Horoscope

ஞாயிறு, செப்டம்பர் 12

இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!



ஸ்கூல்,காலேஜ் படிக்கும்போது இப்ப உள்ள பசங்க மாதிரி பாக்கெட் மணி நூறோ இருநூறோ கிடைக்காது. ரொம்ப கஷ்டம். ஸ்கூல் படிக்கும்போது பத்து பைசால ஆரமிச்சு ஒரு ரூபாய்ல முடிஞ்சது. காலேஜ் ல 5Rs தான்.

ஸ்கூல்ல ஒரு பிரச்சனையும் இல்லை. ஸ்கூல் விட்டா வீடு. வீடு விட்டா ஸ்கூல். அவ்ளோதான். ஆனா காலேஜ் அப்படி இல்லியே. நிறைய வேலைகள் இருக்கே. காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமா போகணும். நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை பத்திரமா அவங்க வீட்டுல கொண்டு போய் விடணும். அவங்களுக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும்.

இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க போறது. எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா  சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. பின்ன என்ன பண்ணலாம். வீட்டுல வேற மாதிரி வாங்க ஆரமிச்சோம்.

-- Special class fee
-- Tuition fees (Tuition படிக்கிறமோ இல்லியோ பீஸ் கண்டிப்பா வாங்கிடுவோம்)
-- Annual day function fees
-- Notebook, dress fees
-- டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.

எனக்கு தெரிஞ்சு மேல உள்ள காரணம் சொல்லி எல்லோரும் அப்பா அம்மாவை ஏமாத்திருப்போம்ன்னு நினைக்கிறேன். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமா பொய் சொல்லி காசு வாங்க்கிட்டு இருந்தோம். என்னோட நண்பன் ஒருத்தன். அவங்க வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேரும் படிக்காதவங்க. அவன் எங்கள விட ஒரு படி மேல போய் அவங்க வீட்டுல ஒரு பொய் சொல்லி பீஸ் வாங்கிட்டு வந்தான் பாருங்க. எனக்கு இன்னைக்கு வரைக்கும் ஜீரணிக்க முடியலை.

ஆமாங்க. அவன் அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்தது Time Table Fees. அதுக்கு ஆயிரம் ரூபாய். அடுத்த வகுப்பு என்னன்னு சொல்ற Time Table-க்கு பீஸ் வாங்க்கிட்டு வந்தது உலகத்துலையே அவன் ஒருத்தனாத்தான் இருப்பான்னு நினைக்கிறேன். இந்த மாதிரி நீங்க யாராவது வித்தியாசமா வீட்டை ஏமாத்திருக்கீங்களா?

30 கருத்துகள்:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இந்த மாதிரி நீங்க யாராவது வித்தியாசமா வீட்டை ஏமாத்திருக்கீங்களா?//

உங்க அம்மா அப்பாவை ஏமாற்றியதாக, உங்க மேல கேஸ் போடலாமுனு இருக்கேன்.

தனியா செட்டில் பண்ணிக்கலாமுனா , என்னை கவனிச்சுக்குங்க..ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டா சார் பட்டா சார் வீட்டுல சொல்லிடாதீங்க பட்டா சார்...

என்னது நானு யாரா? சொன்னது…

என்ன ஒரு தில்லாலங்கடி வேலை இது!!! Time Table Fees, அப்புறம், Desk Fees, Bench Fees, Black Board Fees இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களா இப்போ பசங்க.

ரமேஷ்! Parents-க்கு பசங்களோட ரகசியத்தை சொன்னதுக்கு நன்றிப்பா

அப்புறம், நான் ரொம்ப நல்ல பையன்பா! இந்த மாதிரி எல்லாம் ஏமாத்தல

வெங்கட் சொன்னது…

ஏம்பா இம்புட்டு நல்லவனா நீ..?!!

வருங்காலத்தில உங்க பசங்க
உங்ககிட்ட என்ன என்ன Fees
பிடுங்க போறாங்களோ..?!

நினைக்கும் போதே ஜாலியா இருக்கு..!!

Jey சொன்னது…

டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....

Jey சொன்னது…

பட்டாபட்டி.. கூறியது..//

வக்கனையா பேசு,...இந்தியா வந்துட்டு...உடம்பு சரியில்லாத என்னை வந்து பாத்தியா வெண்ணை...., உனக்கு இருக்குடி..ஒரு நாள் சங்கு......

கருடன் சொன்னது…

//இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!//

இப்படி பீஸ் புடுங்கினா கரண்ட் போகுமா? போகாதா?

கருடன் சொன்னது…

//நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை //

ஜில்லு பொண்ணா?? என்யா இப்படி தப்பு தப்பா எழுதற?

கருடன் சொன்னது…

//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் //

நீ அப்பா சட்டையையே ஆட்டை போட்ட பயதான...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

என்ன ஒரு தில்லாலங்கடி வேலை இது!!! Time Table Fees, அப்புறம், Desk Fees, Bench Fees, Black Board Fees இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களா இப்போ பசங்க.

ரமேஷ்! Parents-க்கு பசங்களோட ரகசியத்தை சொன்னதுக்கு நன்றிப்பா

அப்புறம், நான் ரொம்ப நல்ல பையன்பா! இந்த மாதிரி எல்லாம் ஏமாத்தல//


நான் நம்பிட்டேன் பங்காளி..


// வெங்கட் கூறியது...

ஏம்பா இம்புட்டு நல்லவனா நீ..?!!

வருங்காலத்தில உங்க பசங்க
உங்ககிட்ட என்ன என்ன Fees
பிடுங்க போறாங்களோ..?!

நினைக்கும் போதே ஜாலியா இருக்கு..!!///


நானெல்லாம் கேக்காமலையே கொடுப்பேன் என் குழந்தைகளுக்கு..


//Jey கூறியது...

டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....///


யோவ் இது உண்மை...


//Jey கூறியது...பட்டாபட்டி.. கூறியது..//

வக்கனையா பேசு,...இந்தியா வந்துட்டு...உடம்பு சரியில்லாத என்னை வந்து பாத்தியா வெண்ணை...., உனக்கு இருக்குடி..ஒரு நாள் சங்கு.....//


நான் இதை ஆமோதிக்கிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!//

இப்படி பீஸ் புடுங்கினா கரண்ட் போகுமா? போகாதா?/


பெரிய இரும்பு கம்பிய சுவிட்ச் ஆன் பண்ணிட்டு சுவிட்ச் பாக்ஸ் ல விட்டு பாருங்க...


// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை //

ஜில்லு பொண்ணா?? என்யா இப்படி தப்பு தப்பா எழுதற?///


முதல்ல punctuation class போயிட்டு வாங்க. எங்க , எங்க . வச்சு வாசிக்கணும்னு தெரியும்..


//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் //

நீ அப்பா சட்டையையே ஆட்டை போட்ட பயதான...//


அதுக்கு பயந்துதான் என்னை ஹாஸ்டல்ல விட்டுடாங்க...

கருடன் சொன்னது…

//முதல்ல punctuation class போயிட்டு வாங்க. எங்க , எங்க . வச்சு வாசிக்கணும்னு தெரியும்..//

புலவரே!!! யாரை பார்த்து என்ன வார்த்தை கூறினிர்??

நம்ம ஜில்தண்ணி செய்கின்ற மாதிரி பொண்ணுங்களை ...... இப்படி நீர் கூறி இருக்க வேண்டும். தவறை ஒப்பு கொள்கிறிறா இல்லை என் குழுவை அழைத்து வந்து கும்மி அடிக்கவா?

புதியஜீவன் சொன்னது…

//டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.//

உங்கள் நடிப்பை பார்க்க வருபவருக்கு கொடுக்கவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மீட்டிங் பீஸ் கேள்விப்பட்டிருக்கீகளா டேமேஜர்? அதையும் நாங்க வாங்கியிருக்கோம் ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//Jey கூறியது...
டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....//

என்ன ஜெய்யி நீ ஏதாவது கீரிப்புள்ள பீசு வாங்கிட்டியா?

Unknown சொன்னது…

நான் காலேஜ் படிக்கும் போது சில பிஏ பிகாம் மாணவர்கள் படிக்கத்தெரியாத அவர்களின் பெற்றோர்களிடம் - லேப் ஃபீஸ், சோதனைச் சாலை ஃபீஸ், எக்ஸாம் ஃபீஸ், தேர்வுக்கட்டணம் இப்பிடியெல்லாம் வாங்கி வருவார்கள்..

சீமான்கனி சொன்னது…

பெத்தவுகள இப்படிலாமா ஏமாத்துறது...சாமி கண்ண குத்திரும்னு சொல்லுவாங்களே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நம்ம ஜில்தண்ணி செய்கின்ற மாதிரி பொண்ணுங்களை ...... இப்படி நீர் கூறி இருக்க வேண்டும். தவறை ஒப்பு கொள்கிறிறா இல்லை என் குழுவை அழைத்து வந்து கும்மி அடிக்கவா?//

நீங்க மறுபடியும் தமிழ் கிளாசுக்கு போயிட்டு வாங்கப்பு...

// Murali.R கூறியது...

//டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.//

உங்கள் நடிப்பை பார்க்க வருபவருக்கு கொடுக்கவா?//

பின்ன எவன் வருவான்?


//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

மீட்டிங் பீஸ் கேள்விப்பட்டிருக்கீகளா டேமேஜர்? அதையும் நாங்க வாங்கியிருக்கோம் ஆமா!//

இது தெரியாம போச்சே...


//முகிலன் கூறியது...

நான் காலேஜ் படிக்கும் போது சில பிஏ பிகாம் மாணவர்கள் படிக்கத்தெரியாத அவர்களின் பெற்றோர்களிடம் - லேப் ஃபீஸ், சோதனைச் சாலை ஃபீஸ், எக்ஸாம் ஃபீஸ், தேர்வுக்கட்டணம் இப்பிடியெல்லாம் வாங்கி வருவார்கள்..//


நான் நிறைய மிஸ் பண்ணிட்டனோ. அவ்வவ்.


/ சீமான்கனி கூறியது...

பெத்தவுகள இப்படிலாமா ஏமாத்துறது...சாமி கண்ண குத்திரும்னு சொல்லுவாங்களே...//


வந்துட்டார்யா நேர்மையானவரு...

velji சொன்னது…

இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

நச்சென்று ஒரு கவிதை!

velji சொன்னது…

ஒரு அக்ரி கல்லூரி மாணவன் மாடே வாங்கிட்டான்!

அவன் புடுங்கினது பீஸ் இல்ல! போஸ்ட்!

Umapathy சொன்னது…

இத மாதிரி நம்ம கைவசம் நெறைய இருக்கு, இங்க போட்டு எவனாவது படிச்சி ஊட்ல போட்டு கொடுத்துட்டா கத நாறிடும்,

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. பின்ன என்ன பண்ணலாம்.//

ரமேஷ் கரெக்ட் அ சொன்னனான் terror
ஆனால் இன்னொரு உண்மையை சொல்லுறேன் கேளு.அவன் அப்பா packet -ல கை வைக்கமாட்டன் அடுத்தவங்க packet ல கைவைப்பான்.(போலீஸ் ஆல் பாதிக்க படோர் சங்கம்)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....
ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு//

ஹ......... ஹா ..........அசிங்க பட்டான் போலீஸ்காரன்

மங்குனி அமைச்சர் சொன்னது…

என்னா போலீசு , லைப்ரேரி பீஸ் , பிராக்க்டிகள் பீஸ் , ஸ்போர்ட்ஸ் பீஸ் இதையெல்லாம் விட்டியே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// velji கூறியது...

இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

நச்சென்று ஒரு கவிதை!//


என்னது இது கவிதையா? அவ்வ்வ்வவ்வ்வ்..


// உமாபதி கூறியது...

இத மாதிரி நம்ம கைவசம் நெறைய இருக்கு, இங்க போட்டு எவனாவது படிச்சி ஊட்ல போட்டு கொடுத்துட்டா கத நாறிடும்,//

நீங்களும் அப்படித்தானா?


/ரமேஷ் கரெக்ட் அ சொன்னனான் terror
ஆனால் இன்னொரு உண்மையை சொல்லுறேன் கேளு.அவன் அப்பா packet -ல கை வைக்கமாட்டன் அடுத்தவங்க packet ல கைவைப்பான்.(போலீஸ் ஆல் பாதிக்க படோர் சங்கம்)//

ஆமா அள்ளி கொடுத்துட்டாரு இவரு...


//மங்குனி அமைசர் கூறியது...

என்னா போலீசு , லைப்ரேரி பீஸ் , பிராக்க்டிகள் பீஸ் , ஸ்போர்ட்ஸ் பீஸ் இதையெல்லாம் விட்டியே ?//


நான் ரொம்ப நேர்மையான பையன். அதனால இதெல்லாம் எனக்கு தெரியாது...

செல்வா சொன்னது…

//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. //

அப்பா சட்டைல பணம் வெக்கிறதுக்கும் ஒரு நம்பிக்கை வேணும் ..!! ஹி ஹி ..!!

செல்வா சொன்னது…

//ஆமாங்க. அவன் அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்ததுTime Table Fees. ///

ஐயோ சாமி .. இப்ப அவரு என்ன பண்ணுறாரு ..!!??

செல்வா சொன்னது…

// Jey கூறியது...
டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....

///

பின்னூட்டத்துல பதிவு எழுதறவரு வந்திட்டாருங்கோ ..!!

APN.PRABHU சொன்னது…

sms fees, omr fees , cdf fees, pou fees... இப்படி நிறைய பீஸ் இருக்கு அதுக்கெல்லாம் அர்த்தம் கிடையாது தல ..... அப்பா கேட்டார்னா sms fees அவ்ளோதான் இன்னிக்கு கட்டலன்னா கிளாஸ் விட்டு வெளில அனுபிடுவங்க அவ்ளோதான் உடனே கிடைக்கும் ....

பெயரில்லா சொன்னது…

இது என்ன பிரமாதம், என் நண்பன் ஒருத்தன் கால்குலேடர் கு டீசல் போடணும்னு சொல்லி பணம் வாங்குனான்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது