாச்சே).  அங்க பிரச்சனை பயங்கரமா போயிகிட்டு இருக்கு. போலீஸ் மாட்டினவன்கள எல்லாம் தொவைச்சு எடுத்துகிட்டு இருக்காங்க. நின்னுகிட்டு இருந்த ஒரு போலீஸ் ஜீப்பை பசங்க பாலத்துல இருந்து உருட்டி கீழ தள்ளி விட்டுடாங்க. போலிசுக்கு இன்னும் கோவம் அதிகமாயிடுச்சு(பின்ன கொஞ்சுறதுக்கு அவங்க என்ன சிரிப்பு போலீஸ் மாதிரி அன்பான,அழகான, பண்பான குணமுள்ள ஆளுங்களா?)

அப்ப எங்க கேண்டீன்ல இருந்து ஒரு வேன் ஊருக்குள்ள கிளம்பிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தது. கேட்டை தாண்டி போன ஜீப்பை எங்க நண்பன் அருண் கூப்பிட்டு என்னை ஏன் விட்டுட்டு போறீங்க. நானும் வர்றேன் அப்படின்னு சொல்லி அந்த ஜீப்பை ரிவர்ஸ் வர வச்சு அதுல ஏறிட்டான். இந்த அருண்தான் பஸ்-ல கல்லைவிட்டு எரிஞ்சு எங்களுக்கு தர்ம அடி வாங்க கொடுத்தவன். மேலும் விவரங்களுக்கு இங்க கிளிக்கவும்.

வேன் காலேஜை விட்டு வெளிய வந்ததும் போலீஸ்காரங்க வேனை மறிச்சு அதில இருந்த எல்லோரையும் பின்னி எடுத்துட்டாங்க. சும்மா எங்க கூட இருந்த அருண் வம்பா அந்த வேன்ல ஏறி போய் போலீஸ்காரங்ககிட்ட தர்ம அடி வாங்கினான். ஸ்டேஷன்-ல வேற கொண்டு போய் ஊறவச்சு அடிச்சாங்க. அவனால நாங்க ஏற்கனவே பப்ளிக்ல அடி வாங்கினோம். இப்ப அவன் போலீஸ் கிட்ட...

முற்பகல் செய்யின்............

30 கருத்துகள்:

க ரா சொன்னது…

அந்த வேன்ல நீதான நண்பா போன :-).

சீமான்கனி சொன்னது…

ஹாஹாஹாஹாஹா... நீங்க அவ்ளோ நல்லவங்களா தலைவா...

Jey சொன்னது…

ரைட்ட்டு :)

Unknown சொன்னது…

//அந்த வேன்ல நீதான நண்பா போன ://
யோவ் அப்ப நீதான் அடிவாங்குனதா? -

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ், செந்தில் அண்ணா ரொம்ப நல்லவன பாத்து கேக்கிற கேள்வியா இது?

@ Jey நன்றி

@ நன்றி seemangani ஆமா தல

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்..,
கட் அடிச்சிட்டு சினிமா போறது..,
காலேஜ் முன்னால Strike பண்றது..,
போலீஸ் ஜீப் மேல கல் எறியறது..
Station-ல போய் உதை வாங்கறது..

வெரி Bad-ங்க நீங்க..

ஆமா உங்களுக்கு எல்லாம்
Internal Marks இல்லையா..???!!

கொஞ்சம் கூட பயமே இல்லாம
Arts College பசங்க கணக்கா ரவுசு
விட்டிருக்கீங்க..?!

dheva சொன்னது…

//சரின்னு காலேஜுக்குள்ள போயிட்டோம். நான் அவன்கிட்ட மாப்ளே இந்த இடத்த எங்கயோ பாத்திருக்கமே அப்டின்னு சொல்ல அட பரதேசி இதுதாண்டா நம்ம கிளாஸ் ரூம் அப்டின்னு சொன்னான்//


தம்பி...ஒத்துக்குறேன்..... நீ அக்மார்க் கடைசி பெஞ்சுன்னு ஒத்துக்குறேன்.....! போலிசுககிட்ட ரகள பண்ணி பண்ணிதான்....சிரிப்பு போலிஸ் ஆகிட்டியோ.....


என்னா வில்லத்தனம்...?

மங்குனி அமைச்சர் சொன்னது…

சேம் பிளட்

அருண் பிரசாத் சொன்னது…

சூப்பர், இந்த மாதிரி வீரசாகசங்கள் செய்யதானே காலேஜ் இருக்குது. என் இனம் அய்யா நீங்களும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கட் அடிச்சிட்டு சினிமா போறது..,காலேஜ் முன்னால Strike பண்றது..,போலீஸ் ஜீப் மேல கல் எறியறது..Station-ல போய் உதை வாங்கறது..
வெரி Bad-ங்க நீங்க..//

வெங்கட் இதெல்லாம் பண்ணினாத்தான் காலேஜ் பையன். இதெல்லாம் காலேஜ் படிச்சவங்களுக்குதான் தெரியும். உங்களை மாதிரி டுடோரியல் காலேஜ் போனவங்களுக்கு எப்படி தெரியும்...

//தம்பி...ஒத்துக்குறேன்..... நீ அக்மார்க் கடைசி பெஞ்சுன்னு ஒத்துக்குறேன்.....! போலிசுககிட்ட ரகள பண்ணி பண்ணிதான்....சிரிப்பு போலிஸ் ஆகிட்டியோ.....//

ஆமா தேவா அண்ணா. எங்க போனாலும் நமக்கும் போலீசுக்கும் ரொம்ப பாசம். எங்க போனாலும் குறிவச்சு என்னையே தாக்குறாங்க.

@ மங்குனி அமைச்சர் நீங்களுமா...

//சூப்பர், இந்த மாதிரி வீரசாகசங்கள் செய்யதானே காலேஜ் இருக்குது. என் இனம் அய்யா நீங்களும்//

ஆமா. நாமெல்லாம் ஒரே கட்சி. கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. ஒருத்தர் கட்சின்னு சொல்லிட்டு ரெண்டு பேர் உக்காந்திருக்காங்க. அவங்களுக்கும் கேக்கட்டும்.

அருண் பிரசாத் சொன்னது…

//ஒருத்தர் கட்சின்னு சொல்லிட்டு ரெண்டு பேர் உக்காந்திருக்காங்க//

ரெண்டு பேரா? யார் அந்த இன்னொருத்தர்?

வெங்கட் தான் எப்பவும் நம்ம கட்சியாச்சே. இது தெரியாம, அந்த புது பயபுள்ள வெங்கடை நம்பி VAS ல இருக்குது

பிரேமா மகள் சொன்னது…

சரி.. நீங்க ரவுடிதான் ஒத்துக்கறோம்..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

போனதடவை எஸ்கேப்பு இந்தவாட்டி அருணுக்கு அடியா?... நீங்க இன்னும் நிறைய கத வச்சுருப்பீங்க போலயே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஏம்பா.. காலேஸ் கேண்டீன்ல இருந்த இட்லிய..ஒரு பாதுகாப்புக்கு , கையில வெச்சிருக்கலாமே..

இதுக்குத்தாம் மூளக்கரானுககூட சேரனுமுனு சொல்ல்வாங்க..ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வெங்கட் தான் எப்பவும் நம்ம கட்சியாச்சே. இது தெரியாம, அந்த புது பயபுள்ள வெங்கடை நம்பி VAS ல இருக்குது//

ஹஹா

@ நன்றி பிரேமா மகள்

@ ப்ரியமுடன் வசந்த் நிறைய படமே எடுக்குற அளவுக்கு கதை இருக்கு

@ பட்டாபட்டி.. கேண்டீன் லீவ் பட்டா

Swengnr சொன்னது…

Super..

செல்வா சொன்னது…

///நான் காலேஜ்-இல் மூணாவது வருடம் படிக்கும்போது ///
எந்த வகுப்புல மூணு வருஷம் படிச்சிங்க ..??

///எங்க காலேஜ் NH-7 இல் இருப்பதால் ///
நாடு ரோடுலையா காலேஜ் கட்டிருந்தாங்க...??

///நாங்கெல்லாம் 90 நாள் working days-க்கு 95 நாள் லீவ் எடுக்குறவங்கலாச்சே).///

அப்படின்னா 90 நாள் லீவ் விட்டா என்னை பண்ணுவீங்க ...??

///பின்ன கொஞ்சுறதுக்கு அவங்க என்ன சிரிப்பு போலீஸ் மாதிரி அன்பான,அழகான, பண்பான குணமுள்ள ஆளுங்களா?///

/// அழகான சிரிப்பு போலீசா...?? பொய் சொல்லாதீங்க ...!!

///ஸ்டேஷன்-ல வேற கொண்டு போய் ஊறவச்சு அடிச்சாங்க.///

எதுல ஊற வச்சாங்க ...??

(என்னை மாதிரியே இருங்க ...!!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி Software Engineer
//எதுல ஊற வச்சாங்க ...??//
கோமாளி, அது பெரிய கதைங்க. அப்புறம் சொல்றேன்

ஸ்ரீராம். சொன்னது…

:))

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//வெங்கட் இதெல்லாம் பண்ணினாத்தான் காலேஜ் பையன். இதெல்லாம் காலேஜ் படிச்சவங்களுக்குதான் தெரியும். உங்களை மாதிரி டுடோரியல் காலேஜ் போனவங்களுக்கு எப்படி தெரியும்...//

யாருப்பா அது தலைவர வந்த இடத்துல கலாய்க்கறது...... இதுக்கு பேருதன் போஸ்ட் போட்டு வர வச்சி அடிக்கறத??

கருடன் சொன்னது…

@அருண்

//வெங்கட் தான் எப்பவும் நம்ம கட்சியாச்சே. இது தெரியாம, அந்த புது பயபுள்ள வெங்கடை நம்பி VAS ல இருக்குது//

நோஓஓஓ.... நீங்க என்ன சொன்னாலும் நன் கட்சி மாற மாட்டேன்... சில்வண்டு சிக்கும் ஆனா சிறுத்தை சிக்காது.... தலைவர் வாழ்க.... VAS வாழ்க...

கருடன் சொன்னது…

@ப.செல்வக்குமார் கூறியது...

///எங்க காலேஜ் NH-7 இல் இருப்பதால் ///

//நாடு ரோடுலையா காலேஜ் கட்டிருந்தாங்க...??//

ரிபிட்ட்ட்டட்ட்ட்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

தலைப்பையும் சுட சுட சுட்டுட்டீங்களா?..

கத , கட்டுரை, அடுத்து யாராவது கவிதை எழுதிட்டா நல்லது..:)

நல்லாருக்கு அனுபவம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@சாந்தி

அடப் பாவிகளா. நான் பதிவு போட்டது ஜூன்-8 . உங்க பதிவு ஜூன்-10 சுட்டது நீங்களா நானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@Terror Pandiyan - (VAS) கமெண்ட் சொந்தமா போடணும். ஓகே?

@ ஸ்ரீராம். நன்றி

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//அப்ப ஏதோ ஒரு குரூப் சராமாரியா போலீஸ் ஜீப்ல கல்லை விட்டு ஏறிய //

அந்த குரூப் லீடர் நீங்கதான??

//கமெண்ட் சொந்தமா போடணும். ஓகே?//

என்ன பண்றது ரமேஷ் ஸ்கூல் இருந்தே காபி அடிச்சி பழகி போச்சி... ஹி ஹி ஹி

சௌந்தர் சொன்னது…

செந்தில் அண்ணன் உங்களை பற்றி அப்போது சொன்னார் இவன் ரொம்ப நல்லவன். காலேஜுக்கு எல்லாம் போக மாட்டான்.

முத்து சொன்னது…

அய்யோ அய்யோ !!!!

வீர சாகசம் நிறைய பண்ணி இருக்க

இப்போ தெரியுது நீ ஏன் சிப்பு போலிசுன்னு

அடுத்து பரோட்டா கடையில் குனிய வைச்சு கும்முனுதை சொல்லவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி சௌந்தர்

//அடுத்து பரோட்டா கடையில் குனிய வைச்சு கும்முனுதை சொல்லவும்//

கண்டிப்பா முத்து நம்ம கதைய சொல்றேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்ன பண்றது ரமேஷ் ஸ்கூல் இருந்தே காபி அடிச்சி பழகி போச்சி... ஹி ஹி ஹி//

i know about ur dubakkoor katchi terror

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது