Horoscope

திங்கள், டிசம்பர் 6

மழையே மழையே

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேணாம்
ஒரு கருப்பு கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு

இப்படிதான் கவிதை எழுதி இனிமே ப்ளாக் எழுதனும்னு பன்னிக்குட்டியும் குட்டி பன்..சீ குட்டி பணக்காரன் அருணும் சொன்னங்க. அதான் இப்படி. ஹிஹி.

ரெண்டு நாளா சென்னைல நல்ல மழை. இன்னிக்கு சென்னைல ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ். கடைகள் அடைப்பு. பஸ், டாக்ஸி ஓடவில்லை. ரோடெல்லாம் தண்ணீர். சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 

வெயில்காலத்தில் மழை எப்ப வரும் என காத்திருப்பது, மழை காலத்தில் ஏண்டா மழை பெய்ஞ்சு உயிரை எடுக்குதுன்னு புலம்பிகிட்டே போட் சர்வீஸ்க்கு மாறுவது. வருட வருடம் நமக்கு இதே வேலைதான். ஏன் இப்படி மழைக்காலத்தில் நிவாரணம் அப்டின்னு புலம்புறதுக்கு பதில் வெயில் காலத்திலையே முன் ஏற்பாடு செஞ்சா என்ன?

இதில் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை. அவங்களா மேல இருந்து தண்ணியை கொட்டுறாங்க. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவந்தாங்க. அது இல்லைனா வீட்டுக்கு ரேசன் கார்டு எல்லாம் ரத்துன்னு சொன்னாங்க. இது நமக்காகத்தான் சொல்றாங்கன்னு எத்தனை பேர் செஞ்சாங்க.

நான் தங்கி இருந்த வீட்டு ஓனர் கணக்கெடுக்க வந்தவங்களுக்கு காசு கொடுத்து சரி கட்டிட்டாரு. அவங்களும் காசு வாங்கிகிட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்குன்னு எழுதிட்டு போயிட்டாங்க.  "இதனால யாருக்கு நஷ்டம். உன் பஸ்  கண்ணாடிதான உடைஞ்சது" அப்டின்னு வடிவேலு சொன்ன மாதிரி யாருக்கு நஷ்டம் இப்போ. அரசுக்கா நமக்கா. 

வருஷ வருஷம் சப்-வே ல உள்ள தண்ணியை மோட்டார் வச்சு எடுக்குற செலவுல ஒரு பாலமே கட்டிடலாம். சப்-வே ல கீழ தண்ணி போற மாதிரி ஓபன் ஏரியா கட்டினால் பிரச்சனையே வராது.

மழைகாலத்தில் வீட்டுக்குள்ள தண்ணி வந்திடுச்சு அரசாங்கம் நிதி கொடுக்கலைன்னு புலம்புறதுக்கு பதில் கோடை காலத்துல நாம ஏன் அதற்கான முன் ஏற்பாடுகள் செய்ய கூடாது? எனக்கு தெரிந்த சில ஐடியா சொல்றேன். நீங்களும் உங்கள் கருத்துகளை கூறலாம்.

- மழைநீர் சேகரிப்பு தொட்டி எல்லார் வீட்டுலையும் கண்டிப்பா இருக்கணும். இதை நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட கண்டிப்பா சொல்லணும். ஒண்ணு ரெண்டாகும் .ரெண்டு நாளாகும். நிறைய பேருக்கு போய் சேரும். 

- ஒரு ஏரியா இருந்தா அந்த ஏரியாவுல எல்லோரும் சேர்ந்து பொதுவா ஒரு பெரிய குளம் அமைக்கலாம். தெருவில் தேங்கும் நீரை அங்க கொண்டு சேர்க்கலாம். 

- ஏரியாவுல உள்ள எல்லோரும் அங்க வசிக்கிற மக்கள்கிட்ட கோடை காலத்துல கொஞ்சம் கொஞ்சம் காசு வசூல் பண்ணி மழை நேரத்துல உபயோகப் படுத்திக்கலாம்.

- முக்கியமா ஏரில வீடு கட்ட மாட்டேன்னு மக்கள் முடிவு எடுக்க வேண்டும். அது போல் குளம் இல்லாத இடத்திலும் வீடு கட்ட கூடாது.

- குப்பையை குப்பை தொட்டியில் மட்டும்தான் கொட்ட வேண்டும்(அட யாருப்பா அது டெரர் ப்ளாக் பக்கம் போறது?)

இது அரசுக்கு:

- வருஷம் வருஷம் நிவாரண நிதிக்கு செலவு செய்றதுக்கு பதிலா இதற்கு மாற்று திட்டம் என்னன்னு யோசிக்கலாம். டெண்டர் கூட விடலாம். இன்றைய இளைஞர்கள் நிறைய ஐடியாவோட வருவாங்க. நல்ல ப்ராஜெக்ட்க்கு நீங்க ஆபர் கொடுக்கலாம்.

- மழை நீர் சேகரிப்பு தொட்டி இல்லாத வீட்டுக்கு எல்லாத்தையும் கட் பண்ணுங்க. இதை காசு வாங்கிட்டு சரியா கணக்கு எடுக்காதவங்களை வேலையை விட்டு தூக்குங்க. அபராதம் போடுங்க.

-  மழை நீர் சேகரிப்பு தொட்டிகட்டுறதுக்கு காசு செலவாகும்னுதான் எவனும் கட்ட மாட்டேங்கிறான். இலவச டிவி க்கு பதிலா இலவசமா மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி கொடுக்கலாம்.

- உங்க டிவில பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை சினிமா விளம்பரம் போடுவது போல, இதுக்கும் விளம்பரம் போடலாம்.

- கேரளாவுல மழைநீர் பத்தி எல்லா நடிகர்களும் சேர்ந்து நடித்து ஒரு குறும்படம் எடுத்த மாதிரி இங்க வேணா ஒரு விளம்பர படம் எடுத்து டிவி, தியேட்டர்ல போட சொல்லலாம். 

முக்கியமா நாம நிம்மதியா வாழணுன்னு மக்கள்தான் இதையெல்லாம் சிந்தித்து மழை காலத்துல வாயிலும் வயித்திலும் அடிச்சிக்காம முன் ஏற்பாடுகளை செய்து அரசாங்கத்துக்கும் உதவி செய்யணும். இதை தொடர் பதிவாக யார் வேணும்னாலும் தொடரலாம்.
..........

100 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

அட மழை

சௌந்தர் சொன்னது…

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேணாம்
ஒரு கருப்பு கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு///

என்னமா கவிதை எழுதுறார் (மக்கா இது என் சுவாச காற்று படத்தில் வரும் பாட்டுனு யாரும் சொல்லாதிங்க)

சௌந்தர் சொன்னது…

வெயில்காலத்தில் மழை எப்ப வரும் என காத்திருப்பது, மழை காலத்தில் ஏண்டா மழை பெய்ஞ்சு உயிரை எடுக்குதுன்னு புலம்பிகிட்டே போட் சர்வீஸ்க்கு மாறுவது. வருட வருடம் நமக்கு இதே வேலைதான். ஏன் இப்படி மழைக்காலத்தில் நிவாரணம் அப்டின்னு புலம்புறதுக்கு பதில் வெயில் காலத்திலையே முன் ஏற்பாடு செஞ்சா என்ன/////

இப்போ கூட ரமேஷ் பதிவு வேண்டாம் சொல்றோம் ஆனா அவர் பதிவு போடுறார்....என்ன கொடுமைங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன கொடும சார் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடடா மழடா அடமழடா.....!

எஸ்.கே சொன்னது…

அற்புதமான பதிவு!

அன்பரசன் சொன்னது…

//ரெண்டு நாளா சென்னைல நல்ல மழை.//

கொடுத்து வச்சவங்க நீங்க.

எஸ்.கே சொன்னது…

மழை நேரத்தில மட்டும்தான் இதோட பிரச்சினைகளை பற்றி யோசிக்கிறாங்க! ஆனா அப்புறம்???

எஸ்.கே சொன்னது…

அரசாங்கத்துகிட்டதான் எல்லாம் இருக்கு!

KANA VARO சொன்னது…

இலங்கையிலையும் மழை கொட்டுதுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் லீவு வுட்டா போயி தின்னுப்புட்டு தூங்குவியா... சிட்டிக்குள்ள குளம் கட்டுறாராம், அங்க அரையடி நெலம் கெடச்சா அஞ்சு பேரு கிட்ட வித்துடுறானுங்க...!

எஸ்.கே சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் லீவு வுட்டா போயி தின்னுப்புட்டு தூங்குவியா... சிட்டிக்குள்ள குளம் கட்டுறாராம், அங்க அரையடி நெலம் கெடச்சா அஞ்சு பேரு கிட்ட வித்துடுறானுங்க...!//

ஹா.. ஹா..
உண்மைதாங்க! எங்க இங்க நிலம் கிடைக்குது!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// முக்கியமா ஏரில வீடு கட்ட மாட்டேன்னு மக்கள் முடிவு எடுக்க வேண்டும்./////

ஏற்கனவே கட்டுனவங்கள என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

- குப்பையை குப்பை தொட்டியில் மட்டும்தான் கொட்ட வேண்டும்(அட யாருப்பா அது டெரர் ப்ளாக் பக்கம் போறது?)

Madhavan Srinivasagopalan சொன்னது…

ரொம்ப நல்ல எழுதி இருக்காங்க..
ரமேஷ், யாரு எழுதிக் கொடுத்தாங்க.. ?

வினோ சொன்னது…

நல்ல நல்ல ஐடியா கொடுக்கிறீங்க.. ஆனா யாரு கேட்கிறா?

கருடன் சொன்னது…

@ரமேஷ்

ஏலேய்!! ரமேசு... நான் உன்னை மானம், ரோசம், சூடு , சொரனை இல்லாத பதிவு மட்டும் தான் எழுதுவ நினைச்சேன். இப்படி கூட நீ எழுதுவியா ராசா?? நல்லா இருக்கு ரமேசுசுசுசு... :))

வைகை சொன்னது…

Ennappa ithu thoonga pora nerathula pathivu! Anaalum nallayirukku! Ithu unmaile sirippu police blogaa illa maari vanthuttanaa?!!!!!!

சரவணகுமரன் சொன்னது…

சூப்பர் பாஸ்

ராஜி சொன்னது…

நாம் செய்ய வேண்டியது:நம்ம வீட்டுக்கழிவு நீரைக் கொண்டு செல்லும் கழிவு நீர் வாய்க்காலையும், அது சென்று கலக்கும் இடம்வரை, வீடுகளில் இருக்கும் குப்பைகள், அப்புறம், ஹோட்டல்கள், மற்ற கடைகளில் சேரும் பிளாஷ்டிக் போன்ற சுற்றுச்சூழல் மாசு விளைவிக்கக் கூடிய குப்பைகளை கால்வாயில் கொட்டாமல் இருந்தாலே மழை நாளில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் தெருக்களில் தண்ணீர் தேங்காது. பிளாசுடிக் பொருட்கள் உபயோகிப்பதை அறவெ தவிர்த்திடல் வேண்டும்..,
அரசு செய்ய வேண்டியது: ஆறு, குளம் போன்றவற்றிர்கு நீரை கொண்டு செல்லும் பாதைகளை செப்பனிட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து அதனை தகுந்த வழியில் அகற்றிட வேண்டும். பிளாசுடிக் பொருட்களை உற்பத்தி செய்வதை அறவெ ஒழித்திட வேண்டும். அவைகள்தான் மழை நீர் பூமியில் கலப்பதை தடுக்கின்றது.

Chitra சொன்னது…

வருஷ வருஷம் சப்-வே ல உள்ள தண்ணியை மோட்டார் வச்சு எடுக்குற செலவுல ஒரு பாலமே கட்டிடலாம். சப்-வே ல கீழ தண்ணி போற மாதிரி ஓபன் ஏரியா கட்டினால் பிரச்சனையே வராது.

.... நிரந்தர தீர்வு எடுக்க ஆளே இல்லையா?

THOPPITHOPPI சொன்னது…

என்ன திடீர்னு இப்படி ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

Madhavan Srinivasagopalan சொன்னது… 15

ரொம்ப நல்ல எழுதி இருக்காங்க..
ரமேஷ், யாரு எழுதிக் கொடுத்தாங்க.. ?///

அடப்பாவி நான்தான் எழுதினேன். இன்னிக்கு மழை பேஞ்சதால என்னோட வேலை ஒன்னும் நடக்கலை. அதான் கோவம்..

Ramesh சொன்னது…

சூப்பரா ஐடியா குடுத்திருக்கீங்க... ஆனா நாம ஓட்டு போட்டு நாமளே படிச்சிக்க வேண்டியதுதான்.. நாம ஓட்டு போட்ட அரசியல் கட்சிகள் எதுக்கும் இது கேக்காது... அட போங்கப்பா...

பெயரில்லா சொன்னது…

-///// வருஷம் வருஷம் நிவாரண நிதிக்கு செலவு செய்றதுக்கு பதிலா இதற்கு மாற்று திட்டம் என்னன்னு யோசிக்கலாம். டெண்டர் கூட விடலாம். இன்றைய இளைஞர்கள் நிறைய ஐடியாவோட வருவாங்க. நல்ல ப்ராஜெக்ட்க்கு நீங்க ஆபர் கொடுக்கலாம்.
///////

டெண்டர் எல்லாம் வேணாம் ரமேஷு ..அதெல்லாம் ஓல்ட் பேஷன் ..,

NaSo சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//

Madhavan Srinivasagopalan சொன்னது… 15

ரொம்ப நல்ல எழுதி இருக்காங்க..
ரமேஷ், யாரு எழுதிக் கொடுத்தாங்க.. ?///

அடப்பாவி நான்தான் எழுதினேன். இன்னிக்கு மழை பேஞ்சதால என்னோட வேலை ஒன்னும் நடக்கலை. அதான் கோவம்..//

உன்னோட வேலை நெட்ல சாட் பண்றது. அதுவே நடக்கலையா?

dheva சொன்னது…

யாரு பிளாக் இது எனக்கு டவுட்டா இருக்கு வழி மாறி எங்கயாச்சும் வந்துட்டேனா...

விருதகிரி படம் பாத்துட்டு ரெம்ப சேஞ்ச் ஆயிட்ட கண்ணா... எனிவே

ஜூப்பரு....தம்பி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஜாக்கி சேகரும், வீட்டு ஓனரை திட்ராரு.
நீரும், அது என்னாது..ஆங்..மழை நீர் தொட்டி..அப்படீனு என்னமோ, வீட்டு ஓனரை திட்டரீர்..

என்னா-லா ரிலேஷன் இது?

ஹி..ஹி

..

அப்பாடா.. கொஞ்சம் உருப்படியா(?) எழுதியதுக்கு.. என்னுடைய
ஆங்...இரு...

ஆ.. என் மனமார்ந்த நன்னி....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பேசாம, சென்னைய தலைவர் குடும்பத்துக்கு எழுதி வெச்சுட்டு, கோயமுத்தூர் வந்து சேரு..

இங்க பாலும் தேனும் ஓடுவதை, எடுத்து குடிக்க ஆள் இல்ல...

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

30....

இது உங்கள் ப்ளாக்கில் 30ஆவது நபராக போடப்படும் கமென்ஸ்..

( நாங்களும் மொககை சாமிதானுங்க...கூவிகிறார் பட்டாபட்டி..)

மாணவன் சொன்னது…

//மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேணாம்
ஒரு கருப்பு கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு//

நல்லாருயிக்கு அண்ணே,

தொடருங்கள்......

மாணவன் சொன்னது…

//முக்கியமா நாம நிம்மதியா வாழணுன்னு மக்கள்தான் இதையெல்லாம் சிந்தித்து மழை காலத்துல வாயிலும் வயித்திலும் அடிச்சிக்காம முன் ஏற்பாடுகளை செய்து அரசாங்கத்துக்கும் உதவி செய்யணும். இதை தொடர் பதிவாக யார் வேணும்னாலும் தொடரலாம்...........//

என்ன திடீர்னு சிந்தனைப் பதிவு எழுத ஆரம்பிட்டீங்க சூப்பர் அண்ணே

தொடரட்டும்.....

Unknown சொன்னது…

நல்ல யோசனைகள்.

வெங்கட் சொன்னது…

எப்படி ரமேஷு இப்படி.. கலகறீங்க..!!
உண்மையாலுமே நல்ல பதிவு..!!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்னய்யா இது ஏரியா மாறி வந்திட்டனோ.. ஒரே சமூக அக்கறையா இருக்கு..

போலீஸ் கார் போலீஸ் கார்.. என்னாச்சு உங்களுக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதிவு,.. இப்போது உள்ள சூழ்நிலைக்கு அவசியமானதும் கூட..

யோசனைகளும் நல்லாயிருக்கு.. ஆனா நடக்குமா...

பேசாம நீங்களே டாக்டர் கட்சியில சேந்து அரசியல் வாதி ஆகிடுங்களே..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

daittilai டைட்டிலை பார்த்து நான் கூட கவிதையோன்னு ப்யந்தேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இப்படி நீங்களும் சீரியஸ் ஆகிட்டா எங்களை சிரிக்க வைப்பது யாரு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

ரொம்ப நல்ல எழுதி இருக்காங்க..
ரமேஷ், யாரு எழுதிக் கொடுத்தாங்க.. ?

நக்கலு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வழக்கமா மொக்கை போட்டா 250 கமெண்ட் வந்திருக்கும்,இப்போ பாருங்க..குறைஞ்சிடுச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 28

ஜாக்கி சேகரும், வீட்டு ஓனரை திட்ராரு.
நீரும், அது என்னாது..ஆங்..மழை நீர் தொட்டி..அப்படீனு என்னமோ, வீட்டு ஓனரை திட்டரீர்..

என்னா-லா ரிலேஷன் இது?

ஹி..ஹி
////

யோவ் பட்டா உனக்கு ஜாக்கிக்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லு. நம்ம டெரர், பன்னி,மங்குனியை வச்சு பேசி முடிச்சிடலாம்..என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

வழக்கமா மொக்கை போட்டா 250 கமெண்ட் வந்திருக்கும்,இப்போ பாருங்க..குறைஞ்சிடுச்சு//

நல்லதுக்கு காலம் ரோ எதுவும் இல்ல பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேணாம்
ஒரு கருப்பு கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு///

என்னமா கவிதை எழுதுறார் (மக்கா இது என் சுவாச காற்று படத்தில் வரும் பாட்டுனு யாரும் சொல்லாதிங்க)///

சௌந்தர் காலேஜ் படிக்கும்போது இது நான் எழுதின கவிதைன்னு என் நண்பனை ஏமாத்தினேன். அது நியாபகம் வருது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 6

அற்புதமான பதிவு!
////

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//KANA VARO சொன்னது… 10

இலங்கையிலையும் மழை கொட்டுதுங்க...
//

வெள்ளம் ஓடுதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 11

யோவ் லீவு வுட்டா போயி தின்னுப்புட்டு தூங்குவியா... சிட்டிக்குள்ள குளம் கட்டுறாராம், அங்க அரையடி நெலம் கெடச்சா அஞ்சு பேரு கிட்ட வித்துடுறானுங்க...!
////

நிறுத்தனும் வலைச்சர officer பெரிய பதவில இருக்கீங்க. நிறுத்த முடியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 13

//// முக்கியமா ஏரில வீடு கட்ட மாட்டேன்னு மக்கள் முடிவு எடுக்க வேண்டும்./////

ஏற்கனவே கட்டுனவங்கள என்ன பண்றது?
///

சவுதிக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பிடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வினோ சொன்னது… 16

நல்ல நல்ல ஐடியா கொடுக்கிறீங்க.. ஆனா யாரு கேட்கிறா?
///

கண்டிப்பா நடக்கும் பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 17

@ரமேஷ்

ஏலேய்!! ரமேசு... நான் உன்னை மானம், ரோசம், சூடு , சொரனை இல்லாத பதிவு மட்டும் தான் எழுதுவ நினைச்சேன். இப்படி கூட நீ எழுதுவியா ராசா?? நல்லா இருக்கு ரமேசுசுசுசு... :))
///

Thanks machi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை சொன்னது… 18

Ennappa ithu thoonga pora nerathula pathivu! Anaalum nallayirukku! Ithu unmaile sirippu police blogaa illa maari vanthuttanaa?!!!!!!
//
திருந்த விட மாட்டேங்களே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சரவணகுமரன் சொன்னது… 19

சூப்பர் பாஸ்
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராஜி

கருத்துகளுக்கும் தகவல்களுக்கும் நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra சொன்னது… 21

வருஷ வருஷம் சப்-வே ல உள்ள தண்ணியை மோட்டார் வச்சு எடுக்குற செலவுல ஒரு பாலமே கட்டிடலாம். சப்-வே ல கீழ தண்ணி போற மாதிரி ஓபன் ஏரியா கட்டினால் பிரச்சனையே வராது.

.... நிரந்தர தீர்வு எடுக்க ஆளே இல்லையா?
///

மக்கள்தான் முயற்சிக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 22

என்ன திடீர்னு இப்படி ?
///

summathan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 24

சூப்பரா ஐடியா குடுத்திருக்கீங்க... ஆனா நாம ஓட்டு போட்டு நாமளே படிச்சிக்க வேண்டியதுதான்.. நாம ஓட்டு போட்ட அரசியல் கட்சிகள் எதுக்கும் இது கேக்காது... அட போங்கப்பா...
///

நடக்கும் நாம மனசு வைக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தில்லு முல்லு சொன்னது… 25

-///// வருஷம் வருஷம் நிவாரண நிதிக்கு செலவு செய்றதுக்கு பதிலா இதற்கு மாற்று திட்டம் என்னன்னு யோசிக்கலாம். டெண்டர் கூட விடலாம். இன்றைய இளைஞர்கள் நிறைய ஐடியாவோட வருவாங்க. நல்ல ப்ராஜெக்ட்க்கு நீங்க ஆபர் கொடுக்கலாம்.
///////

டெண்டர் எல்லாம் வேணாம் ரமேஷு ..அதெல்லாம் ஓல்ட் பேஷன் //

சரி இப்ப உள்ள பேஷன் என்னனு சொல்லு? என்னது மறந்துட்டியா? போ போ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 26

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//

Madhavan Srinivasagopalan சொன்னது… 15

ரொம்ப நல்ல எழுதி இருக்காங்க..
ரமேஷ், யாரு எழுதிக் கொடுத்தாங்க.. ?///

அடப்பாவி நான்தான் எழுதினேன். இன்னிக்கு மழை பேஞ்சதால என்னோட வேலை ஒன்னும் நடக்கலை. அதான் கோவம்..//

உன்னோட வேலை நெட்ல சாட் பண்றது. அதுவே நடக்கலையா?
//

yes. no power yesterday. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dheva சொன்னது… 27

யாரு பிளாக் இது எனக்கு டவுட்டா இருக்கு வழி மாறி எங்கயாச்சும் வந்துட்டேனா...

விருதகிரி படம் பாத்துட்டு ரெம்ப சேஞ்ச் ஆயிட்ட கண்ணா... எனிவே

ஜூப்பரு....தம்பி!
//

தலைவர்தான் சொன்னாரு. நல்ல விஷயம் பண்ணனும். அப்படி பண்ணினா அடுத்த படத்துல சான்ஸ் தரேன்னு சொல்லிருகாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... சொன்னது… 29

பேசாம, சென்னைய தலைவர் குடும்பத்துக்கு எழுதி வெச்சுட்டு, கோயமுத்தூர் வந்து சேரு..

இங்க பாலும் தேனும் ஓடுவதை, எடுத்து குடிக்க ஆள் இல்ல...

ஹி..ஹி
///

கோயமுத்தூர்ல தேன் பாட்டில் கிடைக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///பட்டாபட்டி.... சொன்னது… 30

30....

இது உங்கள் ப்ளாக்கில் 30ஆவது நபராக போடப்படும் கமென்ஸ்..

( நாங்களும் மொககை சாமிதானுங்க...கூவிகிறார் பட்டாபட்டி..)
///

செல்வா 30-வது வடைக்கு சண்டை போட மாட்டான். அதனால என்ஜாய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 32

//முக்கியமா நாம நிம்மதியா வாழணுன்னு மக்கள்தான் இதையெல்லாம் சிந்தித்து மழை காலத்துல வாயிலும் வயித்திலும் அடிச்சிக்காம முன் ஏற்பாடுகளை செய்து அரசாங்கத்துக்கும் உதவி செய்யணும். இதை தொடர் பதிவாக யார் வேணும்னாலும் தொடரலாம்...........//

என்ன திடீர்னு சிந்தனைப் பதிவு எழுத ஆரம்பிட்டீங்க சூப்பர் அண்ணே

தொடரட்டும்.....
///

தேங்க்ஸ். சும்மா ஒரு புதிய முயற்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கலாநேசன் சொன்னது… 33

நல்ல யோசனைகள்.
///
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் சொன்னது… 34

எப்படி ரமேஷு இப்படி.. கலகறீங்க..!!
உண்மையாலுமே நல்ல பதிவு..!!
///

எப்பவுமே ஒரே மாதிரியா இருப்பாங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது… 36

நல்ல பதிவு,.. இப்போது உள்ள சூழ்நிலைக்கு அவசியமானதும் கூட..

யோசனைகளும் நல்லாயிருக்கு.. ஆனா நடக்குமா...

பேசாம நீங்களே டாக்டர் கட்சியில சேந்து அரசியல் வாதி ஆகிடுங்களே..
//

அதுக்குதான் இந்த விளம்பரம். நேரா அமெரிக்க ஜனாதிபதி ஆயிடலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 38

இப்படி நீங்களும் சீரியஸ் ஆகிட்டா எங்களை சிரிக்க வைப்பது யாரு?
///

சி.பி.செந்தில்குமார் சி.பி.செந்தில்குமார் சி.பி.செந்தில்குமார் சி.பி.செந்தில்குமார் சி.பி.செந்தில்குமார் சி.பி.செந்தில்குமார்

ஹரிஸ் Harish சொன்னது…

நல்ல பதிவு..

ஏன் திடீர்னு இப்படி மாறிட்டீங்க?..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஹாய் .....ரமேஷுக்கு பைத்தியம் தெளிஞ்சிட்டு ........

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ரமேஷு என் கண்ணுல இருந்து மழை கொட்டுது (கண்ணீர்ப்ப )........உன் பதிவ பார்த்து

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மொத்ததுல ரமேஷ் மானம் உள்ளவன் ,ரோசம் உள்ளவன் ,சுயமரியாதை சிற்பி .இப்படி எதுனாலும் சொல்லலாம் .......நல்ல பதிவு மக்கா ......

Kousalya Raj சொன்னது…

மழை நேரத்துக்கு வேண்டிய சிறந்த ஆலோசனைகள்...

//ஒரு ஏரியா இருந்தா அந்த ஏரியாவுல எல்லோரும் சேர்ந்து பொதுவா ஒரு பெரிய குளம் அமைக்கலாம். தெருவில் தேங்கும் நீரை அங்க கொண்டு சேர்க்கலாம்.//

நல்ல ஆலோசனை, நடக்கணுமே...

'வரும் முன் காப்போம்'

மழை நின்ற பின்னும், தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய்கள் வேறு பரவும்...

நல்ல பகிர்வு...

Ramesh சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 24

சூப்பரா ஐடியா குடுத்திருக்கீங்க... ஆனா நாம ஓட்டு போட்டு நாமளே படிச்சிக்க வேண்டியதுதான்.. நாம ஓட்டு போட்ட அரசியல் கட்சிகள் எதுக்கும் இது கேக்காது... அட போங்கப்பா...
///

நடக்கும் நாம மனசு வைக்கணும்
//

ஓ நம்ம மனச எங்க கொண்டு போய் வெச்சா இதெல்லாம் நடக்கும் ரமேஷ்

Unknown சொன்னது…

வருங்கால ஒருநாள் முதல்வர் ரமேஷ் வாழ்க

karthikkumar சொன்னது…

இது அரசுக்கு:///
இந்த பத்தில நீங்க எழுதினதெல்லாம் உங்க தலைவர் உங்களுக்கு எழுதி கொடுத்ததுதானே.

karthikkumar சொன்னது…

அப்புறம் சென்னைல ஏன் இப்படி மழை கொட்டுதுன்னா அங்க உங்கள மாதிரி ஆளுக இருக்காங்கல்ல அதான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

யோவ் பட்டா உனக்கு ஜாக்கிக்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லு. நம்ம டெரர், பன்னி,மங்குனியை வச்சு பேசி முடிச்சிடலாம்..என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குற..
//

அட ..ங்^$%#@.... நீ போலீஸ்காரன் மாறியா பேசரே?.. உம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஜாக்கி, முடி வெட்டீட்டு காசு தராம போயிட்டாரு.. அதான்.... ஹி..ஹி

செல்வா சொன்னது…

//ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவந்தாங்க. அது இல்லைனா வீட்டுக்கு ரேசன் கார்டு எல்லாம் ரத்துன்னு சொன்னாங்க. இது நமக்காகத்தான் சொல்றாங்கன்னு எத்தனை பேர் செஞ்சாங்க.
//

நீங்க கேப்டன் கட்சில இருந்து அம்மா கட்சிக்கு தாவிட்டீங்களா ..?

செல்வா சொன்னது…

அடடா நல்ல பதிவு போட்டிருக்காரே ..௧!

அஞ்சா சிங்கம் சொன்னது…

ஒரு ஏரியா இருந்தா அந்த ஏரியாவுல எல்லோரும் சேர்ந்து பொதுவா ஒரு பெரிய குளம் அமைக்கலாம். தெருவில் தேங்கும் நீரை அங்க கொண்டு சேர்க்கலாம். //////

எங்க ஊரு எம்.எல்.ஏ. க்கு இது தெரிஞ்சா போதும் அந்த குளத்துக்கும் சேர்த்து பட்டா போடுவாரு

பெசொவி சொன்னது…

80!

பெசொவி சொன்னது…

நீ என்னதான்யா நினைசுகிட்டிருக்கே, என் ப்ளாகில் வந்து ஷகீலா படங்களப் பத்தி எழுத சொல்லிட்டு இங்க நல்ல பிள்ளையாட்டம் உருப்படியான பதிவு போடறியா? கெட்ட போலீஸ்ப்பா நீயி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 68

ரமேஷு என் கண்ணுல இருந்து மழை கொட்டுது (கண்ணீர்ப்ப )........உன் பதிவ பார்த்து
///

rittu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Kousalya

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓ நம்ம மனச எங்க கொண்டு போய் வெச்சா இதெல்லாம் நடக்கும் ரமேஷ் //

சேட்டு கடை பிகர்கிட்ட அடகு வைய்ங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இரவு வானம் சொன்னது… 72

வருங்கால ஒருநாள் முதல்வர் ரமேஷ் வாழ்க
//

இன்னும் பெட்டரா!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar சொன்னது… 73

இது அரசுக்கு:///
இந்த பத்தில நீங்க எழுதினதெல்லாம் உங்க தலைவர் உங்களுக்கு எழுதி கொடுத்ததுதானே.
///

public

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar சொன்னது… 74

அப்புறம் சென்னைல ஏன் இப்படி மழை கொட்டுதுன்னா அங்க உங்கள மாதிரி ஆளுக இருக்காங்கல்ல அதான்.
//

அட ஆமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 76

ஜாக்கி, முடி வெட்டீட்டு காசு தராம போயிட்டாரு.. அதான்.... ஹி..ஹி
//

லோக்கல்லையா? அதாம்ப உங்க சிங்கப்பூர்லயா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது… 77

//ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவந்தாங்க. அது இல்லைனா வீட்டுக்கு ரேசன் கார்டு எல்லாம் ரத்துன்னு சொன்னாங்க. இது நமக்காகத்தான் சொல்றாங்கன்னு எத்தனை பேர் செஞ்சாங்க.
//

நீங்க கேப்டன் கட்சில இருந்து அம்மா கட்சிக்கு தாவிட்டீங்களா ..?
//

உண்மையை எங்க இருந்தாலும் சொல்லலாம். உங்கள கட்சிகாரங்க மாதிரி வெங்கட் பிடிச்ச முயலுக்கு நாலு கால் இருந்தாலும் மூணு கால்னு சொல்ல மாட்டோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மண்டையன் சொன்னது… 79

ஒரு ஏரியா இருந்தா அந்த ஏரியாவுல எல்லோரும் சேர்ந்து பொதுவா ஒரு பெரிய குளம் அமைக்கலாம். தெருவில் தேங்கும் நீரை அங்க கொண்டு சேர்க்கலாம். //////

எங்க ஊரு எம்.எல்.ஏ. க்கு இது தெரிஞ்சா போதும் அந்த குளத்துக்கும் சேர்த்து பட்டா போடுவாரு
//

haha

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 81

நீ என்னதான்யா நினைசுகிட்டிருக்கே, என் ப்ளாகில் வந்து ஷகீலா படங்களப் பத்தி எழுத சொல்லிட்டு இங்க நல்ல பிள்ளையாட்டம் உருப்படியான பதிவு போடறியா? கெட்ட போலீஸ்ப்பா நீயி!
///

நீங்க ஏன் தப்பா நினைக்கிறீங்க. போய் உங்க பிளாக்குல கமெண்ட் பாருங்க

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ரமேஷுக்கு ஆறாவது வேலை செய்ய ஆரம்பிடுச்சுடோய்...

venkat சொன்னது…

நல்ல விஷயம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வரமாடாங்கலே நம்ம மக்கள்.கஷ்டப்படுற நேரத்துல அதை பத்தி நினைப்பார்கள். அப்புறம் மறந்துவிடுவார்கள்.
நல்ல பதிவு நண்பரே.

vinu சொன்னது…

94 loading............

vinu சொன்னது…

95 loading.........

vinu சொன்னது…

96 loading.......

vinu சொன்னது…

97 loading............

vinu சொன்னது…

98

vinu சொன்னது…

99..........

vinu சொன்னது…

me the 100uuuuuuuuuuuuuu

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது