Horoscope

செவ்வாய், நவம்பர் 2

தெரிஞ்சுக்கோங்க..banking ombudsman-அவசர செய்தி..

இது என்னுடைய நண்பர் பாலமுருகன் அவருடைய ப்ளாக் "துளித்துளியாய்" யில்  எழுதியது. அனைவருக்கும் தேவையான பதிவு என்பதால் அவருடைய அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்.

"சமீபத்தில் எனக்கு HSBC  வங்கியுடனான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் கடனட்டைக்காக வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை சரியான தேதியில் செலுத்திட்டேன். அப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. அது என்னான்னா visa card transfer பண்றப்ப 34 பைசா round off ஆகி HSBC அக்கவுண்ட்ல 34 பைசா கம்மியா credit ஆயிடுச்சு. இது மாதிரி ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ-க்கெல்லாம் பைசாவில குறைஞ்சா நானும் கண்டுக்க மாட்டேன், அவுங்களும் கண்டுக்க மாட்டாங்க. அதே மாதிரி இந்த தடவையும் 34 பைசா குறைஞ்சத நானும் கண்டுக்கல.
                                             
தற்செயலா HSBC ஆன்லைன் பேங்க்கிங்ல பார்த்தா 400 ரூபாய் ஃபைனும் 41 ரூபாய் சேவை வரியும் போட்டுருந்தாங்க. முதல்ல எனக்கு எதுக்காக ஃபைன் போட்டங்கன்னு புரியல. சரி என்னான்னு கேட்போம்னு வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு ஃபோன் போட்டேன். ஏன் ஃபைன் போட்டிங்கன்னு கேட்டேன். அவரும் கொஞ்சம் செக் பன்னி சொல்றேன் கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார். நானும் என்ன பிரச்சனையாயிருக்கும்ங்ற யோசனைல காத்திருந்தேன். 

அவரும் செக் பன்னிட்டு நீங்க சரியான தேதி கட்டிட்டிங்களான்னு கேட்டார். நானும் கட்டிடேன்னு சொன்னேன். அவரு திரும்பவும் செக் பன்ன நேரம் கேட்டார். நானும் காத்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு அந்த விசயத்த எங்கிட்ட சொன்னார். அத கேட்டதும் ச்சும்மா சுர்ர்ருன்னு கோபம் வந்துடுச்சு. விசயம் என்னான்னா அந்த 34 பைசா கட்டாததுக்குதான் 441 ரூபாய் தண்டம்னு. அந்த விசயத்த என்னால  சகிச்சிக்க முடியல. அவருகிட்ட 34 பைசாவுக்கு 441 ரூபாய் தண்டம் போடுவிங்களான்னு கேட்டேன். 

அவரும் தப்பு உங்களோடதுதான், அதனால தண்டம் கட்டித்தான் ஆகனும்னு கண்டிப்பா சொல்லிட்டார். நானும் கோபப்பட்டு அட்டையை உடனே ரத்து பண்ணிடுங்கன்னு சொன்னேன். அவரும் சரி பணத்த கட்டிட்டு ரத்து பண்ணிக்கோங்க அப்டின்னு  சொல்லிட்டார். நான் முடியாதுன்னு சொல்லிட்டு ஃபோனை துண்டிச்சுட்டேன். 
                                                                   
என்னால  சகிச்சிக்க முடியல. எதாச்சும் பண்ணனும்னு தோணுச்சு. பணத்த கட்டிடுடா, எதுக்கு பிரச்சனை, கட்டாட்டி அதுக்கும் ஃபைன் போடுவாங்க, பேசாம கட்டிடுன்னு ஏற்கனவே கடனட்டைல அடி பட்டவங்க சொன்னங்க. நானும் பாக்குறவங்ககிட்டல்லாம் புலம்பி தீர்த்துட்டேன்.
 
அப்படித்தான் நம்ம கதாநாயகன் கலப்பை பதிவர் அண்ணன் ஜெயக்குமார் கிட்டயும் புலம்பினேன். அவரு கோவையில் பொதுத்துறை வங்கில மேலாளரா இருக்காரு. அவருதான், தம்பி 34 பைசாவுக்கு 441 ரூபாய் தண்டம்லாம் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவரு, நீ இத சாதரணமா விட்ராத.முதல்ல HSBC லயே ஒரு புகார் அனுப்புவோம். சரிவாராட்டி banking ombudsman-ல புகார் பண்ணலாம்னு சொன்னார். 

நானும் அது என்ன banking ombudsman-னு கேட்டேன். அது இந்த மாதிரி அநியாயம் நடந்தா தட்டி கேட்க Reserve Bank of India-ல உள்ள ஒரு அமைப்புனு சொன்னார். நானும் எதாச்சும் செய்யனும்னு சொல்லிட்டு HSBC லயே ஒரு புகார் அனுப்பிட்டு பதில் வராததினால banking ombudsman-லயும் புகாரை பதிவு பண்ணினேன்.



http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=159

                                              
அதுக்கப்புறம் எல்லாமே வேகமா நடந்துச்சு. 441 ஃபைன ரத்து பண்ணிட்டங்க. ஃபோன் மேல ஃபோன் போட்டு மன்னிப்பு கேட்டங்க.மின்னஞ்சல்லயும் மன்னிப்பு கேட்டாங்க. RBI-ல இருந்து ஃபோன் பண்ணி எல்ல்லாம் சரியாயிடுச்சா இப்ப மகிழ்ச்சியான்னு கேட்டங்க. கேசை முடிச்சுடலாம்னு கேட்டாங்க. நானும் மகிழ்ச்சி. முடிச்சுடுங்கன்னு சொல்லிட்டேன்."

இது உபயோகமான தகவலா இருக்கும்னு நினைக்கிறேன். இனி இந்த டார்ச்சர் பண்ணும் பேங்க்காரங்க  கொட்டத்தை அடக்குவோம். தேங்க்ஸ் பாலா......

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு சுவைத்து இனிய தீபாவளியை கொண்டாடுவோம். உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

61 கருத்துகள்:

செல்வா சொன்னது…

வடை எனக்கே ..!!

அருண் பிரசாத் சொன்னது…

அட இது நல்லா இருக்கே!

அப்படியே அவர்களை தொடர்புகொள்வது எப்படி எனவும் விளக்கி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்

மங்குனி அமைச்சர் சொன்னது…

banking ombudsman-னு////

இதோட அட்ரஸ்ஸ சொல்லுங்க எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்

கருடன் சொன்னது…

@ரமேஷ்

மச்சி!! கலக்கிட்ட!!! நீ திருடி போட்ட போஸ்டா இருந்தாலும் நல்ல தகவல்... தூள்!!

பெசொவி சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல். ஆமா, ஏன் இன்ட்லில சப்மிட் பண்ணலை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண் பிரசாத்
@ மங்குனி அமைசர்

link இருக்குதே . அதுல கிளிக் பண்ணி பாருங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

நல்ல பயனுள்ள தகவல். ஆமா, ஏன் இன்ட்லில சப்மிட் பண்ணலை?//

Done

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

மச்சி!! கலக்கிட்ட!!! நீ திருடி போட்ட போஸ்டா இருந்தாலும் நல்ல தகவல்... தூள்!!//

எலேய் பாலா கிட்ட அனுமதி வாங்கிதாம்ல போட்டிருக்கேன். அதுக்கு பேர் திருட்டு இல்லை...

சௌந்தர் சொன்னது…

எப்படியோ ஒரு பதிவு போட்டாச்சி...!

செல்வா சொன்னது…

நல்லா இருக்கு அண்ணா ., உபயோகமான தகவல் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

எப்படியோ ஒரு பதிவு போட்டாச்சி...!//

மவனேஒருநாள் பேங்க் காரன் நடுரோட்டுல உன் சட்டைல கை வைக்கும்போது தெரியும்.. நான் ஊருக்கு போற அவசரத்துல கூட உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

நல்லா இருக்கு அண்ணா ., உபயோகமான தகவல் ..!!//

Thanks selve

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நல்ல பதிவு ரமேஷ் ...........
தீபாவளி வாழ்த்துக்கள் ..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

நல்ல பதிவு ரமேஷ் ...........
தீபாவளி வாழ்த்துக்கள் ..........//

Thanks

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//மச்சி!! கலக்கிட்ட!!! நீ திருடி போட்ட போஸ்டா இருந்தாலும் நல்ல தகவல்... தூள்!!//

அவன் தான் அனுமதி வாங்கி போட்டு இருக்கேன் .......சொல்லி இருக்கான் இல்லையா மறுபடியும் திருடி போட்ட ன்னு சொல்ல கூடாது மக்கா ......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வெரிகுட், கீப் இட் அப்!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@டெர்ரர்
அவனாவது இன்னொருத்தரோட பதிவ போட்டான்.......நீங்க உங்க ப்ளோக்ல என்ன செய்றீங்க மக்கா ...இழுத்து மூடியாச்சா..ஒரு பதிவு போட முடியல உங்களுக்கெல்லாம் ........எதுக்கு .......பிம்பிளிக்கி ......பிம்ப ......

Unknown சொன்னது…

மிகவும் உபயோகமான விசயம் ...

Arun Prasath சொன்னது…

நல்ல பதிவு... உபயோகமான தகவல்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//மச்சி!! கலக்கிட்ட!!! நீ திருடி போட்ட போஸ்டா இருந்தாலும் நல்ல தகவல்... தூள்!!//

அவன் தான் அனுமதி வாங்கி போட்டு இருக்கேன் .......சொல்லி இருக்கான் இல்லையா மறுபடியும் திருடி போட்ட ன்னு சொல்ல கூடாது மக்கா ......//

நன்பெண்டா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

@டெர்ரர்
அவனாவது இன்னொருத்தரோட பதிவ போட்டான்.......நீங்க உங்க ப்ளோக்ல என்ன செய்றீங்க மக்கா ...இழுத்து மூடியாச்சா..ஒரு பதிவு போட முடியல உங்களுக்கெல்லாம் ........எதுக்கு .......பிம்பிளிக்கி ......பிம்ப ......//

Terror answer please. come come

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Arun Prasath
@ பன்னிக்குட்டி ராம்சாமி
@ கே.ஆர்.பி.செந்தில்

Thank you

உமர் | Umar சொன்னது…

பேங்க்ல எப்போதுமே நெகட்டிவ் பேலன்ஸ் மெய்ண்டைன் பண்ற எனக்கு, மினிமம் பேலன்ஸ் வர்றதுக்கு ஏதாவது வழி சொல்வாங்களா, அங்கே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

கும்மி சொன்னது…

பேங்க்ல எப்போதுமே நெகட்டிவ் பேலன்ஸ் மெய்ண்டைன் பண்ற எனக்கு, மினிமம் பேலன்ஸ் வர்றதுக்கு ஏதாவது வழி சொல்வாங்களா, அங்கே?//

கேட்டுப் பாருங்களேன். தர்ம அடிக்கு நாங்கள் பொறுப்பு இல்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

25

உமர் | Umar சொன்னது…

//கேட்டுப் பாருங்களேன். தர்ம அடிக்கு நாங்கள் பொறுப்பு இல்லை..//

ஒரு நல்ல பதிவு போட்டா, இந்த மாதிரி நாலு கேள்வி வரத்தான் செய்யும். அதுக்கெல்லாம் பதில் சொல்ல தயாரா இருக்கணும். அத விட்டுட்டு, இப்படி ஓடக்கூடாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/கும்மி சொன்னது…

//கேட்டுப் பாருங்களேன். தர்ம அடிக்கு நாங்கள் பொறுப்பு இல்லை..//

ஒரு நல்ல பதிவு போட்டா, இந்த மாதிரி நாலு கேள்வி வரத்தான் செய்யும். அதுக்கெல்லாம் பதில் சொல்ல தயாரா இருக்கணும். அத விட்டுட்டு, இப்படி ஓடக்கூடாது.
//

அதுக்கப்புறம் எந்த பேங்க் ல அக்கவுன்ட் வச்சிருக்க, balance எவ்வளவு, எவ்ளோ வாடகை (வட்டி) அப்டின்னெல்லாம் கேப்பீங்க. அத பதிவா போடுவீங்க,. எனக்கு தேவையா?

உமர் | Umar சொன்னது…

//அதுக்கப்புறம் எந்த பேங்க் ல அக்கவுன்ட் வச்சிருக்க, balance எவ்வளவு, எவ்ளோ வாடகை (வட்டி) அப்டின்னெல்லாம் கேப்பீங்க. அத பதிவா போடுவீங்க,. எனக்கு தேவையா? //

இன்னுமாய்யா இந்த வாடகை பிரச்னை முடியலை? அவ்வவ்வ்வ்வ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கும்மி கூறியது...

//அதுக்கப்புறம் எந்த பேங்க் ல அக்கவுன்ட் வச்சிருக்க, balance எவ்வளவு, எவ்ளோ வாடகை (வட்டி) அப்டின்னெல்லாம் கேப்பீங்க. அத பதிவா போடுவீங்க,. எனக்கு தேவையா? //

இன்னுமாய்யா இந்த வாடகை பிரச்னை முடியலை? அவ்வவ்வ்வ்வ்.//

இருங்கா அடுத்த பிரச்சனை வரட்டும். இத விட்டுடலாம்

பெயரில்லா சொன்னது…

அவசியமான பதிவு போலீஸ் :)

சசிகுமார் சொன்னது…

கண்டிப்பா அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். அனைவருக்கும் பயனுள்ளாதாக இருக்கும்.

ஆனந்தி.. சொன்னது…

உபயோகமான தகவல்...Happy Journey and Happy diwali...!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//சௌந்தர் கூறியது...

எப்படியோ ஒரு பதிவு போட்டாச்சி...!//

மவனேஒருநாள் பேங்க் காரன் நடுரோட்டுல உன் சட்டைல கை வைக்கும்போது தெரியும்.. நான் ஊருக்கு போற அவசரத்துல கூட உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கேன்.

அம்புட்டு நல்லவரா நீங்க?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

வெரிகுட், கீப் இட் அப்!


என்ன?ராம்சாமி பொசுக்குனு கோவிச்சுட்டு போறாரு?என்னயா பண்ணுனே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,சிங்கப்பூர்ல நல்ல நல்ல டி வி டி கிடைக்குமாமே,வாங்கி வர முடியுமா?(பணம் உங்க அக்கவுண்ட்ல போட்டுடறேன்)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாத்தீங்களா?நல்ல போஸ்ட் போட்டா யாரும் கும்ம முடியல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சி.பி.செந்தில்குமார் கூறியது...
யோவ்,சிங்கப்பூர்ல நல்ல நல்ல டி வி டி கிடைக்குமாமே,வாங்கி வர முடியுமா?(பணம் உங்க அக்கவுண்ட்ல போட்டுடறேன்)///

மேட்டர் டிவிடிதானே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,சிங்கப்பூர்ல நல்ல நல்ல டி வி டி கிடைக்குமாமே,வாங்கி வர முடியுமா?(பணம் உங்க அக்கவுண்ட்ல போட்டுடறேன்)
//

My account no: 12233245345. please send the amount..

பெயரில்லா சொன்னது…

மாமூலான பதிவா இல்லாம உபயோகமான பதிவா இருக்கே..

பெயரில்லா சொன்னது…

இந்த பிரச்சனை தான் இப்ப பெரிய தலைவலி..உருப்படியான பதிவு

பெயரில்லா சொன்னது…

மாமூலான பதிவா இல்லாம உபயோகமான பதிவா இருக்கே.//

மாமூல் ஒன்னும் தேறலையாம்

பெயரில்லா சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் ......

பெயரில்லா சொன்னது…

யோவ்,சிங்கப்பூர்ல நல்ல நல்ல டி வி டி கிடைக்குமாமே,வாங்கி வர முடியுமா?(பணம் உங்க அக்கவுண்ட்ல போட்டுடறேன்)//

அந்தாளு செலவுக்கு காசில்லாம பம்மும்போது மாட்டிகிச்சு பலியாடு

பெயரில்லா சொன்னது…

மேட்டர் டிவிடிதானே?/

நல்ல படமா வாங்கி கொடுப்பா ஒட்டகத்தோட நீ இருக்கிற படத்தை கொடுத்துடாதே

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தகவலுக்கு நன்றி. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Prasanna சொன்னது…

அவரு Ombudsman இல்ல superman :)

karthikkumar சொன்னது…

சிங்கப்பூர் போறேன் அஞ்சு நாளைக்கு பதிவு போடமாட்டேன் அப்டின்னு சொன்னிங்க

karthikkumar சொன்னது…

அதுவும் மொக்க பதிவ இல்லாம நல்ல பதிவா போட்ருகீங்க இதெல்லாம் சரியில்ல

karthikkumar சொன்னது…

அப்பாடா 50 போட்டாச்சு

GSV சொன்னது…

நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவருதான் !!! தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

GSV சொன்னது…

அப்பறம் பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க !!! KRP செந்த்தில் அண்ணா அட்ரஸ் கேட்டு கண்ட எடுத்துக்கெல்லாம் போயிட்டு வரகூடாது ...

க ரா சொன்னது…

பயனுள்ள பகிர்தல் நன்றி ரமேஷ் :)

சிவராம்குமார் சொன்னது…

செம பயனுள்ள பதிவு!!!

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல தகவல்... வங்கிகளுக்கு banking ombudsman எப்படியோ அதுபோல தான் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு Nodal Officer... நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்து நாயாக கத்தினாலும் வேலை நடக்காது... அதுவே நோடல் ஆபிசருக்கு ஒரே ஒரு கால் செய்தால் போதும்... சலாம் போட்டு வேலை செய்வார்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கலக்கல்.. ரொம்ப நாள் கழிச்சு(?), ”அவன் தொடையை தட்டிட்டு ஆடின படம் என்ன?. ஷகீலா, சாரி கட்டி நடிச்ச படம் எது”னு , பொதுஅறிவு பதிவா இல்லாம( ஹி..ஹி), நல்ல பதிவா போட்டதற்க்கு, உங்கள் நண்பருக்கு(!), என்னுடைய வாழ்த்தை தெரிவியுங்கள்..

மாணவன் சொன்னது…

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே,

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

அலைகள் பாலா சொன்னது…

உண்மையிலேயே ரொம்ப பயனுள்ள பதிவு...

Anisha Yunus சொன்னது…

அட,
உண்மைலயே ரொம்ப நல்ல விஷயம் அண்ணா. இங்க அமெரிக்காவுல BBBன்னு ஒரு நிறுவனம் இருக்கு. இந்த மாதிரி சில அமெரிக்க நிறுவனங்களும் நடந்துகிட்டப்ப நான் அவங்ககிட்ட புகார் செஞ்சு சரியாகியிருக்கு. இந்தியாவுலயும் அதே மாதிரி ஒன்னு இருக்கறதை பத்தி படிச்சு சந்தோஷமா இருக்கு :)

பகிர்ந்ததற்காக நன்றிண்ணா.

MUTHU சொன்னது…

VERY USEFUL INFORMATION ABOUT BANKING.

MUTHU சொன்னது…

UNICODE TAMIL TYPE (KEYBOARD LAYOUT) SOFTWARE NEED. PLEASE HELP. MY EMAIL ID IS isakki.dvk@gmail.com

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது