Horoscope

வியாழன், செப்டம்பர் 20

க்ளூ - HFH2

ஒரு வழியா வெற்றிகரமாக HFH-2 முடிந்துவிட்டது. Facebook , Twitter, G+ல் ஆதரவைத் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. HFH-2 போட்டி நடக்கும்போது வெளியான சில  G+ சை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

+Terror Pandian  டேய் ரமேசு.. வாடா அங்க போய் HUNT FOR HINT கேம் வெள்ளாடலாம்....

+Ramesh Subburaj  வேணாண்டா டெரர்... அந்த நேரத்துக்கு ஏதாவது கோவிலுக்கு போனா ஓசில வாழப்பழமாவது கெடைக்கும்! #HFH2  

=====================================================================

போங்கடா நீங்களும் உங்க கேமும்... க்ளூ தேடி கண்டு பிடிக்குரதுக்குள்ள ரெண்டு ஃபுல்லு அடிச்சதுதான் மிச்சம் :-)) #HFH2  

=====================================================================

நல்லா பாரு Level 8 க்கு  க்ளூ தெரியுதா?
க்கும்... ராக்கெட்ல ஏறுனாகூட தெரியாது போல? :-) #HFH2

=====================================================================

வைகை மாமோய்ய்ய்.... சீக்கிரம் ஹன்ட் பார் ஹின்ட் கேம் முடிச்சிட்டு ஹால் ஆப் ஃபேமுக்கு வந்துரு! உனக்காக கோவிலுக்கு போய் அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு வந்து காத்துகிட்டு இருக்கேன்!
( பாசக்கார புள்ளைகப்பா... ) :-))
http://hfhseason2.terrorkummi.com/Game/Home.aspx

 =====================================================================

ஆண்டவா... HUNT FOR HINT கேம்ல தங்கு தடையின்றி க்ளூ கிடைக்க நீதாம்பா அருள் புரியணும் :-))

=====================================================================

+Terror Pandian : மச்சி..நான் மூணு லெவல் தாண்டிட்டேன்! நீ எத்தனை லெவல் தாண்டிருக்க?

+Ramesh Subburaj: போடா மச்சி... கம்ப்யூட்டர சுவத்து ஓரமா வச்சிட்டேன், மொத லெவலுக்கே தாண்ட முடியலை, சுவரு இடிக்குது!

+Terror Pandian : ???!!!!  
#HUNT FOR HINT

=====================================================================

சிவன் : பக்தா! நும்  தவத்தை மெச்சினோம்! என வரம் வேண்டும்?

பக்தன் : கடவுளே! டெரர் கும்மி நடத்தும் HUNT FOR HINT போட்டியில் பத்தாவது லெவலுக்கு ஆன்சர் வேண்டும்!

சிவன் : போடாங்... அஞ்சாவது லெவலுக்கு ஆன்சர் தெரிஞ்சிகிட்டு வர சொல்லித்தான் பார்வதி என்னை பூமிக்கு பத்தி விட்டா! நீ என்னடான்னா பத்தாவது லெவலுக்கு ஆன்சராம்? மொதல்ல நீ அஞ்சாவது லெவல் ஆன்சர சொல்லு!

பக்தன் : ஞே...ஞே....!!!!

=====================================================================

பிரேமலதா : பாவா..பாவா... டெரர் கும்மில Hunt For Hint னு ஏதோ கேம் நடத்துறாங்களாம்! வாங்க போய் விளையாடலாம்!

கேப்டன் : ஏய்..இரு புள்ள துப்பாக்கிய எடுத்துகிட்டு வர்றேன்!

பிரேமலதா : ஐயோ.. இதுக்கு எதுக்கு துப்பாக்கி? கம்ப்யூட்டர்தானே வேணும்?

கேப்டன் : பொய் சொல்லாத புள்ள!  Hunt ன்னா வேட்டைன்னு எங்க கந்தசாமி வாத்தியாரு சொல்லியிருக்காரு! எல்லோரும் அவர குஸ்தி வாத்தியாருன்னு தப்பா நினைக்கிறீங்க, ஆனா அவரு எனக்கு பாடம் சொல்லி கொடுத்த பால்வாடி வாத்தியாரு! யாருகிட்ட? ஆங்.!

=====================================================================

ரஞ்சி : சுவாமி! டெரர் கும்மியில் ஏதோ Hunt For Hint கேம் நடத்துகிறார்களாம்! கலந்துகொள்கிறீர்களா?

நித்தி : க்கும்... ரூம்ல வச்ச கேமராவே கண்டுபிடிக்க முடியல? இதுல நான் க்ளூ கண்டுபிடிச்சு கேம் விளையாடறதுக்கு?

ரஞ்சி : அப்ப உங்களுக்கு இதுவும் முடியாதா?
=====================================================================


ஆகவே..... பவர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்.... பரிசுகளை அள்ளுவீர்.........

இப்படிக்கு
+Thiagarajan Saravanakumar
பிரபஞ்ச தலைவர்
பவர்ஸ்டார் கொலவெறி குரூபிஸ்
=====================================================================

+மாலுமி. ப்ரொபசனல் குடிகாரன்  : மச்சி நான் 25 லெவலும் முடிச்சிட்டேன்.

நான்: சூப்பர் மச்சி. எப்படி. உனக்குத்தான் அறிவே கிடையாதே.

மாலுமி : போடாங். நான் வின் பண்ணிட்டேன்.

நான்: சரி டா க்ளூ கொடு.

மாலுமி: முதல் லெவெல்ல Welcome ல நடுவுல இருக்குற பட்டனை க்ளிக் பண்ணு.

நான்: அப்படி ஒன்னும் கிடையாதே.

மாலுமி: போடாங். இந்த லிங்க்ல தான் விளையாடுற?

நான்: பரதேசி. அது போன வருஷம் உள்ள லிங்க் டா.

மாலுமி: ஓ அதான் ஏன்னடா நமக்கு தெரிஞ்ச கேள்வியா இருக்கேன்னு பார்த்தேன்.

# இந்த பரதேசி போதைல இப்படியுமா செய்யும்!!!!
=====================================================================

அட சொன்னா கேளுங்கப்பா... அங்க எல்லாம் க்ளூ வைக்கலை... :)

Hunt For Hint - Season 2 Rocks....

http://hfhseason2.terrorkummi.com/hfhseason2/Game/Home.aspx

=====================================================================
ரெண்டாவது நாளாக ரெண்டாவது லெவல் க்ளூவை தேடிக்கொண்டிருக்கும் மொக்கை என்கிற +Thiagarajan Saravanakumar 







விஜயகாந்தே வானத்தைப்போல படம் பண்றாராம் விருச்சுககாந்துக்கு ஆக்சன் படம் கேக்குதாம். நாலாவது லெவல் தாண்டாத என்கிட்டே எட்டாவது லெவெலுக்கு க்ளூ கேட்டா என்ன பண்றது. அவ்.

=====================================================================
 அன்புள்ள கேம் அப்பாட்டக்கர்ஸ் அவர்களுக்கு,
இம்சைஅரசன் பாபு எழுதிக் கொல்லும் மெடல் என்னவென்றால், தாங்கள் இன்று காலை Hunt For Hint-2 என்கிற கேமை ரிலீஸ் செய்ய போகிறீர்கள். ஆனால் Hunt For Hint-2 என்று விளம்பரப்படுத்திவிட்டு ஒரு கேம் தான் ரிலீஸ் செய்யப்போகிறோம் என்பதை நினைக்கும்போது நாம எந்த மாதிரி சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய முடிகிறது.

ஒரு லிங்க் இங்க இருக்கு இன்னொன்னு எங்க என மற்றவர்கள் கேட்கும்போது என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. சரி நீ எதுக்கு பதில் சொல்லணும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு உரிமை இருக்கிறது ஏனென்றால் நான்தானே விலம்பர பரிவு அதிகாரி. ஈமு கோழிக்கே சரத்குமார்,சத்தியராஜ் பதில் சொல்லவேண்டும் என நினைக்கும் மக்கள் மத்தியில் விலம்பரம் பண்ணின நான்தானே பதில் சொல்லவேண்டும்.

சரி இப்போது விசயத்துக்கு வருவோம். நானோ AC ரூமுக்கு ஃபேன் கூட மாட்ட முடியாத பரம ஏழை பதிவர். இந்த கேமில் ஜெயித்தால் பரிசாம். ஆனால் டெரர் கும்மி ஆள்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்துகொள்ள கூடாதாம். என் கேள்வி என்னவென்றால் காதலிகளும் குடும்பத்தார் லிஸ்டில் வருவார்களா? என் காதலிகளை விளையாட சொல்லலாமா?

மற்றும் அவர்கள் ஜெயிக்க கேமில் உள்ள அனைத்து லெவல்க்கும் விடைகள் தருவீர்களா? ஏனென்றால் என் காதலிகள் முன்னால் எனக்கு இமேஜ் முக்கியம். ஏழை பதிவருக்கு ஏன் இத்தனை காதலிகள் என்று நீங்கள் கேக்கலாம். அது எல்லாம் என் எழுத்துக்களால் என்னை கவர்ந்த வாசகியர் வட்டம். என் காதலிகளில் ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு பணம் தேவை. ஆகவே எனக்கு கேம் விடைகள் சொல்லுமாறு ஆமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

இப்படிக்கு
இம்சை அரசன் பாபு
விலம்பர பரிவு அதிகாரி
டெரர் கும்மி

செவ்வாய், செப்டம்பர் 11

Hunt For Hint - 2: வாழ்த்து செய்திகள்

இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவிருக்கும் Hunt For Hint - 2 வுக்காக தலைவர்களிடம் இருந்த வாழ்த்து செய்திகள் உங்களுக்காக...
ஜெயலலிதா:

இன்று காலை டெரர் கும்மியில் Hunt for Hint-2 ஆரமிக்க போகிறதென்பதே எனக்கு தெரியாது. இன்று பேப்பரை பார்த்தே தெரிந்துகொண்டேன். அதனால் உடனே வாழ்த்து செய்தி தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். பாவம் நான் உத்தரவிட்டது அவர்களுக்கு தெரியாது. அதனால் நானே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன். ஜெயிப்பவர்களுக்கு நஷ்ட ஈடாக சாரி பழக்க தோஷத்தில் சொல்லிட்டேன், ஜெயிப்பவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

கலைஞர்:
என் பாசமிகு டெரர் கும்மி தம்பிகள் Hunt for Hint-2 விளையாட்டை இன்று  காலை ஆரமிக்க இருக்கிறார்கள். அந்த விளையாட்டு மிகவும் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று நான் நேற்று மதியம் உண்ணா விரதம் இருந்தேன். அப்போது பிரணாப் முகர்ஜி கேமை நல்லபடியாக நடத்திவிடுவோம் என்று சொன்னதை நம்பி உண்ணாவிரதத்தை கை விட்டேன். ஆனால் கையை விடவில்லை. ஏனென்றால் சோனியாகாந்தி காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று கேட்டுகொண்டார். வாழ்க Hunt for Hint-2 . வளர்க அண்ணா நாமம்.


டாக்டர் ராமதாஸ்:

Hunt for Hint-2 என்பது தமிழா? மக்களே சிந்திப்பீர். உடனே இந்த விளையாட்டின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையெனில்நாளைக்கு யார் யார் விளையாடுகிறார்களோ அவர்கள் வீட்டுக்குள் புகுந்து எம் கட்சிக்கார்கள் கணினியை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
புரட்சி கலைஞர்:

என்ன மக்களே இது. இவர்கள் ஏதோ ஒரு விளையாட்டை ரெடி செய்வார்களாம். மக்களே. அதை நீங்கள் போயி விளையாடனுமாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்களே உங்கள் வீட்டுக்கு வந்து இந்த விளையாட்டை விளையாடி கொடுப்போம் மக்களே. சிந்தித்து பாருங்கள் மக்களே. விளையாட ஆசைபடுவர்கள் என் கையால் குட்டு வாங்கினால் மகாராஜா ஆகி ஜெயித்து விடலாம் மக்களே.





For More info please click : www.terrorkummi.com

வியாழன், செப்டம்பர் 6

சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?

 

ஸ்பைடர் மேன்: ஹாய் மச்சி. எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?

சூப்பர் மேன்:  நல்லா இருக்கேன் இருக்கேன் மச்சி. இப்ப முன்ன மாதிரி வெளில வர முடியலை.

ஸ்பைடர் மேன்: ஏண்டா?

சூப்பர் மேன்: என்னடா பண்றது? பொண்ணுங்க கூட அரைகுறை டிரஸ்ல வெளில சுத்த முடியுது. பசங்களால முடியலை. நான் பேண்ட்டுக்கு மேல ஜட்டி போட்டு சுத்துரதால கலாச்சாரம் பாதிக்குதுன்னு ஆளாளுக்கு போராட்டம் பண்றாங்க மச்சி. அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோட வந்து என்னோட ஜட்டி மேல பூசிட்டான். ஆபாசத்தை மறைக்கிரானாம். நல்லவேளை அப்போ நான் திரும்பி நின்னுக்கிட்டு இருந்தேன். இல்லைன்னா என்ன ஆயிருக்கும்?

ஸ்பைடர் மேன்: பன்னாடை அந்த ஜட்டியத்தான் உள்ள போட்டு தொலைஞ்சா என்னடா?

சூப்பர் மேன்: பரம்பரை பரம்பரையா இப்படித்தான மச்சி போட்டிக்கிட்டு வர்றோம். இப்போ திடீர்ன்னு என்னை மாத்த சொன்னா நான் என்ன செய்யுறது?

ஸ்பைடர் மேன்: கஷ்டம்டா சாமி.  உன் நிலைமை பரவாயில்லை மச்சி. என் நிலைமையை கேட்டா ரொம்ப கஷ்டம். இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. என் பொண்டாட்டி துணி காயபோடுறதுக்கு வலை கட்டியே என் உயிரு போகுது மச்சி. எவ்ளோ நேரம்தான் கையை நீட்டி வலை உருவாக்கி அப்புறம் துணி காயபோடுற வரைக்கும் நிக்கவேண்டிதிருக்கு. அதை வேற போட்டோ எடுத்து Facebook ல போட்டு என் மானத்தை வாங்கிட்டாங்க. அப்புறம் அது கிராபிக்ஸ்ன்னு சொல்லி சமாளிச்சேன்.

சூப்பர் மேன்: அதெல்லாம் விடு மச்சி டெரர் கும்மில Hunt For Hint-2 அடுத்த வாரம் ரிலீசாம். நீ விளையாட போறியா?

ஸ்பைடர் மேன்: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெளில சுத்தலாம். கம்ப்யூட்டர்ல விளையாடலாம்.  நான் அப்படியா? வீட்டுல பாத்திரம் கழுவுரதில இருந்து கக்கூஸ் கழுவுற வரைக்கும் நான்தான் செய்ய வேண்டிதிருக்கு.

சூப்பர் மேன்: போடா பரதேசி. நேத்து ஒரு சின்ன பையன் என்னை பார்த்து ஜட்டி வெளில போட்டிருக்கிறாரே இந்த அங்கிள் முகமூடியான்னு கேக்குறான் மச்சி. அப்படியே விஷம் குடிச்சு சாகலாம் போல இருந்துச்சு.

ஸ்பைடர் மேன்: இத விட உன்னை யாரும் அசிங்கப்படுத்த முடியாது மச்சி. சரி எப்படி நம்ம ரெண்டு பேரும் இதை விளையாடுறது. என்னால வர முடியாதே.

சூப்பர் மேன்: இப்ப என்கிட்டே வர்றதெல்லாம் பழைய வலைதான். NIIT ல .net ன்னு புதுசா ஒரு கோர்ஸ் இருக்கு. அதை போய் படிச்சா என்கிட்டே இதைவிட அட்வான்சா நெட் கிடைக்கும். நான் போயி படிச்சிட்டு வரேன்னு உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு வா மச்சி. நாம ரெண்டு பேரும் விளையாடலாம்.
ஸ்பைடர் மேன்: சூப்பர் ஐடியா. எங்க இந்த வருஷம் விளையாட முடியாம போயிடுமோன்னு நினைச்சேன். தேங்க்ஸ் மச்சி.

சூப்பர் மேன்: சரி மச்சி. இதுல பரிசு ஜெயிச்சா என்ன மச்சி செய்வ?

ஸ்பைடர் மேன்: முதல்ல உனக்கு பேண்ட்டுக்குள்ள போடுற மாதிரி ஜட்டி எடுத்து தருவண்டா.

சூப்பர் மேன்: !!!!

For more information please click http://www.terrorkummi.com/2012/09/hunt-for-hint-2-10000.html link


உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது