Horoscope

ஞாயிறு, ஜூலை 18

டிராபிக் போலீஸ்

நான் பிறந்தது நகரத்துல ஆனாலும் வளர்ந்தது எல்லாம் கிராமத்துலதான். அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. ஏதாவது லீவுக்கு ஊருப்பக்கம் வந்தா உண்டு. அப்பெல்லாம் எங்க வீட்டுல டூ வீலர் எல்லாம் கிடையாது.

அப்பெல்லாம் நண்பர்கள் கிட்ட டூ வீலர் வாங்கிகிட்டு ஊர சுத்துவோம். அது கிராமம் அப்டின்கிறதினால நிறைய பேர்கிட்ட லைசன்ஸ் கிடையாது. இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை.

அப்புறம் காலேஜ் படிக்கும்போது சொந்த ஊருக்கு வந்துட்டோம். அது சிட்டி அப்டின்கிறதினால ட்ராபிக் போலீஸ் எல்லாம் மீட் பண்ண வேண்டியதாய் போச்சு. நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது என் நண்பனோட டூ வீலர் எடுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்தேன்.

அப்போ நம்ம டிராபிக் போலீஸ் கைய காட்டினாரு. நமக்கென்ன லிப்ட் கேக்குறாரு போலன்னு ஸ்டைல்-லா வண்டிய நிப்பாட்டினேன்(நீ என்ன பண்ணினாலும் ஸ்டைல்-தான் விட்ரா விட்ரா). அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் கீழே.

போலீஸ்: லைசென்ஸ் எடு.

நான்: (நான் கிராமத்துலயே இருந்துட்டதினால லைசென்ஸ் பத்தி தெரியாதே) அப்டின்னா என்ன சார்?

போலீஸ்: (நான் நக்கல் பண்றதா நினைச்சிகிட்டு) என்ன நக்கலா ஒழுங்கா லைசென்ஸ் எடு.

நான்: சார் சத்தியமா லைசென்சுன்னா என்னன்னு எனக்கு தெரியாது.

போலீஸ்: சரி ஆர்.சி புக் எடு

நான்: அப்டின்னா?

போலீஸ்: இன்சூரன்ஸ்?

நான்: சத்தியமா இல்லை சார்

போலீஸ்: (செம கடுப்பாகி) ஏய் என்ன விளையாடுறியா. எதுவுமே இல்ல என்ன தைரியத்துல வண்டி ஓட்டிகிட்டு வர்ற?

நான்: சார் பகல்ல வர்றதுக்கு என்ன பயம் சார்?

போலீஸ்: டேய் (கடுப்புல மரியாதை குறைஞ்சிடுச்சு) என்ன நக்கலா? எந்த ஊர்டா நீ?

நான்: (நான் வளர்ந்த கிராமத்து பேரை சொன்னேன்)

போலீஸ்: ஓ நீ பட்டிக்காட்டானா?(Jey இல்லப்பா).

நான்: ஆமா சார்

போலீஸ்: அதான பார்த்தேன். தம்பி இங்கெல்லாம் வண்டி ஒட்டுறதுக்கு லைசென்ஸ் கொடுப்பாங்க. அத வச்சிதான் ஓட்டனும்.

நான்: அது இல்லைனா வண்டி சரியா ஓடாதா சார்?(எனக்கு அப்போ லைசென்ஸ்னா ஏதோ வண்டில மாட்டுற பொருள் அப்டின்னு நினைச்சு கேட்டேன்)

போலீஸ்: இல்லப்பா(அப்டின்னு சொல்லிட்டு லைசென்ஸ், ஆர்.சி. புக் பத்தி அரைமணி நேரம் விளக்கம் கொடுத்தார். உண்மையிலையே நல்ல போலீஸ் அவர்)

நான்: லைசென்ஸ் எங்க சார் போய் எடுக்கணும்?

போலீஸ்: R.T.O ஆபீஸ் போய் எடுத்துடுப்பா.

நான்: சார் அது எங்க இருக்கு. எவ்ளோ செலவாகும். அதுக்கு சொந்த வண்டி வேணுமா?

போலீஸ்: (மனதுக்குள் நாம இவன்கிட்ட காச கறக்கலாம்னு பார்த்தா இவன் நம்மளை மொக்கை போடுறானே)

போலீஸ்: (அதுக்கப்புறம் நான் அவரை விட்டா போதும்னு அவரே எஸ்கேப் ஆயிட்டாரு)

அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட  தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?

29 கருத்துகள்:

Jey சொன்னது…

முதல் வெட்டு.

சீமான்கனி சொன்னது…

ஐ..நான்தான் பஸ்ட்டு...

சீமான்கனி சொன்னது…

பார்ரா அப்போ நம்ம போலீசு ஒன்னும் தெரியாத பச்ச புள்ளையா இருந்தாராம் நாங்க நம்பிட்டோம்...நம்பிட்டோம்...நம்பிட்டோம்...கிரேட் எஸ்கேப்...

க ரா சொன்னது…

நண்பா போலிஸ் ஸ்டஷனுக்கு வண்டி எடுக்க நீ அலைஞ்சத சொல்லாம என்னஎன்னவோ கதை வுட்ருக்கியே,

Jey சொன்னது…

//அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. //

நம்மள விட 2 ஆப்பு கூடப்படிச்சித , ரொம்பவும் பீத்திகிட்டு திருயுதே இந்த டேமேஜர் சிப்பு.....

Jey சொன்னது…

//அப்பெல்லாம் நண்பர்கள் கிட்ட டூ வீலர் வாங்கிகிட்டு ஊர சுத்துவோம்.//

இந்த பீச நம்பியும் வண்டிய குடுத்திருகானுகளே... அவிங்கள மொதல வெட்டனும்...

Jey சொன்னது…

///நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது என் நண்பனோட டூ வீலர் எடுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்தேன்.///

ஏம்பா, இப்பவாச்சும் சொந்த வண்டிய ஓட்டிடிருக்கியா, இல்ல, இப்பயும் எந்த இளிச்சாவாய ஃபிரண்டோட வண்டிய ஆட்டயப்போட்டு ஓட்டிட்டிருக்கியா...

Jey சொன்னது…

//போலீஸ்: இன்சூரன்ஸ்?//

சிரிப்பு போலீசு மாதிரி, இந்த பீசு “ லூசு போலீசு” போல. லைசன்ஸும். ஆர்சி புக்கெ இல்லையாமா, இன்சூரன்ஸ் எங்கிருந்து வரும்....

Jey சொன்னது…

///போலீஸ்: ஓ நீ பட்டிக்காட்டானா?(Jey இல்லப்பா)///

ம்ஹூ., எங்களுக்கு விளம்பரம் கொடுத்தா.. கும்முரத விட்ருவோமா!!! அது நடக்காதுடியோவ்.

( பதிலுக்கு பதிவ தமிலிஷ்ல, என் சொந்த செலவுல இணைச்சிட்டேன்,. கணக்கு சரியாப் போச்சி..)

பனித்துளி சங்கர் சொன்னது…

பாவம் அந்த டிராபிக் போலீஸ்" . வேண்டா வெறுப்பா பிள்ளையப் பெத்துக் காண்டா மிருகம்னு பேரு வச்சக் கதையாவுல இருக்கு . கலக்குறிங்க

Jey சொன்னது…

///அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?///

யோவ், தெரியாதா, நீதான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டு சூசை பண்ணிட்டாராம்யா..., சீரியஸ் போலீஸ் உன்னை வலைவீசி தேடிட்டிருக்கு... நீ என்னடான்னா, அவரவச்சி காமெடி பண்ணிட்டிருக்கே... மாட்னா சட்னிதான், எங்கயாவது ஓடிப்போயிரு..

(ங்கொய்யாலே கொஞ்ச நாளாவது இந்த மொக்கயிலேர்ந்து தப்பிக்கலாம்.)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மாமூலாவே நீங்க இப்படித்தானா, போலீஸுக்கே அல்வாவா

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

///அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?///

யோவ், தெரியாதா, நீதான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டு சூசை பண்ணிட்டாராம்யா..., சீரியஸ் போலீஸ் உன்னை வலைவீசி தேடிட்டிருக்கு... நீ என்னடான்னா, அவரவச்சி காமெடி பண்ணிட்டிருக்கே... மாட்னா சட்னிதான், எங்கயாவது ஓடிப்போயிரு..

(ங்கொய்யாலே கொஞ்ச நாளாவது இந்த மொக்கயிலேர்ந்து தப்பிக்கலாம்.)
Jeyக்கு ஒரு ஜே

கருடன் சொன்னது…

ஒரு சீரியஸ் போலீஸ் சோகத்த ஒரு சிரிப்பு போலீஸ் நகைசுவைய சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

சரவணகுமரன் சொன்னது…

இன்றைய பதிவை இணைத்ததற்கு நன்றி ரமேஷ்.

ஜில்தண்ணி சொன்னது…

//அது கிராமம் அப்டின்கிறதினால நிறைய பேர்கிட்ட லைசன்ஸ் கிடையாது. இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை.//

அண்ணே சைக்கிள் ஓட்ட எதுக்குனே லைசன்சு :)

//நான்: சார் பகல்ல வர்றதுக்கு என்ன பயம் சார்?//

எல்லாமே செம செம கலக்கல் ஹா ஹா :)))

அருண் பிரசாத் சொன்னது…

@ ஜில்தண்ணி

ஆமா, எனக்கும் அதே டவுட் தான். சைக்கிளும் டூ விலர்தான. அதை ஓட்ட எதுக்கு லைசென்ஸ்

//அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க//

அவங்க உஷார். நாங்க உங்க தொல்லைதாங்காம எங்க சேர்றதுனு தெரியல

வெங்கட் சொன்னது…

அந்த போட்டோல இருக்கறது
நீங்க தானே..???

அப்படியே அந்த Helmet-ஐ
கழட்டிட்டு...

" நான் தான் சிரிப்பு போலீஸ்னு
ஒரு சிரிப்பு ( குமரிமுத்து Style-ல )
சிரிச்சிருக்கலாம்ல..!! "

பயந்து போயி...,
கையில நூறு ரூபா குடுத்து
அனுப்பி இருப்பாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முதல் வெட்டு.//
Jey க்கு வடை பார்சல்

@ சீமான்கனி வடை போச்சே . உண்மைய சொன்னா நம்பனும்

//நண்பா போலிஸ் ஸ்டஷனுக்கு வண்டி எடுக்க நீ அலைஞ்சத சொல்லாம என்னஎன்னவோ கதை வுட்ருக்கியே,//

நீயும் கூட வந்து எனக்கு பதிலா அடி வாங்கினையே அத சொல்லவா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நம்மள விட 2 ஆப்பு கூடப்படிச்சித , ரொம்பவும் பீத்திகிட்டு திருயுதே இந்த டேமேஜர் சிப்பு.....//
அண்ணே நீங்க நாலாப்பு பெயிலு நானு ஆறாவது பாசு...

//இந்த பீச நம்பியும் வண்டிய குடுத்திருகானுகளே... அவிங்கள மொதல வெட்டனும்...//

JEY தல ரெண்டு நாளைக்கு உங்க வண்டிய கடனா தரீங்களா?

//ஏம்பா, இப்பவாச்சும் சொந்த வண்டிய ஓட்டிடிருக்கியா, இல்ல, இப்பயும் எந்த இளிச்சாவாய ஃபிரண்டோட வண்டிய ஆட்டயப்போட்டு ஓட்டிட்டிருக்கியா...//

JEY தல public public

//பதிலுக்கு பதிவ தமிலிஷ்ல, என் சொந்த செலவுல இணைச்சிட்டேன்,. கணக்கு சரியாப் போச்சி..)//

JEY தல எவ்ளோ செலவாச்சுன்னு சொல்லுங்க. cheque அனுப்பிடலாம்..

//யோவ், தெரியாதா, நீதான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டு சூசை பண்ணிட்டாராம்யா..., சீரியஸ் போலீஸ் உன்னை வலைவீசி தேடிட்டிருக்கு... நீ என்னடான்னா, அவரவச்சி காமெடி பண்ணிட்டிருக்கே... மாட்னா சட்னிதான், எங்கயாவது ஓடிப்போயிரு..//

JEY தல யாரு அந்த சூசை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪

@ சி.பி.செந்தில்குமார்என்னை ரொம்ப புகழாதீங்க..

@ மணி (ஆயிரத்தில் ஒருவன் Jey ரொம்ப வில்லங்கம் புடிச்ச ஆளு. அவர் கூட கூட்டணி வைக்காதிங்க. கர்சிப் கூட மிஞ்சாது.

@ வாங்க சரவணகுமரன். நன்றி.

//அண்ணே சைக்கிள் ஓட்ட எதுக்குனே லைசன்சு :)//
@ ஜில்தண்ணி - யோகேஷ் நன்றி அதுவும் டூ வீலர்தான?

//பயந்து போயி...,
கையில நூறு ரூபா குடுத்து
அனுப்பி இருப்பாங்க..//

நான் வேங்கட்டோட ப்ளாக்கை படிக்க சொல்லிடுவனொன்னு பயந்து விட்டுடாங்க..

pinkyrose சொன்னது…

ஹைய்யோ ஏதொ சிரிப்பு போலீஸ்ங்கறாங்களேன்னு உள்ள வந்தா அம்மாடி சிரிச்சே செத்துட்டேன் நிஜ போலீஸ் வர போகுது

Unknown சொன்னது…

வண்டிய புடிங்கிட்டு.. நடந்து போகச்சொல்லி இருக்கனும்...

எம் அப்துல் காதர் சொன்னது…

தொடர்ந்து இப்படியே அருமையா எழுதுங்க நண்பா.. அப்ப தான் நாங்களும் வாழ்க்கையில் நோய் நொடி இல்லாம உங்களோடவே சிரித்து வாழ்வோம்.

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை..//

எப்படி கேப்பாங்க.. உங்க கிட்ட ஒரு போலீஸ் லைசென்ஸ் கேட்டதுக்கே இந்த கொடுமை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வண்டிய புடிங்கிட்டு.. நடந்து போகச்சொல்லி இருக்கனும்... //

எப்படி சொல்லுவாங்க நான்தான் செந்தில் அண்ணனோட தம்பி ஆச்சே..

@ எம் அப்துல் காதர் நன்றி...

@TERROR-PANDIYAN(VAS) பொறாமை பட கூடாது...

Prasanna சொன்னது…

//ஊர மாத்திட்டு போயிருப்பாரோ//

அவர்தான் 'ங்க ங்க ங்க' ன்னு காதல் படத்துல கடைசில வராரே.. பாக்கலியா?

செல்வா சொன்னது…

அவரும் சிரிப்பு போலீசா இருப்பாரோ ..??

சௌந்தர் சொன்னது…

இருந்த ஓரு நல்ல போலீஸ்சும் இவரு துரத்தி விட்டுட்டாரு

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது