Horoscope

திங்கள், ஏப்ரல் 23

ங்கொய்யால என்னா அடி!!!

கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆச்சு. இதுவரைக்கும் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்ச்சு. பேச்சிலரா இருந்தப்ப நான் எனக்கு ஒருத்தனுக்கே சமைச்சு, என்னோட டிரஸ் மட்டுமே துவைச்சு நிம்மதியா இருந்தேன். கல்யாணம் ஆன பிறகாவது இந்த ரெண்டு வேலை இல்லாம நிம்மதியா இருக்கலாம்ன்னு பார்த்தேன்.(யாருப்பா அது என்னை ஆணாதிக்கவாதின்னு சொல்றது. பிச்சுபுடுவேன். சொல்றத முழுசா கேளுங்க).

இந்த டெரர் கும்மி பசங்க கண்ணுபட்டதோ என்னவோ இப்பெல்லாம் நான் ரெண்டு பேருக்கு சமைச்சு, ரெண்டு பேர் டிரஸ் துவைக்க வேண்டிதிருக்கு. தனியா இருக்கும்போதாவது சோறு வச்சு, தயிர் ஊத்தி சாப்பிட்டு எஸ்கேப்பு ஆகலாம். ஆனா இப்போ ஒரு கூட்டு,ஒரு குழம்பு,பொரியல், ரசம் வைக்க வேண்டிதிருக்கு. என்ன செய்ய கூடிய சீக்கிரம் நான் ஒரு நல்ல பிரஸ்டீஜ் குக்கர் ஆயிடுவேன்னு நினைக்கிறேன்(எனக்கு பிரஸ்டீஜ் ரொம்ப முக்கியம்).

சரி விசயத்துக்கு வரேன். நேத்து வீட்டுல சமைக்கும்போது (யார் சமைக்கும்போதா? நான்தான். ஹிஹி) பாத்திரம் கருக்குற வாசனை வந்து வீட்டுக்காரம்மா ஒரு முறை முறைச்சிட்டு ஒழுங்கா சமைக்ககூட தெரியல நீ எல்லாம் என்ன MSC படிச்ச(MSC ல இதெல்லாமா சொல்லி தராங்க? அவ்) அப்டின்னு கேவலமா காறி துப்பிட்டு ஒழுங்கா அடுப்ப சிம்முல வைங்க அப்டின்னு சொன்னாங்க.

அவங்க நல்ல நேரமா, இல்லை என் கெட்ட நேரமான்னு தெரியலை. எனக்கு சிம்மை அடுப்புல வைங்கன்னு கேட்டது. ஒருவேளை சிம்முல அடுப்பை கரியாக்காம இருக்குறதுக்கு ஏதும் இருக்கு போல, படிச்ச புள்ளை ஏதோ சொல்லுதேன்னு என் wife மொபைல்ல உள்ள சிம்மை கழட்டி அடுப்புல போட்டேன். இதை பார்த்த என் wife முறைக்க அடுத்து என்ன இந்த பதிவோட தலைப்புதான் நடந்துச்சு. :(

நீதி: அருண்,வைகை,பாபு இவெங்கெல்லாம் தினமும் வந்து உடம்பெல்லாம் வலிக்குது, தலையில வீங்கிருக்குன்னு சொன்னப்பெல்லாம் ஏதோ வேலை செஞ்ச அசதி, வெயில்ல தலைல பொக்களம் வந்திருக்குமோன்னு நினைச்சி வெள்ளந்தியாவே இருந்துட்டேன். ஆனா இப்பத்தான் புரியுது எல்லா பக்கிகளும் பொண்டாட்டி கிட்ட தர்மடி வாங்கிருக்கானுகன்னு. ராஸ்கல்ஸ் இவ்ளோ நாள் என்னை எமாத்திருக்கீங்க.

ஸ்பெஷல் குறிப்பு டூ டெரர் கும்மி ராஸ்கல்ஸ்: இந்த பதிவை என் வீட்டுக்கு ரீடைரெக்ட் பண்ண முயற்சி செய்து கொலை கேசில் உள்ளே போக வேணாம் என எச்சரிக்கிறேன்!!!

60 கருத்துகள்:

தினேஷ்குமார் சொன்னது…

ஆஹா அங்கேயுமா மாம்ஸ்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

:(

மாலுமி சொன்னது…

வாழ்த்துக்கள் ரமேஷ் :)))

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஆரம்பத்துல வலிக்கத்தான் செய்யும்.. அப்புறம்....

அப்புறம்..
அப்புறம்..
அப்புறம்..

வேறென்ன.. பழகிடும்.

அருண் பிரசாத் சொன்னது…

சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா....

ஓ அப்படி சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?

மாலுமி சொன்னது…

/// சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா.... ///

ரமேஷ் மூணாம் கிளாஸ் முப்பது வருசமா படிச்சுட்டு இருக்கானே :)

தினேஷ்குமார் சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...
சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா....

ஓ அப்படி சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?///

பங்கு பப்ளிக் பப்ளிக் அப்புறம் போலீசுக்கு டின்னு கட்டிடுவாங்க

அருண் பிரசாத் சொன்னது…

இல்லை பங்கு... ஏதோ நம்மாளால நல்லதை சகோதரிக்கு எடுத்து சொல்லுவோம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாலுமி கூறியது...

வாழ்த்துக்கள் ரமேஷ் :)))//

grrr.thoo

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

ஆரம்பத்துல வலிக்கத்தான் செய்யும்.. அப்புறம்....

அப்புறம்..
அப்புறம்..
அப்புறம்..

வேறென்ன.. பழகிடும்.//

அனுபவசாலி சொன்னா சர்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா....

ஓ அப்படி சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?//

//

Do u want my original certificate?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாலுமி கூறியது...

/// சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா.... ///

ரமேஷ் மூணாம் கிளாஸ் முப்பது வருசமா படிச்சுட்டு இருக்கானே :)//

போடா போயி கைதட்டுற வழிய பாரு

வெளங்காதவன்™ சொன்னது…

இதெல்லாம் சும்மா ட்ரைலர்தான் மச்சி!!
இன்னும் ஒரு வருஷம் பொறு மவனே.....
ரெண்டு, மூணாகட்டும்.. அப்பத்தெரியும்.
#கமண்ட் உதவி- நரி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

இல்லை பங்கு... ஏதோ நம்மாளால நல்லதை சகோதரிக்கு எடுத்து சொல்லுவோம்....//

அன்பான குடும்பத்துக்கு படிப்பு முக்கியமில்லை. அன்புதான் முக்கியம்.ஷ்யப்பா

வெளங்காதவன்™ சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...
இல்லை பங்கு... ஏதோ நம்மாளால நல்லதை சகோதரிக்கு எடுத்து சொல்லுவோம்....
///

Pardon Pardon!!!!

Unknown சொன்னது…

அடிக்கு பயப்பிடாத
அஞ்ச சிங்கம்
ரமேஷ் அண்ணன் அவர்கள்
வாழ்க

வைகை சொன்னது…

பேச்சிலரா இருந்தப்ப நான் எனக்கு ஒருத்தனுக்கே சமைச்சு, என்னோட டிரஸ் மட்டுமே துவைச்சு நிம்மதியா இருந்தேன்//

அப்ப.. அந்த கலாக்காவுக்கு சமைச்சி கொடுத்ததெல்லாம்? :-)

வைகை சொன்னது…

இந்த டெரர் கும்மி பசங்க கண்ணுபட்டதோ என்னவோ இப்பெல்லாம் நான் ரெண்டு பேருக்கு சமைச்சு, ரெண்டு பேர் டிரஸ் துவைக்க வேண்டிதிருக்கு. //

சந்தடி சாக்குல கூட்டி மொழுகுரத சொல்லவே இல்லையே? :-)

வைகை சொன்னது…

என்ன செய்ய கூடிய சீக்கிரம் நான் ஒரு நல்ல பிரஸ்டீஜ் குக்கர் ஆயிடுவேன்னு நினைக்கிறேன்(எனக்கு பிரஸ்டீஜ் ரொம்ப முக்கியம்).//

அப்ப கூட விசில் அடிக்க உனக்கு உரிமை இருக்காது :-)

வைகை சொன்னது…

படிச்ச புள்ளை ஏதோ சொல்லுதேன்னு என் wife மொபைல்ல உள்ள சிம்மை கழட்டி அடுப்புல போட்டேன். இதை பார்த்த என் wife முறைக்க அடுத்து என்ன இந்த பதிவோட தலைப்புதான் நடந்துச்சு. :( //

போடாங்... அவங்க சொன்ன மாதிரி சிம் கார்ட கலட்டி கீழ வச்சு அதுமேல அடுப்ப வச்சு சிம்ல அடுப்ப வச்சிருந்தா இது நடந்திருக்காதுள்ள? :-)

செல்வா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இதுபோலவே தினமும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி.

முத்தரசு சொன்னது…

அடிங்.... கொய்யால....அடியின் வீரியம் புரியுது

வாழ்க வளமுடன் தினமும் அடியுடன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தம்பி இன்னும் ட்ரீட் வரல.........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அருண் பிரசாத் கூறியது...

சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா....

ஓ அப்படி சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?//

//

Do u want my original certificate?///////////

அத வெச்சி என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

திரு. சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் சமையலையும் சாப்பிட இன்னொருவர் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சமையலை ரசித்து செய்யும் பக்குவம் தங்களுக்கு வரவில்லை என்று தெரிகிறது. சமையல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல் போன்ற பணிகளை இன்னும் சிறப்பாக செய்திட நீங்கள் திரு. பாபு அவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க இங்கே கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி

Yoga.S. சொன்னது…

வணக்கம் ரமேசு சார்!/////மக்களே நான் அப்பவே சொல்லல?பையன் கலியாணம் ஆனதுக்கப்புறம் பிசி ஆயிட்டான்னு.ஏப்ரல் பத்து அன்று "முக்கிய" பதிவு போட்டப்பவே அலேர்ட் ஆயிருக்க வேணாமா?ரமேசுத் தம்பி,இப்ப ரெண்டு பேருக்கு சமைச்சு,துணி துவைச்சு,எக்செட்ரா,எக்செட்ரா...............!மூணாவது ஆளும் வந்திட்டா .......................ஐயகோ!மூத்திரத்துணி,கக்கா இத்யாதி,இத்யாதி...........ஹ!ஹ!ஹா!!!!!

karthikkumar சொன்னது…

இதயங்கனிந்த வாழ்த்துகள் மாம்ஸ் ..:)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் ஒன்னு சொல்லிகிடுறேன் ..இவன அடுப்பங்கரை பக்கமே அவன் வீட்டம்மா விடாது ..இவனை கக்கூஸ் மட்டுமே கழுவ சொல்லும் அவன் வீட்டம்மா ..
அது வெளிய தெரிஞ்சிர கூடாதுன்னு இப்படி ஒரு பில்ட் அப் விட்டு பதிவு எழுதி இருக்கான்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு? ரேஸ்கல், கண்ணதொட.. சிரி, ம்ம்ம் இப்ப எப்படி இருக்கு? உள்ள எரிமலையே பொங்குனாலும் வெளில காட்டாம வெரப்பா நெஞ்ச நிமித்துக்கிட்டு நிக்கிறவன் தான் ஒரு போலீஸ்காரனுக்கு அழகு. அண்டர்ஸ்டேண்ட்?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

ஒரு அதிகாரி இப்படி சோத்த பொங்கி வீட்ட கழுவி, துணி துவச்சிட்டு இருந்தா அப்புறம் டிப்பார்ட்மெண்ட்ட கவனிக்கிறாது யாரு? நான்சென்ஸ்..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

சரி வரட்டா தம்பி, வீட்ல ஏதாவது வேலை இருந்தா சைலண்ட்டா போய் பாரு, இப்படியெல்லாம் பப்ளிக்ல போட்டு டிப்பார்ட்மெண்ட் பேர கெடுக்காத என்ன?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

நீபாட்டுக்கு இப்படி போட்டுட்டு இருந்தா அப்புறம் பப்ளிக்லாம் ஒரு உயர் அதிகாரி என்னையும் தப்பா நெனப்பாங்கள்ல?

செல்வா சொன்னது…

திரு பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு.,

தாங்கள் நமது சிரிப்புப் போலீஸ் அவர்களுக்கு சமையல்,துணி துவைத்தல் மற்றும் வீட்டைச் சுத்தமாக வைத்தல் போன்ற வேலைகளில் அனுபவம் போதாது என்று எழுதியிருப்பது எனக்குச் சற்று வேதனையளிக்கிறது. இருந்தபோதிலும் அதிலும் உண்மையிருப்பதாகத் தாங்கள் நினைத்து அதற்கு பாபு அவர்களை பரிந்துரைத்திருப்பது பாராட்டுக்குரியது. விரைவில் நமது ரமேசு அண்ணன் அவர்கள் இது போன்ற அன்றாடம் செய்யவேண்டிய வேலைகளைக் கற்றுத் தேர்ந்துவிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவது அவசியமாகிறபடியால்
இறைவனை வேண்டி அமர்கிறேன். நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இதுபோலவே தினமும் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி.//

பன்றிக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது…

இந்த டெரர் கும்மி பசங்க கண்ணுபட்டதோ என்னவோ இப்பெல்லாம் நான் ரெண்டு பேருக்கு சமைச்சு, ரெண்டு பேர் டிரஸ் துவைக்க வேண்டிதிருக்கு. //

சந்தடி சாக்குல கூட்டி மொழுகுரத சொல்லவே இல்லையே? :-)//

நான் உன்னைபத்தி சொல்லலை. என்னை பத்தி சொன்னேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அருண் பிரசாத் கூறியது...

சந்தடி சாக்குல MSC படிச்சிட்டேன் பொய் சொல்லுற பார்த்தியா....

ஓ அப்படி சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?//

//

Do u want my original certificate?///////////

அத வெச்சி என்ன பண்றது?//

பேப்பர் சாப்பிடுரவந்தான நீ. சாப்பிடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

திரு. சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் சமையலையும் சாப்பிட இன்னொருவர் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சமையலை ரசித்து செய்யும் பக்குவம் தங்களுக்கு வரவில்லை என்று தெரிகிறது. சமையல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல் போன்ற பணிகளை இன்னும் சிறப்பாக செய்திட நீங்கள் திரு. பாபு அவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க இங்கே கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி//

பாபு அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் ரமேசு சார்!/////மக்களே நான் அப்பவே சொல்லல?பையன் கலியாணம் ஆனதுக்கப்புறம் பிசி ஆயிட்டான்னு.ஏப்ரல் பத்து அன்று "முக்கிய" பதிவு போட்டப்பவே அலேர்ட் ஆயிருக்க வேணாமா?ரமேசுத் தம்பி,இப்ப ரெண்டு பேருக்கு சமைச்சு,துணி துவைச்சு,எக்செட்ரா,எக்செட்ரா...............!மூணாவது ஆளும் வந்திட்டா .......................ஐயகோ!மூத்திரத்துணி,கக்கா இத்யாதி,இத்யாதி...........ஹ!ஹ!ஹா!!!!!
//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது…

இதயங்கனிந்த வாழ்த்துகள் மாம்ஸ் ..:)
//

kar.thooo

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் ஒன்னு சொல்லிகிடுறேன் ..இவன அடுப்பங்கரை பக்கமே அவன் வீட்டம்மா விடாது ..இவனை கக்கூஸ் மட்டுமே கழுவ சொல்லும் அவன் வீட்டம்மா ..
அது வெளிய தெரிஞ்சிர கூடாதுன்னு இப்படி ஒரு பில்ட் அப் விட்டு பதிவு எழுதி இருக்கான்
//

Same 2 u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

ஒரு அதிகாரி இப்படி சோத்த பொங்கி வீட்ட கழுவி, துணி துவச்சிட்டு இருந்தா அப்புறம் டிப்பார்ட்மெண்ட்ட கவனிக்கிறாது யாரு? நான்சென்ஸ்..
//

நான்சென்ஸ்நான்சென்ஸ்நான்சென்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப.செல்வக்குமார் சொன்னது…

திரு பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு.,

தாங்கள் நமது சிரிப்புப் போலீஸ் அவர்களுக்கு சமையல்,துணி துவைத்தல் மற்றும் வீட்டைச் சுத்தமாக வைத்தல் போன்ற வேலைகளில் அனுபவம் போதாது என்று எழுதியிருப்பது எனக்குச் சற்று வேதனையளிக்கிறது. இருந்தபோதிலும் அதிலும் உண்மையிருப்பதாகத் தாங்கள் நினைத்து அதற்கு பாபு அவர்களை பரிந்துரைத்திருப்பது பாராட்டுக்குரியது. விரைவில் நமது ரமேசு அண்ணன் அவர்கள் இது போன்ற அன்றாடம் செய்யவேண்டிய வேலைகளைக் கற்றுத் தேர்ந்துவிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவது அவசியமாகிறபடியால்
இறைவனை வேண்டி அமர்கிறேன். நன்றி.//
பாலிடால் குடித்துவிட்டு அமரவும்.நன்றி

செல்வா சொன்னது…

//பாலிடால் குடித்துவிட்டு அமரவும்.நன்றி//

இதுபோன்ற உணவுப் பதார்த்தங்களை நான் உண்ணக் கூடாதென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். நன்றி.

நாய் நக்ஸ் சொன்னது…

வீட்டு வேலை செய்யும்போது அப்ப அப்ப
போர் அடிக்கும்....
அந்த சமயம்...
என்னிடம் போனில் பேசினால்...
மிக தெம்பாக மீண்டும் வீட்டு வேலை செய்யலாம்....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

//////NAAI-NAKKS கூறியது...
வீட்டு வேலை செய்யும்போது அப்ப அப்ப
போர் அடிக்கும்....
அந்த சமயம்...
என்னிடம் போனில் பேசினால்...
மிக தெம்பாக மீண்டும் வீட்டு வேலை செய்யலாம்....
//////////

ஓடிர்ரா கைப்புள்ள.........

ராஜி சொன்னது…

சம்சார கடலில் நீந்த ஆரம்பித்துள்ள ரமேசுக்கு, ‘ஒழுங்கா’ கரைசேர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

விடுங்க ஆம்பளையா பிறந்தாலே இதை போன்ற துன்பங்களை தாங்கிக்கொள்ள வேண்டும், நாம ஆம்பளைக எதிர்த்து பேச முடியுமா? சொல்லுறத கேட்டுட்டு செம்மறியாடு மாதிரி பின்னாடியே போக வேண்டும், சமைக்க வேண்டும் துணி துவைக்க வேண்டும் அவிங்க டிவி சீரியல் பார்க்கும் போது பேக்கு மாதிரி பார்த்தது தொலையனும்...அப்பஅப்ப பூரிகட்டையில அடி வாங்கனும்...நீங்க இப்பத்தானே புதுசு அதா இப்படி அழுவுறீங்க பழக..பழக..சரியா போயிடும் தலை புடைப்புக்கு சைபாலும்...தேங்காய் எண்ணை தேய்க்கவும்.....அதுவும் கேட்கவில்லையென்றால் நாய்நக்ஸ்க்கு போன் போடவும்.....தலைவலியே மேல் என நினைக்க தோனும்....

எஸ்.கே சொன்னது…

விரைவில் மிகப்பெரிய சமையல் கலைஞர் ஆக வாழ்த்துக்கள்!

எஸ்.கே சொன்னது…

விரைவில் மிகப்பெரிய சமையல் கலைஞர் ஆக வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

// கலைஞர் ஆக //

then CM....

Romeoboy சொன்னது…

என்ன ஆனாலும் சரி மனசு விட்டுடாதீங்க ரமேஷ் :))

vinu சொன்னது…

ஹிஹிஹி வீட்டுக்கு வீடு வாசப்படி.....

பெயரில்லா சொன்னது…

கோலம் போடுறது, மொட்ட மாடில வடாம் காய வக்கிறது...இன்னும் நெறைய இருக்கு...என்சாய்..என்சாய்!!

ஜெட்லி... சொன்னது…

he he..

Unknown சொன்னது…

நீங்க நல்லா வருவீங்க பாஸ் :-)

Unknown சொன்னது…

யோவ் மாப்ள..ஒரு மாசத்துக்கே அலுத்துகிட்டா எப்படி...நாங்கள்லாம் வருச கணக்கா வாங்கிக்கொண்டு இருக்கோமே...வீரனுக்கு இதெல்லாம் ஜகஜம்யா ஹெஹெ!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

யோவ்.. சும்மா பொலம்பாதே...

சரி

சரி,

எப்ப கல்யாணம்?..
சோறு போடுவியா?

( கோமா-முன்னேற்றக்கழகம்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

யோவ்.. சும்மா பொலம்பாதே...

சரி

சரி,

எப்ப கல்யாணம்?..
சோறு போடுவியா?

( கோமா-முன்னேற்றக்கழகம்)///

கோமா-முன்னேற்றக்கழகம்
# Italy?

MARI The Great சொன்னது…

////"ங்கொய்யால என்னா அடி!!!"///

விடுங்க பாஸ் வெந்நீ வைச்சு குளிச்சா எல்லாம் சரியாய் போயிரும் இதுக்குபோயி அழுதுக்கிட்டு .. :)

Jey சொன்னது…

விட்ரா சூ-னா பா-னா , இதையெல்லாம் பப்ளிக்ல சொல்லிகிட்டு........

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது