இன்று காலை தினமலரில் இந்த செய்தியைப் படித்ததும் மனம் கலங்கிவிட்டது. வாங்களேன் நண்பர்களே. நம்மளால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
கடந்த 2009 அக்., 22 ல், இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்து,மாடியில் இருந்து தள்ளி விட்டனர்; முதுகு தண்டுவட எலும்பு, கால் முறிவு; நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து அக்., 25 ல், தினமலர் இதழில் செய்தி வெளியானது.கோவை, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, இடுப்புக்கு கீழ் செயல்படாத நிலையில் வீட்டில் உள்ளார். தொடர் சிகிச்சை, படிப்புக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர், கூறியதாவது: சிகிச்சைக்கு பின் சுயநினைவு வந்த போது மீண்டும் பிறந்தது போல் உணர்ந்தேன்.
இதுவரை ஐந்து லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. பிளஸ் 2 ல், 1160 மதிப்பெண் எடுத்தேன். எதிர்கால கனவுகளுடன் கல்லூரியில் சேர்ந்த 44 நாள்களில் இந்த சோகம் நிகழ்ந்தது. ஒரு டி.எஸ்.பி., தலைமையிலும், அண்ணா பல்கலை சார்பிலும் குழுவினர் விசாரித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்துடைப்பு நாடகம் நடக்கிறது. இடுப்பு, காலில் தினமும் "பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்னால் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என எதிர்பார்த்து சிரமப்பட்டு படிக்க வைத்தனர்.
தற்போது குடும்ப சூழல் மோசமாகி வருகிறது.ஒரு சில மாதங்களில் எழுந்து நடப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன். உரிய சிகிச்சையும் தேவைப்படுகிறது. இதற்கு உதவிக்கரம் நீட்டினால், தொடந்து படித்து குடும்பத்திற்கு உதவுவேன் என்றார்.உதவ முன்வருவோர், "98436-51708, 98431-17594' என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
19 கருத்துகள்:
கஷ்டமாக இருக்கிறது
நானும் இந்த செய்தியை படிச்சேன் ரமெஷ், மனசு கஷ்டம இருந்தது. இந்த மாதிரி கொடுமைகள் சில இடங்களில் இன்னும் தொடர்வது வேதனையளிக்கிறது. ஏது உதவி பன்னமுடியுமானு பாக்கிறேன்.
எப்படி இவ்வளவு குரூரம் மனதில்?
வருத்தபட வேண்டிய விஷயம். விளையாட்டு வினையாவது இப்படித்தான்
முடிந்த உதவிகளை செய்வோம் தம்பி ...
மனசுக்கு வேதனையா இருக்கு..
வளரும் பிள்ளைகளுக்கு சக மாணவர்களையும் மனிதர்களையும் எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு கொடுக்காத பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமுதாயமும் ....இந்த ரேகிங்க் கொடுமையின் பின்னால் இருக்கின்றன...
தீர்க்கப்படவேண்டிய விசயம்....... நெஞ்சம் கனக்கிறது....அவமானம் பிடிங்கித் தின்கிறது... இப்படி பட்ட சமுதயத்தில் நானும் ஒருவனென்று.....
தொடர்பு கொள்கிறேன் தம்பி.....! மிகுதியான பேரிடம் இச்செய்தியை சென்றடைய செய்ததற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்....!
நிச்சயமாக உதவுவோம் அண்ணா .. இப்பொழுதே இந்த பதிவினைப் பற்றி எனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் ..
மிகவும் வருத்தப் படக்கூடிய விஷயம்..
நிச்சயம் உதவுவோம்..
முடிந்த உதவிகளை செய்வோம் நண்பா
ரமெஷ், என் தளத்திலும் இந்த பதிவை உரிமையுடன் பதிவுசெய்து உள்ளேன்.
(லிங்க் தாங்க, திருட்டுபயல் இல்லை நான். என்னால் ஆன சிறு உடனடி உதவி)
நல்ல தமிழ் வார்த்தையில் திட்டிடாதிங்க. நல்லதை காப்பி செய்யவும் பயப்படவேண்டி இருக்கு அந்த “ஈகரை”யால
ராகிங் செய்த மாணவர்களும் மட்டும் குற்றவாளிகள் இல்லை.சமுகம் கூட தான்.இந்த மாணவனின் எதிர்காலத்தையே கேள்வி குறி ஆக்கிவிட்டார்கள் இந்த படுபாவிகள்.அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்க்த்தில்,இந்த பதிவின் முலம் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி
ரொம்ப வருத்தமா இருக்குங்க
எப்பதான் இந்த ராகிங் கொடுமை ஒழியுமோ
கண்டிப்பாக உதவ முயல்வோம்
கண்டிப்பாய் உதவுவோம் நம்மால் முடிந்ததை செவோம்...பகிர்வுக்கு நன்றி நண்பரே....
ஆறறிவு கொண்ட மனிதன் மட்டுமே செய்யக் கூடிய ஒரு அநாகரிக செயல் இந்த நிகழ்வு . புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஒரு நிமிடம் இதயம் செயலாற்றுப் போனது .
ரொம்பவே கோபம் வருது.:(((((((((
im in out of station. Il reply once reach chennai. Thanks venkat
எனது போன பதிவுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டும், கமெண்டும் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதை படித்து யாராவது சிறு சிறு உதவிகள் செய்தால் மிக்க சந்தோஷமே!!!
இப்படி நடந்து கொண்ட படித்த மக்கள் - சட்டத்தை மதிக்கவும், மனித நேயத்துடன் நடந்து கொள்வதையும் எப்பொழுது படித்து புரிந்து கொள்ளப் போகிறார்களோ? இப்படி செய்த அத்தனை மாணவர்கள் மேலும் நஷ்ட ஈடு வழக்கு போட முடியாதா?
மனிதனுக்குள் எவ்வளவு மிருகம் ?
கருத்துரையிடுக