Horoscope

செவ்வாய், ஜூலை 13

மூர்த்தி தியேட்டர்

ஒவ்வொருத்தருக்கும் அவங்க லைப்ல ஏதாச்சும் ஒரு தியேட்டர் மறக்க முடியாம இருக்கும். எனக்கும் எங்க ஊர்ல உள்ள மூர்த்தி தியேட்டர் வாழ்க்கைல மறக்க முடியாது. நான் படிச்சது  வளர்ந்தது எல்லாம் கிராமத்துலதான். ஏதாச்சும் லீவ் அப்டின்னா ஊர்ல இருக்குற சித்தி வீட்டுக்கு அம்மா கூட்டிட்டு போவாங்க.

எனக்கு விவரம் தெரிஞ்சு மூர்த்தி தியேட்டர் போய் பார்த்த படம் "அம்மன் கோவில் கிழக்காலே". அப்புறம் கொஞ்சம் விவரமான பிறகு லீவ்க்கு ஊருக்கு போகும்போது நிறைய படங்கள் வீட்டுக்கு தெரியாம நானும் என் தம்பி கார்த்தியும்(சித்தி பையன்) பாத்திருக்கோம்.

எல்லோரும் வீட்டுக்குள்ள தூங்கிடுவாங்க. நானும் என் தம்பி கார்த்தியும் வரண்டாவுலதான் தூங்குவோம். எங்க ரெண்டு பேருக்கும் பெரிய நட்பையும் பாசத்தையும் உண்டு பண்ணினது இந்த மூர்த்தி தியேட்டர்தான்.

கதவை வெளில பூட்டி சாவிய நாங்கதான் வச்சிருப்போம். மழை  ஏதாச்சும் பெய்ஞ்சா உள்ள ஓடி வர்றதுக்காக. எல்லோரும் தூங்கினதுக்கு அப்புறம் நானும் என் தம்பியும் செகண்ட் ஷோ க்கு மூர்த்தி தியேட்டர் போயிடுவோம். அப்ப ரெண்டு ரூபாதான் டிக்கெட்.

பதினோரு மணிக்குதான் படம் ஆரமிக்கும். செகண்ட் ரிலீஸ் படம்தான் அங்க ஓடும். ரெண்டு நாளைக்கு ஒரு படம் மாத்திடுவாங்க. அதனால காலாண்டு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வு லீவ்ல அங்க இருக்கும்போது ரெண்டு நாளைக்கு ஒருதடவ படத்துக்கு போயிடுவோம்.

இதுவரைக்கும் ஒருதடவ கூட வீட்ல மாட்டினதில்ல. என் தம்பி கார்த்தி என்னை விட ஆறு மாதம்தான் சின்னவன். நல்ல நண்பன். அம்மா அப்பா துணை இல்லாம நானும் என் தம்பியும் தனியா போய் பார்த்த முதல் படம் "தர்ம சீலன்". நான் சினிமா புதிர்ல போடுற நிறைய படங்கள் இந்த மூர்த்தி தியேட்டர்ல பார்த்ததுதான்.

9 standard-க்கு அப்புறம் நான் அம்மா அப்பா கூட எந்த படத்துக்கும் போனதில்லை. பேமிலியோட படம் பார்த்ததுன்னா இந்த மூர்த்தி தியேட்டர்லதான். அதனால இது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா என் வருமானத்துக்கேற்ற தரமான தியேட்டர் மூர்த்தி தியேட்டர். இப்ப அங்க டிக்கெட் 15 ரூபாய் அப்டின்னு நினைக்கிறேன்.

வெள்ளி சனி ஞாயிறு மாலை காட்சியில் எந்த படம் போட்டாலும் House full. எங்க ஊர்ல தீப்பட்டி பெட்டி ஓட்டுற தொழில் பேமஸ்.இந்த மூணு நாளும் அந்த வேலை பாக்குறவுங்க வார சம்பளம் வாங்கிட்டு அங்க படம் பாக்க வந்துடுவாங்க. தியேட்டர்ல படம் பாத்துகிட்டே தீப்பெட்டி பெட்டி ஒட்டிடுவாங்க.

நான் என் தம்பி கார்த்தியோட கடைசியா பார்த்த படம் "திருப்பாச்சி". அதுவும் இதே மூர்த்தி தியேட்டர்லதான். மூர்த்தி தியேட்டர்ல தொடங்கின எங்க பாசம் அதே மூர்த்தி தியேட்டர்ல முடிஞ்சிடுச்சு.

இந்த பதிவை படிக்கிறதுக்கு அவன் இல்லை. ஒரு சின்ன விபத்தில் எமன் அவனை அழைத்துகொண்டான். அடுத்த மாதம் அவனோட நாலாவது ஆண்டு நினைவஞ்சலி. இந்த பதிவு அவனுக்கு சமர்ப்பணம்.

21 கருத்துகள்:

அனு சொன்னது…

சிரிப்புப் போலிஸ் சினிமா பொலிஸ் ஆகி சீரியஸ் போலிஸ் ஆகிட்டீங்க.. sorry abt ur brother :(

அந்த தியேட்டர் தான் இந்த டார்ச்சருக்கு (சினிமாப் புதிர்) எல்லாம் காரணமா/ இப்பவே அதோட ஓனர் மேல public nuisance வழக்கு போடுறேன்..

Jey சொன்னது…

கர்த்திக்கு என் அஞ்சலிகள், ரமேஷ்.

பனித்துளி சங்கர் சொன்னது…

தொடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாசித்தேன் இறுதியில் உள்ளம் கனத்துபோகிவிட்டது . பகிர்வுக்கு நன்றி நண்பரே

பிரேமா மகள் சொன்னது…

ஆழந்த அனுதாபங்கள்..

ஜீவன்பென்னி சொன்னது…

ப்ச்ச்.... காலம்தான் நிறைய விசயங்களுக்கு மருந்தா இருக்கு, நானும் பங்குகொள்கிறேன்.

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//ஒரு சின்ன விபத்தில் எமன் அவனை அழைத்துகொண்டான். அடுத்த மாதம் அவனோட நாலாவது ஆண்டு நினைவஞ்சலி. இந்த பதிவு அவனுக்கு சமர்ப்பணம்.//

என் அழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன் ரமேஷ்..இளம் வயதில் இறைவனடி சேர்ந்த நமது சகோதரன் ஆத்மா அமைதியாக உறங்க இறைவனை பிராத்திக்கிறேன்.

note : Pls. del my previous comment.

Unknown சொன்னது…

கலங்க வச்சிருச்சி கடைசியில.

தீப்பெட்டி ஒட்டுறது ஃபேமஸான தொழில்னா எந்த ஊரு உங்க ஊரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அந்த தியேட்டர் தான் இந்த டார்ச்சருக்கு (சினிமாப் புதிர்) எல்லாம் காரணமா/ இப்பவே அதோட ஓனர் மேல public nuisance வழக்கு போடுறேன்..//

இப்ப அந்த owner தியேட்டர இன்னொருத்தருக்கு வித்துட்டு எங்கயோ போயிட்டார், அவர எங்க போய் தேடுவீங்க அனு. VAS கூட்டம் வெட்டியாத்தான் இருக்கு. வேணும்னா தேட சொல்லலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks Jey

@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் நண்பரே. நானும் ஜாலியாகத்தான் எழுத ஆரமித்தேன். ஆனா இந்த தியேட்டரை பத்தி எழுதும்போது தம்பியின் நியாபகம் தானாக வந்து என் எழுத்தில் உக்கார்ந்து விட்டது..

@ பிரேமா மகள் நன்றி

@ ஜீவன்பென்னி உங்கள் பங்குக்கும் அன்புக்கும் நன்றி தோழா.

@ TERROR-PANDIYAN(VAS) நன்றி

@ முகிலன் வருகைக்கு நன்றி. எங்க ஊர் கோவில்பட்டி.

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

கார்த்திக்கு அஞ்ச‌லிக‌ள்

ம‌றக்க‌ முடியுமா மூர்த்தி தியேட்ட‌ரை??

சீமான்கனி சொன்னது…

தம்பி கார்த்தியின் ஆத்மாவிற்கு அமைதி தரட்டும் ஆண்டவன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பச்...இதுதான் வாழ்க்கை..

இதற்குள் எவ்வளவு போராட்டங்கள்..?

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//ரெண்டு நாளைக்கு ஒருதடவ படத்துக்கு போயிடுவோம்.//

காசு எங்க இருந்து ஆட்டை போட்டிங்க சொலவே இல்லையே?

//இதுவரைக்கும் ஒருதடவ கூட வீட்ல மாட்டினதில்ல.//

உங்க விட்டு விலாசம் கிடைக்குமா?

வெங்கட் சொன்னது…

@ Ramesh.,
unga brotherku en anuthabangal. ending romba feel panna vechitteenga

@ Anu.,
antha theater owner mela neenga case podunga. selavula 50:50 pannikkalaan.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தங்கள் சகோதரனுக்கு அஞ்சலிகள்


//அந்த தியேட்டர் தான் இந்த டார்ச்சருக்கு (சினிமாப் புதிர்) எல்லாம் காரணமா/ இப்பவே அதோட ஓனர் மேல public nuisance வழக்கு போடுறேன்..//

:)

அருண் பிரசாத் சொன்னது…

ஏன்? நல்லாதான போய்டு இருந்தது. திடீர்னு Feel பண்ண வெச்சிட்டீங்க.

தம்பி கார்த்திக்கு என் அஞ்சலிகள்

நானும் பள்ளி விடுமுறையில் இப்படி தீப்பெட்டி பட்டிகளை ஒட்டி இருக்கேன், ஆனா சினிமாலாம் போக முடியும்னு Try பண்ணது இல்லை. எல்லாம் Waste ஆ போச்சே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி க‌ரிச‌ல்கார‌ன் . என் வாழ்க்கைல அந்த தியேட்டர மறக்க மாட்டேன்.

//இதற்குள் எவ்வளவு போராட்டங்கள்..?//

ஆமா பட்டா இதுல எத்தனை சண்டைகள் சச்சரவுகள். நிம்மதியான வாழ்க்கை யாருக்கும் இல்லை.

@ நன்றி seemangani நண்பரே

//காசு எங்க இருந்து ஆட்டை போட்டிங்க சொலவே இல்லையே?//

டெரர் ரெண்டு ரூபாதான டிக்கெட். பாக்கெட் மணிதான்...

//உங்க விட்டு விலாசம் கிடைக்குமா?//
டெரர் VAS சும்மாதான இருக்கு விசாரிங்க..

@ நன்றி வெங்கட். என்ன கேஸ் போட்டாலும் சினிமா புதிர்கள் தொடரும்..

@ நன்றி ப்ரியமுடன் வசந்த் மாப்பு..

@ வாங்க அருண்.

//நானும் பள்ளி விடுமுறையில் இப்படி தீப்பெட்டி பட்டிகளை ஒட்டி இருக்கேன், ஆனா சினிமாலாம் போக முடியும்னு Try பண்ணது இல்லை. எல்லாம் Waste ஆ போச்சே//

இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது....

செல்வா சொன்னது…

//ஏன்னா என் வருமானத்துக்கேற்ற தரமான தியேட்டர் மூர்த்தி தியேட்டர்.//
ரீமேக் சூப்பர் ...

உங்கள் தம்பிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

எங்களுக்கு "சரசுவதி டாக்கீசு"

anuthinan சொன்னது…

அண்ணே நான் உங்கள் பரம ரசிகன்!!!

இன்றைய பதிவு எனது மனதை தொட்டு விட்டது!!! உங்கள் தம்பிக்கு எனது அஞ்சலிகள்!!!!

ஆனா, நீங்க சீரியஸ் போலிஸ் மட்டும் ஆகாதிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ப.செல்வக்குமார், தெம்மாங்குப் பாட்டு....!! மிக்க நன்றி

@ Anuthinan S உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது