புதன், நவம்பர் 2

வேலாயுதம் ஹிட்டா? ஃபிளாப்பா?

இதுவரை வந்த வேலாயுதம் விமர்சனங்கள் எல்லாத்தையும் படித்தேன். சர்தார்ஜியை விட அதிகமாக கலாய்க்கப்படுவது விஜய்தான்(தேங்க்ஸ் சிபி). நானும் நேற்று படம் பார்த்தேன். ஆனால் சுறா,வில்லு,வேட்டைக்காரன் போல ஒன்றும் மோசமான படம் இல்லை. முதல் பாதியில் சந்தானத்தின் காமடி, விஜய்,சரண்யா,சூரி காமடியில் நன்றாகத்தான் இருந்தது. இரண்டாம் பாதியில்தான் முடியலை. ஓடும் ரயிலை நிப்பாட்டுறது, ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு பைட் என படுத்தி எடுத்து விட்டனர். மொத்தத்தில் ஒரு வாட்டி பார்க்கலாம்.

இனி வரும் காலங்களில் விஜய் மாற்றி சில விசயங்களை மாற்றிகொண்டால் மறுபடியும் கில்லியாக வலம் வரலாம்.

- பஞ்ச் டயலாக் பேசி காதை பஞ்சராக்காமல் இருக்கணும்.

- ஒரே மாதிரி டயலாக் டெலிவரியை மாத்தணும். கையை முஞ்சிக்கி நேர வச்சு கரீக்டா இருக்குதா என்பது, கண்ணை சிமிட்டி சிமிட்டி வெட்கபடுவது.இதே மாதிரி ஒரே டயலாக் டெலிவெரி செஞ்சதாலதான் விவேக் காமெடினாலே நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடுறோம்.

- அவரோட அப்பா மீடியால ஓவரா விஜயை பத்தி பில்டப் கொடுக்குறத நிப்பாட்டனும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி காப்பி வித் அனுவுல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விஜயை தவிர ஒரு நல்ல தலைவர் கிடைக்க மாட்டாங்க அப்டிங்கிரமாதிரி பேட்டி கொடுத்தாரு. பந்தயம் படத்துல அவரை ஹீரோ தலைவரேன்னு அழைக்கிற மாதிரி சீன் வச்சாரு. தயவு செஞ்சு வேணாம். எங்களால முடியலை.

- நம்பவே முடியாத சீன்(ட்ரைன்ல குதிக்கிறது, பூமிக்குள்ள இருந்து மேல வர்றது இதெல்லாம் வேணாம்)

விஜய் ரசிகர்களுக்கு:

என்னடா விஜயை பத்தி தப்பா சொல்றானேன்னு பொங்கி எழ வேண்டாம். ரசிகர்களுக்காக மட்டுமே அவர் படம் எடுத்து ஓடும் அப்டின்னா சுறா,வில்லு,வேட்டைக்காரன் ஹிட் ஆயிருக்கனும். எங்களை மாதிரி பொது ஜனங்களும் பார்த்து படம் பிடிச்சதாலதான் காதலுக்கு மரியாதை, திருப்பாச்சி, கில்லி படம் எல்லாம் ஓடுச்சு. இனிமே நல்ல படங்கள் கொடுக்க விஜயை வாழ்த்துகிறோம்25 கருத்துகள்:

வெளங்காதவன் சொன்னது…

இட்லி...

வெளங்காதவன் சொன்னது…

தோசை....

வெளங்காதவன் சொன்னது…

வடை...

வெளங்காதவன் சொன்னது…

படிச்சிட்டு வாரேன் அப்பு...

வெளங்காதவன் சொன்னது…

நல்லாத்தானே இருந்தீர்?

ஏன் திடீர்னு அணிலுக்கு அடவைஸ் எல்லாம்?

#வாழுக...

விக்கியுலகம் சொன்னது…

hehe!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

விஜய் தன்னுடைய வட்டத்தை விட்டு விலகி வெளியில் வரவேண்டும்..

கோமாளி செல்வா சொன்னது…

உண்மையில் எனக்கும் விஜய் பிடிக்கும். ஆனா சில படங்களால அவர் மேல கொஞ்சம் வெறுப்பு உண்டாகிருச்சு.

என்ன இருந்தாலும் சச்சின் பார்த்த அந்த விஜய யாருமே வெறுக்க முடியாது :))

கோமாளி செல்வா சொன்னது…

சரி, ஜெனி பத்தி ஒன்னுமே காணோம் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சச்சின் பார்த்த அந்த விஜய//

என்னது சச்சின் விஜயை பார்த்தாரா?

சண்முகம் சொன்னது…

//அவரோட அப்பா மீடியால ஓவரா விஜயை பத்தி பில்டப் கொடுக்குறத நிப்பாட்டனும். //

சரியான முடிவு பாஸ்.

செங்கோவி சொன்னது…

இதைத் தான்யா நானும் சொன்னேன்..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//மொத்தத்தில் ஒரு வாட்டி பார்க்கலாம்.
//
ஆமாம்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

DVD வந்துட்டு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்


தலை, தளபதி மற்றும் புத்தர்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் இன்னும் பார்க்கலியே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஓட்டு போட யுடான்ஸ் ஓட்டு பட்டை எங்கே...?

ராஜி சொன்னது…

Super advice

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ஆகா நடுநிலை விமர்சனம் இது தாங்க. சூப்பரு.அமெரிக்காகாரன் ஒசத்தியா? ஜப்பான்காரன் ஒசத்தியா? படத்தை பாருங்க!

Yoga.S.FR சொன்னது…

கரெக்டு!

பட்டாபட்டி.... சொன்னது…

இனிமே நல்ல படங்கள் கொடுக்க விஜயை வாழ்த்துகிறோம்
//


அதுவும், உமக்கு ஓசியில் கிடைக்க வாழ்த்துகிறேன்

உதவாக்கரை சொன்னது…

இனிமே நல்ல படங்கள் கொடுக்க விஜயை வாழ்த்துகிறோம்////

உங்க வாயல மன்னிக்க கையால விஜய்க்கு
வாழ்த்து கிடைச்சாச்சு . இனி விஜய்
டாப்பா வருவாரு பாருங்க .அப்புறமா நீங்க அவர வாழ்த்துனதுக்கு அவரு கடைசியா நடிச்ச 5 படத்தோட DVD வீட்டுக்கு பார்சல்
அனுப்ப படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொல்கிறேன்

வினோத் சொன்னது…

அப்படியா.. சரிதான்'

! சிவகுமார் ! சொன்னது…

பஞ்ச் பேசுவதை விடுவார் என்ற நம்பிக்கை இல்லை.

vinu சொன்னது…

25

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது