செவ்வாய், செப்டம்பர் 11

Hunt For Hint - 2: வாழ்த்து செய்திகள்

இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவிருக்கும் Hunt For Hint - 2 வுக்காக தலைவர்களிடம் இருந்த வாழ்த்து செய்திகள் உங்களுக்காக...
ஜெயலலிதா:

இன்று காலை டெரர் கும்மியில் Hunt for Hint-2 ஆரமிக்க போகிறதென்பதே எனக்கு தெரியாது. இன்று பேப்பரை பார்த்தே தெரிந்துகொண்டேன். அதனால் உடனே வாழ்த்து செய்தி தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். பாவம் நான் உத்தரவிட்டது அவர்களுக்கு தெரியாது. அதனால் நானே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன். ஜெயிப்பவர்களுக்கு நஷ்ட ஈடாக சாரி பழக்க தோஷத்தில் சொல்லிட்டேன், ஜெயிப்பவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

கலைஞர்:
என் பாசமிகு டெரர் கும்மி தம்பிகள் Hunt for Hint-2 விளையாட்டை இன்று  காலை ஆரமிக்க இருக்கிறார்கள். அந்த விளையாட்டு மிகவும் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று நான் நேற்று மதியம் உண்ணா விரதம் இருந்தேன். அப்போது பிரணாப் முகர்ஜி கேமை நல்லபடியாக நடத்திவிடுவோம் என்று சொன்னதை நம்பி உண்ணாவிரதத்தை கை விட்டேன். ஆனால் கையை விடவில்லை. ஏனென்றால் சோனியாகாந்தி காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று கேட்டுகொண்டார். வாழ்க Hunt for Hint-2 . வளர்க அண்ணா நாமம்.


டாக்டர் ராமதாஸ்:

Hunt for Hint-2 என்பது தமிழா? மக்களே சிந்திப்பீர். உடனே இந்த விளையாட்டின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையெனில்நாளைக்கு யார் யார் விளையாடுகிறார்களோ அவர்கள் வீட்டுக்குள் புகுந்து எம் கட்சிக்கார்கள் கணினியை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
புரட்சி கலைஞர்:

என்ன மக்களே இது. இவர்கள் ஏதோ ஒரு விளையாட்டை ரெடி செய்வார்களாம். மக்களே. அதை நீங்கள் போயி விளையாடனுமாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்களே உங்கள் வீட்டுக்கு வந்து இந்த விளையாட்டை விளையாடி கொடுப்போம் மக்களே. சிந்தித்து பாருங்கள் மக்களே. விளையாட ஆசைபடுவர்கள் என் கையால் குட்டு வாங்கினால் மகாராஜா ஆகி ஜெயித்து விடலாம் மக்களே.

For More info please click : www.terrorkummi.com

10 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

மொத்தம் நாலு பேருதான் கருத்து சொல்லி இருக்காங்க...மீதி....

நாய் நக்ஸ் சொன்னது…

Enga ennudaiya
vazhthu
seithi...???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாய் நக்ஸ் கூறியது...

Enga ennudaiya
vazhthu
seithi...???//

நீர் ஏழையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோவை நேரம் கூறியது...

மொத்தம் நாலு பேருதான் கருத்து சொல்லி இருக்காங்க...மீதி....//

விளையாட போயிட்டாங்க

ரசிகன் சொன்னது…

//டெரர் கும்மியில் Hunt for Hint-2 ஆரமிக்க போகிறதென்பதே எனக்கு தெரியாது//
மார்க்கெட்டிங் இன்சார்ஜ் சரி இல்ல...
மாநிலத்தின் பெருந்தலைகள் எல்லாம் வாழ்த்து சொல்லும் போது நானும் சொல்லிக்கறேன்.உங்களுக்கும் எங்களுக்கும் வாழ்த்துக்கள் .. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரசிகன் கூறியது...

//டெரர் கும்மியில் Hunt for Hint-2 ஆரமிக்க போகிறதென்பதே எனக்கு தெரியாது//
மார்க்கெட்டிங் இன்சார்ஜ் சரி இல்ல...
மாநிலத்தின் பெருந்தலைகள் எல்லாம் வாழ்த்து சொல்லும் போது நானும் சொல்லிக்கறேன்.உங்களுக்கும் எங்களுக்கும் வாழ்த்துக்கள் .. :)//

இல்லியே நான் வீடு வீடா போயி நோட்டிஸ் போட்டனே

#இப்படிக்கு பாபு

விலம்பர பிரிவு அதிகாரி

டெரர் கும்மி

பட்டிகாட்டான் Jey சொன்னது…

:-)

Yoga.S. சொன்னது…

GOOD MORNING!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

கேப்டனுக்கு கடைசியில் அங்ங்ங்.. போடாமல் இருட்டடிப்பு செய்ததை கண்ணடித்து...அங்ங்... கண்டித்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்! :)

வரலாற்று சுவடுகள் சொன்னது…

//உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்///

:) :)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது