Horoscope

வெள்ளி, செப்டம்பர் 24

நான் எந்திரன் பாப்பேன்



காலேஜ் படிக்கும்போது காலேஜ் கட் அடிச்சிட்டு அடிக்கடி படத்துக்கு போவேன்(இது எங்களுக்கு தெரியாதா. அதான உன்னோட மெயின் வேலை). அப்போ ஹாஸ்டல்ல இருந்ததால நைட் படத்துக்கு போயிட்டு லேட்டா வந்து வாட்ச்மன் கிட்ட கெஞ்சி ஹாஸ்டல்குள்ள வருவோம்.

என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன். சனிக்கிழமை எங்களோட அவரும் கிளம்பி படத்துக்கு வருவார். காலேஜ் ல தான் அவர் HOD. மத்தபடி நல்ல நண்பர் அவர். படத்துக்கு போனா, பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், சாப்பாட்டு செலவு எல்லாம் அவரோடதுதான். அவர் ரஜினியின் தீவிர ரசிகர்.

அப்பத்தான் படையப்பா பட ரிலீஸ் நேரம். எங்களுக்கும் காலேஜ்ல internal எக்ஸாம் டைம். எங்க HOD room-ல உக்கார்ந்து படையப்பா பாடல்கள் கேக்க ஆரமிச்சோம். படம் ரிலீஸ் அன்னிக்கு எங்களுக்கு Internal எக்ஸாம். அதனால எக்ஸாம் முடிஞ்சு evening படத்துக்கு போகலாம்னு பிளான்.

படம் ரிலீசுக்கு ரெண்டு நாளைக்கி முன்னாடி எங்க HOD எங்களை கூப்பிட்டார். வர்ற சனிகிழமை படம் ரிலீஸ். எனக்கு முத நாள் முதல் ஷோக்கு டிக்கெட் வேணும். வாங்கி தர முடியுமான்னு கேட்டார். சரி சார் அப்டின்னோம். சரி இந்தா 500 ரூபாய். போய் எனக்கு, உங்க நாலு பேருக்கு சேர்த்து அஞ்சு டிக்கட் எடுத்துடு அப்டின்னார்.

சார் அன்னிக்கு எங்களுக்கு Internal Exam. எப்படி வர்றது.

அவர் சொன்னார் "அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா".

சரின்னு தியேட்டர்ல போய் டிக்கெட் reservation பண்ணனும்னு கேட்டா, சார் உங்களுக்கே ஓவரா தெரியலை. நம்ம ஊர்ல reservation எதுக்கு. படம் ரிலீஸ் அன்னிக்கு காலைல வாங்க டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும்னு சொல்லிடாங்க. படம் ரிலீஸ் அன்னிக்கு முதல் ஷோ பாத்தாச்சு. (ரெண்டு நாள் கழிச்சு அம்மா கூப்பிட்டு, படையப்பா படத்துக்கெல்லாம் போகாத ரொம்ப கூட்டமா இருக்கும், கொஞ்ச நாள் கழிச்சு போய்க்கோன்னு வேற சொன்னாங்க. இல்லம்மா நான் பாத்துட்டேன்னு எப்படி சொல்றது)

ஒரு வாரம் கழிச்சு எக்ஸாம் எழுதாதவன்களை ப்ரின்சி கூபிடுரார்னு தகவல். எப்பவுமே எக்ஸாம் எழுதாதவன்களை டிபார்ட்மென்ட்ல தான் விசாரிப்பாங்க. இது என்னடா புது பழக்கம்ன்னு ப்ரின்சிய பாக்க போனோம். எப்பவுமோ எக்ஸாம் கட்டுன்னா இருபதோ முப்பதோ பேர்தான் இருப்பாங்க.

ஆனா இந்த தடவை 120 பேருக்கு மேல. இதுக்கெல்லாம் ரஜினி தான் காரணம். அவர் ஏன் எக்ஸாம் டைம்ல படம் ரிலீஸ் பண்றாரு. ப்ரின்சி அரண்டு போயிட்டார். ஏன் இவ்ளோ பேர் எக்ஸாம் எழுத வரலைன்னு. ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றோம். அவர் கேக்குறதா இல்லை.

அப்பத்தான் எங்க HOD வந்து படையப்பா படம்தான் இவங்க கட் அடிச்சதுக்கு காரணம்ன்னு சொன்னார். ப்ரின்சி "அடபாவிகளா.ரஜினி படத்துக்கு இவ்ளோ பேர் கட்டா? அத்தனை பேருக்கும் என்ன தண்டனை கொடுக்குறது. போய் தொலைங்க. அந்த தேதில உள்ள எக்ஸாம் எல்லோருக்கும் திரும்பி இன்னொருநாள் எழுதுங்க" அப்டின்னு சொல்லிட்டார். நாங்க பரவா இல்லை. அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். ரஜினியால் எங்களுக்கு கிடைத்த மன்னிப்பு அது.

நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.

1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)

..

34 கருத்துகள்:

வெங்கட் சொன்னது…

// நான் எந்திரன் பாப்பேன்.
அதுக்கு ரெண்டு காரணம்.

1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு
(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்) //

அப்பாடா.. எப்படியோ கடைசில
தலைப்புக்கு சம்பந்தமா ஒரு வரி
எழுதியாச்சு..!!

வெங்கட் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
என்னது நானு யாரா? சொன்னது…

இப்பத்தானே காரணம் புரியுது, ஏன் நீங்க சீரியஸ் போலிசா இல்லாம சிரிப்புப் போலிசு ஆனீங்கன்னு!

//"அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா".//

இவரெல்லாம் HOD -யா இருந்தா படிப்பில கோட்டைத் தான் விடணும். அப்புறம், தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரியா இருக்க முடியும் சிரிப்பு போலிசு வடிவேலு மாதிரி தான் இருக்க முடியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன். சனிக்கிழமை எங்களோட அவரும் கிளம்பி படத்துக்கு வருவார்.//

நான் படிக்கும்போது எங்க ஹாஸ்டல் வார்டன கடைசி வரைக்கும் கண்ணுல பாத்தது கிடையாது...ஹி... ஹி....! அப்பிடி ஒரு சொதந்திரம்....! (அப்போ வேற என்னென்ன பண்ணியிருப்போம்னு நெனச்சி பாத்துக்குங்க!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.

1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)//

அப்போ 'அவங்களப்' பிடிக்காதா? என்ன போலீஸ்கார் இதெல்லாம் ஓவராத் தெரியல?

அருண் பிரசாத் சொன்னது…

இது உண்மையான ரசிகனுக்கு அழகு.

HOD யே இப்படி இருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது. சரி பிரின்சி படம் ரிலீஸ் அன்னைக்கு காலேஜ்க்கு வந்தாரா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன்.//

வெளங்கும்...

//அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். //

சுத்தம்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்க HOD வேற என்னென்ன பண்ணினாரு? (நிச்சயம் பண்ணியிருப்பாரு!)

Velmaheshk சொன்னது…

எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.

1. AISHWARYA RAI,(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)
2. ரெண்டு AISHWARYA RAI இருக்க காரணம்.

சௌந்தர் சொன்னது…

அப்போ நாங்க எல்லாம் எந்திரன் பார்க்க மாட்டோமா

சௌந்தர் சொன்னது…

///கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.////

இது யார் செய்த சதி எதிர் கட்சியா ஆளுங்க கட்சியா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

புது passion pro பைக்ல போய். உன் பைக்ல left indicator உடைய என்னோட வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நானும் பார்ப்பேன்...அருமையான கதை சொல்லி எந்திரன் பதிவு தேத்திட்டீங்க தலை

பெயரில்லா சொன்னது…

சைரிப்பு போலிஸா போய் நிற்க்காதீங்க..விறைப்பு போலீஸா ,முறைப்பு போலீஸா ,முரட்டு போலீஸா போய் நில்லுங்க..அப்பதான் உடனே டிக்கெட் கிடைக்கும்

க ரா சொன்னது…

நீங்க எந்த காலேஜல படிச்சீங்க சார்..

க ரா சொன்னது…

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. இந்த கதை ரொம்ப நல்லாருக்கு....

GSV சொன்னது…

"me the first" intha pathiva pota Rameshkku Valthukkal....Sucess makka...எப்படியும் எல்லாரும் பார்க்க போறாங்க துணிவa சொன்ன போலீஸ் க்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எக்சாம்க்குப்படிக்காமலேயே பாஸ் ஆவது எப்படி?எந்திரன் பற்றி எழுதாமலேயே எந்திரன் டைட்டில் வைப்பது எப்படி?

கற்றுக்கொள்ள அணுகவும் ரமேஷ் பிளாக்

வெங்கட் சொன்னது…

// வெங்கட் சொன்னது…

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். //

என்ன ஒரு அநியாயம்..?
இதை கேக்க யாருமே இல்லையா..?!!

இந்த Posting-ஐ விட Interesting-ஆ
ஒரு Comment போட்டு இருந்தேன்..

ரமேஷ் வேணும்னே சதி பண்ணி
அந்த Comment-ஐ நீக்கிட்டார்..
அராஜகம்..

ரமேஷ் Down.., Down..!!

Chitra சொன்னது…

:-) Cool!

கருடன் சொன்னது…

ஹா.. ஹா.. ஹா...

(தூக்கம் வராமல் சும்மா வந்து சிரித்துவிட்டு போவோர் சங்கம்..)

ஜெய்லானி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

// நான் எந்திரன் பாப்பேன்.
அதுக்கு ரெண்டு காரணம்.

1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு
(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்) //

அப்பாடா.. எப்படியோ கடைசில
தலைப்புக்கு சம்பந்தமா ஒரு வரி
எழுதியாச்சு..!!//

மீ தி பர்ஸ்ட் க்கு இது எவ்ளவோ தேவலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// என்னது நானு யாரா? கூறியது...இப்பத்தானே காரணம் புரியுது, ஏன் நீங்க சீரியஸ் போலிசா இல்லாம சிரிப்புப் போலிசு ஆனீங்கன்னு! ///

ஆமாங்க என்னை எங்க HOD படிக்க விடாம பண்ணிட்டாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.

1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)//

அப்போ 'அவங்களப்' பிடிக்காதா? என்ன போலீஸ்கார் இதெல்லாம் ஓவராத் தெரியல?//

ஆமா பன்னி சார். ஐஸ்வர்யா ராய் கிழவி. உங்களைமாதிரி வயசானவங்களுக்கு ஓகே. நாங்கெல்லாம் யூத்.

=======================================================

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன்.//

வெளங்கும்...

//அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். //

சுத்தம்..//

ரொம்ப புகழாதீங்க மாம்ஸ்

=================================

பெசொவி சொன்னது…

நானும் இந்திரன் படம் பாப்பேன்......(எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள "இந்தியத் தொலைக்கட்சிகளில் முதன் முறையாக" போட மாட்டாங்களா?)

செல்வா சொன்னது…

//படத்துக்கு போனா, பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், சாப்பாட்டு செலவு எல்லாம் அவரோடதுதான். அவர் ரஜினியின் தீவிர ரசிகர்./

அதனாலதான நண்பர் அப்படின்னு சொல்லுறீங்க ., இல்லேன்னா சொல்ல மாட்டீங்களே ..!!

செல்வா சொன்னது…

// "அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா".//

இனம் இனத்தோடு சேரும் ..!!

செல்வா சொன்னது…

//நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.//
இப்ப யாரு டிக்கெட் எடுத்து தராங்க ..?!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனைவருக்கும் நன்றி. நான் வெளியூர்ல இருப்பதான் நோ தனிதனி பதில். அப்பாலிக்கா வரேன்...

சீமான்கனி சொன்னது…

"அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா".
கடவுள் மாதிரினு சொல்லுங்க...

மாங்கு மாங்குனு பரிச்சை எழுதுனவிங்கேதெ பாவம்....

Shalini(Me The First) சொன்னது…

//மீ தி பர்ஸ்ட் க்கு இது எவ்ளவோ தேவலை...
//

அடுத்தவங்கள பார்த்து பொறாமைப்படாம, கத்துக்கோங்க அப்ப தான் முன்னேற முடியும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எந்திரன் 200 ரூபா டிக்கட்டாம்

ஜானகிராமன் சொன்னது…

சிரிப்பு, "நாம எந்திரன பாக்குறது முக்கியமில்ல... எந்திரன், நம்மை பாக்கவைக்கிறது தான் முக்கியம்." இப்படிக்கு எந்திரிச்சு பிளாசபி சொல்வோர் சங்கம்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது