வியாழன், செப்டம்பர் 16

லேட்டஸ்ட் டெக்னாலஜி


ரெண்டு நாளைக்கு முன்னால  சென்னைல இருந்து எங்க ஊர்க்கு train ல போய்க்கிட்டு இருந்தேன். எப்பவும் ட்ரெயின் ஏறினதும் தூங்கிடுவேன். நேத்து ஊருக்கு போகும்போது ட்ரெயின் திருச்சிக்கிட்ட வரும்போது தூக்கம் தெளிஞ்சு எந்திரிச்சு உக்கார்ந்தேன்.

திருச்சி ஸ்டேஷன்ல ட்ரெயின் நின்னது. அப்போ எங்க கோச்ல  என் சீட்டுக்கு எதிர் சீட்டுல ஒரு ஆள் ஏறி உக்கார்ந்தார். சரி திருச்சி டிக்கெட்டா  இருக்கும்ன்னு நினைச்சோம். அப்ப என் பக்கத்துல உள்ள ஒரு பெரியவர் தம்பி நீங்க எங்க போறீங்க அப்டின்னு கேட்டார். அதுக்கு அந்த ஆள் சென்னை போறேன் அப்டின்னு சொன்னார்(பயபுள்ள ட்ரெயின் மாறி ஏறிடிச்சு)

என் பக்கத்துல உள்ள பெரியவர் ரொம்ப குசும்பு பிடிச்ச ஆள் போல. அவர் உடனே அடிச்ச கமெண்ட் "பாருங்க தம்பி டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு. ஒரே ட்ரெயின்ல ஒரு சைடு திருநெல்வேலி போகுது, இன்னொரு சைடு சென்னை போகுது. What a wonderful Technology" அப்படின்னார்.

அந்த ஆளுக்கு ஒன்னும் புரியலை. அப்புறமா இது திருநெல்வேலி போற ட்ரெயின்னு  தெரிஞ்சிகிட்டு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிட்டார்.

கொசுறு:

ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் சிலர் reservation coach-சில் ஏறி தூங்குபவர்களை எழுப்பி சீட் கேட்கிறார்கள். நாம எழாவிட்டால் 6 மணி ஆச்சு உனக்கு என்ன தூக்கம். எந்திரிச்சு இடம் கொடு என்று மிரட்டாத குறையாக எழுப்பி விடுகின்றனர். இது reservation coach அப்டின்னு சொன்னாலும் எங்களுக்கு தெரியாதா உன் வேலையை பாரு என்று மிரட்டுகின்றனர்.

அதிலும் சிலர் பாக்கு போட்டு கொண்டு அந்த நாற வாயுடன் பக்கத்தில் உக்கார்ந்துகொண்டு ஆபாசமாகவும்(சென்னை தமிழ் நம்ம ஊர்க்காரங்களுக்கு ஆபாசம்தான்) பேச ஆரமித்து விடுகின்றனர். அதுவும் பேமிலியோட வந்தால் ரொம்ப கஷ்டம்.

இதை T.T.R மற்றும் ரயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. தினமும் வருவபர்களால் ரயில்வேக்கு லாபம்தான். அதற்காக Reservation செய்து வருபவர்களுக்கு ஏன் அவர்கள் தொந்தரவு கொடுக்கிறார்கள். இதற்க்கு விடிவு காலமே இல்லியா? இதுவே நான் எனது ஊரிலிருந்து சென்னைக்கு Reservation Waiting List ticket-டுடன் ஏறினால் TTR allow பண்ணுவதே கிடையாது.

அதனால நான் உங்களுக்கு சொல்றது என்னன்னா ஊர்பக்கம் இருந்து வர்றவங்க செங்கல்பட்டு வரைக்கும் Reservation ticket எடுத்துட்டு செங்கல்பட்டு to சென்னைக்கு லோக்கல் ட்ரெயின்ல வந்துடுங்க. அதுதான் safe .

35 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

நான்தான் முதலோ ..?!?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

me the firstuuuuuuuuuuuu

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

vadai poche sari me the seconduuuuuu

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பயபுள்ளை செங்கல்பட்டுல செமத்தியா யார்கிட்டயோ வாங்கிருக்கு

சௌந்தர் சொன்னது…

அந்நியன் கூப்பிட்டு சொலுங்க

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இது மட்டுமா train ல நடக்கு ஐயோ ஒரு தடவ புனே போய்கிட்டு பட்ட பாடு இருக்கே.படுத்தே இருந்த தப்பினோம்.கொஞ்சம் எழுந்திரிச்சு உட்காருவோம் என்று இருந்தால் அதற்கப்புறம் மூன்று நள்ளும் உட்கார்ந்தே தூங்கனும் .நாம தமிழ் பேசினாலும் புரியாது ,ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது

சௌந்தர் சொன்னது…

(சென்னை தமிழ் நம்ம ஊர்க்காரங்களுக்கு ஆபாசம்தான்)///

என்ன நைனா எங்க தமிழை பத்தி தப்ப பேசிகினு எங்க ஏரியாவை தண்டிவியா

ப.செல்வக்குமார் சொன்னது…

// "பாருங்க தம்பி டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு. ஒரே ட்ரெயின்ல ஒரு சைடு திருநெல்வேலி போகுது, இன்னொரு சைடு சென்னை போகுது.//

செம டெக்னாலாஜி..!!

அட பாவமே இப்படிஎல்லாமா பண்ணுறானுக ..?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அதனால நான் உங்களுக்கு சொல்றது என்னன்னா ஊர்பக்கம் இருந்து வர்றவங்க செங்கல்பட்டு வரைக்கும் Reservation
ticket எடுத்துட்டு//


எதுக்கு உனக்கு இந்த பந்தா? .இவ்வளவு நாளும் without ல தானே போவ .TTR வந்த கக்கூஸ் போய் ஒளிஞ்சி கிடுவேன்னு என்கிட்டே சொல்லி இருக்க.அப்புறம் எதற்கு இந்த பந்தா ?

சௌந்தர் சொன்னது…

இவன் தான் எங்கோயோ அடி வாங்கிட்டு என்ன பில்டப் கொடுக்குது பாரு பயபுள்ள

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//திருச்சிக்கிட்ட வரும்போது தூக்கம் தெளிஞ்சு எந்திரிச்சு உக்கார்ந்தேன்.//

அடிச்ச மப்பு தெளிஞ்சிருக்கும் அதன் திருச்சி வந்ததும் எழுந்திரிசுப்ப

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நாம எழாவிட்டால் 6 மணி ஆச்சு உனக்கு என்ன தூக்கம். எந்திரிச்சு இடம் கொடு என்று மிரட்டாத குறையாக எழுப்பி விடுகின்றனர்.//

எனக்கு உடம்பு சரி இல்லை சொல்லி தூங்க. மறுபடி எந்திரிக்க சொன்னா எழுந்து வேற பக்கமா திரும்பி வாய்ல கைவிட்டு வாந்தி எடுத்து அவன் மேல துப்பு....சாகட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தக்காளி இதுக்குதாம்லே நான் எப்பவும் கட்டிங் அடிக்காம ட்ரெய்ன் பக்கமே போறதில்ல!

சௌந்தர் சொன்னது…

பாபு ,அருண் ,terror ,ஜெ செல்வா ,எல்லோரும் இங்க வங்க லாஜிக் இல்லாம பயபுள்ள போய் பதிவு போடுது நேற்று இரவு சென்னைல இருந்து ஊருக்கு போய்க்கிட்டு இணைக்கு பதிவ போட்டாச்சு எப்படி வரமுடியும் .
இதுல வேற கொசுறுன்னு சொல்லி திரும்பி train -ல வரும்போதுன்னு போட்டிருக்கு.வந்து இந்த ஆட வெட்டிட்டு போங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

நான்தான் முதலோ ..?!?//

ஆமாம் நீதான் முதல்ல. எஸ் யு ஆர் பர்ஸ்ட்.


//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

me the firstuuuuuuuuuuuu//

செல்வா நம்ம பையன்தான் பாதி வடை அவன்கிட்ட வாங்கிக்கோ..


//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

பயபுள்ளை செங்கல்பட்டுல செமத்தியா யார்கிட்டயோ வாங்கிருக்கு//

என்னை யாரும் டச் பண்ண முடியாது....


//சௌந்தர் கூறியது...

அந்நியன் கூப்பிட்டு சொலுங்க/

அவர் விலாசம் கிடைக்குமா? விலாசம் விலாசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

நாம தமிழ் பேசினாலும் புரியாது ,ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது//

உனக்கா அவங்களுக்கா?

//சௌந்தர் கூறியது...

(சென்னை தமிழ் நம்ம ஊர்க்காரங்களுக்கு ஆபாசம்தான்)///

என்ன நைனா எங்க தமிழை பத்தி தப்ப பேசிகினு எங்க ஏரியாவை தண்டிவியா//

இப்பா என்னாகீரா. எங்க வீட்டாண்ட வந்து பாரு மாமூ...


// ப.செல்வக்குமார் கூறியது...

// "பாருங்க தம்பி டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு. ஒரே ட்ரெயின்ல ஒரு சைடு திருநெல்வேலி போகுது, இன்னொரு சைடு சென்னை போகுது.//

செம டெக்னாலாஜி..!!

அட பாவமே இப்படிஎல்லாமா பண்ணுறானுக ..?//

ஆமாப்பா. பெரியவருக்கு ரொம்ப குசும்பு. உன்னை மாதிரி..


// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

எதுக்கு உனக்கு இந்த பந்தா? .இவ்வளவு நாளும் without ல தானே போவ .TTR வந்த கக்கூஸ் போய் ஒளிஞ்சி கிடுவேன்னு என்கிட்டே சொல்லி இருக்க.அப்புறம் எதற்கு இந்த பந்தா ?//

அப்படியெல்லாம் ட்ரெயின்ல பயணம் செய்ய முடியும்ன்னு சொல்லி கொடுத்து கூப்டு போனதே நீதான..


// சௌந்தர் கூறியது...

இவன் தான் எங்கோயோ அடி வாங்கிட்டு என்ன பில்டப் கொடுக்குது பாரு பயபுள்ள//

//அடிச்ச மப்பு தெளிஞ்சிருக்கும் அதன் திருச்சி வந்ததும் எழுந்திரிசுப்ப//

க்கும் எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ..


//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

எனக்கு உடம்பு சரி இல்லை சொல்லி தூங்க. மறுபடி எந்திரிக்க சொன்னா எழுந்து வேற பக்கமா திரும்பி வாய்ல கைவிட்டு வாந்தி எடுத்து அவன் மேல துப்பு....சாகட்டும்...//

இது நல்ல ஐடியா வா இருக்கே!!next ட்ரை பண்றேன்


// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

தக்காளி இதுக்குதாம்லே நான் எப்பவும் கட்டிங் அடிக்காம ட்ரெய்ன் பக்கமே போறதில்ல!//

அப்டின்னாலும் காலைல தெளிஞ்சிடுமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

பாபு ,அருண் ,terror ,ஜெ செல்வா ,எல்லோரும் இங்க வங்க லாஜிக் இல்லாம பயபுள்ள போய் பதிவு போடுது நேற்று இரவு சென்னைல இருந்து ஊருக்கு போய்க்கிட்டு இணைக்கு பதிவ போட்டாச்சு எப்படி வரமுடியும் .
இதுல வேற கொசுறுன்னு சொல்லி திரும்பி train -ல வரும்போதுன்னு போட்டிருக்கு.வந்து இந்த ஆட வெட்டிட்டு போங்க//


இதிலெல்லாம் லாஜிக் பாருங்க. பாக்க வேண்டிய இடத்துல பாக்காதிங்க..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@soudar

சௌந்தர் ஆமா நேத்து சாயங்காலம் வரை என்கூட தன இருந்திச்சி பதிவுல போய் போட்டிருக்கு .
ரமேஷ் பதிவ திருத்தி போடுப்பா இந்த பதிவு சேலத்து கணக்கில் சேர்த்து கொள்ள படாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரெண்டு நாளைக்கு முன்னால சென்னைல இருந்து எங்க ஊர்க்கு train ல போய்க்கிட்டு இருந்தேன்.//

@சௌந்தர் & பாபு

இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/இம்சைஅரசன் பாபு.. கூறியது...

@soudar

சௌந்தர் ஆமா நேத்து சாயங்காலம் வரை என்கூட தன இருந்திச்சி பதிவுல போய் போட்டிருக்கு .
ரமேஷ் பதிவ திருத்தி போடுப்பா இந்த பதிவு சேலத்து கணக்கில் சேர்த்து கொள்ள படாது//

சேலத்து பதிவா? வெங்கட் கிட்ட காசு வாங்கிட்டியா?

என்னது நானு யாரா? சொன்னது…

லேட்டஸ்ட் டெக்னாலஜி நல்ல காமெடிப்பா!

பதிவில நகைசுவை + கருத்து இருக்கு! பாராட்டுக்கள்!

என்ன செய்றது, இது ஜனதொகை அதிகா இருக்கிற நாடா போயிட்டுதே!

அருண் பிரசாத் சொன்னது…

சரி போய் சிரிப்பு போலிஸ்கிட்ட கம்பிளைண்ட் கொடுங்க....

அருண் பிரசாத் சொன்னது…

//"லேட்டஸ்ட் டெக்னாலஜி"//

இது பழைய ஜோக், இதே வேலையா போச்சு உங்ககூட. மொதல்ல உங்க இன்பாக்ஸை டெலிட் பண்ணனும்

அருண் பிரசாத் சொன்னது…

//தூங்குபவர்களை எழுப்பி சீட் கேட்கிறார்கள். நாம எழாவிட்டால் 6 மணி ஆச்சு உனக்கு என்ன தூக்கம்//

உங்களை எல்லாம் பீகாருக்கு அனுப்பனும். அவனுங்க டிக்கெட்டே எடுக்காம வந்து உன் சீட்டுல இருந்து உங்களையே அடிச்சி தொறத்துவானுங்க

GSV சொன்னது…

இங்க தூங்கிறது பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ன்னு போர்டு போட்டுக்கிட்டு தூங்கனும்.

Chitra சொன்னது…

என் பக்கத்துல உள்ள பெரியவர் ரொம்ப குசும்பு பிடிச்ச ஆள் போல. அவர் உடனே அடிச்ச கமெண்ட் "பாருங்க தம்பி டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு. ஒரே ட்ரெயின்ல ஒரு சைடு திருநெல்வேலி போகுது, இன்னொரு சைடு சென்னை போகுது. What a wonderful Technology" அப்படின்னார்.


......செம கமென்ட்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

பனங்காட்டு நரி சொன்னது…

//// இது மட்டுமா train ல நடக்கு ஐயோ ஒரு தடவ புனே போய்கிட்டு பட்ட பாடு இருக்கே.படுத்தே இருந்த தப்பினோம்.கொஞ்சம் எழுந்திரிச்சு உட்காருவோம் என்று இருந்தால் அதற்கப்புறம் மூன்று நள்ளும் உட்கார்ந்தே தூங்கனும் .நாம தமிழ் பேசினாலும் புரியாது ,ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது /////

இம்சை ....,
இதே அனுபவம் என்னக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ல நடந்தது .....,மலையாளிகள் இதில் முதல் இடம் ..,ஆனா அவனுங்க நாகர்கோயில் வந்தானுங்க செத்தானுங்க ....,அடிப்போம் பாரு அப்படி ஒரு அடி ,ரெண்டு பேரு சேர்ந்து அடிச்சு வாய எல்லாம் கிழிச்சோம் ...,ஓடிடாணுவ

நான்தான் சொன்னது…

எனெக்கென்னவோ இது பழைய கிரேசி மோகன் இல்ல எஸ் வீ சேகர் ஜோக்கு மாதிரி தெரியுது

என்னவோ போ நீ நல்லா இருந்தா போதும்பா

கலாநேசன் சொன்னது…

ஐயோ...ஐயோ....

சீமான்கனி சொன்னது…

இந்த அராஜகம் ரெம்ப நாளா நடக்குது நண்பா கண்டுகொள்ளத்தான் ஆள் இல்லை...

சிவராம்குமார் சொன்னது…

எழுந்திருக்க சொல்றவங்க வாயில ஒரு குத்து குத்த வேண்டியதுதானே... என்ன மக்கா! நம்ம ஊருலே நம்ம பாக்காத சண்டியர்களா!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ என்னது நானு யாரா? நன்றி பங்காளி

//

அருண் பிரசாத் சொன்னது…

சரி போய் சிரிப்பு போலிஸ்கிட்ட கம்பிளைண்ட் கொடுங்க....//

அவ்வவ்

/இது பழைய ஜோக், இதே வேலையா போச்சு உங்ககூட. மொதல்ல உங்க இன்பாக்ஸை டெலிட் பண்ணனும்//

அத வச்சுதான் பொழப்பு ஓடுது. நான் பாவம்..

//

GSV சொன்னது…

இங்க தூங்கிறது பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ன்னு போர்டு போட்டுக்கிட்டு தூங்கனும்.//

இது ஒரு நல்ல ஐடியா..

@ Chitra நன்றி..

@ பனங்காட்டு நரி same blood

//

நான்தான் சொன்னது…

எனெக்கென்னவோ இது பழைய கிரேசி மோகன் இல்ல எஸ் வீ சேகர் ஜோக்கு மாதிரி தெரியுது

என்னவோ போ நீ நல்லா இருந்தா போதும்பா//

ஹிஹி

//கலாநேசன் சொன்னது… ஐயோ...ஐயோ...//

இதுக்கேவா .இன்னும் இருக்குது...

/சீமான்கனி சொன்னது…

இந்த அராஜகம் ரெம்ப நாளா நடக்குது நண்பா கண்டுகொள்ளத்தான் ஆள் இல்லை..//

ஆமா தல..

//

சிவராம்குமார் சொன்னது…

எழுந்திருக்க சொல்றவங்க வாயில ஒரு குத்து குத்த வேண்டியதுதானே... என்ன மக்கா! நம்ம ஊருலே நம்ம பாக்காத சண்டியர்களா!!//

நான் ரொம்ப அப்பிராணி பாஸ்

ரோஸ்விக் சொன்னது…

ஜோக்கு சோக்கு... - இது சர்தார்ஜி ஜோக் - அவரு ட்ரெயின் மாறி ஏறிட்டு... பலே பலே என்னா மாடர்ன் இந்தியன் டெக்னாலஜி அப்பர் பெர்த் எல்லாம் பம்பாய் போகுது... லோவேர் பெர்த் எல்லாம் கோயம்பத்தூர் போகுதுன்னு சொல்றமாதிரி வரும்... :-)

R.Santhosh சொன்னது…

யார்கிட்ட அடி வாங்கினீங்கன்றதையும் போட்டிருந்தா நாங்க கொஞ்சம் உஷாரா இருப்போம்ல....

விந்தைமனிதன் சொன்னது…

இவ்ளோ அழகா நல்லா எழுதி இருக்கீங்க! இண்ட்ரஸ்டிங்... இதே மாதிரி மெயிண்டெய்ன் பண்ணலாமே?!

டெக்னாலஜி ஜோக்... ம்ம்ம்... கலக்குறீங்க போங்க!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது